1.தாளாசனம்
செய்முறை
;
இரு
குதிகால்களையும் சேர்த்து v வடிவில் வைத்து
முன்னோக்கி இரு கைகளையும் முன்னோக்கி தலைக்குமேல் தூக்கி உள்ளங்கைகள் ஒன்றுக்கொன்று
பார்த்தவாறு வைத்துக் கொண்டு குதிகால்களை உயர்த்தி விரல்களின் அடிச் சதையில் நிற்க
வேண்டும்.
இயல்பான சுவாசத்தில் 15 வினாடிகள் நின்று பின்
பழைய நிலைக்கு திரும்பவும்.
பலன்கள்
:
பாதத்திலிருந்து
தலை, பிடரியிலுள்ள பிட்யூட்டரி சுரப்பி வரை எல்லா நரம்புகளும் ஒருமுறை இழுத்து விடப்படுவதால்
பாதம் தொடை,தசைகள் பலம் பெற்று உடல் பனைமரம் போல் உறுதியாகும்.நடை கம்பீரமாய் ராணுவ
வீரர் போல் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக