அந்தரத் தாமரை Pistia Stratiotes Linn Areceae
வேறுபெயர்கள்:
ஆகாயமூலி, ஆகாயத்தாமரை.
ஆங்கிலத்தில்:
Pistia
Steteotes, Linn, Areceae.
வளரியல்பு
; நீரில் மிதக்கக் கூடிய
கூட்டம் கூட்டமாக வளரும்
சிறு செடி.
இலை
; காம்பற்ற இலைகளையும் குஞ்சம்
போன்ற வேர்களையும் உடையது.
மருத்துவபாகம்
; இலைகளே மருத்துவக்குணம் உடையவை.
செய்கை
;சீதளகாரி,அந்தர்ஸ்நிக்தகாரி
மருத்துவக்
குணங்கள்:அழுகினரணம்,குஷ்டம்,கரப்பான், மார்பினுள் உண்டாகும்
கிருமிக் கூடுகள் போகும்.உட்சூடு தணித்தும், தாகத்தை அடக்கியும், தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகவும் பயன்படுகின்றது.
அழுகிரந்தி குஷ்ட
மடர்ந்த கரப்பான்
புழுவுறுமக் கூடுமுதற்
போகும்-அழகாகு
மிந்திரநீ லக்கருங்க
ணேந்திழையே யெப்போழ்து
மந்தரத் தாமரையா
லாய்.
பதார்த்த
குண விளக்கம்
தமிழகம்
எங்கும் குளம், குட்டைகளில்
தானாகவே வளர்கின்றது.
- அந்தரத் தாமரை இலையைச் சுத்தமாகத் தேய்த்துக் கழுவி சாறு பிழிந்து 20 மில்லியளவு எடுத்து அதில் சிறிதளவு வெங்காயத்தைச் சாறு பிழிந்து 2 வேலை குடித்து வர சொருக்கு மூத்திரம் கட்டுப்படும்.
- இலையை அரைத்துக் கரப்பான், தொழுநோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டிவர விரைவில் ஆறும்.
- இலையை அரைத்து ஆசன வாயில் வைத்துத் தொடர்ந்து கட்டிவர வெளிமூலம், ஆசனக்குத்தல் குணமாகும்.
- இலைச்சாறு அரை லிட்டர், நல்லெண்ணெய் 1 லிட்டர் சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி மெழுகுப் பதமான நிலையில் கிச்சிலிக் கிழங்கு, சந்தனத்தூள், வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி வகைக்கு 10 கிராம் இடித்துப் போட்டுக் காய்ச்சி வடிகட்டி(வடிகட்டி) வாரம் ஒரு முறை தலை முழுகி வர உடல் சூடு, கண் எரிச்சல், மூல நோய் குணமாகும்
- இலையை கைப்பிடியளவு எடுத்து நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவிபிடிக்க மூலமுளை அறும்.
- இலைசாறு சுரசம் 25மிலி சிறிது தேனுடன் தினம்2வேளை 5நாள் கொடுக்க மார்பினுள் உண்டாகும் கிருமிக் கூடுகள் போகும்.நீர்ச்சுருக்கு,மூலம், சீதபேதி, பொடி இருமல் தீரும்.
- இலையைச் சாறு 100 மிலி, சிறிது எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து இளஞ்சூடாகக் காய்ச்சி, துணியில் தொட்டு வெளிமூல முளைப்பு, மூல வலி, மூல எரிச்சல் போன்றவற்றிற்கு ஒற்றடம் கொடுக்கக் குணமாகும்.
- இலையை நிழலில் உலர்த்திப் பொடியாக்கி,கருங்குறுவை அரிசிமாவு சமஅளவு கலந்து பிட்டவியல் செய்து நல்லெண்ணைய் விட்டுப் பிசைந்து 3 கரண்டியளவு சாப்பிடவும். அத்துடன், மாதுளங் கொழுந்தை காடியில் அவித்து மூலத்தில் வைத்துக் கட்ட மூலமுளை விழும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக