அகரு மரம் Aquilaria agallocha
மாற்றுப்பெயர் ;அகில்,
வளரியல்பு
இலைஅமைப்பு; பூ,காய;
மருத்துவ
பாகம் ;
இதில் சிவப்பு நிறமுடையதை செவ்வகில்(Cedrela
Toona ),வெண்மை நிறமுடையதை வெள்ளையகில் (Dysoxylum Malabaricum ),கருஞ்சாய லுடையதை
அகரு(Aquilaria agallocha) என்பர். மேலும் கள்ளிமரத்தின்
நடுவே வைரம் பாய்ந்து சிவந்ததை அகில் என்பதும் உண்டு.
கள்ளி
வயிற்றில் அகில் பிறக்கும்;மான் வயிற்றில்
ஒள்அரி
தாரம் பிறக்கும்;பெருங்கடலுள்
பல்விலைய
முத்தம் பிறக்கும்;அறிவார்யார்
நல்லாள்
பிறக்குங் குடி - சித்தர் பாடல்_
குணம் ; பித்தகாரி,சோபநாசினி,உற்சாககாரி,வேதனாசாந்தினி, உதிரவாதஹரகாரி,பூதிகந்தநாசினி
தீர்க்கும் நோய்கள்
நாசி
யடைப்பு நவிரவிடி தாளுநோய்
வீசு
நமைப்புடைகள் விட்டேகும் – பேசிற்
சுகரு
மயக்குந் துணைமுலையாய் நல்ல
அகரு
மரத்தா லறி
தளர்ந்தவி ருத்தருக்காந் தக்கமணத்தா
லுளைந்த சுரமுழுது மோடும் – வளந்திகழு
மானே யகிர்புகைக்கு வாந்தியரேசகம் போந்
தானே தளர்ச்சியறுஞ் சாற்று
1.
அகரு
மரக்கட்டையினால் பீநசம்,தலைகுத்து,வாதம்,தினவுள்ள புடைகள் (வீக்கம்)யாவும் போம்.கட்டையை
அரைத்தெடுத்த சந்தனத்தை லேபனம் செய்வதனால் விருத்தர்களுடைய தளர்ந்த தேகம் இறுகும்.வாசனையால்
சிற்சில சுரம் நீங்கும்.புகையால் அருசி,அயர்ச்சி நீங்கும். 20 கிராம் அகில் கட்டை அல்லது மரத்தூளை குடிநீர்
செய்து சர்க்கரை சேர்த்து தினம் 3 வேளை 30-50 மிலி பருகிவர உற்சாகமும் பலமும் உண்டாகும்.
2.
கட்டையை
உரைத்துப் பூச கற்றாழை நாற்றம் நீங்கும்.தளர்ந்த சரீரம் இறுகும்.
3.
கட்டிகளின்
மேல் தடவ கட்டி கரையும்.படைகளுக்குத் தடவ ஆறும்.
4.
கட்டை
40 கிராம்,செஞ்சந்தனக்கட்டை 40 கிராம்,மட்டிப்பால் 40 கிராம்,பளிங்குச் சாம்பிராணி
40,கிராம்,குங்கிலியம் 40 கிராம், பொடி செய்து,புகை பிடிக்க மூர்ச்சை,மயக்கம்,அதிக
மேல்மூச்சு தீரும்.இதை துணியில் திரியாக சுற்றியும் புகை பிடிக்கலாம்.
5.
அரைக்கிலோ
கட்டையை 2 படி தண்ணீரில் இரவு முழுதும் ஊறவிட்டு, காலையில் சிறு தீயில் எரித்து கால்படி
நீருடன் கால் படி ந.எண்ணை,கால்படி பசும்பால்கலந்ததில்,அதிமதுரம், தான்றித்தோல் வகைக்கு
10 கிராம் பசும்பாலில் அரைத்துக் கலந்து காய்ச்சி வடித்து வாரமிருமுறை தலைமுழுகிவர
நீர்தோஷம்,மேகம் தீரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக