நமது உடம்பில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கியமானது 2 சிறுநீரகங்கள்(kidney), 2சிறுநீரகக் குழாய்கள்(ureter),1சிறுநீர்ப்பை(urinary bladder), 1சிறுநீரக குழாய்(urethra) அடங்கிய சிறுநீரக மண்டல(excretory system)மாகும்.
முதுகுதண்டிற்கு அருகில் கடைசி விலா எலும்பிற்கு கீழ் பீன்ஸ் வடிவத்தில்,கருஞ்சிவப்பு நிறத்தில் உள்ள சிறுநீரகத்தின் அளவு 4.5 x 2.25 அங்குலம்(10.5 x 6.3 cms)
ஒவ்வொரு சிறுநீரகத்திலும் 10லட்சத்திற்கும் மேற்பட்ட நெப்ரான்கள்(nephrons) உள்ளன. சிறுநீரகத்திற்க்கு வரும் அசுத்த இரத்தக் குழாய்கள் மிக நுண்ணிய குழல்களாகப் பிரிந்து, நெப்ரான்களுடன் இணைந்து வலைப்பை (கிளாமருலைகள்_/ glomerulus) போன்ற அமைப்பை உருவாக்கி வடிகட்டியாக செயல்படுகின்றன.
உடலுக்குத் தேவையான சக்தியை செல்கலின் உள்ளிருக்கும் மைட்டோகாண்டிரியா (mitochondria) க்கள் எரித்து இரத்தத்தில் கலந்து விடுகின்றன. இதில் கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயு கழிவுகள் நுரையீரல் மூலமாகவும், அமோனியா,யூரியா போன்ற உப்புகள் சிறிதளவு வியர்வை சுரப்பிகள் மூலமாகவும், பெருமளவு சிறுநீரகம் மூலமாக வடிகட்டி சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றன.
நம் உடலில் உள்ள 3 -3.5 லி இரத்தம் தினம்(24 மணி நேரம்) 200 முறை சிறுநீரகங்களை கடந்து செல்கிறது.அதாவது தினம் 700லி இரத்தம் சுத்தம் செய்யப் படுகிறது.இதிலிருந்து சொட்டுசொட்டாக சுமார் 160 -170 லி நீர் பிரித்து எடுக்கப்பட்டு அந்த நீர்மூலமே மீண்டும் மீண்டும் இரத்தம் சுத்தம் செய்யப்பட்டு இறுதியில் 1.5 - 2.5 லி நீர் சிறுநீராக வெளியேற்றப்படுகிறது.
இதனை ஈடுகட்ட நாம் குறைந்தது 3 -5 லி நீர் பருக வேண்டும். அருந்தும் நீரின் அளவைப்பொறுத்து சிறுநீரின் அடர்த்தி,உப்பு அளவு மாறுபடும்.நீர் அருந்தாதிருப்பின் சிறுநீரகங்களால் நீர் முழுதும் பயன்படுத்தப்பட்டு உப்புகள் வெளியேற்றப்படாமலும், சிறுநீரை கழிக்காமல் அடக்கி வைப்பதாலும் தேங்கி படிந்து கற்களாக உருவாகின்றன.
100மிலி சிறுநீரில் இருக்கும் தாதுக்கள்.
புரதம் ; 10 -25 மி.கிராம்
யூரிக் ஆசிட் ; 17 -50 மி.கிராம். கிரியாட்டினின் ; 66 -130 மி.கிராம்.
யூரியாநைட்ரஜன் ; 800 -1300 மி.கிராம்
குளுகோஸ் ; 30 மி.கி க்கு குறைவாக. சோடியம் ; 25 -50 மிலி சமனாக பொட்டாஷியம் ; 16 -80 மிலி சமனாக யூரோபிலினோஜன் ; 1 மி.கி க்கு குறைவாக.
அறிகுறிகள்
முதுகில் வலி
ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்குத் தாவினாலோ, அடிவயிற்றில்
வலித்தாலோ, அது தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவினாலோ, காய்ச்சல்,
சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை இருந்தாலோ சிறுநீரக்கல்லாக இருக்கலாம்.
பரம்பரையாக
சிறுநீரகக்கல் பிரச்சினை ஒருவரைத் தாக்கலாம். சிறுநீர் போகிற பாதையில்
அடைப்பிருந்தாலோ, பாரா தைராய்டு எனப்படுகிற சுரப்பியின் அதீத இயக்கம் காரணமாகவோ,
தொற்று (Infecton)காரணமாகவோ கூட சிறுநீரகத்தில் கல் வரலாம்.
5 மில்லிமீட்டரை விட
சிறிய கல் எனில் சிறுநீரிலேயே வெளியேறி விடும். 8 மி.மீ. என்றால் 80 சதவிகித
வாய்ப்புண்டு. 1 செ.மீ. அளவுக்கு வளர்ந்துவிட்டால் சிரமம். சரியான நேரத்தில்
சிகிச்சை எடுக்காவிட்டால் சிறுநீரகம், சிறுநீரைப் பிரிக்க இயலாது, செயலிழக்கும்.
- பீட்ரூட்சாறுடன் வெளளரிச்சாறு கலந்து பருகிவர சிறுநீரகங்களும்,பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்
- சிறுபீளைச்சமூலம் 50கிராம் 2ல்1ன்றாய் 100மிலி திளம்2வேளை பருகிவர சிறுநீரக கற்கள் கரையும்
- சிறுபீளைசமூலம் 50கிராம்,சிறுநெருஞ்சில்.மாவிலங்கவேர்,பேராமுட்டிவேர் மொத்தம் 50கிராம் சிதைத்து,5ல்1ன்றாய் காய்ச்சி திளம்2வேளை பருகிவர சிறுநீரக கற்கள் கரையும்
- நித்யகல்யாணிபூ கஷாயம் 25மிலி தினம்4வேளை சிறுநீர்தாரை நோய்கள் நீங்கும்
- நித்யகல்யாணி வேர் சூரணம் 1தேகரண்டி வெந்நீரில் சிறுநீர்தாரை நோய்கள் குணமாகும்
- வாழைத்தண்டை வாரம்2முறை உணவில் சமைத்து சாப்பிட்டுவர சிறுநீரக கற்கள் கரையும்
- துளசிசாற்றில் தேன் கலந்து சாப்பிட சிறுநீரக கற்கள் கரையும்.
- முருங்கைவேர்பட்டை கஷாயம் செய்து சாப்பிட்டுவர சிறுநீரக கற்கள் கரையும்
- சிறுபீளை,நெருஞ்சில்,நீர்முள்ளி,மூக்கிரட்டை சேர்த்துக் கஷாயம் செய்து பருகிவர சிறுநீரக கற்கள் கரையும்
- எருக்கம் மொட்டு7,வெற்றிலை பாக்குடன் சுண்ணாம்பு சேர்க்காமல் 2,3 வேளை சாப்பிட கல்லடைப்பு நீங்கும்
- சாறுவேளை இலையை கீரை செய்து சாப்பிட்டுவர இதயம்,மண்ணீரல், சிறுநீரகம் நன்கு செயல்பட வைக்கும்
- முள்ளங்கிசாறு 30மிலி காலைமாலை பருக சிறுநீரக கோளாறு,நீர்தாரை குற்றங்கள் தீங்கும்
- நத்தைசூரி விதையை வறுத்துபபொடித்து நீரிலிட்டுக் காய்ச்சி வடித்துப் பால் கற்கண்டு சேர்த்து காலைமாலை பருகிவர உடல்வெப்பம் தணியும். சதையடைபபு,கல்லடைப்பு,வெள்ளை தீரும்
- பறங்கி விதை30கிராம்,வெள்ளரிவிதை15கிராம்,பூனைக்காலி விதை10கிராம் 500மிலி நீரில் 200மிலியாக காய்ச்சி காலைமாலை பருகிவர சிறுநீரக கோளாறனைத்தும் நீங்கும்
- மருதாணி முற்றிய வேர்பட்டை 5கிராம்,1லி நீரில் ஊறவைத்து,8ல்1 ன்றாய் காய்ச்சி காலைமாலை பருகிவர நகச்சொத்தை, காமாலை,கல்லடைப்பு, சதையடைப்பு, உதிரச்சிக்கல் தீரும்.
- வெறும்வயிற்றில் அத்திப்பழங்களை அதிகம் உண்டுவர நீர்ப்பையிலுள்ள கற்கள் நீங்கும்.
- 50கிராம் உலர்ந்த திராட்சையை 150மிலி நீரில் கரைத்து வடிகட்டி,100மிலி பால் கலந்து பருக கற்கள் கரையும்.
- அன்னாசிப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டுவர கற்கள் கரையும்.
- சிறிய வெங்காயத்தை விழுதாக அரைத்து 100கிராம் தினம் உண்டுவர கற்கள் கரையும். கல்லடைப்பு நீங்கும்.
- சிறு நன்னாரிவேர்,ஆவாரம்பூ,கோஷ்டம்,அதிமதுரம்,பூமிச்சர்க்கரைக்கிழங்கு வகைக்கு 100கிராம் பொடித்துக் கலந்து காலைமாலை 1தேகரண்டி சாப்பிட்டு வர, சிறுநீரக கோளாறுகள்,கற்கள் நீங்கும்.
- ஒரே சமயத்தில் இளநீர் வயிறுமுட்டக் குடிக்க (5 -10) 3நாளில் கற்கள் வெளியேறிவிடும்.
- வாழைத்தண்டுச்சாறு பருகிவர கற்கள் கரையும்.
- கொள்ளு அவித்தநீரை தினம் 2வேளை அருந்திவர கற்கள் கரையும்.
- கருஞ்சீரகசூரணம் 2 தேகரண்டி காலை தேனில் குழைத்துச் சாப்பிட்டுவர, சிறுநீரக கற்கள் ,கருப்பைக் கோளாறுகள்,மாதவிடாய் கோளாறுகள் மறையும். இரத்தம் சுத்தியாகும்.
- நீராகாரத்தில் பழங்கூரை வைக்கோலை ஊறவைத்து பிசைந்து வடித்து கால்படி சாப்பிட நீரடைப்பு கல்லடைப்பு சதையடைப்பு தீரும்.
- நெருஞ்சில்வேர்,சிறுபீளைவேர்,சிறுகீரைவேர்,சீரகம் வகைக்கு 40கிராம் இடித்து கசாயமிட்டுக் கொடுக்க கல்லடைப்பு தீரும்.
- இரண்டு பெரிய நெல்லிக்காய்களை கொட்டைநீக்கி, சிறு துண்டு இஞ்சி தோல் சீவி சிதைத்து, அரை தம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து, இரண்டு தேக்கரண்டி சர்க்கரை, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் தேக்கரண்டி சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு தம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்து தொடர்ந்து குடித்து வர, சிறுநீரகக் கல் கரையும்..
- வாழைகிழங்கில் இருந்து எடுக்கின்ற நீருடன் வெடியுப்புசுண்ணம் 1அரிசிஎடை, வெங்காரபஸ்பம்1 அரிசிஎடை, நன்டுகல்பஸ்பம்1 அரிசிஎடை கலந்து காலை, மாலை இருவேளையும் உணவுக்கு முன் சாப்பிட15,நாளில் கல்லடைப்பு, நீரடைப்பு தீரும்.
- முற்றின கோழிக் கல்லீரலில் இருக்கிற சிறுகல்,வெள்ளரி விதை,பூநாகம், வெல்லம் வகைக்கு ஒரு கொட்டை பாக்கு அளவு அரைத்து காலை,மாலை, உணவுக்கு முன் பசுவின் பாலில் கலக்கி குடித்துவர 4நாளில் நீரடைப்பு, கல்லடைப்பு தீரும்.
- சங்கிலை செடியின் வேர்பட்டையை பாலில் அரைத்து காலை,மாலை, உணவுக்கு முன் குடித்து வர உடலில் உள்ள உப்பு நீர் என்று சொல்லக்கூடிய கிரியேட்டியன், பொட்டாஷ் ,யூரியா,போன்றவை சிறுநீரில் வெளியேறும்
- சுவேத பஸ்பத்தை வெண்பூசனி சாற்றில் காலை,மாலை, இரவு என குடிக்க உடலில் உள்ள அனைத்து உப்பு நீரும் உடனடியாக வெளியேறும்.
- செம்பிரன்டை.தைலம்,காலை,மாலை இருவேளையும் 5.மில்லி அளவு உணவுக்கு முன் உட்கொள்ள சிறுநீரகம் சுருக்கம் நீங்கி நல்ல நிலையில் செயல்படும்
- புதினாக் கீரையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வர சிறுநீரகங்கள் பலப்படும்.
சிறுநீரகக் கல்
நோயாளிகளுக்கான உணவுகள்:
இளநீர்
இதில் பொட்டாசியம்,
மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக்
கரைத்து படிய விடாமல் தடுக்க வல்லவை.
காரட், பாகற்காய்
இவற்றில் சிறுநீரகக்
கற்களின் படிகங்களை தடுக்கும் பலவித தாது உப்புக்கள் உள்ள தாக கண்டறியப்
பட்டுள்ளது.
பழங்கள், பழச்சாறுகள்
:
வாழைப்பழம், எலுமிச்சை
இவற்றில் விட்டமின் B6 சத்தும், சிட்ரேட் (citrate) சத்தும் அதிகம் உள்ளன.
இவை சிறுநீரகக் கற்களின் ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட் (Oxalate) என்ற இரசாயனத்துடன்
சேர்த்து அதைச் சிதைத்து படிய விடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல்
தடுக்க வல்லவை.
அன்னாசிச் சாறு
இதில் சிறுநீரக
கற்களின் கருவாக இருக்கும் ஃபைப்ரின்(Fibrin) எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் (Enzymes) உள்ளன.
கொள்ளு
இதில் உள்ள சில நீர்ப்
பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் கொண்டவை.
நார்ச்சத்து உள்ள
உணவுகள்.
பாதாம் பருப்பு,
பார்லி ஓட்ஸ் போன்றவற்றில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் பலவித சத்துகள்
உள்ளன. பொதுவாக சில காய்கறிகள், பழங்களைத் தவிர தினமும் உணவில் நார்சத்து உள்ள
காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது உடல்
ஆரோக்கியத்திற்கு நல்லது.கற்கள் வருவதையும் தடுக்கும்.
தவிர்க்க வேண்டிய
உணவுப் பொருட்கள் :
காய்கறிகள்
தக்காளி விதைகள் (விதை
நீக்கப்பட்ட தக்காளி சேர்த்துக்கொள்ளலாம்.) பாலக் கீரை, பசலைக் கீரை இவற்றில்
ஆக்சலேட் சத்து அதிகம் உள்ளது.
கத்திரிக்காய்,
காளான், காலிஃப்ளவர் இவற்றில் சிறுநீரக கற்களின் மற்றொரு அங்கமான யூரிக் அமிலம் (Uric Acid) அதிகம் உள்ளது.
பரங்கிக்காய் இதில் யூரிக் அமிலமும் அதன் மூலப் பொருளான ப்யூரின்களும் அதிகம் (Purines) உள்ளன. இந்தக்
காய்கறிகளைத் தவிர்க்கவும்.
பழங்கள்
சப்போட்டா, திராட்சை
இவற்றில் ஆக்சலேட் அதிகம்.
எள்
இதில் அதிக ஆக்சலேட்
உள்ளது. அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.
அசைவ உணவுகள்
ஆட்டிறைச்சி (Mutton), மாட்டிறைச்சி (Beef), கோழிக் கறி (Chicken), முட்டை (Egg), மீன் (Fish) இவை அனைத்திலும்
ப்யூரின்களும், யூரிக் அமில மும் அதிகம். யூரிக் அமில வகைக் கற்கள் உள்ளவர்கள்
தவிர்க்க வேண்டும்.
முந்திரிப்பருப்பு
இதில் அதிக ஆக்சலேட்
உள்ளது. சிறுநீரகக் கற்கள் பெரும்பாலும் கால்சியம் மற்றும் ஆக்சலேட் கலந்தவை
ஆகும். இதனைத் தவிர்க்கவும்.
சாக்லேட், சாக்லேட்
கலந்த தின்பண்டங்கள், காபி, டீ ஆகியவற்றிலும் ஆக்சலேட் உள்ளது. எச்சரிக்கை தேவை.
உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான்,
அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு,
பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ,
சமையல் சோடா, சோடியம் பை&கார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவைகளை
தவிர்க்க வேண்டும். கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை
கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
கற்களின் வகைகளுக்கேற்ற
சிறப்பு உணவு முறைகள்
கால்சியம் மற்றும்
ஆக்சலேட் கலந்த வகை கற்கள் :
தினமும் 12 டம்ளர்
நீர் அருந்தவும். அதிக கால்சியம் உள்ள பால், பால் பொருட்கள் மற்றும் வேர்க்கடலை,
ஆக்சலேட் அதிகம் உள்ள சாக்லேட், கோலா கலந்த பானங்கள் மேற்கூறிய மற்ற உணவுகளை
குறைத்துக் கொள்ளவும்.அல்சருக்கு எடுத்துக் கொள்ளும் ஜெலுசில் போன்ற கால்சியம்
கலந்த ஆன்டா சிட் மருந்துகளைத் தவிர்க்கவும். உணவில் உப்பையும் குறைத்துக்
கொள்ளவும்.
யூரிக் அமில வகை
கற்கள் :
தினமும் 12 டம்ளர்
நீர் அருந்தவும். ப்யூரின்கள் அதிக உள்ள மட்டன், சிக்கன், முட்டை, மீன், பால்
போன்ற உணவு வகைகளைத் தவிர்க்கவும்.
ஸ்ட்ரூவைட் வகை கற்கள்
:
இந்த வகை கற்கள்
சிறுநீரகங்களில் கிருமி தாக்கத்தால் வருகின்றன. தினம் குறைந்தது 12 டம்ளர் நீர்
அருந்தவும்.
சிஸ்டின் வகைக் கற்கள்
:
இவை மிக அபூர்வமானவை.
மீன் உணவை தவிர்க்கவும். தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும்.
1 கருத்து:
Sell your k1dney in India? G1ve 0ne Kldney, Call or whatsapp +91 9945317569 uS
Email: healthc976@ gmail.com
கருத்துரையிடுக