ஸ்திரீகள் சம்பந்தத்தாலுண்டான மேகம் கிரந்தி இவைகளால் 6 வித குட்டமும், மண்ணுளியன் முதலிய சர்ப்பக்கடி,எலி,பூச்சி கடிகளுண்டாவது 9 வித குட்டமும், ஜீவ வதை,மாதா,பிதாக்கள் மன நோக்காட்டாலும்,தெய்வ உருக்களை அழித்தலாலும்,பெரியோரை பங்கப்படுத்தி மனம் குன்றச் செய்வதாலும் 4வித குட்டமும் ஆக19 குட்டங்களின் காரணமென்றறிக.
தோலைப் பற்றிய 18வகை
சொரிப்படைகளைக் கூறுவது கிரந்தி என்று அறிக.
கருங்கிரந்திகுணம்: தேகத்தில் எரிவு தினவு கண்டு கறுப்பாய் தடித்ததில் அடிக்கடி செம்முளை போல் தோன்றி நீர்கட்டி வெடித்து வற்றி கறுமையான அசருண்டாகி உதிரும் தழும்பு கருப்பாயிருக்கும் சிலவேளை ரணமாய் இருக்கும்
செங்கிரந்திக்குணம்: தேகத்தில் செம்மை நிறமாய் வட்டவட்டமாய் தடித்துப் படர்ந்து இவற்றின் மத்தியில் வெண்மையாய் சுற்று ஓரங்களில் முளைமுளையாய்ச் சீழ்கட்டி வற்றிச் சிவந்து சருகுபோல் உதிர்ந்து தழும்பு சிவப்பாய் இருக்கும்
அரிகிரந்திகுனம்;தேகத்தில் சிறுசிரங்குபோல் தோன்றி படர்ந்து மாறாத்தினவு அரிப்பு காணும்.
ஆலங்காய்கிரந்திகுணம்;தேகாதியந்தமும் கழற்காய்போல் தோன்றி ஒவ்வொன்றாய் வெடித்துப் புண்ணாகும்.
கள்ளிப்பூகிரந்திகுணம்;கள்ளிப்பூபோல் தடித்து அரித்து இரணமாகும்.
பேய்ச்சொறியின் குணம்;அடிக்கடி தேகத்தில் தினவு கண்டு காசுபோல் தடித்துச் சிவந்து மறையும்.

நம் உடலில் உள்தோல்(enterdermis) வெளிதோல்(epidermis) களில்
வீக்கம்,எரிச்சல்,வலி உண்டு பண்ணுவதற்கு
டெர்மட்டிட்டிஸ்(dermatitis) என்று பெயர்.
படர்தாமரை(eczema);பலவகை
உண்டு. அழுகின்றஎக்ஸிமா (weeping eczema);சொறிந்த
இடங்களிலிருந்து நீர் வடியும் .
குடியேறும் எக்ஸிமா(migrating eczema);ஓர் இடத்தில்
குணமாகி மற்றோரிடத்தில் தோன்றும்.
எரிஸிப்பிலஸ்(erysipelas);தோலுக்கு அடியில் உள்ள நிணநீர்க்குழாய் பாதிக்கப்படுவதால் உடலில் எந்த இடத்திலும் தோன்றும். தோன்றிய இடத்தில் நமைச்சல்,எரிச்சல்,வலி மூன்றும் இருக்கும்.தோன்றும் முன் குளிர், காய்ச்சல், தோலில் தடிப்பு விறைப்பு. தோல் சிவத்தல்,வீக்கம், கொப்புளம் காணும்
எரீத்தமா(erythema) ;தோல் சிவந்து காணும்.அளவுக்கு மிஞ்சிய மது,அஜீரணம் போன்றவற்றால் உண்டாகும்.
இக்தியோசிஸ்(ichthyosis
);தடிக்கச்செய்து பாம்பு,மீன் போன்றவற்றிற்கு இருப்பது போல் செதில்களை
தோற்றுவிப்பது.
இம்பெட்டிகோ(Impetigo);முகம்,கழுத்து,கைகள் இவற்றில் கொப்புளங்களாக வெடித்து பொருக்குகளாக உதிரும். போஷாக்குக் குறைவினால் தோன்றும்.
எச்சில்தழும்பு(Ringworm/tinea);வட்டமாக தோல் மஞ்சள் நிறமாய் தோன்றி,நமைச்சல் உண்டாக்கி சொறிந்தால் உதிரும்.
ஸைக்கோஸிஸ் (sycosis/Barber's rash )
முகவாய்க்கட்டையில்
தோன்றும். நமைச்சல், எரிச்சல், வீக்கம்,வலி எல்லாம்
கலந்திருக்கும்.
ஷிங்கிள்ஸ் (Shingles/herpes
zoster);பெருங்குடலில்
உள்ள நச்சுநீர்கள் நரம்பு மண்டலத்தை தாக்குவதால் உண்டாகும்.4 நாட்களுக்கு
காய்ச்சல் இருக்கும். இறங்கும் போது வயிறு,முகம், நெஞ்சு,கைகளில்
மொச்சை அல்லது பட்டானியளவு கொப்புளங்கள் 10-20 தோன்றும். கொப்புளங்களைச்சுற்றி
வீக்கம்,எரிச்சல்
காணும். தாமாகவே உடைந்து சீழ் வடியும்.
1. பறங்கிப்பட்டை
சூரணமாத்திரை2
தினம்
மூன்று வேளை சாப்பிட்டு அருகன் தைலம் மேலே பூசிவர கரப்பான் குணமாகும். 2. வல்லாரைநெய் 5-10மிலி 5-10மிலி பாலுடன் கலந்து தினம் 2வேளை சாப்பிட்டு,அருகன்தைலம் சமன்
உளுந்துதைலம் கலந்து பூச தவளைச்சொறி குணமாகும்
3. பறங்கிபட்டைசூரணம்
1-2கிராம் 5-10மிலி பாலுடன் தினமிருவேளை கொண்டு திரிபலாசூரண
குடிநீர் கொண்டு சுத்தம் செய்துவர சொறிசிரங்கு
தீரும்
4. வேப்பிலையுடன்
மஞ்சள் சேர்த்தரைத்துப்பூச சொறிசிரங்கு குணமாகும்
5. அருகம்புல்லுடன்
மஞ்சள் சேர்த்தரைத்துபூச அடங்காத தோல் வியாதிகள் அடங்கும்.சொறி சிரங்கு,புண்கள்,படர்தாமரை,உடலரிப்பு குணமாகும்
6. குப்பைமேனியுடன்
உப்பு,மஞ்சள் சேர்த்தரைத்துப்பூசிவர
சொறிசிரங்கு,
தோல் வியாதிகள்
குணமாகும்
7. பொரித்த வெங்காரத்தை தே.எண்ணையில் குழைத்துப் பூச சொறிசிரங்கு குணமாகும்
8. ஆடுதீண்டாபாளை
இலைசாற்றுடன் சமன் தே.எண்ணை கலந்து காய்ச்சி
வடித்து பூச தோல் நோய்கள்,சிரங்கு,கரப்பான்,வண்டுக்கடி தீரும்
9. கஸ்தூரிமஞ்சள்தூளை
வெந்நீரில் குழைத்துப்பூசி குளிக்க தோல் நோய்கள், கரப்பான் தீரும். சருமம் பளபளக்கும்
10. கஸ்தூரி மஞ்சளுடன்
சமன் துளசி சேர்த்தரைத்து பூசி வெந்நீரில் குளிக்க தோல் நோய்கள் தீரும்
11. கஸ்தூரிமஞ்சள்தூள்
100-250மிகி வெந்நீரில் சாப்பிட்டுவர சொறிசிரங்கு குணமாகும்.வியர்வை நாற்றம் நீங்கும்.
12. குடசப்பாலைபட்டையை
நெல்லிக்காயளவரைத்து, 400மிலி நீரிலிட்டுக் காய்ச்சி பருகி பட்டைச்சாறுடன் சமன் தே.எண்ணை கலந்து காய்ச்சி
வடித்துப் பூச தோல்நோய்கள், கரப்பான், சிரங்கு குணமாகும்.
13. கோவைஇலை சாற்றுடன்
சமன் தே.எண்ணை கலந்து காய்ச்சி வடித்துபூசி, இலையை சிதைத்து 2ல்1ன்றாய் காய்ச்சி தினமிருவேளை பருகியும் வர சொறி சிரங்கு
குணமாகும்.
14. நுணா இலைகளையரைத்துப்பூச
புண்கள், சிரங்குகள் குணமாகும்.
15. நல்வேளை விதையெண்ணையை
பூசிவர சொறிசிரங்கு,புண்கள்
குணமாகும்
16. நிலவேம்பு சமூலத்தையரைத்துப்பூசி, ஊறவைத்துக் குளிக்க
வண்டுக்கடி,
சொறி
சிரங்கு குணமாகும்
17. நிலாவாரை கஷாயத்தால் கழுவ சொறி சிரங்கு குணமாகும்
18. வெள்ளருகு சமூலத்தையரைத்து
,வெந்நீரில் குழைத்து பூசி 1மணிநேரம் கழித்து கழுவ சொறிசிரங்கு,ஊறல்,தோல்நோய்கள் கட்டுப்படும்
19. முட்சங்கன் இலையை அரைத்துப்பூச
காயம்,சொறிசிரங்கு குணமாகும்
20. ஆவாரைபூவுடன் சமன்
பச்சைபயறு சேர்த்தரைத்து வெந்நீரில் குழைத்துப் பூசி ஊறவைத்துக் குளிக்க தோலரிப்பு,நமைச்சல் குணமாகும்
21. தொட்டாற்சுருங்கி
இலைசாற்றை பூசிவர ஒவ்வாமை,தோல்தடிப்புகள்
குணமாகும்
22. ஆவாரம் பூச்சூரணத்தை
பாலில் கலந்து பருகிவர உடல்சூடு,தோல்வறட்சி நீங்கி பலம் பெறும்
23. ஆவாரைபூக்களை கூட்டு
அல்லது குடிநீர் செய்து உண்டுவர தோல்வறட்சி நீங்கும்
24. வெப்பாலை இலைகளை தே.எண்ணையில் சூரியபுடமிட்டு,தடவி வர செல் உதிர் படை (சோரியாசிஸ்)போன்ற தோல்வியாதிகள் குணமாகும்
25. கடுகுஎண்ணையை பூசி வர கிரந்திப்புண், தோல் வியாதிகள்
குணமாகும்
26. கைபிடி அவுரி இலைகளை
2ல்1ன்றாய் காய்ச்சி
தினமிருவேளை 200மிலி பருகிவர கானாக்கடி,ஒவ்வாமை,தோல்நோய்கள் குணமாகும்
27. கல்யாணமுருங்கைபட்டை
கஷாயம் கொண்டு கழுவிவர புண்கள், தோல் நோய்கள் குணமாகும்
29. சீமையகத்தி வேரை எலுமிச்சைசாற்றிலரைத்து பூச தோல்நோய்கள் குணமாகும்
30. மரமஞ்சள் கட்டையை பாலிலூறவைத்து அரைத்துப்பூச தோல்நோய்கள் குணமாகும்
31. வேப்ப எண்ணயை பூச தோல்நோய்கள் குணமாகும்
32. நாயுருவி வேர் அல்லது இலைகளையரைத்துப் பூசிவர கொப்புளம்,சிரங்கு குணமாகும்
33. காட்டுமல்லிகை இலையை அரைத்துப்பூச வெண்குஷ்டம் குணமாகும்

34. கைப்பிடிஅருகம்புல்,10மிளகு சேர்த்திடித்து ஒன்றாய்க்காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து,200 மிலி, தினமிருவேளை இளம்சூட்டில் பருகிவர உடல்அரிப்பு , நமைச்சல், வியர்வைநாற்றம், வெள்ளை ஆகியன நீங்கும்
35. உப்பை பொடித்து அரிப்பு ஏற்படும் இடத்தில் நன்றாக தேய்த்து 1மணி நேரம் கழித்து குளிக்க அரிப்பு அடங்கும்
36. கைப்பிடி கரிப்பான் இலைகளுடன் 10மிளகு சேர்த்தரைத்து தே.எண்ணை யில் குழைத்துப் பூச சிரங்கு குணமாகும்
37. புங்கம்பூ,புளியம்பூ,சீரகம்,நன்னாரிவேர்,வெப்பாலைஅரிசி,வசம்பு வகைக்கு 370 கிராம் ,1லி பசும்பாலிலரைத்து,1லி ந.எண்ணெயில் கலந்து, காய்ச்சி வடித்து 1/2-1தேகரண்டி காலையில் மண்டலம் கொள்ள சகல கரப்பானும், தோல் வியாதிகளும் தீரும்

38. புங்கவேர்,சிற்றாமணக்குவேர்,சங்கன்வேர் வகைக்கு 40கிராம்,பூண்டுச்சாறு அரை
லிட்.,
வி.எண்ணை 2லி,வாதரசுவேர்பட்டை20கிராம் ,கடுகுரோகிணி 10 கிராம் இடித்துப் போட்டு 15நாள்
சூரியபுடமிட்டு,காலை1தேகரண்டி
பருகிவர சருமரோகம்,சொறிசிரங்கு,கரப்பான்,புண்புரைகளும் தீரும்
39. மஞ்சளை கோமியத்திலரைத்துபூச சொறிசிரங்கு தீரும்
40. குப்பைமேனி இலைகளை கீரையாக சமைத்துண்ண நமைச்சல்,அரிப்பு நீங்கும்
39. மஞ்சளை கோமியத்திலரைத்துபூச சொறிசிரங்கு தீரும்
40. குப்பைமேனி இலைகளை கீரையாக சமைத்துண்ண நமைச்சல்,அரிப்பு நீங்கும்
41. குப்பைமேனி சாறுடன்
சமன் ந.எண்ணை கலந்து காய்ச்சி
கடுகு திரளும் பதத்திலெடுத்துப் பூச
வலி,வீக்கம்,சொறிசிரங்கு தீரும்
42. நன்னாரி வேரூறல் குடிநீர் 30மிலி தினமிருவேளை பருகிவர வாதநோய், தோல் நோய் தீரும்
42. நன்னாரி வேரூறல் குடிநீர் 30மிலி தினமிருவேளை பருகிவர வாதநோய், தோல் நோய் தீரும்
43. சிவனார்வேம்பு
சமூலக் குடிநீர் பருகிவர சோரியாசிஸ்(செல்உதிர்படை) போன்ற நாட்பட்ட தோல்நோய்கள் நீங்கும்
44. சிவனார்வேம்பு
சமூலச்சாம்பலை தே.எண்ணையில் குழைத்துப்பூச பூஞ்சை தொற்றால்
ஏற்படும் தோல்நோய் தீரும்
45. சிவனார்வேம்புவேரை
ந.எண்ணையில் காய்ச்சிபூச
சொறிசிரங்கு,படைகள் குணமாகும்
46. பிரம்மதண்டு இலையை
அரைத்துப்பூச சொறிசிரங்கு,படை குணமாகும்
47. மல்லிகை இலையை
அரைத்துப்பூசிவர சொறிசிரங்கு குணமாகும்
48. பீட்ரூட் சாறுடன்
படிகாரத்தை பொடித்துக் கலந்து தடவிவர உடலில்
எரிச்சல்,அரிப்பு குணமாகும்
49. தேள்கொடுக்கிலைச்சாறு
பூசிவர சொறிசிரங்கு புண் ஆறும்
50. கிரந்திநாயகம்
இலைகளை கசக்கி தேய்க்க
ஊறல்.அரிப்பு, கானாக்கடி, சிறுவிஷம் தீரும்
51. மஞ்சணத்திக்கொழுந்தை இடித்த சாறு வேளைக்கு அரைக்கால்படி வீதம்
3நாள் சாப்பிட எச்சிக்கிரந்தி தீரும்
52. கள்ளிக்கொழுந்தை
பிட்டவித்து சாறுபிழிந்து அதில் நல்லெண்ணை சிறிது கலந்து 3நாள் கொடுத்து 6நாள்
பத்தியமிருக்க செங்கிரந்தி,கருங்கிரந்தி,தடிப்பு
தீரும்.
53. வாகைக்
கொழுந்தை இடித்து 150மிலி சாறுபிழிந்து சிறிது நல்லெண்ணை கலந்து 3நாள் கொடுத்து
6நாள் பத்தியமிருக்க கள்ளிப்பூகிரந்தி குணமாகும்
54. வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும்
தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
55. பூவரச மரத்தில் காய்களை அம்மியில் உரசி வரும் மஞ்சள் நிறப்
பாலை தேமல் உள்ள இடங்களில் பூசி வர தேமல் அகலும்.
56. கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும்
உடம்பிற்கு தேய்த்து குளித்து வர தேமல்,படை,குணமாகும்
57. அருகம்புல்,
கஸ்தூரிமஞ்சள், மருதோன்றி அரைத்து பூச தேமல் குணமாகும்.
58. 100மிலி நீரில் 5 கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு
கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பால் சர்க்கரை
சேர்த்து குடித்துவர தேமல் குறையும்.
59. நாயுருவி இலைச் சாற்றை தடவி வர தேமல், படை குணமாகும்.
60. எலுமிச்சை தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவு பொரித்த
படிகாரத்துடன் தண்ணீர் சேர்த்து குழைத்துப் பூசி குளித்து வர தேமல் குறையும்.
61. மஞ்சள் இடித்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தேய்த்து வர
தேமல் குறையும் .
62. எலுமிச்சை பழச்சாற்றை தேய்க்க தேமல் மறையும்.
63. சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து பூசி வர
தேமல் நீங்கும்
64. துளசி இலை, வெற்றிலை எடுத்து அரைத்து பூச தேமல் நீங்கும்.
65. அருகம்புல், கஸ்தூரிமஞ்சள், மருதோன்றி அரைத்து பூச தேமல்
குணமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக