பக்கங்கள்

29 அக்டோபர், 2016

வாந்தி,விக்கல்(vomiting,hiccup)



1.   இஞ்சிச்சாறு,வெங்காயச்சாறு  வகைக்கு 1 தேகரண்டி, சிறிது தேன் கலந்து சாப்பிட வாந்தி,குமட்டல்  கட்டுப்படும் 
                                            
2.   இம்பூரல் செடி கைப்பிடி,அரைத்து,10கிராம்,200மிலி  பாலில்  தினமிருவேளை கொள்ள  இரத்தவாந்தி,பெரும்பாடு  கட்டுப்படும் 
                                         
3.   ஏலக்காய்  மேல்தோல் நீக்கி,அரிசியை  பொடித்து,2கிராம்,தேவையான அளவு எலுமிச்சைசாற்றில்  குழைத்து,தினம்3வேளை  உணவுக்குப்பின்  சாப்பிட்டுவர கர்ப்பகாலத்தில்  ஏற்படும்  அஜீரணம்,குமட்டல்,வாந்தி  தீரும் 
       
4.   கறிவேப்பிலையை துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட குமட்டல், வாந்தி,சீதபேதி குணமாகும்  
                                          
5.   தாமரைவிதையை  தேனுடன்  அரைத்து,நாவில்  தடவ  வாந்தி, விக்கல் குணமாகும்                                                                                                                                 
6.   திருநீற்றுப்பச்சை  இலைச்சாறு  1தேகரண்டி,100மிலி  வெந்நீரில்  கலந்து  பருக வாந்தி  கட்டுப்படும் 
                                                                      
7.   நஞ்சறுப்பான்  இலைசூரணம் கால்தேக்கரண்டி,தேனில் குழைத்து குழந்தைகளுக்கு  கொடுக்க, கக்குவான்  குணமாகும் 
                                              
8.   மாதுளம்பழச்சாறு  200மிலி  பருக  கர்ப்பகாலத்தில் ஏற்படும்  வாந்தி  நிற்கும்                                              
9.   முசுமுசுக்கை  வேர்சூரணம்  அரைதேகரண்டி 2ல்1ன்றாய்  காய்ச்சி  100மிலி பருக வாந்தி  குணமாகும்  
                                                         
10.  வசம்பைச் சுட்ட  சாம்பலை  தேனில்  குழைத்து  நாவில் தடவ  வாந்தி கட்டுப்படும்
                                                             
11.  கொத்தமல்லிவிதை  250கி, சீரகம்,அதிமதுரம்,கிராம்பு,கருஞ்சீரகம், இலவங்கபட்டை, சதகுப்பை  வகைக்கு 50கிராம்,வறுத்து  பொடித்து,சமன் கற்கண்டு  சேர்த்து  காலை மாலை  1தேகரண்டி  வெந்நீரில் சாப்பிட்டுவர விக்கல்,நாவறட்சி,நெஞ்செரிச்சல்  தீரும்                                                                            
12.  10 துளி தும்பை சாற்றை  காலையில்  குழந்தைகளுக்கு  கொடுக்க சளி, இருமல், விக்கல்  தீரும்  
                                                          
13.  மாதுளை மணப்பாகு அல்லது  துருஞ்சிநாரத்தை மணப்பாகு 1தேகரண்டி, வெந்நீரில், தினமிருவேளை  கொள்ள  வாந்தி  கட்டுப்படும்
                                    
14.  வால்மிளகு 1கிராம்,ஏலக்காய் 1கிராம், 3ல்1ன்றாய்க் காய்ச்சி, 1சங்கு, தினம்3 வேளை  கொடுக்க  வாந்தி  நீங்கும்
15.  பாசிப்பயறு 10கிராம்,150மிலி நீரில்  30மிலி யாக  காய்ச்சி  அச்சுவெல்லம் ஒன்றைக் கரைத்துக் கொடுக்க  வாந்தி  கட்டுப்படும் 
                           
16.  மயிலிறகாதிச்சூரணம் 1-2 கிராம், 5-10மிலி  தேனுடன்  கலந்து  தினம்3 வேளை கொடுக்க  விக்கல்  தீரும்                                                           
17.  சீரகத்தூளை  தேனில்  குழைத்துக் கொடுக்க  விக்கல்  தீரும் 
                  
18.  சீரகத்தை  வாயிலிட்டு  மெல்ல  குமட்டல்,வாந்தி  நிற்கும்   
                      
19.  விளா மரத்தின்  கொழுந்திலைச்சாறு,பால்  சர்க்கரை  சேர்த்து  குழந்தைகளுக்கு கொடுக்க  குமட்டல்,வாந்தி,செரிமானக்கோளாறு  நீங்கும்     
   
20.  மாதுளம்பழச்சாறுடன்  தேன் கலந்து  பருக  பித்தம், பித்தவாந்தி  தீரும் 
             
21.  மஞ்கள்கிழங்கை அனலில்போட்டு புகைபிடிக்க மயக்கம்,தொடர்விக்கல் நிற்கும்
                                                        
22.  வசம்பு,மயிலிறகு  சுட்ட  சாம்பல்  30மிகி, தேனுடன்  கலந்து  கொடுக்க  வாந்தி குணமாகும்   
                                                       
23.  வெங்காயச்சாறு 5-10மிலி, தினம் பருகிவர மயக்கம்,வாந்தி,வயிற்றுவலி, வயிற்றுப்பொருமல்  தீரும்
                                                
24.  சீரகம்,திப்பிலி  சேர்த்தரைத்து  தேனில்  கலந்து  சாப்பிட  விக்கல்  நிற்கும்
25.  கீழாநெல்லி வேரை  வாயில் அடக்கிக் கொள்ள  ஏப்பம், விக்கல்  நிற்கும்                           
26.  சுக்குப் பொடியை  தேனில்  குழைத்துச் சாப்பிட  விக்கல்  நிற்கும் 
     
27.  அன்னாசிப்பூவை  உலர்த்திப்,பொடித்து 0.5-1 தேகரண்டி சாப்பிட்டுவர புளியேப்பம், நீர்வேட்கை,வாந்தி,செரியாமை  தீரும்   
                 
28.  அரசுபட்டைதூள்  2சிட்டிகை  நீரிலூறவைத்துப்  பருக விக்கல், தொண்டைக் கட்டு, குரல்வளை நோய்  தீரும்                                                     
29.  நெல்லிவற்றல்,திப்பிலி,நெற்பொரி,சீரகம்  கியாழம் செய்து  2வேளை பருக வாந்தியடங்கும்                                                          
30.  துத்திப்பூச்சாறு 20மிலி,  கற்கண்டு  சேர்த்து  சாப்பிட  இரத்தவாந்தி  நிற்கும்  
31.  வெங்காயத்துடன் மிளகு சேர்த்து இடித்து சாறெடுத்துப் பருக வாந்தி, வயிற்றுப்போக்கு குணமாகும்..                                        
32.  எலுமிச்சம்பழத்தை வெட்டி சிறிது சர்க்கரை தூவி உறிஞ்ச வாந்தி நிற்கும்.                
33.  1ரூ அகலத்திற்கு உள்ளங்கையில் இஞ்சிச்சாறெடுத்து,உச்சந்தலையில் தேய்த்து, உடனே 1தேகரண்டி தேன் பருக பித்தவாந்தி குணமாகும்.                     
34.  சதகுப்பையை இலேசாக வறுத்துக் கடைந்து 4ல்1ன்றாய்க் காய்ச்சி,50மிலி, 4 மணிக் கொருமுறை கொடுக்க தீராத வாந்தியும் தீரும்.                       
35.  திராட்சைசாற்றை சிறிது சிறிதாக கொடுத்துவர இரத்தவாந்தி தீரும்.  
36.  ஆல்,அரசு விதை சமனரைத்து பசும்பாலில் சாப்பிட இரத்தவாந்தி நிற்கும்.
37.  30 மிலி நெல்லிக்காய்ச்சாற்றில்,திப்பிலியை வறுத்துப் பொடித்து 1சிட்டிகை கலந்து சாப்பிட விக்கல் நிற்கும்.                                                    
38.  ஆடாதொடை இலை,சங்கிலை வகைக்கு 1பிடி 2ல்1ன்றாய்க் காய்ச்சி 250மிலி பருகிவர விக்கல் தீரும்.                                        
39.  சிறுசெருப்படை,மிளகு,திப்பிலி சுட்டு சாம்பலாக்கி சமன் கலந்து தேனில் குழைத்து மணிக்கொருதடவை நாவில் தடவிவர விக்கல் தீரும்.  
                                   
40.  10 மிலி அன்னாசி இலைச்சாற்றில் சிறிது சர்க்கரை கலந்து கொடுக்க விக்கல் தீரும்
.
41.  நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
42.  ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வர மறதி மறைந்து விடும்.
43.  வசம்பை சுட்டு சாம்பலாக்கி தினம் வேளைக்கு ஒரு அரிசி எடையுடன், தேன் சேர்த்து மூன்று வேளை கொடுக்க கக்குவான் இருமல் சட்டென்று நிற்கும்.
44.  அகத்தி கீரை சாறு,அகத்தி பூ சாறு இரண்டையும் தேனில் கலந்து சாப்பிட்டு வர தொடர் தும்மல் நீங்கும்.
45.  சீனியை வாயில் போட்டு மெதுவாக உறிஞ்ச விக்கல் நின்று விடும். 2 நிமிடம் கழித்து மறுபடியும் செய்யலாம். குழந்தைகளின் விக்கலுக்கு விரலை நீரில் நனைத்து சீனியில் தொட்டு வாயில் வைக்கவும்.
46.  வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.
47.  நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு, இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.
48.  துளசி சாறு, கல்கண்டு சேர்த்து சாப்பிட வாந்தி நிற்கும்.

கருத்துகள் இல்லை: