ஸ்திரீகள் சம்பந்தத்தாலுண்டான மேகம் கிரந்தி இவைகளால் 6 வித குட்டமும், மண்ணுளியன் முதலிய சர்ப்பக்கடி,எலி,பூச்சி கடிகளுண்டாவது 9 வித குட்டமும், ஜீவ வதை,மாதா,பிதாக்கள் மன நோக்காட்டாலும்,தெய்வ உருக்களை அழித்தலாலும்,பெரியோரை பங்கப்படுத்தி மனம் குன்றச் செய்வதாலும் 4வித குட்டமும் ஆக19 குட்டங்களின் காரணமென்றறிக.
1.
திரிபலாசூரணமாத்திரை
மூன்று,தினமிருவேளை
சாப்பிட்டுவர வெண்படை நீங்கும்
2.
அன்னபேதிச்செந்தூரம்100-200மிகி,பறங்கிப்பட்டைசூரணம்1-2கிராம்,5-10மிலி தேனில் கலந்து,தினம் 2வேளை
சாப்பிட்டுவர வெண்படை நீங்கும்
3.
கார்போகபற்று
தயிரில் அல்லது எலுமிச்சைசாறில் கலந்து தடவ வெண்படை நீங்கும்
4.
பலகறைபற்பம்100-200மிகி,பறங்கிப்பட்டைசூரணம்1கிராம்,5-10மிலி பாலில் கலந்து பருகி,அருகன்தைலம் தடவிவர தேமல்
நீங்கும்
5.
சீமைஅகத்திஇலையுடன்,கஸ்தூரி மஞ்சள்
சேர்த்தரைத்துப் பூசி,1மணி நேரம் ஊறவைத்து குளிக்க தேமல் குணமாகும்
6.
திருநீற்றுப்பச்சை
இலைகளையரைத்துப்பூசி,1மணி நேரம் ஊறவைத்துக் குளிக்க
தேமல் நீங்கும்
7.
திப்பிலிச்சூரணம்
அரைதேக்கரண்டி,தேனில்,தினம்3வேளை நீடித்துச் சாப்பிட்டுவர தேமல் குணமாகும்
8.
சோற்றுக்கற்றாழை
சோற்றை தினமும் பூசிவர வெண்படை குணமாகும்
9.
மஞ்சள்,அருகம்புல்
சேர்த்தரைத்துப்பூசி,குளித்துவர சொறி,சிரங்கு,
படர்தாமரை, புண்கள்,உடல்
அரிப்பு குணமாகும்.
10. சந்தனக்கட்டையை எலுமிச்சைசாறிலரைத்துப்பூச
படர்தாமரை, வெண்குஷ்டம்,
முகப்பரு குணமாகும்
11. சீமையகத்திவேரை,எலுமிச்சை சாற்றிலரைத்துப்பூச
படர்தாமரை குணமாகும்
12. கோவையிலைச்சாற்றுடன் சமன்
தே.எண்ணை கலந்து காய்ச்சி,வடித்துப் பூச படை,சொறி, சிரங்கு
குணமாகும்
13. வல்லாரைசமூலத்தை,5ல்1ன்றாய்க் காய்ச்சி,வடித்து,50மிலி, தினமிரு வேளை நீடித்துப் பருக தொழுநோய் குணமாகும்
14. வேப்பிலையையரைத்து இரவில்
பற்றிட்டு காலையில் கழுவ படை, சிரங்கு குணமாகும்
15. துவரைவேரை தே.எண்ணையில் கலந்து
காய்ச்சி,உடலில்
தேய்த்துவர கரும்புள்ளி, வெண்புள்ளி ஆகியன தீரும்
16. சிவனார்வேம்புவேர்,வாலுளுவைஅரிசி சமனெடுத்து,கருடன்கிழங்குச் சாற்றிலரைத்து குழித்தைலமிறக்கி,5-10துளிகள் உள்ளுக்கு கொடுத்து, மேலேயும் பூசிவர
வெண்குஷ்டம், தொழுநோய் தீரும்
17. குப்பைமேனிஇலை,சீமைஅகத்திஇலை,உப்பு,மிளகு சேர்த்தரைத்துப் பூச
படை,தேமல் குணமாகும்
18. சிவனார்வேம்புவேர்த்தைலம் 10துளி பாலுடனருந்த தொழுநோய்,படை தீரும்
19. சிவப்புஅழிஞ்சில்வேர்பட்டைதூள்100மிகி,கிராம்பு,சாதிக்காய்,சாதிபத்திரி
சமன் கலந்த பொடி 200மிகி,கலந்து தேனில்
குழைத்துச்சாப்பிட தொழுநோய் குணமாகும்
20. அழிஞ்சில்விதை எண்ணையைப்பூசி,உள்ளுக்கும் ஓரிரு துளி
கொடுத்துவர தோல்நோய் குணமாகும்
21. வாய்விளங்கத்தை
நீரிலரைத்துப் பூச படைகள் குணமாகும்
22. கொன்றைதுளிர்,புளியந்துளிர்,மிளகு சமனெடுத்தரைத்துப் பற்றிட படர்தாமரை குணமாகும்
23. அழிஞ்சில்வேர்பட்டை சூரணம்
100மி.கி. தினம்2வேளை,1வாரம் கொள்ள பாம்பு ,எலி, வெறிநாய்,
கடிவிடங்கள் ,தொழுநோய், கிரந்தி,புண், வயிற்றுப் போக்கு குணமாகும் .
24. அத்திப்பழங்களை மட்டுமே அதிகம் உண்டுவர குஷ்டம் குனமாகும்.
24. அத்திப்பழங்களை மட்டுமே அதிகம் உண்டுவர குஷ்டம் குனமாகும்.
25. முந்திரி மர பழங்களை மட்டுமே
சாப்பிட்டுவர 2மாதத்தில் எவ்வளவு பெரிய குஷ்டமும் குணமாகும்.
26. முள்ளங்கிவிதையை
காடியில்(வினிகர்)ஊறவைத்து இரவில் பூசிபடுக்க வெண்குஷ்டம் மறையும்.
27. அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து
அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.
28. வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து
அரைத்து தினம் தேய்த்துக் குளித்து வர உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாகும்.
29. கடுக்காய் வேர், பட்டை இலை, பூ உலர்த்தி
இடித்து சலித்து காலை, மாலை 1/2 கரண்டி பசும்பாலில் கலந்து உண்டு வர தொழு நோய்
குணமாகும்.
30.
வெள்ளை
பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தேய்த்து குளித்து வர தேமல்
குணமாகும்.
31. பூவரச மரத்தில் காய்களை அம்மியில் உரசி
வரும் மஞ்சள் நிறப் பாலை தேமல் உள்ள இடங்களில் பூசி வர தேமல்அகலும் .
32. அருகம்புல், கஸ்தூரிமஞ்சள், மருதோன்றி
அரைத்து பூச தேமல் குணமாகும்.
33. கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி
பொடி செய்து தினமும் உடம்பிற்கு தேய்த்து குளித்து வர தேமல்,படை,குணமாகும்
34. நூறு
மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து
காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பால் சர்க்கரை சேர்த்து
குடித்துவர தேமல் குறையும்.
35. நாயுருவி இலைச் சாற்றை தடவி வர தேமல்,
படை குணமாகும்.
36. எலுமிச்சை தோலை உலர்த்தி தூளாக்கி சம
அளவு பொரித்த படிகாரத்துடன் தண்ணீர் சேர்த்து குழைத்துப் பூசி குளித்து வர தேமல்
குறையும்.
37. மஞ்சள் இடித்து நல்லெண்ணெயில் போட்டு
காய்ச்சி தேய்த்து வர தேமல் குறையும் .
38. எலுமிச்சை பழச்சாற்றை தேய்க்க தேமல்
மறையும்.
39. சுக்குடன்
சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து பூசி வர தேமல் நீங்கும்
40. துளசி
இலை, வெற்றிலை எடுத்து அரைத்து பூச தேமல் நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக