குருதூஷணஞ்
செய்தல்,வழியில் முள் அடைத்தல்,மரங்களை காரணமின்றி பூ உதிர,கிளையொடிய அடித்தல், கல்லெரிதல், பச்சைக்கொடி, பூசைகளுக்குறிய
பூஞ்செடிகளை நிஷ்காரணமாய் வெட்டல்,கிள்ளல்,இரண்டாய் பிளந்தெரிதல், இவைகளால்
பிளவை, கண்டமாலை உண்டாகும்.அன்றியும் தன் பார்வைக் கெட்டாவிடங்களில் கட்டிகள்,புரை
விழும்.இரணங்கள்,கரப்பான்,வண்டுகடி, குழிப்புண்கள் உண்டாகும்.
1.
பலகறைப்பற்பம்
100-200மிகி,5-10மிலி பாலில் தினம் 2வேளை கொள்ள, அருகன்தைலம் பூசிவர கானாக்கடி தீரும்.
2.
பறங்கிபட்டைசூரணம்
2கிராம் 5-10மிலி பாலில் கொண்டு அருகன்தைலம் பூச கானாக்கடி குணமாகும்
3.
நடுநரம்பு
நீக்கிய வெற்றிலை5,மிளகு10, சேர்த்திடித்து 4ல்1ன்றாய்க் காய்ச்சி வடித்து தினம் 2வேளை 50மிலி பருகிவர கானாக்கடி தீரும்.
4.
கைப்பிடி
அருகம்புல்,மிளகு10,சேர்த்திடித்து 4ல்1ன்றாயக்
காய்ச்சி 75மிலி தினம்2 வேளை கொள்ள
கானாக்கடி தீரும்.
5.
கிரந்திநாயகம்
இலைகளை பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்க்க,
கானாக்கடி, வண்டுக்கடி,ஊறல்
குணமாகும்
6.
கைப்பிடி
அவுரி இலைகளுடன் மிளகுத்தூள் சேர்த்து 2ல்1ன்றாய்க் காய்சசி, 200 மிலி
தினம் 2 வேளை பருக கானாக்கடி,ஒவ்வாமை, தோல்நோய்கள் நீங்கும்.
7.
முட்சங்கன்வேர்
2கிராம்,4மிளகுடன் சேர்த்தரைத்து, பாலில் கலந்து, தினம் 2 வேளை பருக பூச்சிக்கடி விஷம் குணமாகும்.
8.
ஆடுதின்னாப்பாளை
இலைசசாறு சமன் தே.எண்ணை,கலந்து, காய்ச்சி வடித்து பூசி வர தோல்நோய்கள்,சிரங்கு,வண்டுக்கடி குணமாகும்
9.
ஊமத்தை
இலையுடன் மஞ்சள் சேர்த்தரைத்துப் பற்றிட தேள்கடி,பூரான், வண்டுக்கடி
வீக்கம் குணமாகும்.
10. குப்பைமேனி இலையை
அரைத்துப்பற்றிட வண்டுக்கடி வீக்கம் குணமாகும்
11. நிலவேம்புச் சமூல சூரணம்
தேய்த்து ஊறவைத்துக் குளிக்க,
வண்டுக்கடி, சொறி.சிரங்கு
குணமாகும்
12. வெங்காயச்சாறெடுத்துப் பூசிவர
பூச்சிக்கடிகள் தீரும்.
13. வன்னி சமூலம்,நெல்லிக்காயளவு,அரைத்து பாலில் கரைத்து வடித்து குடித்து வர. வாதம், கபம், சன்னிதோஷம்,கானாக்கடி நஞ்சு,சொறி தீரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக