அரத்தை
Alpinia Galanga
மாற்றுப்பெயர் ; வளரியல்பு ; இஞ்சி
இனத்தைச் சார்ந்த கிழங்குடைய சிறுசெடி இலைஅமைப்பு ;
பூ,காய் ;
மருத்துவ பாகம்; கிழங்கு
குணம் ; கபஹரகாரி,ஜடராக்கினிவர்தினி தீர்க்கும் நோய்கள்
தொண்டையிற்கட்
டுங்கபத்தைத் தூரத்துரத்தி விடும்
பண்டைச்சீ
தத்தைப் பறக்கடிக்குங் – கெண்டைவிழி
மின்னே
கரப்பனைவே றாக்கும் பசிகொடுக்குஞ்
சொன்னோ மரத்தைச் சுகம்.
மார்பையடர் பிணிசு வாசகா சம்மூலஞ்
சோபைதட்டச் சூர்வாத சோணிதநோய் – தீபச்
சுரத்தை யடுபடர்பற் றூறாக நேரி
நரத்தை யெடுதுகள தாம்
அரத்தை நெஞ்சுக்கோழை,சீதளம்,கரப்பான்,இருத்ரோகம்,ஈளை,இருமல், மூலம்,
வீக்கம்,தந்தநோய்,வாதசோணிதம்,தீச்சுரத்தால் பிறந்த கபம், தந்தமூலப்பிணி இவற்றை
நீக்குவதுடன் பசிதீபனத்தை உண்டாக்கும்
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என 2 வகை உண்டு.
சிற்றரத்தை
வாந்திபித் தங்கரப்பா வாதஞ் சிரோரோகஞ்
சேர்ந்தகப முத்தோஷஞ் சீதமொடு – நேர்ந்தசுர
மற்றரத்தைக் காட்டிவருமிரும லுந்தீருஞ்
சிற்றரத்தைவன் மருந்தாற் றேர்.
செய்கை ; கபஹரகாரி,சுரஹரகாரி,ஜடராக்கினிவர்த்தினி,உதரவாதஹரகாரி
சிற்றரத்தையால்
சர்த்தி,பித்தம்,கரப்பான்,வாயு,சிரரோகம், சிலேத்துமம்,
திரிதோஷம்,சீதளம்,பலசுரம்,காசம் இவைபோம்.
பேரரத்தை
வாத மிசிவு வலிசந்நி பித்தகபஞ்
சீதசுரந் தாவிரணஞ் சென்னிநீ – ரோதுபல
வாங்கடுப் பூப்படரு மாறுமொளியாரு
மீங்கடரும் பேரரத்தை யால்
செய்கை ; கபஹரகாரி,சுரஹரகாரி, ஜடராக்கினிவர்த்தினி, உதரவாதஹரகாரி
பேரரத்தையினால்
வாதநோய்,பின்னிசிவு,வலிப்பு,சந்நிபாதம்,பித்தகபம், நடுக்கற்சுரம்,கிளைக்கின்ற
புண்,சிரசில் நீரேற்றம்,சர்வவிஷம்,ஸ்திரீகள் ருது தோஷம்,இவை யாவும் ஒழியும். தேஜஸ்
உண்டாகும்.
1. பேரரத்தைச் சூரணம்
2-5கிராம் சர்க்கரை அல்லது தேனில் கொடுக்க பசி
உண்டாக்கும்.கபத்தையும்,சிரசிலுண்டான நீரேற்றத்தையும் உடனே குணப்படுத்தும்.
2. பேரரத்தை,நிலவேம்பு
சேர்த்து கஷாயம் செய்து தினம் 2 வேளை கொடுக்க குளிர்சுரம், முறைசுரம்,சாதாரணமாகச்
சீதளத்தினால் உண்டான சுரம் தீரும்.
3. பேரரத்தையை
பஞ்சுபோல் தட்டி சாராயத்தில் ஊறப்போட்டு, வடித்து, வாதநோய்களுக்கு மேல்பூச வலி
நீங்கும். சயித்தியத்தினால் கன்னம்,தாடைகளில் வீக்கம் கண்டவர்களுக்கு மேற்பூச
நீரிப் போக்கி வீக்கத்தைப் போக்கும்.
4. சிற்றரத்தைச்
சூரணம் 10-15 கிராம் சர்க்கரை சேர்த்து தினம் 2 வேளை சாப்பிட
சயித்தியம்,சுரம்,கபசம்பந்தமான ஈளை இருமல், தொண்டைப்புண்,நீர்த்தோஷம்,வாயு,பீனிசம்
போம்.
5. சிற்றரத்தை 20
கிராம் இடித்து சிறுதீயில் வற்றக்காய்ச்சி பொங்கும் சமயம் இறக்கி வடித்து தேன்
சேர்த்து தினம் 2 வேளை கொடுக்க சயித்தியம்,சுரம்,கபசம்பந்தமான ஈளை இருமல்,
தொண்டைப்புண், நீர்த்தோஷம்,வாயு,பீனிசம் போம்.
6. சிற்றரத்தை,நிலவேம்பு
வகைக்கு 20 கிராம் சேர்த்து கஷாயம் செய்து தினம் 2 வேளை கொடுக்க குளிர்சுரம்,
முறைசுரம், தீரும்.
7. சிற்றரத்தை,சதகுப்பை,திரிகடுகு
வகைக்கு 10 கிராம் இடித்து வற்ரக்
காய்ச்சி 30மிலி, தினம் 3 வேளை 3நாள் கொடுக்க சயித்தியம்,
நீர்ப்பீனிசம்,மண்டைக்குடைச்சல் தீரும்.
8. சிற்றரத்தை,
ஓமம்,கடுக்காய்,மிளகு,திப்பிலி,அக்கரகாரம்,தேசாவரம் சமன் பொடித்து, மொத்த எடைக்கு
அரைபாகம் சர்க்கரை சேஎர்த்து தினம் 2 வேளை 10-15 கிராம் கொடுத்துவர ஈளை,இருமல்,
சலதோஷம், சயித்தியம் தீரும்.
9. அரத்தைதூள்கால்தேகரண்டி,1தேகரண்டிதேனில்குழைத்துச்சாப்பிடதொண்டைக்கட்டு,சளி,இருமல்குணமாகும்
10. சிறுதுண்டு அரத்தையை மென்று எச்சிலை
விழுங்கி வர தொண்டைக்கட்டு,
சளி, இருமல் குணமாகும்
11. சிற்றரத்தையை அரைத்துத் தடவிவர
வீக்கம், வலி தீரும்.
12.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக