பக்கங்கள்

29 அக்டோபர், 2016

மிகுதாகம்,மிகுவியர்வை,அதிமூத்திரம்.



     

1.   ஆவாரைவேர்,இலை,பட்டை,பூ,காய் சமனெடுத்து  பொடித்து,10கிராம் தினம்3வேளை, நீடித்துக் கொள்ள பிரமேகம்,மதுமேகம்,மிகுதாகம், மிகுபசி, உடல்மெலிவு,பலக்குறைவு தீரும். உடல் பலம் பெரும்.                                                    

2.   சிற்றாமுட்டிவேர்20கிராம்சிதைத்து,10ல் 1ன்றாய்க் காய்ச்சி தினம்2வேளை சாப்பிட்டுவர காய்ச்சல்,மிகுதாகம்,மிகுவியர்வை,சீதபேதி  குணமாகும்.

3.   பச்சைநன்னாரிவேர் 20கிராம் சிதைத்து,200மிலி நீரில் ஊறவைத்து 100மிலி தினம் 2 வேளை பருகிவர மிகுதாகம்,மிகுபசி தீரும்

4.   மஞ்சளை அரைத்துப் பூசி வர அதிவியர்வை கட்டுப்படும்

5.   200மிலி காரட் சாறில் 25மிலி முருங்கையிலைச்சாறு கலந்து பருகிவர மிகுதாகம் தீரும்.நீர்கடுப்பு கட்டுப்படும்,                                                                                                                               

6.   முருங்கைக்கீரையை உணவில் அதிகம் சேர்த்துவர அதிமூத்திரம் கட்டுப்படும்.                                                        

7.   அன்னாசிபூவை உலர்த்தி பொடித்து அரைமுதல் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டுவர புளியேப்பம்,நீர்வேட்கை,வாந்தி,செரியாமை தீரும்.                                                       

8.   எலுமிச்சைசாறுடன் தேன்கலந்து பருக நாவறட்சி தீரும்.                    

9.   மஞ்சளை வேகவைத்து,வடித்து,வாய்கொப்புளிக்க நாவறட்சி தீரும்.

10.  அருகம்வேர்,நன்னாரிவேர்,ஆவாரம்பட்டை,குமரிவேர்,வகைக்கு50கிராம் , 4ல்1ன்றாய்க் காய்ச்சி,100மிலியாக தினம்5வேளை பருகிவர மதுமேகத்தாலுண்டான மிகுதாகம் தீரும்                                                                                               

11.  கட்டுக்கொடி இலை சமன் வேப்பங்கொழுந்து சேர்த்தரைத்து அல்லது பொடித்து, காலையில் கொள்ள நீரிழிவு,தேகஎரிவு,களைப்பு, ஆயாசம், அதிமூத்திரம், மிகுதாகம், சிறுநீர் சர்க்கரை தீரும்.

12.  காக்கரட்டான் இலைச்சாறு,இஞ்சிச்சாறு,தேன் சமன் கலந்து 1தேகரண்டி பருகிவர உடல்வெப்பம் தணிந்து இரவிலும்,மழைக்காலத்திலும் வரும் மிகுவியர்வை குணமாகும்.

கருத்துகள் இல்லை: