வெள்ளை வெட்டையின் குணம்;
பித்த மேகமானால் மஞ்சள்போலும்,
வாத மேகமானால் வெண்மையாயும்,
கப மேகமானால் மயிலின் நிறம் போலும் காணும்.
வாதம் அதிகமிருப்பின் வெள்ளை மிகக் காணும்,தாது நஷ்டமாகும்.
வாய்வும் பித்தமும் சேர்ந்தால் ஞானத்தில் வெந்து எரிவு வலி காணும்.நீர்கட்டித் துளிதுளியாய் விழும், சில நேரம் பளிச் சென்று நீர் இறங்கும்,கல்லடைக்கும்.
வாயுவோடு கபம் சேர்ந்தால் நீர் பொசியாது,வெள்ளை விழாது,புகைச்சல்,இருமல், இளைப்புண்டாகும்.
வாதம் அதிகமிருப்பின் வெள்ளை மிகக் காணும்,தாது நஷ்டமாகும்.
வாய்வும் பித்தமும் சேர்ந்தால் ஞானத்தில் வெந்து எரிவு வலி காணும்.நீர்கட்டித் துளிதுளியாய் விழும், சில நேரம் பளிச் சென்று நீர் இறங்கும்,கல்லடைக்கும்.
வாயுவோடு கபம் சேர்ந்தால் நீர் பொசியாது,வெள்ளை விழாது,புகைச்சல்,இருமல், இளைப்புண்டாகும்.
- அன்னபேதி செந்தூரம் 2 00மிகி, 5-10மிலி தேனில் கலந்து தினம்2வேளை கொள்ள வெள்ளைப்படுதல் தீரும்.
- நீர்முள்ளிக் குடிநீர்100மிலி, 200மிலி வெந்நீரில் தினம்3வேளை கொள்ள வெள்ளைப்படுதல் குணமாகும்
- 10 கிராம் கசகசாவை அரைத்து 10மிலி பாலில் கலந்து தினமிருவேளை கொள்ள வெள்ளைப்படுதல் குணமாகும்
- 35 கிராம் வெள்ளருகை 4ல்1ன்றாய் காய்ச்சி வடித்து 50மிலி தினமிரு வேளை கொள்ள வெள்ளைப்படுதல் குணமாகும்.
- நன்கு கழுவிய சோற்றுக்கற்றாழை மடல் தினம் 2துண்டு காலையில் சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் குணமாகும்
- அரிவாள்மனைப்பூண்டு வேர்பட்டை சூரணத்துடன் பால், சர்க்கரை கலந்து சாப்பிட வெள்ளைப்படுதல் குணமாகும்
- அவுரிவேர்,யானைநெருஞ்சில் இலை,சமனரைத்து,எலுமிச்சைஅளவு,காலை மோரில் பருக வெள்ளைப்படுதல் குணமாகும்
- ஆவாரை பூவிதழ்சூரணம் 0.5கிராம், 2கிராம் வெண்ணையில் குழைத்துச் சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல்,சிறுநீரெரிச்சல் குணமாகும்
- ஓரிதழ்தாமரையிலை,கீழாநெல்லியிலை,யானைநெருஞ்சியிலை சமனரைத்து, 200 மிலி எருமைதயிரில், காலையில் சாப்பிட்டுவர வெள்ளைப்படுதல் குணமாகும்
- கல்யாணபூசனி சதையுடன் சமன் செம்பரத்தை பூவிதழ் சேர்த்தரைத்து,சிறிது சர்க்கரை கலந்து 25கிராம் காலையில் சாப்பிட்டுவர வெள்ளைப்படுதல் குணமாகும்
- கைப்பிடி கீழாநெல்லியை சிதைத்து 2ல்1ன்றாய்க் காய்ச்சி 200மிலி தினமிரு வேளை பருகிவர வெள்ளைப்படுதல் தீரும்
- குங்கிலியத்தை நெய்யில் பொரித்து,நீரில் குழைத்து 0.5தேக்கரண்டி சாப்பிட்டுவர வெள்ளைப்படுதல் குணமாகும்
- சங்குப்பூவேர்,கீழாநெல்லி சமூலம்.யானைநெருஞ்சியிலை,அருகம்புல் சமனெடுத்து 5மிளகு சேர்த்தரைத்து,நெல்லிக்காயளவு,தயிரில் கொள்ள வெள்ளைப்படுதல்,நீரெரிச்சல் குணமாகும்
- சிறுசெருப்படை சமூலம் 20கிராம் சிதைத்து 4ல்1ன்றாய் காய்ச்சி வடித்து 30மிலி, பனைவெல்லம் சேர்த்து தினம் 4வேளை பருக வெள்ளைப்படுதல், சிறுநீரெரிச்சல் குணமாகும்
- திருநீற்றுப்பச்சை இலைச்சாறு 2தேகரண்டி, 200மிலி பச்சைப்பசும்பாலில், காலையில் சாப்பிட்டுவர வெள்ளைப்படுதல் குணமாகும்
- துத்தி இலைகளை நெய்யில் துவட்டி அல்லது காரமின்றி பொரியலாக செய்து நீடித்து சாப்பிட்டுவர வெள்ளைப்படுதல் குணமாகும்
- சிறுநெருஞ்சில் சூரணம் 0.5-1 கிராம், 200மிலி மோரில் தினமிருவேளை பருகிவர வெள்ளைப்படுதல் குணமாகும்
- யானைநெரூஞ்சில் இலை அரைத்து, 200மிலி எருமைத்தயிரி ல் தினம்2வேளை கொள்ள வெள்ளைப்படுதல் குணமாகும்
- பொடுதலை இலையுடன் சமன் சீரகம் சேர்த்தரைத்து,நெல்லிக்காயளவு எருமை தயிர் அல்லது வெண்ணையில் சாப்பிட்டுவர வெள்ளைப்படுதல் குணமாகும்
- மருதோன்றி இலைச்சாறு 6தேகரண்டி தினம் காலையில் சாப்பிட்டுவர வெள்ளைப்படுதல் குணமாகும்
- 50 ரோஜாப்பூவிதழ்களை, 500மிலி வெந்நீரில் 12 மணிநேரம் ஊறவைத்து, வடித்து. 50கிராம் சர்க்கரை சேர்த்து பாதியாய் சுண்டக்காய்ச்சி, 25மிலி பன்னீர் சேர்த்து, 3 வேளையாக இதனை குடிக்க வெள்ளைப்படுதல் குணமாகும்
- வெந்தயத்தை தூள்செய்து காலைமாலை வெந்நீரில் கொள்ள வெள்ளைப்படுதல் குணமாகும்.
- கைப்பிடி வெள்ளருகுச்சமூலம், 3மிளகு, 1பல்பூண்டு சேர்த்தரைத்து, 200 மிலி மோரில், காலையில் பருகிவர வெள்ளைப்படுதல் குணமாகும்
- திரிபலாசூரண குடிநீர்கொண்டு உறுப்பை சுத்தம்செய்துவர வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.
- தேற்றான்கொட்டை சூரணம் 1கிராம் பாலில்கலந்து தினமிருவேளை பருகிவர நீர்க்கட்டு,நீரெரிச்சல்,வெள்ளை,மூலம் தீரும்.
- அருகம்புல் கைப்பிடி, 10மிளகு சேர்த்திடித்து 4ல்1ன்றாய்க்காய்ச்சி, வடித்து, இளம் சூட்டில் பனங்கற்கண்டு சேர்த்து,தினமிருவேளை 200மிலி பருகிவர உடலரிப்பு, நமைச்சல், வெள்ளை,வியர்வை நாற்றம் நீங்கும்.
- ஆவாரை பூக்களை பாலில் வேகவைத்துலர்த்தி.பொடித்து,சர்க்கரை சேர்த்துப் பாலில் பருகிவர வெள்ளை,நீர்எரிச்சல்,நீர்கடுப்பு,உள்ளங்கால் எரிச்சல் குணம் ஆகும்.
- அசோகமரப்பட்டைச்சாறுடன் சிறிது தேன் கலந்து அருந்த பெரும்பாடு. வெள்ளை கட்டுப்படும்.சூதகவலி குறையும்
- கட்டுக்கொடி இலைச்சாற்றுடன் எருமைமோர் கலந்துண்டுவர நீர்எரிச்சல், வெள்ளை குணமாகும்.
- பொரித்த சீனாகாரம் சமன் நெல்லிதோடு,பொடித்து கற்கண்டு சேர்த்து ,1 விராகனெடை தினம்3வேளை பசுமோரில் சாப்பிட்டுவர வெள்ளை தீரும்
- வாழைப்பூவை நசுக்கிச் சாறெடுத்து பனங்கற்கண்டு கலந்து பருகிவர வெள்ளைப்படுதல் குணமாகும்.
- வெள்ளெருக்கு,சின்னவெங்காயம்,சீரகம் சேர்த்தரைத்து தண்ணீரில் கரைத்து காலையில் பருகிவர வெள்ளைப்படுதல் குணமாகும்
- பூங்காவி,மாங்கொட்டை,வாய்விடங்கம்,மஞ்சள்,அஞ்சனம்,கட்பலா பொடித்து, தேனுடன் கலந்து கட்டியில் தடவ பெண்களுக்குண்டாகும் யோனிஸ்கந்தம் குணமாகும்
- திரிபலாசூரணத்தில் தேன்கலந்துபூச யோனிஸ்கந்தம் (பெண்குறியில்கட்டி) குணமாகும்.
- கீழாநெல்லி கஷாயம் மற்றும் நெல்லிக்காய்தூளில் பனைவெல்லம் கலந்து சாப்பிட வெள்ளைப்படுதல் தீரும்
- சுத்தம் செய்த சோற்றுக்கற்றாழை சோற்றுடன் கடுக்காய் அல்லது படிகாரத்தூள் கலந்து பாத்திரத்தில் சாய்வாக வைக்க சேகரமாகும் நீரை 5-10 மிலி தினம் அருந்தி வர உடற்சூடு, வெள்ளைபடுதல்,நீர்டுப்பு,நீர்எரிச்சல் தீரும்
- பழம்பாசியிலையும்,சீரகம் சேர்த்தரைத்து எருமைதயிரில் 3நாள் பத்தியத்துடன் சாப்பிட ஆரம்ப வெள்ளை தீரும்
- அருகம்புல்சமூலம் 30கிராம்,கீழாநெல்லிச் சமூலம் 15கிராம் அரைத்து தயிரில் கலந்து,காலையில் பருகிவர வெள்ளை, மேகஅனல்,உடல்வறட்சி, நீர்தாரை புண்ணால் கடுப்பு,நீருடன் இரத்தம் போதல் குணமாகும்.
- அரசுவேர்பட்டை 30 கிராம்,3ல்1ன்றாய்க் காய்ச்சி பால்,சர்க்கரை சேர்த்து 100மிலி பருகிவர வெட்டைச்சூடு,சொறி,தினவு,நீரெரிச்சல்,சிரங்கு தீரும்.
- செம்பரத்தைபூவை புளித்த தயிர் விட்டரைத்து, தயிரில் கலந்து உண்டுவர இரத்தவெள்ளை,பிரமியம்,பெரும்பாடு தீரும்.
- ஆலமரப்பட்டை,வேர்பட்டை,மொட்டு,கொழூந்து,விழுது.பழம் வகைக்கு 40கிராம், 4ல்1ன்றாய்க் காய்ச்சி,200மிலி காலைமாலை பருகிவர மேக எரிச்சல், மேகப்புண், மேக ஒழுக்கு(வெள்ளை) தீரும்
- முற்றின பிரண்டைச்சாறுடன் ஆமணக்கெண்ணை சேர்த்து 3 நாள் பருக மஞ்சள் வெள்ளை தீரும்.கடும் பத்தியம்.
- கொடிக்கள்ளி கொழுந்தை அரைத்து கெச்சைக்காயளவு, 3நாள் பத்தியத்துடன் கொடுக்க விரோசனமாகி,வெள்ளை,சொறிசிரங்கு,படைகள் தீரும்
- விஷ்ணுகிரந்திவேர் அல்லது அம்மான்பச்சரிசி அல்லது அல்லி விதை எலுமிச்சையளவு அரைத்துப் பசும்பாலில் 3நாள் கொடுக்க இரத்தவெள்ளை தீரும்
- விடத்தலைக் கொழுநதும் ஏலமும் அரைத்து எலுமிச்சையளவு, தயிரில் கொடுக்க இரத்தவெள்ளை தீரும்.
- மிளகை எலுமிச்சையளவு அரைத்து ந.எண்ணையில் மத்தித்து 3நாள் சாப்பிட சீவெள்ளை தீரும்
- .வெள்ளாட்டுப்பால், எலுமிச்சைசாறு,மாம்பட்டைசாறு சமனெடை கலந்து 3நாள் கொடுக்க வெள்ளை தீரும்
- 1பிடி கற்றாழைவேரை இளநீரிலரைத்துச் சீனி கலந்து 3நாள் கொடுக்க வெள்ளை தீரும்.
- பற்பாடகம் எலுமிச்சையளவு,சீனிகூட்டி ஆவின்பாலில் 3 நாள் கொள்ள வெள்ளை தீரும்
- காக்கரட்டான்வேரை பாலிலவித்து,பாலிலரைத்து, சுண்டைக்காயளவு காலை மாலை பாலில் சாப்பிட்டுவர மேகவெள்ளை,பிரமேகம்,தந்திமேகம், நீர்பாதை அழற்சி, நீர்எரிச்சல் தீரும்.
- கானாவாழை இலையுடன் சமன் கீழாநெல்லி சேர்த்தரைத்து, நெல்லிக்காயளவு, தினம் 3வேளை தயிரில் கொள்ள வெள்ளை தீரும்
- சந்தனத்தை அரைத்து 5-10கிராம் தொடர்ந்து இரவில் சாப்பிட்டுவர வெள்ளை, தந்திமேகம், பிரமேகம் தீரும்
- நத்தைசூரி விதையை வறுத்துப்பொடித்து,காய்ச்சி வடித்து பால்கற்கண்டு சேர்த்துப் பருக வெள்ளை,கல்லடைப்பு தீரும்.
- பிண்ணாக்கு கீரையை பருப்புடன் சமைத்து,நெய்யுடன் சாதத்தில் பிசைந்துண்ண உட்சூடு, வெள்ளை,சீதபேதி,இரத்தபேதி தீரும்
- மருதாணி இலை,விதை சமனரைத்து துணியில் முடிந்து கருவாயில் வைக்க வெள்ளை, பெரும்பாடு 3 -4நாளில் தீரும்.
- வில்வ இலைசூரணம் அரைதேகரண்டி,தினமிருவேளை வெண்ணை அல்லது நெய்யில் கொள்ள வெள்ளை,வெட்டை,மேகம்,நீர்தாரைஎரிச்சல் தீரும்
- செம்பருத்திபூவை அரைத்து,எலுமிச்சையளவு,பசும்பாலில் காலைமாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர ஒரே வாரத்தில் வெள்ளை குணமாகும்.
- சம்பங்கிபூவை கசாயம் செய்து காலைமாலை சாப்பிட்டுவர வெள்ளை குணமாகும்.
- 35கிராம் தென்னம்பூவை 2ல்1ன்றாய்க் காய்ச்சி காலை 1மண்டலம் சாப்பிட்டுவர வெள்ளை குணமாகும்.
- வெண்டை செடியின் வேரை பொடித்து இரவு ஊறவைத்து காலை பிசைந்து வடித்து பனைவெல்லம் கலந்து 21நாள் சாப்பிடவெள்ளை தீரும்.
- நன்கு பழுத்த வில்வப் பழத்தை தினம் 3-4 தடவை சாப்பிட்டுவர வெள்ளை தீரும்..பத்தியம் வேறு எதுவும் சாப்பிடக்கூடாது.
- எலுமிச்சம்பழச்சாறு,ந.எண்ணை வகைக்கு 150மிலி கலந்து 3நாள் காலையில் சாப்பிட வெள்ளை தீரும்.
- நாரத்தையிலை,மாம்பட்டை வகைக்கு 3கிராம் அரைத்து எருமைத்தயிரில் கலந்து 3நாள் சாப்பிட வெள்ளை தீரும்.
- கொடிக்கள்ளி கொழுந்தை அரைத்து எலுமிச்சையளவு,மிளகு32,அரைத்து கலந்து 3நாள் பத்தியத்துடன் கொடுக்க விரோசனமாகி,வெள்ளை,சொறிசிரங்கு,படைகள் தீரும். பத்தியம் மோரும் அன்னமும் கொள்ளவும்.
- வாழைப் பூவை இரசம் செய்து அருந்தி வர வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக