பக்கங்கள்

29 அக்டோபர், 2016

முகப்பரு,கரும்புள்ளி(ACNE VULGARIES)



உடம்பில் எண்ணைபசை சுரப்பிகளில்(sebaceous glands)தோன்றுகிற நோய் ஆக்னி(acne)யாகும். இதில் பலவகை உண்டு. நாள்பட்ட வயிற்றுக்கோளாறுகளாலும்,மலச்சிக்கலாலும்,தவறான உணவுப் பழக்கங்களாலும் உண்டாகும்.                                                              

பொடுகை உண்டாக்கி முடி உதிர்தல்,மூக்கு,கண்னங்களில் பொருக்கு கட்டும் படை உண்டாக்குவது  ஒரு வகை.                                                      வயதானவர்களுக்கு முகத்தில் அல்லது தலையில் சிறுசிறு கெட்டியான கட்டிகளை உண்டாக்குவது ஒருவகை.                                                                குழந்தைகளின் முகத்தில் மிருதுவான கட்டி(பாலுண்ணி) உண்டாக்குவது ஒருவகை.  ஆக்னிரோஸஸீ(acne rosaeea) ; மூக்கையும்,கன்னங்களையும் சிவக்க வைக்கும்.   ஆக்னிவாரியோலிஃபார்மிஸ்(acne vorioliformis);நெற்றி சிவந்துபோய்,எரிச்சலும் இருக்கும்.    ஆக்னி வல்காரிஸ் (acne vulgaris);முகத்தில் கரும்புள்ளிகளையும்,பருக்களையும் உண்டாக்கும். இது 4 -25 வயது வரை உள்ள ஆண்களுக்கும்,12 -21 வயதுவரை உள்ள பெண்களுக்கும் மட்டுமே வரும்

அதிக எண்ணெய் பசை இருந்தால் முகத்தில் பரு வரவாய்ப்புகள் அதிகம்ஆகையால் எண்ணெய் பசையில்லாமல் பார்க்கவும் உடலில் சேரும் கொழுப்புச்சத்துக்களின் ஒவ்வாமையினால்முகப்பரு ஏற்படுகிறது.
மேலும் மன இறுக்கம், மலச்சிக்கல் இவற்றாலும் உண்டாகிறது.உணவுமுறை மாறு பாட்டாலும் முகப்பரு தோன்றும்
1.   பறங்கிப்பட்டைச்சூரண மாத்திரை2,தினம்3வேளை சாப்பிட முகப்பரு குணமாகும்
2.   சங்கை நீரில் இழைத்துப்பூச முகப்பருக்கள் உதிரும்
3.   திருநீற்றுப்பச்சிலை இலைச்சாறை தடவ முகப்பரு குணமாகும்
4.   அம்மான்பச்சரிசிப்பாலை முகத்தில் தடவ முகப்பரு,எண்ணைப்பசை மாறும்
5.   திருநீற்றுப்பச்சிலைச்சாறுடன் இளநீரில் வசம்பு சேர்த்தரைத்துப் பூச முகப்பருக்கள் மறையும்
6.   சந்தனக்கட்டையை எலுமிச்சை சாறிலரைத்துப்பூச படர்தாமரை, வெண்குஷ்டம், முகப்பரு குணமாகும்
7.   குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்தரைத்துப்பூச பருக்கள், கரும்புள்ளிகள், மறையும். முகம் பொலிவு பெறும்
8.   நாயுருவிவேர்,தண்டுகளை பொடித்து வெந்நீரில் குழைத்துப்பூசிவர முகம் பொலிவடையும்
9.   இஞ்சிச்சாறெடுத்து தெளிவை வடித்து,மண்டியுடன் சிறிது தேன் கலந்து பருக்களில் தடவிவர மறையும்
10.  வெள்ளைப்பூண்டை பாலில் வேகவைத்து அரைத்து பருக்களின் மீது பூச பருக்கள் மறையும்
11.  அவரையிலைசாறை காலையில் தடவி 1மணி நேரம் கழித்துக் குளிக்க முகம் பளபளப்பாயிருக்கும்
12.  கடற்சங்கை பசுவின்பாலிலுரைத்துப்பூச பருக்கள் மறையும்
13.  தினம்8குவளை தணணீர் பருகிவர முகப்பரு,கண்வளையம் வராது
14.  கடுக்காய் பிஞ்சையிடித்து,மண்பானையிலிட்டு,சிறிது நீரூற்றி,மெல்லிய துணியால் மூடி, நிலவொளியில் வைத்து காலையில் முகம் கழுவ சுருக்கங்கள் மறையும். முகம் பொலிவுறும்.
15.  சந்தனத்தை கரைத்து பாசிப்பயறு சேர்த்தூறவைத்தரைத்துப்பூசிவர கரும்புள்ளிகள் மறையும்
16.  துளசியிலைச் சாற்றை இரவில் தேய்த்து காலையில் கழுவிவர முகம் பொலிவுறும்
17.  சாதிக்காயை அரைத்து சந்தனம் சேர்த்து இரவில் பூசி காலையில் கழுவிவர முகப்பருக்கள் மறைந்து,முகம் பொலிவுறும்
18.  தயிரின் மேல்படியும் பாலாடையுடன்,மஞ்சள்தூள் சேர்த்து குழைத்து,இரவில்பூசி, காலை சீயக்காய்தூள் கொண்டு முகம் கழுவ கரும்புள்ளிகள் மறைந்து, பளபளக்கும்
19.  சீரகத்தை எருமைப்பாலிரைத்துப் பூச முகப்பரு மறையும்
20.  செடிகளின்மீது படிந்திருக்கும் பனித்துளிகளை பஞ்சிலொற்றி முகத்தில் தடவி வர முகம் பளபளக்கும்
21.  5 வெள்ளைப் பூண்டை மேல்தோல் நீக்கி 10மிளகு, கைப்பிடி துத்தி இலை சேர்த்தரைத்து அடுப்பேற்றி,50மிலி சிற்றாமணக்கெண்ணைவிட்டு சிவக்கக் காய்ச்சி, வடித்து,தினம்3வேளை முகத்தில் தடவிவர முகப்பருக்கள் மறையும்
22.  200மிலி பாலில்,எலுமிச்சைசாறு,1தேகரண்டி கிளிசரின் கலந்து அரைமணிநேரம் ஊறவைத்து படுக்கும்முன் முகம்,கை,கால்களில் தேய்க்க பளபளப்புடன் இருக்கும்
23.  தர்பூசனி பழச்சாற்றை முகத்தில் தடவி, 15 நிமிடங்களூறவைத்து, வெந்நீரில் கழுவி, பின் குளிர்ந்த நீரில் கழுவ பரு,வடுக்கள் மறையும்
24.  தக்காளிச் சாற்றை முகத்தில் தடவி 1மணிநேரம் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ முகம் பளபளக்கும்
25.  மஞ்சளை அரைத்து முகத்தில் தேய்த்துக் கழுவிவர முடி முளைக்காது
26.  பச்சைபப்பாளியும் மஞ்சளும் சேர்த்தரைத்து பூசி ஊறவைத்துக் கழுவிவர முடி முளைக்காது
27.  கஸ்தூரிமஞ்சள்,பாலாடை சேர்த்தரைத்துப் பூசிவர முடி முளைக்காது
28.  சந்தனம்,மஞ்சள் சேர்த்தரைத்துப் பூசிவர முகப்பரு மறையும்
29.  மஞ்சள்,எலுமிச்சை கொழுந்திலை சேர்த்தரைத்துப்பூசி,1மணிநேரம் ஊறவைத்து இளம்சூட்டில் கழுவ முகப்பரு, முககருமை மறையும்
30.  1தேகரண்டி வெள்ளரிக்காய் நீர் சமன் தயிர்,திரிகடி மஞ்.தூள்,அரைகோப்பை தக்காளி நீர் கலந்து பூசிவர முகம் பொலிவுறும்
31.  மஞ்சள்,வேப்பிலை சேர்த்தரைத்துப் பூசிவர முகப்பரு மறையும் 
32.  மஞ்சள்,பாலாடை சேர்த்தரைத்து பூசிவர முகப்பரு மறையும்
33.  மஞ்சள்,கறிவேப்பிலை சேர்த்தரைத்து,முட்டை வெண்கரு கலந்து பூசி.அரைமணி ஊறவைத்து கழுவ முகப்பரு மறையும்
34.  கஸ்தூரிமஞ்சளை ரோஜா நீரிலரைத்து,வெயிலில் வைத்துப் பூசிவர முகப்பரு மறையும்
35.  பாசிப்பயரை அரைத்து,பாலில் குழைத்து,சிறிது எலுமிச்சைசாறு,திரிகடி மஞ்.தூள் கலந்து பூசி, 1மணி ஊறவைத்திளம் சூடான நீரில் கழுவிவர முகப்பரு மறையும்
36.  சந்தனம்,மஞ்சள் இளநீரிலரைத்துப்பூசி,1மணிநேரம் கழித்து கழுவ முகம் பொலிவுறும்
37.  துளசியிலை,மஞ்சள் சேர்த்தரைத்துப் பூசிவர கரும்புள்ளிகள் மறையும்
38.  பப்பாளிப்பழத்தை குழைத்து பூசி,20நிமி.ஊறவைத்துக்கழுவ கரும்புள்ளிகள் நீங்கும்
39.  வெங்காயச்சாற்றை தடவி ஊறவைத்துக் குளிக்க வேர்க்குரு மறையும்
40.  துளசியிலை,வேப்பிலை சேர்த்தரைத்து பூச முகப்பரு மறையும்
41.  கானாவாழை இலையை கசக்கி வைக்க முகப்பரு மறையும்
42.  தினம் அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ தேவையற்ற முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
43.  தினம் பாசிப்பயறு மாவை தேய்த்து குளித்து வர முகம் பொலிவு பெறும். கரும்புள்ளிகள் மறையும்
44.  பப்பாளி பாலுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சிறிதளவு சீரகத்தை ஊறப் போட்டு. கால் மணி நேரம் வைத்திருந்து நன்றாகத் தடவி விட முகப்பருக்கள் மறைந்து விடும்.
45.  கசகசா, மஞ்சள், கறிவேப்பிலை சிறிதளவு எடுத்து மை பதத்திற்கு அரைத்து அம்மை வடுக்கள் மீது பூசி 15-20 நிமிடங்கள் உலர விட்டு பயத்த மாவினால் கழுவ அம்மை வடுக்கள் நீங்கி முகம் மினுமினுக்கும்
46.  தினசரி ஒரு எலுமிச்சம் பழத்தை குறுக்காக வெட்டி அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் பரவலாக அழுத்தமாகத் தேய்த்து விட அம்மைத் தழும்புகள் மறைந்து விடும்.
47.  எலுமிச்சசம் பழ சாற்றை மெல்லிய துணியினாலோ, மிருதுவான பஞ்சினாலோ தொட்டுப் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 10 நிமிடங்கள் உலரவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாகக் கழுவ முகம் கருமை நீங்கும்.
48.  புனுகு தடவி விட்டு சில மணி நேரம் கழித்து முகத்தை கழுவ முகப்பரு மறைந்து போகும்.
49.  காலையில் பல் துலக்கும் போது, வாய் நிறைய தண்ணீரை வாய் வலிக்கும் வரை வாயிலேயே வைத்திருந்து துப்ப கன்னத் தசைகள் விரிவடையும். தழும்புகள் மறையும்.
50.   நீரில் துளசி இலைகளை போட்டு குளித்துவர சருமத்தில் உள்ள சிறு தழும்புகள் மறையும்.
51.  தக்காளி சாற்றினை முகத்தில் தடவி வர முகம் பொலிவு பெரும், கரும்புள்ளிகள் மறையும்.
52.     மஞ்சளை இரவில்பூசி காலையில் கழுவிவர தேவையில்லாத முடி நீங்கும்.
53.      தேனுடன் சிறிது லவங்க பட்டையின் தூளை சேர்த்து முகத்தில் தடவமுகப்பரு நீங்கும்
54.  கடுகை அதனுடன் சிறிது தேனை கலந்து முகத்தில் தடவ முகப்பரு நீங்கும்
55.  முட்டையின் வெள்ளை கருவை முகத்தில் தடவி வர முகப்பரு  நீங்கும்
56.  மாலை 1 கைபிடி வேப்பிலையை 1 கோப்பை தண்ணீரில் போட்டு காலையில் முகம் கழுவ பரு வராது,
57.  பாசிப்பயறு மாவை தேவையான அளவு எடுத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து நன்கு கலக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து பின் நீரில் முகத்தை கழுவ முகப்பரு நீங்கும். பருவினால் உண்டான தழும்புகள் மாறும்.
58.  சோற்று கற்றாழை பிசினை தடவி வர பருக்கள் மறையும்
59.  காய்ச்சாத பாலினை முகத்தில் தடவிவர முகப்பரு  நீங்கும்
60.  எலுமிச்சை சாற்றுடன் 4 சொட்டு தேன் கலந்து பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவ கரும்  புள்ளிகள் மறையும்
61.   சர்க்கரையுடன் தேனைக் கலந்து, முழங்கை, முழங்கால் உள்ளிட்ட பகுதிகளில் தடவ முழங்கையானது வெள்ளையாகும்                                                            
62.   1/2 கோப்பை  தண்ணீரில் புதினாவை கொதிக்க விட்டு,அதில் பாதி எலுமிச்சையை பிழிந்து, முழங்கையில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில்  கழுவ அப்பகுதியில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, விரைவில் முழங்கையானது வெள்ளையாகும்                                                              
63.   சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயிலை சமமாக எடுத்து,குழைத்து முழங்கையில் தடவி 5 நிமிடம் தேய்த்து, 5 நிமிடம் ஊற வைத்து, உசிலை பொடி பயன்படுத்தி கழுவ முழங்கையில் உள்ள கருமை மறையும்.
64.   பேக்கிங் சோடா மற்றும் பால் பேக்கிங் சோடாவை பாலில் குழைத்து முழங்கையில் தடவி சிறிது நேரம் தேய்க்க, கருமை மறைய ஆரம்பிக்கும்.
65.  1 தேகரண்டி தேங்காய் எண்ணெய், 1/2 தேகரண்டி எலுமிச்சை சாறு கலந்து, முழங்கையில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் துடைத்து எடுக்க முழங்கையில் வறட்சி நீங்கி, முழங்கை மென்மையாக இருக்கும்.
66.  எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து உசிலை பொடி போட்டு குளிக்க கை,கால் முட்டிகளில் கறுப்பு நிறம் போய் விடும்.
67.   ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, குளிக்க தோல் வறண்டும் சுருக்கமும் இருந்தால் மறையும்
68.  தோல் சீவி துருவிய உருளைக்கிழங்கு அரை கோப்பை, எலுமிச்சைச் சாறு அரை தேகரண்டி, சிவப்பு சந்தனம் ஒரு தேகரண்டி, சுடு தண்ணீரில் கலந்து முகத்தை ஒரு மெல்லிய மஸ்லின் துணியால் மூடி, அதன் மேல் இதனை தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவ முகத்தில் உள்ள தோல் பகுதி இறுகி, இளமையான தோற்றம் கிடைக்கும்.
69.   கோதுமை மாவு ஓட்ஸ் பவுடர் பாசிப்பயறு மாவு சமமாக எடுத்து பாலுடன் கெட்டியாக குழைத்துக் கழுத்தில் தடவி சில நிமிடங்கள் தேய்த்து 20 நிமிடம் கழித்து கழுவ கருமை நிறம் மறையும்
70.  பப்பாளிபழத்தோல்,எலுமிச்சைதோல்,ஆரஞ்சுதோல் – இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்த்து வர படிப்படியாக கருமை நிறம் மறையும்.
71.  பயத்த மாவு ஆலீவ் ஆயில் ரோஸ் வாட்டர் இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூச கருமை நிறம் படிப்படியாக மறையும்.
72.  முட்டைக்கோசை அரைத்து சாறெடுத்து கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்க்க கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.
73.   பால் தேன் எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலச செயினால் கருத்த கழுத்து நிறம் படிப்படியாக மாறும்.
74.  ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து சாமந்திப்பூவின் இதழ்களை மட்டும் போட்டு, அடுப்பை அணைத்து, ஒரு இரவு முழுவதும் அப்படியே மூடி வைத்து விட்டு, காலையில் வடிகட்டி,முகம் கழுவ, முகம் பொலிவு பெறும். சருமத்தின் கருமை நீங்கும். இளமையான தோற்றம் கிடைக்கும்.   இந்தத் தண்ணீரை இரண்டு நாட்களுக்கு ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.
75.  சாமந்திப்பூ கலந்த டீ டிகாக்ஷனை குளிர வைத்து, அதில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் வைத்து ஓய்வெடுத்தால் கண்களுக்கு அடியில் உள்ள கருமை நீங்கும். கண்களின் வீக்கம் குறையும்.
76.  சாமந்திப்பூ கலந்த டீ டிகாக்ஷனை நீர்க்கச் செய்து, பஞ்சில் தொட்டு முகம் முழுக்கத் தடவி, சிறிது நேரம் கழித்துக் கழுவ வெயில் பட்டுக் கருத்துப் போன சருமம் பளபளக்கும்.
77.  கோப்பியை (காபி) மாவாக செய்து அதில் தேன் அதனுடன்  சேர்த்து முகம் மற்றும் கழுத்து வரை பூசி 15-20 நிமிடங்கள் வைத்திருந்து பின் குளிர் நீரில் கழுவி வர முகம் பொன் நிறமாக ஜொலிக்கும்.
78.  முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவி காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.
79.  மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.
80.  பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவ சருமம் மிகவும் மிருதுவாகும்.
81.  ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் உலர வைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வர , வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.
82.  பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், கலந்து முகத்தில் தடவி குளிக்க சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
83.  தேங்காய்ப் பாலுடன் ஒரு தேகரண்டி தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் தேய்க்க சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.
84.  தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவ சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
85.  குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்க ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.
86.  தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளிக்க தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
87.  ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து உசிலைபொடி போட்டு தினம் கழுவ முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
88.  வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை உலர வைத்து, தூளாக்கி, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளிக்க  முகம் வேர்க்குரு வராமல், கறுத்துப் போகாமல் இருக்கும்.
89.  ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, உசிலைபொடி  போட்டு குளிக்க தோல் வறட்சி சுருக்கம் நீங்கும்

90.  ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவ சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
91.  இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.
92.  துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்து ஊற விட்டு, குளித்து வர முகம் அழகு பெறும்.
93.  சிறிதளவு வெண்ணெயை உதட்டில் தினமும் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவ உதட்டிலுள்ள கருமை நீங்கி, இயற்கையான ரோஸ் நிறம் கிடைக்கும்.
94.  தினம் அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவிவர முகத்தில் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
95.  வேப்பமரப் பட்டையை வெண்ணையில் அரைத்துத் தடவ முகப்பரு மறையும்.
96.  மஞ்சளை, கறிவேப்பிலையுடன் சேர்த்து அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவ முகப்பரு மற்றும் அதனால் ஏற்பட்ட வடுக்களும் மறையும்.
97.  துளசி சாற்றை தினமும் முகத்தில் தேய்த்து அரைமணி நேரம் கழித்துக் கழுவி விட முகப் பரு தொல்லை ஏற்படாது.
98.  மஞ்சளைக் குழைத்து முகத்தில் தடவி, ஒரு மணி நேரம் கழித்துக் கழுவி விட ரோமம் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.
99.  குப்பை மேனி இலை வேப்பங்கொழுந்து விரலி மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து படுக்கைக்கு போகும் முன் மேலுதட்டில் .தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வர பூனை முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும்.
100.        நெருஞ்சி முள் தூள் 100 கிராம், கறிவேப்பிலை தூள் 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் தூள் 100 கிராம், கசகசா தூள் 10 கிராம் ஆகியவற்றை காய்ச்சாத பாலில் குழைத்து இரவு படுக்கப் போவதற்கு முன் சருமத்தில் தழும்புகளின் மேல் தடவிக் கொண்டு தூங்க கருமை நீங்கும்.
101.தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளிக்க தோல் பளபளப்பாகவும்,  மிருதுவாகவும் இருக்கும்.
102.மஞ்சள் பொடியுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் நீரை விட்டுக் கலக்கி, பருக்கள் மீது தட.வி சுமார் 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ நல்ல பலன் கிடைக்கும்.             
103.பன்னீருடன் முல்தானி மெட்டியைக் கலந்து அதை முகம் முழுவதும் சீராகத் தடவி, உலர்ந்த பின்னர் முகத்தைக் கழுவ, பருக்கள் மட்டுமில்லாமல் முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் எண்ணெயும் நீங்கி விடும்.
104.ஆரஞ்சுத் தோலுடன் மைசூர் பருப்பு பொடி, சிறிதளவு தேன் அல்லது பால் கலந்து தடவ,சருமம் பளபளக்கும்
105.கடலை மாவு, மஞ்சள், எலுமிச்சை சாறு மற்றும் பால் ஏடு ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தடவ,முகம் நன்றாக ஒளிரும்.
106.பப்பாளிக் கூழ் 1 தேகரண்டி, தேன் 1 தேகரண்டி, எலுமிச்சைச்சாறு 10 துளிகள் மூன்றையும் கலந்து முகம், கழுத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவ, வறண்ட சருமம் பொலிவு பெறும்.
107.கொத்தமல்லித் தழையையும், புதினாவையும் சம அளவு எடுத்து அரைத்து, எலுமிச்சை கலந்து முகத்தில் தடவ, எண்ணெய் வழிகிற சருமம் அழகு பெறுவதுடன், மன அழுத்தமும் சரியாகும்.
108.பாலாடை அல்லது தயிருடன், தேன் கலந்து கண்களுக்கடியில் தடவி, சிறிது நேரம் ஊறிக் கழுவ கருவளையங்கள் மறையும்.
109.பாதாமும், ஓட்ஸும் சம அளவு எடுத்து பால் விட்டு அரைத்து முகத்தில் தடவிக் கழுவ, சருமம் பளபளப்பு பெறும்.
110.தினமும் கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்ள பருக்கள் வராமல் தவிர்க்கலாம்.
111.        மஞ்சள் பூசி குளிப்பதனால் முகம் பிரகாசமடைந்து, எண்ணெய் வடியாமல் இருப்பதுடன் என்றும் இளமையுடன் தோற்றமளிக்கலாம்.
112.அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர முகப்பருக்கள் ஒழியும்.
113.உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ பொலிவு பெறும்.
114.    தக்காளி சாற்றினை முகத்தில் தடவி வர முகம் பொலிவு பெறும், கரும்புள்ளிகள் மறையும் .

கருத்துகள் இல்லை: