பிறர்
பசியினால் வருந்துவதைக்கண்டும் அன்னமிடாமல்
உண்பதாலும்,ஒருவரிடம் உண்டியைத்
தடுத்ததாலும்,வயிர் எரியக்
கெடுதலாலும்,அபாண்டமான குற்றம்
சுமத்தி வயிரெரிய காணலாலும்,குடும்பத்தைக்
கலைத்தாலும், குன்மம்,எரிகுன்மம்,குலை
குன்மம்,தொண்டைக் கட்டிகள்
உண்டாகும்.
அன்றியும் நெல் உமி கல் உண்பதால் வயிற்றில் சோறை சேர்ந்து குடலில் மாசு பற்றியும் உண்டாகும் 7வித குன்மங்களையும் அவிழ்தங்களால் நீக்க சாத்தியப்படும்.
அன்றியும் நெல் உமி கல் உண்பதால் வயிற்றில் சோறை சேர்ந்து குடலில் மாசு பற்றியும் உண்டாகும் 7வித குன்மங்களையும் அவிழ்தங்களால் நீக்க சாத்தியப்படும்.
இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன.
இந்த
சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது
அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில்
இடைவெளி (breakdown)ஏற்படும்போது
அமிலமானது இரைப்பை மற்றும்
சிறுகுடலைப் பாதித்து சிவந்து
வீக்கம் மற்றும் வலியுடன்
கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது.
புண் தீவிரமடையும்போது அது
இரைப்பை மற்றும் சிறுகுடலில்
துளையை ஏற்படுத்தி ரத்தக்
கசிவையும் ஏற்படுத்துகிறது.
காரணங்கள்:
பசிக்காமல் சாப்பிடுவது, ருசிக்காமல் சாப்பிடுவது,அளவுக்கு மிஞ்சி சாப்பிடுவது, அவசரமாக சாப்பிடுவது,அடிக்கடி சாப்பிடுவது,பொருந்தாத உணவுகளை
சாப்பிடுவது..
அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.
அறிகுறிகள்
குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.
இரைப்பையில் வீக்கம் இருந்தால் ;வாந்தி,ஆயாசம் காணும்.
இரைப்பையில் இரணம் கண்டால் ;வலி,வாந்தி காணும்.பசிமந்தம்,மலச்சிக்கல் நேரும். நீர் சரியாய் இறங்காது.
கல்லீரலுக்கும்,இரைப்பைக்கும் மத்தியில் இரணம் கண்டால் குன்மம் எனப்படும் 8 வகையான வயிற்றுவலி தோன்றும்.
பித்தம் அதிகரித்து குடல்புரட்டல் உண்டாகி எந்நேரமும் ஏப்பத்தையுண்டாக்கி அக்கினி மந்தத்தைப்பற்றி நிற்பது குன்மம்.
வாத,பித்தத்திலே,தமர்குன்மம்,சத்திகுன்மம்,எரிகுன்மம்,வலிகுன்மம்,சூலை குன்மம், கபாலகுன்மம் என 8வகை
குடல் ஓரங்களில் உப்பு படிந்து காரைகட்டி அல்லது சிறுகற்கள் பதிந்து,அவற்றில் மலம் அல்லது கடின உணவு தாக்கும் போது வயிற்றுவலி உண்டாகும்.இதுவே பக்க சூலை/குடல்வால் எனப்படும் அப்பெண்டிசைட்டிஸ் (appendcities). அதாவது குன்மத்தைப் பற்றி பக்கவிலாவில் அவ்வாயு தங்குவது 18வகையான சூலைரோகம் ஆகும்
குடல்வாதம்/ஹெர்னியா( herniyaa) ; குடல்வாயு அதிகரித்தால் குடல்பை பளுவாகி, குடலுக்குக் கீழுள்ள ஜவ்வில் இலேசான துவாரம் காணும். அதிநடை,மலபந்தம் ஏற்படில் குடல் கீழே இறங்கும்.பீஜத்திற்க்குமேல் வலியும்,வீக்கமும் காணும்.
வாதகுன்மத்தின்குணம்;ஈரலும்,நெஞ்சும் வற்றும்;ஒரு பக்கத்தைப் பற்றி வயிறெரிந்து உளையும்;குடலைப்புரட்டி வலிக்கும்;சத்திக்கும்;கிறுகிறுத்து வரும்;சந்து கால் கை பொருந்து உளையும்;இரவில் பாதி உபாதி அதிகரித்து நித்திரை சற்றும் வராது.
பித்தக்குன்மக்குணம்;வயிறு மந்திக்கும்,வலிக்கும்,நெஞ்செரியும்,வாய்நீர் ஊறும், ஒக்காளிக்கும்;கிறுகிறுக்கும்,வியர்க்கும்,வாய் கசக்கும்,உண்டியை ஒடுக்கும்;மலத்திற் பித்தஞ்சுவரி கடுத்திறங்கும்,சிறுநீர்,விழி மஞ்சணித்திருக்கலாம்.
சிலேத்மகுன்மகுணம்;நாவு வழுவழுத்தினிக்கும்,வாய்நீர் சுற்றி வாந்தியாகும்,விக்கல், கொட்டாவி,இருமல்,தும்மல்,இளைப்பு,வயிற்றிரைச்சல் காணும்,நீர் மலங்கட்டும், அன்னத்தை வெறுக்கும்,புறந்தாள் வீங்கி வற்றும்,சீழ்போல் கபம் விழும்.
வலிக்குன்மகுணம்;வயிறு பலவிதமாய் வலிக்கும்,ஆகாரத்தை மறுக்கும்,நெஞ்செரியும், எதிரெடுக்கும், மலத்தில் பித்தம் சுவரி விழும்,தேகம் வற்றும்.
சித்திகுன்மகுணம்;வாயு அதிகரித்து வயிறு பொருமும்,அன்னத்தைத் தள்ளும், செரிக்காது, வாந்தியாகும்,நெஞ்செரியும்,புளித்தேப்பமிடும்,உடல் வெளுத்து வற்றும், ஆயாசங் களைப்புண்டாகும்,மலங்கறுகும்.
எரிகுன்மகுணம்;வயிறு எப்போதும் இரையும்,பொருமும்,குடலைப் புரட்டி ஒக்காளிக்கும், ஏப்பமிடும்,தலை கனத்து வலிக்கும்,கிறுகிறுக்கும்,மயிர்கால்கள்விழி வியர்க்கும்.
குன்மசூலைகுணம்;மேல்வயிறு வலித்து எரியும்,வாய் நீர் ஊறும்,ஏப்பமிடும்,சிறுக வெதும்பும், பொருத்துக்கள் இளையும்,குத்தும்.
18வகையானசூலைரோகம்
வாதசூலைகுணம்; உடல் கனத்துத் திமிராய் விறுவிறுத்துப் பிடரியையும் பாதத்தையும் பற்றி இசித்து கைகால் விரல்கள் மொளி முதலான பொருத்துக்கள் வீங்கிக் கடுத்து உளைந்து நடக்கவொட்டாமல் முடங்கி மலஞ் சிக்கும்;குளிர் காலத்தில் அதிகரிக்கும்.
வாதவாயுச்சூலைக்குணம்;பிடரி கழுத்து மூட்டு முள்ளந்தண்டு நெஞ்சு விலா பிட்டி துடை இவைகளை உளைந்து குத்தி வலித்துக் காலையில் வயிறு கடல் போல் இரையும்.
வாதநீர்ச்சூலைகுணம்;உடல் புன்போல் உளைந்து கைகால் விரல்கள் வீங்கித் திமிராய் விறுவிறுத்து மெய் வியர்த்துக் குளிர்ந்து முகம் தலை வெதும்பி கபமும் பித்தமும் மீறி ஓடும்.
வாத சுரோணித சூலைகுணம்;நரம்புவழி நீர் சென்று உடலில் பாய்ந்து அசைவுகள் வீங்கி வலிக்கும்.
வாதபித்தச்சூலைக் குணம்;கைகால் பொருத்துகளில் கரடுகட்டி மேனியெல்லாம் தடித்துப் புண்ணாகும்.
சன்னிவாதசூலைகுணம்;கைகால் மூட்டுகளில் மோதுகட்டி மேனி வீங்கி அயர்ந்து நரம்புதோன்றி நா குமுறி செவி மந்தித்து சலவை காணும்.
பித்தச்சூலைகுணம்;உடம்பு உஷ்ணத்தால் வரண்டு கடுத்து அசதியாய் நடுங்கித் தலைவலித்து வாய் கசந்து கண் மூக்கு நீர் மஞ்சணித்து கைகால் பொருத்துக்கள் உளைந்து விறுவிறுத்து மோது கட்டும்.
கபசூலைகுணம்;கைகால் நெஞ்சு இவைகளில் குத்தி நெஞ்சு வரண்டு இருமிக் கபம் கட்டும்.
சுக்கிலப்பிரமேகசூலைகுணம்;தேகத்தில் அக்கினி அதிகரித்து நீர்த்தாரையில் சுக்கிலம், சீழ்,இரத்தம், சதை போலிறங்கி தேகத்தில் குத்தல்,வலி,கைகால் மொளிகளில் வீக்கங் காணும்.
கிரந்திசூலைகுனம்;கிரந்திநோயால் கைகால்மொளி பொருத்துக்களில் நீர்க்கட்டி வீங்கிக் கடுத்து கரடுகட்டி வெடித்து சீழும் சலமும் வடிந்து இந்திரியமுறிந்து நீர் கடுத்து இறங்கும்.
மாங்கிசசூலைகுணம்;மொளி முதலான அசைவு ஸ்தானங்கள் வீங்கி வெடித்து நொந்து புலால் நாறி தேகம் வற்றும்.
நீர்ச்சூலைகுணம்;புறங்காலில் தினவுண்டாகி வீங்கி பொருத்துக்கள் உளைந்து குத்தி வாயில் கொப்புளம் போல் திரண்டு உடையும்.
1.
மணத்தக்காளி இலையை உணவுடன்
சேர்த்து,காரமில்லாமல் சாப்பிட்டுவர நாக்குப்புண், குடல்புண் குணம் ஆகும்
2. 50கிராம் அதிமதுரத்தை 1500மிலி நீரிலிட்டு 250மிலியாக காய்ச்சி,150கிராம் சர்க்கரை, 250மிலி பால் சேர்த்து பாகுபதம் காய்ச்சி, தினமிருவேளை, 2 தேகரண்டி, 100மிலி வெந்நீரில் கொள்ள வயிற்றுப்புண் குணமாகும்
3. 1பிடி கீழாநெல்லியை அரைத்து,200மிலி மோருடன் கொள்ள வயிற்றுப்புண் குணமாகும்
4. வில்வ இலைத்தூள் அரை தேகரண்டி வெண்ணையுடன் கலந்து சாப்பிட வயிற்றுப்புண், மலச்சிக்கல் குணமாகும்
4. வில்வ இலைத்தூள் அரை தேகரண்டி வெண்ணையுடன் கலந்து சாப்பிட வயிற்றுப்புண், மலச்சிக்கல் குணமாகும்
5. ஓமத்தீநீர் 3-5மிலி வெந்நீரில் கலந்து தினமிருவேளை குழந்தைகளுக்குக்
கொடுக்க குடல்வலி தீரும்
6. உத்தாமணி இலைச்சாறு 5-10 துளிகள் அரைதேகரண்டி வி.எண்ணையில் கலந்து 2 வேளை குழந்தைகளுக்குக் கொடுக்க குடல்வலி தீரும்
7. 50மிலி வெந்நீரில் 0.5 கிராம் பொரித்த பெருங்காயம்,2துளி ஓமத்தீநீர் சேர்த்து 3சங்களவு தினமிருவேளை கொடுக்க குடல்வலி மறையும்
8.
நொச்சிஇலை 2, நுணாஇலை 3, பொடுதலைஇலை 20, நீரிலிட்டு 4ல்1ன்றாய் காய்ச்சி, தினமிருவேளை பாலடை அளவு குழந்தைகளுக்கு கொடுக்க குடல்வலி தீரும்
9.
குன்மகுடோரி மெழுகு 0.5-1 கிராம் வெந்நீரில் தினம்3வேளை கொள்ள நாங்கூழ் அழற்சி குணமாகும்
.
.
10.
உப்புச்செந்தூரம் 100-200மிகி, 5-10மிலி தேனில் குழைத்து தினமிருவேளை கொள்ள நாங்கூழ்அழற்சி தீரும்
11.
திரிபலாசூரணமாத்திரை3,தினம்3வேளை,வெந்நீரில் கொள்ள வயிற்றுப்புண் ஆறும்
12.
சங்குபற்பம்400மிகி, 5-10 பால்,வெண்ணை அல்லது நெய்யில் கலந்து கொள்ள வயிற்றுப் புண் ஆறும்
13.
தேற்றான்கொட்டை இளகம் 5-10கிராம்,தினமிருவேளை பாலுடன் கொள்ள வயிற்றுப்புண் ஆறும்
14.
குன்மகுடோரிமெழுகு 1-2கிராம்,தினமிருவேளை வெந்நீரில் கொள்ள வயிற்றுப்புண் ஆறும்
15. கசகசாவை கருப்பட்டியுடன் சேர்த்தரைத்து காலையில் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்
15. கசகசாவை கருப்பட்டியுடன் சேர்த்தரைத்து காலையில் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்
16.
பெருந்தும்பை இலைகளை அரைத்தோ
அல்லது மென்றோ சாப்பிட்டுவர வயிற்றுப்புண் ஆறும்
17.
குடசப்பாலை விதையை வறுத்து,பொடித்து,1சிட்டிகை,தினமிருவேளை உட்கொள்ள எரிச்சலுடன் தோன்றும் வயிற்றுவலி தீரும்
18.
ஒதியம்பட்டைசூரணம்1-2கிராம்,தினம்3வேளை,மோரில் உண்டுவர வாய்புண், குடற்புண், பேதி,குருதிக்கழிச்சல் தீரும்
19.
சப்பாத்திக்கள்ளி சதையை
சிறுதுண்டுகளாக நறுக்கி மிளகுதூளில் கலந்து 5-10 துண்டுகள் சாப்பிட்டுவர வெப்பத்தினாலுண்டாகும்
வயிற்றுவலி குணமாகும்
20.
அத்தியிலை2,வேப்பிலை4,அருகம்புல் சிறிது, மென்று அல்லது கஷாயம் செய்து சர்க்கரையின்றி பருகிவர வயிற்றுப்புண் குணமாகும்
21.
ஓமத்தை கருக்கி,200மிலி நீரில் சுடவைத்து,வடித்துப்பருக வயிற்றுப்புண் குணமாகும்
22.
வெந்நீரில் சுக்கு,நெய் ,சர்க்கரை கலந்து கொடுக்க வயிற்றுவலி குணமாகும்
23.
ஓமத்தை அரைத்து மோரில் கொள்ள
வயிற்றுவலி தீரும்
24.
வேப்பம்பூவை நெய்யில்வதக்கி
சாதத்துடன் பிசைந்து சாப்பிட வயிற்றுப்புண் குணமாகும்
25.
1பிடி கீழாநெல்லி இலையை
அரைத்து 200 மிலி மோருடன் காலையில் கொள்ள வயிற்றுப்புண் குணமாகும்.
26.
மாதுளம்பழசாறுடன்,சிறிது உப்பு,மிளகுப்பொடி கலந்து சாப்பிட வயிற்றுவலி
நிற்கும்.
27.
வெறும்வயிற்றில் போதுமான
மாம்பழங்களை மட்டும் (வேறுஎதுவும் கூடாது) சாப்பிட்டு வந்தால் பெருவயிறு/மகோதரம்(ascitis) குணமாகும்.
28.
வெறும் இளநீர் மட்டும் சாப்பிட்டு
உபவாசம் இருக்க மகோதரம் குணமாகும்.
29.
உலர்ந்ததிராட்சை பழங்களை
பாலில் சாப்பிட்டுவர மகோதரம் குணமாகும்.
30.
வாழைத்தண்டுச்சாறு/கிழங்குச்சாறுடன் விளக்கெண்ணை கலந்து சாப்பிட பக்கசூலை குணமாகும்.
31.
இருபதுவெள்ளைப்பூண்டை தோல்நீக்கி,தேங்காய் துருவலுக்குள் பொதிந்து பிட்டவித்து, பூண்டையரைத்து வேளைக்கு கொட்டைப்பாக்களவு
8நாள் கொள்ள சகல குண்மம்வாயு நீங்கும்
32.
சத்திச்சாரனைவேரை பாலில்
அவித்து உலர்த்திப் பொடித்து சீனி கலந்து தேன் அல்லது நெய்யில் திரிகடி கொள்ள
பித்தகுன்மம் தீரும்.
33.
முக்காவேளை சமூலம்
பிட்டவித்து 250மிலி சாறு பிழிந்து திரிகடுகு கலந்து
6வேளை கொடுக்க பித்தகுன்மம் தீரும்.
34.
கொடிக்கள்ளி,திருகுகள்ளி,கொடிவேலி,நாயுருவி,எருக்கு இவற்றின் சாம்பல் சமனாய் எடுத்து எஈரில் கரைத்து, தெளிவை காய்ச்சி உப்பு எடுத்து வேளைக்கு 5கிராம் நெய்யில் கொள்ள சகல குன்மமும்
தீரும்.
35.
சுக்கு,வெங்காரம்,ஓமம்,மிளகு வகைக்கு 3கிராம்,வறுத்து,பெருந்தும்பை கொழுந்து 1 பிடி சேர்த்து எருமை மோரிலரைத்துச்
சாப்பிட குன்மவலி நீங்கும்.
36.
40 கிராம் பூண்டை உரித்து
பாலில் அவித்து அதில் சீரகம்,இந்துப்பு, சுக்கு, திப்பிலி,மிளகு, ஓமம், காயம் வகைக்கு40கிராம்
வறுத்துப் பொடித்து தூவிக் கடைந்து வேளைக்கு 30கிராம் 40நாள் சாப்பிட்டுவர குன்மம்,மூலவாயு, பாரிசவாயு,வயிற்றுவலி நீங்கும்.
37.
வேப்பிலையை
புதுசட்டியிலிட்டுஎரித்து நீராக்கி திரிகடி தேனில் புளி நீக்கிக் கொள்ள சகல
குன்மம் தீரும்.
38. 20 பூண்டை தோல்நீக்கி தேங்காய் துருவலுக்குள் வைத்து பிட்டவித்து, பூவைத் தள்ளி பூண்டையரைத்து வேளைக்கு
எலுமிச்சையளவு 8நாள் கொள்ள சகல குன்மம் தீரும்.
39. 250மிலி வேலிப்பருத்திசாற்றில் இந்துப்பு,ஓமம் வகைக்கு40கிராம்,திப்பிலி
30 கிராம், காயம்10கிராம் போட்டு வறுத்துப் பொடித்து திரிகடி
வெந்நீரில் கொள்ள சகல குன்மம் தீரும்..
40. மிளகாய்,
உப்பு, எள் சமனாய் வறுத்து பொடித்து திரிகடி பசுநெய்யில்
கொள்ள சகல குன்மம் தீரும்.
41. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர (அல்சர்) குடற்புண் குணமாகும்.
42. வால்மிளகைப் பொடித்து அரை தேகரண்டி எடுத்துப் பாலில் கலந்து உண்ண குடற்புண் குணமாகும்.
43. கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம
அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை தேகரண்டி எடுத்து மோரில் கலந்து பருக குடற்புண் குணமாகும்.
44. சீரகம், அதிமதுரம், தென்னம்
பாளைப்பூ, சர்க்கரை சம
அளவு எடுத்துப் பால் விட்டு அரைத்து,எலுமிச்சை அளவு
எடுத்துப் பாலில் கலந்து பருக குடற்புண் குணமாகும்.
45. ஏலம், அதிமதுரம், நெல்லி
வற்றல், சந்தனம் வால்மிளகு
இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு
பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண குடற்புண் குணமாகும்.
46. அரை தேகரண்டி சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்த குடற்புண் குணமாகும்.
47. பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை தேகரண்டி எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ண குடற்புண் குணமாகும்.
48. கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு
சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப்
பருக குடற்புண் குணமாகும்.
49. மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ண குடற்புண் குணமாகும்.
50. பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின்
உண்ண குடற்புண் குணமாகும்.
51. சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு
எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ண குடற்புண் குணமாகும்.
52.
நூறு
கிராம சீரகத்தை மண்சட்டியில் காப்பிபொடி நிறம் வரும் வரை நன்கு வறுத்து பொடி செய்து தினம் மூன்று வேளை ஒருதேகரண்டி சாப்பிட்டு வெந்நீர் அருந்த வயிற்றுப்புண் (அல்சர்) குணமாகும்.
53.
மணத்தக்காளி
கீரை சாப்பிட குடல்புண் குணமாகும்.
54.
மஞ்சளை
தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரித்து சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
55.
வேப்பம்
பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்ள வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண்
நீங்கும்.
56.
1
தேகரண்டி சீரகத்தை வெறும்
வாணலியில் நன்றாக வறுத்து
1 தம்ளர் தண்ணீர் விட்டு
நன்றாகக் கொதித்ததும் பனைவெல்லம்
சேர்த்துக் குடிக்க வாயு வயிற்றுவலி
நீங்கும்.
57.
வெந்தயத்தை நெய்யில்
வறுத்து பொடி செய்து
மோரில் குடிக்க வயிற்று
வலி நீங்கும்
58.
அரச இலை
கொழுந்தை மோருடன் அரைத்து
மோருடன் கலந்து குடிக்க
வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
59.
சேர்க்க வேண்டியவை:
கோஸ், கேரட்,
வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி,
ஆப்பிள், நாவல், மாதுளம்பழம்,
வாழைப்பழம் தயிர், மோர்.
இள நுங்கு.
தவிர்க்க வேண்டியவை:
அதிகக் காரம், பொரித்த
உணவுகள், அசைவ உணவுகள்,
தேன், புளி.
கடைப்பிடிக்க வேண்டியவை:
காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும். பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம். தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். சரியான நேரத்திற்குத் தூக்கம் அவசியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக