நீரிலுள்ள
ஜந்துக்களை சூரிய
ஒளியில் போடல்,நெருப்பிலிட்டு சுடுதல்,தசையறுத்தல், தண்ணீர்
கொடாதல்,சூரியனை
நினையாத தோஷம் இவற்றால்
சுர ரோகம்
வந்தணுகும்.
கடன் வாங்கிக் கொடாமையாலும்,பெரியோரை மனம் நோகப் பேசி ஏசுவதாலும், தாகபானம் உதவாமையினாலும்,பித்தட்சயம்,பித்தகாசம்,மந்ததாரகாசம், இரத்தகாசம், சுவாசகாசம் உண்டாகும்.மேலும் எலி கடியாலும்,மூலத்தில் அனல் அதிகரித்து மூளையில் நீர் கசிந்து நெஞ்சில்சுவரி,கபத்தை உறையச் செய்யும்.
சிலேத்மசுரக்குணம்;தேகத்தில் அனல் மிகுந்து திமிரேறிச் சிரசில் நீர்கொண்டு தலை வலிக்கும். உடம்புளைந்து கடித்துச் சுரங்காயும்; மூக்கில் நீர்வடியும்; சத்தம் பிறக்க இருமலுண்டாகும்; கோழை வரும்; நெஞ்சு வலிக்கும்; புலை மயக்கங் காணும்;கண்ணும் நாசியும் காந்தும்; விட்டுவிட்டுச் சுரங் காயும்; சிரசில் வியர்வை பொழியும்; கர்த்தபத்த நீர் போலிறங்கும்;மலந்தீயும்;நாவிதழ் தடிக்கும்; வெளுக்கும்; இனிக்கும்; கரிக்கும்;வாய் நீரூறும்;உடல் கண் கபம் வெளுக்கும்;மலம் அழுத்தமாயிறங்கும்.
வாதசிலேத்துமசுரக்குணம்;சுரங் குளிர் காணும்;வாய் பிதற்றும்; பற்கடிக்கும்; காதடைக்கும்;கண்ணொளி மயங்கும்;நா தடிக்கும்; இருமலெடுக்கும்;இரத்தம் விழும்;தொண்டை கம்மும்;மலங்கட்டும்; ஸ்மரணை,அசதி,இளைப்புண்டாகும்.
சன்னிவாதசுரக்குணம்;மார்பு,கழுத்து,நெற்றி வியர்க்கும்;விக்கலெடுக்கும்; பிதற்றும்;விழி பதைக்கும்;மேல் மூச்சுண்டாகும்;வயிறு வலிக்கும்; கழிச்சலாகும்.
உட்சுரத்தின்குணம்;இராப்பகல் இடைவிடாது சுரங் காயும்;உடல் வெளுத்து வற்றும்; பித்தத்தால் மயக்கம்,தலைநோய் காணும்.
மாந்தசுரத்தின்குணம்;உடல் காயும்;வெளுக்கும்;நடுக்கும்;நா வரண்டு தடுத்துத் தித்திக்கும்;அடிக்கடி இருமல் காணும்.
அஜீரணகாய்ச்சலின்குணம்;காய்ச்சல் காயும்;வயிறு பொருக்கழியும்; வலிக்கும்; வாயு மிகப்பிரியும்;அடிக்கடி புளித்தேப்பம், விக்கல்,கொட்டாவி காணும்;நா உலரும்; கைக்கும்;உடல் நோவும்;வியர்க்கும்;குரல் கம்மும்.
அஸ்தியைப் பற்றின சுரத்தின்குணம்;தாகம் மிகுந்துகாணும்; தேகம் வெளுக்கும்; குளிர்ச்சியாயிருக்கும்;ஒவ்வொரு நேரம் காய்ச்சல் அதிகமாய்க் காய்ந்து விட்டுவிடும்.
இரத்தத்தைப் பற்றின சுரத்தின் குணம்;காய்ச்சல் அதிகமாய் அடிக்கும்; தாகிக்கும்;இளைப்பு,வியர்வை,மூர்ச்சை காணும்;சித்தபிரமை கொள்ளும்; உடம்பு நோவும்.
மாமிசத்தைப் பற்றின சுரத்தின் குணம்;அதிகமாய் சுரமடிக்கும்; சுவாசங் காணும்; தேகமெல்லாம் நமைச்சலெடுக்கும்;ஆயாசம், மூர்ச்சை காணும்; மயிர் கூச்செரியும்;
விஷகாய்ச்சலின்குணம்:ஒருபுறங்குளிரும;,ஒருபுறங்காயும்,தேகத்தில் விஷம் ஏறுவது போல் தோன்றும்
சீதள ரோகத்தை வருவிக்கும் சன்னி 13 வகைப்படும் தாந்திரிகன்,அந்தகன்,சீதாங்கம்,உருத்திரதாகம்,தித்தவிப்பிரமைகண்டன், கண்டகுச்சம்,அபினியாசம்,உருத்திராகம்,விக்கநாதம்,கருனியாசம், பொக்கநேத்திரம்,பீர்த்தட்டி,முருக்கதாபம், பிரலாபம்.
அந்தக சன்னிக் குணம்; அகோரமாய்ச் சுரங் காயும்;மெய் விரைக்கும்; வாய் நீர் மடியும்;விக்கல்,வாந்தி, இருமல்,தாகம்,பிரதமை, பிரதாபம், வீக்கம்,நடுக்கல், மாராட்டங் காணும்;தலை நடுக்கும்; சிமிட்டும்; வயிறெரியும்;பிதற்றும்;பல சிந்தையுண்டாகும்;10தினத்தில் கொல்லும்.
சீதாங்க சன்னிக் குணம்;உடல் நொந்து குளிரும், நடுக்கும், வியர்க்கும்; வயிறு பொருமி இரைந்து கழியும்; தாகம்,விக்கல், பிரதாபம்,வாந்தி, அயர்வு, சோபம் மூர்ச்சை உண்டாகும்;எங்கும் நெஞ்சிற் கபம் அடைக்கும்; எழுந்து விழுந்து தள்ளாடும்; 15 நாளில் மரணம்.
கண்டகூச்ச சன்னிக்குணம்;சுரம் கொடூரமாய்க் காயும்;உடல் புண் போலுளையும்; நடுங்கும்;தினவெடுக்கும்;தலை வலிக்கும்;நித்திரை கொள்ளும்; தொண்டை,நா உலர்ந்து முள்ளுண்டாகி புண்ணாகும்; பல்லீறில் இரத்தம் வடியும்;வயிறு கழிந்து பொருமும்;பொய் பிதற்றும்; தாபசோபப் பிரதாபம், வாந்தி,விக்கல்,சுரம்,மூச்சு,இளைப்புங் காணும்; கண்ணுங் காதும் கம்மும்; எழுந்து அலைந்து களைத்து விழும். 19 நாளில் கொல்லும்
பொக்கேந்திரசன்னிக்குணம்;உடல் மிகக்காயும்;விழி பருத்துக் காணும்; அதில் பனித்துளிபோல் நீர் வடியும்;பார்வை மயங்கும்;இரு காதடைக்கும்; பொய் பிதற்றும்;பிரமை கொள்ளும்;விக்கல், தாகம், களைப்புண்டாகும்; 8 நாளில் கொல்லும்.
அபினியரச சன்னிக்குணம்;3நாடியும் படபடத்து நிற்கும்;அகோரமாய் சுரங் காயும்; முகம் தெளிவாயும் மினுமினுப்பாயும் இருக்கும்;சரீரம் நோகும்; நித்திரை, தாகம்,வியர்வை,புலப்பங் காணும்;கன்னம் வீங்கும்; காதடைக்கும்; நாசி கறுக்கும்;வாய் பேசாது;மேல் மூச்சுண்டாகும்; தொண்டை கட்டும்; 1 நாளில் கொல்லும்.
உருத்திரசன்னிகுணம்; சுரங்காயும்,உதடுலரும்,நாக்கு,விழியும் கருக்கும்; அதில் முள்ளு போலுமிருக்கும். நெஞ்சில் கபம் கட்டியிருக்கும்; ,இளைக்கும், தொண்டை நோவும், தேகம் நடுக்கும்; கழுத்தும்,நெற்றியும் வியர்க்கும்; தாகம்,விக்கல் காணும்;பிரமை கொள்ளும்;அபயமிடும், சிரிப்புடன் போகம் செய்ய விரும்பும், .10வது தினத்தில் கொல்லும்
பீர்த்தட்டிச்சன்னிக்குணம்; அகோரமாய் சுரங்காயும்:,உடல் சிக்கும்,தலை சுற்றும். மதுக் குடித்தாற்போல் பிதற்றும்;வயிறு கழியும்;உப்பிசமாகும், நா உதடுலரும் கருக்கும் விரியும்,இரத்தம் வரும் முகத்தைப் பார்க்கும்; பெருமூச்சு,இருமல், விக்கல் ,இளைப்பு,தாகம்,வாந்தி காணும்; 10 நாளில் கொல்லும்..
தாந்தரிச்சன்னிக்குணம்; உடல்காயும்;பிதற்றும்,பாதிக்கும்; வாந்தியாகும் உண்னாவு வரண்டு கறுத்திருக்கும்,வயிறு கழியும், காதுகேளாது, கண்ணில் சலம்வடியும்,புகைந்து இருமும், விழுந்தழுது சோரும் .25 நாளில் தீரும்.
சித்தவிப்பிரமசன்னிக்குணம்; உடம்பு மிக நொந்து சுரங் காயும்; வாத பித்தங் கோபித்துப் பித்தமதி மயங்கும்;அழுது விம்மும்;மிகச் சிரிப்புண்டாகும்;ஆடு கண்களிக்கும்;அடிக்கடி எழுந்து விழும்;அழுது புரளும்;அலரும்,அயரும், விழுக்கும்,வந்தபேரை வாஞ்சைபோல் தடவி மகிழும்;நெடுமூச்செய்து 11நாள் சென்றால் தீரும். தாந்திரீகசன்னிக்குணம்;உடலசைத்து நொந்து உளையும், குத்தும்,காயும், வியர்க்கும், தாக்கும்,தலைவலிக்கும்,வாய் ஜலம் வடியும்,இருமல்,சத்தி, மயக்கம்,ஆராடம் உழத்தி காணும்,நித்திரை சற்றும் வராது,புத்தி கலங்கும், பலங் கெடும், 7 நாளில் கொன்றுவிடும்.
இரபலசன்னிக்குணம்;உடல் நோகும்;சுரம் காயும்;குளிரும்,நடுங்கும், தாகிக்கும், விக்கலெடுக்கும்,பிதற்றும்,பேய் போல பேசும்;நெஞ்சில் கபங்கட்டி இருமும், இளைக்கும்,தலை சுழற்றும்,எழுந்து ஓங்கி நிற்கும், தள்ளாடும்,மாதர் மேலாசை கொள்ளும்,ஐயோ என்று அபயமிடும்,14 நாள் சென்றால் சரியாகும்.
கருணியாசன் சன்னிக்குணம்;உடல் நோவும்,வெதும்பும்,தலை வலிக்கும், தாகிக்கும், பொய் பேசும்,தலை சுற்றும்,மூர்ச்சை,வாந்தி,விக்கல்,இருமல் காணும்; நெரி குரளும்,திடுக்கிட்டெழுந்திருக்கும்,நித்திரை கொள்ளாது, 60 நாளில் மீளும்.
சங்குசன்னிக்குணம்;(அ)உடல் வெதுப்பும்,நா வரளும், தாகிக்கும், இருமும், வயிறு பொருமும்,வாந்தி பண்ணும்,விக்கலெடுக்கும்,என்ன சொன்னாலும் பேசாது நித்திரை கொள்ளும்,அசைக்கப்பட்டு எழுந்திருக்கும், அழும்,காதல் பூரும், கோபமாகும்,14 நாளில் குணமாகும். (ஆ)நாக்கு வெடிக்கும், விக்கலெடுக்கும் ,இருமும்,நடுங்கும்,பிதற்றும்,நாவு தடிக்கும்,காதலினால் அடிக்கடி எழுந்திருக்கும்,12நாளில் தீரும்.
வாதசன்னிக்குணம்;உடல் காயும்,வியர்க்கும்,புரளும்,பயந்தோன்றி வெளுக்கும், இருமும்,இளைக்கும்,வயிறு பொருமும்,கண் சிவக்கும்,நா கறுக்கும்,இளைப்பு களையும்,குளிர்ச்சி பிறக்கும்.
பித்தசன்னிக்குணம்;ஐம்புலன்களும் நொந்து புண்போல் நோகும்;அயரும், பதறி நடுங்கும்,மெய் சுழிக்கும்,கண்ணும் வாயும் கோணும்,கண் சுற்றும், புருவம் நெளிக்கும்;மாதரை இச்சிக்கும்,பிதற்றும்,புலம்பும்,நகைக்கும், வயிறெரியும், வாயும் இடரும்,புண்ணாகும்,குரல் கம்மும். பயித்திய சன்னிக்குணம்;அடிக்கடி எழுந்து ஓடும்;உற்றுப் பார்க்கும், தரையில் புரண்டு வாய்விட்டழும்;கொட்டாவி விடும்;சீலையை உரிந்து கிழித்தெரியும்; ஆடிப்பாடிக் கை கொட்டும்.
சுப சன்னிக்குணம்;துகிலை துணுக்கு துணுக்காய் கிழித்தெரியும்; உறுத்திக் கேட்டால் வசை பேசும்,எதிர்த்தார் முகத்தில் துப்பும்,நீர்,மலம் உண்ணும். சிலேத்மசன்னிக்குணம்;நெஞ்சில் கபம் கட்டி இரையும்,வியர்க்கும், தோன்றாத தெல்லாம் தோன்றும்,துணை தேடும்,சலத்தையும் வெறுக்கும், வற்புறுத்தும்,சோரும்,மயங்கிடும்,நா வெளுக்கும்,மலசலம்வெளிப்பெய்தும்
சந்தசன்னிக்குணம்;உடல்வெதும்பும்;தலை வலிக்கும்,மூர்ச்சை காணும்; அடிக்கடி எழுந்திருக்கும்,கண் சிவந்திருக்கும்,அறிவு மயங்கும்.
மாந்தசன்னிக்குணம்;உடல் காயும்,கைகால் குளிராதிருக்கும்,நா கறுத்திருக்கும், மலங்கட்டும்,நீரிறங்கும்,மயக்கங் காணும்,தலை,முகம் வலிக்கும்.
வெடிசன்னிக்குணம்;காதுள்ளே திரண்டெழுந்து கனத்துக் குத்தி வலியை உண்டாக்கிச் சேதப்படும்படி முகத்தை திருப்பும்.
முகவாதசன்னிகுணம்; கிண்னிய புருவத்தில் செவியில் குத்தலுண்டாகி முகத்தையும் வாயையும் ஒருபக்கமாகத் திருகிவிடும்.
சுகசன்னிக்குணம்;தைலஞ் செய்து கொண்டு தயிரும் அன்னமும் புசித்திருக்கும் போதும்,வயிறு மந்தமாயிருக்கும் போதும்,தேகம் அலுத்திருக்கும் போதும் மாதரைப் புணர்ந்தாலும்;கடும் புணர்ச்சியினாலும் சுக சன்னி பிறருக்குப் பிறந்தால் ;உடம்பு நோகும்,காயும், கண்சிவக்கும், வியர்க்கும், சுருட்டி எழுந்திருக்கும்,பிரமை உண்டாகும்.
கபாலசன்னிக்குணம்;பிடரியைத் திருப்பக்கூடாத வலி காணும், தலையிலும் காதிலும் ஈட்டியால் குத்தினாற்போல் குத்தும், தினவெடுக்கும், புத்தியைக் கெடுக்கும்,திமிரேறும்,முகம் மூக்கு கண் சிறுத்துக்காட்டும்,வியர்வை,தெப்பு, அயர்வு,சோர்ந்து நடுக்கும்;கைகளில் காந்தல் காணும்.
புறவீக்கக்குணம்:அடுத்தடுத்துஎடுத்துக்குத்தும்,அதிகமாய் விரைக்கும், வியர்க்கும், நாதடுமாறும்,பல்கிட்டும்,நெஞ்சடைக்கும், தேகத்தைப் பிறகே வளைத்து தள்ளும்
பிடருவலிபுறவீக்கக்குணம்;:தலைகனக்கும்,பிடரிவலிக்கும்,உடலில் குத்தும், திமிர் மயக்கம் உகிலை காணும்
உட்குணத்தின்குணம்;உடம்பு வியர்க்கும்,பல் கிட்டும்,தேகம் விரைத்து உள்ளே குத்தும்,நாவரட்சி காணும்,தாகிக்கும்,வாயு கீழ்நோக்கும் சத்தத்துடன் பரியும் அன்னபானம் செல்லாது
கடன் வாங்கிக் கொடாமையாலும்,பெரியோரை மனம் நோகப் பேசி ஏசுவதாலும், தாகபானம் உதவாமையினாலும்,பித்தட்சயம்,பித்தகாசம்,மந்ததாரகாசம், இரத்தகாசம், சுவாசகாசம் உண்டாகும்.மேலும் எலி கடியாலும்,மூலத்தில் அனல் அதிகரித்து மூளையில் நீர் கசிந்து நெஞ்சில்சுவரி,கபத்தை உறையச் செய்யும்.
தக்கனுடைய யாகத்தில் நெற்றிக்கண்ணில் பிறந்தது காய்ச்சல். ஆதிரையும் சோமவாரமும்,சனியும்
கார்த்திகையும்,விசாகமும் வெள்ளியும், ரேவதியும்
புதனும் கூடிய தினத்தில் சுரம் கண்டால் பிழைப்பது அரிது.
வாதசுரக்குணம்; உடல் கடுக்கும்;சந்து பொருந்துகள் உளையும்;கீழ் முதுகும் இரு விலாவும் நோகும்.தலை வலிக்கும்;உடல் குளிர்ந்து நடுங்கி மயிர் சிலிர்த்துச் சுரந் தோன்றும்;மலங் கட்டும்; பசி மந்திக்கும்; கண்ணீர் வரும்; மலம் கருக்கும்;இரவும் பகலும் நித்திரை வராமல் தாகம், அசதி,கொட்டாவி உண்டாம். பித்தசுரக்குணம் ; :கொடூரமாய்சுரங்காயும் பிதற்றும், நெஞ்செரிக்கும், கிறுகிறுக்கும், சத்திக்கும், அசதி ,ஆயாசம் காணும் .தேகம் புளிக்கும்; வியர்க்கும் தலைஅசைக்கும், தாகிக்கும்,முகம்கடுக்கும்,தொண்டை புண்ணாகும் , நாவுலரும், கசக்கும்.முகம்,கண்ணீர்,மலம் மஞ்சளிக்கும், சுறுக்கும்,அடிக்கடி பசித்துந்திக்கும். வயிற்றில் நின்ற பித்தம் வற்றிக் குலை குளிர்ந்தால் சுரம் விட்டு,நாள் சென்றால் இரத்தம் வற்றித் தேகம் வெளுத்து வீக்கங் கண்டு அடிக்கடி குளிருண்டாகி மலங்கட்டி உயிர் பிரியும்.
வாதசுரக்குணம்; உடல் கடுக்கும்;சந்து பொருந்துகள் உளையும்;கீழ் முதுகும் இரு விலாவும் நோகும்.தலை வலிக்கும்;உடல் குளிர்ந்து நடுங்கி மயிர் சிலிர்த்துச் சுரந் தோன்றும்;மலங் கட்டும்; பசி மந்திக்கும்; கண்ணீர் வரும்; மலம் கருக்கும்;இரவும் பகலும் நித்திரை வராமல் தாகம், அசதி,கொட்டாவி உண்டாம். பித்தசுரக்குணம் ; :கொடூரமாய்சுரங்காயும் பிதற்றும், நெஞ்செரிக்கும், கிறுகிறுக்கும், சத்திக்கும், அசதி ,ஆயாசம் காணும் .தேகம் புளிக்கும்; வியர்க்கும் தலைஅசைக்கும், தாகிக்கும்,முகம்கடுக்கும்,தொண்டை புண்ணாகும் , நாவுலரும், கசக்கும்.முகம்,கண்ணீர்,மலம் மஞ்சளிக்கும், சுறுக்கும்,அடிக்கடி பசித்துந்திக்கும். வயிற்றில் நின்ற பித்தம் வற்றிக் குலை குளிர்ந்தால் சுரம் விட்டு,நாள் சென்றால் இரத்தம் வற்றித் தேகம் வெளுத்து வீக்கங் கண்டு அடிக்கடி குளிருண்டாகி மலங்கட்டி உயிர் பிரியும்.
சிலேத்மசுரக்குணம்;தேகத்தில் அனல் மிகுந்து திமிரேறிச் சிரசில் நீர்கொண்டு தலை வலிக்கும். உடம்புளைந்து கடித்துச் சுரங்காயும்; மூக்கில் நீர்வடியும்; சத்தம் பிறக்க இருமலுண்டாகும்; கோழை வரும்; நெஞ்சு வலிக்கும்; புலை மயக்கங் காணும்;கண்ணும் நாசியும் காந்தும்; விட்டுவிட்டுச் சுரங் காயும்; சிரசில் வியர்வை பொழியும்; கர்த்தபத்த நீர் போலிறங்கும்;மலந்தீயும்;நாவிதழ் தடிக்கும்; வெளுக்கும்; இனிக்கும்; கரிக்கும்;வாய் நீரூறும்;உடல் கண் கபம் வெளுக்கும்;மலம் அழுத்தமாயிறங்கும்.
வாதசிலேத்துமசுரக்குணம்;சுரங் குளிர் காணும்;வாய் பிதற்றும்; பற்கடிக்கும்; காதடைக்கும்;கண்ணொளி மயங்கும்;நா தடிக்கும்; இருமலெடுக்கும்;இரத்தம் விழும்;தொண்டை கம்மும்;மலங்கட்டும்; ஸ்மரணை,அசதி,இளைப்புண்டாகும்.
சன்னிவாதசுரக்குணம்;மார்பு,கழுத்து,நெற்றி வியர்க்கும்;விக்கலெடுக்கும்; பிதற்றும்;விழி பதைக்கும்;மேல் மூச்சுண்டாகும்;வயிறு வலிக்கும்; கழிச்சலாகும்.
உட்சுரத்தின்குணம்;இராப்பகல் இடைவிடாது சுரங் காயும்;உடல் வெளுத்து வற்றும்; பித்தத்தால் மயக்கம்,தலைநோய் காணும்.
மாந்தசுரத்தின்குணம்;உடல் காயும்;வெளுக்கும்;நடுக்கும்;நா வரண்டு தடுத்துத் தித்திக்கும்;அடிக்கடி இருமல் காணும்.
அஜீரணகாய்ச்சலின்குணம்;காய்ச்சல் காயும்;வயிறு பொருக்கழியும்; வலிக்கும்; வாயு மிகப்பிரியும்;அடிக்கடி புளித்தேப்பம், விக்கல்,கொட்டாவி காணும்;நா உலரும்; கைக்கும்;உடல் நோவும்;வியர்க்கும்;குரல் கம்மும்.
அஸ்தியைப் பற்றின சுரத்தின்குணம்;தாகம் மிகுந்துகாணும்; தேகம் வெளுக்கும்; குளிர்ச்சியாயிருக்கும்;ஒவ்வொரு நேரம் காய்ச்சல் அதிகமாய்க் காய்ந்து விட்டுவிடும்.
இரத்தத்தைப் பற்றின சுரத்தின் குணம்;காய்ச்சல் அதிகமாய் அடிக்கும்; தாகிக்கும்;இளைப்பு,வியர்வை,மூர்ச்சை காணும்;சித்தபிரமை கொள்ளும்; உடம்பு நோவும்.
மாமிசத்தைப் பற்றின சுரத்தின் குணம்;அதிகமாய் சுரமடிக்கும்; சுவாசங் காணும்; தேகமெல்லாம் நமைச்சலெடுக்கும்;ஆயாசம், மூர்ச்சை காணும்; மயிர் கூச்செரியும்;
விஷகாய்ச்சலின்குணம்:ஒருபுறங்குளிரும;,ஒருபுறங்காயும்,தேகத்தில் விஷம் ஏறுவது போல் தோன்றும்
சீதள ரோகத்தை வருவிக்கும் சன்னி 13 வகைப்படும் தாந்திரிகன்,அந்தகன்,சீதாங்கம்,உருத்திரதாகம்,தித்தவிப்பிரமைகண்டன், கண்டகுச்சம்,அபினியாசம்,உருத்திராகம்,விக்கநாதம்,கருனியாசம், பொக்கநேத்திரம்,பீர்த்தட்டி,முருக்கதாபம், பிரலாபம்.
1.
அசாத்திய சன்னிகள் அந்தகன்,சீதாங்கம்,கண்டகுச்சம்,பொக்கநேத்ரம்,அபினியாசம், உருத்திராகம், பீர்த்தட்டி. அந்தக சன்னிக் குணம்; அகோரமாய்ச் சுரங் காயும்;மெய் விரைக்கும்; வாய் நீர் மடியும்;விக்கல்,வாந்தி, இருமல்,தாகம்,பிரதமை, பிரதாபம், வீக்கம்,நடுக்கல், மாராட்டங் காணும்;தலை நடுக்கும்; சிமிட்டும்; வயிறெரியும்;பிதற்றும்;பல சிந்தையுண்டாகும்;10தினத்தில் கொல்லும்.
சீதாங்க சன்னிக் குணம்;உடல் நொந்து குளிரும், நடுக்கும், வியர்க்கும்; வயிறு பொருமி இரைந்து கழியும்; தாகம்,விக்கல், பிரதாபம்,வாந்தி, அயர்வு, சோபம் மூர்ச்சை உண்டாகும்;எங்கும் நெஞ்சிற் கபம் அடைக்கும்; எழுந்து விழுந்து தள்ளாடும்; 15 நாளில் மரணம்.
கண்டகூச்ச சன்னிக்குணம்;சுரம் கொடூரமாய்க் காயும்;உடல் புண் போலுளையும்; நடுங்கும்;தினவெடுக்கும்;தலை வலிக்கும்;நித்திரை கொள்ளும்; தொண்டை,நா உலர்ந்து முள்ளுண்டாகி புண்ணாகும்; பல்லீறில் இரத்தம் வடியும்;வயிறு கழிந்து பொருமும்;பொய் பிதற்றும்; தாபசோபப் பிரதாபம், வாந்தி,விக்கல்,சுரம்,மூச்சு,இளைப்புங் காணும்; கண்ணுங் காதும் கம்மும்; எழுந்து அலைந்து களைத்து விழும். 19 நாளில் கொல்லும்
பொக்கேந்திரசன்னிக்குணம்;உடல் மிகக்காயும்;விழி பருத்துக் காணும்; அதில் பனித்துளிபோல் நீர் வடியும்;பார்வை மயங்கும்;இரு காதடைக்கும்; பொய் பிதற்றும்;பிரமை கொள்ளும்;விக்கல், தாகம், களைப்புண்டாகும்; 8 நாளில் கொல்லும்.
அபினியரச சன்னிக்குணம்;3நாடியும் படபடத்து நிற்கும்;அகோரமாய் சுரங் காயும்; முகம் தெளிவாயும் மினுமினுப்பாயும் இருக்கும்;சரீரம் நோகும்; நித்திரை, தாகம்,வியர்வை,புலப்பங் காணும்;கன்னம் வீங்கும்; காதடைக்கும்; நாசி கறுக்கும்;வாய் பேசாது;மேல் மூச்சுண்டாகும்; தொண்டை கட்டும்; 1 நாளில் கொல்லும்.
1.
உருத்திரசன்னிகுணம்; சுரங்காயும்,உதடுலரும்,நாக்கு,விழியும் கருக்கும்; அதில் முள்ளு போலுமிருக்கும். நெஞ்சில் கபம் கட்டியிருக்கும்; ,இளைக்கும், தொண்டை நோவும், தேகம் நடுக்கும்; கழுத்தும்,நெற்றியும் வியர்க்கும்; தாகம்,விக்கல் காணும்;பிரமை கொள்ளும்;அபயமிடும், சிரிப்புடன் போகம் செய்ய விரும்பும், .10வது தினத்தில் கொல்லும்
பீர்த்தட்டிச்சன்னிக்குணம்; அகோரமாய் சுரங்காயும்:,உடல் சிக்கும்,தலை சுற்றும். மதுக் குடித்தாற்போல் பிதற்றும்;வயிறு கழியும்;உப்பிசமாகும், நா உதடுலரும் கருக்கும் விரியும்,இரத்தம் வரும் முகத்தைப் பார்க்கும்; பெருமூச்சு,இருமல், விக்கல் ,இளைப்பு,தாகம்,வாந்தி காணும்; 10 நாளில் கொல்லும்..
தாந்தரிச்சன்னிக்குணம்; உடல்காயும்;பிதற்றும்,பாதிக்கும்; வாந்தியாகும் உண்னாவு வரண்டு கறுத்திருக்கும்,வயிறு கழியும், காதுகேளாது, கண்ணில் சலம்வடியும்,புகைந்து இருமும், விழுந்தழுது சோரும் .25 நாளில் தீரும்.
சித்தவிப்பிரமசன்னிக்குணம்; உடம்பு மிக நொந்து சுரங் காயும்; வாத பித்தங் கோபித்துப் பித்தமதி மயங்கும்;அழுது விம்மும்;மிகச் சிரிப்புண்டாகும்;ஆடு கண்களிக்கும்;அடிக்கடி எழுந்து விழும்;அழுது புரளும்;அலரும்,அயரும், விழுக்கும்,வந்தபேரை வாஞ்சைபோல் தடவி மகிழும்;நெடுமூச்செய்து 11நாள் சென்றால் தீரும். தாந்திரீகசன்னிக்குணம்;உடலசைத்து நொந்து உளையும், குத்தும்,காயும், வியர்க்கும், தாக்கும்,தலைவலிக்கும்,வாய் ஜலம் வடியும்,இருமல்,சத்தி, மயக்கம்,ஆராடம் உழத்தி காணும்,நித்திரை சற்றும் வராது,புத்தி கலங்கும், பலங் கெடும், 7 நாளில் கொன்றுவிடும்.
இரபலசன்னிக்குணம்;உடல் நோகும்;சுரம் காயும்;குளிரும்,நடுங்கும், தாகிக்கும், விக்கலெடுக்கும்,பிதற்றும்,பேய் போல பேசும்;நெஞ்சில் கபங்கட்டி இருமும், இளைக்கும்,தலை சுழற்றும்,எழுந்து ஓங்கி நிற்கும், தள்ளாடும்,மாதர் மேலாசை கொள்ளும்,ஐயோ என்று அபயமிடும்,14 நாள் சென்றால் சரியாகும்.
கருணியாசன் சன்னிக்குணம்;உடல் நோவும்,வெதும்பும்,தலை வலிக்கும், தாகிக்கும், பொய் பேசும்,தலை சுற்றும்,மூர்ச்சை,வாந்தி,விக்கல்,இருமல் காணும்; நெரி குரளும்,திடுக்கிட்டெழுந்திருக்கும்,நித்திரை கொள்ளாது, 60 நாளில் மீளும்.
சங்குசன்னிக்குணம்;(அ)உடல் வெதுப்பும்,நா வரளும், தாகிக்கும், இருமும், வயிறு பொருமும்,வாந்தி பண்ணும்,விக்கலெடுக்கும்,என்ன சொன்னாலும் பேசாது நித்திரை கொள்ளும்,அசைக்கப்பட்டு எழுந்திருக்கும், அழும்,காதல் பூரும், கோபமாகும்,14 நாளில் குணமாகும். (ஆ)நாக்கு வெடிக்கும், விக்கலெடுக்கும் ,இருமும்,நடுங்கும்,பிதற்றும்,நாவு தடிக்கும்,காதலினால் அடிக்கடி எழுந்திருக்கும்,12நாளில் தீரும்.
வாதசன்னிக்குணம்;உடல் காயும்,வியர்க்கும்,புரளும்,பயந்தோன்றி வெளுக்கும், இருமும்,இளைக்கும்,வயிறு பொருமும்,கண் சிவக்கும்,நா கறுக்கும்,இளைப்பு களையும்,குளிர்ச்சி பிறக்கும்.
1.
பித்தசன்னிக்குணம்;ஐம்புலன்களும் நொந்து புண்போல் நோகும்;அயரும், பதறி நடுங்கும்,மெய் சுழிக்கும்,கண்ணும் வாயும் கோணும்,கண் சுற்றும், புருவம் நெளிக்கும்;மாதரை இச்சிக்கும்,பிதற்றும்,புலம்பும்,நகைக்கும், வயிறெரியும், வாயும் இடரும்,புண்ணாகும்,குரல் கம்மும். பயித்திய சன்னிக்குணம்;அடிக்கடி எழுந்து ஓடும்;உற்றுப் பார்க்கும், தரையில் புரண்டு வாய்விட்டழும்;கொட்டாவி விடும்;சீலையை உரிந்து கிழித்தெரியும்; ஆடிப்பாடிக் கை கொட்டும்.
சுப சன்னிக்குணம்;துகிலை துணுக்கு துணுக்காய் கிழித்தெரியும்; உறுத்திக் கேட்டால் வசை பேசும்,எதிர்த்தார் முகத்தில் துப்பும்,நீர்,மலம் உண்ணும். சிலேத்மசன்னிக்குணம்;நெஞ்சில் கபம் கட்டி இரையும்,வியர்க்கும், தோன்றாத தெல்லாம் தோன்றும்,துணை தேடும்,சலத்தையும் வெறுக்கும், வற்புறுத்தும்,சோரும்,மயங்கிடும்,நா வெளுக்கும்,மலசலம்வெளிப்பெய்தும்
சந்தசன்னிக்குணம்;உடல்வெதும்பும்;தலை வலிக்கும்,மூர்ச்சை காணும்; அடிக்கடி எழுந்திருக்கும்,கண் சிவந்திருக்கும்,அறிவு மயங்கும்.
மாந்தசன்னிக்குணம்;உடல் காயும்,கைகால் குளிராதிருக்கும்,நா கறுத்திருக்கும், மலங்கட்டும்,நீரிறங்கும்,மயக்கங் காணும்,தலை,முகம் வலிக்கும்.
வெடிசன்னிக்குணம்;காதுள்ளே திரண்டெழுந்து கனத்துக் குத்தி வலியை உண்டாக்கிச் சேதப்படும்படி முகத்தை திருப்பும்.
முகவாதசன்னிகுணம்; கிண்னிய புருவத்தில் செவியில் குத்தலுண்டாகி முகத்தையும் வாயையும் ஒருபக்கமாகத் திருகிவிடும்.
சுகசன்னிக்குணம்;தைலஞ் செய்து கொண்டு தயிரும் அன்னமும் புசித்திருக்கும் போதும்,வயிறு மந்தமாயிருக்கும் போதும்,தேகம் அலுத்திருக்கும் போதும் மாதரைப் புணர்ந்தாலும்;கடும் புணர்ச்சியினாலும் சுக சன்னி பிறருக்குப் பிறந்தால் ;உடம்பு நோகும்,காயும், கண்சிவக்கும், வியர்க்கும், சுருட்டி எழுந்திருக்கும்,பிரமை உண்டாகும்.
கபாலசன்னிக்குணம்;பிடரியைத் திருப்பக்கூடாத வலி காணும், தலையிலும் காதிலும் ஈட்டியால் குத்தினாற்போல் குத்தும், தினவெடுக்கும், புத்தியைக் கெடுக்கும்,திமிரேறும்,முகம் மூக்கு கண் சிறுத்துக்காட்டும்,வியர்வை,தெப்பு, அயர்வு,சோர்ந்து நடுக்கும்;கைகளில் காந்தல் காணும்.
புறவீக்கக்குணம்:அடுத்தடுத்துஎடுத்துக்குத்தும்,அதிகமாய் விரைக்கும், வியர்க்கும், நாதடுமாறும்,பல்கிட்டும்,நெஞ்சடைக்கும், தேகத்தைப் பிறகே வளைத்து தள்ளும்
பிடருவலிபுறவீக்கக்குணம்;:தலைகனக்கும்,பிடரிவலிக்கும்,உடலில் குத்தும், திமிர் மயக்கம் உகிலை காணும்
உட்குணத்தின்குணம்;உடம்பு வியர்க்கும்,பல் கிட்டும்,தேகம் விரைத்து உள்ளே குத்தும்,நாவரட்சி காணும்,தாகிக்கும்,வாயு கீழ்நோக்கும் சத்தத்துடன் பரியும் அன்னபானம் செல்லாது
1
. 1 தேகரண்டி கொத்தமல்லி விதையை, அரைலி.நீரில் 3 மணிநேரம் ஊற வைத்து, வடித்து,தினம்4வேளை கண்களை கழுவ அம்மை நோயின் போது கண்கள் பாதிக்கப்படாது
. 1 தேகரண்டி கொத்தமல்லி விதையை, அரைலி.நீரில் 3 மணிநேரம் ஊற வைத்து, வடித்து,தினம்4வேளை கண்களை கழுவ அம்மை நோயின் போது கண்கள் பாதிக்கப்படாது
2.
மருதாணி இலைகளை அரைத்து பாதங்களில் வைத்துக் கட்ட கண்கள் பாதுகாக்கப்படும்
3.
ஊமத்தை இலைகளை உலர்த்தி சுருட்டுபோல் புகைக்க சுவாசகாசம், வறட்டு இருமல் குணமாகும். அதிகம் சேர்த்தால்
புத்தி பேதலிக்கும்..
4.
கஸ்தூரி மஞ்சளை ந.எண்ணை விளக்கில் சுட்டு புகையை நுகர ,காச
நோயின் போது ஏற்படும் இரைப்பு தீரும்.
5.
4 கிராம்பு, 10நிலவேம்பு இலைகளை சிதைத்து, 2ல்1ன்றாய்க் காய்ச்சிப்
பருக காய்ச்சலுக்குப் பின் ஏற்படும் களைப்பு தீரும்
6.
காக்கரட்டான்வேர்40கிராம் சிதைத்து, 2ல்1ன்றாய்க் காய்ச்சி
வடித்து, 2 மணிக்கொருமுறை 3தேகரண்டி வீதம் சாப்பிட
காய்ச்சல் குணமாகும்
7.
சந்தனத்தூள் அரைதேகரண்டி, 2ல்1ன்றாய்க் காய்ச்சி
50மிலி, தினம் 3 வேளை பருக காய்ச்சல்
குணமாகும்.
8.
சிறுகுறிஞ்சான்இலை10,மிளகு5,சீரகம் அரைதேகரண்டி,சிதைத்து, 2ல்1ன் றாய்க் காய்ச்சி, மணிக்கு 2 தேகரண்டி வீதம் சாப்பிட
காய்ச்சல் குணமாகும்
9.
சிறுகுறிஞ்சான் வேர்த்தூள் 1சிட்டிகை,திரிகடுகு
சூரணம் 1சிட்டிகை, தினமிருவேளை,வாயிலிட்டு வெந்நீர்
பருக சுவாசகாசம் தீரும்
10. சிற்றாமுட்டிவேர்
20கிராம் சிதைத்து, 10ல்1ன்றாய் காய்ச்சி, வடித்து, சிறிது தேன் கலந்து
50மிலி,தினமிருவேளை பருக காய்ச்சல்,மிகுதாகம், மிகு வியர்வை, சீதபேதி குணமாகும்..
11. சீந்தில்தண்டு
மேல்தோலகற்றி, 5ல்1ன்றாய்க் காய்ச்சி,தினம் 3 வேளை பருக சளியுடன் வரும் காய்ச்சல் தீரும்
12. தழுதாழை இலைச்சாறு
3 தேகரண்டி, தினம்3வேளை பருக காய்ச்சல் குணமாகும்
13. துளசி இலையுடன்
மிளகு சேர்த்தரைத்து,நெல்லிக்காயளவு
வெந்நீருடன் தினமிருவேளை கொள்ள சகல காய்ச்சலும் குணமாகும்
14.
50 துளசி இலை, 20 மிளகு சேர்த்தரைத்து,பயிறளவு மாத்திரை செய்து, தேன் அல்லது வெந்நீருடன் தினமிருவேளை கொள்ள சகல
காய்ச்சலும் குணமாகும்.
15. நல்வேளை பூச்சாறு
1தேகரண்டி குழந்தைகளுக்குக்
கொடுக்க காய்ச்சல், மார்புச்சளி குணமாகும்
16. நிலவேம்புச்சமூலக்
குடிநீர் செய்து தினமிருவேளை 50மிலி பருக
காய்ச்சல் குணமாகும்
17. நிலவேம்புக்குடிநீர்
200மிலி காலையில் பருக
காய்ச்சல், வயிற்றுப்
போக்கிற்குப் பின் ஏற்படும் உடல் அசதி தீரும்
18. நுணா,வேப்பங்கொழுந்தை வதக்கி,மிளகு,சுக்கு,ஓமம் சிதைத்துப் போட்டு, 5ல்1ன்றாய்க்
காய்ச்சிப் பருக அஜீரணத்தால் ஏற்படும் காய்ச்சல் தீரும்.
19. 2 கிராம் பற்பாடகத்தை
அரைத்து, 200மிலி மோரில் கலந்து
தினமிரு வேளை குழந்தைகளுக்குக் கொடுக்க காய்ச்சலுடன் கூடிய பேதி குணமாகும்
20.
புதினா இலைக்குடிநீர்
50மிலி,தினம் 3வேளை பருக காய்ச்சல் குணமாகும்
21.
3 பிடி முசுமுகுக்கை இலைகளை கால்கிலோ அரிசியுடன் சேர்த்தரைத்து, தோசைசெய்து சாப்பிட
காய்ச்சல், சளியுடன்கூடிய காய்ச்சல், நாக்குச் சுவையின்மை
தீரும்
22.
விஷ்ணுக்கிரந்தி சமூலம்
1பிடி, 2ல்1ன்றாய்க் காய்ச்சி தினமிருவேளை பருக காய்ச்சல், உட்சூடு குணமாகும்.
23.
வேப்பம்பட்டையை கஷாயம்
செய்து தினம்3வேளை பருக காய்ச்சல்
குணமாகும
24.
மஞ்சளை சுண்ணாம்பு
தெளிவு நீரில் ஊறவைத்து,பொடித்து,1தேகரண்டி, தேன் அல்லது பால்,வெந்நீரில் கொள்ள வறட்டு இருமலுடன் வரும் காய்ச்சல்
குணமாகும்
25.
மரமஞ்சள்தூள் 5கிராம்,2ல்1ன்றாய் காய்சிப் பருக காய்ச்சல், நாக்குச் சுவையின்மை தீரும்
26.
தேயிலை .பால், சர்க்கரை,துளசிஇலை கலந்து தேனீர் செய்து பருக காய்ச்சல் கட்டுப்படும்.
27. தூதுவேளை
இலைகள்10,துளசிஇலை20,மிளகு5 சேர்த்துச் சிதைத்து
4ல் 1ன்றாய் காய்ச்சி,50மிலி,தினம்3வேளை
பருக சுரம் நீங்கும்.
28. நிலவேம்புஇலை10,துளசி
இலை20, இஞ்சி சிறுதுண்டு, சிதைத்து,
4ல் 1ன்றாய் காய்ச்சி, வடித்து, 100மிலி,தினம் 3வேளை பருக ,முறைசுரம்,
தொடர்சுரம் (மலேரியா,டைபாய்டு) நீங்கும்
29. சிருங்கிபற்பம்
50-100மிகி,தினம்2வேளை,50மிலி பாலுடன் கொள்ள
தட்டம்மை குணமாகும்.
30. நன்னாரி
மணப்பாகு செய்து,அரை முதல் ஒரு தேகரண்டி,தினம்2 வேளை
கொள்ள, தட்டம்மை குணமாகும்.
31. பாலில்
சிறிதளவு மஞ்சள்தூள்,சர்க்கரை கலந்து சாப்பிட காய்ச்சல்
கட்டுப்படும்
32. பேய்மிரட்டி
இலைகளை கொதிக்கவைத்து வேதுபிடிக்க விடாத வாதசுரம் தீரும்.
33. பேய்மிரட்டி
இலைகளை நீரில் கொதிக்கவைத்து காலைமாலை பருகி வர சீதவாதசுரம்,முறைசுரம்,மலக்கழிச்சல் தீரும்.
34. கருணைக்கிழங்கை
சமைத்துச் சாப்பிட்டுவர காய்ச்சல் தீரும்.
35.
கொத்துமல்லி இலையை சமைத்துச் சாப்பிட்டுவர பித்தக்காய்ச்சல்
குணமாகும்.
36. மிளகு,சீரகம்,தூதுவேளை இடித்து,காய்ச்சிப் பருக காய்ச்சல்
குணமாகும்.
37. கல்யாணமுருங்கை
இலைச்சாறு பருக காய்ச்சல் கட்டுப்படும்.
38.
மிளகு,இஞ்சி நன்கு இடித்து காய்ச்சிப் பாலில் கலந்து
பருக தீராத காய்ச்சல் தீரும்.
39.
புளியாரைக் கீரையை
கஷாயம் செய்து சாப்பிட காய்ச்சல் தணியும்
40.
ஆடாதொடை இலைச்சாறுடன்
தேன் கலந்து சாப்பிட காய்ச்சல் குணமாகும்
41.
மிளகு,துளசி,வல்லாரை சேர்த்தரைத்து மாத்திரை செய்து சாப்பிட
காய்ச்சல் தீரும்
42.
அகத்தி இலைச்சாற்றை
உடலில் தடவ காய்ச்சல் அகலும்
43.
கொத்தமல்லி இலைச்சாற்றை
பருகிவ ர மூளைக்காய்ச்சல் குணமாகும்.
44.
ஆடாதொடைஇலை,வேர்,மிளகு சேர்த்துக் காய்ச்சி,வடித்து,தேன் கலந்து பருக காய்ச்சல் குணமாகும்
45.
கஞ்சாங்கோரை,மிளகு,பூண்டு சேர்த்தரைத்து இரவில் சாப்பிட சளிக் காய்ச்சல் நீங்கும்
46.
தேனில் இஞ்சியை வதக்கி,நீர்சுண்டக் காய்ச்சிப் பருக உடம்புவலியுடன் கூடிய காய்ச்சல் குணமாகும்
47.
துளசிஇலைச் சாற்றுடன்
உப்பு சேர்த்து இளம்சூட்டில் பருக குளிர் காய்ச்சல்
நீங்கும்.
48.
மஞ்சள்பொடியை வெந்நீரில் கலந்து பருக குளிர் காய்ச்சல் நீங்கும்
49.
மிளகுப்பொடியை தயிரில்
சேர்த்து,நெய்யில் கலந்து பருக
குளிர் காய்ச்சல் நீங்கும்
50.
நொச்சி இலையை மிளகுடன் சேர்த்துக் காய்ச்சிப் பருக மலேரியா குணமாகும்
51.
துளசிஇலையை நீரில் ஊறவைத்துக் குடிக்க மலேரியா கட்டுப்படும்
52.
சீந்தில்கொடி, பற்பாடகம், சந்தனம் சேர்த்திடித்து கஷாயம் செய்து சாப்பிட பித்தசுரம் தீரும்
53.
தாளிசாதிசூரணம் 500மிகி, 1தேகரண்டி தேனில் சாப்பிட கபசுரம் தீரும்.
54.
வெட்டிவேர்,விலாமிச்சைவேர்,கோரைக்கிழங்கு,சந்தனம்,சுக்கு,பற்பாடகம் வகைக்கு சமனெடுத்து,சிதைத்து,4ல்1ன்றாய் காய்சிப் பருகிவர பித்தசுரம் நீங்கும்
55. ஆடாதொடை,கோரைக்கிழங்கு,பற்பாடகம்,விஷ்ணுக்கிரந்தி,துளசி, பேய்ப்புடல்,கஞ்சாங்கோரை,சீந்தில் வகைக்கு 30கிராம்,இடித்து,1லி.நீரில் 500மிலியாகக்
காய்ச்சி,வடித்து(அஷ்டமூலக் குடிநீர்) 30-60மிலி, வேளைக்கு பருகிவர எவ்வித
சுரமும் தீரும்.
56. சுக்கு,திப்பிலி,கிராம்பு,சிறுகாஞ்சொறிவேர்,அக்கராகாரம்,முள்ளிவேர், கடுக்காய்தோல்,ஆடாதொடை,கற்பூரவல்லி,கோஷ்டம்,சிறுதேக்கு, நிலவேம்பு,வட்டத்திருப்பி, முத்தக்காசு வகைக்கு
சமன், 3ல்1ன்றாய் காய்ச்சிப்
பருக இருமல் சளியுடன் கூடிய சுரம் குணமாகும்
57. மூக்கிரட்டைவேர்
30கிராம்,மிளகு 4,உத்தாமணிச்சாறு 50மிலி,100மிலி வி.எண்ணையில்
காய்ச்சி,குழந்தைகளுக்கு, 6மாதம்வரை 15மிலி, அதற்குமேல் 30மிலி,வாரமிருமுறை கொடுத்துவர
காய்ச்சல் குறையும்.
58. கோரைக்கிழங்கு, சந்தனம்,வெட்டிவேர்,பற்பாடகம்,சுக்கு,பிரண்டை வகைக்கு 5கிராம்சிதைத்து,500மிலிநீரில் 125மிலியாகக் காய்ச்சி,வடித்து காலைமாலை பருக
தாகத்துடன் கூடிய சுரம் நீங்கும்
59.
விஷ்ணுக்கிரந்திசமூலம், கண்டங்கத்திரிவேர், பற்பாடகம்,தூதுவேளை வகைக்கு 30கிராம்,சிதைத்து 4ல்1ன்றாய் காய்ச்சி,50மிலி, 4-6வேளை பருகி வர விடாதசுரம்
நீங்கும்.
60.
கானாவாழைச்சமூலத்துடன்
மிளகு,சீரகம் சேர்த்துக் கஷாயம்
செய்து பருக தாகம்மிகுதியாக வரும் சுரம்,தாகம் தீரும்
61.
1பிடி வில்வஇலை,சுக்கு,மிளகு,சீரகம் கைக்கு20கிராம் இடித்து, 500மிலி நீரில்
100மிலியாக காய்ச்சிப்பருக
எவ்விதக் காய்ச்சலும் தீரும்
62. வெங்காயச்சாறு
அரை அவுன்ஸ் காலைமாலை 4நாள் பருக
சுரம் தீரும்.
63.
பற்பாடகம், கண்டங்கத்திரி, ஆடாதொடை,சுக்கு,விஷ்ணுக்கிரந்தி வகைக்கு 40கிராம்,சிதைத்து 4ல்1ன்றாய் காய்ச்சி,25மிலி தினமிருவேளை, 4 நாள் கொடுக்க நச்சுச்சுரம் தீரும்
64.
பற்பாடகம்,நிலவேம்பு,சுக்கு,அதிமதுரம்,சீரகம் வகைக்கு 10கிராம்,4ல் 1ன்றாய் காய்ச்சி,தினம்6வேளை,20-60மிலி கொடுக்கச் சுரம் தீரும்
65.
அரைப்பிடிதுளசிஇலையைஅரைலி.நீரில்200மிலியாக காய்ச்சி, வடித்து, 15 கிராம் கற்கண்டு,
10மிலி தேன கலந்து,தினம்4வேளை,30மிலி பருக காய்ச்சல்
தீரும்
66.
பற்பாடகம்,மாம்பட்டை,கோரைக்கிழங்கு,இலவம்பிசின்,கஞ்சாங்கோரை, வெட்டிவேர்,சுக்கு,மல்லி,வகைக்கு 5கிராம் இடித்து 4ல்1ன்றாய்க் காய்ச்சி , 4 வேளையாகப் பருக பேதியுடன்
கூடிய நச்சுச்சுரம் தீரும்
67.
.நீர்முள்ளிவிதை40கிராம்,நெருஞ்சில்விதை20கிராம்,வெள்ளரிவிதை10 கிராம் சிதைத்து, 5ல்1ன்றாய்க்காய்ச்சி,பனங்கற்கண்டு கலந்து, காலை மாலை, 100மிலி, 1வாரம் கொள்ள சுரம் தீரும்.
68.
கீழாநெல்லிச்சமூலம்30கிராம்,4மிளகு சேர்த்து சிதைத்து 2ல்1ன்றாய்க் காய்ச்சி
3வேளை பருக சுரம் தீரும்.
69.
சந்தனத்தூள்20கிராம்,2ல்1ன்றாய்க்காய்ச்சி 50மிலி தினம்3வேளை பருக
காய்ச்சல் தீரும்.
70. வல்லாரை, உத்தாமணி,மிளகுசமன்சேர்த்தரைத்து,குன்றிமணி அளவு மாத்திரை
செய்து,வெந்நீரில்
கொடுக்கச் சகலக் காய்ச்சலும் தீரும்
71. மிளகரணைவேர்பட்டை20கிராம், 2ல்1ன்றாய்க் காய்ச்சி, 125மிலி,காலை மாலை பருகிவர
குளிர்சுரம் தீரும்
72.
நல்வேளை பூச்சாறு
10துளி,தாய்ப்பாலில் கலந்து கொடுக்க பிறந்த குழந்தைகளுக்குக்
காணும் சுரம் தீரும்
73.
அகத்திவேர்பட்டை, மரப்பட்டையைக் குடிநீர் செய்து பருக அம்மைக் காய்ச்சல்
தீரும்
74.
50கிராம் சிறுகுறிஞ்சான் இலையுடன் திரிகடுகு வகைக்கு
10 கிராம் சிதைத்து, 500 மிலி நீரில் 200மிலியாகக் காய்ச்சி, 10 நிமிடத்திற்கொரு முறை
10மிலி கொடுக்க, தணியாத தாகசுரம் தணியும்
75.
நெல்லிக்காய் லேகியம், கழற்சிக்காயளவு,காலைமாலை சாப்பிட்டுவர எலும்பைப் பற்றிய காய்ச்சல்
தீரும்
76. விஷ்ணுக்கிரந்தி
சமூலம், ஆடாதொடைவேர், கண்டங்கத்திரிவேர், தூதுவேளை வகைக்கு 30கிராம் சிதைத்து, 4ல்1ன்றாய் காய்ச்சி, காலை மாலை 50மிலி கொடுக்க என்புருக்கிக்காய்ச்சல்
தீரும்
77. கண்டங்கத்திரிவேர்
30கிராம்,சுக்கு 5கிராம்,கொத்தமல்லி 30கிராம்,சீரகம் 1 கிராம்,சிதைத்து, 4ல்1ன்றாய் காய்ச்சி, 100மிலி 4-6
வேளை தினம் பருக சளிக்காய்ச்சல், நுரையீரல் பற்றிய எந்தச் சுரமும் தீரும்
78. கற்பூரவல்லி
இலைக் காம்புகளை குடிநீர் செய்து பருக சளிக்காய்ச்சல் தீரும்
79.
10 ஆடாதொடைஇலைகளை, 2ல்1ன்றாய் காய்ச்சி ,வடித்துத் தேன் கலந்து
, காலைமாலை 125மிலி,40நாள் பருக சளிச்சுரம் தீரும்
80.
ஆடாதொடைவேர்,கண்டங்கத்திரிவேர், சமன் பொடித்து தேன் கலந்து 0.5-1 கிராம் சாப்பிட்டுவர
சளிச்சுரம் தீரும்
81.
நல்வேளை இலை30கிராம்
சுக்கு 1 துண்டு,மிளகு6,சீரகம்1கிராம், சிதைத்து 500
மிலி நீரில்200மிலியாகக்காய்ச்சி தினம்3வேளை பருக வாதக் காய்ச்சல், சளிக்காய்ச்சல் தீரும்
82.
அமுக்கராவேர்சூரணம்,தூதுவேளைசூரணம்,சமன் கலந்து
5கிராம் ,நெய் , பால், வெண்ணையில் தினம்3வேளை கொடுத்துவர சளிச்சுரம், பக்கசூலைக் காய்ச்சல் தீரும். கடும் பத்தியம்
83.
தூதுவேளை,கண்டங்கத்திரி,விஷ்ணுக்கிரந்தி,பற்பாடகம்,வகைக்கு30 கிராம், சிதைத்து 1லி
நீரிலிட்டு 125மிலியாகக்காய்ச்சி மணிக்கொரு முறை 5-10 மிலி
கொடுத்துவர சன்னிபாதசுரம்(டைபாய்டு), கபவாதசுரம் (நிமோனியா)
தீரும்.
84.
ஆடாதொடைமணப்பாகு
செய்து வெந்நீரில் 1தேகரண்டி தினம்3வேளை கொடுத்துவர கபவாதச்சுரம்(நிமோனியா)
தீரும். நீண்டநாள் கொடுத்து வர
பக்கசூலைக்காய்ச்சல் தீரும்
85.
அமுக்கராவேர்ச்சூரணம்
5கிராம், காலைமாலை,தேனில், கொள்ள சளி கரைந்து சுரம் தீரும்.
86. கண்டங்கத்திரி சமூலம்,
ஆடாதொடை வகைக்கு30கிராம், விஷ்ணு கிரந்தி
பற்பாடகம் வகைக்கு 15கிராம்,சீரகம்,சுக்கு வகைக்கு 10கிராம் சிதைத்து, 4ல்1ன்றாய்காய்ச்சி,100மிலி 4-6வேளை சாப்பிட்டு
வர நிமோனியா ப்ளு (மண்டைநீரேற்றக்காய்ச்சல்)
தீரும்
87.
மிளகாய்பூண்டு இலைக்குடிநீர்
3, 4வேளை, 1மடக்கு பருகிவர நெறிகட்டிய சுரம் தீரும்.நெறிக்கட்டிகள் கரையும்
88.
சீதேவிச்செங்கழுநீர் சமூலக்குடிநீர் செய்து பருகிவர பித்தச்சுரம் தீரும்
89. புன்கு,புளி,மா,வேம்பு,கறிவேம்பு,இலை வகைக்கு 10கிராம் சுக்கு,மிளகு, சீரகம், இந்துப்பு வகைக்கு 3கிராம்,2ல்1ன்றாய்க் காய்ச்சி,50மிலி பருகி வர பித்தசீதளக் காய்ச்சல் தீரும்
90. நிலவேம்பு, கண்டங்கத்திரிவேர் வகைக்குக் கைப்பிடி,சுக்கு10கிராம், 500 மிலி நீரிலிட்டு200மிலியாகக் காய்ச்சி, தினம்3வேளை கொள்ள மலேரியா (முறைசுரம்)
தீரும்
91.
அரசங்கொழுந்திலையை
குடிநீர் செய்து பருகிவர சுரம்,தாகம் தீரும்.
92. பேரரத்தை,நிலவேம்பு, வகைக்கு5கிராம், 3ல்1ன்றாய்க் காய்ச்சி, 50மிலி காலைமாலை கொள்ள
குளிர்க்காய்ச்சல்,முறைக்காய்ச்சல் தீரும்
93. மாவிலங்கம்இலை
50கிராம்,சுக்கு 5கிராம்,சீரகம் 5கிராம் சிதைத்து, 4ல்1ன்றாய்க் காய்ச்சி,தினம்3வேளை,100மிலி,பருகிவர வாதச்சுரம் தீரும்
94. பாவட்டைஇலை
அல்லது வேர்,கொன்றை,சிற்றாமுட்டி,வேலிப்பருத்தி இவற்றின்
வேர்,மிளகு,ஓமம் வகைக்கு 10கிராம்,4 லி.நீரிலிட்டு 500 மிலி யாகக்
காய்ச்சி,50மிலி,நாளுக்கு 3 வேளையாகக் கொடுக்க வாதசுரம் தீரும்
95. நொச்சிக்கொழுந்து
1பிடி,மிளகு10கிராம்,பூண்டு5கிராம்,கறுப்பு வெற்றிலை 10 சிதைத்து,5ல்1ன்றாய்க் காய்ச்சி,50மிலி காலைமாலை பருகிவர சாதாரண காய்ச்சல் தீரும்
96. மண்டூரம்,உலர்ந்தமாவிலை,கீழாநெல்லி,நீர்முள்ளி வகைக்கு 30கிராம் , உலர்த்திப் பொடித்து,50கிராம்,4ல்1ன்றாய் காய்ச்சி,60மிலி காலை மாலை உணவுக்குப்பின்
பருகிவர சோகை,உடல்வீக்கம்,உடம்புவலி, அண்டவீக்கம், இருமல் சுரம் தீரும்
97. பற்பாடகம்
.சுக்கு ,வெப்பாலைபட்டை,நிலவேம்பு ,பேய்புடல், கோரைக் கிழங்கு, சிறுகாஞ்சொறிவேர்,சீந்தில்,கோஷ்டம் சமனிடித்துப்
பொடித்து, 70கிராம் , 8ல்1ன்றாய் காய்ச்சி காலைமாலை
50மிலி பருகிவர அனைத்துக்
காய்ச்சலும் தீரும்.
98. நிலவேம்பு
250கிராம்,மிளகு,சீரகம் வகைக்கு2
5கிராம் பொடித்து,சலித்து 1தேகரண்டி, 3ல்1ன்றாய் காய்ச்சி 100மிலி,காலைமாலை 3நாள் பருகி
வர டைபாய்டு,மலேரியா,ஜன்னி தீரும்
99. சுக்கு,மிளகு,சாதிபத்திரி,சாதிக்காய்,ஏலம்,கிராம்பு,கசகசா,அதிமதுரம், கற்கண்டு வகைக்கு சமன்
பொடித்து,3மணிநேரத்திற்கொருமுறை 3.5 கிராம் )1விராகனெடை, ) 3 நாள்,உணவுக்கு முன்
சாப்பிட சகல சுரங்களும் தீரும்.
100.
வெந்தயம்,மிளகு வகைக்கு10கிராம் இடித்து 1படிதண்ணீரில் கஷாயம் செய்து 3 நாள் கொடுக்க உட்சுரம்
தீரும்
101.
சுக்கு,நறுக்குமூலம்,முசுமுசுக்கைவேர் வகைக்கு10கிராம் இடித்து 2 படி தண்ணீரில் வற்றக் காய்ச்சி,3வேளை கொடுக்க மாந்தசுரம் தீரும்.
102.
சுண்டைக்காயளவு
அவுரி வேருடன் 5மிளகு சேர்த்து வெந்நீரில ரைத்துக் கலக்கி, அதில் குன்றிமணியளவு சுண்ணாம்பு கரைத்து,3வேளை கொடுக்க விடாதசுரம் விடும்
103.
காலைமாலை
வெறும்வயிற்றில் 2 சீதாப்பழங்களை சாப்பிட்டு, 2 மணிநேரம் கழித்து,1 குவளை பசும்பால் சாப்பிட்டுவர, க்ஷயம் (எலும்புருக்கி) குனமாகும். இடையில்
தண்ணீர் குடிக்கக்கூடாது.
104.
விஷ்ணுகிரந்தி சமூலத்தை
பாலிலரைத்துச் சாப்பிட்டுவர க்ஷயம் குணமாகும்.
105.
மருதம்பட்டையை சுட்டு
கரியாக்கி,நீர்விட்டுக் குழைத்து,நெஞ்சில் கால் ரூபாய் அகலத்திற்கு வைக்க
கொப்புளம் உண்டாகும்.கொப்புளம் பெரிதாக ஆக ஜுரமும்,வலியும் குறைந்து
நிமோனியா குணமாகும்.பின் கொப்புளத்தை உடைத்து நீரை வெளியேற்ற வேண்டும்.
106.
இஞ்சிச்சாறு, எலுமிச்சைசாறு,தேன் கலந்து சாப்பிட
பித்தசுரம் குணமாகும்.
107.
சம்பங்கிப்பட்டையை
கஷாயம் செய்து சாப்பிட விடாத சுரமும் விடும்.
108.
1 பிடி துளசி,1பிடி அருகு,1தேகரண்டி மிளகு இடித்து
4ல்1ன்றாய் காய்ச்சி தினம் 3வேளைபருக சுரம் இறங்கும்.
109.
மிளகும்,தும்பைபூவும் சமனாயரைத்து காலைமாலை கொள்ள சுரம்
இறங்கும்.
110.
கரும்புச்சாறு பருகி
வர பித்தசுரம் தீரும்.
111.
ஆரஞ்சுபழச்சாற்றுடன்
சர்க்கரை,ஏலக்காய்தூள் சேர்த்து சாப்பிட்டு வர
பித்தசுரம் தீரும்.
112.
9
குப்பைமேனி இலை, 6 மிளகு சேர்த்தரைத்துச் சாப்பிட்டு, உப்பில்லாப்
பத்தியமிருக்க மறுநாள் முதல் மலேரியா வராது.
113.
அத்திப்பழம்
கொடுக்க விரைவில் முத்துக்கள் தோன்றி அம்மை (small pox) குணமாகும்.
114.
120 கிராம் வெங்காயம்,திரிகடி கருந்துளசி இலைகளை பிட்டவித்து
சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்து 3நாள்சாப்பிட
அம்மை குணமாகும்.
115.
சீரகம்,இந்துப்பு,திப்பிலி,அசமதாஓமம்,கருஞ்சீரகம்,சுக்கு சமனாய் பொடித்து,காலைமாலை திரிகடி வீதம் 3நாள் வெந்நீரில் கொள்ள
பித்தசுரம் தீரும்.
116.
பேய்ப்புடல்40கிராம்,கிராம்பு,சுக்கு,கோரைக்கிழங்கு,நிலவேம்பு,மல்லி வகைக்கு 10கிராம் இடித்து கசாயம்
செய்த்து,தேன் விட்டுப் பருக பித்தசுரம் தீரும்.
117.
தூதுவேளை,கண்டங்கத்திரி,செம்முள்ளி,சுண்டை இவற்றின் வேர் வகைக்கு 15கிராம் 1படி தண்ணீரில்
காய்ச்சிக்கொடுக்க சிலேத்மசுரம் நீங்கும்.
118.
மிளகைக்
கியாழம்(கசாயம்) செய்து கொடுக்க நளிர்காய்ச்சல், நடுக்கல்
காய்ச்சல் தீரும்.
119.
கற்றாழஞ்சருகு,கடுக்காய்,கருவேம்பின்பட்டை,கார்கோலரிசி வகைக்கு 10கிராம் இடித்து கசாயம் செய்து
கொடுக்க விரோசனமாகி (பேதி) காய்ச்சல் மட்டுப்படும்,மலபந்தம்
நீங்கும்.
120.
உலர்ந்த
இஞ்சி(சுக்கு),கொத்தமல்லி,தேசாவரம்(நறுக்குமூலம்) வகைக்கு 10கிராம்
இடித்து கசாயம் செய்து 3நாள் கொடுக்க அசாத்திய காய்ச்சல் தீரும்.
121. சீராசெங்கழுநீர்,வேப்பீர்க்கு,சிறுவழுதலைவேர்,கோங்கிலவின்வேர்,உலர்ந்த இஞ்சி,மல்லி வகைக்கு 10கிராம் இடித்து கசாயம் செய்து
சர்க்கரை கலந்து கொடுக்க கர்ப்பகாலதில்
காணும் காய்ச்சல் தீரும்.
122.
பெருந்தும்பையை யிடித்து,
பிட்டவித்து 100மிலி சாறு, சமன் தேன் கலந்து, இதுபடி 3வேளை கொடுக்க குளிர்காய்ச்சல் நீங்கும்.
123.
மிளகாயிலை 9,மிளகு7,பூண்டு1,சேர்த்தரைத்து 6வேளை கொடுக்க குளிர்காய்ச்சல் தீரும்
124.
சீரகம் , குருந்தட்டிவேர் வகைக்கு40கிராம் இடித்து கஷாயம் செய்து 6 வேளை கொடுக்க குளிர்காய்ச்சல் தீரும்
125.
பேய்ப்புடல்,முத்தக்காசு,சீந்தில்தண்டு,பற்பாடகம்
வகைக்கு 10கிராம் இடித்து கசாயம் செய்து கொடுக்க குளிர் காய்ச்சல் நீங்கும்.
126.
தைவேளைசாறு,இஞ்சிச்சாறு வகைக்கு கால்படி,தனித்தனியாக முறித்து, கலந்து,திரிகடி
திரிகடுகுப்பொடி கலந்து ,சிறிது தேன்
சேர்த்து கொடுக்க சன்னிசுரம் நீங்கும்.
127.
புளியிலைச்சாறும்,நல்லெண்ணையும் சமனாய்க் கலந்து காய்ச்சி
வடித்து தலைமுழுகிவர சுரம் தீரும்.
128.
சிறுதும்பை
இலையும்,மிளகும் இடித்து நசியமிட குளிர்காய்ச்சல்
தீரும்.
129.
திப்பிலி,வேலிப்பருத்தியிலை இடித்து நசியமிட காய்ச்சல்
தோஷம் நீங்கும்
130.
கொடிவேலிவேர்,பலகறை,வாய்விளங்கம்,சுக்கு,மிளகு,திப்பிலி வகைக்கு 10கிராம் 2படி நீரில் கால் படியாய்
காய்ச்சி 3போது கொடுக்க அந்தக சன்னி முதலான சன்னி13ம் தீரும்.
131. திரிகடுகு,திரிபலை,வெப்பாலையரிசி,கடுகுரோகிணி,ஆடாதொடைவேர், மஞ்சள், மரமஞ்சள்
வகைக்கு10கிராம் இடித்து கசாயம் செய்து கொடுக்க கண்டகூச்சசன்னி தீரும்.
132.
வாதமடக்கி,நிலவேம்பு,சுக்கு,வசம்பு,ஓமம்,திப்பிலி,பேய்ப்புடல் பற்பாடகம்
வகைக்கு10கிராம் இடித்து 2ல்1ன்றாய்க்கய்ச்சிக் கொடுக்க அபினியரசசன்னி
குணமாகும்.
133. திப்பிலி,முத்தக்காசு,பேய்புடல்,சுக்கு,சீரகம்,கொத்தமல்லி,கூவிளம்வேர், கொட்டைகரந்தை,சீந்தில் வகைக்கு 10கிராமிடித்து 1படிநீரில் கால் படியாய் காய்ச்சி கொடுக்க தாந்திரிகசன்னி தீரும்
134.
வெட்டிவேர்,விலாமிச்சுவேர்,சுக்கு,பற்பாடகம் சிறுதேக்கு வகைக்கு 10 கிராம் இடித்து 4ல்1ன்றாய் காய்ச்சி கொடுக்க மாந்தசன்னி தீரும்.
135.
பழம்புளி,மிளகு,சுக்கு,வெள்ளுள்ளி வகைக்கு
40கிராம் அரைத்து 3 உருண்டை செய்து 3 வேளை கொடுக்க சுகசன்னி தீரும்.
136.
இஞ்சிச்சாறு,,முலைப்பால்,தேன் சமன் கலந்து கொடுக்க புறவீக்கம் தீரும். சிறிது
வேப்பெண்ணை சேர்த்துக் கொள்ளலாம்.
137.
சுக்கு,மிளகு,திப்பிலி,கடுக்காய்,தான்றிக்காய்,பெருங்காயம் சமன் எலுமிச்சை சாறிலரைத்து கயிறு செய்து,வெந்நீர் அல்லது நொச்சியிலை சாறிலுரைத்து கண்ணில்
தீட்ட சன்னிசுரம் தீரும்
138.
திப்பிலி,இந்துப்பு,பெருங்காயம் இவற்றை பசுவெண்ணையி லரைத்து கண்ணில்
தீட்ட சன்னிசுரம் தீரும்.வேதனை
உண்டானால் தயிரும்சோறும் வைத்துக் கட்டவும்.
139.
கண்டங்கத்திரி
வேர்30கிராம்,சுக்கு5கிராம்,மல்லி 30 கிராம், சீரகம்2 கிராம்
இடித்து 4ல்1ன்றாய்க்காய்ச்சிப் பருக நுரையீரல் பற்றிய எந்தச் சுரமும் தீரும்
140.
.நல்வேளையிலை30கிராம்,சுக்கு1துண்டு,மிளகு6,சீரகம்1கிராம் இடித்து 2ல்1ன்றாய்க் காய்ச்சி,200மிலி தினம் 3வேளை பருகிவர சளிக்காய்ச்சல், வாதச் சுரம் தீரும்.
141.
துளசியிலை20,தோல்நீக்கிய இஞ்சி 5கிராம் இடித்து
2ல்1ன்றாய்க் காய்ச்சி, 15மிலி, தினம் 3வேலை பருகிவர பித்தச் சீதளக் காய்ச்சல்
தீரும்.
142.
மஞ்சள்துண்டுகளை
சுண்ணாம்பு தெளிவு நீரில் ஊறவைத்து லர்த்திப் பொடித்து 1தேகரண்டி,தேன்,பால்,வெந்நீர்,ஏதேனும் ஒன்றில்
கொடுக்க சுரம் தீரும்.
143.
நிலவேம்பு,சுக்கு,திப்பிலி,சீந்தில்கொடி வகைக்கு 10கிராம், 2 ல் 1 ன் றாய்க் காய்ச்சி ,200மிலி,15கிராம் கற்கண்டு,10மிலி தேன்கலந்து 30மிலி தினம்4வேளை குடிக்க
குழந்தைகளுக்குக்காணும் சகலக்காய்ச்சலும்தீரும்.
144.
காக்கரட்டான் பச்சைவேர்40கிராம்
சிதைத்து, 2ல்1ன்றாய்க் காய்ச்சி, 30மிலி, 2மணி நேரத்திற்கொருமுறை,6முறை சாப்பிட சுரம் தீரும்.
145.
வேப்பிலையை
வறுத்து சூடோடு தலைக்கு வைத்து தூங்க காய்ச்சல் குணமடையும்.
146.
மிளகு
மற்றும் சீரகம் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மலேரியா காய்ச்சல் குணமாகும்.
147.
கோரை
கிழங்கை கழுவி சுத்தம் செய்து நீர்விட்டு காய்ச்சி குடித்து வர அனைத்து வகையான காய்ச்சலும் சரியாகும்.
148.
நெல்லிக்காய்
லேகியம் சிறு உருண்டையாக செய்து தினமும் காலை மற்றும் மாலை சாப்பிட்டு வந்தால் எலும்புக் காய்ச்சல் குணமடையும்
149.
புதினா
கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.
150.
நார்த்தங்காய் செடி
இலைகளை கஷாயம் செய்து குடிக்க காய்ச்சல் சரியாகும்.
151.
தூதுவளை
இலை 15 கிராம், 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை தினம் மூன்று வேளை சாப்பிட்டு வர, இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்
152.
இசங்கு வேரை உலர்த்தி பொடித்து 5 கிராம், தினமும் தேனில் கலந்து உண்டு வர சுரம் மற்றும் விஷக்கடி நீங்கும்.
153.பனை வெல்லம், மல்லி , மிளகு , இஞ்சி, துளசி இவற்றை கால் லிட்டர் நீரில் மண்பானையில் இட்டு காய்ச்சி காலை, மாலை குடிக்கவும்.
154.இஞ்சிச்சாறு தேன் கலந்து காய்ச்சி வடிகட்டி காலை, மாலை பருக உடல்வலி, காய்ச்சல் குணமாகும்.
155.இஞ்சிச்சாறு இரண்டு அவுன்ஸ் துளசி சாறு இரண்டு அவுன்ஸ் தேன் கலந்து மூன்று வேலை பருக மலேரியா குணமாகும்.
156.நொச்சி இலையை மிளகு சேர்த்து காய்ச்சி குடிக்க மலேரியா குணமாகும்
157.மிளகு, பூண்டு , இலந்தை இலைதலா பத்து எடுத்து அரைத்து இரண்டு வேளை காய்ச்சல் நீங்கும்.
159.தும்பை பூவை பசும்பால் விட்டரைத்து பனைவெல்லம், நெய் விட்டு லேகியமாக்கி மூன்று வேளை உண்ண முறைக்காய்ச்சல், நஞ்சு முறியும்.
160.சுத்தி செய்த நேர்வாளம் பருப்பு ஒன்றை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்து கண்ணில் தீட்ட 13 வகை சன்னியும் தீரும்.
161.நெல்லிமுள்ளி, திப்பிலி, சித்திரமூலம், இந்துப்பு, கடுக்காய் சமன் சூரணித்து உட்கொள்ள சகல சுரங்களும் நீங்கும்.
162.தும்பைபூ பதினைந்து கிராம் , மிளகு பதினைந்து கிராம் அரைத்து காலை மாலை சுண்டைகாயளவு மூன்று நாள் கொடுக்க நடுக்கல் சுரம் தீரும்
163.அகத்தி இலை சாற்றை உடலில் பூச காய்ச்சல் குணமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக