பக்கங்கள்

29 அக்டோபர், 2016

நீரிழிவு/மதுமேகம்(DIABATIES)



 மாதர் போகங்களால் விளைவது மேகம்.          
  தற்போது நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதில்லை. இரசாயனம் கலந்த உணவையே சாப்பிட நேரிடுகிறது. மேலும், போதிய உடற்பயிற்சியின்மை, சில நேரங்களில் அதிக வேலைப்பளு, சரியான நேரத்திற்கு உணவருந்தாமை போன்றவையால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழந்து சர்க்கரை நோயை உண்டாக்குகின்றன.                                                                      
 பொதுவாக கணையத்தில் சுரக்கும் இன்சுலின் நம் உணவில் உள்ள தரமான சர்க்கரையை மட்டுமே ஏற்றுக்கொள்ளும்.தரமற்ற சர்க்கரை இரத்திலேயே சுற்றிக் கொண்டு இருக்கும்.உணவில் மாற்றம் செய்து இதனை சரி செய்து கொள்ளலாம்.                                                                                         
 பிரமேக நீரிழிவு வரக் காரணம்;
கோதையர் கலவியை மிக விரும்புவதால் மூலத்தில் கனல் மிஞ்சி,மேகஞ் சனித்து, சிரம்வரை வெந்துருகி,தாது கெட்டு,ஆக்கை நரம்பெல்லாம் பலங்குறைந்து, பிரமேக நீர், நீரிழிவு உண்டாகின்றன.இக்காலத்தில் மீன்,இறைச்சி ,நெய்,பால் மிக விரும்பினால் பிணி அதிகரிக்கும்          
    
 நீரிழிவு  24ன் விபரம்;                                                                                                                                                   வாதத்தில் 3,வாதப்பித்தத்தில் 4, பித்தத்தில் 3, பித்தவாதத்தில் 2, சிலேத்மத்தில் 4, சிலேத்மபித்தத்தில் 2, சிலேத்மவாதத்தில் 5.                                
 வாத நீரிழிவு 3ன் குணம்;நீர் மாம்பூ வாசமாயும் ருசி புளிப்பாயும்,குங்குமப்பூ வாசமாயும் காடிவாசமாயும்,ருசி கைப்பும் புளிப்புமாயும் இருக்கும்.                                                                                   
 வாதபித்தநீரிழிவு 4ன்குணம்:நீர் மஞ்சள் நாற்றமாயும் ருசி புளிப்பும்கசப்புமாயும் அலரிப்பூ வாசமாயும் ஐந்து வித ருசியாயும் பால் மணமாயும் ருசி வெண்ணை போலும் மூளை நாற்றமாயும் ருசி கைப்பாய் வசம்பு போல் இருக்கும்                                                                                 பித்தநீரிழிவு 3ன்குணம்:நீர் பாணக்கம் வாசமாயும் ருசி கைப்பாயும், உப்பு நாற்றமாயும் ருசி உப்பு  கரித்தும், மல்லிகைப்பூ வாசமாயும் ருசி எரிப்பாயும் இருக்கும்                                                                              
 பித்தவாத நீரிழிவு 2ன் குனம்;நீர் கோமூத்திர வாசமாயும் ருசி துவர்ப்பாயும்,சந்தன வாசமாயும் ருசி மிளகு போலும் இருக்கும்.                                                                                         சிலேத்மநீரிழிவு 4ன் குனம்;நீர் தாழைமலர் போன்றும் சாணம் போலும்,எலுமிச்சம் பழம் போலும் உதிரம் போலும் வாசனையாயும்,ருசி இனிப்பாயும்,புளிப்புமாயிருக்கும், சுண்னாம்பு வாசமாயும் ருசி சுண்னாம்பு போல் எரியும்.                                                                                                                                    சிலேத்துமவாதநீரிழிவு 5ன்குணம்: நீர் மிகுந்த நாற்றமாயும் ருசி புளிப்புமாயிருக்கும்,            
 வாதபிரமேகநீர்4ன்குணம்:மூளை போலும் இளநுங்கு போலும் நிணம் போலும் இறுகின சளி போலும் முதிர்ந்த சுக்கிலம் போலும் நீளநரம்பு போலும் நீரில் தோன்றும் நல்லெண்ணை போன்றும் ஊனை உருக்கின நெய் போலும் சிதறின கள்போல் வழுவழுப்பாயும் இறங்கும் ஈ விழும் அசாத்தியம் 

பித்தப்பிரமேகநீர்6ன்குணம்:உடல் கடுக்கும் மஞ்சணிக்கும் நாவு புளிக்கும் துவர்க்கும் கிறுகிறுத்து வரும் மயக்கங் காணும் நீர் மஞ்சள் போலும் நீலம் போலும் கறிபோலும் சாம்பல் கழுவின தண்ணீர் போலும் இறங்கும் புளித்திருக்கும் இறைச்சி கழுவின தண்ணீர் போலிறங்கும் அதைக் காய்ச்சி தீபம் எரிக்கலாகும் பித்தத்தில் எடுத்த தண்ணீர் ஆறையும் பார்க்கும்போது மஞ்சள் நிறமாயிருக்கும் 

சலப்பிரமேகநீரின்குணம்:கட்டுண்ட சுனைநீர் போலும் பழங்கூரை நீர் போலும் கரும்பின் சாறு போலும் பழைய வெல்லப்பாணக்கம் போலும் நீர் இறங்கும்.  உடல் மஞ்சணித்துப் பதைபதைக்கும்,மயக்கங் காணும்,அறிவு மயங்கும்,பலகாலும் நீரிறங்கும்,அது மஞ்சள் போலிருக்கும்,                                           

1.   ஆவாரம்பூ20,அரைத்து,புளித்த மோரில் கலந்து சாப்பிட்டுவர நீரிழிவு குணம் ஆகும்

2.   தொட்டாற்சுருங்கி சமூல சூரணம் 1தேகரண்டி,காலை வெந்நீரில் பருகிவர நீரிழிவு கட்டுப்படும்

3.   ஆவாரை,கொன்றை,நாவல்,கடலழிஞ்சில்,கோஷ்டம்,மருத மர பட்டைகள் வகைக்கு சமனெடுத்து, பொடித்து,2 தேகரண்டி,8ல்1ன்றாய் காய்ச்சி,தினம் 2 வேளை பருக நீரிழிவு குணம் ஆகும்

4.   ஆரைக்கீரையை தினமும் உணவில் சேர்த்துவர நீரிழிவு கட்டுப்படும்

5.   கீழாநெல்லிசமூலம் அரைத்து,எலுமிச்சையளவு,250மிலி மோரில் கலந்து குடிக்க நீரிழிவு, மஞ்சள்காமாலை குணமாகும்

6.   நாவற்கொட்டைசூரணம் 1கிராம் தினம்2வேளை சாப்பிட்டுவர நீரிழிவு கட்டுப்படும்

7.   நெல்லிச்சாறு,தேன்,எலுமிச்சைசாறு வகைக்கு15மிலி கலந்து காலையில் சாப்பிட்டுவர மதுமேகம் குணமாகும்

8.   ஆவாரை பஞ்சாங்க சூரணம் 10கிராம் தினம்3வேளை வெந்நீருடன் கொள்ள மதுமேகம், பிரமேகம்,மிகுதாகம்,மிகுபசி,உடல்மெலிவு,பலக்குறைவு தீரும்

9.   துத்தியிலையை கியாழம் செய்து பால்,சர்க்கரை கலந்து சாப்பிட மேகச்சூடு சாந்தியாகும்

10.  சிறுகுறிஞ்சான்இலை.நாவற்கொட்டை சமன் பொடித்து,1தேகரண்டி,வெந்நீரில் தினம் 2 வேளை கொள்ள நீரிழிவு கட்டுப்படும்

11.  வெந்தயத்தை இளவறுப்பாய் வறுத்து பொடித்து சலித்து தினம்2வேளை 1 தேகரண்டி சாப்பிட்டுவர நீரிழிவு கட்டுப்படும்

12.  நித்யகல்யாணி வேர்ச்சூரணம் .1 சிட்டிகை,சுடுநீரில் தினம்2வேளை சாப்பிட்டுவர நீரிழிவு கட்டுப்படும்.

13.  அரைத்த சந்தனம் 5-10கிராம்,50மிலி நெல்லிக்காய் சாறு அல்லது கஷாயத்தில்,48 நாட்கள் தினம்2 வேளை பருக நீரிழிவு குணமாகும்

14.  இலுப்பைபூ 50கிராம்,500மிலி நீரில்200மிலி யாக காய்ச்சி வடித்து காலை சாப்பிட மதுமேகம் தீரும்

15.  இலுப்பைமரபட்டை 50கிராம்,4ல்1ன்றாய் காயச்சி காலைமாலை சாப்பிட்டுவர மதுமேகம் தீரும்.மேகவாயுவை கண்டிக்கும்.

16.  கட்டுக்கொடியிலை சமன் வேப்பிலை சேர்த்தரைத்து அல்லது பொடித்து காலையில் கொள்ள நீரிழிவு,ஆயாசம்,தேக எரிவு,அதிதாகம்,பகுமூத்திரம், சிறுநீர் சர்க்கரை தீரும்

17.  சரக்கொனறைபூவை 3ல்1ன்றாய் காய்ச்சி 200மிலி பருகிவர வயிற்று புழுக்கள் அழியும். நீடித்து சாப்பிட மதுமேகம் தீரும்

18.  சிலந்தி நாயகமிலைச்சாறு 1தேகரண்டி சமன்பாலில்,காலைமாலை வெறும் வயிற்றில் கொள்ள இரத்தசர்க்கரை குறையும்.உள்உறுப்பு ரணங்கள்,கட்டிகள் ஆறும்

19.  நெல்லிக்காயை மஞ்சள்தூள் நீரிலிட்டுக் காய்ச்சி வடித்து தினம்2வேளை பருகிவர நீரிழிவு குணம் ஆகும்   

20.  கொன்றைப்பூ 200கிராம்,மையாக அரைத்து,மோரில் கலந்து சாப்பிட சர்க்கரை வியாதி தீரும்.                                       
                                                                                                                                                         
21.   ஆலமரப்பட்டை,வேர்ப்பட்டை வகைக்கு 200கிராம்,சிதைத்து,காய்ச்சி வடித்து, காலை 1குவளை பருகிவர,மதுமேகம் தீரும்.                                         
22.   பாகல் இலைச்சாறு 100மிலி,வாரமொருமுறை பருகிவர,சிறுநீர்சர்க்கரை குறையும். 
ரசபாஷாண வீறு தணியும்.                                               
23.   கோவை இலைக்குடிநீர் பருகிவர நீரிழிவு,இரத்தஅழுத்தம் நீங்கும்.                           
24.   பாகல் இலை10-15 தினம்சாப்பிட்டுவர,நீரிழிவு,இரத்த அழுத்தம் குணமாகும்.                                                                                                                                        
25.   பப்பாளி அல்லது நாவல் பழங்களை மட்டுமே அதிகம் சாப்பிட்டுவர நீரிழிவு குணமாகும்.                                                                 
26.   மாம்பூ,தளிர் சமன் பொடித்து,10கிராம் காலைமாலை கொதிக்கவைத்து பருகிவர நீரிழிவு குணமாகும்.
27.   சுத்தமான புங்கம்பூ2லி,50மிலிபசுநெய்யில் வறுத்து, உலர்த்தி,பொடித்து, 10கிராம் காலைமாலை பாலில் சாப்பிட்டுவர நீரிழிவு குணமாகும்.ஆறாத புண்களும் ஆறும்.   
                                        
28.   எள்ளுப்பிண்ணாக்கை பொடித்து,சலித்து,நாட்டுசர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டுவர நீரிழிவு குணமாகும்.                                                             
29.   வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வர கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். சர்க்கரை நோய் கட்டுப்படும்.                                                                 
30.   மாமரத்தின் தளிர் இலைகளை எடுத்து உலர்த்தி இடித்து பொடி செய்து, ஒரு தேகரண்டி, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, தினம் காலையில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குறையும்.
31.   வேப்பம் பூ, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவற்கொட்டை பொடி கலந்து அரைக் கரண்டி சாப்பிட்டு வர சர்க்கரை நோய் குறையும்.
32.   இசங்குவேர் பொடி 5 கிராம் நீரில் கலந்து அருந்த ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
33.   வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதை நன்றாக மசித்து குடித்து வர நீரிழிவு குறையும்.
34.   பிஞ்சு அவரைக்காயை நறுக்கி பொரியல் செய்து தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர நீரழிவு நோய் குறையும்.

கருத்துகள் இல்லை: