பக்கங்கள்

4 ஜூலை, 2018

அல்லி Nymphae nouchali Burmf,; Nymphaeceae

அல்லி
                   Nymphae nouchali Burmf,; Nymphaeceae            
 வளரியல்பு ; நீரில் மிதக்கும் நீர்ச்செடி                                            இலை    ;  அகன்ற நீள்வட்ட இலைகளையும் நுண்குழலுடைய காம்புகளையும் உடையது
வகைகள் ; நீர்மேல் மிதந்து கொண்டிருக்கும் வெள்ளைநிற மலர்களையுடையது வெள்ளையல்லியெனவும் செந்நிற மலர்களையுடையது செவ்வல்லி, அரக்காம்பல் எனவும் நீல மலர்களையுடையது கருநெய்தல்(நீலோற்பலம்), குவளையெனவும் வழங்கப் பெறும்.
மருத்துவபாகம் ;இலை, பூ, விதை, கிழங்கு
செய்கை ;சீதளகாரி,ரக்தஸ்தம்பனகாரி,தாதுக்ஷீணரோதி                              
மருத்துவ குணம் ; கிழங்கு குளிர்ச்சி தரும். பூ தாது வெப்பகற்றும் குருதிக்கசிவைத் தடுக்கும். இரத்தபிரமேகம்,ஆண் குறித்துவார விரணம்,வெகுமூத்திரம்,தாகம்,உட்சூடு நீக்கும்.கிழங்கு அக்கிப்புண்,பித்த எரிச்சல்,திரிதோஷம்,பிரமேகம்,இரத்தக்கிராணி, பித்த நோய் போக்கும்,கண் குளிர்ச்சி,தாது விருத்தி உண்டாக்கும்.
கண்ணுங்குளிரு மக்கி காணாது காந்துபித்த
மெண்னுந்தோ ஷம்மேக மேகுங் காண் – பெண்ணே
வயிற்றுக் கடுப்பிரத்த மாறுநெய்தலுக்குப்
பயித்தியம்போம் விந்தூறும்பார்.
            மேகமறும் புண்ணாறும் விட்டேகு நீரிழிவு
            தாகந்தணியும் தழலகலும் –வாகான
            மெல்லியலே யாயுன்மறை வேதியரே லாமுறைக்கு
            மல்லி மலரா லறி
செம்பைக்க ளிம்பகற்றிச் சிந்தூரமாக்கிவிடும்
வெம்புபித்த மேகம் விலக்குங்கா – நம்புவியி
லல்லிற் கறுத்தகுழ லாரணங்கே நற்சிவப்பா
மல்லிக் கிழங்கெண் பது.
           சிவந்த அல்லிக் கிழங்கு செம்பின் களிம்பை நீக்குவதுந்தவிர அதைச் செந்தூரமாக்கும்.பித்தப் பிரமேகத்தை விலக்கும் என்க.
          செவ்வல்லிப்பூவுக்குச் சேர்ந்திறங்கு நீர்ப்பிணியோ
          டொவ்வுமே கப்பிணியு மோய்வதன்றி – யிவ்வுலகிற்
          கண்ணினோய் தீருங் கனத்தபித்த ரத்தமொடு
          புண்ணினோய் பன்னோயும் போம்.
செய்கை ; சீதளகாரி,வியதாபேதகாரி
          செவ்வல்லிப்பூவிற்கு மூத்திரரோத்சங்கவாதம்,மேகமூத்திரம்,வெய்யிலாதியாற் பிறந்த நேத்திர ரோகங்கள்,ரத்தபித்தம்,விரணம்,தாதுநஷ்டம் முதலிய சிலநோய்கள் நீங்கும்.
மிக்கசெவ் வல்லி விதையே யுலகுக்குத்
தக்கவாண் டன்மை தருகுமால் – பக்கபலம்
பேசவிதி லீரற் பீலிகங் களுக்குறுதி
பாசமுடன் றான்கொடுக்கும் பார்
செய்கை ; காமவிர்தினி
       செவ்வல்லியின் வித்து சுக்கிலத்தைப் பலப்படுத்தும்.ஈரலுக்கும்,பீலீக
கண்டங்களுக்கும் வலுவை உண்டாக்கும் என்க.    
                    -பதார்த குண விளக்கம்-                                                       தமிழகமெங்கும் குளம் குட்டைகளில் வளர்கின்றன.

  1. இலையை நீரிலிட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர எளிதில் ஆறும்.
  2. 200 கிராம் உலர்ந்த வெள்ளை இதழ்களை 6 லிட்டர் நீரில் ஊறவைத்து வாலையில் வடித்த நீரை 30 மி.லி. யாகக் காலை மாலை குடித்து வர சிறுநீரில் இரத்தம் சீழ்வருதல் சிறுநீர்ப்பாதைப்புண், சிறுநீர் மிகுதியாகக் கழிதல், தாகம், உட்காய்ச்சல் ஆகியவை தீரும்.
  3. அல்லிக் கிழங்கை உலர்த்திப் பொடித்து, 5 கிராம் பாலில் கலந்து காலை மாலையாகச் சாப்பிட்டு வர குடல்புண், வயிற்றுப்போக்கு, மூலம் ஆகியவை குணமாகும். மாதர் கருவுற்றிருக்கும் போது மாதவிலக்கு கண்டால் இம்மாவைப் பயன்படுத்தக் குணமாகும்.
  4. கருநெய்தல் பூ 50 கிராம் 250 மி.லி. நீரிலிட்டு 125 மி.லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டியதில் 30 கிராம் சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி காலை மாலை 15 மி.லி யாகச் சாப்பிட்டு வர மூளைக்கொதிப்பு தணியும். கண் குளிர்ச்சியடையும். இதயப்படபடப்பைத் தணிக்கும்.
  5. கருநெய்தல் மலரில் உள்ள மகரந்தப் பொடியை உலர்த்தி நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிக்க உடல் எரிச்சல், இரத்த மூலம், பெரும்பாடு ஆகியவை தணியும்.
  6. கிழங்கை வேகவைத்து மேல்தோல் நீக்கி பால்,சர்க்கரை சேர்த்து சாப்பிட உடல் குளிர்ச்சியடையும்,பித்த எரிச்சல்,பிரமேகம்,ரத்தபேதி தீரும்.
  7. விதையை பாலில் அரைத்து 2-5கிராம் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட தாது விருத்தியாகும்.இதில் செவ்வல்லி பெண்களுக்கும்,வெள்ளை ஆண்களுக்கும் விஷேஷம் என்பர்.
  8. சமனெடை கந்தகத்தை பழச்சாறால் ஆட்டி தகட்டில் பூசி  அகலில் மூடி சீலைசெய்து 7-8 வறட்டியில் புடமிட்டு, பின் செவ்வல்லிக் கிழங்குச்சாறால் அரைத்து வில்லைதட்டி,காயவைத்து ஓட்டிலடக்கி சீலைசெய்து 10-12 வறட்டியால் புடமிட தாம்பிரம் செந்தூரமாகும்.
  9. நன்னாரி, அதிமதுரம், நெய்தல் கிழங்கு,கோஷ்டம், வசம்பு சேர்த்து புளித்த கஞ்சி விட்டரைத்து சமன் ந.எண்ணை கூட்டித் தேய்த்துவர ஒற்றை தலைவலி குணமாகும்
  1.  


அலரி Nerium odorum

அலரி                                
                                                                    Nerium odorum                                                                                           
மாற்றுப்பெயர்
வளரியல்பு ;                                                                                                                                   இலைஅமைப்பு;                                                                                                                                 பூ,காய்   ; வெள்ளை,சுத்த சிவப்பு,வெளிர் சிவப்பு,அடுக்குப்பூ என பலவகை                                                                                                                                           மருத்துவ பாகம் ;    பூ                                                                                                                   குணம்  ;  உக்கிரரோகசமனகாரி                                                                                          தீர்க்கும் நோய்கள்             
வெப்பருசி குஷ்டம் விதாகஞ் சொறிசிரங்கு
செப்பிரத்த புண்பித்தஞ் சென்னியெரி – விப்படியிற்
றங்குமோ கும்பத் தனத்தணங்கே வாசஞ்சேர்
கொங்கலரிப்பூப் பெயரைக் கூறு.
            வாசனையுள்ள கொத்து அலரிப்பூவால் சுரம்,அரோசகம்,குஷ்டம், விதாகம், புடை, கிரந்தி,ரத்தக்கட்டி,பித்தநோய்,தலையெரிவு இவை போம்.
          இது நவபாஷான மூலிகைகளில் ஒன்றாக் கருதப்படுகிறது. மருந்துகளில் சேர்ப்பது என்றால் புலிப்பாணி மஹாமுனி அருளிய வைத்தியம் 500 ல் கண்டு முறைப்படி சுத்தி செய்து உபயோகிக்க.
      சுப,அசுப காரியங்களில் அலங்காரத்திற்குப் பயன்படுத்தப் படுகிறது.

நவ பாஷான மூலிகைகளில் சில ; எட்டி,நாவி,அலரி,சேங்கொட்டை,ஊமத்தை, நேர்வாளம்,அழிஞ்சில்

அரிவாள்மனைப் பூண்டு SIDA CAPRINIFOLOLIA L,; MALVACEA

              அரிவாள்மனைப் பூண்டு.
                  SIDA CAPRINIFOLOLIA L,; MALVACEA
வளரியல்பு ; மிகக் குறுஞ் செடியினம்.
வேறு பெயர் :- BALA PHANIJIVIKA.
இலை     ; கூர் நுனிப் பற்கள் கொண்ட ஆப்பு வடிவம்.
மருத்துவ பாகம் :- இலை, விதை, வேர்,பூ முதலியன.
செய்கை ; ரக்தஸ்தம்பனகாரி.
மருத்துவ குணம் :-
‘வெட்டுக்காயத்தை விரவி லுர்த்திவிடுந்
துட்டக் கடுவோட்டுத் தோன்றிமிகக் கெட்ட
பிரிவாற் றலையைப் பினக்கும் வலி நீக்கு
மரிவாள் மூக்குப் பச்சிலை.’
அரிவாள் மூக்குப் பச்சிலையானது ஆயுதங்களால் உண்டாகின்ற காயத்தைச் சீக்கிரத்தில் ஆற்றுவதுந் தவிர மாக விஷத்தையும் உதிரக் கெடுதியால் பிறந்த சிரஸ்தாப ரோகத்தையும் விலகும் என்க.
அரிவாள்மனைப் பூண்டு எல்லாவித மண்ணிலும் வளரும். ஆனால் செம்மன் நிலத்தில் நன்கு வளமுடன் வளரும். மாரிக்(மழை) காலத்தில் தமிழகமெங்கும் சாலையோரத்தில தானே வளரும். விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப் படுகிறது.
  1. அரிவாள்மனைப் பூண்டின் இலையைக் கசக்கி வெட்டுக் காயத்தில் பிழிய இரத்தப் பெருக்கு நிற்கும்.
  2. அரிவாள்மனைப் பூண்டின் இலையுடன் சமன் குப்பைமேனி,   பூண்டுப்பல் 2 , மிளகு3  சேர்த்து அரைத்து புன்னைக் காய் அளவு உள்ளுக்குக் கொடுத்து காயத்திலும் கட்ட நஞ்சு முறிவதுடன் தலைவலியும் நீங்கும்..உப்பு, புளி நீக்க வேண்டும்.
  3. இலையைக் காரமில்லாத தட்டை அம்மிக் கல்லில் வைத்து வெண்ணெய் போல் அரைத்து வெட்டுப் பட்ட காயங்களுக்குத் தடவிச் சீலைக் கொண்டு அழுத்திக் கட்ட இரத்தம் சொரிதல் நீங்கி விரைவில் ஆறும்.            
  4. இலையுடன் சிறிது மிளகு பூண்டு கூட்டி அரைத்து வேளைக்கு சிறு சுண்டைக்காய் பிரமாணம் அந்தி சந்தி 3 நாள் கொடுத்துப் பாற் பத்தியம் வைக்கக் கடுமையான விஷங்கள் இறங்குவதுடன் தலை வலியும் நீங்கும்.
  5. அரிவாள்மனைப் பூண்டின் இலை, கிணற்றுப் பாசான் இலை சம அளவு எடுத்து அரைத்து புழுவெட்டின் மீது தடவி வர விரைவில் மாறும்.                             
  6. இலையை மஞ்சள் சேர்த்து அரைத்து சொறி சிரங்கு மீது தடவி வர குணமாகும்.
  7. அரிவாள்மனைப் பூண்டின் இலை, குப்பைமேனி இலை, மஞ்சள் சேர்த்து அரைத்து படர்தாமரை மீது தடவி வர விரைவில் குணமாகும். (பத்தியம்): எலுமிச்சம் பழம், புளிப்புப் பதார்த்தங்கள் நீக்கவும்.
  8.  அரிவாள்மனைபூண்டுபூ 20, 2ல்1ன்றாய்க் காய்ச்சி வாய் கொப்புளித்து வர ஈறுகளிலிருந்து இரத்தம் கசிதல் கட்டுப்படும்


அரிதகிக்காய்Arithakikkaai

                                                                      அரிதகிக்காய்    

                             (Arithakikkaai)                             மாற்றுப்பெயர்   ; பச்சைக் கடுக்காய்                                        
வளரியல்பு  ;இலையுதிர்மரம்                                                                                                 இலைஅமைப்பு;மாற்றடுக்கில்நீள்வட்ட இலைகள்                                                   பூ,காய்          பளபளப்பான நீண்ட உருளை வடிவ காய்கள்                                                                                                                                                                    மருத்துவ பாகம் ;                                                                                                             குணம் ;  மலகாரி,ஜடராக்கினிவர்தினி                                                                              தீர்க்கும் நோய்கள்  
 பச்சை யரிதகிக்காய் பண்ணும் வகைகேளா
பிச்சை யுறத்துவைத்துப் பிட்டழுத்தி – வைச்செடுத்துத்
தின்ன வரோசியறுந் தீபனமா முன்மலம்போ
மன்னநடை மாதே யறி
        பச்சைக் கடுக்காயை கொட்டை நீக்கியிடித்து ,ஐந்திலொரு பங்கு உப்பிட்டு,15 நாள் சென்றபின் பிசைந்து அன்னத்தில் கலந்தோ தனித்தோ புசிக்கின் அரோசிகம் தீரும்.பசியுண்டாம்.மலங்கழியும்.                                                                                                                                         
                                                                                                                                கடுக்காய்                                                                       Terminalia chebula Retz.;Combretaceae

கடுக்காயுந் தாயும்கருதிலொன்றென் றாலுங்
கடுக்காய்த் தாய்க்கதிகங் காணீ – கடுக்காய்நோ
யோட்டி யுடற்றேற்று முற்றவன்னையோ சுவைக
ளூட்டி யுடற்றேற்று முவந்து.

கடுக்காயுந் தாயும் ஒன்றென ஒருவாறு நினைத்திருந்தாலும் தாயைப் பார்க்கிலும் கடுக்காயே அதிகமாம்.ஏனெனில் கடுக்காய் பிணிகளை நீக்கி உடலை தேற்றும்.தாயானவள் அறுசுவை ஊட்டி உடலை வளர்ப்பாள். பிணிகள் நீங்கினால் அல்லவோ உணவு பயன்பட்டு உடல் தேறும் எனும் வகையறியாமல் உணவை மாத்திரம் ஊட்டும் தாயினும் கடுக்காய் சிறந்ததென கூறினார்.

         தாடைகழுத்தக்கி தாலுகுறியிவிடப்
         பீடை சிலிபதமுற் பேதிமுட – மாடையெட்டாத்
         தூலமிடி புண்வாத சோணிகா மாலையிரண்  
         டாலமிடி போம்வரிக் காயால் .

கடுக்காயினால் கன்னம்,களம்,கண்,நா,ஆண்குறி இவ்விடத்து நோய்கள், பாத வன்மீகம்,அதிசாரம்,பங்குவாதம்,அதிதூலம்,வாதசோணித வாதம், காமிலம்,தாவர சங்கம விஷங்கள் இவைபோம்.

செய்கை ; மலகாரி,சங்கோசனகாரி,தாதுக்ஷீணரோதி,ரக்தஸ்தம்பனகாரி, உதரவாதஹரகாரி.

                     விசயன் கடுக்காய்.

விசய னெனுங்கடுக்காய் வீரியத்தைச் சொல்வோ
நிசமதுதான் வாதத்தை நீக்கு – மிசையுரைக்கப்
பேய்ச்சுரைக்காய் போலிருக்கும் பேரவந்தி யாதேசம்
வாய்ச்சிருக்கு மக்காயை வாழ்த்து.

         பேய்ச்சுரைக்காய்க் குறியுள்ள விஜயன் என்கிற கடுக்காய் வாதரோகத்தைப் போக்கும். இது அவந்தியா தேசத்தில் உற்பத்தியாம்.

                      அரோகிணிக் கடுக்காய்

ஓதும ரோகிணிக்கா யொண்றுண்டா னாற்சந்நி
பாதமொடு சீதம் பறக்குங்காண் – மீதுகுறி
நான்குவரி யாய்த்தோற்று நங்கா யதன்றேச
மாங்குகன்னி யாகுமரி யாம்.

          கன்னியாகுமரி தேசத்தில் பிறக்கின்ற அரோகிணிக்கடுக்காயால்
சன்னிபாதமும் சீதமும் நீங்கும்.இதன்மீது நாலுவரை போன்ற குறியிருக்கும்.

                          பிருத்திவிக்கடுக்காய்

தோற்றும் பிருதிவிதான் றோலாப் பயித்தியத்தை
மாற்றும் வயதை வளர்க்குமதன் – மேற்றோலோ
மெல்லியதா மக்காய் விளைதேச மேதென்னில்
வல்லசவு ராட்டிகமாம் வாழ்த்து.

        மெல்லிய தோலுள்ள பிருதிவிக்கடுக்காய் பித்தநோயை நீக்கும். ஆயுளை விருத்தி செய்யும்.சவுராஷ்டிக தேசத்தில் உற்பத்தியாம்.

                         அமிர்தக்கடுக்காய்

அமிர்தமெனுங்கடுக்கா யம்புவியிலுள்ள
திமிர்தசி லேட்டுமத்தைத் தீர்க்கும் – விமிதச்
சதைப்பற்றுண்டா யிருக்குஞ் சாற்றிலதன் றேசங்
கதிக்கொத்த காசியென்பர் காண்.

            விம்மிதித் தசை மிகுந்துள்ள அமிர்தக் கடுக்காய் கண்டத்தில் ஒரு ஒலியைத் தருகின்ற கபத்தை ஒழிக்கும்.காசி தேசத்தில் உற்பத்தி.

                      சிவந்திக்கடுக்காய்

சிவந்தி யெனுங்கடுக்காய் செய்கணத்தைக் கேள்வாய்
விவர்ந்தமூ லத்தையெலா மேய்க்குஞ் – சிவந்ததிகப்
பொன்னிறம தாயிருக்கும் பூங்குழலே யக்கடுக்காய்
துன்னுவனந் தோறுமுண்டாஞ் சொல்.

          மிகுசிவப்பும் தங்கச்சாயலும் உள்ள சிவந்திக் கடுக்காயானது வாதமூல ரோகங்களை நீக்கும்.இது வனங்களில் உற்பத்தியாகும்.  

                         திருவிருத்திக்கடுக்காய்

திருவிருத் திக்கடுக்காய் தேகத்தி னாளும்
வருவிரணம் போக்குமதன்வன்ன – மொருவிதமோ
பஞ்சவன்ன மூவரம்பு பற்றி யிருக்குமது
விஞ்சுமலை தோறுமுண் டாம்.    

             வெள்ளை,கருமை,செம்மை,பசுமை,மஞ்சள் என்னும் பஞ்ச வருணமும், மூன்று வரிகளும் உடைய திருவிருத்திக்கடுக்காய் சகல விரணங்களையும் நிவர்த்தி செய்யும். இது மலைகளில் உற்பத்தியாம்.

                       அபயன்கடுக்காய்

அபய னெனுங்கடுக்கா யங்கநோயெல்லா
மபயமிட் டோட வடிக்கு – மபயற்
கதிக நிறங்கறுப்ப தாகும்விளை பூமி
பொதிய மலையாம் புகல்.
        கருமை நிறத்தையுடைய அபயன் கடுக்காய் எலும்பைப் பற்றிய ரோகங்களை எல்லாம் நீக்கும்.இது பொதிகைமலையில் உற்பத்தியாம்.

                          கருங்கடுக்காய்
பழமலத்தைப் போக்கும் பகரி லுடலுக்
கழகுதரும் புத்தி யளிக்கும் – பழகி
மருங்கடுத்த வாதபித்த வன்கபத்தைத் தீர்க்குங்
கருங்கடுக்கா யென்றுளத்திற் காண்.
          கருங்கடுக்காயானது பழைய மலக்கட்டையும் திரிதோஷ ரோகங்களையும் போக்கும்.அழகையும் அறிவையும் கொடுக்கும்.

                    செங்கடுக்காய்
சுத்தியொடு புத்திசுகமும் புகழுமுண்டா
மெத்தவொளிர் பொன்னிறமா மேனியெல்லாஞ் – சுத்தகப
வங்கடுத்த விளைபல வன்காச மும்மலமுஞ்
செங்கடுக்காய்க் கில்லையெனத் தேர்.

        செங்கடுக்காய்க்கு  மலாசயச்சுத்தி, அறிவு,இன்பம்,கீர்த்தி, சரீரத்தில் பொற்சாயல் ஆகியன உண்டாம்.தனிச் சிலேஷ்மக் கோழை,பலவித இருமல், மலக்கட்டு விலகும் என்க.

                       வரிக்கடுக்காய்
மிடுக்காக்குந்தேகத்தை விந்துவையுண் டாக்குஞ்
சடக்கெனவே டுண்டியையுட்சாடுந் – துடுக்கான
வாதபித்த மிவையகற்றும் வன்னியொடு நல்விதருஞ்
சாதி வரிக்கடுக்காய் தான்    

             வரிக்கடுக்காய் 
தேகபுஷ்டி,தாதுவிருத்தி,அசனசீரணம்,சடராக்கினி, அழகு இவற்றை உண்டாக்கும். திரிதோஷங்களை நீக்கும்.

                        பால்கடுக்காய்
ஆமம்கெடுங்கா ணழகும் பொலிவுமிகுஞ்
சேமம் பெறுபலமுஞ் சேருமே – தாமநெடும்
வேற்கடைக்கண் கும்பமுலை மெல்லியலே யெப்போதும்
பாற்கடுக்கா யுண்பாரைப் பார்.
        பால் கடுக்காய் சீத கிரகணி நீக்கும்.வனப்பு,தேஜஸ்,வன்மை விருத்தியாகும்.  

                    கடுக்காய் பிஞ்சு

வனதுர்க்கிச் சேய்க்கு மணித்தயிலம்பூசி
யனலிற் பொரித்தாங் கருந்தத் – தினமுமலச்
சிக்கலக்க டுப்பநின்ற சீதமறுங் காற்றுகைத்த
முக்கலக் கடுப்பிருக்கு மோ   
        செய்கை ;சங்கோசனகாரி, மலகாரி
கடுக்காய் பிஞ்சுக்கு ஆமணக்கு நெய் தடவி தீயில் வறுத்துத் தூள் செய்து அப்போதே யுண்டால் மலச்சிக்கலும்,எலும்பைப்போல் வெளுத்த சீதமும், போம். மூல வாயுவினால் பிறந்த முக்கலும்,ஆசனக் கடுப்பும் இருக்குமோ / இராது என்பது கருத்து.

                        கடுக்காய் பூ / கர்க்கடகசிங்கி

முக்கலையங் காசகய மூடு கிராணிமுளை
கக்கிரத்த பித்தங்கறைப் பேதி – யுட்குடலிற்
றங்கொலிநீர்ப் புண்சுரஞ்ச மீரம்விட வெப்பிவைபோஞ்
சிங்கியினாற் போகமுறுந் தேர். 
செய்கை ; சங்கோசனகாரி
 கர்க்கடக சிங்கியினால் முக்கல்,ஆமம்,இருமல்,ஷயம்,கிரகணி,மூலமுளை, ரத்தபித்தம்,ரத்தபேதி,குடலிரைச்சல்.மேகவிரணம்,சுரம்,விஷசுரம், போம். வீரியம் உண்டாம். (கர்கடக சிங்கியானது கடுக்காய் மரத்தின் பூ அல்ல. இலைகளில் தடித்து தசை எழும்பி முறடுகட்டி இருப்பதாம்.இதற்கு மேற் கூறிய குணங்கள் பொருந்தியுள்ளது.)
1.   கடுக்காய் சூரணம் 10 -15 கிராம் 200மிலிநீரில் வற்றக்காய்ச்சி பிசைந்து வடித்துக் கொடுக்க மலம் தள்ளும்.அளவு அதிகப்பட்டிருப்பின் 2 -3 முறை பேதியாகும்.
2.   1 தேகரண்டி சூரணத்துடன் பட்டை அல்லது கிராம்பு 2கிராம் சேர்த்து பால் அல்லது வெந்நீரில் காய்ச்சி ஆறியபின் 2-3 முறை பருக பேதியாகும்.இதனால் குமட்டல் வாந்தி,வயிற்றுவலி நீங்கும்.
3.   இத்துடன் வாதுமை நெய் அல்லது பசுவின் நெய் செர்த்துக் கொடுக்க வயிற்றுவலியைச் சாந்தப்படுத்தி விரோசனமாகும்.
4.   பற்பொடியுடன் கலந்து பல்துலக்கிவர ஈறுவலி,ஈறுகளில் இரத்தம் காணல் தீரும்.
5.   நசியமிட பீநிசம்(சைனஸ்) குணமாகும்.
6.   கசாயத்தைக் கொண்டு புண்களை கழுவ ஆறும்.
7.   இரத்தமூலம் கால் அலம்ப உதிரத்தை நிறுத்தும்.
8.   சூரணத்துடன் சிறிது காய்ச்சுக்கட்டி சூரணம் சேர்த்து தேனில் மத்தித்து நாவில் தடவ வாய்விரணம் ஆறும்.
9.   கடுக்காய்,நெல்லிவற்றல்,தான்றிக்காய்,காய்ச்சுக்கட்டி சமன் பொடித்து தேங்காய் எண்ணெய் அல்லது நெய் விட்டு அரைத்து ஆறாத புண்களுக்குப் போட ஆறும்.
10.  கடுக்காய் பிஞ்சை ஆமணக்கெண்ணையில் வறுத்துப் பொடித்து வற்றக் காய்ச்சிப் பிசைந்து இந்துப்புக் கூட்டிக் கொடுக்க 2-3முறை பேதியாகும்.இதனால் மூலச்சூடு,உஷ்ணவாயுவினாலெலுந்த ஆசனக் கடுப்பு,முக்கல் போம்.
11. கடுக்காய் பூவை பொன்மேனியாக வறுத்து முலைப்பால் விட்டு சந்தனக்கல்லில் உரைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்க பேதி,சீதபேதி, ஆசனக்கடுப்பு,முக்கல் இவை போம்.
12. கடுக்காய்பூ,இலவங்கப்பட்டை,கிராம்பு தனித்தனியாக வறுத்துப் பொடித்து சம அளவு,3-5 கிராம், சர்க்கரை சேர்த்து தினம் 2 வேளை 3 நாள் கொடுக்க சீதபேதி, இரத்தபேதி,இரத்தமூலம் போம்.இதனுடன் நாகபற்பம் 100மிகி கலந்து கொடுக்க பெருங் குணம் தரும்.
13. பூ,சுக்கு,மிளகு,திப்பிலி,கடுக்காய்,நெல்லிக்காய்,தான்றிக்காய்,சிற்றரத்தை, கண்டங்கத்திரிவேர் சமன் பொடித்து வேளைக்குத் திரிகடி வெந்நீர் அல்லது தேனில் கொடுக்க ஈளை இருமல் போம். 
14. கடுக்காய் பொடியுடன் பாதி எடை திராட்சைக் கலந்து அரைத்து 1-2 கிராம் காலையில் சாப்பிட்டுவர பித்தவாந்தி,தலைச்சுற்றல்,வாய்க்கசப்பு தீரும்.
15.