அம்மான்பச்சரிசி Euphorbia hirta L;Euphorbiaceae
மாற்றுப்பெயர்கள் ;சித்திரப்பாலாடை,பாலாட்டஞ்செடி,சிற்றிலைப்பாலாடை.
வளரியல்பு ; சிறுசெடி.
சிவப்பு, வெள்ளை,பச்சை என 3 இனம் உண்டு.பச்சையை சிறு அம்மான் பச்சரிசி என்பர்.
இலை ;எதிர் அடுக்கில் கூர்நுனிப்பற்களுடன் கூடிய ஈட்டி வடிவ இலைகளையுடையது.
இதன் காம்பைக் கிள்ளினால் பால் வரும்.
காய் ; வட்டவடிவ காயில் அரிசியின் நுனிபோன்று காணப்படும்
மருத்துவபாகம் ; சமூலம் (முழுசெடி)
செய்கை ;சங்கோசனகாரி,அந்தர்ஸ்நிக்தகாரி,இலகுமலகாரி,கிருமிநாசினி;பச்சை
சமனகாரி
மருத்துவகுணம் ;எரிபுண்,மலபந்தம்,பிரமேகக்கசிவு,சரீரத்துடிப்பு,நமைச்சல்
போகும். சிவப்பிற்கு வெள்ளி பஸ்பமாகும்.சுக்கிலம் கட்டும்.வாதம்,பிரமேகம் போம். பச்சைக்கு
அங்கிகரு என்ற சாதிலிங்கம் மெழுகாகும்.
காந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்பு
சேர்ந்த திணவிவைகள் தேகம்விட் - டூர்ந்தொன்றோ
யோடுமம்மான் பச்சரிசிக் குண்மை இனத்துடனே
கூடுமம்மா னொத்த கண்ணாய்! கூறு
அர்த்தவம் மான்பச்
சரிசியெனு மூலிக்
குரத்தவன் மேக மொழியுங்
–கரத்ததொரு
விந்துவுமுண் டாகுமினும்
வெண்டாகு வும்பொடியா
மிந்துவினும் வான்முகத்தா
யெண்
யாதுபுகல் வேனமுதா லங்கி கருமெழுகாந்த
தீதுபுரி மேகவெப்பந் தீருமினு-மோதுங்காற்
றேறம்மான் கீரமொக்குந் தின்னுதையுஞ் செம்மைநிறச்
சீறம்மான் பச்சரிசிச் சீர்
அகத்தியர் குணவாகடம்
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஈரப்பதமுள்ள அனைத்து இடங்களிலும்
தானே வளர்கிறது
.
- இலைகளை அரைத்து பாலில் அல்லது தயிரோடு சேர்த்து உண்ண வெப்ப நோய்கள் அனைத்தும் நீங்கும்.
- தூதுவளை இலையுடன் அம்மான்பச்சரிசி இலையை துவையல் செய்து சாப்பிட தாது பெருகும், உடல் பலப்படும்.
- இலையை மென்மையாக அரைத்து எலுமிச்சை அளவு எடுத்து மோரில் கலந்து நாள்தோறும் சாப்பிட்டுவந்தால் ஒரு மாதத்தில் வாத நோய்கள் குணமாகும்.
- இலையைச் சமைத்துண்ண வறட்சி அகலும்.வாய், உதடு,நாக்கில் தோன்றும் வெடிப்பு,புண் போக்கும்.
- கீழாநெல்லியுடன் சமஅளவு இலையை அரைத்து காலை மதியம் இரு வேளையும் எருமைத்தயிரில் கலந்து குடித்து வர உடல் எரிச்சல், நமைச்சல் மேக ரணம்,தாது இழப்பு தீரும்.
- சமூலம் 30கிராம் அளவு சேகரித்து மையாக அரைத்து கொட்டைப்பாக்களவு பசும் பாலில் கலந்து ஒரு வாரம் குடிக்க தாய்ப்பால் பெருகும்
- பாலை தடவிவர நகச்சுற்று,முகப்பரு,பால்மரு மறையும்.காலாணி வலி குறையும்.
- இலையை அரைத்து நெல்லிக்காயளவு பசும்பாலில் கலக்கிக் காலை 3நாள் மட்டும் கொடுக்க சிறுநீருடன் இரத்தம் போதல்,மலக்கட்டு,நீர்க்கடுப்பு,உடம்பு நமைச்சல் தீரும்.
- இலையுடன் மிளகு சேர்த்தரைத்து கொட்டைப்பாக்களவு தினம் காலை கொடுத்துவர 3நாளில் நீர்சுருக்கு தீரும்.மருந்து வீறு தணியும்.
- அம்மான் பச்சரிசி, கீழாநெல்லி, வெந்தயம், ஆகியவற்றை சமஅளவு எடுத்து சூரணம் செய்து 15 கிராம் அளவில் காலை, மாலை பாலில் கலந்து குடித்து வெண்குஷ்டம் போகும்.
- அரைத்துப் பூச ஊறலுடன் வரும் படைகள் தீரும்.
- சித்திரப்பாலாடை என்னும் சிற்றிலைபாலாடையை எலுமிச்சைஅளவு அரைத்து ஆவின் பாலில் கொள்ள சகல பிரமியமும் தீரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக