பக்கங்கள்

29 அக்டோபர், 2016

சூதகவலி,தடை,பெரும்பாடு/அதிகரித்த மாதவிலக்கு,கருப்பைக்கோளாறு (mensural disorders,menorrhagia,uttress problem&frigility)



மலட்டுத்தண்மைக்கு காரணங்கள்;                                                                 
 கர்ப்பப்புழுவாலும்,கலவியிற்  பூவொதுங்கிப்  போவதாலும், கருக்குழி பாசி பற்றி விலக்கமற்று இருப்பதாலும்,மதத்துக் கொழுத்திருப்பதாலும்,கருக்குழியிற் சதை வளர்ந்திருப்பதினாலும்,சோரி(இரத்தம்)கட்டியிருப்பதாலும்,பேயாலும், பித்தத்தாலும், வாயுவாலும்,மேகவைசூரியாலும்,மற்றைப்பிணிகளாலும்,கிரகத்தாலும் பெண்கள் மலடாகிறார்கள்.                                                                                                                                                            கருக்குழியிற் கிருமி இருந்தால் அதில் வாயுவும் விந்துவை உண்ணும், சதை கூடியிருந்தால் விந்து செல்லாது.கோடை காலத்திற் பூமியில் கனலேறி உவர் பூப்பது போல உடலில் கனலேறிக் கருக்குழியிற் உவருண்டாயிருந்தாலும், பாசுபற்றியிருந்தாலும்,அதில் சேரும் விந்து பாழாகும்.                                                                    அறிகுறி;                                                                                                                                                        
பாசுபற்றியிருந்தால்       ;புணர்ச்சியின்போது பெண்ணிற்கு தலை நோகும்.              வாயு நிறைந்திருந்தால்    ;புணர்ச்சியின்போது பெண்ணிற்கு உடல் வலிக்கும்            தசை வளர்ந்திருந்தால்    ;புணர்ச்சியின்போது பெண்னிற்கு  நெஞ்சில் குத்தும் சோரிகட்டியிருந்தால்                                    கெண்டை வலிக்கும்.                                                        
மதத்துக்கொழுத்திருந்தால்                                ஏப்பமிடும்.                                                              
கிருமிநிறைந்திருந்தால்                                   முதுகு நோகும்.                                                 
 பித்தமலட்டுக்குணம்;   சிறுநீர் மஞ்சளைக் கரைத்ததுபோல் இறங்கும். 

வாதமலட்டுக்குணம்;   நீர் இரத்தம் போலிருக்கும்.                   

அலகைமலட்டுக்குணம்;  அரிவையர்கள் பூத்தநாளில் இடது பக்கத்தில் வயிறு நோகும். நீர் கடுத்து வெளுப்பாயும் ,கருப்பாயும்,சிவப்பாயும் இறங்கும்.                       

பெற்றமலட்டுக்குணம் ;  உடல் பருத்து உஷ்ணமாய் வலிக்கும்.கால் எரியும். சிறுநீர் கழுதை நீர்போலும்,கழுநீர் போலுமிறங்கும்.                                                         
வறட்சிமலட்டுக்குணம் ;எவ்வளவு அசனஞ் செய்தாலும் சரீரம் உலர்ந்து போகும். அடிக்கடி கொட்டாவி உண்டாகும்.சொப்பனம் பலகால் காண்பிக்கும்.                                                             
வாயுமலட்டுக்குணம் ;கருக்குழியைச்சுற்றி வாயு நிற்கும்.உண்ட அசணம் நன்றாய் செமியாது பொருமலும்,ஏப்பமிடும்.                                          

புழுமேல் மலட்டுக்குணம் ;அடிவயிற்றில் சுருக்சுருக் என்று வலிக்கும் 

கெர்ப்பபுழுக்குணம் ; வாந்தி பண்ணும்,வயிறு நோகும்.2மாதம் 3மாதம் முழுக்கு நின்று உண்டாகும்.உடல் வெளுக்கும்.தினவுண்டாகும்.                                            
 மாதவிடாய்க்காலத்தில் அடிவயிற்றில் சுருக்கென்று வலித்து சூதகம் இறைச்சி கழுவின நீர்போலக் காணும்.புருடருடன் கூடுங்காலத்தில் அதுபோலவே யோனிவழி நீர் பொசிந்து சீலையில் கறைபடும்..                                      

 பெரும்பாட்டின் குணம் ;                                                 

 புணர்ச்சியினால் அக்கினிமீறி வெட்டை உண்டாகி  அது அதிகரித்து கருக்குழியும், உந்தியும்,புண்ணாய்ப் பெரும்பாடு தோன்றும். செவ்விளநீர் போல் உதிரம் வடிந்து கொண்டிருக்கும்.வயிற்றுவலி சோபதாப முண்டு                                                             

கெர்ப்பசூலைக்குணம் ;உடம்பிற் கனலேறி,கருக்குழிற் வாயு அனசரித்துச் சூதகங் கட்டித் திரண்டு,உதரமெங்கும் சிசுபோற் புரண்டுறும்.வயிறு வலிக்கும் .தேகம் வற்றும்.பலம் கெடும்.சோபதாபமுண்டாகும்.                                                                       
சற்சூலைக்குணம் ;அடிவயற்றில் உதிரம் திரண்டு வளையம்போல் கிடக்கும். வலித்துப் பரந்து பொருமும்.முதுகைப்பற்றி நோகும்.                                                
 இரத்தசீலைக்குணம் ; அடிவயிற்றில் நாளாவட்டத்தில் உதிரந்திரண்டு மாதவிடாய்க் காலத்தில் புரண்டு வலிக்கும்.சூதகமிகுந்து காணும்.கருவிழியும் இடுப்புந் தொடையும் உளையும்.                                                                                                                                         
  கெர்ப்பவிற்புருதிக்குணம் ;வயிற்றில் சூதகங்கட்டி வலியுண்டாகும்.தலை வலிக்கும். வீட்டுக்குவிலக்கமானால் வயிற்றுவலி நீங்கும்.இரு துடையும் உளையும். மலமிறுகித் திரண்டு புழுக்கைபோல் விழும்.கர்ப்பந்தரியாது.உடல் மெலியும்.

சூதகவாயு,சூசிகவாயு குணம் ;சூதகத்தில் வாயுவும் அக்கினியும் சேர்ந்து மாதவிடாய் கட்டிக் கருக்குழி தூர்ந்து தேகத்தில் உதிர நீரும் அடி மூலத்தில் வாய்வுஞ் சேர்ந்து சூதகவாயு தோன்றிச் சூதகமாகும்போது அடிவயிறு வலிக்கும்.வயிறும் உடலும் பெருத்திருக்கும்.                                                                                   
நிதம்பச்சூலைக்குணம் ;போககாலத்தில் யோனிமலரும்போது அதில் வாயுவடங்கி அதனால் இரத்தமுஞ்சலமுந் தடைபட்டுடலில் அடைபட்டு மூடிச்சவ்வு முற்றி முளைத்தேங்காய்போல் யோனியிற்தோன்றி நீர் பொசிந்து கொண்டிருக்கும். இடுப்புந்துடையும் உளையும்.                                                                                                       
  மாதவிலக்கின்போது வலி;                            
                            
   (1)முதல் நிலை.(Primary dismeneria) வேறு நோய்கள் இல்லாத நிலையில் தோன்றுவது. புரோஸ்டோகிளான்டின்(Prostoclantin)அதிகமாய் சுரந்து கருப்பை தசைகள் சுருங்கி உட்சுவர் சேதாரமாகிய நிலையில் உண்டாகும்.
 (2)இரண்டாம் நிலை(secondary dismaneria)
;
 பெண் நோயியல்களுடன் உண்டாவது. கருப்பையின் சுவர்களில் ஃபைப்ராய்டு எனப்படும் நார்திசுக் கட்டிகளாலோ பால்வினை தொற்றுகளாலோ கருப்பையின் உட்படலம் வேறு இடங்களில் பரவிப் பெருத்தாலோ இடுப்புக்குழி நோய், கருப்பைக்கட்டி,நீர்க்கட்டிகளாலோ உண்டாகும்,                         
                                                                                                                                   கருப்பை,ஓவரி கட்டிகள்(Pcod);  கருப்பை ஓவரிகளில் சிறுசிறு கட்டிகள் தோன்றி மாதவிலக்கில் தடை,மகப்பேறின்மை போன்ற கோளாறுகளை உண்டாக்கும்.இன்றைய இளம்பெண்கள் பெரும்பாலும் (70%) இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது கோழி வளர போடப்படும் ஹார்மோன் ஊசிமருந்து,பிரசவகாலத்தில் தரப்படும் மாத்திரைகள், கருத்தடை மாத்திரைகள் போன்றவற்றின் பக்கவிளைவுகளாலும் மரபுவழியாலும் உண்டாகலாம். எனினும் ( பெண்கள்,ஆங்கில மருந்துகள் சம்பந்தப்பட்டவையாக இருப்பதால்) அதிகம் ஆய்வு செய்ய முடியவில்லை.மனச்சோர்வு,மன அழுத்தம், பதட்டம்,குழப்பமான மனநிலை, தூக்கமின்மை,முகத்தில் முடி வளர்தல், முகப்பரு, கரும்புள்ளி,வயிற்றுப்பகுதியில் கொழுப்பு சேர்தல்,இரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பு, சீரற்ற மாதவிலக்கு, மகப்பேறின்மை போன்றவை அறிகுறிகளாகும்.                                                                                                                                                                                                  
 மாதவிலக்கு நிற்றல்(Menopause);40_45 வயதிற்க்குமேல் ஓவரி தனது பணியை முடித்து ஓய்வு பெறும் காலம் மெனோபாஸ் ஆகும்.தொடர்ந்து சீராக வந்த மாதவிலக்கு விட்டுவிட்டோ அல்லது வராமலோ இருக்கும்.இக்காலத்தில் அதிக படபடப்பு, பதட்டம்,பாலுணர்வு, மனக்குழப்பம் தோன்றக்கூடும்.                                               ஓவரி;இது ஒவ்வொருவருக்கும் 8 வயது முதல் வளர ஆரம்பிக்கும்.கருமுட்டைகள், விந்தனுக்களை உற்பத்தி செய்வது இதன் பணியாகும்.வளர ஆரம்பித்து 5-6 வருடங்கள்(13-14 வயதில்) ஆனபின் செயல்படத் துவங்கும்.இக்காலமே பெண்கள் பூப்பெய்தும் காலமாகும்.இக்காலத்தில் ஏற்படும் பாலுணர்வு, உடலியல் மாற்றத்தினால் குழந்தைகள் மனக்குழப்பத்தினால் பாதிக்கப்பட்டு நல்லது கெட்டது பகுத்தறிய, கேட்டறிய இயலாமல் திசை மாறுகின்றனர். இதனை விடலை பருவம் (Teen age) என்றும் வழங்குவர்.இது 6-7 ஆண்டுகள் நீடிக்கும்.எனவேதான் திருமண வயதை 21ஆக நிர்ணயித்தார்கள்.ஓவரி சீரான வளர்ச்சி அடையாவிடின் உடல் முழுதும் சதைக்கட்டிகள் திரண்டு தோன்றலாம்.                                                                                                                        
 கருப்பையின் சுவர் அளவு 6.2 x 3.9 x 2.6cms                                                                                                           
 ஓவரி சுவர் அளவு

 2.9 x 1.7, 3.0x1.8cms  

     எச்சரிக்கை                                                                                                                                                                                                                                                             

                 பெண்கள் ருதுவடைந்த காலம்
        ஆண்டு                         வயது
          1860                            16
          1920                            14
          1950                            13
          1980                            12
          2010                            10
          2040                            ? ?

இதற்கான காரணங்கள்;

வயல்களில் உபயோகப்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் உள்ள D D E(die cloro dipinals) PCB(Poly culorinated bisepinail)பிளாஸ்டிக் பொருட்களில் உள்ள பித்தாலெட்டஸ் (Phthalates) மற்றும் இறைச்சி பால் அதிகம் கிடைக்க போடப்படும் ஹார்மோன் ஊசி,மருந்து அழகு சாதன பொருட்களில் உள்ள ரசாயனங்கள்.இவை ஹார்மோன்களை தூண்டி விரைவில் ருதுவடைய செய்கின்றன.DDE,PCB இரண்டும் அரசால் தடை செய்யப்பட்டும் உபயோகத்தில் உள்ளவை.
                                               ஆதாரம்;The Journal of Bio-Technology
1.       இம்பூரல் சமூலம் பிடி அரைத்து  10கிராம்,200மிலி பாலில் கலந்து  தினம் 2 வேளை  பருக அதிக இரத்தப்போக்கு,இரத்தவாந்தி கட்டுப்படும்.
2.       கடுக்காய்த்தோல் குடிநீர் ெய்து பருக கருப்பைபுண் மற்றும் உள்உறுப்பு புண்களை ஆற்றும்
3.       கல்யாணமுருங்கைப்பூ1,மிளகு4  சேர்த்தரைத்து காலையில் கொள்ள கருப்பை குற்றம் நீங்கி மகப்பேறு கிட்டும்
4.       விஷ்ணுக்கிரந்தி சமூலம் ூரணித்து, 1தேகரண்டி,வெந்நீரில் பருகிவர கருப்பை கோளாறு  நீங்கி  மகப்பேறு கிட்டும்
5.   அவுரி, மஞ்சள்கரிசாலை,வெள்ளைகரிசாலை,குப்பைமேனி,கொட்டைக்கரந்தை, செருப்படை இலைகள் வகைக்கு சமன் சூரணித்து,1தேக்கரண்டி தேனில் குழைத்துச் சாப்பிட்டுவர  மாதவிலக்கு  குறைபாடுகள் தீரும்.வயிற்றுப்பூச்சி கர்ப்பப்பை  தொடர்பான பிரச்சனைகளும்  விலகும்
6.       20 கிராம் ஆவாரம் பட்டையை ொடித்து 51ன்றாய்க் காய்ச்சி, 50ிலி தினமிரு வேளை பருகிவர ெரும்பாடு கட்டுப்படும்
7.       2 கிராம் இலவங்கப் பொடியை சமன் பனைவெல்லத்தில் கலந்து, மாதவிடாய் காலத்தில் தினம்2வேளை சாப்பிட்டுவர, உதிரச்சிக்கல் சூதகவலி ீங்கும்
8.       கல்யாணமுருங்கையிலை ரசம்செய்து ாதத்துடன் ாப்பிட்டுவர ூதகவலி தீரும்
9.       கல்யாணமுருங்கையிலைச்சாறு 30மிலி ாலையில் பருகிவர ூதவலி ீங்கும்
10.   சிறுகுறிஞ்சான்இலை1பங்கு, களாஇலை2பங்கு சேர்த்து அரைத்து காலையில் சாப்பிட ாதவிலக்கு ீராகும்.கர்பாயாசக்கோளாறு நீங்கும்.
11.   4 செம்பரத்தைபூக்களை அரைத்து ாலையில் சாப்பிட்டுவர ாதவிலக்கு சீராகும்
12. செம்பரத்தைபூச்சூரணம் 1தேகரண்டி தினமிருவேளை சாப்பிட்டுவர மாதவிலக்கு சீராகும்
13. தண்ணீர்விட்டான்கிழங்குச்சூரணம் 2கிராம்,பசுநெய்யில் தினமிருவேளை சாப்பிட்டுவர  பெரும்பாடு  தீரும்
14. தொட்டாற்சுருங்கிச் சமூலச்சாறு 4தேகரண்டி,தேன்2தேகரண்டி கலந்து தினம்3 வேளை சாப்பிட்டுவர  பெரும்பாடு  தீரும்
15.   தொட்டாற்சுருங்கி இலை கைப்பிடி,சிறிது சீரகம்,வெங்காயம் சேர்த்தரைத்து எலுமிச்சையளவு சாப்பிட பெரும்பாடு தீரும்
16.   நாவல்பட்டையை சிதைத்து, 51ன்றாய்க் காய்ச்சி ினமிருவேளை பருகிவர பெரும்பாடு கட்டுப்படும்
17.   6 தேகரண்டி ிரண்டைச்சாற்றுடன், 1ேகரண்டி .எண்ணை கலந்து காலையில் ாப்பிட ாதவிலக்கு ீராகும்
18.   வில்வ இலைகளை அரைத்து ொட்டைப்பாக்களவு ாப்பிட்டு குளிர்ந்த நீரில் குளித்துவர ெரும்பாடு ுணமாகும்                                                          
19.   வேப்பம்பட்டைக்கஷாயம் 200மிலி தினம்3வேளை பருகிவர மாதவிலக்கு சீராகும்                                              
20.   மலைவேம்பு வேர்பட்டைதூள் 2தேகரண்டி, 200மிலி வெந்நீரில் கலந்து பருக மாதவிடாய் சீராகும்.                                                          
21.   காவிக்கல்சூரணம் 1-2கிராம் 50மிலி நீரில் கொள்ள சூதகவலி நீங்கும்.
22.    குன்மக்குடோரிமெழுகு 2கிராம்,தினம்2வேளை  நீரில் கொள்ள சூதக வலி நீங்கும்.
23.   சிற்றாமுட்டிமடக்குத்தைலம் 5-10மிலி, 100ிலி ெதுவெதுப்பான பாலில் பருக ூதகவலி ீங்கும்
24.   1 தேகரண்டி வெந்தயத்தை ோரில் கலந்து சாப்பிட ூதகவலி கட்டுப்படும்
25.   எள்ளை கருப்பட்டியுடன் இடித்து 20ிராம் ாலையில் சாப்பிட ூதகவலி நீங்கும்
26.    அன்னபேதிசெந்தூரம் 100-200மிகி,அமுக்கராச்சூரணம் 1-2கிராம், 5-10மிலி தேனில் கலந்து  தினமிருவேளை  கொள்ள  சூதகத்தடைகள்  நீங்கும்
27. வெண்பூசனி லேகியம் 5-10கிராம்,தினம்2வேளை,100மிலி பாலுடன் சாப்பிட சூதகத்தடை,பெரும்பாடு  நீங்கும்
28.   சௌபாக்கியசுண்டி லேகியம் 5-10கிராம்,தினம்2வேளை,100மிலி பாலுடன் கொள்ள  சூதகதடை  நீங்கும்
29.    படிகப்பூங்காவிசெந்தூரம் 0.5-1கிராம், 100ிலி ீருடன் ினமிருவேளை கொள்ள பெரும்பாடு (அதிகரித்தமாதவிடாய்) தீரும்
30.   சிலாசத்துப்பற்பம்200மிகி, 5ிலி நெய் அல்லது வெண்ணையில் தினம்2வேளை கொள்ள பெரும்பாடு தீரும்
31.   குங்கிலியபற்பம் 0.5-1கிராம், 5-10மிலி ாலில்,தினம்2வேளை  கொள்ள பெரும்பாடு தீரும்
32.   10 கிராம் அசோகுபட்டையை சிதைத்து 4ல்1ன்றாய்க் காய்ச்சி,தினமிருவேளை பருக  பெரும்பாடு  தீரும்
33.   மிளகாய்பூண்டுஇலைகளை அரைத்துப் பற்றிட இடுப்புவலி குணமாகும்
34.   வெண்தாமரை மகரந்தங்களை நிழலிலுலர்த்தி,பாலில்கலந்து குடிக்க பெண் மலட்டுத்தண்மை  நீங்கும்
35.   கரியபோளம்/சோற்றுக்கற்றாழைபிசினுடன், சம அளவு பொரித்த பெருங்காயம் கலந்து, பனங்கருப்பட்டி ேர்த்திடித்து, 5கிராம் ினமிருவேளை ெந்நீருடன் உண்டு வர வயதாகியும் பருவமடையாத பெண்கள் பருவமடைவர்.சூதகவலியும் தீரும்
36.   பப்பாளிப்பழத்தை உண்டுவர கருப்பை சுத்தமடையும்
37.   அசோகுப்பட்டைச்சாறுடன் தேன் கலந்து பருக அதிகரித்த மாதவிடாய், வெள்ளை கட்டுப்படும்.சூதகவலி ுறையும்
38.   முருங்கையிலைச்சாறு 30மிலி,தினம் 3வேளை பருக  மாதவிலக்கின்போது ஏற்படும்  வயிற்றுவலி,குத்தல்  குணமாகும்
39.   கீழாநெல்லி வேர்களைஅரைத்து, கஞ்சியுடன் சேர்த்துப் பருக அதிகரித்த மாதவிலக்கு, இரத்தப்போக்கு ீங்கும்
40.   ஆலம்பட்டை, அத்திப்பட்டை,இத்திப்பட்டை கஷாயம்செய்து சாப்பிட பெரும்பாடு நீங்கும்
41.   சர்க்கரைவேம்பின்பாலை 48நாள் வைத்திருந்து சாப்பிட பெண்மலடு நீங்கும்
42.   கணுநீக்கியஅருகம்புல்30கிராம்,மாதுளைஇலை30கிராம்,2ல்1ன்றாய்க்காய்ச்சி,50 மிலி வீதம்,2மணிக்கொருமுறை பருகிவர காது,மூக்கு, ஆசனவாய் இரத்த ஒழுக்கு நிற்கும். மாதவிலக்குச்சிக்கல் நீங்கும்.
43.   செம்பரத்தைவேர்பட்டை100,இலந்தைமரப்பட்டை100,மாதுளைமரப்பட்டை 100, பொடித்துக் கலந்து, 5கிராம், தினம்2வேளை,வெந்நீர் அல்லது பாலில் கலந்து சாப்பிட பெரும்பாடு (அதிகரித்தஇரத்தப்போக்கு) தீரும்.  
44.   ஆடுதீண்டாப்பாளைவிதைசூரணம்5கிராம்,வி.எண்ணையில் கொள்ள நன்கு பேதியாகி வயிற்றுவலி,சூதகதடை,மலக்கிருமி நீங்கும்.                           
45.   நிலவாகை சூரணம் திரிகடி பசுமோரில் கொள்ள பூப்பெய்துவர்
46.    அசோகுமரபட்டை40கிராம்,மாதுளைவேர்பட்டை20கிராம் சிதைத்து, 500மிலிநீரில் 1நாள் ஊறவைத்து ,3,4வேளையாக பருகிவர,1வாரத்தில் நாட்பட்ட பெரும்பாடு தீரும்.புளி,காரம் நீக்கவும்
47.  அசோகுபட்டை,மாதுளைவேர்பட்டை,மாதுளம்பழ ஓடு சமனளவு பொடித்து, 3சிட்டிகை  வெந்நீரில்,தினமிருவேளை கொள்ள கருச்சிதைவு,வயிற்றுவலி, கர்ப்பச்சூலை, வாயுத்தொல்லை தீரும்.100,120 நாட்கள் கொள்ள பெண்மலடு நீங்கும்.
48.   1பிடி இலந்தைஇலை, 6ிளகு, 4ூண்டுப்பல் சேர்த்தரைத்து,விலக்கான முதல் 2 நாள்  கொடுக்க  கருப்பை  குற்றம்  நீங்கி ,புத்திரபாக்கியம் கிட்டும்
49.  இலந்தைபட்டை40கிராம்,மாதுளைபட்டை40கிராம் சிதைத்து 4ல்1ன்றாய்க் காய்ச்சி, தினம்4வேளை,30மிலி  பருகிவர  நாட்பட்டபெரும்பாடு தீரும்                                                   
50. அத்தி விதையை  பாலில் காய்ச்சி  மண்டலக்கணக்கில் பெண்கள் சாப்பிட கர்ப்பந்தரிக்கும்
51. ஈஸ்வரமூலி (கெரடக்கொடி)வேர்40கிராம் சிதைத்து  8ல்1ன்றாய்க் காய்ச்சி, தினம்2,3வேளை,30மிலி அருந்த உதிரச்சிக்கல் தீரும்
52.   மாவிலங்கம்பட்டை,பூண்டு,மிளகு சமனெடுத்து,கொட்டைப்பாக்களவு 3நாள் காலையில்  கொள்ள மாதவிடாயுண்டாகும
53.   சதகுப்பை, மரமஞ்சள், கருஞ்சீரகம் வகைக்குச்சமன் பொடித்து சமன் பனைவெல்லம் சேர்த்தரைத்து 5கிராம் காலைமாலை சாப்பிட்டு, சற்று நேரத்தில் சோம்புக்குடிநீர்பருக உதிரச்சிக்கல் நீங்கி கருப்பை பலப்படும்
54.   கழற்சிக்காயிலை1பிடி,மிளகு12.பூண்டுப்பல்3,சேர்த்தரைத்து,காலைமாலை, புன்னைக் காயளவு,10நாள் சாப்பிட கர்ப்பமுண்டாகும்
55.   இளம்ஆலவிழுதை கழுவி, பசும்பாலிலரைத்து,தீட்டான முதல்3நாளும் உட்கொள்ள கர்ப்பந்தரிக்கும்.இல்லையெனில் மறுமாதமும்  செய்யவும்
56.   தீட்டான 4ம்நாளிரவு உண்ணாதிருந்து, மறுநாள் ுணாப்பூவை பசும்பாலிலரைத்து, வடக்கு முகமாய் ின்று பருகவும்.மறுமாதமும் செய்ய கர்ப்பமுண்டாம்                                       
57.   அரசன்கொழுந்தை பாலிலரைத்துக் கரைத்துக்குடிக்க மகப்பேறு கிட்டும்..                              
58.   நாய்வேளைவேர்20கிராம் வெந்நீரிலரைத்துக் குழப்பி(பாயாசம் போல)5நாள் கொடுக்க ருதுவடைவார்கள்                                  
59.   புளியரணைக்கிழங்கை அரைத்துக்,கரைத்துக் குடிக்க மகப்பேறு கிட்டும்
60.   பெருங்கட்டுக்கொடியிலையை அரைத்து எலுமிச்சையளவு,எருமைத்தயிரில் கொள்ள பெரும்பாடு தீரும்                                                                     
61. கானாவாழை சமூலம், அசோகுப்பட்டை,அருகு சமனெடுத்து, நெல்லிக் காயளவு, தினம்3வேளை  கொள்ள  பெரும்பாடு  தீரும்
62.   கருஞ்சித்தகத்திவிதை 10கிராம்,அரைத்து காலையில் சாப்பிட்டுவர மாதவிலக்கு சீராகும்                                                                         
63.   பழம்புளி,மஞ்சள் கரிசாலை, சமனரைத்து, நெல்லிக்காயளவு, காலைமாலை 12 நாள்  கொடுக்க  கருப்பை  இறக்கம் தீரும்                                      
64.   மகிழம்பட்டை10கிராம் பொடித்து,500மிலி நீரிலிட்டு,100மிலியாக காய்ச்சி, 50மிலி காலைமாலை  பருகிவர  கருப்பை  பலவீனம்  தீரும்.காய்ச்சல் தனியும்
65. மாதுளைவேர்பட்டை, மரப்பட்டை,விதை சமன் பொடித்து,3கிராம், காலை மாலை  வெந்நீரில்  கொள்ள  கற்பாயாச நோய் தீர்ந்து,மகப்பேறு  கிட்டும்
66. மாசிக்காயை கருகாமல் வறுத்து,பொடித்து,0.5-1கிராம்,தேன் அல்லது நெய்யில் கொள்ள பெரும்பாடு,நீர்த்தக்கழிச்சல்,இரத்தக்கழிச்சல்,மிகுவியர்வை  தீரும்
67.   கோழிப்பித்து,பருத்திவிதைப்பருப்பு சமன் அரைத்து விலக்காயிருந்து குளித்தது முதல் 3நாள்வரை யோனியிற்பூசிப்புணர பாசி அற்றுக் கர்ப்ப முண்டாகும்.                                                         
68.   பெருங்காயத்தை ந.எண்ணெயில் மத்தித்து யோனிக்குட்பூசி 3நாள் புணர்ந்தால் வாயு நீங்கும்.                                      
69.   திப்பிலி.சூடன்,கோழிப்பித்து சேர்த்தரைத்து 3நாள் யோனியிற்பூசிப் புணர்ந்தால் தசைவளர்ந்திருப்பது மாறும்.                       
70.   இந்துப்பு,அரிதாரம்,பெருங்காயம்வகைக்கு 2கிராம் வெந்நீரிலரைத்து 3நாள் யோனியிற்பூசிப்புணர கிருமி விலகும்.                                        
71.   கடுக்காய்,சர்க்கரை,பச்சைக்கற்ப்பூரம்,புனுகு சேர்த்து அரைத்து3நாள் உண்ண இரத்தக்கட்டு நீங்கும்                                       
72.   குங்குமப்பூ,அதிமதுரம்,சீரகம் வெந்நீரிலரைத்து  இருவரும் பூசிப்புணர மதர்த்திருத்தல் தீரும்.                      
73.   வேப்பலகு,சீந்திற்தண்டு,கோரைக்கிழங்கு சமனிடித்துப் பிழிந்தசாறு அரைப்படி, ஆவின்நெய் படிகால்,கலந்து காய்ச்சி,குளித்ததுமுதல் 3நாள்கொள்ள பித்த மலட்டுக் குணம் தீரும்.பத்தியம் நீர்க்கஞ்சி உண்ணவும்.                        
74.   புளியம்வேர் கஷாயம் செய்து இந்துப்பு,பெருங்காயம் கூட்டி பழங்காடி விட்டுக் கலக்கிக் குடிக்க வாதமலட்டுக்குணம் தீரும்.                                
75.   நானாக்கள்ளிவேர் புன்னைக்காயளவு அரைத்து,ஆவின்வெண்ணை பாக்களவு கலந்து குளித்ததுமுதல் 3நாள் சாப்பிட அலகைமலடு தீரும்.பத்தியம் பால் சோறு உண்ணவும்.                                                              
76.   ந.எண்ணை அரைபடி,கோரைக்கிழங்கு10கிராம்,வரட்பூலா,சாரணை கொழுந்து வகைக்குகொட்டைப்பாக்களவு அரைத்துக் கலந்துகாய்ச்சி வடித்து சூதகமானது முதல் 15நாள்பத்தியத்துடன் 1கரண்டி வீதம் உண்டுவர வறட்சிமலடு, புழுமேல் மலடு தீரும்.                                   
77.   சீந்தில்வேர்,நானாக்கள்ளிவேர்,இலைக்கள்ளிவேர். கஷாயம் வடித்து ஆவின் நெய் விட்டு குளித்ததுமுதல் 3நாள் உண்ண கெர்ப்பப்புழு நீங்கும்.பத்தியம் பாலும் அன்னமுங் கொள்ளவும்.                           
78.    சித்திரமூலம்வேர்,சாரனைவேர்,பொண்ணாங்கானி சமனரைத்து தேங்காய் பாலில் குளித்ததுமுதல் 3நாள் அருந்தகெர்ப்பப்புழுவிழும்.விப்புருதி தீரும். பத்தியம் பாலும் அன்னமும்.                                                             
79.   நந்தியாவட்டைவேர்சூரணம் திரிகடி,ஆவின்பாலில் விலக்காயிருக்கும் 3நாளும் கொள்ள கிருமி நீங்கும்                                                              
80.   தகரை விதையை அரைத்து24மணிக்ழிந்தமோரில் விலக்கான3நாளும் அருந்த கெர்ப்பப்புழு விழும்.                                                                 
81.   அரைப்படி ஆவின்பாலில் 40கிராம்சீனி சர்க்கரை கரைத்து விலக்கான 2நாள் கொடுத்து,3ம்நாள் புரசவிதையை எருமைச்சானியிற்புதைத்து, மறுநாளெடுத்து, தேகத்திடமறிந்து 2,3விதையை அரைத்துக் காற்படி பசும்பாலில் கொடுக்க கெர்ப்பப்புழுவும்,வயிற்றிலுள்ள மற்றப்புழுவும் செத்து விழும்.                                                                        
82.   நாவற்பட்டையை புளித்தஎருமைமோரில் ஊறவைத்திடித்துப் பிழிந்து சந்தனம் சேர்த்து 3நாள்கொள்ல பெரும்பாடு தீரும்.                        
83.   நெல்லிக்காய்சாறு,எழுமிச்சைபழச் சாறு,கருப்பஞ்சாறு,ஆவின்நெய் வகைக்கு முக்கால் படி,தாளிசப்பத்திரி 30கிராம்,ஜாதிக்காய்,ஏலம்,கிராம்பு, அரத்தை, அதிமதுரம், நிலப்பனை வகைக்கு 40கிராம்,தேங்காய் பாலிலரைத்துப் போட்டு பதமாய்க்காய்ச்சி, 1கரண்டி வீதம்கொள்ள பெரும்பாடு,வெள்ளை ,நீர்கட்டு, நீர்ச்சுறுக்கு,சதையடைப்பு தீரும்                                       
84.   நீர்வள்ளிக்கிழங்கு,துத்திவேர்ப்பட்டை,முசுமுசுக்கை,நன்னாரிவேர்,பூமிசர்க்கரைக் கிழங்கு,நிலப்பனை பாலில்அரைத்து நெய்விட்டு இலேகியமாய் கிண்டி,சாப்பிட பெரும்பாடு தீரும்.                                             
85.   முருங்கைப்பூவை அரைத்து தேங்காய்ப்பால் அல்லது வெள்ளாட்டுப்பாலில் வெல்லங் கூட்டி கொள்ள பெரும்பாடு தீரும்.                                
86.    வாழுளுவை அரிசிமாவில்,பிரண்டைச்சாறிட்டு,பிசைந்து பிட்டவித்து, எருமை நெய் கருப்புக்கட்டி சேர்த்து உண்ண பெரும்பாடு தீரும்.           
87.   சிறுசெருப்படிச்சாறு,ஆவின்பால் சமன் கலந்து 4நாள் காலை பருக பெரும்பாடு தீரும்.                                                                
88.   தேங்காய்பால்,ஆவின்பால் வகைக்குஅரைப்படி,அரைத்த முருங்கைப்பூ தேங்காயளவு, பனைவெல்லம்120கிராம், சேர்த்து இலேகியஞ்செய்து,வேளைக்கு எழுமிச்சையளவு,10நாள் சாப்பிட பெரும்பாடு தீரும்.
89.   குப்பைமேனி,கரிப்பான்,சிறுசெருப்படி,நிலவாகை, பொடித்து,சமனாய்கலந்து, திரிகடி, தேனில்20நாள்கொள்ள சூதகவாயு தீரும்.                                            
90.   துத்தி இலை,மிளகு,வெள்ளுள்ளி வகைக்கு 40கிராம்,வசம்பு5கிராம், அரைத்து விலக்காயிருக்கிற 3நாளும் கொள்ள சூதகவலி தீரும்.பத்தியம்.
91.   இந்துப்பு,திப்பிலி,பெருங்காயம் இளவறுப்பாய் பொடித்து,வெந்நீரில்3நாள் கொள்ள சூதகவலி தீரும்.                                                                   
92.   நிலவாகை சமூலம்,சுக்கு,தனித்தனியே பொடித்து சமன் கலந்து,திரிகடி 3நாள் சாப்பிட்டு,6நாள்பத்தியமிருக்க சூதகவலி,சூதகவாயு நீங்கும்.                    
93.   சம்பங்கிபூ 25,கொழுந்து 150கிராம்,1லிநீரில் அரைக்கால் லி ஆக காய்ச்சி, 50 மிலியில்,10மிலி தேன் கலந்து காலைமாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர எல்லாவித சூதக நோய்களும் விலகும்.                                  
94.   மல்லிகைப்பூ 35கிராம்,4லில்1ன்றாய்க் காய்ச்சி 250மிலி,காலைமாலை வெறும் வயிற்றில் 100மிலி,பருகிவர,சூதகநோய்கள்நீங்கி கருப்பாயாசம் வலுவடையும்.                                                 
95.   வாழைக்காயை அடுப்பிலே சுட்டு தோல் நீக்கி,அரைத்து, எருமைத் தயிரில் கலந்து சாப்பிட பெரும்பாடு(menorrhagia) எனும் அதிக உதிரப்போக்கு உடனே குணமாகும்                                
96. நன்கு பழுத்த வாழைப் பழங்களுடன் ஏலம் சேர்த்துச் சாப்பிடபெரும்பாடு நீங்கும்.அன்று வேறு உணவுகள் சாப்பிடக்கூடாது                             
97.   வேலிப்பருத்தி இலைச்சாறு 20மிலி,அதிகாலையில் 3நாள் சப்பிட்டுவர இளமையில் நின்றுபோன மாதவிலக்கு(amenorrhoea)மீண்டும் வெளிப்படும்.புளி இல்லாப் பத்தியம்.                                                    
98.   வாதாம்பருப்பு 40கிராம்,உலர்ந்த திராட்சை100,தேங்காய்பருப்பு70, பேரீச்சம்பழம்80, அரைத்து,வெறும்வயிற்றில் அவ்வப்போது சாப்பிட்டுவர இளமையில் நின்ற மாதவிலக்கு வெளியாகும்.                                            
99.    வேலிப்பருத்திஇலை 7,மிளகு 11,சேர்த்தரைத்து 5நாள், காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு புளி இல்லாப் பத்தியமிருக்க,பூப்படையாத பெண்கள் பருவமடைவர். இல்லையெனில் 15நாள் கழித்து மீண்டும் 5நாள் சாப்பிடவும்.                      
100.                        கருஞ்சீரகசூரணம்2தேகரண்டி காலை தேனில் குழைத்துச் சாப்பிட்டுவர, சிறுநீரக கற்கள்,கருப்பைக்கோளாறுகள்,மாதவிடாய் கோளாறுகள் மறையும் இரத்தம் சுத்தியாகும்                                                                                    
101.                        சாறுவேளைக் கஷாயம் பால்,சர்க்கரை சேர்த்து காலைமாலை 100மிலி பருக சூதகவாயு,சூதகக்கட்டு நீங்கும்.                                      
102.         ரோஜா குல்கந்து காலைமாலை கழற்சிக்காயளவு சாப்பிட்டுவர கருப்பை பலமடையும்.                                      
103.                        தும்பையிலை,உத்தாமணியிலை சமனரைத்து சுண்டைக்காயளவு(2கிராம்) பாலுடன் சாப்பிட்டு புளி,காரம் நீக்க உதிரச்சிக்கல்,சூதகவலி தீரும்.  
104.                        கருஞ்செம்பை இலைச்சாறு 15மிலி காலை வெறும் வயிற்றில் சாப்பிட வாயுவால் தடைப்பட்ட மாதவிடாய் வெளியாகும்.                       
105.                        வல்லாரையிலைச்சூரணம் 5அரிசி எடை காலைமாலை நெய்யில் கொள்ள சூதகக்கட்டு தீரும்.                                                       
106.                        நாய்வேளைவிதையைத் துவையல்செய்து சாப்பிட உதிரச்சிக்கல் தீரும்.  
107.                        கவிழ்தும்பையிலையை தேன்விட்டுவதக்கி நீரில் கொதிக்கவைத்து காலை மாலை சாப்பிட்டுவர சூதகவலி தீரும்                                            
108.                        100 கிராம் மூங்கில் குருத்தைச் சிதைத்து 4ல்1ன்றாய்க்காய்ச்சி  50மிலி தினம் 3வேளை சாப்பிட மாதவிலக்குச் சிக்கல்கள் அகலும்.   
109.                        கீழாநெல்லிவேர்,அசோகுப்பட்டை,அத்திப்பட்டை பொடித்து காலைமாலை 10 கிராம், வெந்நீரில் 40நாள் கொள்ள பெரும்பாடு,மாதவிடாய் தாமதம்,உதிரச் சிக்கல் தீரும்   
110.                        வெள்ளருகுச்சமூலம்1பிடி,மிளகு10,சுக்கு1துண்டு,சீரகம்1தேகரண்டி,இடித்து 5ல்1ன் றாய்க் காய்ச்சி,காலை 200மிலி மாதவிலக்கின்போது 3நாள் சாப்பிட கருப்பைப் புழு,மாதவிடாய்க்கோளாறு நீங்கும்.                  
111.                        வல்லாரை,உத்தாமணி சமனரைத்து10கிராம்(கழற்சிக்கயளவு)4நாள் வெந்நீரில் கொள்ள சூதகச்சிக்கல் தீரும்.              .    
112.                        மாவிலங்கம்பட்டை1பங்கு,பூண்டு கால்பங்கு அரைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட சூதகவாயுவால் தாமதித்த மாதவிடாய் தீரும்.                                  
113.                        அத்தி, அசோகு,மா பட்டைகுடிநீர் தினம்3வேளை பருகிவர தீராத பெரும்பாடு தீரும்.                       
114.                        செம்பரத்தைவேர்பட்டை,இலந்தைவேர்பட்டை,மாதுளம்பட்டை சமன் பொடித்து 5கிராம் காலைமாலை சாப்பிட்டுவர பெரும்பாடு தீரும்.                
115.                        மந்தாரைமொட்டு 50கிராம் 2ல்1ன்றாய்க்காய்ச்சி 200மிலி,காலைமாலை பருகி வர பெரும்பாடு தீரும்.                                                
116.                        விளாம்பிசின் சூரணம் 1சிட்டிகை காலைமாலை வெண்ணையில் கொள்ள பெரும்பாடு தீரும்.                                                          
117.                        ஒதியம்பட்டைக்குடிநீர் 30மிலி காலைமாலை சாப்பிட பெரும்பாடு தீரும்.    
118.                        நாயுருவியிலைச்சாறு 10-15மிலி சர்க்கரை கலந்து 4-5நாள் பருக பெரும்பாடு தீரும்.                                                             
119.                        மலைவேம்பு இலைச்சாறு10மிலி மாதவிலக்கின் 3ம்நாள் காலை பருகி வர கருப்பைக்குற்றம் நீங்கி மகப்பேறு வாய்க்கும்.                         
120.                        கோங்கிலவம் பிசின் இளநீரில் 2கிராம் தினம்3வேளை கொள்ள பெரும்பாடு தீரும்.
121.வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து அருந்தி வர உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.
122.வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வர மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.
123.ஒரு சாதிக்காயை எடுத்து,அதை பசு வெண்ணெயால் மூடி நீளமான ஊசியில் செருகிப் பிடித்துக்கொண்டு,நெருப்புச்சுடரில் காட்டி எரிக்க,வெண்ணெயை உள்வாங்கி சாதிக்காய் எரிய ஆரம்பிக்கும்.சாதிக்காய் முழுமையாக எரிந்து கருகும் வரை,மேலும், மேலும்,பசு வெண்ணெயை கொஞ்சம், கொஞ்சமாக அதன்மேல் வைத்துக் கொண்டே இருக்கவும்.இப்படி, .இறுதியாக மிஞ்சும் அந்த சாதிக்காயின் கரியை,நன்கு தூளாக்கி  ஒரு சிட்டிகை அளவு எடுத்து,காலை, மாலை இரு வேளையும் தேனில் உண்டுவர,நாற்பத்தெட்டு நாட்களில், இறங்கிய கர்ப்பப்பை மேலேறும். வருடக்கணக்கில் அவதிப்படுவோருக்கு, தொண்ணூறு நாட்களில் குணம் தெரியும்.
124.அசோக மர பட்டை கால் கிலோ, கருப்பு எள் 50 கிராம் தூள் செய்து ஒரு தேகரண்டி  2ல் 1ன்றாய்க் காய்ச்சி காலைமாலை 250மிலி உண்டு வர கருப்பை பலவீனம், கருப்பையில் கட்டி, கருப்பை வீக்கம், கருப்பையில் சதை வளர்ச்சி,  நீர்க்கட்டி, போன்ற கருப்பை கோளாறுகள் நீங்கும்.
125.முருங்கைக்காயை சமைத்து சாப்பிட்டு வர கருப்பையின் பலவீனம் மறைந்து பலம் பெறும்.
126.அதிமதுரம், திராட்சை 50லிருந்து 100 கிராம் வரை எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வர,(3 மாதங்கள்)கருத்தரிக்கும்
127.உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்த மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
128.மாதவிடாய் நாளில் எலுமிச்சம் பழச்சாறு சாப்பிட்டு வர வலி நீங்கும்.
129.மலைவேம்பு இலையை இடித்து சாறு பிழிந்து சாப்பிட்டு வர வலி தீரும்.
130.அரசமரத்தின் இலையை மைய அரைத்து காலையில் வெறும் வயிற்றில் 1-உருண்டை சாப்பிட்டு வர குழந்தை பாக்கியம் கிடைக்கும்
131.வாரத்தில் 3-நாட்கள் அகத்திக்கீரை சாப்பிட்டு, தினசரி செவ்வாழைப் பழம் 1-வீதம் ஒரு மாதம் சாப்பிட்டு வர விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
132.துளசி, வில்வம், அருகம்புல், மிளகு பொடி சமன் கலந்து வாரம் ஒரு நாள் 1 தேகரண்டி வெந்நீரில் கலந்து சாப்பிட கர்ப்பப் பையில் நோய் வராது.
133.அசோக மரப்பட்டையை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து தினம் மூன்று வேளை ஒரு தேகரண்டி குடித்து வர அதிக ரத்தப்போக்கு குணமாகும்.
134.கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வர உடற்சோர்வு நீங்கி பலம்பெறும்.
135.கால் கிலோ அசோகப் பட்டை, மாவிலங்கப் பட்டை 100 கிராம், சுக்கு 25 கிராம், கருஞ்சீரகம் 25 கிராம்,தூள் செய்து,மூன்றுகிராம் காலைமாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மாதாந்திர சுழற்சி முறையாக ஏற்படும்.
136.100 கிராம் அசோகப் பட்டைத் தூளுடன் 25 கிராம் பெருங்காயத்தூளைக் கலந்து, இரண்டு கிராம் பசு வெண்ணெயில் குழைத்து தினம் மூன்று வேளை சாப்பிட்டு வர ஓரிரு மாதங்களில் மாதவிடாயின்போது உண்டாகும் வயிற்றுவலி  குணமாகும்.
137.ஐந்து கிராம் அசோகப் பட்டைப் பொடியை கட்டித் தயிரில் கலந்து தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வர, அதிக ரத்தப்போக்கு உடனே நிற்கும்.
138.மணத்தக்காளிக் கீரை 1பிடி, கொத்தமல்லி விதை 1தேகரண்டி,சீரகம் 1 தேகரண்டி,சோம்பு 1தேகரண்டி,இஞ்சி 1துண்டு,பூண்டு4 பல், சின்ன வெங்காயம் 3,வெற்றிலை2, மிளகு அரை தேகரண்டி எடுத்து தண்ணீர் விட்டு ரசம் செய்து காலைமாலை உணவுக்குமுன் அல்லது பின் மாத விலக்கு காலத்தில் 10 நாள் 3 மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வர மாதவிலக்கு குறைபாடு நீங்கும்.
139.விளக்கெண்ணெயுடன் துளசிச் சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சம் சாறு சம அளவு கலந்து காய்ச்சி 15 மில்லி அளவு உட்கொண்டு வர  மாதவிடாய் கோளாறுகள் அகலும்.
140.அடிவயிற்றில் விளக்கெண்ணெய் தடவி, அதன் மீது ஆமணக்கு இலைகளை வதக்கி பொறுக்கக் கூடிய சூட்டில் போட்டு வர உதிரப் போக்கு ஏற்பட்டு வயிற்று வலி தீரும்.
141.தினமும் பாலில் குங்குமப் பூவை கலந்து கொடுத்துவர ஆறே மாதத்தில் பூப்படைவர்.
142.அசோக மரப்பட்டையை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து தினம் மூன்று வேளை ஒரு தேகரண்டி அளவுக்கு குடித்து வர அதிக ரத்தப்போக்கு குணமாகும்.
143.                        கறிவேப்பிலை பொடியுடன் சர்க்கரை கலந்து காலைமாலை திரிகடி கொள்ள நீர்க்கோவை சூதகவாய்வு தீரும்
பூவரசம்பட்டை100கிராம்,சீமைக்காசுக்கட்டி100கிராம்,இந்துப்பு100கிராம் உலர்த்திப் பொடித்து 2கிராம்,மாதவிலக்கான முதல்நாளிலிருந்து 7நாள் காலை மட்டும் சாப்பிட்டு, பால்,மோர்,மிளகுரசம்,பருப்புத் துவையல் மட்டும் உண்ண 8-12 மாதம் பிள்ளைப்பேறு உண்டாகாது.

கருத்துகள் இல்லை: