தாய்
தந்தை மனம் நோக பேசல்,அவர்கள் பயமுற தண்டிக்க முயல்தல், மனிதரை வம்பு
செய்தல்,ஆங்காரத்தால் அகந்தை இடும்பு செய்தல்,பொய் பேசல், இவைகளால்
பாண்டு,மகோதரம்,பெருவயிறு வந்தணுகும்.மேலும் ஜீவருக்கு நஞ்சிடுதலாலும் ரோகம் சம்பவிக்கும்.
இரத்தத்தில் உள்ள இரும்புச்சத்துக்(haemoglobin) குறைவே காரணம். மேகப்போக்கு, வெட்டைச்சூடு,வெள்ளை,அதிக
உதிரப்போக்கு காரணமாகவும் உண்டாகலாம்.
உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல்
இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை
உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது
அவசியமாகும்.
1. அன்னபேதிச்செந்தூரம்
100-200மிகி,ஏலாதிச்சூரணம் 1-2கிராம்
5-10மிலி தேனில் குழைத்து, தினம் 2 வேளை கொள்ள இரத்தசோகை தீரும்
2. நெலலிக்காய்லேகியம்
தினம்2வேளை 5 -1 0கிராம் 100மிலி
பாலுடன் கொள்ள இரத்தசோகை நீங்கும்
3. திரிபலாசூரண மாத்திரை தினம்2வேளை1-3 கொள்ள,இரத்தசோகை நீங்கும்
4. செம்பரத்தைபூ சூரணத்துடன் சமன் மருதம்பட்டைசூரணம் கலந்து,1தேகரண்டி தினம்2 வேளை சாப்பிட இரத்தசோகை தீரும்.இதயம் பலம் பெறும்
5. மூக்கிரட்டைஇலையை பொரியல் செய்து சாப்பிட்டுவர இரத்தசோகை குணமாகும்,
6. 15மிலிமுருங்கையிலைச்சாறு,200மிலி இளநீரில்,சிறிது தேன் கலந்து, தினம் 3 வேளை சாப்பிட்டு வர இரத்தசோகை குணமாகும்
7. முருங்கையிலையை பசுநெய்யில் வேகவைத்து, குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் கொடுத்து வர பித்தசோகை குணமாகும்.
8. காரட்சாறுடன் சமன் தேன் கலந்து தினம்2வேளை பருகிவர இரத்தசோகை குணமாகும்
9. வெங்காயத்தை சன்னமாக நறுக்கி சர்க்கரை கலந்து,குழநதைகளுக்கு கொடுக்க இரத்த சோகை குணமாகும்
10. வெங்காயத்தை தேன் விட்டரைத்து,பருத்திப்பொடி கலந்து தினம்2வேளை சாப்பிட்டு வர, ஹீமோபியா குணமாகும்
11. அத்திப்பழத்தை சுத்தம் செய்து பச்சையாகவோ,பாலில்கலந்தோ சாப்பிட சோகை நீங்கும்.
12. பீட்ரூட் பொரியல் செய்து சாப்பிட்டுவர இரத்தசோகை குணமாகும்
13. பீட்ரூட்டை பச்சையாக அரிந்து,எலுமிச்சைசாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தசோகை நீங்கும்.
14. சர்க்கரைவேம்பின் பாலை 48நாள் வைத்திருந்து சாப்பிட ஈளை,பாண்டு குணமாகும்
15. நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பதுடன் உடலில் இரத்தம் அதிகமாக ஊறும்.
16. பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வர உடலில் ரத்தம் ஊறும்.
17. இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்து வர ரத்தம் பெருகும்..
18. பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வர புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
19. செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.
20. முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
21. தக்காளிப் பழம் சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும். வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.
22. இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட இரத்தம் சுத்தப்படுத்தப்படும்.
23. இலந்தைப் பழம் சாப்பிட இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும்.
24. விளாம்பழம் சாப்பிட இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்து போகும்.
25. நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி, காலை மாலை அருந்தி வர தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.
26. நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்து, ஒரு தம்ளர் தண்ணீரில், முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6:00 மணிக்கு போட்டு, இரவு முழுவதும் ஊறவிட்டு, காலை 6:00 மணி, மதியம் 12.00,மாலை 6.00,ஒரு பழத்தை தின்று சிறிது பழம் ஊறிய நீரை குடிக்க(ஒன்பது நாட்கள்) இரத்தம் விருத்தியாகும்
27. இஞ்சி டீயை தினம் ஒரு தம்ளர் குடித்து வர, ரத்தம் சுத்தமாக இருக்கும்.
28. வாரம் 2-3 முறை முட்டைகோஸ் சாறு குடித்து வர உடலில் உள்ள ரத்தம் சுத்தமாகும்.
29. வாழைப்பூவை உணவாக இருவாரம் உட்கொள்ள இரத்தத்தில் கொழுப்புத் தன்மை, பசைத்தன்மைகள் குறைந்து இரத்த ஓட்டம் சீரடையும். இரத்த சோகை நீங்கும்
30. தக்காளிச்சாறு, எலுமிச்சை சாறு, தேன் சம அளவு கலந்து காலை, மாலை 30 மிலி அளவு குடித்து வர ரத்தம் பெருகும்,
31.
இரத்தச் சோகையை போக்க
அதிக இரும்புச் சத்துள்ள கீரைகளான, முருங்கைக்கீரை, ஆரைக் கீரை, அரைக்கீரை, புதினா கொத்தமல்லி, கறிவேப்பிலை அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை
அதிக இரும்புச் சத்துள்ள கீரைகளான, முருங்கைக்கீரை, ஆரைக் கீரை, அரைக்கீரை, புதினா கொத்தமல்லி, கறிவேப்பிலை அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை
திராட்சை, பேரீச்சை,
உலர்ந்த திராட்சை, பப்பாளி, அத்திப்பழம், மாம்பழம், பலாபழம், சப்போட்டா, ஆப்பிள்,
நெல்லிக்கனி,முளைகட்டிய பச்சை
பயறு, முந்திரி பருப்பு, உளுந்தங்களி, பாதாம், பிஸ்தா பருப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக