பக்கங்கள்

14 டிசம்பர், 2017

மஞ்சள் Curcuma domestica Valeton .; Zingiberaceae ( Curcuma - longa


அரிசி oryza sativa



        அரிசி                      oryza  sativa                                         
மாற்றுப்பெயர் ;                                                                                                                வளரியல்பு    ; நெல்லில் இருந்து கிடைப்பது என்றாலும் பலவகை உண்டு                                                                                                                                             இலைஅமைப்பு  ;                                                                                                                                      
பூ,காய்               ;                                                                                                                                                                                     மருத்துவ பாகம் ;                                                                                                         
 குணம் ;           
                          அன்னமழகி அரிசி

 அன்ன மழகியரிசி யாரோக்கி யங்கொடுக்குந்
தின்ன வெகுருசியாஞ் செப்பக்கே – ளிந்நிலத்து
நோயனைத்துந் தூளாய் நொருங்கத் தகர்த்துவிடுந்
தீயனலை போக்குந் தெளி
       மிக மதுரமுள்ள அன்னமழகியரிசி சகல சுரங்களையும் பித்த வெப்பத்தையும் போக்கித் தேகத்திற்குச் சௌக்கியத்தைக் கொடுக்கும்,
. 
                    இலுப்பைப்பூச் சம்பா அரிசி

பித்தம் மிகப் பெருக்கும் பேருலகில் யாவர்க்கு
முற்ற தலைவலிநோ யுண்டாக்குஞ் – சத்தியமாய்த்
தாகமெடுப் பிக்கும் தழலிலுப்பைப் பூச்சம்பா
வாகமதி நோய்வளர்க்கு மாய்.
      இலுப்பைப்பூச் சம்பா அரிசி பித்தாதிக்கத்தினால்  விளைகின்ற சிற்சில ரோகம்,சிரஸ்தாபம்,உபசர்க்கதாகம்,உஷ்ணம் இவற்றைச் செய்யும்.

                     ஈர்க்குச்சம்பா அரிசி

ஈர்க்குச்சம் பாவென் றியம்பு மரிசியது
நாக்குக் கதியுரிசி  நல்குணங்காண் – பார்க்குமிடத்
தெல்லார்க்குங் காத லியற்றுமற்ப பித்தமுமாம்
வில்லாரும் பூசைகட்காம் விள்
           தேவாராதனைக்கான ஈர்க்குச்சம்பா அரிசி நாவிற்கு ருசியையும் பார்க்கில் இச்சையையும் தரும்.இதில் கொஞ்சம் பித்தமுண்டு.

                      கருங்குறவை அரிசி

குட்டமுடன் மேகரணங் கூறுஞ் சிலவிஷங்கள்
விட்டகலு முண்மையது வேற்கண்ணாய் – மட்டக்
கருங்குறவை சுத்தவன்னங் காதலித்தே யுண்ண
வருங்குணமே நன்றா மதி
        கருங்குறவை அரிசி அன்னம்  விரண குஷ்டத்தையும் சிற்சில விஷத்தையும் நீக்கும்.போக சக்தியைத் தரும் என்க.

                     கல்லுண்டைச்சம்பா அரிசி

கல்லுண்டைச் சம்பாவை கண்டருந்தி நின்றவர்முன்
மல்லுண்டை பேரெதிர்க்க வாய்க்குமோ – வில்லுண்டை
போலுரையா நல்ல புசபலமா மின்சுவையாம்
பாலனையா மென்மொழியே பார்
    பாலனைய மிருதுவாகிய பெண்ணே ! கல்லுண்டைச் சம்பா உண்பவர்க்கு மல்யுத்தக்காரரும் எதிர்க்கக் கூடாத புஜபலமும் மிகுவார்த்தையும் உண்டாம் என்க.

                     காடைச்சம்பா அரிசி

காடைச்சம் பாவரிசி கண்டுதரி சித்தவர்க்கு
நீடுற்ற மேகவன னிற்குமோ – காடைப்
பறவைபோ னோயும் பறக்கும் பலத்தி
னுறவையெவர் சொல்வா ருரை.
       காடைச்சம்பா அரிசிக்குப் பிரமேக சுரமும், சில அற்ப நோய்களும் நீங்கும்.சுக்கில தாதுவிருத்தியும்,பலமும் உண்டாகும் என்க.

                     கார் அரிசி

காரரிசி மந்தங் கனப்புடலிற் றூலிப்பும்
பாரறிய வாயுவையும் பண்ணுங்கா - ணேரே
கரப்பானென் பார்பொருந்திற் காயமது மெத்த
வுரப்பாகு மென்றே யுறை.
      மந்த குணமுள்ள பருத்த காரரிசி சரீர புஷ்டியையும்,தனி வாத உபரியையும்,பலத்தையும் தரும்.இது கரப்பான் பண்டமென்பர்.

                        காளான்சம்பா அரிசி

காளான்சம் பாவரிசி கல்லையொத்த மாபலத்தைக்
கேளாமலே கொடுக்குங் கேளின்னம் – நீளு
மானிலத்தை போக்கிவிடு மாரோக்கி யத்தை
நானிலத்திற் செய்துவிடு நாடு.
    காளான்சம்பா அரிசி சரீரத்திற்கு மலைபோன்ற உறுதியையும், சவுக்கியத்தையும் தரும்.சிற்சில வாத ரோகங்களையும் நீக்கும் என்க.

                  கிச்சிலிச்சம்பா அரிசி

நாட்டிற் பயிராகும் நற்கிச்சி லிச்சம்பா
வாட்டமுற வேசமைத்து வாயினிக்க – வீட்டினிலே
உண்ணப் பலமுண்டாம் ஒண்டொடியே !மெய்பெருக்கம்
வண்ணமிகு மேனி வழுத்து.
       கிச்சிலிச்சம்பா அரிசியை சமத்துண்ணப் பலம்,தேகக் கொழுமை, தேஜசு முதலியன உண்டாகும் என்க.  

                         குண்டுசம்பாஅரிசி

குண்டுச்சம் பாவரிசி கொண்டுண்ணும் பேர்களுக்குப்
பண்டையில்லா மந்தநோய் பாரிக்கு – மண்டுபடாத்
தாகமெல் லாமொழியுந் தையலே வன்கரப்பன்
றேகமெல் லாம்பரவுஞ் செப்பு
       குண்டுச்சம்பா அரிசிக்கு அக்கினிமந்தமும்,பல மிகுந்த கரப்பன் ரோகமும் உண்டாம்.தாகரோகம் தீரும் என்க.

                      குறுஞ்சம்பா அரிசி

குறுஞ்சம்பா பித்தங்குடி யிருக்கச் செய்யும்
வெருங்கரப்பா னுண்டாக்கு மெய்யி – நொறுங்கச்செய்
வாதமருள் வாயுவினை மாற்றும்போ கங்கொடுக்குஞ்
சீதவன சத்திருவே செப்பு.
         குறுஞ்சம்பா அரிசி பித்தம்,கரப்பான்,சுக்கிலதாது இவற்றை விருத்தி செய்யும்.சரீரத்தில் குத்துகின்ற வாதநோயை நீக்கும் என்க.

                      குன்றிமணிச்சம்பா அரிசி

குன்றிமணிச்சம்பா கொண்டா லனிலமறும்
வென்றிதருஞ் சக்தி மிகுக்குங் காண் – துன்றியநோ
யெல்லாம் பறக்குமுறை இந்திரிய புஷ்டியுண்டாம்
நல்லா ரறிய நவில்.
         குன்றிமணிச்சம்பா அரிசியையுண்ணில் அற்ப வாத ரோகம் முதலிய சிற்சில நோய்கள் நீங்கும்.சரீர பலமும்,சுக்கில தாதுவும் விருத்தியாம்.

                       கைவரைச்சம்பா அரிசி

கைவரைச்சம் பாவரிசிகண்டா லவரவர்த
மெய்வரைபோ லென்றுமிகுபலமா – மைய
மடையாதென் பார்க ளடர்சுக் கிலமு
முடையா ததிசுகமா முன்.
     கைவரைச்சம்பா அரிசியால் உடற்கு மலைபோன்ற வன்மையும், சுக்கில ஸ்தம்பனமும்,சுகமும் உண்டாம்.இதில் சிறிது பித்தம் அதிகரிக்கும் என்பர்.

                     கோடைச்சம்பா அரிசி

கோடைச்சம் பாவரிசி கொண்டாற் திரிதோஷ
வாடைக் கதிகவலியு முண்டோ – நீடு
முறுப்பினுள்ள நோயெல்லா மோதாம லேகுங்
கருப்பிலுயர் வார்குடிலே காண்.
      கோடைச்சம்பா அரிசியை யுண்ணில் முத்தோஷத்தால் பிறந்த வாத வலியும்.சரீரத்திலுள்ள சிற்சில நோய்களும் விலகும் என்க.

                      கோரைச்சம்பா அரிசி

கோரைச்சம் பாநற் குளிர்ச்சியென்பார் பித்தத்தைப்
பேரா வழலைப் பிரித்தோட்டுந் தீராத
மேக மொடுதினவை வீட்டுஞ் சுகங்கொ டுக்கு
மேக முறைகுழலாய் விள்.
        கோரைச்சம்பா அரிசி பித்தம்,உட்சூடு,பிரமேகம்,நமைச்சல் இவற்றை நீக்கும்.சௌக்கியம் தரும்.குளிர்ச்சி என்பர். 

                    சீதாபோகம் அரிசி

வடக்கிற் பயிராகும்வன்சீதா போகம்
இடக்குறு மந்தத்தை யென்றும் – அடக்கிவிடும்
மெத்தபல முண்டாக்கும் மேனிதரும் விந்தூறும்
நித்தமு ண்பார்க்கே நினை                    
        சீதாபோகம் என்னும் அரிசியைச் சமைத்து உண்பவர்க்கு தேகபலம், தேஜசு,தாதுபலம் முதலியவை உண்டாகும்.இன்னும் அஜீரணத்தை ஒழிக்கும் என்க.                    

                           சீரகச்சம்பா அரிசி                 

சீரகச்சம் பாவரிசி தின்னச் சுவையாகும்
பேரகத்து வாதமெல்லாம் பேருங்காண் – வாருலகி
லுண்டவுட னேபசியு முண்டாகும் பொய்யலவே
வண்டருறை பூங்குழலே வாழ்த்து.
      மதுரமுள்ள சீரகச்சம்பா அரிசியை உண்டவுடன் மீளவும் உன்பதற்கான தீபனமுண்டாகும். அற்ப வாத ரோகங்கள் போம் என்க.

                           செஞ்சம்பா அரிசி

செஞ்சம்பாத் தண்டுலத்தாற் றீராச் சிறுசிரங்கும்
விஞ்சுபுண்ன் ணும்வன்சொறியு மெய்க்கணியாந் – துஞ்சா
ததிகபசி யாரு மணங்கரசேயிந்தப்
பதியதனி னீயுண்டு பார்.
         செஞ்சம்பா அரிசியால் கிளைக்கின்ற அற்பக் கிரந்தியும், அதிவிரணமும்,யானைச்சொறியும்,மிகுபசியும் உண்டாகும் என்க.

                           புழுகுச்சம்பா அரிசி

புழுகுச்சம் பாவரிசி பூதலத்திலுண்பார்க்
கழகுமொளி வுஞ்சேர்வ தன்றி – யழலாம்
பசிதாகந் தீரும்பலமு மிகவுண்டா
முசிவே துடற்சு  கமா முன்
        புழுகுச்சம்பா அரிசியை உண்பவர்களுக்கு வனப்பும் காந்தியும், அதிதீபாக்கினியும்,பலமும் உண்டாம்.தாகம் நீங்கும்.

                        மணக்கத்தை அரிசி

 மணக்கத்தை நல்லரிசி மன்பதைக்குத் தோன்றும்
இணக்கமில்லாக் குஷ்டவிஷ மேகும் – துணுக்கெனவே
நித்தமுண் பார்க்குலகில் நீங்கிடுமாம் புண்புரைகள்
சித்தரனு போகமிதாஞ் செப்பு.
     மணக்கத்தை அரிசியினால் மக்களுக்கு உண்டாகின்ற குஷ்டம்,புண், புரையோடும் ரணங்கள், முதலியவை போம் என்க.

                      மணிச்சம்பா அரிசி

நல்ல மணிச்சம்பா நாடுகின்ற நீரிழிவைக்
கொல்லு மிகுந்தசுகங் கொண்டளிக்கு – மெல்லப்
பசியளிக்கு மூத்தோரைப் பாலர்களை நாளு
முசியாம லேவளர்க்கு முன்.
       நல்ல மணிச்சம்பா அரிசி அதிமூத்திரத்தை விலக்கும்.அதிசுகத்தால் உடலையும் விருத்தர்,பாலர்களையும் போஷிக்கும் என்க.                                                     
            மல்லிகைச்சம்பா அரிசி

மல்லிகைச்சம் பாவரிசி வாய்க்குருசி யாயிருக்கு
நல்லது மெய்க்குநலஞ் செய்யுஞ் – சொல்லாக்
கரப்பானை மேகத்தைக் கண்ணழலை நீக்கு
முரப்பாம் பலங் கொடுக்கு முன்
         நாவிற்கு ருசியாயிருக்கின்ற மல்லிகைச்சம்பா அரிசி சரீரத்திற்கு சௌக்கியத்தையும், உறுதியையும் தரும்.கரப்பான்,பிரமேகம்,நேத்திர வெப்பம், ஆகியவற்றைப் போக்கும் என்க.

                           மிளகுச்சம்பா அரிசி

 மிளகுச்சம் பாவரிசி மென்சுகத்தைச் செய்யு
மளவில் பலநோயை யகற்றுங் – களகளெனத்
தீபனத்தைத் தூண்டிவிடுந் தீராவலி தொலைக்கும்
சோபனத்தைச் செய்ந்நகையாய் ! சொல்
       மிளகுச்சம்பா அரிசி சௌக்கியத்தைக் கொடுத்துத் தீபாக்கினியை வளர்க்கும்.மகாவாத முதலிய பலவித ரோகங்களைப் போக்கும் என்க.

                       மைச்சம்பா அரிசி

மைச்சம்பா தண்டுலத்தால் வாயருசி  போயொழியும்
வெச்சென்ற வாதபித்த மெய்யைவிடு – நச்சுத்
தனிவாயு வுஞ்சுரக்குஞ் சர்த்தியம்போ மின்பக்
கனிமொழியே ! நன்றாகக் காண்.
      மைச்சம்பா அரிசியினால் அரோசகம்,வாதபித்த தொந்தம்,தனிவாத போகம்,வாந்திநோய் ஆகியவை போம்.

                        வளைதடிச்சம்பா அரிசி

 வளைதடிச்சம் பாவிற்கு வாதபித்தமுண்டா
முளையு மடிபொருமியுப்புங் – கொளகொளனத்
தானே கரப்பானாந் தாங்கொணா மந்தமுமாந்
தேனே இதனைத் தெளி   
        வளைதடிச்சம்பா அரிசிக்கு வாதபித்த தொந்தம்,வயிறு அளைதலுடன் உப்பிசம்,கரப்பான்,அலசரோகம்,இவை உண்டாம் என்க.

                         வாலான் அரிசி                        

வாலா னரிசி தின்றால் வாயருசி மந்தமறும்
மேலான தேகத்தில் மேவுமொளி – நூலிடையாய்
தேகம் பருத்திடுமாந் தெம்புதர விந்திறுகும்
பாகமுடன் நீயருந்திப் பார்
      வாலான் அரிசியைச் சமைத்துண்ணில் அரோசிகம்,மந்தம், முதலியவை நீங்கும்.தேகத்தில் அழகையும் கொழுமையையும் உண்டாக்கும் என்க.


அரத்தை Alpinia Galanga


அரத்தை    Alpinia Galanga                                                                                         
 மாற்றுப்பெயர் ;                                                       வளரியல்பு     ;  இஞ்சி இனத்தைச் சார்ந்த கிழங்குடைய சிறுசெடி                                                                                                                                           இலைஅமைப்பு ;                              
    பூ,காய்       ;                                                                                                                                                                                     மருத்துவ பாகம்; கிழங்கு                                                                                                                                     
 குணம்          ; கபஹரகாரி,ஜடராக்கினிவர்தினி                                                                                                                                                                  தீர்க்கும் நோய்கள்    
                                                                          
தொண்டையிற்கட் டுங்கபத்தைத் தூரத்துரத்தி விடும்
பண்டைச்சீ தத்தைப் பறக்கடிக்குங் – கெண்டைவிழி
மின்னே கரப்பனைவே றாக்கும் பசிகொடுக்குஞ்
சொன்னோ  மரத்தைச் சுகம்.         
           மார்பையடர் பிணிசு வாசகா சம்மூலஞ்
           சோபைதட்டச் சூர்வாத சோணிதநோய் – தீபச்
           சுரத்தை யடுபடர்பற் றூறாக நேரி
           நரத்தை யெடுதுகள தாம்
அரத்தை நெஞ்சுக்கோழை,சீதளம்,கரப்பான்,இருத்ரோகம்,ஈளை,இருமல், மூலம், வீக்கம்,தந்தநோய்,வாதசோணிதம்,தீச்சுரத்தால் பிறந்த கபம், தந்தமூலப்பிணி இவற்றை நீக்குவதுடன் பசிதீபனத்தை உண்டாக்கும்

          இதில் சிற்றரத்தை, பேரரத்தை என 2 வகை உண்டு.

                          சிற்றரத்தை

வாந்திபித் தங்கரப்பா வாதஞ் சிரோரோகஞ்
சேர்ந்தகப முத்தோஷஞ் சீதமொடு – நேர்ந்தசுர
மற்றரத்தைக் காட்டிவருமிரும லுந்தீருஞ்
சிற்றரத்தைவன் மருந்தாற் றேர்.

செய்கை ; கபஹரகாரி,சுரஹரகாரி,ஜடராக்கினிவர்த்தினி,உதரவாதஹரகாரி

        சிற்றரத்தையால் சர்த்தி,பித்தம்,கரப்பான்,வாயு,சிரரோகம், சிலேத்துமம், திரிதோஷம்,சீதளம்,பலசுரம்,காசம் இவைபோம்.

                             பேரரத்தை
வாத மிசிவு வலிசந்நி பித்தகபஞ்
சீதசுரந் தாவிரணஞ் சென்னிநீ – ரோதுபல
வாங்கடுப் பூப்படரு மாறுமொளியாரு
மீங்கடரும் பேரரத்தை யால்
 
செய்கை ; கபஹரகாரி,சுரஹரகாரி,  ஜடராக்கினிவர்த்தினி,    உதரவாதஹரகாரி

         பேரரத்தையினால் வாதநோய்,பின்னிசிவு,வலிப்பு,சந்நிபாதம்,பித்தகபம், நடுக்கற்சுரம்,கிளைக்கின்ற புண்,சிரசில் நீரேற்றம்,சர்வவிஷம்,ஸ்திரீகள் ருது தோஷம்,இவை யாவும் ஒழியும். தேஜஸ் உண்டாகும்.

1.       பேரரத்தைச் சூரணம் 2-5கிராம் சர்க்கரை அல்லது தேனில் கொடுக்க பசி உண்டாக்கும்.கபத்தையும்,சிரசிலுண்டான நீரேற்றத்தையும் உடனே குணப்படுத்தும்.
2.       பேரரத்தை,நிலவேம்பு சேர்த்து கஷாயம் செய்து தினம் 2 வேளை கொடுக்க குளிர்சுரம், முறைசுரம்,சாதாரணமாகச் சீதளத்தினால் உண்டான சுரம் தீரும்.
3.       பேரரத்தையை பஞ்சுபோல் தட்டி சாராயத்தில் ஊறப்போட்டு, வடித்து, வாதநோய்களுக்கு மேல்பூச வலி நீங்கும். சயித்தியத்தினால் கன்னம்,தாடைகளில் வீக்கம் கண்டவர்களுக்கு மேற்பூச நீரிப் போக்கி வீக்கத்தைப் போக்கும்.
4.       சிற்றரத்தைச் சூரணம் 10-15 கிராம் சர்க்கரை சேர்த்து தினம் 2 வேளை சாப்பிட சயித்தியம்,சுரம்,கபசம்பந்தமான ஈளை இருமல், தொண்டைப்புண்,நீர்த்தோஷம்,வாயு,பீனிசம் போம்.
5.       சிற்றரத்தை 20 கிராம் இடித்து சிறுதீயில் வற்றக்காய்ச்சி பொங்கும் சமயம் இறக்கி வடித்து தேன் சேர்த்து தினம் 2 வேளை கொடுக்க சயித்தியம்,சுரம்,கபசம்பந்தமான ஈளை இருமல், தொண்டைப்புண், நீர்த்தோஷம்,வாயு,பீனிசம் போம்.
6.       சிற்றரத்தை,நிலவேம்பு வகைக்கு 20 கிராம் சேர்த்து கஷாயம் செய்து தினம் 2 வேளை கொடுக்க குளிர்சுரம், முறைசுரம், தீரும்.
7.       சிற்றரத்தை,சதகுப்பை,திரிகடுகு வகைக்கு 10 கிராம் இடித்து  வற்ரக் காய்ச்சி 30மிலி, தினம் 3 வேளை 3நாள் கொடுக்க சயித்தியம், நீர்ப்பீனிசம்,மண்டைக்குடைச்சல் தீரும்.
8.       சிற்றரத்தை, ஓமம்,கடுக்காய்,மிளகு,திப்பிலி,அக்கரகாரம்,தேசாவரம் சமன் பொடித்து, மொத்த எடைக்கு அரைபாகம் சர்க்கரை சேஎர்த்து தினம் 2 வேளை 10-15 கிராம் கொடுத்துவர ஈளை,இருமல், சலதோஷம், சயித்தியம் தீரும்.
9.   அரத்தைதூள்கால்தேகரண்டி,1தேகரண்டிதேனில்குழைத்துச்சாப்பிடதொண்டைக்கட்டு,சளி,இருமல்குணமாகும்
10. சிறுதுண்டு அரத்தையை மென்று எச்சிலை விழுங்கி வர தொண்டைக்கட்டு, சளி, இருமல் குணமாகும்
11. சிற்றரத்தையை அரைத்துத் தடவிவர வீக்கம், வலி தீரும்.
12.