உடல்வலி,உடற்சோர்வு(WEAKNESS,MYLGIA)
1. திருநீற்றுபச்சை விதையை (சப்ஜாவிதை) 200மிலி நீரில்
ஊறவைத்துச்
சாப்பிட பிரசவத்திற்க்குப்பின் ஏற்படும்
களைப்பு
நீங்கும்
2. நித்யகல்யாணிபூ5, 2ல்1ன்றாய் காய்ச்சி 250மிலி
தினம்3வேளை பருக உடல்அசதி தீரும்
3. கரிசாலைஇலை சாறுடன் கற்றாழைசோறு,நெல்லிக்காய்சாறு சமனெடுத்து,சம அளவு தே.எண்ணையில் காய்ச்சி வடித்து தலைமுழுகி
வர தலைவலி உடல்வலி,உடலசதி தீரும்.பார்வை தெளிவடையும்
4. 500மிலி தே.எண்ணெ யில் 50கிராம் கஸ்தூரிமஞ்சள் போட்டு
காய்ச்சி வடித்து பூசிவர உடல்வலி தீரும்
5. துத்தி
இலைகளை கொதிக்கவைத்து,துணியால் ஒற்றடமிட உடல்வலி குணமாகும்
6. வாதநாராயணன்
இலைகளை கொதிநீரில் போட்டுக் குளித்துவர உடல்வலி குணமாகும்.
7. கிராம்பு,நிலவேம்பு இலை10 நீரிலிட்டு குடிநீர் செய்து பருக
காய்ச்சலுக்குப் பின் ஏற்படும் களைப்பு நீங்கும்
8. அமுக்கராச்சூரணததுடன்
சம அளவு சர்க்கரை சேர்த்து 1தேகரண்டி, 200மிலி பாலுடன் தினம்2வேளை நீடித்துக்கொள்ள உடல்அசதி,மூட்டுவலி தீரும்
9. 2 தேகரண்டி அமுக்கராசூரணம் பனங்கற்கண்டு கலந்து பாலில்
உட்கொள்ள பிரசவகாலத்தில் ஏற்படும் உடல்அசதி நீங்கும்
10.
வல்லாரை மாத்திரை 2,தினம்2வேளை உணவுக்குமுன் சாப்பிட்டுவர உடற்சோர்வு,உடல்வலி நீங்கும்
11.
பவளபற்பம் 100மிகி,அமுக்கராசூரணம் 1கிராம,5-10மிலி தேனில் குழைத்து தினம்2வேளை கொள்ள உடற்சோர்வு
நீங்கும்
12.
நெல்லிக்காய்லேகியம் 5கிராம்
100மிலிபாலுடன் தினம்2வேளை கொள்ள உடற்சோர்வு நீங்கும்
13.
நிலவேம்பு 10கிராம்,சிறுதேக்கு,சுக்கு,அரத்தை வகைக்கு 5கிராம், 5ல்1ன்றாய் காய்ச்சி,50மிலி தினம் பருகிவர உடல்வலி
நீங்கும்
14.
நித்யகல்யாணிபூ5, 2ல்1ன்றாய் காய்ச்சி, 100மிலி
தினம்3வேளை பருகிவர உடலசதி தீரும்
15.
நொச்சிஇலையை கொதிக்க வைத்த
நீரில் குளிக்க பிரசவித்தவர்களின் அசதி குறையும்
16.
செண்பகபூவை நெய்யில் வறுத்து பொடித்து
1-2கிராம் இரவில் உண்டுவர உடலசதி நீங்கி நல்ல தூக்கமுண்டாகும்
17.
ஆவாரம்பூவை நிழலிலுலர்ததி பொடித்து,தேனீர் செய்து சாப்பிட நரம்புத் தளர்ச்சி,அசதி தீரும்
18.
கொத்தமல்லிவிதை 1தேகரண்டி, 1லி நீரில் காய்ச்சி குடிக்க வெயிலால்
ஏற்படும் சூடு தணியும்.மயக்கம் நீங்கி, இரத்தம் சுத்தியாகும்
19.
மருதாணிபூவை ந.எண்ணெயில்
காய்ச்சி பூச கை கால் குடைச்சல் தீரும்.
20.
அகில் கட்டையை பொடி செய்து அதை நெருப்பில் தூவி
வரும் புகையை முகர உடல் சோர்வு தீரும்
21.
சாதம்
வடித்த கஞ்சியை ஆறவைத்து ஒரு தேக்கரண்டி நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடிக்க
இடுப்புவலி நீங்கும்.
22.
சாம்பிராணி,
மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருக உடம்புவலி தீரும
23.
வேப்பிலையை வறுத்து தலைக்கு வைத்து தூங்கினால்
நன்றாக தூக்கம் வரும்.
24.
அதிகாலையில் கொஞ்சம் வல்லாரைக் கீரையை மென்று
தின்று அடுத்து அரை மணி நேரத்துக்கு வேறு எதுவும் சாப்பிடாமல் இருக்க மனம் சார்ந்த நோய்கள் குணமாகும். இரவில் நன்றாக
தூங்கலாம்.
25.
ரோஜாப்பூ, வெள்ளை மிளகு, சுக்கு ஆகியவற்றில்
தலா 50 கிராம் எடுத்து அரைத்து காலை மாலை சாப்பிட்டு வர நன்றாகத் தூக்கம் வரும்
26.
மாம்பழச் சாறுடன் பால் கலந்து சர்க்கரை
சேர்க்காமல் குடிக்க ஆழ்ந்த தூக்கம் வரும்.
27.
சடாமஞ்சள் 50 கி,அமுக்கரா 100 கி (சுத்தி செய்யப்
பட்டது), பனங்கற்கண்டு 150 கி பொடியாக்கி 5 கிராம் தினமும்
இரவில் பாலில் குடிக்க நன்றாக தூக்கம் வரும்.
28.
சப்போட்டா
பழம் தினமும் பகல் பொழுதில் உண்டு வர இரவில் நன்றாக தூக்கம் வரும்.
29.
பாதாம்
பருப்பு, பிஸ்தாப் பருப்பு, முந்திரிப் பருப்பு, சாலாமிசிரி தலா பத்து கிராம் அரைத்து,
200 மில்லி கரும்புச்சாற்றை கலந்து சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
30.
பிரண்டை
உப்பை ஜாதிக்காய் சூரணத்துடன் சேர்த்து நெய்யில் கலந்து சாப்பிட்டு வர நரம்புத்தளர்ச்சி குறையும்.
31.
கசகசாவை
பால் விட்டு மைய அரைத்து,சாப்பிட்டு, தண்ணீர் குடிக்க, சிறிது நேரத்தில் ஆழ்ந்த
உறக்கம் வரும்.
32.
தொடர்ந்து
48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும்.
33.
அத்திபழம்
தினந்தோறும் 5 சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.
34.
விளாம்பழம்
தினசரி ஒன்று சாப்பிட பித்தத்தைக் குறைக்கும்.
35.
காலை
வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி தேனும்
இஞ்சிச்சாறும் கலந்து சாப்பிட்டு வர கை
நடுக்கம் நீங்கும்
36.
வெள்ளைத்தாமரை
இதழ்களை கசாயம் வைத்து வடிகட்டி பாலுடன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில்
சாப்பிட்டு வர கை நடுக்கம் நீங்கும்
37.
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி
குறைந்து விடும்
- முட்டைக்
கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட உடல் தளர்ச்சி
விலகும்.
- சாம்பிராணி,
மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருக உடம்புவலி
தீரும்.
- ஒரு
தம்ளர் பட்டாணியை வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு
சேர்த்துத் தினம் சாப்பிட்டு வர உடல் வலுப் பெறும்.
- எள்,நல்லெண்ணெய்யைக்
கொடுக்க உடல் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
- வெற்றிலைச்
சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வர நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
- எலுமிச்சம் பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட உஷ்ணம் குறையும்.
- முருங்கை
இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன்
சேர்க்க உடல் அசதி குணமாகும்.
- கற்கண்டை
வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.
- ஒரு
தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைத்து சாப்பிட்டு
வர மறதி மறையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக