பக்கங்கள்

29 அக்டோபர், 2016

மலச்சிக்கல்(CONSTIPATION )


பாதிநோய்க்கு ஆதி காரணம் மலச்சிக்கலே.
கழிக்கும் மலத்தின் அளவு குறைவது, மலம் கடினமாகுதல், மலம் கழிக்கும் முறைகள் குறைவது அல்லது மலம் கழிக்கும்போது அதிகளவு கஷ்டத்துடன் மற்றும் வலியுடன் மலம் கழிப்பது மலச்சிக்கல் எனலாம். இப்பழக்கம் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். ஒரு வாரத்திற்கு 12 முறை மலம் கழிப்பது இயல்பான மலம் கழிக்கும் முறை எனலாம். போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும்.   
1.   3 தேகரண்டி வி.எண்ணையுடன்,சிறிது இஞ்சிச்சாறு கலந்து சாப்பிட மலச்சிக்கல் தீரும்
2.   திரிபலா சூரணம் 1 தேகரண்டி இரவு வெந்நீரில் கொள்ள மலச்சிக்கல் தீரும்

3.   கரிசாலை இலை5, தினம் காலையில் சாப்பிட்டுவர மலச்சிக்கல் தீரும்
4.   நிலாவாரை சூரணம் 1 தேகரண்டி இரவில் வெந்நீரில் சாப்பிட்டுவர மலச்சிக்கல் தீரும்

5.   மஞ்சள்கரிசாலை இலையை பருப்புடன் கடைந்து, நெய்சேர்த்து, சாதத்துடன்  உட்கொள்ள மலச்சிக்கல் தீரும்
6.   கறிவேப்பிலை,இஞ்சி,மிளகு,சீரகம்,பெருங்காயம் சேர்த்திடித்து,பொடிசெய்து, அரை தேகரண்டி  இரவு உணவுடன் கொள்ள மலச்சிக்கல் தீரும்
7.   சோற்றுக்கற்றாழையின் சோற்றை காயவைத்து,பொடித்து,2சிட்டிகை,சமன் மஞ்சள் தூளுடன்,50மிலி நீரில் பருக மலச்சிக்கல் தீரும்
8.   தூதுவேளைகாயை வற்றல் செய்து,இரவில் பொரித்து உண்டுவர மலச்சிக்கல் தீரும்
9.   முடக்கறுத்தான் இலையை இரசம் செய்து சாப்பிட மலச்சிக்கல் தீரும். குடல் வாயு கலையும்
10.  வில்வ இலைத்தூள் அரைதேகரண்டி,வெண்ணையில் கலந்து இரவு உணவுக்குப் பின் சாப்பிட வயிற்றுப்புண்,மலச்சிக்கல் குணமாகும்
 
11.  ரோஜாகுல்கந்து காலைமாலை கழற்சிக்காயளவு சாப்பிட்டுவர மலச்சிக்கல் வெள்ளைப்படுதல் குணமாகும்.தொடர்ந்து சாப்பிட இதயம்,கல்லீரல், நுரையீரல், குடல் உறுதியடையும்
12.  பாகல்இலை 10-15 அரைத்துச் சாப்பிட பேதியாகி மலக்கட்டு உடையும்
 
13.  ஆடுதீண்டாப்பாளை இலை அல்லது விதைச்சூரணம் அரைதேகரண்டி, வெந்நீர் அல்லது வி.எண்ணையில் கொள்ள பேதியாகி மலக்கட்டு உடையும்
 
14.  காக்கரட்டான்வேர் 10 கிராம்,சுக்கு15கிராம்,திப்பிலி10கிராம்,விளாம்பிசின் 10 கிராம் சேர்த்தரைத்து,குன்றிமணியளவு மாத்திரை செய்து.பெரியவர்களுக்கு1, குழந்தைகளுக்கு அரைமாத்திரை வீதம் காலை வெந்நீரில் கொடுக்க பேதியாகும்
15.  நல்வேளை விதைகளை நெய்யில் வறுத்துப் பொடித்து,குழந்தைகளுக்கு அரை, பெரியவர்களுக்கு 4 கிராம் என்ற அளவில் தினமிருவேளை,3நாள் கொடுத்து, 4ம் நாள் காலை வி.எண்ணை அரைதேகரண்டி கொடுக்க பேதியாகும். தட்டைப் புழுக்கள் வெளியாகும்
16.  10கிராம் நுணாவேரை 5ல்1ன்றாய்க் காய்ச்சி 100மிலி பருக பேதியாகும்
17.  கால் சங்கு நீரில், 5துளிதேன்,கோரோசனை மாத்திரை1, கரைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்க  மலச்சிக்கல்  தீரும்
18.  மூலக்குடோரி எண்ணை 10-15மிலி வெதுவெதுப்பான பாலில் இரவில் கொள்ள மலச்சிக்கல் தீரும்
19.  கடுக்காய்தோல் 5கிராம்,3ல்1ன்றாய்க் காய்ச்சி தினம்3வேளை பருக மலச்சிக்கல் தீரும்
20.  10கிராம் உலர்ந்த திராட்சையை 100மிலி வெந்நீரிலூறவைத்துப்,பிசைந்து 15-30 மிலி, இரவில் குழந்தைகளுக்குக் கொடுக்க மலச்சிக்கல் தீரும்
21.  மூக்கிரட்டை இலையை பொரியல் செய்து சாப்பிட மலச்சிக்கல் தீரும். கண் பார்வை தெளிவடையும் .உடல் வனப்பாகும்
22.  சிவதைவேரைப் பாலில் வேகவைத்து,பொடித்து,1கிராம்,இரவு வெந்நீரில் கொள்ள வயிற்று வலியின்றி மலம் வெளியாகும் 
23.  திராட்சைகொட்டை நீக்கி,சாறெடுத்து 10மிலியுடன்,தேன் கலந்து சாப்பிட்டுவர இரத்தம் சுத்தமாகும் .மலக்கட்டு தீரும்
24.  பால்பெருக்கி இலையை வதக்கித் துவையல் செய்து சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்
25.  கொய்யாப்பழத்தை தொடர்ந்து இரவில் சாப்பிட்டுவர மலச்சிக்கல் தீரும்
26.  நிலவாகை சூரணம்  5-10கிராம் இரவில் வெந்நீரில் கொள்ள மலச்சிக்கல் தீரும் 
27.  ஆவாரை பஞ்சாங்கசூரணம் 1தேகரண்டி,வெந்நீரில் கொள்ள அதிதாகம், நாவறட்சி உஷ்ணம்,அதிமூத்திரம்,மலச்சிக்கல் தீரும்
28.  வெற்றிலைக் காம்பில் வி.எண்ணை தடவி ஆசனவாயில் வைக்க மலச்சிக்கல் தீரும்
29.  சுக்கு வெந்நீரில் 1,2 தேகரண்டி வி.எண்ணை கலந்து பருக மலச்சிக்கல் தீரும்
30.  துத்தியிலை,சிறுபயறு,வெங்காயம் சமனாய் எடுத்து சாப்பிட மலச்சிக்கல் தீரும்
 
31.  பீட்ரூட்பொரியல் செய்து சாப்பிட மலச்சிக்கல்,இரத்தசோகை தீரும்
32.  வேப்பம்பட்டைச்சூரணம் 10கிராம் பாலில் கொள்ள மூலம்,மலக்கட்டு,குன்மவலி நீங்கும்

33.  சரக்கொன்றைபூவை வதக்கித் துவையல் செய்து சாப்பிட மலச்சிக்கல் தீரும் 
34.  சரக்கொன்றைப் புளியை சமையல் புளியுடன் கலந்து உணவில் பயன்படுத்த மலச்சிக்கல் தீரும்
35.    புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தர கக்குவான் இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். 
36.   செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
37.   தினமும் இரவில் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம்பழங்களை சாப்பிட்டு பின்னர் சுடுதண்ணீர் அருந்த மலச்சிக்கல் தீரும்.
38.   அரை மூடி எலுமிச்சைப் பழச் சாற்றை, வெதுவெதுப்பான நீரில் பிழிந்து ஒரு சிட்டிகை உப்பை நன்றாக கலந்து காலை எழுந்தவுடன் குடிக்க மலச்சிக்கல் தீரும் 

  1. அரைக்கீரையுடன் பாசிப்பயிறு, மிளகு, நெய் சேர்த்து சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்.
  2. ஆமணக்கு விதைப்பருப்பை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து சாப்பிட மலக்கட்டு தீரும்.
  3. அரை லிட்டர் ஆமணக்கு எண்ணெயுடன் கடுக்காய் 50 கிராம் சேர்த்து காய்ச்சி தினமும் 2 தேகரண்டி  சாப்பிட மலச்சிக்கல் குணமடையும்.
  4. விளக்கெண்ணெயை தினமும் ஆசன வாயில் தடவ மலச்சிக்கல் தீரும்
  5. ஆவாரம் பூவை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்.
  6. இஞ்சி சாற்றில் கடுக்காய் பொடியை கலந்து காலை, மாலை பத்து கிராம் சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்
  7. இஞ்சியை துவையல் அல்லது பச்சடி செய்து சாப்பிட மலச்சிக்கல் தீரும்.
  8. தினமும் அரை தம்ளர் நெல்லிக்காய் சாறை குடித்து வர, குடலியக்கமானது நன்கு செயல்பட்டு, நாள்பட்ட மலச்சிக்கல் குணமாகும்
  9. அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு சம பங்கு பொடித்து ஒருதேகரண்டி தேனில் குழைத்து சாப்பிட மலச்சிக்கல் சரியாகும்
  10. பிஞ்சு கடுக்காய் 100 கிராம், சுக்கு100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்கும் பொழுது குடித்து விட்டு படுக்க மலம் இளகும்.
  11. செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினம் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும். 
  12. ஆப்பிள், பிளம்ஸ் மற்றும் பேரிக்காயை சாப்பிட மலச்சிக்கல் உண்டாகாமல் தடுக்கும்  
  13. அம்மான் பச்சரிசிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள மலக்கட்டு உடையும்.

கருத்துகள் இல்லை: