- ஆடுதீன்டாபாளை வேர்சூரணம் 10கிராம் வெந்நீரில் கொடுக்க மகப்பேறு வேதனை நீங்கி சுகப்பிரவசம் ஆகும்
- 1துண்டு சுக்கு, 1துண்டு சார்ணவேர் இடித்து 2ல்1ன்றாய் காய்ச்சி 250மிலி பருகி வர 3-7 நாளில் சுகப்பிரசவமாகும்
- வெண்தாமரை பூவை எலுமிச்சையளவு அரைத்து பாலில் கொள்ள கர்ப்பிணிகளுக்கு பசி எடுக்கும்
- மாதுளை பழச்சாறு 100மிலி காலையில் பருகிவர தலைச்சுற்றல், கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி, இரத்தசோகை, உடற்சோர்வு நீங்கும்
- கறிவேப்பிலைபொடி 100கிராம் மிளகுபொடி50கிராம் சீரகபொடி50கிராம் கலந்து சுடுசாதத்தில் முதலில் 1கரண்டி நெய் சேர்த்து சாப்பிட்டு வர கர்ப்பகால வாந்தி வராது. பசி எடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும் .
- பற்ப்பாடகம், கரிப்பான் வகைக்கு எலுமிச்சங்காய் அளவு அரைத்து 1படி பசுநெய்யில் கரைத்து சிவக்க வெந்தபதத்தில் இறக்கி கருத்தரித்த 5ம் மாதம் முதல் சிறுகரண்டியளவாய் நெய் முழுதும் சாப்பிட கர்ப்பத்தையொட்டிய பிணிகளும்,,குழந்தை பிறந்தவுடன் காணும் செங்கரப்பன்,கொள்ளிக்கரப்பன் தீரும்.குழந்தை ஆயுசுடன் பிறக்கும்.பத்தியம் இல்லை..
- பற்பாடகம்,நெல்லி சாம்பல் அரைத்து பாலில் குடிக்க கர்ப்பகாலத்தில் காணும் துவாலை தீரும். புளி நீக்கவும்.
- அத்தி,ஆல்,மா,அரசு துளிர்களை சமன் எடுத்து கசாயம் செய்து சாப்பிட துவாலையால் கானும் தாக மூர்ச்சை தீரும்.பத்தியம் இல்லை.
- சிற்றாமுட்டிவேர்,பேராமுட்டிவேர்,சீந்திற்கொடி,நிலவேம்பு,சுக்கு,திப்பிலி இவைகளை இடித்து காய்ச்சி குடிக்க கர்ப்பகாலத்தில் காணும் சுரம் தீரும்
- நீர்முள்ளிஇலை,பசலிஇலை,குப்பைமேனி இலை,முள்ளி இலை இவைகளில் ஒன்றை அவித்து சாப்பிட கர்ப்பவதிகளுக்கு காணும் நீர்ச்சிறுப்பு, நீர்பணைப்பு தீரும்.
- நன்னாரிவேர் அல்லது உலர்ந்த ரோஜாபூவை கசாயம் செய்து சாப்பிட நீர்ச்சிருப்பு தீரும்.
- மாதுளம்பழத்தரிசியை ஆவின் பாலிலரைத்துக் கொடுக்க கர்ப்பவதிகளுக்கு கல்லடைப்பு கண்டால் தீரும்.
- மந்தாரையிலைச்சூரணம் தேனுடன் கொள்ள வாந்தி,குமட்டல்,மசக்கை நீங்கி பசி உண்டாகும்.
- நன்கு காய்ச்சிய பாலை காலையில் சாப்பிட்டுவர நோய் எதிப்புசக்தி கூடும்.
- பூசணிக்காயை அளவான காரத்தில் சமைத்து சாப்பிட்டுவர குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
- கர்ப்பிணிகள் கேரட்டை ஜூசாகவோ அப்படியேவோ சாப்பிட்டுவர இரத்தம் விருத்தியாகும்.
- கொய்யாப்பழம்,நெல்லிக்காய்,ஆரஞ்சு,தக்காளி சாப்பிட வைட்டமின் குறைபாடுகள் நீங்கும்.
- உலர்ந்த பழங்கள்,கொட்டைகள் (D ry fruits,nuts)சாப்பிடுவது ஆரோக்கியமான குழந்தையை தரும்.
- சீராசெங்கழுநீர்,வேப்பீர்க்கு,சிறுவழுதலைவேர்,கோங்கிலவின்வேர்,உலர்ந்த இஞ்சி,மல்லி வகைக்கு 10கிராம் இடித்து கசாயம் செய்து சர்க்கரை கலந்து கொடுக்க கர்ப்பகாலதில் காணும் காய்ச்சல் தீரும்
- ஏலக்காய் மேல்தோல் நீக்கி,அரிசியை பொடித்து2கிராம்,தேவையான அளவு எலுமிச்சை சாற்றில் குழைத்து,தினம்3வேளை உணவுக்குப்பின் சாப்பிட்டுவர கர்ப்ப காலத்தில் ஏற்படும் அஜீரணம்,குமட்டல்,வாந்தி தீரும்
- கல்யாணமுருங்கை இலைகளுடன் சிறுபயறு,சேர்த்தவித்து,கர்ப்பிணிகளுக்குக் கொடுக்க சிறுநீர் தாராளமாய் இறங்கும்.பால்சுரப்பு கூடும்
- தண்ணீர்விட்டான்கிழங்குசாறு200மிலியுடன்,1தேகரண்டி சர்க்கரை சேர்த்துக் காலையில் பருகிவர நீர்கட்டு,நீர்க்கடுப்பு,வயிற்றுஎரிச்சல் குணமாகும். தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்
- மாம்பழம் சாப்பிட்டு வர பிறக்கும் குழந்தை ஊட்டச் சத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கைகால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.
- பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வர குழந்தை நல்ல வளர்ச்சி பெறும்.
- நெல்லிக்காய் முருங்கைக்காய், முள்ளங்கி இவைகளை உணவில் சேர்த்து வர கைகால் வீக்கம் வராமலிருக்கும்.
- அமுக்கராங் கிழங்கை இடித்து 200மிலி தண்ணீரில் 100 மிலியாக சுண்ட வைத்து காலை மாலை தேன் கலந்து சாப்பிட்டு வர தேக பலம் கிடைக்கும்.
- கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்ப வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
- அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட குழந்தை வெளுப்பாக அழகாக இருக்கும்.
- வெற்றிலையுடன் சிறிது குங்குமப் பூவை சேர்த்துச் சாப்பிட எளிதில் ஜீரணமாகும்.
30. 4
கிராம் குங்குமப் பூவை பாலில் கரைத்து குடிக்கக் கொடுக்க உடனடியாக சுகப்பிரசவம்
ஆகும்.
கர்ப்பமாக இருக்கும் போது
தவிர்க்க வேண்டிய காய்கறிகள்!
கர்ப்பமாக இருக்கும் போது
எந்த ஒரு உணவிலும் கவனமாக இருக்க வேண்டும்
ஒருசில உணவுகளில் வயிற்றில் வளரும் சிசுவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும்
வைட்டமின்கள் அதிகமாக இருந்தால், இரத்தக்கசிவு ஏற்படுவதோடு,
கடுமையான வலியையும் உண்டாக்கும்.
கத்திரிக்காயில் இரும்புச்சத்து
அதிகம் இருந்தாலும்,அதிகம் உட்கொண்டால், இது கருச்சிதைவிற்கு வழிவகுக்கும்.
வெந்தயக் கீரையை அதிகம்
சாப்பிட்டால், சிசுவின் மூளை வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.இந்த கீரையை
இறுதி மூன்று மாதங்களில் தொடக் கூடாது.
பசலைக் கீரையை தினமும்
உட்கொண்டு வந்தால், விரைவில் கருச்சிதைவு ஏற்படும். இந்த கீரையை மாதத்திற்கு ஒரு முறை
சாப்பிட்டால் போதும்.
கசப்பு தன்மையுடைய ப்ராக்கோலியை
தினமும் குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் இதனை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் வைட்டமின்
சி அதிக அளவில் நிறைந்துள்ளது.தினமும் உட்கொண்டால் கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
காலிஃப்ளவர் சாப்பிட்டால்
நல்லது என்று சொன்னாலும், இதனை கோபி மஞ்சூரியன் போன்று செய்து சாப்பிட்டால், கர்ப்பமானது
பிரச்சனையாகிவிடும். இதிலும் வைட்டமின் சி எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது.
குடமிளகாயின் சுவை அனைவரையும்
ஈர்க்கும். ஆனால் இதனை சாப்பிட்டால், கர்ப்பத்தில் பிரச்சனை ஏற்படும். ஆகவே பிரசவம்
முடியும் வரை இதனை சற்று தவிர்க்கலாம்.
ஒவ்வொரு மாதமும் சாப்பிட
வேண்டிய மருந்துகள்;
1 ம் மாதம்: தாமரைப் பூவின் காய், சந்தனம் சேர்த்தரைத்து சாப்பிடலாம்
2 ம் மாதம்: நெய்தல்கிழங்கு,கோரைக்கிழங்கு,அதிமதுரம்,இஞ்சி சேர்த்தரைத்து பாலில் கலந்து பருகவும்
3 ம் மாதம்: சந்தனம், தகரை,கோஷ்டம்,தாமரை,அல்லி, சீந்தில்தண்டு, நெருஞ்சில்வேர் ஆகியவற்றை சேர்த்தரைத்துக் கொள்ளவும்
4 ம் மாதம்: நெய்தற்கிழங்கு,சீந்தில்தண்டு,நிலப்பனை,நெருஞ்சில்வேர் சேர்த்தரைத்து சாப்பிடலாம்
5 ம் மாதம்; தாமரைகிழங்கு,இலுப்பைபூ,அழிஞ்சில் விதை,தகரை,எள் நெய்தல் கிழங்கு சேர்த்தரைத்து உண்ணலாம்.
6 ம் மாதம்; முயல்பித்தம் அல்லது கோரோசனையை
நீரில் அரைத்துக் கொள்ளவும்.
7 ம் மாதம்;கச்சோலம்,ஆமணக்குவேர்,நெய்தல்கிழங்கு அரைத்து தேன் கலந்து நீரில் கரைத்துப் பருகவும்
8 ம் மாதம்; அதிமதுரம்,தாமரைவித்து,முத்தக்காசு,விளாம்பிஞ்சு,யானைதிப்பிலி, நெய்தல்கிழங்கு அரைத்துப் பாலில் கொள்ளவும்
9 ம் மாதம்; தாமரை விதையை பொடிசெய்து தேனில் கலந்து கொள்ளவும்
10 ம் மாதம்; கோரைக்கிழங்கு,திராட்சை,நெய்தல்தண்டு,சர்க்கரை அரைத்தது தேனில் கலந்து கொள்ளவும்
வேறு;
1ம் மாதம் கர்ப்பஞ் சிறுவலியாய் வலித்தால் ; தாமரைப்பூ,விலாமிச்சவேர்,சந்தனம்,
நீரிலரைத்துப்
பாலில் கொடுக்கவும்.
2ம் மாதம்; வலித்தால் தக்கோலம்,தாமரைப்பூ பசும்பாலில் அரைத்துக்
கொடுக்கவும். 3ம்மாதம் ;வயிறு உளைந்தால் ; வெந்தாமரை மலரும்,செங்கழுநீர்க் கிழங்கும் அரைத்து பாலில் கொடுக்க தீரும்.
4ம்மாதம் ; வலித்து இரத்தங்கண்டால் ;
நெய்தற்கிழங்கு,நொச்சிவேர் அரைத்து பாலில் கொடுக்கத்தீரும்,
5ம்மாதம் ; வயிறு வலித்தல் ; ஆம்பல் பூவும்,விலாமிச்சவேரும் அரைத்துப் பாலில் கொடுக்கத்தீரும்.
6ம்மாதம் ;கெர்ப்பக்குடல்அழன்று சுற்றிவலித்துசுழன்று நீர்ச்சுருக்கில்; திப்பிலி,முந்திரிப்பழம்,நெய்தற்கிழங்குஅரைத்துப் பாலில் கொடுக்க தீரும்.
7ம்மாதம் ; வயிறுவலித்தால் ; விலாமிச்சவேர்,சந்தனம், தக்கோலம் அரைத்துப் பாலில் கொடுக்க தீரும்
8ம்மாதம்; கைகால் அயர்ந்து பசி இல்லாதிருந்தால் ; தாமரைப்பூவும்,நெய்தற்கிழங்கும் அரைத்துபாலில்கொடுக்கதீரும்.
9ம்மாதம்; சூல் நோகில் ; அரசந்தோலும்,மருதந்தோலும் அரைத்தபாலில் கொடுக்கவும்
10ம்மாதம் ; வயிறுஉளைக்கில்; சர்க்கரையும்,இலுப்பைபூவும அரைத்து பாலில் கொடுக்கவும்.
1 கருத்து:
மிக அருமை .பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி.
கருத்துரையிடுக