தாய் தந்தை மனம் நோக பேசல்,அவர்கள்
பயமுற தண்டிக்க முயல்தல், மனிதரை வம்பு செய்தல்,ஆங்காரத்தால் அகந்தை இடும்பு செய்தல்,பொய்
பேசல், இவைகளால் பாண்டு,மகோதரம்,பெருவயிறு வந்தணுகும்.மேலும் ஜீவருக்கு நஞ்சிடுதலாலும்
ரோகம் சம்பவிக்கும்.
மாதர்கள் சம்போகத்தால் நோய் விளைவிப்பது
பிரமியம்.
காரணங்கள்;
பலமாதர்களிடத்தும்,வேசியர்களிடத்தும்,பிணியாளோடும் போகிப்பதாலும்,ஓயாத அனுபோகத்தாலும், மூலத்தில் அக்கினி கொண்டு தாதுகெட்டு,பிரமியங்கள், நீரடைப்பு, சதையடைப்பு,வெள்ளை,வெட்டை,கிரந்தி,சூலை, அரையாப்பு ,பவுத்திரம், பிரமேகம், கிருச்சனம்,கல்லடைப்பு,நீரிழிவு முதலான மேக ரோகங்கள் சம்பவிக்கும்.
மூத்திரப்பை வீங்குவதாலும், சுருங்குவதாலும்
உண்டாகும் பலவகை நோய்கள்; நீராம்பல்,மகோதரம்,மதுமேகம்,மேகம்,வெள்ளை,வெட்டை,கொறுக்கு,கிரந்தி, அரையாப்பு,இரத்த
அழுத்தம்,மயக்கம்,இராஜகட்டிகள்,
மேகப்புண்கள், யோனிப்புற்று, இலிங்கப்புற்று
உஷ்ணத்தால் உண்டாகும் சிறுநீரக
நோய்கள் ;நீர்சுருக்கு,நீராம்பல்,
மஞ்சள் காமாலை, ஊதுகாமாலை,பித்தசோகை,பித்தபாண்டு.
மகோதரம் ;
நீர்ப்பை,கல்லீரல்,இருதயம் கெடுவதால் உண்டாகும்.வயிறு,கால்,கை வீங்கும்.
இரத்தபிரமியகுணம்;நீர்த்தாரையில் கடுப்பும்,குத்தலும் கண்டு இரத்தம் விழும்,உடல்
உஷ்ணமாயிருக்கும்,கைகால் அயர்ந்து வரும்.
சுக்கிலபிரமியத்தின் குணம்;நீர்த்தாரையில்
சுருக்சுருக் என்று குத்தி சுக்கிலம் விழும்.
சீழ்ப்பிரமியத்தின் குணம்;நீர் கடுத்து எரியும்,சீழ்விழும்,உடல் மெலியும்.
கிருச்சனத்தின்குணம்;நீர்தாரை புண்ணாகி நொந்து வீங்கிக்
கடுகடுத் தெரியும், ஜலம் வருவது போலிருக்கும் இறங்காது,இறங்கினால் ஒவ்வொரு துளியாய் விழும். அப்போது சகிக்க முடியாத வேதனையும்
மயக்கமும் காணும்,ஒருவேளை மஞ்சள் போலும்,இரத்தம் போலும்,சுக்கிலம் போலும் இறங்கும்,தொப்புளினடி கனத்து நோகும், வயிறு பொருமும்,அபானங் கடுக்கும்,அன்னம் செல்லாது,உடல் மெலியும்.
மாதர் போகங்களால்
விளைவது மேகம்.
பிரமேக நீரிழிவு வரக் காரணம்; கோதையர் கலவியை மிக
விரும்புவதால் மூலத்தில் கனல் மிஞ்சி,மேகஞ் சனித்து, சிரம் வரை வெந்துருகி,தாது கெட்டு,ஆக்கை நரம்பெல்லாம் பலங்குறைந்து, பிரமேகநீர், நீரிழிவு உண்டாகின்றன.இக்காலத்தில் மீன்,இறைச்சி,நெய்,பால் மிக விரும்பினால் பிணி
அதிகரிக்கும்.
அவயக்குறிகள்; உடல் மெலியும்,வெளுக்கும்,முருக்கும்,வியர்க்கும்,நோகும்,முகம்,கைகால் காந்தும், நகம் பிரியும்,கண் வெளுக்கும்,நெஞ்சுலரும், நாவரளும், தாகமிகும், ஆயாசங் களைப்புண்டாகும்,இரவும் பகலும் நித்திரை வரும்,அன்னஞ் செல்லாது. பிரமேக நீர் 20ன் விவரம்.
வாதத்தில் 4, பித்தத்தில் 6, சிலேத்மத்தில் 10. வாத பிரமேகநீர் 4ன் குணம்: மூளை போலும், இளநுங்கு போலும், நிணம் போலும், இறுகின சளிபோலும்,முதிர்ந்த சுக்கிலம் போலும் ,நீள நரம்பு போலும் நீரில் தோன்றும் நல்லெண்ணை போன்றும், ஊனை உருக்கின நெய் போலும் சிதறின கள் போல் வழுவழுப்பாயும் இறங்கும் .ஈ விழும் அசாத்தியம்
வாதத்தில் 4, பித்தத்தில் 6, சிலேத்மத்தில் 10. வாத பிரமேகநீர் 4ன் குணம்: மூளை போலும், இளநுங்கு போலும், நிணம் போலும், இறுகின சளிபோலும்,முதிர்ந்த சுக்கிலம் போலும் ,நீள நரம்பு போலும் நீரில் தோன்றும் நல்லெண்ணை போன்றும், ஊனை உருக்கின நெய் போலும் சிதறின கள் போல் வழுவழுப்பாயும் இறங்கும் .ஈ விழும் அசாத்தியம்
பித்தப்பிரமேகநீர் 6ன்குணம்:உடல் கடுக்கும், மஞ்சணிக்கும் நாவு புளிக்கும், துவர்க்கும், கிறுகிறுத்து வரும் மயக்கங் காணும்; நீர் மஞ்சள் போலும், நீலம் போலும், கறிபோலும், சாம்பல் கழுவின தண்ணீர் போலும் இறங்கும். புளித்திருக்கும்; இறைச்சி கழுவின
தண்ணீர்
போலிறங்கும்; அதைக் காய்ச்சி தீபம் எரிக்கலாகும்; பித்தத்தில் எடுத்த தண்ணீர் ஆறையும்
பார்க்கும்போது மஞ்சள் நிறமாயிருக்கும்
சலப்பிரமேக நீரின்குணம்:கட்டுண்ட
சுனைநீர்
போலும், பழங்கூரை நீர் போலும் கரும்பின் சாறு போலும் ,பழைய வெல்லப் பாணக்கம் போலும், நீர் இறங்கும். உடல் மஞ்சணித்துப் பதைபதைக்கும்,மயக்கங் காணும்,அறிவு மயங்கும்,பலகாலும் நீரிறங்கும்,அது மஞ்சள் போலிருக்கும்.
சிலேத்தும பிரமேகநீர் 10ன்குணம்;அடிக்கரும்பின் சாறுபோலும் ,அரும்புனல் போலும், மாவைக் கரைத்தது போலும் பன்னீர் போலும் தயிர் பால் தண்ணீர் போலும், சர்க்கரைபாகு போலும்,தேன்பாகு போலும், கடுத்து இறங்கும்; எறும்பு விழும் ;ரசம் போல் நீர் இறங்கி நெய் மிதக்கும் மணக்கும்; அதை காய்ச்சி சீலையிலிட்டு தீபம் எரிக்கலாம். சிலேத்மத்தில் எடுத்த நீர் 10ம் வெண்மையாய் நுரைத்திருக்கும்
சிலேத்தும பிரமேகநீர் 10ன்குணம்;அடிக்கரும்பின் சாறுபோலும் ,அரும்புனல் போலும், மாவைக் கரைத்தது போலும் பன்னீர் போலும் தயிர் பால் தண்ணீர் போலும், சர்க்கரைபாகு போலும்,தேன்பாகு போலும், கடுத்து இறங்கும்; எறும்பு விழும் ;ரசம் போல் நீர் இறங்கி நெய் மிதக்கும் மணக்கும்; அதை காய்ச்சி சீலையிலிட்டு தீபம் எரிக்கலாம். சிலேத்மத்தில் எடுத்த நீர் 10ம் வெண்மையாய் நுரைத்திருக்கும்
சுப்பிரமேகநீரின்குணம்:கோசலம் போல் நீர் இறங்கும்,பல் நாற்றமடிக்கும் புதுமழை தண்ணீர் போலிறங்கும், புலால் நாறும், அதைக் காய்ச்சினால் தேன் போல் இருக்கும், நீர்த்தாரை கடுத்து
தேன் போல் இறங்கும்.
மலப்பிரமேகநீரின்குணம்; நீர் புளித்து மலம் நாற்றம் அடிக்கும்
சுக்கிலப்பிரமேக குணம்;பெருக நீரிறக்கிப் பின்பு சுக்கிலம் விழும்,உடல் கறுக்கும்.
மருந்து ஈட்டின் பேரில் காணும் நீரின் குணம்:சுண்ணாம்பு கரைத்த நாற்றமாயும் சுடலை சாம்பல் நாற்றமாயும், இவைகளை ஒன்றாய் நீரில் கரைத்த நாற்றமாயும் அடிக்கும் நாவில் வைத்தாலும் அது போலவே நாறும்.
சீக்காய்பிரமேகநீரின்குணம்:சத்துடன் சறுகாய் விழும், அதைக் காய்ச்சினால் நாறு போல் இழையும் சீயக்காய் போல நாறும்
மலப்பிரமேகநீரின்குணம்; நீர் புளித்து மலம் நாற்றம் அடிக்கும்
சுக்கிலப்பிரமேக குணம்;பெருக நீரிறக்கிப் பின்பு சுக்கிலம் விழும்,உடல் கறுக்கும்.
மருந்து ஈட்டின் பேரில் காணும் நீரின் குணம்:சுண்ணாம்பு கரைத்த நாற்றமாயும் சுடலை சாம்பல் நாற்றமாயும், இவைகளை ஒன்றாய் நீரில் கரைத்த நாற்றமாயும் அடிக்கும் நாவில் வைத்தாலும் அது போலவே நாறும்.
சீக்காய்பிரமேகநீரின்குணம்:சத்துடன் சறுகாய் விழும், அதைக் காய்ச்சினால் நாறு போல் இழையும் சீயக்காய் போல நாறும்
- குப்பைமேனி இலையை அரைத்து, 200மிலி எருமைப்பாலில் 1நாள் காலையில் கொள்ள வெட்டை தீரும்
- சந்தனத்தைப் பசும்பாலிலுரைத்து சுண்டைக்காயளவு தினம் 2வேளை சாப்பிட்டுவர வெட்டைச்சூடு குணமாகும்
- யானை நெருஞ்சில் இலையை அரைத்து, எலுமிச்சையளவு, 200மிலி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டுவர வெட்டைச்சூடு குறையும்
- கோவையிலைச்சாறு 20மிலி, சமன் ந.எண்ணை கலந்து, 200மிலி நீராகாரத்துடன் காலையில் சாப்பிட வெட்டை குணமாகும்
- துத்தி விதைச்சூரணம் 1தேகரண்டி சமன் கற்கண்டு சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட மேகநோய் குணமாகும்
- நெல்லிச்சாறு,தேன்,எலுமிச்சைசாறு வகைக்கு 15மிலி கலந்து காலையில் சாப்பிட்டுவர மதுமேகம் குணமாகும்
- ஆவாரை பஞ்சாங்க சூரணம் 10கிராம் தினம் 3வேளை வெந்நீருடன் கொள்ள மதுமேகம்,பிரமேகம்,மிகுதாகம்,மிகுபசி, உடல்மெலிவு, பலக் குறைவு தீரும்
- துத்தியிலையை கியாழம் செய்து பால், சர்க்கரை கலந்து சாப்பிட மேகச்சூடு சாந்தியாகும்
- தாழை விழுதுகளை அரைத்து பால், சர்க்கரை கலந்து காய்ச்சி 5-10மிலி தினமிருவேளை உண்டுவர உடல் எரிச்சல்,வெட்டை தீரும்
- சீமைஅழவனவிதை (எண்ணை உலராதது) பொடித்து 2சிட்டிகை வெந்நீரில் கொள்ள சூலைவலி நிற்கும்
- புங்கமபூவை நிழலில் உலர்த்தி வறுத்து,பொடித்து 1சிட்டிகை தினம் 3 வேளை நெய் அல்லது வெணணெமில் நீடித்துக்கொள்ள மதுமேகம், மதுமேக ரணங்கள் தீரும்.
- நெருஞ்சில் சமூலம் 1பிடி,கீழாநெல்லி 1பிடி சேர்த்தரைத்து அல்லது சூரணித்து 10கிராம் தினம் 2 வேளை எருமைத்தயிர் அல்லது மோரில் சாப்பிட்டுவர பிரமேகத்தால்(பால்வினை) உண்டாகும் வெள்ளை, நீர்எரிச்சல், அசதி, நீர்தாரை புண்கள்,மேககிரந்தி,ஊறல்,தடிப்பு குணமாகும்
- பெருநெருஞ்சில்காய் 250கிராம்,உளுந்து100,கருடன்கிழங்குபொடி300, வாலுளுவைஅரிசி 50கிராம் எடுத்தரைத்து ,அடைதட்டி,1கிலோ பசு நெய்யை உருக்கி,அதில் பொரித்தெடுத்து,வடையை பாலிலரைத்து, மேல்பூசி,காட்டுசீரகம் 100கிராம்,மிளகு100கிராம் பொடித்து 5கிராம்,5மிலி நெய்யில் சாப்பிட்டு,2மணி நேரம் களித்து குளித்துவர பித்தவெட்டையால் ஏற்படும் வெண்குட்டம் குணமாகும்
- தென்னம்பூ 1பிடி,10-20நாள் பத்தியத்துடன் வாயிலிட்டு மென்று உண்ண மேகநோய்,வெள்ளை,2ம்சுரம்,இரத்தவாந்தி,அரையாப்புகட்டி,சிலந்தி தீரும்.
- பீச்சங்குஇலைச்சாற்றை வி.எண்ணையில் காய்ச்சி, வடித்து காலை மாலை 1தேகரண்டி, பத்தியத்துடன் 1வாரம் சாப்பிட,,தீராத மேகநோய், கிரந்தி, கருமேகம், வெள்ளை,வெட்டை,அரையாப்பு, சொறிசிரங்கு தீரும்.
- சித்திரப்பாலாடை என்னும் சிற்றிலைபாலாடையை எலுமிச்சைஅளவு அரைத்து ஆவின் பாலில் கொள்ள சகல பிரமியமும் தீரும்
- அல்லிவிதையை எலுமிச்சையளவு அரைத்து,பசும்பாலில் கரைத்து, 3நாள் கொள்ள இரத்தபிரமியம் தீரும்
- ஆவாரைவேர்ப்பட்டை,விஷ்ணுகிரந்தி சமூலம் வகைக்கு எலுமிச்சை யளவு அரைத்து,பசும்பாலில் கரைத்து,சர்க்கரை சேர்த்து 3நாள் கொள்ள இரத்த பிரமியம் தீரும்.
- விஷ்ணுகிரந்திவேரை எலுமிச்சையளவு அரைத்து, பசும்பாலில் கரைத்து, சர்க்கரை சேர்த்து 3நாள் கொள்ள இரத்தபிரமியம் தீரும்
- விடத்தலைக்கொழுந்து, ஏலம் எலுமிச்சையளவு அரைத்து, தயிரில் கரைத்து கொள்ள இரத்தபிரமியம் தீரும்
- நெருஞ்சில்வேரை எலுமிச்சையளவு அரைத்து,எருமை மோரில் கரைத்து 3நாள் கொள்ள இரத்தபிரமியம் தீரும்
- ஓரிலைத் தாமரை சாற்றில் சர்க்கரை சேர்த்து வேளைக்கு 250மிலி 3நாள் கொள்ள இரத்தபிரமியம் தீரும்
- 1பிடி வல்லாரையை அரைத்து 250மிலி பசும்பாலில் கரைத்து,3நாள் கொள்ள இரத்தபிரமியம் தீரும்
- கோரைக்கிழங்கு,விஷ்ணுகிரந்தி,மிளகு வகைக்கு 20கிராம்,4ல்1ன்றாய்க் காய்ச்சி வேளைக்கு 150மிலி 6வேளை கொள்ள சுக்கில பிரமியம் தீரும்.
- ஓரிலைதாமரை,சீரகம் சமனரைத்து வேளைக்கு பாக்களவு 3நாள் கொள்ள சுக்கிலபிரமியம் தீரும்.
- மிளகை எலுமிச்சையளவு அரைத்து, நல்லெண்ணையில் மத்தித்து 3நாள் கொள்ள சீழ்பிரமியம் தீரும்
- அதிமதுரச்சூரணம் திரிகடி நீராகாரத்தில் 10நாள் கொள்ள சீழ்பிரமியம் தீரும்.
- குப்பைமேனியிலையை உப்பில்லாமல் அவித்து மிளகும், அரிசியும் பொரித்து பொடித்துத் தூவி மாங்காய் அளவு காலை 3நாள் சாப்பிட சீழ்பிரமியம் தீரும்.
- வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலை அரைத்து மோரில் கொள்ள பிரமியம் தீரும்.
- துளசியிலையை பிட்டவித்து 150மிலி சாறெடுத்து, எலுமிச்சையளவு வெண்னை சேர்த்து 3நாள் கொள்ள பிரமியம் தீரும்.
- 1பிடி கற்றாழைவேரை இளநீரில் அரைத்து சர்க்கரை சேர்த்து 3நாள் கொள்ள பிரமியம் தீரும்
- வெள்ளாட்டுப்பால்,எலுமிச்சம்பழச்சாறு,மாம்பட்டைசாறு சமஅளவு கலந்து 3நாள் கொள்ள பிரமியம் தீரும்
- துளசி இலையை பிட்டவித்து 300மிலி சாறெடுத்து,எலுமிச்சைஅளவு வெண்ணை சேர்த்து 3நாள் கொள்ள பிரமியம் தீரும்
- எலுமிச்சம்பழசாறு,ஈருள்ளிச்சாறு,பனங்கருப்பட்டி சமன் கலந்து இரவு பனியில் வைத்து காலை 3நாள் சாப்பிட பிரமியம் தீரும்
- எலுமிச்சை அளவு பற்பாடகத்தை சீனி கலந்து ஆவின்பாலில் 3நாள் சாப்பிட பிரமியம் தீரும்
- எருமைப்பால் 2படியில் பொன்னாங்காணிவேர் எலுமிச்சையளவு அரைத்துக் கலந்து காய்ச்சி புரைகுத்தி கடைந்து வெண்ணை எடுத்து அதை 3 நாள் சாப்பிட்டு மோரை தாகசாந்தி செய்ய இரத்தம்போல்நீர் இறங்கல் குணமாகும்
- சிவந்தகொட்டக்கரந்தை,ஈருள்ளி வகைக்கு 1பிடிஇடித்துச் சாறுபிழிந்து ஆழாக்கு ந.எண்ணை கலந்து,இதுபடி 3நாள் கொள்ள பிரமியம் தீரும்
- தேற்றான்விதை ஊறவைத்து அரைத்தது,சந்தனம்,ஆவின்வெண்ணை வகைக்கு கொட்டைப்பாக்களவு கலந்து 6பொழுது சாப்பிட இரத்தப் பிரமியம் சீய்பிரமியம், உஷ்ணம் தீரும்
- பறங்கிப்பட்டை,கெந்தகம்,சாதிக்காய்,சாதிபத்திரி,கிராம்பு,சிறுநாகப்பூ,கண்டங் கத்திரி, அரத்தை,ரசகற்பூரம்,அமுக்கரா,கொடிவேலிவேர்,சடாமஞ்சில்,சமன் பொடித்து சர்க்கரைபாகில் தூவிக் கிண்டி நெய் சேர்த்து லேகியஞ் செய்து வேளைக்கு கொட்டைப்பாக்களவு சாப்பிட சுக்கிலமேகம்,இரத்தமேகம்,சீய்மேகம், மூத்திரப்பாளை, கிருச்சனம் தீரும்
- பரங்கிபட்டை200,அதிவிடயம்,குரோசாணிஓமம்,சாதிக்காய்,சாதிபத்திரி,கிராம்பு, சுக்கு, திரிபலா,மிளகுவகைக்கு10கிராம் வறுத்துப்பொடித்து 1படிபசும்பாலில் 250 சீனிபோட்டு பாகுசெய்து,தூவிகிண்டி நெய்விட்டு லேகியம்செய்து கொட்டைப் பாக்களவு மண்டலம் கொள்ள மேக கரப்பான் ரணம்,சூலை8,வாய்வு தீரும்
- கருஞ்சித்தகத்தி இலையை ஆவின்பால்விட்டு இடித்தச்சாறு,நல்லெண்ணை சமனாய் கலந்து காய்ச்சி வடித்து தலைமுழுகிவர மேகசூலை வீக்கம் தீரும்
- விலாமிச்சு,மருதம்பட்டை,வெள்ளிலோத்திரம்,அத்திப்பட்டை இவற்றை கசாயம் செய்து சாப்பிட பித்தபிரமேகம் தீரும்.
- தேவதாரம்,திரிபலை,முத்தக்காசு,மரமஞ்சள் இவற்றை கசாயம்செய்து தேன்விட்டு சாப்பிட சிலேத்தும பிரமேகம் தீரும்
- திரிபலா,வெப்பாலைபட்டை,மரமஞ்சள் இவற்றை கசாயம் செய்து தேன்விட்டு பருக சிலேத்தும பிரமேகம் தீரும்
- புங்கம்பாளை,மரமஞ்சள்,மருதம்பட்டை இவற்றை கசாயம்செய்து பருக சகல பிரமேகமும் தீரும்
- அகில்கட்டை,அத்திபட்டை,இருவேலி இவைகளை கசாயம் செய்து தேன்விட்டு சாப்பிட பித்த பிரமேகம் தீரும்
1 கருத்து:
நன்றி உங்கள் பதிவு அனேகருக்கு உதவியாக இருக்கும்
கருத்துரையிடுக