பக்கங்கள்

29 அக்டோபர், 2016

தலைப்பேன்,பொடுகு,இளநரை,புழுவெட்டு.(pediculosis,sebarrhoies,derimatitis,alopsia.)



தலையிலுள்ள மயிர்க்காம்புகளுக்கு(hair folicles) ஸிலிகா(silica) எனும் சத்துக்குறைவே முடி உதிர்தல்,வழுக்கைக்கு காரணம்.இது பழங்கள், பச்சைக்காய்கறிகள்,கைக்குத்தல் அரிசி,தோல் நீக்காத உளுந்து,பாசிப்பயறில் மட்டுமே உள்ளது                                                                      
மற்ற காரணங்கள்;                                                                                                   1.மனக்கவலை,மனப்போராட்டம்,மன இறுக்கம்(டென்ஷன்)                    
 2.பிணிகளுக்கு எடுத்துக்கொண்ட மருந்துகளின் பக்க விளைவு.                               
3.பலவீனம்.                                                                       4.கடும் உழைப்பினால் உண்டாகும் உஷ்ணம்.                                         
5.அதிகம் சோப்,ஷாம்பூ,க்ரீம்,வாசலைன்(soap,shampoo,hair creams,vaselines) உபயோகிப்பது.                                                                                           
 6.ஹார்மோன்(harmones) கோளாறு,                                                                                        சாதாரணமாக தினம்30-50 முடி உதிரும்.ஒரு முடியின் ஆயுள் 3-4மாதம். பிரசவமான 3-4மாதங்கள் முடி உதிர்வது இயற்கையே.                                               
 சீப்பை சுத்தமாக வைத்திருக்கவும்.
ஒரே  சீப்பை பலரும் சீவ கூடாது,
பல் போன சீப்பை பயன்படுத்த  கூடாது,
குளித்தவுடன் கூந்தலை சீவ வேண்டாம்.  கூந்தலானது ஈரமாக இருக்கும் போது சீவினால் முடியில் முடிச்சுகள் மற்றும் சிக்குகள் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் சீப்பை கொண்டு சீவினால் முடியானது கொத்தாக வேரோடு தான் வரும்.
 கூந்தலை சீவும் போது மண்டை ஓட்டில் நன்கு பதியும்படி நன்கு சீவ வேண்டும். கூந்தலும், தலைச்சருமமும் ஒன்றல்ல. ஆகவே கூந்தலை சீவும் போது தலைச்சருமத்தில் நன்குபடும்படி சீவினால் தலைச்சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து மயிர்க்கால் நன்கு வளரும். இவ்வாறு தினமும் செய்தால் கூந்தலானது நன்கு ஆரோக்கியமாக வளரும்.
கூந்தலை இறுக்கமாக கட்டக்கூடாது. . கூந்தலை முதலில் சீவ ஆரம்பிக்கும் போது கூந்தலின் முனையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் கூந்தலில் முடிச்சுகளானது முனையிலேயே அதிகமாக இருக்கும்.  அப்போது முதலில் இந்த முடிச்சுகளை அகற்றிப் பின் ஆரம்பித்தால் கூந்தல் உதிராமல் இருக்கும். இல்லையென்றால் கூந்தல் வேரோடு தான் வரும்.
                               
1.       பறங்கிபட்டை சூரணமாத்திரை 2, தினம்3 வேளை, சாப்பிட்டு, அருகன் தைலம் பூசி வர புழுவெட்டு,பொடுகு,பேன் குணமாகும்                                              
2.       தும்மட்டிக்காயை பாதியாக வெட்டி,சதைப்பகுதியை புழுவெட்டு உள்ள இடத்தில் தேய்க்க குணமாகும்.                                                                               
3.       வெங்காயத்தைப் பாதியாக வெட்டி,சிறிது மிளகுத்தூள்,உப்புத்தூளில் தொட்டுத் தேய்க்க புழுவெட்டு குணமாகும்                                                                              
4.       புளித்த தயிர் அல்லது எலுமிச்சைசாறு தேய்த்துக் குளிக்க பொடுகு குணம் ஆகும்                                                                     
5.       உசிலைஇலைதூள்,இலுப்பைப்புண்ணாக்கு,சீயக்காய் சேர்த்தரைத்து தேய்த்துக் குளிக்க பொடுகு நீங்கும்                                                                                           
6.       பொடுதலைசாறுடன் சமன் தே,எண்ணை கலந்து காய்ச்சி வடித்து தேய்த்துக் குளிக்க பொடுகு நீங்கும்                                                                                                 
7.   கறிவேப்பிலையை பால் விட்டரைத்து,தேய்த்தூற வைத்துக் குளிக்க பொடுகு நீங்கும்                                                                                                                                                                
8.       5கிராம் காட்டுச்சீரகத்தை எலுமிச்சை சாறிலரைத்துப்பூச பேன் தொல்லை நீங்கும்                                                          
9.       பேன்கொட்டையை அரைத்துத் தடவ தலைப்பேன் நீங்கும்                  
10.   சீத்தாப்பழக்கொட்டையை அரைத்து தடவ தலைப்பேன் நீங்கும்          
11.   பிஞ்சுஊமத்தங்காயை உமிழ்நீரில் அரைத்துப்பூசி குளித்துவர தலைப்பேன் குறையும். முடி வளரும்.
12. .மருதாணி பூக்களையுலர்த்தி,தலையணை செய்து உபயோகிக்க நல்ல தூக்கம் உண்டாகும்.தலைப்பேன் குறையும்.
13.   வேப்ப எண்ணையை தலையில் தடவிவர தலைப்பேன்,பொடுகு, முடி உதிர்தல்,இளநரை கட்டுப்படும்                          
14.   மருதோன்றி இலைகளை அரைத்து,அடைதட்டி,உலர்த்தி தே.எண்ணை யிலிட்டு காய்ச்சி,வடிகட்டி தலையில் தேய்த்துவர இளநரை மாறும். கண்கள் குளிர்ச்சியடையும்.                                      
15.   வேப்பிலைகளை கொதிக்க வைத்து ஆறியபின் சீயக்காய் தேய்த்துக் குளிக்க தலைப்பேன்,பொடுகு நீங்கும்                                         
16.   வேப்பம்பூவை அரைத்துப் பூசி ஊறவைத்துக் குளிக்க தலைப்பேன், பொடுகு நீங்கும்                                                            
17.   கரிசாலைசூரணம் அரைதேகரண்டி தேனில் குழைத்துச் சாப்பிட்டுவர இளநரை மாறும்                                                              
18.   கரிசாலை இலைகளையரைத்து,அடைதட்டி,ந.எண்ணையில் ஊறவைத்து தேய்த்துவர முடி கருத்து செழித்து வளரும்.முடி உதிர்தலும் கட்டுப்படும                 
19.   மஞ்சள்கரிசாலை 1பிடி,200மிலி தே.எண்ணையிலிட்டுக் காய்ச்சி வடித்து தேய்த்துவர முடி கருமையடையும்..                                                                
20.   வல்லாரைச்சாறுடன் சமன் ந,எண்ணை கலந்து,காய்ச்சி,வடித்து தேய்த்து வர முடி அடர்த்தியாக வளரும்                                           
21.   பொடுதலைஇலைகளை சீசாவிலிட்டு மூழ்குமளவு ந.எண்ணை சேர்த்து 21 நாள் சூரிபுடமிட்டு  வடிகட்டி தலைக்குத் தேய்த்துவர பொடுகு, முடிஉதிர்தல் கட்டுப்படும்                                                      
22.   நெல்லிக்காய் தைலம் தேய்த்து தலை முழுகிவர கண்கள் பிரகாசிக்கும். பொடுகு,முடிஉதிர்தல் கட்டுப்படும்.                         
23.   கொட்டைகரந்தை இலைச்சாறு சமன் தே.எண்ணை கலந்து,காய்ச்சி, வடித்து, தேய்த்துவர முடி வளரும். .கருமையடையும்                                     
24.   செம்பரத்தை பூச்சாறு சமன் தே.எண்ணை கலந்து காய்ச்சி,வடித்து தேய்த்து  வர தலைமுடி கருத்து அடர்த்தியாக வளரும்                                   
25.   செம்பரத்தைபூக்களை அரைத்து தேய்த்து ஊற வைத்துக் குளிக்க தலைப்பேன்கள் குறையும்.                                                 
26.   சடாமஞ்சிலை தே.எண்ணையில் கலந்து,தடவிவர கூந்தல் வளரும்.
27.   அரைக்கீரை விதையை ந.எண்ணையில் காய்ச்சி வடித்து,தேய்த்துவர முடி கருத்து செழித்து வளரும்                                                   
28.   உப்பை பொடித்து அழுத்தித் தேய்த்துவர புழுவெட்டு,முடி கொட்டுதல் நீங்கி முடி வளரும்.                                                    
29.   எலுமிச்சை விதையுடன் மிளகு சேர்த்து அரைத்து தேய்க்க வழுக்கை மறைந்து முடி வளரும்                                             
30.   கரியபோளத்தை காடியில் (வினிகர்)அரைத்து காலையில் தடவ வழுக்கையில் முடி வளரும்.                                       
31.   அதிமதுர பொடியை எருமைப்பாலிலரைத்துப்பூசி குளிக்க வழுக்கை நீங்கி முடி வளரும்.                                                    
32.   மயிர்மாணிக்கத்தின் வேரை தேஎண்ணயில் காய்ச்சி வடித்து தேய்த்து வர வழுக்கை நீங்கி முடி வளரும்                                                   
33.   கோழிமுட்டை வெண்கரு,வெங்காயச்சாறு சமன் கலந்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊற வைத்து உசிலைபொடி கொண்டு தேய்த்துக் குளிக்க வழுக்கையில் முடி வளரும்                                       
34.   உப்பையும் மிளகையும் பொடித்து களிம்பு ஏறாத பாத்திரத்திலிட்டு,3நாள் சூரிய புடமிட்டு காய்ந்ததும் இரவில் தேய்த்து காலையில் குளிக்க வழுக்கை நீங்கும்                                           
35.   கறிவேப்பிலை,கொத்துமல்லி,உளுந்து சேர்த்து,துவையல் செய்து, சுடுசாதத்தில் நெய்யுடன் பிசைந்து சாப்பிட வழுக்கை மறையும்                    
36.   நில ஆவாரைஇலையுடன் மருதோண்றி இலை சேர்த்து அரைத்துப்பூசி ஊறவைத்துக் குளித்துவர செம்பட்டைமுடி கருக்கும்              
37.   மரிக்கொழுந்துடன் நிலவாகை இலை சேர்த்து அரைத்து பூசி ஊற வைத்துக் குளிக்க செம்பட்டை மாறும்                                   
38.   மருதாணிஇலையை இரவில் அரைத்து தேய்த்து, காலையில் குளித்து வர முடி கருத்து வளரும்.இளநரை மாறும்.                                     
39.   தாமரைப்பூவை நீரில் காய்ச்சிப் பருகிவர இளநரை மாறும்           
40.   செம்பருத்தி இலையை அரைத்து தேய்த்து குளித்துவர இளநரை மறையும்
41.   கரிசாலை,கறிவேப்பிலை சாறு சமன் கலந்து தேய்த்துவர இளநரை வராமல் தடுக்கும்                                                
42.   அவுரி,மருதோண்றி இலைகளை தே.எண்ணையில் காய்ச்சி வடித்து தேய்த்துவர முடி கருக்கும்.                                                        
43.   வெங்காயத்தை வெட்டி வி.எண்ணையில் தோய்த்து தலையில் தேய்த்துவர முடிஉதிர்தல் நிற்கும்.                                    
44.   எலுமிச்சைசாற்றில் சோழியை அரைத்து தலையில் தேய்த்துவர முடிஉதிர்தல் நிற்கும்                                                              
45.   வி.எண்ணை தேய்த்து,பின் தே.எண்னை தேய்க்க முடி உதிர்தல் கட்டுப்படும்.                                                                
46.   தே.எண்ணையில் பொண்ணாங்கானி இலையை காய்ச்சி தேய்த்துவர முடிஉதிர்தல் கட்டுப்படும்.                                   
47.   வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்துவர முடி நீண்டு வளரும்     
48.   மல்லிகைவேர்,வசம்பு சமனெடுத்து எலுமிச்சைசாற்றிலரைத்துப்பூசி, குளித்து வர தலைப்பொடுகு,தலைவலி தீரும்                             
49.   திரிபலா சூரணத்தை இரவில் காய்ச்சி காலையில் எலுமிச்சைச்சாறு விட்டு தலையில் தேய்த்துக் குளிக்க முடிஉதிர்தல் நிற்கும்.                 
50.   வெந்தயம்,குன்றிமனி பொடிசெய்து தே.எண்ணயில் 1வாரம் ஊறவிட்டு தேய்க்க முடிஉதிர்தல் நிற்கும்.                                 
51.   ஆலம்விழுதுக்கொழுந்து,,செம்பருத்திப்பூ பொடித்து தே.எண்ணயில் காய்ச்சி தேய்க்க முடி கறுக்கும்.                              
52.   மரிக்கொழுந்து,நிலாவாரை சமனரைத்துத் தடவிக் குளிக்க செம்பட்டை மாறும்.    
53.   கஞ்சாங்கோரை இலை,பூவுடன் வசம்பு சேர்த்தரைத்து தடவி 1மணி நேரம் ஊறவைத்துக் குளிக்க 10கால்பேன் நீங்கும்..  
54.   சீத்தாவிதைப்பொடியுடன் கடலைமாவு கலந்து பயன்படுத்த பேன் நீங்கும்                 
55.    சாம்பார்  வெங்காயம் (சின்ன வெங்காயம்)   அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிஷம் கழித்து  குளிக்க  பொடுகு  மறையும்                                                                                                                  
56.   பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்த்து 15 நிமிஷம் கழித்து குளிக்க பொடுகு மறையும்
57.   தலையில் தயிர் தேய்த்து குளிக்க பொடுகு மறையும்                                                                           
58.   வாரம் ஒரு முறை நல்லண்ணை தேய்த்து குளிக்க பொடுகு மறையும்                 
59.   பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிக்க பொடுகு வராது.              
60.   வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளிக்க பொடுகு தொல்லை தீரும், உஷ்ணமும் குறையும்.                                                                                                                                                             
61.   அருகம்புல் சாறுடன், தேங்காய் எண்ணை சேர்த்து நன்றாக காய்ச்சி, ஆற வைத்து தினசரி தலையில் தேய்த்துவர பொடுகு மறையும்.                                                                       
62.   வேப்பிலை சாறும், துளசி சாறும் கலந்து தலையில் தேய்க்க பொடுகு மறையும் 
63.   வசம்பு பவுடரை தேங்காய் எண்ணையில் ஊற வைத்து தேய்க்க பொடுகு மறையும்                                                                                                                                                                            
64.   தலைக்கு குளித்த பின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் காடியை (வினிகர்) தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன் பின்பு துவட்டி கொள்ள பொடுகு மறையும்                                                                                                                                                                                          
65.   மருதாணி இலையை அரைத்து அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு  சேர்த்து தலையில் தேய்க்க பொடுகு மறையும்                                                                             
66.   வேப்பிலையுடன் சிறிது மிளகு சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து 1 மணி நேரம் ஊற வைத்து குளிக்க பொடுகு மறையும்                                                                    
67.   தேங்காய் எண்ணையுடன், வேப்பெண்ணையும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வர பொடுகு நீங்கும்.                                                                                                                                                                  
68.   நெல்லி முள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊற வைத்து, அரைத்து, தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, நன்கு அலச பொடுகு மறையும்.                                                                                                                                                        
69.   நீலகிரி தைலத்தை சூடாக்கி தலையில் தடவி, வெந்நீரில் ஒரு பெரிய துவாலையை நனைத்து தலையில் கட்டி பிறகு நன்கு அலசி விட பொடுகு மறையும்         
70.   தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வர  பொடுகு மறைந்து விடும்.                                                    
71.   வேப்பம்பூ 50 கிராம்,100 கிராம் தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி இளம் சூட்டில் வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளிக்க, பொடுகு தீரும்.                                       
72.   ஆலிவ் எண்ணெயுடன், இஞ்சிச்சாறு சேர்த்து நன்றாக கலந்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து குளித்து வர பொடுகு குறையும்.                                                        
73.   பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டுவர நரைமுடி கருமையாக மாறும்.                   
74.   வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வர முடி கொட்டுவது நிற்கும்                 
75.   கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வர வழுக்கை மறையும்.                                         
76.   நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வர இளநரை மாறும்.       
77.   காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
78.   அதிமதுரம் 20 கிராம், 50 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க தலை முடி கருமை மினுமினுப்பு பெறும்
79.   மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவ செம்பட்டை முடி நிறம் மாறும்
80.   தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வர நரை மாறும். முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.
81.   கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்க முடி வளரும்.                                                                    
82.   காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தேய்க்க முடிவளரும்
83.   நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.
84.   நவச்சாரத்தை தேனில் கலந்து தடவ திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.
85.   1 கோப்பை நல்லெண்ணெயில் 7, 8 பூண்டை நசுக்கிப் போட்டு நன்றாகக் காய்ச்சி 1 மூடி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து பூச்சிவெட்டு இருக்கும் இடத்தில் 2 சொட்டு தேய்த்து வர, முடி வளர ஆரம்பிக்கும்.                                         
86.   அதிமதுரத்தை நன்கு அரைத்து, பால் மற்றும் குங்குமப்பூவைக் கலந்து இரவில் படுக்கும்முன் தடவிக் காலையில் குளிர்ந்த தண்ணீரில் அலச வழுக்கை மறையும்.
87.   துவரம் பருப்பை நன்கு அரைத்து தினமும் தடவி ஊறவைத்து குளிக்க வழுக்கை மறையும்                                                                                                           
88.   தேங்காய் எண்ணெயை எலுமிச்சை சாற்றில் கலந்து, கூந்தலுக்கு தடவி குளித்து வர, முடிஉதிர்தல் கட்டுப்படும். கூந்தலும் நன்கு வளரும்.
89.   உளுந்து மற்றும் வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலைக்கு தடவி ஊறவைத்து குளிக்க முடி நீளமாக வளரும்.
90.   ஆமணக்கெண்ணெயை தினமும் தலைக்கு தடவ கூந்தலானது அழகாக, அடர்த்தியாக வளரும்.
91.   5, 6 வேப்பிலையுடன், கொட்டையுடன் கூடிய 4 வேப்பம்பழத்தை சேர்த்து அரைத்து, தலைக்கு தேய்த்து வாரம் ஒருமுறை குளித்து வர முடி கருகருவென்று வளரும்.
92.   மருதாணி இலையை அரைத்து எண்ணெயில் போட்டு காய்ச்சி பூசி வர, இளநரை விரைவில் நீங்கும்.
93.   கறிவேப்பிலையை சமைக்கும் உணவில் அதிகம் சேர்த்து, சாப்பிட உடலில் இரும்புச்சத்து அதிகமாகி கூந்தல் கருமையாக வளரும்.
94.   நான்கு தேகரண்டி மருதாணிப் பொடி, இரண்டு தேகரண்டி காபி அல்லது டீ டிகாஷன், ஒரு முட்டை, அரை தேகரண்டி விளக்கெண்ணெய் ஆகியவற்றை கலந்து, தலையில் நன்றாக தேய்த்து, ஒரு மணிநேரம் ஊற வைத்துப் பின் கூந்தலை குளிர்ந்த நீரில் அலச இளநரையானது படிப்படியாக குறையும்.
95. கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி, தடவி வர இளநரை வராமல் இருக்கும்.
96. வெள்ளை கரிசாலையை நன்கு காய வைத்து, அரைத்து பொடி செய்து, ஒரு மாதம் இளநீரிலும், ஒரு மாதம் தேனிலும் கலந்து உண்ண  இளநரை மாறும்.
97. தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து தலைக்கு பூசி நன்கு தேய்த்து, குளித்து வர, இளநரை மாறும்.
98. தேநீர் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளிக்க, தலைமுடி பளபளப்பாகும்.
99. கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவி  பிறகு தலைக்கு ஊற்ற எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
100.         கறிவேப்பிலை, கொட்டை நீக்கிய நெல்லிக்காய், செம்பருத்திப் பூ. சமஅளவு எடுத்து தண்ணீர் சேர்த்து அரைத்தனுடன், வடித்த கஞ்சியை கலந்து தலையில் நன்றாக தேய்த்து (வாரம் ஒருமுறை) அலச பிசுபிசுப்பு நீங்கும்.    
101.         மருதாணி 1 பிடி, கறிவேப்பிலை 1 பிடி, செம்பருத்தி இலை 1 பிடி, கொட்டை நீக்கிய பூந்திக் கொட்டை 4 முந்தைய நாளே ஊற வைத்து, மறுநாள் அரைத்து, தலைக்குத் தேய்த்து அலச (வாரம் ஒரு முறை)தலை சுத்தமாகி, கூந்தல் மணம் பெறும்.
102.                        வெண்டைக்காயை நசுக்கி தலைக்குத் தேய்த்து அரை மணிநேரம் கழித்துக் குளிக்க பொடுகு குணமாகும்.
103.                        மருதாணி செம்பருத்தி கருவேப்பிலை மூன்றையும் சம அளவில் எடுத்து மையாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர நரைமுடி கருப்பாகி விடும்
104.                        வேம்பாளம் பட்டை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வர இளநரை நீங்கும்..
105.                        நெல்லி முள்ளி, கரிசலாங்கண்ணி, அதிமதுரம் சம அளவு சேர்த்து, அரைத்து தேய்த்து ஊறவைத்துக் குளித்து வர இளநரை நீங்கும்
106.                        கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க இளநரை நீங்கும்
107.                        சீரகம், வெந்தயம், வால் மிளகு,சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவிவர இளநரை மாறும்..
108.                        வால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளிக்க பொடுகு நீங்கும்.
109.                        ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.
110.                        அரை கிலோ நல்லெண்ணையை காய்ச்சி இறக்கியதும், அதில் 50 கிராம் பச்சை கறிவேப்பிலையை போட்டு மூடி வைத்து மறுநாள் இந்த எண்ணையை மிதமாக சூடு பண்ணி, தலையில் நன்றாக தேய்த்து சியக்காய் போட்டு அலச(வாரம் இருமுறை), நரைமுடிகள் கருமைக்கு மாறிவிடும்.
111.                        ஒரு பிடி கறிவேப்பிலையை அரைத்து அந்த சாறில், 3தேகரண்டி வெந்தய பவுடரை கலந்து தலைக்கு ஊறவைத்து, காய்ந்த பிறகு அலச (வாரம் ஒருதடவை ) இளநரை நீங்கும்.
112.                        சோற்று கற்றாழை பிசினுடன் சம அளவு கறிவேப்பிலை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிடம் கழித்து தலையை அலச தலை குளிர்ச்சியாவதுடன், முடிகருகரு வென வளரும்.
113.                        சுருள் பட்டை  10 கிராம், பிஞ்சுக்கடுக்காய்  10 கிராம், வெந்தயம்  10 கிராம், கறிவேப்பிலை  10 கிராம், செம்பருத்தி பூ  10 கிராம், ரோஜா மொட்டு  10 கிராம்இவற்றை ஒன்றிண்ரடாக சிதைத்து,  அரை கிலோ தேங்காய் எண்ணெயில், பத்து நாட்கள் வெயிலில் வைத்து எடுத்து, தினமும் தடவி வர சகல பிரச்னைகளும் தீர்ந்து, முடி ஆரோக்கியமாக இருக்கும்.
114.                        நெல்லிக்காய், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லி வத்தல் சாப்பிட்டு வர இளநரை மறையும்.
115.                        முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவ முடி வளரும்
116.                        கசகசாவை பாலில் ஊற வைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
117.                        கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்து வர முடி உதிராது அடர்த்தியாக நன்றாக வளரும். தலையும் குளிர்ச்சியாகும்.
118.                        சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊற வைத்து குளிக்க முடி உதிராது.
119.                        செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து  தேய்த்துவர முடி உதிராது. கருமையாகவும் மாறும்.
120.                        முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சீகக்காய் போட்டு குளிக்க தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
121.         முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் (வாரம் ஒருமுறை) தொடர்ந்து மூன்று மாத காலம் குளிக்க முடி கொட்டுவது நின்று விடும் நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.
122.         முசுமுசுக்கை இலை சாறு, சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி  தேய்த்து குளித்து வர இளநரை மாறும்.
123.         தேங்காய் எண்ணெய் 100 மிலி,சோம்பு 1/2 தேகரண்டி, சீரகம் 1 தேகரண்டி,சின்ன வெங்காயம் 3, கறிவேப்பிலை 2 இணுக்கு, கொத்தமல்லி சிறிதளவு,நெல்லி வற்றல் 10 கிராம், வெட்டிவேர் 5 கிராம் இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வர  இளநரை நீங்கும்.
124.         வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து,அரைத்து, தலைமுடி வேரில் தடவி, சில மணிநேரம் கழித்து சீகக்காய் கொண்டு முடியைக் கழுவ பொடுகுத் தொல்லை குறையும்.
125.         மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்
126.         வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து முடி வேர்க் கால்களில் தடவி நன்கு ஊறியபின் அலச முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

கருத்துகள் இல்லை: