பக்கங்கள்

14 ஜனவரி, 2013

வாருங்கள் வரவேற்கிறோம்.

பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு என்ற பாரதியின் பாட்டுக்கு

இலக்கணமாய், உலகில் நாகரீகம் தோன்றா காலத்திற்கு முன்பே சிந்து

சமவெளி நாகரீகம் கண்டு, கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்

தோன்றிய மூத்த குடிமக்கள் நாங்கள் என்று பாரதத்தின் பெருமையை

பறைசாற்றிய நம் முன்னோர்கள், ஆன்மீகம், விஞ்ஞானம், வானவியல்

கலைகள் 64கிலும் வல்லுநராய் திகழ்ந்தார்கள்.

                      ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணீர் என்று ஏர்

முனையிலிருந்து போர் முனை வரை பெண்களும் பங்கு வகித்தார்கள்.

                     அன்னிய ஆதிக்கத்தின் கீழிருந்த கால கட்டத்தில் நம்

வீரவிளையாட்டுக்களான சிலம்பம், களரி, வாள்வித்தை போன்றவை

மறையத்துவங்கி, நம் திறமையும் ஞானமும் குன்றின. மானத்திற்கு அஞ்சிய

பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கத்துவங்கினர்.

             அப்போது மறையத்துவங்கியதுதான் நம் அரிய பொக்கிஷமான சித்த

வைத்தியமும். ஏர் முனைக்குச் சென்றவர்கள் , உணவுத்தானியங்களும்,

வயல்களில் களைகளாக தோன்றும் செடிகளும் எந்த வகையான 

பிணிகளுக்கு உகந்தது, எதில்  என்ன உள்ளது, அதன் குணம் என்ன என்று

உள்ளங்கைக்குள் வைத்திருந்த கைமருந்துகள், நாகரீக காலத்தில்

ஏர்முனைக்குச் செல்லும் பெண்கள் இல்லாமல் பாட்டி வைத்தியமாகி, இன்று

சித்தர்கள்  கண்டது என்று சித்தவைத்தியமாகி உள்ளது.

              மறைந்து வரும் நம் பண்டைய கால உணவு மருத்துவ முறைகள்

முற்றிலும் மறைந்து விடாமல் இருக்க, எமக்குத் தெரிந்த மருத்துவக்

குறிப்புகளை வெளியிடுகின்றோம். நீங்களும் உங்களுக்குத் தெரிந்த

குறிப்புகளைக் கொடுத்து உதவுங்கள். படித்து உபயோகித்து பயனடையுங்கள்.

        வாருங்கள் பாட்டி வைத்தியத்திற்கு

          வரவேற்கிறோம் - வரவேற்போம்