பக்கங்கள்

29 அக்டோபர், 2016

மூக்கழற்ச்சி,தொண்டை,உள்நாக்குஅழற்ச்சி,மூச்சுக் குழல்அழற்ச்சி,ஆஸ்துமா(RINETIS,TANSILS,PHARYNGITIS, ASTHMA)


      காது,மூக்கு,வாய்,தொண்டை நான்கையும் இணைப்பது மியூக்கஸ் மெம்பரேன் (mucous membrne) எனும் ஜவ்வுப் படலமாகும்.                               

 ஆஸ்துமா என்னும் நோய் நுரையீரலுக்குக் காற்றைக் கொண்டுசெல்லும் மூச்சுப்பாதை (Airway)வீங்கி (Inflammation) குறுகுவதால் ஏற்படுகிறது.

தொண்டையில் வலி, விழுங்குவதில் சிரமம், தொண்டைக் கரகரப்பு, இருமல், காதுவலி, அடிக்கடி காய்ச்சல் இவை தொண்டையில் சதை வளர்ச்சியின் அறிகுறிகள். இது முற்றினால் (டான்சில்), அறுவை சிகிச்சை வரை சென்றுவிடும். இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் தாக்கும்

ஆஸ்துமாவை ஏற்படுத்தும் காரணிகள்:
ஒவ்வாமையின் விளைவாகவே பெரும்பாலும் ஆஸ்துமா ஏற்படுகிறது. தூசு, குளிர்ந்த காற்று, புகை, மூச்சுப்பாதையில் ஏற்படும் தொற்றுகள், ரசாயனப் பொருட்கள், புற்கள், பூஞ்சாணங்கள், விறகு எரித்தல்,விறகு எரிக்கும்போது வெளியாகும் நச்சு வாயுக்கள், நுண்துகள்கள், கரப்பன் பூச்சியும் அதன் எச்சங்களும், புகைபிடித்தல், மகரந்தங்கள், வளர்ப்புப் பிராணிகளின் முடிகள், வாசனைத் திரவியங்கள் போன்றவை ஏற்படுத்தும் ஒவ்வாமையின் விளைவுதான் ஆஸ்துமாவின் வெளிப்பாடு.
 தொடர் தும்மல், அடிக்கடி இருமல், சளி, மூச்சிரைப்பு, நெஞ்சு இறுக்கமாக இருப்பதாக உணர்தல் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
   அதோடு கடும் குளிர் சீதோஷ்ண நிலை, கடுமையான உடற் பயிற்சி, கடுமையான மனஅழுத்தம் போன்றவையும் ஆஸ்துமாவை வரவழைக்கும்.

அறிகுறிகள்
சளியுடனோ அல்லது சளி இல்லாமலோ இருமல் தொடர்ந்து இருக்கும். ஒரு சுவாசத்துக்கும் அடுத்த சுவாசத்துக்கும் இடைப்பட்ட நேரம் குறைந்து காணப்படும். இழுப்பானது அதிகாலை மற்றும் இரவில் அதிகமாக இருக்கும்.
 தவிர்க்க வேண்டியவை:
கிரீம் பிஸ்கட், குளிர்பானங்கள், கலர் சேர்க்கப்பட்ட உணவுகள், எண்ணெய், கொழுப்பு, வாழைப்பழம், திராட்சை, எலுமிச்சை, வாசனைத் திரவிங்கள், ஜஸ்கிரீம், கத்திரிக்காய், அதிகக் குளிர், பனி, குளிரூட்டப்பட்ட அறை.

1.   3பிடி முசுமுசுக்கை இலைகளை,நெய் அல்லது ந.எண்ணையில் வதக்கி துவையல் செய்து  சாப்பிட மூக்குப்புண்,இரைப்பிருமல்குணமாகும்.இரத்தம் சுத்தியாகும்

2.   ஊமத்தைஇலை அல்லது பூவை உலர்த்தி,பொடித்து,சுருட்டுப்போல புகைக்க சுவாசகாசம்,வறட்டுஇருமல் குணமாகும்

3.   தூதுவேளை இலைகளை துவையல் செய்து சாப்பிட இருமல்,சளி,கோழைக்கட்டு, மூச்சுத்திணறல் குணமாகும்

4.   ஆடாதொடை இலைகளைதூள் செய்து,காய்ந்த ஊமத்தை இலையில் சுருட்டிப் புகைக்க ஆஸ்துமா,மூச்சுத்திணறல் கட்டுப்படும்

5.   முற்றிய நாவல்பட்டையை 500மிலி நீரிலிட்டு 250மிலியாகக் காய்ச்சி வாய் கொப்புளிக்க தொண்டைப்புண்,தொண்டைஅழற்சி குணமாகும்

6.   நீர்பிரம்மி சமூலச்சாறு 4தேகரண்டி சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்

7.   1பிடி நீர்பிரம்மி சமூலத்தை வெண்ணையில் பொரித்துச் சாப்பிட தொண்டை கரகரப்பு தீரும்

8.   திப்பிலியை சுத்தம்செய்து,நெய்யில் வறுத்து,பொடித்து கால் முதல் அரை தேகரண்டி தேனில் குழைத்துச் சாப்பிட தொண்டைக்கட்டு,கோழை, நாக்குச் சுவையின்மை தீரும்

9.   அரத்தைதூள் கால்தேகரண்டி,1தேகரண்டி தேனில் குழைத்துச் சாப்பிட தொண்டைக் கட்டு, சளி, இருமல் குணமாகும்
10.  சிறுதுண்டு அரத்தையை மென்று எச்சிலை விழுங்கி வர தொண்டைக்கட்டு,சளி, இருமல் குணமாகும்
11.  பிஞ்சுசுண்டைக்காயை சமைத்து சாப்பிட்டுவர தொண்டைச்சளி குறையும்.இரத்தம் சுத்தமாகும். எலும்புகள் உறுதி பெறும்
12.  கரிசாலைசாற்றில் வாய்கொப்புளித்துவர தொண்டை நோய்கள் குணமாகும். பல், ஈறு, நாக்கு நுரையீரல் சுத்தமாகும்
 
13.  மருதாணிக்கொழுந்தை 1மணிநேரம் ஊறவைத்து,பின்னர் கொதிக்க வைத்து வாய் கொப்புளிக்க வாய்பபுண் தொண்டைப்புண் தீரும்
14.  கண்டங்கத்திரிசமூலச்சூரணம் அரைதேகரண்டியுடன் சமன் தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா , சுவாசநோய்கள்,சளி குணமாகும்
15.  கோவைவேர்கிழங்குச்சாறு 10மிலி காலையில் பருகிவர ஆஸ்துமா கட்டுப்படும்
16.  நஞ்சறுப்பான் இலை சூரணம் கால்,அரை கிராம் தினம்3வேளை தேனில் குழைத்துச் சாப்பிட ஆஸ்துமா கட்டுப்படும்
 
17.  கால்தேகரண்டிவெள்ளைகடுகை தூள்செய்து தேனில் கலந்து கொள்ள இரைப்பு, இருமல், சுவாசநோய்கள் குணமாகும்
18.  பலகறைபற்பம்100-200மிகி. தாளிசாதிசூரணம் 500-1000மிகி, 5-10மிலி தேனில் குழைத்துத் தினமிருவேளை சாப்பிட ஒவ்வாமையால் ஏற்படும் மூக்கழற்சி குணமாகும்
19.  ஆடாதொடைஇலை5,மிளகு10,துளசிஇலை1பிடி,வெற்றிலை2,சேர்த்திடித்து 4ல்1ன்றாய்க் காய்ச்சி 75மிலி,தினம்2,3வேளை சாப்பிட மூக்கழற்சி குணமாகும்
 
20.  தாளிசாதிவடகம்1,2 தினம்2,3வேளை சுவைத்துச் சாப்பிட தொண்டை, உள்நாக்கு அழற்சி குணமாகும்.ஆஸ்துமா கட்டுப்படும்
21.  பூண்டுத்தேன்5துளி,உள்நாக்கின் மீது தடவ உள்நாக்கழற்சி குணமாகும்
22.  கற்பூரவல்லி இலை3,தினம்2,3 வேளை நன்கு மென்று விழுங்க தொண்டை, உள்நாக்கு அழற்சி தீரும்
23.  துளசி கொதிக்க வைத்த நீரில் சிறிது தேன் கலந்து பருக தொண்டைநோய்கள் குணமாகும் 
24.  சுவாசகுடோரிமாத்திரை2, தினமிருவேளை வெந்நீர் அல்லது 2மிளகு சேர்த்து வெற்றிலையில்  வைத்து மென்று சாப்பிட மூச்சுக்குழல்அழற்சி,ஆஸ்துமா தீரும்
25.  கோஷ்டசூரணம்அரை,ஒருகிராம் தினம்3வேளை தேன் கலந்து உண்டுவர தொண்டைக்கட்டு நீங்கும்.குரல்வளம் பெறும்
26.  உருத்திராட்சத்தை இழைத்து தேனில் கலந்து நாவில் தடவ தொண்டைக்கட்டு, கோழை ஆகியன நீங்கும் 
27.  தான்றிசூரணம் 0.5-1கிராம்  அன்னாசிப்பழசாற்றில்  உண்டுவர  தொண்டைவலி, தொண்டைக்கட்டுதீரும்
28.  சிறிது மஞ்சள்தூளுடன்  2தேகரண்டி  தேன்கலந்து  தினம்2 வேளை உண்டு வர தொண்டையில் ஏற்படும் வலி குணமாகும்
29.  ஏலரிசியைபொடித்து, பசு நெய்யில் காய்ச்சி  சில துளி மூக்கிலிட்டு வர மூக்கில் நீர்வடிதல், சீழ்வடிதல் நிற்கும் 
30.  முருங்கையிலைச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட தொண்டைக்கம்மல்,எரிச்சல், இருமல் குணமாகும்.
31.  காய்ச்சிய பாலில் 1சிட்டிகை மஞ்சள்தூள் போட்டுப் பருகி வர இருமல், மூச்சுத் திணறல், தொண்டைகரகரப்பு தீரும்
32.  தான்றி தளிரிலை சாற்றினை,வெள்ளைதுணியில் தடவி,உலர்த்தி,நீரில் பிழிந்து பருகிவர தொண்டைக்கம்மல்,இருமல் தீரும்
33.  திரிபலா அல்லது அதிமதுரச்சூரணம் 1தேகரண்டி,தினமிருவேளை கொள்ள குரல் மாறுபாடு தெளிவடையும் 
34.  அருகம்புல் சாற்றை மூக்கிலிட மூக்கில்இரத்தம் வடிதல்(epistaxise) நிற்கும். புண்களில் தடவ புண்கள் ஆறும்
35.  பிரமதண்டு சாம்பல் 2கிராம்  தேனில் கலந்து உண்டு வர ஆஸ்துமா,காசநோய், இரைப்பு, இருமல் குணமாகும்
36.  பிரண்டை உப்பை தென்னங்கள்ளில் கலந்து சாப்பிட்டுவர ஆஸ்துமா குணமாகும். எலும்புருக்கி, நீரிழிவு கட்டுப்படும்
37.  சுடுநீரில் 1தேகரண்டி தேன் கலந்து வாய்கொப்புளிக்க தொண்டைகரகரப்பு தீரும் 
38.  பூண்டை நெய்யில் வதக்கி காலையில் சாப்பிட்டு,உணவுக்கு முன் 3வேளை யிலும், உறங்குவதற்கு முன்னும் அரைமூடிஎலுமிச்சம்பழத்தை சுடுநீரில் கலந்து பருக ஆஸ்துமா குணமாகும்
39.  அரசம்பட்டை சூரணம் 2சிட்டிகை  நீரிலூற வைத்து,வடித்துப் பருக விக்கல், தொண்டைக்கட்டு,குரல்வளை நோய் தீரும்
40.  அரசு பழத்தைப் பொடித்து 5கிராம், காலை மாலை, 20நாள் கொள்ள சுவாசகாசம் தீரும்  
41.  மாதுளை இலைச்சாறு மூக்கிலிட  மூக்கிலிருந்து இரத்தம் கொட்டுதல் (epistaxise) நிற்கும்.
42.  பச்சை நெல்லிக்காய்சாறு தெளியவைத்து 3-4 துளி 15நிமிடத்திற்குஒருமுறை மூக்கிலிட மூக்கில் இரத்தம் கொட்டுதல் நிற்கும்.

43.திராட்சைப்பழச்சாறு அல்லது குளிர்ந்த நீர் கலந்த எலுமிச்சைசாறு விட மூக்கில் இரத்தம் கொட்டுதல் நிற்கும். 



44.  எலுமிச்சம்பழசாற்றை இலேசாக சுடவைத்து,சிறிதுதேன் கலந்து தினம் 3வேளை நக்கிச் சாப்பிட தொண்டைவலி,தொண்டையைப் பற்றிய பெரும்பாலான நோய்கள் குணமாகும்.                                                                                                           
45.  1பங்கு எலுமிச்சை சாறுடன் 2பங்கு வெந்நீர் கலந்து வாய்கொப்புளிக்க தொண்டைவலி குணமாகும்.                                                                                                                              
46.  நன்கு பழுத்த வில்வப்பழத்தை சாப்பிட தொண்டைவலி போகும்.  
   
47.  திராட்சை,அத்திப்பழங்களை அதிகம் சாப்பிட்டுவர ஆஸ்துமா குணமாகும்.

48.  1வெள்ளெருக்கம்பூவில் இதழ் நீக்கி நடுநரம்புடன்1கிராம்பு சேர்த்து, வெற்றிலையுடன் காலை வெறும் வயிற்றில் 3நாள் சாப்பிட ஆஸ்துமா கட்டுப்படும்.                                                              
49.  பவுர்ணமி உபவாசமிருந்து,மாலை பாலில் பொங்கலிட்டு,நிலவொளியில் இரவு முழுதும் வைத்து,காலை 4 மணிக்கு மருதம்பட்டைசூரணம் தூவி, காலையில் சாப்பிட்டு,12மணிநேரம் தூங்காமலிருக்க ஆஸ்துமா தொல்லை இருக்காது.

50.   முசுமுசுக்கை இலைப்பொடி, மற்றும் தூதுவளை இலைப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை  தேகரண்டி  தேன் சேர்த்து உண்ண ஆஸ்துமா தீரும்.
51.   உத்தாமணி இலைச்சாறு ஒரு தேகரண்டி  எடுத்து, சம அளவு தேன் சேர்த்து அருந்த ஆஸ்துமா தீரும்.

52.   முட்சங்கன் இலையை அரைத்து, நெல்லிக்காய் அளவு பாலில் கலந்து சாப்பிட ஆஸ்துமா தீரும்.

53.   ஆடாதொடா இலையை  நீர் விட்டு கொதிக்கவைத்து, வடித்து, தேன் சேர்த்து கொடுக்க ஆஸ்துமா, இருமல், காய்ச்சல் போன்றவை தீரும்.

54.   ஆடாதோடா இலையை உலர்த்தி சுருட்டாக, சுருட்டி புகைப்பிடிக்க ஆஸ்துமா தீரும்.

55.   துளசிச்சாற்றை ஒரு தேக்கரண்டி காலையும், மாலையும் தினமும் சாப்பிட ஆஸ்துமா தீரும்.

56.   மஞ்சள், கறிவேப்பிலையை சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு தினமும் ஒரு வேளை என ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட தீரும்.

57.   முருங்கைக்கீரையை பிழிந்த நீரை ஒரு தேக்கரண்டி தினமும் 2 வேளை குடிக்க ஆஸ்துமா தீரும்

58.   மிளகு, கல்கண்டு பொடியாக்கி தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட ஆஸ்துமா தீரும் .

59.   வெற்றிலைச்சாறு, இஞ்சிச்சாறு, தேன் இவை சமமாக கலந்து தினமும் 2 வேளை சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.

60.   முசுமுசுக்கை, கரிசலாங்கண்ணி இலைகளை நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி தினமும் காலையிலும், இரவிலும் சாப்பிட மூச்சுக் குழலை விரிவடையச் செய்து மூக்கடைப்பை தவிர்க்கவும், சளியை எளிதாக வெளியேற்றவும் செய்யும்.

61.   பூரண சந்திரோதய செந்தூரத்தைத் தேனில் குழைத்துச் சாப்பிட குணமாகும்

62.   வாசாதி லேகியம்: நெல்லிக்காய் அளவு காலை, இரவு இரு வேளையும் உணவு சாப்பிட்ட பிறகு சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.

63.   திப்பிலிப் பொடியுடன் கம்மாறு வெற்றிலைச் சாறும் தேனும் கலந்து எடுத்துக் கொள்ள ஆஸ்துமா குணமாகும்

64.   செடி திப்பிலி, நாயுருவி விதை, சீரகம், இந்துப்பு சமஅளவு பொடித்து, அரை தேக்கரண்டி,தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.

65.   கோரைக்கிழங்கு, சுக்கு, கடுக்காய்த்தோல் சம அளவு எடுத்துப் பொடித்து, வெல்லம் கலந்து இருவேளை உண்ண ஆஸ்துமா குணமாகும்.

66.   சீந்தில் கொடி, ஆடாதோடை, கண்டங்கத்திரி சம அளவு எடுத்து, அரைத்து, நெய் சேர்த்துக் காய்ச்சித் தினசரி இருவேளை ஒரு தேக்கரண்டி அருந்த ஆஸ்துமா குணமாகும்.

67.   லவங்கம், சாதிக்காய், திப்பிலி வகைக்கு 1 பங்கு, மிளகு 2 பங்கு, தான்றிக்காய் 3 பங்கு, சுக்கு 4 பங்கு சேர்த்துத் தூள் செய்து, சம அளவு சர்க்கரை சேர்த்து அரை தேக்கரண்டி காலை மாலை உண்ண ஆஸ்துமா குணமாகும்.

68.   இஞ்சிச்சாறு, மாதுளம்பூச்சாறு, தேன் சம அளவு கலந்து 30 மிலி இருவேளை பருக ஆஸ்துமா குணமாகும்.

69.   இம்பூறல் இலைப் பொடியுடன் இரண்டு பங்கு அரிசி மாவு சேர்த்து அடையாகச் செய்து சிற்றுண்டி போலச் சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.

70.   ஆடாதோடை இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, தேன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்.

71.   மூங்கிலுப்பை வேளைக்கு அரை தேக்கரண்டி வீதம் கொடுக்க ஆஸ்துமா குணமாகும்.

72.   மூக்கிரட்டை வேரை அரைக் கைப்பிடி எடுத்து ஒன்றிரண்டாகச் சிதைத்து, 4 பங்கு நீர் சேர்த்து 1 பங்காக வற்ற வைத்து இருவேளை அருந்த ஆஸ்துமா குணமாகும்.

73.   மிளகரணை இலையை உலர்த்திப் பொடித்து, அரை தேக்கரண்டி, தேன் கலந்து உண்ண ஆஸ்துமா குணமாகும்.

74.   சிற்றரத்தை, ஒமம், அக்கரகாரம் சம அளவு எடுத்துப் பொடித்து, அரை தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.

75.   துளசி, தும்பை இலை சம அளவு எடுத்து, உலர்த்திப் பொடித்து, அதில் அரை தேக்கரண்டி தேன் கலந்து உண்ண ஆஸ்துமா குணமாகும்.

76.   துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வர தொண்டைப் புண் ஏற்படாது.

77.   சுக்கு, வால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

78.   சித்தரத்தைப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட தொண்டையில் புண், வலி குணமாகும். தொண்டைப் புண் பாதிப்பு குணமான பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து, வெல்லம், நெய் கலந்து உருட்டி சாப்பிட்டு வர பாதிப்பு முற்றிலும் குணமாகும்.

79.   உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும்படி வாய் கொப்பளித்து வர தொண்டை வலி குணமாகும்.

80.   கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக தொண்டைக்கட்டு சரியாகும்.                                                                         

81.   வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட டான்சில் கரையும்.

82.   ஒரு சிறிய கரண்டி அளவு பப்பாளிக்காய் சாறும் அதே அளவு தேனும் கலந்து தொண்டைக்குள் (டான்சில்) தடவி வந்தால் எச்சிலாக ஊறித் துர்நீர் வெளியாகி வீக்கம் வடிந்துவிடும் மூன்று நாட்களில் அறுவை சிகிச்சை இன்றியே முற்றிலும் குணமாகிவிடும் இதைக் குழந்தைகளுக்கும் உபயோகிக்கலாம். வாயில் அடிக்கடி ஒரு சொட்டு  சாற்றை விட்டு மெல்ல விழுங்கச் செய்யலாம்.

83.   வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று சுடுநீர் பருகி வர ஆஸ்துமா நீங்கும்.

84.திப்பிலி, ஏலம், அதிமதுரம், தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரில் இட்டு கொடுக்க இருமல், இளைப்பு, காய்ச்சல் தீரும்.

1 கருத்து:

Unknown சொன்னது…

அருமையான பதிவு அனைவரிடமும் செல்லவேண்டும் .இதில் கண்ட சிலவற்றை அனுபவித்துள்ளேன்.முற்றிலும்.நல்ல பலன் உள்ளவை.