பக்கங்கள்

13 டிசம்பர், 2017

அஞ்சுபார் Polyganum Aviculare


அஞ்சுபார் Polyganum  Aviculare                                                                                        

மாற்றுப்பெயர் ;                                                         

வளரியல்பு ;                                                                                                இலைஅமைப்பு;                                                                                                                                             பூ,காய;                                                                                                                                                                                   மருத்துவபாகம்  வேர்                                                                                                                                           குணம்            ; கபஹரகாரி,மூத்திரவர்த்தனகாரி,பலகாரி,சங்கோசனகாரி,                                  முறைவியாதிரோதி                                                                                                                                                                 தீர்க்கும் நோய்கள்

வெப்ப மதிசாரம் வெள்ளை யழிகிரந்தி
ஒப்புங் குரற்புண் ணுடன்கபமும் – செப்பக்கேள்
மிஞ்சுரத்த மூலம் மிகுகக்கு வாயிருமல்
அஞ்சுபா ராலொழியு மாம்.
    
    அஞ்சுபார் எனும் வேரால் உஷ்ணத்திலுண்டான வெள்ளை,ஆறாத விரணம் தொண்டைப்புண்,கப சம்பந்தமான பிணிகள்,இரத்தமூலம், கக்குவான் இருமல் குணமாகும்.

1.   20 கிராம் வேர்,நிலவேம்பு 20கிராம் இடித்து 3ல் 1ன்றாய்க் காய்ச்சி நோய்க்கு ஏற்ப 15-30மிலி தினம் 3 வேளை கொடுத்துவர முறைசுரம், நாட்சென்ற பேதி,இருமல்,கக்குவான் இருமல்,நுரையீரலைப் பற்றிய ரோகங்கள் குணமாகும்.
2.   வேர்ச் சூரணத்துடன் சமன் சர்க்கரை கூட்டி காலைமாலை திரிகடி கொடுத்துவர இரத்த மூலம்,உஷ்ணபேதி குணமாகும்.
3.   வேரை பஞ்சுபோல் இடித்து எட்டு பங்கு நீர்விட்டு 4ல்1ன்றாய்க் காய்ச்சி இளம் சூட்டில் வாய் கொப்புளித்துவர தொண்டை,நா,பல்லீறு முதலிய இடங்களில் கண்ட விரணங்கள் ஆறும்.
4.   மேற்படி கியாழத்தைக் கொண்டு ஆறாத விரணங்களை கழுவிவர ஆறும்.

கருத்துகள் இல்லை: