பக்கங்கள்

13 டிசம்பர், 2017

அபினி Opium


அபினி             Opium  











மாற்றுப்பெயர்

வளரியல்பு                                                                                                                                             இலைஅமைப்பு ;                                                                                                                 பூ,காய்                                                                                                                                                                                    மருத்துவ பாகம் ;                                                                                                          
 குணம்          ; நித்ராகாரி,வேதனாசாந்தினி,சுவேதகாரி,அங்காகர்ஷண                நாசினி,காமவிர்தினி.                                                                  
 தீர்க்கும் நோய்கள்

நல்லவபி நிக்குணத்தை நாம்புகல்வ
தல்லகுன்ம வாதமருஞ்செவிநோய் – பல்லினவலி
பேதிமந்தமத்திநோய் பீநசம்போம் வன்மையுண்டாஞ்
சாதியுதி ரச்சத்தி தான்

         அபினியால் வயிற்றுநோய்,வாதாதிக்கம்,கர்ணசூலை,தந்தநோய், அதிசாரம்,அஜீர்ணம்,எலும்பிற்குடைச்சல்,நாசிகாரோகம் இவை போம். சாதிலிங்க நிறமுள்ள உதிரச்சுத்தியும்,பலமும் வுண்டாகும் என்க.

1.   கால் முதல் அரை உளுந்து எடை தேகத் திடத்திற்கேற்ப நெய்யில் குழைத்துக் கொடுக்க பேதி,இருமல்,மூர்ச்சை,தலைவலி,பீநிசம்,இசிவு முதலிய ரோகங்கள் போம்.
2.   அபினியுடன் சம எடை குங்குமப்பூ சேர்த்து முட்டைமஞ்சள் கரு விட்டரைத்துக் கண்களுக்குத்தீட்ட கண் சிவப்பு மாறும்.
3.   முலைப்பாலிழைத்து சீலையிலுருட்டி திரியாகத்திரட்டி,ஆசனத் துவாரத்தில் வைக்க உதிரபேதி,உதிரக்கடுப்பு நீங்கும்.
4.   ந.எண்ணை அல்லது வாதுமை நெய்யில் காய்ச்சி,2 துளி காதிலிட கர்ணசூலை நீங்கும்.
5.   மெழுகு தைலத்தில் இழைத்துக் கலந்துதேகத்தில் பூச சொறி,சிரங்கு, தினவு அடங்கும்.
6.   ஜாதிகாய் சேர்த்து அரைத்துக் கொடுக்க தாது வன்மை பெறும்.
7.   அயச்செந்தூரத்துடன் கலந்து கொள்ள மதுமேகம் தீரும்.
8.   வெள்ளெருக்கஞ்செடி இலையின் பின்புறம் வெண்மையாய் இருக்கும் சுனையை சமன் சேர்த்து அரைத்துப் பயறளவு மாத்திரை செய்து, தேனில் கொள்ள சுவாசகாசம் குணமாகும்.எளிதில் கோழையைக் கரைத்து சுவாசத்தை சரிவரச் செய்யும்.
9.    
                      குறிப்பு ;இது முதலில் சிறிது உற்சாகத்தையும் பின்
உறக்கத்தையும்(மயக்கத்தை) உண்டு செய்யும்.முதலில் மூளையிலும் பிறகு முள்ளந்தண்டு கொடிகளிலும் வியாபித்து வீரியத்தைக் காட்டும். பின்னரே சகல உறுப்புகளிலும் சேர்ந்து உபாதியை  சரி செய்யும்.
          தேகத்திலுண்டான சுரப்பு நீர்களை வறட்டும். வியர்வையை உண்டாக்கும்.அளவு அதிகமானால் ஆபத்தை உண்டாக்கும்.
           குழந்தைகளுக்கு கொடுக்கல் ஆகாது.அஜீரணபேதி கண்டவர்களுக்கு  ஜீரணத்தைக் கொடுக்கௌம் மருந்துகள் கொடுத்து அஜீரணம் இல்லை என்று உறுதி செய்தபின் கொடுக்கவும்.
           அபினிக்கு முறிவு மாசிக்காய் போன்ற துவர்ப்புச் சுவையுள்ள கியாழம்.                                                               

கருத்துகள் இல்லை: