ழகடன் வாங்கிக் கொடாமையாலும்,பெரியோரை மனம் நோகப்பேசி ஏசுவதாலும், தாகபானம் உதவாமையினாலும்,பித்தட்சயம்,பித்தகாசம்,மந்ததாரகாசம், இரத்தகாசம்,சுவாசகாசம் உண்டாகும்.மேலும் எலி கடியாலும்,மூலத்தில் அனல் அதிகரித்து மூளையில் நீர் கசிந்து நெஞ்சில்சுவரி,கபத்தை உறையச் செய்யும்.
சீதளம் அதிகரித்து எந்நேரமும் உஷ்ணம் உண்டாகிச் சூடுபோல்
காண்பித்து சலத்தைப் பெருக்கி ரோகம் 96 உண்டாக்குவது சிலேத்துமம்.
சிலேத்தும அறிகுறிகள்:
மன்னிய சேதம்
மீறி மாகாயம் வெளுக்கும் வற்றும்
பன்னியே அன்னஞ்
செல்லா பருவிக்கல்
இருமல் சத்தி
உன்னிய மூர்ச்சை
ஈளை ஊசிநீர் வழுவழுத்து
கன்னியே விலாவும்
நெஞ்சும் கடுப்புடன் நோகும் பாரே மூலத்தில்
அக்கினி அதிகரித்துக் கபாலத்தில் பற்றி இரத்தம் வற்றி, தாதுகெட்டு
நீரேறி நெஞ்சில் கபமுண்டாகி இருமல் இளைப்புக்கண்டு உடல் வற்றும்.
சயரோகக்குணம்;அஸ்தியில் அனலேறி இரத்தம் வற்றி,பித்தம் அதிகரித்து நெஞ்சில் கபமுண்டாக்கி இருமல்,இளைப்பு
காணும்;தேகம் வற்றும்; முகம்
வெளுக்கும்;வாய் நீரூறும்;அரோசிகம்
காணும்;தொண்டை,விலா புண்போல் நோகும்;நெஞ்சு பள்ளம் விழும்;விரல் நரம்பு
சுருக்கலாகும்.
பித்தசயகுணம்;பித்தமதிகரித்து
அக்கினி கொண்டு உடல்,உள்ளங்கால், உள்ளங்கை
எரிந்து கடுக்கும்,வெதுப்பும்,
நெஞ்சில் கபமுண்டாக்கி இருமல், இளைப்பு காணும்;சிவந்து விழும்,வாந்தி பண்ணும்,வயிறு கழியும்,நீர் கடுக்கும், அரோசிகம் அன்ன துவேஷம் உண்டாகும்.
காசரோககுணம்(tb);அக்கினியாயெரித்து,நெஞ்சு புண்ணாகி அடிக்கடி புகைந்திருமும், கபத்தோடு
இரத்தம் விழும், தொண்டை புண்போல் நோகும்;கபமும் வாந்தி பண்னும்,களைப்புண்டாகும்,நாசி தணல் போலெரியும், தேகம் வெதும்பும்,வற்றும்,கடுக்கும்,முறுக்கும்,தலை வலிக்கும், வாயு அதிகரித்து வயிறு நோகும்.
மந்தகாசத்தின்
குணம்;முகம் காது ஊறும்;நாசி கரகரத்து
தும்மலுண்டாகும்; நீர் வடியும்,நெஞ்சில்
கபம் கட்டி இருமும், இளைக்கும், நெஞ்சும்
விலாவும் வலிக்கும், மந்தார காலங்களில் நோய் அதிகரிக்கும், பசி மந்திக்கும்,வயிறு பொருமும், தேகம் அதைக்கும், கிறுகிறுக்கும்.
விஷபித்தகாசகுணம்;வளர்பிறை
தோறும் பித்தம் அதிகரித்து நுழைத்துப் பொங்கி கபமுண்டாகி நினைவு தெரியாமல் அலுப்பு
கண்டு பித்தம் வடிந்தபோது நிற்கும்,கிறுகிறுத்து வரும்,சுரங்காயும்,தொண்டை நெஞ்சு விரை புண் போல் நோகும்,அன்னஞ் செல்லாது.
இரத்தகாசகுணம்;இருமல் காணும்,வாயில் இரத்தம் அடிக்கடி விழும்,
உடல் வற்றும், நாஉலரும்,வழுவழுக்கும்,அன்னஞ் செல்லாது.
உளைமாந்தைக்குணம்;உடல் கனந்துளைத்து குத்திக் குடைந்து கைகால் எரிந்தும், சுரம்,தலைவலி,இருமல்,ஆயாசம்,மயக்கம் புலப்பமுண்டாகும், நினைவு தடுமாறும்,வாயால் வெண்ணுரை தள்ளும்,வாய்நீர் வடியும், அன்னஞ் செல்லாது,தேகம் மெலியும்.
உளைமாந்தைக்குணம்;உடல் கனந்துளைத்து குத்திக் குடைந்து கைகால் எரிந்தும், சுரம்,தலைவலி,இருமல்,ஆயாசம்,மயக்கம் புலப்பமுண்டாகும், நினைவு தடுமாறும்,வாயால் வெண்ணுரை தள்ளும்,வாய்நீர் வடியும், அன்னஞ் செல்லாது,தேகம் மெலியும்.
சுரமாந்தைகுணம்;அகோரமாய் சுரங் காயும்,இருமல்,ஆயாசம்,அன்னத் துவேஷம், அரோசிகங் காணும்.
1) 50கிராம் அதிமதுரம்,10கிராம் மிளகு ,இளவறுப்பாக வறுத்து,சூரணித்து 1 தேகரண்டி, தேனில் குழைத்துச் சாப்பிட்டுவர இருமல் கட்டுப்படும்
2) அதிமதுரத்தை வாயிலிட்டு
மென்று,ஊறவைத்துச்
சாப்பிட வறட்டு இருமல் குணமாகும்
3.
3) அரத்தைசூரணம் கால் தேகரண்டி,1 தேகரண்டி தேனில் குழைத்துச் சாப்பிட தொண்டைக்கட்டு,இருமல்,சளி குணமாகும்
4.
4) 1துண்டு அரத்தையை வாயிலிட்டு மென்று,எச்சிலை விழுங்கி வர தொண்டைக்கட் டு ,இருமல்,சளி குணமாகும்
5.
ஆடாதொடை இலைகளை நடுநரம்பு நீக்கி,10மிளகு,1பிடிதுளசி,2 வெற்றிலை சேர்த்து,சிதைத்து,4ல்1ன்றாய் காய்ச்சி,கற்கண்டு கலந்து, தினமிருவேளை பருக இருமல்,சளி,தொண்டைக்கட்டு தீரும்
வறட்டு இருமல் குணமாகும்.
6.
1 தேகரண்டி இஞ்சிச்சாறுடன்
சிறிது தேன் கலந்து,தினம் 3வேளை பருகிவர சளியுடன் கூடிய இருமல் தீரும்,தொண்டை எரிச்சல். , பித்தமயக்கம், வயிற்றுப்பிசம், ஜலதோஷம் நீங்கும்
7.
2 தேகரண்டி இம்பூரல்
வேர்ச்சூரணத்தை அரிசிமாவுடன் கலந்து, அடையாக தட்டிச் சாப்பிட சளி கட்டுப்படும்
8.
ஊமத்தை பூ,இலைகளை உலர்த்தி புகைப்பதுபோல் செய்ய சுவாசகாசம், வறட்டு இருமல் குணமாகும்
9.
வெள்ளைக்கடுகு தூள்
கால்தேகரண்டி,தேனில் குழைத்துச்
சாப்பிட இரைப்பு, இருமல் ,சுவாச நோய்கள் குணமாகும்
10.
கண்டங்கத்திரி இலைச்சாறு
3தேகரண்டி,சிறிது தேன் கலந்து சாப்பிட சளி குணமாகும்
11.
கண்டங்கத்திரி சமூலச்சூரணம்
சமஅளவு கற்கண்டு தூள் கலந்து, அரை தேகரண்டி ,தேனில் குழைத்துச் சாப்பிட இருமல் தீரும்
12.
மஞ்சள்கரிசாலை சாறு
அரைலி, ந.எண்ணை அரை லி.,அதிமதுரதூள் 20 கிராம் நீர்சுண்டக் காய்ச்சி,1தேகரண்டி காலைமாலை சாப்பிட இருமல் தணியும் . ஓரிருதுளி பாலில் கலந்து பருகிவர )BRANCHICITIES) மார்பில் கட்டிய கோழை
வெளியாகும.
13.
2 கொத்து கறிவேப்பிலையை,காம்பு நீக்கி,2ல்1ன்றாய்க் காய்ச்சி,50மிலி, தினம் 4வேளை பருக சளி,இருமல் குணமாகும்.
14.
கற்பூரவல்லி இலைச்சாறு
50மிலி, 1 தேகரண்டி தேன் கலந்து,தினமிரு வேளை பருக ஜலதோஷம் கட்டுப்படும்
15.
1தேகரண்டி கற்பூரவல்லி
இலைச்சாற்றுடன்,கால் தேகரண்டி சர்க்கரை
கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க சளி,இருமல் குணமாகும்
16.
கற்பூரவல்லி இலைகளை
இளஞ்சூடாக வதக்கி, 1தேகரண்டிச் சாறெடுத்து
சமஅளவு தேன் கலந்து கொடுக்க குழந்தைகளின் மார்பில் கட்டிய சளி வெளிப்படும்
17.
1கிராம் குங்கிலிய
தூளை, 200மிலி பாலில் கலந்து
குடிக்க இருமல், மார்புச்சளி, இரத்தமூலம் குணமாகும்
18.
சடாமஞ்சில்பொடி 1கிராம்,நீரில் கலந்து தினமிருவேளை உட்கொள்ள கோழை வெளியாகும்
19.
சிறுகுறிஞ்சான்வேர்
20கிராம்,சிதைத்து 10ல்1ன்றாய் காய்ச்சி, 30மிலி, தினம் 3 வேளை பருக இருமல் குணமாகும்
20.
தவசுமுருங்கை இலைச்சாறு
1தேகரண்டி, சமன் தேன் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கான சளி
தீரும்.
21.
செம்பரத்தைபூவிதழ்கள்
15, ஆடாதொடை தளிரிலைகள் 3,
சிதைத்து, 2ல் 1ன்றாய் காய்ச்சி, அரை தேகரண்டி தேன் கலந்து,தினமிருவேளை பருக இருமல் தீரும்
22.
தவசுமுருங்கை இலைச்சாறு
2தேகரண்டி தினமிருவேளை பருக
இரைப்பு நோய் குணமாகும்
23.
தவசுமுருங்கை இலைசூரணம்
அரைதேகரண்டி, 1தேகரண்டி தேனில் குழைத்து
தினமிருவேளை சாப்பிட சளி,இருமல் குணமாகும்.
24.
திருநீற்றுப்பச்சை
இலைச்சாறு,தேன் சமன் கலந்து
தினமிருவேளை 30 மிலி பருக இருமல்
கட்டுப்படும்
25.
துளசியை இலேசாக அவித்து
5-10மிலி சாறெடுத்து, தினமிருவேளை பருக சளித் தொல்லை தீரும்
26.
கைப்பிடி தூதுவேளை
இலைகளை, 2ல்1ன்றாய் காய்ச்சி,குடிக்க இரைப்பிருமல்
தீரும்.
27.
கைப்பிடி தூதுவேளை
இலையுடன், வெங்காயம் சமன் கலந்து, ந.எண்ணையில்
வதக்கி துவையல் செய்து
சாப்பிட இரைப்பு இருமல்
தீரும்.
28.
தூதுவேளை காயை நெய்விட்டு
வதக்கி,குழம்பு செய்து,தொடர்ந்து சாப்பிட்டு வர மார்புச்சளி கரையும்
29.
200மிலி நீரில் 10தூதுவேளை இலைகளை போட்டுக் காய்ச்சி, தினமிரு வேளை பருக சளியுடன் கூடிய இருமல் குணமாகும்-
30.
1பிடி நல்வேளை இலைகளை
தேவையான அளவு உப்பு சேர்த்தரைத்துச் சாப்பிட இருமல் தீரும்
31.
பச்சைநன்னாரிவேர்
5கிராம், நன்கரைத்து, 200மிலி பாலுடன் கொள்ள
வறட்டு இருமல் தீரும்
32.
முசுமுசுக்கை இலை
சூரணம் 120கிராம்,தூதுவேளை இலை சூரணம் 80 கிராம் கலந்து,அரை தேகரண்டி வெண்ணையில் கலந்து சாப்பிட இரைப்பிருமல்
குணமாகும்
33.
முசுமுசுக்கைஇலை 3பிடி,நெய் அல்லது நஎண்ணையில் வதக்கி துவையல் செய்து சாப்பிட இரைப்பிருமல்,மூக்குப்புண் குணமாகும். இரத்தமும்
சுத்தியாகும்.
34.
முட்சங்கன் இலை,தூதுவேளை இலை பிடியளவெடுத்து,அரைத்து, நெல்லிக்காயளவு, 200மிலி பாலில் பருக
சளி வெளியாகும்.
35.
எருக்கம்பூ,மிளகு வகைக்கு 1பங்கு,கிராம்புஅரைபங்கு,அரைத்து,மிளகளவு மாத்திரை செய்து,தேனில் 2மாத்திரை சாப்பிட இரைப்பு தீரும்
36.
வெள்ளை எருக்கம்பூ
இதழுடன் மிளகு சேர்த்தரைத்து,மிளகளவு மாத்திரை
செய்து,தினமிருவேளை 1மாத்திரை தேனில் சாப்பிட மார்பில் கட்டிய கோழை வெளிப்படும்
37.
கஸ்தூரிமஞ்சளை விளக்கில்
சுட்டு புகையை நுகர காசநோயின்போது ஏற்படும் இரைப்பு கட்டுப்படும்.
38.
கண்டங்கத்திரி சமூலசூரணம்
அரைதேகரண்டி சமஅளவு தேனில் குழைத்துச் சாப்பிட சுவாசநோய்கள்,ஆஸ்துமா,சளி தீரும்
39.
25 தும்பைபூக்களை, 100மிலி காய்ச்சியபாலில்
1மணிநேரம் ஊறவைத்துக் குழந்தைகளுக்குக்
கொடுக்க தொண்டையில் கட்டிய கோழை வெளியாகும்
40. 10துளி தும்பை பூச்சாறு
காலையில் குழந்தைகளுக்குக் கொடுக்க சளி, இருமல், விக்கல் தீரும்
41.
நல்வேளை பூச்சாறு
10துளிகள் தாய்பாலுடன் கலந்து
கொடுக்க பிறந்த குழந்தைகளுக்கான சளி,மூச்சுத் திணறல் கட்டுப்படும்
42.
10 மிளகைத் தூளாக்கி, கஷாயம் செய்து குடிக்க கோழை, இருமல் தீரும்
43.
குப்பைமேனி சமூலம்
பிடிஎடுத்து கஷாயம் செய்து குடிக்க சளி,இருமல் கட்டுப்படும்
44.
குப்பைமேனி இலைச்சாறு
4துளி நாவில் தடவ கோழை வெளிப்படும்.
45.
கரிசாலை இலையை நன்கரைத்து,
2பங்கு நீரில்கலந்து 2பங்கு ந.எண்ணையில் காய்ச்சி வடித்து அரைதேகரண்,டி 100மிலி பாலில், தினமிரு வேளை பருக மார்பில் கட்டிய கோழை இளகும்
46.
பிரம்மி சமூலத்தை
அரைத்து மார்பில் பூச கோழைகட்டு குணமாகும்
47.
பறங்கிக்காய் உள்ளிருக்கும்
சதையை சூரணித்து சாப்பிட இரத்தவாந்தி , கோழை நீங்கும்
48.
குப்பைமேனி இலைசூரணம்
கால்தேகரண்டி உட்கொள்ள கோழை வெளியாகும்.
49.
திப்பிலியை நெய்யில்
வறுத்துப் பொடித்து, அரைதேகரண்டி,காலை மாலை தேனில் குழைத்துச் சாப்பிட தொண்டைக்கட்டு,கோழை, அரோசிகம் தீரும்
50.
நல்வேளை பூச்சாறு
1தேகரண்டி,குழந்தைகளுக்குக் கொடுக்க காய்ச்சல், மார்புச்சளி குணமாகும்
51.
தாளிசாதி சூரணமாத்திரை
2 ,தினமிருவேளை வெந்நீருடன் கொள்ள
சளி, இருமல்,இரைப்பு குணமாகும்.
52.
ஆடாதொடை மணப்பாகு
செய்து 5-10மிலி தினம்3வேளை கொள்ள சளி, இருமல், இருமலுடன் கூடிய சுரம் நீங்கும்.நீடித்துச்
சாப்பிட மார்புச்சளி நீங்கும்
53.
பலகறைபற்பம்
100மிகி திரிகடுகுசூரணம் 1கிராம், 5-10மிலி தேனில்
குழைத்து தினம்2வேளை சாப்பிட்டுவர பீனிசம் நீங்கும்.
54. நெய் மஞ்சள்பொடி தேன் கலந்து.தினம்2வேளை உண்டுவர இருமல் குணமாகும்.
54. நெய் மஞ்சள்பொடி தேன் கலந்து.தினம்2வேளை உண்டுவர இருமல் குணமாகும்.
55.
உருத்திராட்சத்தை
இழைத்து தேனில் கலந்து நாவில் தடவ தொண்டைக்கட்டு, கோழை
நீங்கும்
56.
தவசுமுருங்கை இலை
சாற்றுடன்,தே.எண்ணை கலந்து,காய்ச்சி வடித்து, 5-10துளி கொடுக்க, குழந்தையின் சளி
நீங்கும்
57.
தூதுவேளை இலையை ,எண்ணெயில் காய்ச்சி,வடித்து 10சொட்டு தினம் பருகிவர இருமல்
குணமாகும்.பசி உண்டாகும்.
58.
அரைக்கீரையை பருப்புடன்
சேர்த்து,வெங்காயம்,பெருங்காயத்துடன் சமைத்துச் சாப்பிட்டுவர சளி,இருமல்,ஜலதோஷம்,குளிர்காய்ச்சல் நீங்கும்
59.
200 கிராம் ஓமத்தை,
2படி நீரிலிட்டு,அரை படியாகக் காய்ச்சி
வடித்து, 200மிலி தே.எண்ணை சேர்த்துக் காய்ச்சி 40கிராம் கற்பூரம் பொடித்துப்
போட்டு,இறக்கி, இளம்சூட்டில் மார்பு,விலா,முதுகுப்புறங்களில் அழுத்தித் தடவி ஒற்றடமிட சளி இளகி வெளிப்படும்
60. சித்தரத்தை,அமுக்கராகிழங்கு,தேவதாரு,கடுகுரோகிணி,கரியபோளம், வெள்ளை குங்கிலியம்,வசம்பு,கோஷ்டம்,மஞ்சள்,பூங்காவி,அதிமதுரம் , சிற்றாமுட்டிவேர்,கோரைக்கிழங்கு,திரிகடுகு,சகஸ்ரவேதி,வெட்டிவேர், விலாமிச்சைவேர்,கடல்நுரை,அகில்கட்டை,சந்தனம் ,வகைக்கு சமன் பொடித்து
2சிட்டிகை உச்சந்தலையில்
அழுத்தி தேய்த்து.நுகர
,சளிகட்டு நீங்கும் குழந்தைகளுக்கு ஆகாது. .
61. வேப்பங்கொழுந்து,மிளகு,சீரகம்,சேர்த்தரைத்து வெந்நீரில் கலந்து, 1 பாலடை ஊற்ற, குழந்தைகளுக்கு சளி,கபம் தீரும்.
62.
மஞ்சளை அரைத்து இளம்சூட்டில் நெற்றியில் பற்றிட சளி,தடுமன் விலகும்
63.
குப்பைமேனி இலைத் தூளை வே.எண்ணையில் குழைத்து குழந்தைகளுக்கு நாவில் தடவ கோழை நீங்கும்.
64.
கரிசலாங்கண்ணிச்சாறு
2துளி நசியமிட மூக்குச்சளி
குறையும்.
65.
தேன், எலுமிச்சைசாறு சமன்கலந்து,காலைமாலை வெறும் வயிற்றில் சாப்பிட ஜலதோஷம்
நீங்கும்.
66.
பச்சை திராட்சைப்
பழத்தின் சாற்றை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர ஜலதோஷம்,இருமல்,இவற்றால் ஏற்பட்ட
ஜுரம் ஆகியவை குனமாகும்.
67.
ஆரஞ்சுபழச்சாற்றுடன்
தேன் கலந்து சாப்பிட்டுவர ஜலதோஷம்,இருமல்
குனமாகும்.
68.
வெந்நீரில்
கழுவிச் சுத்தம் செய்யப்பட்ட 50 கிராம் கொடி முந்திரிப் பழத்தை பாலில் வேகவிட்டு,ஒவ்வொன்றாய் சாப்பிட்டு,அந்த பாலையும் குடிக்க ஜலதோஷம் விலகும்.
69.
பேரீச்சம்பழத்தை
பாலில் வேகவைத்து வெறும் வயிற்றில் சாப்பிட இருமல் நீங்கும்.
70.
புளியம்பூவைக்
கஷாயம் செய்து சாப்பிட ஜலதோஷம் நீங்கும்.
71.
மிளகு,வெல்லம் சேர்த்தரைத்து பாக்களவு வெறும் வயிற்றில்
சாப்பிட ஜலதோஷம்,சளி,இருமல் குணமாகும்.
72.
கறந்த
பசும்பாலில்,மஞ்சள்தூள் கலந்து
காய்ச்சி காலை 3நாள் வெறும் வயிற்றில் பருக தீராத இருமலும் தீரும்.
73.
ஆடாதொடை இலைச்சாறு
தேன் சமன் கலந்து தினம் 4வேளை கொடுக்க இருமல் தீரும்.
74.
இனிப்பான ஆப்பிள்
அரைகிலோ 1வாரம் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வறட்டு இருமல் குனமாகும்.
75.
தழுதாழை இலை
சாற்றை உறிஞ்சிவர தும்மல் தீரும்.
76.
நல்வேளை சமூலம்
இடித்துச்சாறு பிழிந்து,சக்கையை தலையில்
கட்ட தும்மல் தீரும்..
77.
காய்ச்சிய பாலில் 1சிட்டிகை மஞ்சள்தூள் போட்டு பருகிவர இருமல், மூச்சு திணறல்,தொண்டைகரகரப்பு தீரும்
78.
மிளகு,பனங்கற்கண்டு,துளசி சமனெடுத்து,பொடித்து,கலந்து அவ்வப்போது 1தேகரண்டி,சுவைத்துச் சாப்பிட இருமல் குணமாகும்
79.
சூடான பாலில் 1சிட்டிகை மஞ்சள்தூள்,சுக்குத்தூள் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குணமாகும்
80.
நிலவேம்பு இலைகளை
குடிநீர் செய்து தினம்3வேளை பருகிவர பீனிசம் தீரும்.
81.
வெற்றிலை,கருந்துளசி சாற்றை,தேனில் கலந்து,குழந்தைகளுக்குக் கொடுக்க சளித்தொல்லை மறையும்
82.
வேப்பஎண்ணையை மார்பு,முதுகுகளில் தடவி,சிறிது உள்ளுக்கும் கொடுக்க குழந்தைகளுக்கு சளித்தொல்லை குறையும்
83.
ஆடாதொடையை தேன் விட்டு வதக்கி,தாளிசபத்திரி.அரிசிதிப்பிலி, அதிமதுரம் சமன் பொடித்துப் போட்டு,4ல்1ன்றாய்க் காய்ச்சி,50மிலி அருந்திவர காசநோய், இருமல்,இரைப்பு குணமாகும்
84.
நீர்க்கோவை
மாத்திரையை வெந்நீரிலரைத்துப் பற்றிட பீனிசம், பீனிசத் தலைவலி
நீங்கும்.
85.
தேன் 1கரண்டி
தினமும் ஊட்டிவர குழந்தைகளுக்கு சளி நீங்கும்.
86.
கற்பூரம்,தே.எண்ணை கலந்து காய்ச்சி தடவ மார்பில் கட்டிய கோழை
வெளியாகும்.
87.
மஞ்சள்,குங்குமப்பூ,சாம்பிராணி
மூன்றையும் அரைத்து நெற்றியில் பற்றிட சளி மறையும்.
88. புழுங்கல் அரிசியுடன் மிளகு சேர்த்து மென்று சாப்பிட இருமல் குணமாகும்
89.
ஆசனவாயில் வி.எண்ணை தடவ இருமல் தீரும்.
90.
வெள்ளை பூண்டை நெய்யில்
வதக்கி,சுடுசாதத்துடன் பிசைந்து சாப்பிட
இருமல் தீரும்
91.
ரோஜாப்பூவை நுகர மூக்கடைப்பு
தீரும்.
92.
கடுகுஎண்ணையை மூக்கு,மார்பின் மேல்தடவி,உப்பு நீரால் மூக்கை சுத்தம் செய்ய மூக்கடைப்பு
தீரும்
93.
சுக்கை சுட்டுப் பொடித்து,தேனில் குழைத்துச் சாப்பிட சளி நீங்கும்
94.
ஆடாதொடை இலைச்சாறு,தேன்,சமனளவு,சர்க்கரை கலந்து,தினம் 4 வேளை கொள்ள இருமல் தீரும்
95.
கஞ்சாங்கோரை இலை10,மிளகு1கிராம் சேர்த்தரைத்து வென்னீரில் கொள்ள இருமல் தீரும்
96.
இஞ்சிச்சாறு,மாதுளம்பழச்சாறு வகைக்கு 30மிலி, 15மிலி தேன் கலந்து,
தினம் 3வேளை சாப்பிட இருமல் தீரும்
97.
30கிராம் கோவை இலையை,200மிலி நீரில் சிதைத்துப் போட்டு, 100மிலி யாக்கி தினமிருவேளை பருக இருமல் தீரும்
98.
நெல்லிக்காய் லேகியம்
காலை மாலை கழற்சிக்காயளவு சுவைத்துப் பாலருந்த இருமல் குணமாகும்
99. இன்புறா,வல்லாரை வகைக்கு 40கிராம்,சிதைத்து 500மிலி நீரிலிட்டு 150 மிலியாக காய்ச்சி,50மிலியாக 3வேளை கொள்ள இருமல்
தீரும்
100.
கரிசாலைசாறு,ந.எண்ணை வகைக்கு 1லி,அதிமதுரதூள் 40கிராம், கலந்து, காய்ச்சி வடித்து,1தேகரண்டி கொள்ள இருமல் தீரும். தலை முழுகியும்
வரலாம்
101.
பால்சுண்டைக்காயை
சமைத்துண்ண இருமல் தீரும்
102.
கறிவேப்பிலை ஈர்க்கு,முருங்கை ஈர்க்கு,வேம்பு ஈர்க்கு,நெல்லி ஈர்க்கு வகைக்கு 30கிராம்,சுக்கு,மிளகு,சீரகம் வகைக்கு 20கிராம்,சிதைத்து, 2ல்1ன்றாய் காய்ச்சி, வேளைக்கு 1மடக்கு கொள்ள இருமல் தீரும்
103.
முசுக்கைவேர்120கிராம்,தூதுவேளைவேர்80கிராம்,சுக்கு10,மிளகு10, கிராம்பு 5கிராம்,பொடித்து,5அரிசிஎடை,கருப்பு வெற்றிலையுடன் உண்டு, பால்அருந்த, சுவாச உறுப்பு சுத்தமாகும்.உறைந்த சளி வெளியேறும்
104.
கற்பூரவல்லி இலைக்காம்புகளை குடிநீர் செய்து பருக இருமல் தீரும்
105.
பிரமத்தண்டு சமூலம்பால்,3அரிசிஎடை,தேனில் கொள்ள இருமல் தீரும்
106.
பிரமத்தண்டு இலைசூரணம்,விதைசூரணம் கலந்து,30மிகி,காலை மாலை, தேனில் கொள்ள இருமல் தீரும்
107.
மரைக்காரை பழச்சதையை உலர்த்திப் பொடித்து,200மிகி,கொள்ள இருமல் தீரும்
108.
புளியாரை நெய் 1தேகரண்டி,காலைமாலை,சாப்பிட்டுவர இருமல்
தீரும்
109.
ஆடாதொடைவேர்,கண்டங்கத்திரிவேர்,சமன் சூரணித்து, 1கிராம், தேனில் கொள்ள ஈளை,வறட்டு இருமல்,என்புருக்கி,இருமல் தீரும்
110.
மஞ்சள்துண்டுகளை சுண்ணாம்பு தெளிவு நீரில், ஊறவைத் துலர்த்தி, தூள் செய்து,1தேகரண்டி,தேன்,பால்,வெந்நீரில் கொடுக்க
வறட்டு இருமல்,ஈளை தீரும்
111.
இண்டந்தண்டுசாறு 15மிலி,திப்பிலிபொடி,பொரித்தவெங்காரம் வகைக்கு
1கிராம், சேர்த்துக் காலை3நாள் கொடுக்க ஈளை,வறட்டு இருமல் குணமாகும்
112.
மருளை வாட்டிப்பிழிந்த சாறு அரைசங்கு குழந்தைகளுக்குக்
கொடுக்க நெஞ்சில் ஏற்பட்ட சளி நீங்கும்.
113.
.தூதுவேளை,ஆடாதொடை,கண்டங்கத்திரி
வேர்,சித்தரத்தை நான்கையும் அரைத்து நீரிலிட்டு காய்ச்சிப்
பருக,1தேகரண்டி குழந்தைகளுக்குக் கொடுக்க சளி,மூக்கடைப்பு தீரும்.
114.
சுக்கை உரைத்துப் பற்றிட சளி,மூக்கடைப்பு,தடுமன்,தலைவலி நீங்கும்.
115. மூக்கிரட்டைவேர் 30கிராம்,மிளகு4,உத்தாமணிச்சாறு 50மிலி, 100மிலி வி.எண்ணையில் காய்ச்சி வடித்து குழந்தைகளுக்கு 15மிலி, அதற்குமேல் 30 மிலி, வாரம்1,2முறை,கொடுக்க கப இருமல் தீரும்
115. மூக்கிரட்டைவேர் 30கிராம்,மிளகு4,உத்தாமணிச்சாறு 50மிலி, 100மிலி வி.எண்ணையில் காய்ச்சி வடித்து குழந்தைகளுக்கு 15மிலி, அதற்குமேல் 30 மிலி, வாரம்1,2முறை,கொடுக்க கப இருமல் தீரும்
116.
கண்டங்கத்திரி,ஆடாதொடை,வேர் வகைக்கு 50கிராம்,திப்பிலி 5 கிராம் சிதைத்து,4ல்1ன்றாய் காய்ச்சி,100மிலி,தினம் 4வேளை பருக கப இருமல்
தீரும்
117.
விளாக்கொழுந்து அரைத்து,புன்னைக்காயளவு,பால்,கற்கண்டு கலந்து சாப்பிட
கப இருமல் தீரும்
118.
அகத்தி இலைசாற்றில் தேன் 5துளி கலந்து உச்சந்தலையில் சூடு பறக்கத்
தேய்க்க குழந்தைகளுக்கு ஜலதோஷம் நீங்கும்.
119.
திரிகடுகை அரைத்து மிளகளவு மாத்திரை செய்து குழந்தைகளுக்குக்
கொடுக்க வாதம்,பித்தம்,கபம்(திரிதோஷம்) குணமாகும்.
120.
மஞ்சள்,கறிவேப்பிலை சேர்த்தரைத்து,பெரிய நெல்லிக்காயளவு நீடித்துச் சாப்பிட்டுவர ஒவ்வாமை தும்மல்,இரைப்பு, எக்ஸிமா, ஈஸ்னோபீலியா,
ஆஸ்துமா குணமாகும்.
121.
முருங்கை இலையுடன்,மிளகு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டுவர
நெஞ்சுச்சளி நீங்கும்.
122.
முருங்கைஇலைச்சாறு,தேன் கலந்து சாப்பிட்டுவர தொண்டைக் கம்மல்,
எரிச்சல்,இருமல் தீரும்.
123.
தூதுவேளை இலைசாற்றில் சமன் நெய் கலந்து,காய்ச்சி வடித்து, 5 மிலி, காலை
மாலை சாப்பிட்டுவர மார்புச்சளி தீரும்
124.
தழுதாழை இலைச்சாற்றை மூக்கில் உறிஞ்சி வர மார்புச்சளி படிப்படியாய்
குறையும்.பீனிசம் குணமாகும்
125.
கோவைக்கிழங்குச்சாறு 10மிலி காலையில்
பருகிவர சளி தீரும்.
126.
பொடுதலை இலையுடன், இஞ்சி,புதினா,கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, துவையல் செய்து,சுடுசாதத்துடன் நெய்
சேர்த்து, முதலில் உண்டுவர
சளி தீரும்
127.
தான்றி தளிரிலை சாற்றினை வெள்ளைத்துணியில் தடவி உலர்த்தி, நீரில்
பிழிந்து பருகிவர தொண்டைக்கம்மல்,இருமல் குணமாகும்
128. சுக்கை வாயில் அடக்கிக்கொண்டு சாற்றை விழுங்கிவர இருமல் குணமாகும்.
128. சுக்கை வாயில் அடக்கிக்கொண்டு சாற்றை விழுங்கிவர இருமல் குணமாகும்.
129.
சுண்டைவற்றல்,நெல்லிவற்றல்,சுக்கு,வெந்தயம்,ஓமம்,மாதுளை ஓடு, மாம்பருப்பு,கறிவேப்பிலை,சீரகம் வறுத்திடித்து,பொடித்து,காலை மாலை 2சிட்டிகை,மோரில் சாப்பிட்டுவர
சளி நீங்கும்
130.
மண்டூரம்,உலர்ந்தமாவிலை,கீழாநெல்லி,நீர்முள்ளி வகைக்கு
80 கிராம், சீரகம்10கிராம் உலர்த்திப்
பொடித்ததில் 50கிராம்,500மிலி நீரிலிட்டு 125 மிலியாக காய்ச்சி,60மிலி காலைமாலை உணவிற்குப்பின்
சாப்பிட்டு வர சோகை, உடல்வீக்கம்,உடம்புவலி,அண்டவீக்கம், இருமல் சுரம் தீரும்
131.
சுக்கு,மிளகு,திப்பிலி சமன் பொடித்து,1கிராம்,தேன்,நெய்யில் கலந்து, காலை மாலை சாப்பிட்டுவர பசியின்மை,செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்பொருமல் ,சுரம்,இருமல் தீரும்
132.
கடுக்காய்தோல்,தான்றித்தோல்,நெல்லிவற்றல், சமன் பொடித்து 2 கிராம், நெய்,தேனில்,காலைமாலை கொள்ள
இருமல்,கண்எரிச்சல், வாய்ப்புண், மலச்சிக்கல் தீரும்
133. பிரம்மதண்டு சாம்பல்பொடி 2கிராம்,தேனில் கலந்து உண்டுவர ஆஸ்துமா,காசநோய்,இருமல்,இரைப்பு குணமாகும்.
133. பிரம்மதண்டு சாம்பல்பொடி 2கிராம்,தேனில் கலந்து உண்டுவர ஆஸ்துமா,காசநோய்,இருமல்,இரைப்பு குணமாகும்.
134.
பிரண்டை உப்பை
தென்னங்கள்ளில் கலந்து சாப்பிட்டுவர ஆஸ்துமா குணமாகும்.
135.
எலுமிச்சைசாறுடன்
தேன் கலந்து சாப்பிட இருமல் குணமாகும்.
136.
தூதுவேளை,கருந்துளசி,இன்புறா,மணித்தக்காளி,முசுமுசுக்கை, மிளகரனை, சிறுகீரை,ஆடாதொடை,அமுக்கரா,வேர்கள் வகைக்கு 50 கிராம், இடித்து,5லி நீரிலிட்டு
அரைலி ஆக காய்ச்சி வடித்து அரைலி நெய் சேர்த்து காய்ச்சி 50கிராம் கற்கண்டு பொடி
கலந்து வடித்து காலை மாலை 5மிலி சாப்பிட்டுவர கபநோய்கள் ,கைகால்
எரிவு, வறட்டு இருமல்,ஈளை, காசம் குணமாகும்.
137.
தாளிசாதிசூரணம் 100-500மிகி,10மிலி தேனில்
குழைத்து குழந்தைகளுக்குக் கொடுக்க (1தேகரண்டி பெரியவர்களுக்கு) சளி, இருமல், இரைப்பு குணமாகும்.
138.
தான்றிகாயை
நெய்யுடன் வறுத்து,பிசைந்து,ஈர கோதுமை மாவால் மூடி,வாயில் அடக்க இருமல்,சளி தீரும்.
139.
பிரம்மதண்டுகிழங்குசூரணம்,மிளகுசூரணம்,வெள்ளைசர்க்கரை சமன் கலந்து, வேளைக்கு திரிகடி,21நாள் சாப்பிட்டுவர இரைப்பு தீரும்.பத்தியம்..
140. முட்சங்கன்,தூதுவேளை,இலைசமனெடுத்தரைத்து,நெல்லிக்
காயளவு, 200மிலிபசும்பாலில் சாப்பிட சளி வெளியாகும். கபரோகம் தீரும்
141. மஞ்சளை சுட்டு நுகர தலை நீரேற்றம், மூக்கடைப்பு தீரும்
140. முட்சங்கன்,தூதுவேளை,இலைசமனெடுத்தரைத்து,நெல்லிக்
காயளவு, 200மிலிபசும்பாலில் சாப்பிட சளி வெளியாகும். கபரோகம் தீரும்
141. மஞ்சளை சுட்டு நுகர தலை நீரேற்றம், மூக்கடைப்பு தீரும்
142.
அரைகிராம் மிளகுதூளுடன்,1கிராம் வெல்லம் சேர்த்து சாப்பிட தலைவலி, மூக்கடைப்பு குணமாகும்
143.
நொச்சிஇலைகளை தலையணையாக
செய்து உபயோகிக்க தலைவலி, காய்ச்சல்,பீனிசம் குணமாகும்
144.
பலகறைபற்பம்100மிகி,திரிகடுகுசூரணம்1கிராம்,10மிலி தேனில் குழைத்து, தினமிருவேளை சாப்பிட
பீனிசம் நீங்கும்
145.
வெண்தாமரைசமூலம் மணப்பாகு(சர்பத்) செய்து சாப்பிட இரத்தமூலம், சீதபேதி, ஈரல் நோய்கள் குணமாகும்.இருமல் கட்டுப்படும்..
146.
இந்துப்பு,கற்கண்டு பொடித்து திரிகடி கொள்ள ஈளை, இருமல் நீங்கும்
147.
தூதுவேளை, முருங்கைபட்டை,திப்பிலி,சீனி சமன் பொடித்து திரிகடி பசுநெய்யில் கொள்ள ஈளை,இருமல் தீரும்.
148.
மிளகு, ,பொடுதலை கொழுந்து சமனரைத்து வேளைக்கு கொட்டை பாக்களவு சாப்பிட்டுவர ஈளை இருமல்
தீரும்
149.
ஓமம்,கடுக்காய்,மிளகு,சுக்கு,திப்பிலி,அரத்தை,அக்கராகாரம் சமன் பொடித்து பாதிஅளவு சர்க்கரை கலந்து திரிகடி கொள்ள ஈளை இருமல்
தீரும்
150.
துளசிச்சாறு,ந.எண்ணைகலந்து300மிலி காலை3நாள் பத்தியத்துடன் சாப்பிட இரத்தகாசம் தீரும்
151.
சித்தரத்தை,ஓமம்,கடுக்காய்,மிளகு,திப்பிலி,அக்கராகாரம்,தேசாவரம் சமன் இடித்துப் பொடித்து,பாதிஎடை சர்க்கரை
சேர்த்து,1 தேக்கரண்டி, காலை மாலை
கொள்ள ஈளை, வறட்டு இருமல்,நீர்க்கோவை
தீரும்.
152.
மூக்கிரட்டைவேர் 30கிராம்,அருகம்புல் 30கிராம்,மிளகு10,சிதைத்து 3ல்1ன்றாய்க் காய்ச்சி,150மிலி,தினம்3வேளை பருக சளியுடன் கூடிய இருமல் த
153.
20கிராம் விராலி இலையை இடித்து,250மிலிநீரில் 1நாளூற வைத்து, வடித்து,20மிலி பாலுடன் கொள்ள சளி,இருமல்,நுரையீரல் நோய்கள், கணச்சூடு தீரும்.
154.
விழுதிசாற்றில் சமன் ந..எண்ணை கலந்து காய்ச்ச்சி வடித்து 4
நாட்களுக்கு 1 முறை தலைமுழுகிவர சகல பீனிசமும் தீரும்.
155.
அரைகிராம் மிளகுபொடியுடன் 1கிராம் வெல்லம் சேர்த்துச்
சாப்பிட்டுவர பீனிசம் தீரும்.
156.
வெங்காயச்சாறு 15மிலி,காலைமாலை 15நாள் கொடுக்க தொடர்ந்து புகை
பிடிப்பதால் வந்த இருமல் தீரும்.
157.
கஞ்சாங்கோரை இலைசாறு 30துளி,பாலுடன்
குழந்தைகளுக்குக் கொடுக்க மார்புச்சளி குணமாகும்.
158.
உப்பு கலந்த புளித்த மோரில் சுண்டைக்காயை 2முறை ஊற வைத்து, காய
வைத்து,பொரித்து இரவு உணவில் சேர்த்துவர சளி தீரும்.
159.
சித்தரத்தை,பேரீச்சம்பழம்,சுக்கு,அதிமதுரம் வகைக்கு10கிராம், ஒன்றிரண்டாய் நறுக்கி,50மிலி பால்,50மிலி நீர் சேர்த்து காய்ச்சி, கற்கண்டு கலந்து காலைமாலை 50மிலி சாப்பிட்டுவர வறட்டுஇருமல், சளியுடன் கூடிய இருமல்,சுரத்துடன் கூடிய இருமல்
தீரும்.
160.
நிலஆவாரை,சுக்கு,மிளகு,ஓமம்,வாய்விளங்கம் பொடித்து சமன் கலந்து அந்தளவு
சர்க்கரை சேர்த்து 2கிராம்,காலைமாலை,வெந்நீரில்
கொள்ள வாயு, பொருமல்,விக்கல்,சளி,இரைப்பிருமல், உடம்புஎரிவு,
வாந்தி, பித்தம்,மலக்கட்டு
நீங்கும்.
161.
இண்டு இலை,சங்கிலை,தூதுவேளைஇலை,சுக்கு,திப்பிலி வகைக்கு
20 கிராம் இடித்து,4ல்1ன்றாய்க் காய்ச்சி,100மிலி தினமிருவேளை பருகி வர இருமல் தீரும்.
162.
வல்லாரை,தூதுவேளைஇலை சமஅளவு கசக்கிச்சாறெடுத்து 5-6 துளி
அல்லது பொடி 1தேகரண்டி,50மிலி காய்ச்சிய பாலில்
கொடுக்க சயரோகத்தால் வந்த தொண்டைக்கம்மல்,சுவாச உறுப்புகளில்
சளி தேக்கம் நீங்கும்.
163.
ஆனைதிப்பிலி
சூரணம் தேனில் குழைத்துச் சாப்பிட்டுவர இருமல்,ஈளை, கபம்,வாயு தீரும்.
164.
சடாமஞ்சில்
சூரனம் 1கிராம் நீரில் தினமிருவேளை சாப்பிட்டுவர கோழை வெளியாகும்.
165.
முட்சங்கன் இலை,தூதுவேளைஇலைசமனெடுத்து,அரைத்து நெல்லிக்காயளவு 200மிலி பசும்பாலில்
சாப்பிட சளி வெளியாகும். கபரோகம் தீரும்.
166.
ஆடாதொடைஇலையை
இடித்து பிட்டவித்து சாறு100மிலியில் திரிகடி திப்பிலிபொடி கலந்து உட்கொள்ள ஈளை
இருமல் தீரும்.
167.
திரிகடுகு,கடுக்காய்,சிற்றரத்தை,ஓமம் வகைக்கு 12கிராம்
வறுத்து பொடித்து சமன் சீனி சேர்த்து திரிகடி தேனில் கொள்ள ஈளை இருமல்
தீரும்.
168.
மரமஞ்சள்,திரிகடுகு,திரிபலா,ஓமம்,கடுக்காய்பூ,சித்தரத்தை தேற்றான் விதை வகைக்கு12கிராம்
பொடித்து திரிகடி தேனில் கொள்ள ஈளை இருமல் தீரும்.
169.
தேன்,இஞ்சிச்சாறு,மாதுளம்பழச்சாறு
சமன் கலந்து மணிக்கொரு முறை 100மிலி பருகி வர ஈளை இருமல் தீரும்.
170.
வாழைப்பூ
இரசம் செய்து அருந்தி வர
இருமல் நீங்கும்.
171.
எலுமிச்சம்
பழசாறு, தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் குணமாகும்
172.
ஒரு
துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில்
சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு
விரைவில் நீங்கும்.
173.
3
தம்ளர் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வர கடுமையான இருமல் தீரும்.
174.
நீருடன்
தேனைக்கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.
175.
மூன்று
ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி, காய்ச்சி வடிகட்டி எடுத்து இரண்டு
சொட்டுகள் நசியமிட (படுத்தவாறு மூக்கில் விட) மூக்கடைப்பு நீங்கும்.
176.
நான்கு
வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்க நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
177.
ஜாதிக்காயை
தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூச மூக்கு ஒழுகுவது நிற்கும்.
178.
சுக்கை
தட்டி கஷாயமாக போட்டு தேனுடன் கலந்து சாப்பிட ஜலதோஷம் நீங்கும்.
179.
ஐந்தாறு
துளசி இலைகளுடன் சிறு துண்டு சுக்கு, 2 இலவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில்
பற்றாகப் போட தலைவலி குணமாகும்.
180.
தாளிசபத்திரி
சூரணம், வசந்தகுசுமாத்திரை, சுதர்சன மாத்திரை, சாந்த சந்திரோதயம் மாத்திரைகள் உட்கொள்ள
சளி மற்றும் காய்ச்சல் குணம் அடையும்.
181.
உலர்ந்த
திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வர இருமல் நீங்கும்.
182.
ஒரு
சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டுவர இருமல் குணமாகும்.
183.
வெற்றிலை,
3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்க சளித்தொல்லை நீங்கும்
184.
சிறிது
வெந்தயத்தை சாப்பிட்டு 1 தம்ளர் வென்னீர் அருந்தி படுக்க சளித்தொல்லை நீங்கும் .
185.
முற்றிய
வெண்டைக்காயை இரசம் செய்து குடித்து வர இருமல் உடனே நிற்கும்.
186.
மிளகாயுடன்
பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி நீங்கும்
187.
பாலில்
பூண்டை காய்ச்சிக் குடிக்க இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு நீங்கும்
188.
பூண்டை
தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இரசம் செய்து
குடிக்க சளி சீக்கிரம் குணமாகும்.
189.
சிறிது
பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த நீரை கொடுத்து வர, குழந்தைகளுக்கு ஏற்படும்
தொடர் இருமல் குறையும்.
190.
இரவு
ஒரு தம்ளர் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வர சளி, இருமல் பறந்தோடி விடும்.
191.
இஞ்சியை
நன்றாக அரைத்துச் சாறெடுத்து, ஒரு சிட்டிகை உப்பைக் கலந்து பருகிவர ஓரிரு நாட்களில்
மூக்கு ஒழுகுதல் நின்று போகும்.
192.
ஒரு
பல் பூண்டை எடுத்து வாயில் போட்டு நன்றாகக் கடித்து மெல்ல மூக்கு ஒழுகுதல் உடனடியாக
நின்று போகும்.
193.
ஓரிரு
துளி நீலகிரித் தைலம் கைக்குட்டையில் விட்டு, அவ்வப்போது அதை மூக்கில் வைத்து நாள்
முழுவதும் சுவாசித்து வர ஜலதோஷம் நீங்கும்.
194.
10
ஓம இலைகள் மற்றும் ஆறு கிராம்புகளை சர்க்கரையுடன் கலந்து நீரில் கொதிக்க வைத்து, தினமும்
காலையில் குடித்து வர சளி ஓடிப் போகும்.
195.
எள்ளை
நன்றாக வறுத்து, அத்துடன் வெல்லத்தை சேர்த்துச் சாப்பிட்டு வர, கொளகொளவென்று ஒழுகிக்
கொண்டிருக்கும் சளி விரைவில் நின்று போகும்.
196.
அரை
தேகரண்டி
பூண்டு, 1 தேகரண்டி
தேன், ஒரு தேகரண்டி
எலுமிச்சை சாறு,
அரை தேகரண்டி
இலவங்கப்பட்டை,
அரை தேகரண்டி
இஞ்சியுடன் தேவையான
அளவு தேயிலை கலந்து கொதிக்க வைத்து கசாயம் செய்து குடித்து வர, 30 நிமிடங்களில் மூக்கு
ஒழுகுதல் நிற்கும்.
197.
வெற்றிலை
சாற்றில் சிறிது தேன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்க ஜலதோசம் நீங்கும்.
198.
13
மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட தூசு குப்பையினால் ஏற்படும் ஒவ்வாமை (Dust allergy) யினால் வரும் ஜலதோசம் குணமாகும்.
199.
மஞ்சள்
பொடி மற்றும் சுண்ணாம்பு சேர்த்து தலையைச் சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் பூச
ஜலதோசம் சளி குணமாகும்
200.
மஞ்சள்,
பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட, தலைவலி நீங்கும்.
201.
கற்கண்டுடன்
சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.
202.
ஒரு
சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.
203.
உலர்ந்த
திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வர இருமல் நீங்கும்.
204.
கடுகை
பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட இருமல் குணமாகும்.
205.
மிளகுத்தூள்
சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடசூட்டினால்
உண்டாகும் இருமல தீரும்.
206.
நெருப்பில்
சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
207.
வால்மிளகின்
தூளை வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட சளி நீங்கும்
208.
மிளகாயுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட
சளி நீங்கும்
209.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக