பக்கங்கள்

29 அக்டோபர், 2016

தாதுபலம்,ஆண்மைபெருக்கம்,விந்துஒழுகுதல்(night discharge,impotence,)



காரணங்கள்                                                                                                                                                             ஹார்மோன் மாறுபாடுகள், இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் பாதிப்புகள், குரோமோசோம் மாறுபாடுகள், அம்மைக்கட்டு, காசநோய், பால்வினை நோய்கள், மனநிலை மாறுபாடுகள், புகைபிடித்தல், மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பாதிப்புகள், கதிரியக்கத்திற்கு உட்படுதல் மற்றும் இறுக்கமான உள்ளாடை அணிதல் போன்றவை.
நாகரீகம் என்ற பெயரில் இறுக்கமான உடைகள்,கடினமான துணிகள் (Tight pant ,jeans,lekins) அணிவதை தவிருங்கள்,இவற்றால் அரைப்பகுதிக்கு காற்றோட்டம் தடைபட்டு உஷ்ணம் அதிகரித்து, விந்தனுக்கள்,கரு முட்டைகள் வெந்து மலட்டுத்தண்மை உருவாகும்.
 சொப்பன ஸ்கலிதம்
சிலருக்கு தூங்கும்போது தூக்கத்தில் கெட்ட கனவின் மூலமாக விந்து தானாகவே வெளியேறிவிடும்.பின்பு காலையில் உடம்பு சோர்வாய் இருக்கும் இந்த நிலையே சொப்பன ஸ்கலிதம்,நித்திரை ஸ்கலிதம் எனப்படும்.
சேர்க்க வேண்டியவை:
முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா, முருங்கைப் பிஞ்சு, மாதுளம்பழம், மாம்பழம், பலாப் பிஞ்சு, பலாக் காய், புடலங்காய், எலுமிச்சம்பழம், பசலை, அரைக்கீரை, கொத்துமல்லிக் கீரை, கோதுமை, ஜவ்வரிசி, உளுந்து, வெந்தயம், நிலக்கடலை.
தவிர்க்க வேண்டியவை:
அதிகக் காரம், துவர்ப்பு மற்றும் கசப்புள்ள உணவுகள், சிகரெட் மற்றும் போதைப் பொருட்கள்.
  1. தண்ணீர்விட்டான் கிழங்குச் சூரணம் 1தேகரண்டி,தினமிருவேளை,200மிலி பாலுடன்  கொள்ள  ஆண்மை  பெருகும்
  2. 1கிராம் தாமரைவிதையை அரைத்து.பாலில் கலந்து தினமிருவேளை சாப்பிட்டு வர  தாதுபலம் பெறும்
  3. நெருஞ்சில் விதைகளை  பாலிலவித்து,பொடித்து காலைமாலை அரை தேகரண்டி  பாலில்  கலந்து  பருகிவர  ஆண்மை  பெருகும்
  4. துளசி இலையை குறிப்பிட்டளவு தினமுமுண்டுவர  ஆண்மை அதிகரிக்கும்
  5. தூதுவேளை பூவையுலர்த்திப் பொடித்து அரைதேகரண்டி தினம் காலை,பாலில் சாப்பிட்டுவர  ஆண்மை  பெருக்கும்
  6. அரைக்கீரையை  நெய்,மிளகு  சேர்த்து வதக்கிச்  சாப்பிட்டுவர  தாது பலம் அதிகரிக்கும்
  7. முருங்கைவிதைசூரணம் இரவில் பாலுடன் சாப்பிட்டுவர  சுக்கிலம் விருத்தியாகும்.
  8. தோல் நீக்கிய  முருங்கை விதையை பாலில் வேகவைத்து,தேன் கலந்து  இரவில் சாப்பிட்டுவர  சுக்கிலம்  விருத்தியாகும்
  9. சுத்தம்  செய்த  ஆவாரை பிசின்  3கிராம்,100மிலி  நீரில்  இரவு  ஊற வைத்து காலை  பனங்கற்கண்டு  கலந்து  பருகிவர  தாது  விருத்தியடையும்
  10. நன்னாரி வேர் குடிநீர் சூடாக பருகிவர ஆண்மை பெருகும்
  11. பிரண்டைஉப்பு 2கிராம்,ஜாதிக்காய்தூள் 5கிராம்  கலந்து  சாப்பிட்டுவர தாதுநட்டம் குணமாகும்
  12. செம்பரத்தை பூச்சூரணம் 10கிராம், மருதம்பட்டைச்சூரணம் 5கிராம் கலந்து பாலில் சாப்பிட்டுவர தாது பலம் பெறும்.ஆண்  மலடு  நீங்கும்
  13. செம்பரத்தை மகரந்தக்காம்பு சூரணம் 5கிராம் பாலில் சாப்பிட்டுவர ஆண் மலடு நீங்கும்
  14. செம்பரத்தைபூச்சூரணம்,முருங்கைபூ  அல்லது  விதைச்சூரணம்  சேர்த்துச் சாப்பிட்டுவர  ஆண்மைக் குறைவு  நீங்கும்
  15. சர்க்கரை வேம்பின் பாலை 48 நாள் வைத்திருந்து சாப்பிட நாதம் தூய்மையாகும். விந்து  கட்டும்.பெண் மலடு  நீங்கும்
  16. ஓரிதழ்தாமரையை அரைத்து 10கிராம்,பாலில் பருகிவர ஆண்மை பெருகும். விந்து ஒழுக்கு நிற்கும்
  17. ஓரிதழ்தாமரை சூரணம் 5கிராம் பாலில் பருக சுக்கிலம் பெருகும்.விந்திழப்பு தீரும்
  18. தூதுவேளை இலை, அம்மான்பச்சரிசிஇலை சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டுவர  தாது, உடல் பலப்படும்
  19. நாட்டு வெங்காயத்தை நெய்யில் வதககி உண்டுவர ஆண்மை அதிகரிக்கும்
  20. அரசு  விதைச்சூரணம் சாப்பிட்டுவர  உயிரணுக்களை  பெருக்கி  ஆண்மலடு நீக்கும்
  21. நிலப்பனங் கிழங்கினோடு  நீர்முள்ளி வித்தும்கூட்டி,                              புலப்படும்  நெருஞ்சி வித்திற்  பூனைக்காலி  விதையினோடு,                     இலப்படும்  இவறறையிடித்து  தூள்செய்து  பாலில்  கொண்டால்                 பலப்படும்  விந்து  என்று  பேசினோர்  பெரியோர்தாமே!
  22. அம்மான்பச்சரிசி,கீழாநெல்லி இலைகள் சம அளவெடுத்து, எலுமிச்சை அளவரைத்து,200மிலி  எருமைதயிரில்  சாப்பிட்டுவர  விந்துஒழுகுதல் கட்டுப்படும். உடம்புஎரிச்சல்,நமைச்சல்,மேகரணம்  தீரும்
  23. பிராய் பாலுடன் வறுத்த  கடலைமாவைப் பிசைந்து, பட்டாணியளவு மாத்திரை செய்து  காலைமாலை 2மாத்திரை  சாப்பிட்டுவர  ஆண்மை அதிகரிக்கும்
  24. முருங்கைவிதை,பூனைக்காலிவிதை,நிலப்பனை,பூமிசர்க்கரைகிழங்கு சமன் பொடித்து,5கிராம்,5மிலி அத்திப்பாலில்  காலைமாலை  20நாள் உட்கொள்ள  அளவு கடந்த  தாதுவளர்ச்சி  தரும்
  25. ஆலம்பழம்,விழுது,கொழுந்து சமனரைத்து,எலுமிச்சையளவு  காலை  120நாள் உட்கொள்ள  ஆண்மலடு  நீங்கும்.
  26. அமுக்கராசூரணம் 10கிராம்,கசகசா 30கிராம்,பாதாம்பருப்பு 10கிராம்.சாரபருப்பு 5கிராம்  ஊறவைத்தரைத்து  200பாலில்  சர்க்கரை  சேர்த்து  காலையில்  பருகிவர தாது  விருத்தியாகும்.இளமை  திரும்பும்
  27. எருக்கு இலையை அரைத்து,நெல்லிக்காயளவு,பாலில்  கலந்து  48,96நாள் சாப்பிட ஆண்மலடு  நீங்கும்
  28. கீழாநெல்லி. ஓரிதழதாமரை சமனரைத்து, நெல்லிக்காயளவு, பாலில்  மண்டலம் கொள்ள  வாலிப வயோதிகம்  நீங்கும்
  29. கோரைக்கிழங்குசூரணம் அரைதேக்கரண்டி,தேனில்  தினமிருவேளை  கொள்ள புத்திக்கூர்மை,தாதுவிருத்தி,பசித்தீவனம்,உடற்பொலிவு  உண்டாகும்
  30. தாளிக்கீரை இலைகளை  பருப்புடன் கூட்டாக  சமைத்து  நெய் சேர்த்துண்டு வர விந்திழப்பு தீரும்.தாது பலப்படும்
  31. வெண்தாமரை பருப்பை  தூள் செய்து  நீடித்து சாப்பிட்டுவர  ஆண்மை பெருக்கும்
  32. மகிழவிதைப்பருப்பு 5கிராம்,பாலில்  தினம் 4வேளை  உட்கொள்ள  தாது விருத்தியாகும்
  33. விடத்தேர் பிசின் சூரணம் 3கிராம்,பாலில்  கற்கண்டு சேர்த்து பருக தாது பலப்படும்
  34. மகிழம்விதையை அரைத்து பாலிலுண்டுவர தாது விருத்தியாகும்
  35. கானாவாழை சமூலம்,தூதுவேளைபூ,முருங்கைபூ சேர்த்து 2ல்1ன்றாய்க் காய்ச்சி  பால்,கற்கண்டு  கலந்து மண்டலம்  கொள்ள  தாது  பலம் பெறும்
  36. கருவேலம்பிசின் 2கிராம் நெய்யில் வறுத்துப் பொடித்து சாப்பிட்டுவர தாது பலம் பெறும்.
  37. சந்தனம்,தேற்றான்விதை,பூமிசர்க்கரைகிழங்கு,பூனைகாலிவிதை,முருங்கைவேர்பட்டை வகைக்கு 2விராகனெடை எடுத்து தேங்காய்பாலிலரைத்து சீனிசர்க்கரை சேர்த்து தேங்காய்பாலுடன் 12நாள் 2வேளை சாப்பிட தாதுபலம் பெறும்.
  38. ஆடுதீண்டாபாளைவிதை,பூமிசர்க்கரைவிதை,பூனைகாலிவிதை வகைக்கு 2 விராகன் அரைத்து பசுவின்பாலில் 12நாள் காலைமாலை கொள்ள தாது கட்டும்
  39. எட்டிக்கொட்டையை அரைத்து குன்றிமணிஅளவு சாப்பிட்டு வர விந்து கட்டும்.
  40. வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து உண்டு வர தாது விருத்தியடையும்
  41. அரசமரத்தின் இலையை மைய அரைத்து காலை வெறும் வயிற்றில் 1-உருண்டை சாப்பிட்டு வர குழந்தை பாக்கியம் கிடைக்கும்.நரம்பு தளர்ச்சி குணமடையும்
  42. தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை அரை தேகரண்டி தேன் சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும
  43. அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வர, தாது விருத்தி உண்டாகும்.
  44. உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து தேன் கலந்து சாப்பிட்டு வர தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.
  45. துளசி வேரை நிழலில் உலர்த்தி இடித்து பொடித்து சாப்பிட்டு வர சொப்பன ஸ்கலிதம் இரண்டு நாளில் பலன் கிடைக்கும்
  46. வால் முளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா சம அளவு அரைத்து நெய்யையும் சேர்த்து பதமாக வேகவைத்து தினம் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்
  47. அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினம் 1 தேகரண்டி,200 மிலி பசும்பாலில் சாப்பிட தாது பலம் பெறும்.
  48. கருவேலமரத்தின் பிசினை சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து பொடித்து சாப்பிட்டு வர தாது விருத்தியாகும்.
  49. நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, முருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிட தாது விருத்தியாகும்.
  50. முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி 200மிலி பசும்பாலுடன் கலந்து குடித்து வர தாது விருத்தியாகும்.
  51. படுக்கைக்கு செல்ல 3-மணி நேரத்திற்கு முன் 1-முழு மாதுளம்பழம் சாப்பிட தாது விருத்தியாகும்.
  52. நிலப்பனைக் கிழங்கைப் பொடித்து, ஒரு தேகரண்டி, பால், சர்க்கரை கலந்து உண்டுவர தாது விருத்தியாகும்
  53. பூனைக்காலி விதை, நெல்லிவற்றல் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, ஒரு தேகரண்டி,சர்க்கரை கலந்து உண்ண தாது விருத்தியாகும்.
  54. அமுக்கரா கிழங்குப் பொடியுடன் சம அளவு கற்கண்டு சேர்த்து ஒருதேகரண்டி சாப்பிட தாது விருத்தியாகும்
  55. நிலப்பூசணிக் கிழங்கு சாறு, பால், சர்க்கரை சேர்த்து உண்ண தாது விருத்தியாகும்
  56. ஓரிதழ் தாமரையை அரைத்துப் பாக்கு அளவு, பாலில் கலந்து அருந்த தாது விருத்தியாகும்.
  57. தாமரைப்பூவின் மகரந்தப் பொடியுடன் சர்க்கரை, தேன் கலந்து சாப்பிட தாது விருத்தியாகும்.
  58. சம அளவு நீர்முள்ளி விதை, மாதுளம் விதையைப் பொடித்து, ஒருதேகரண்டி வெண்ணெயுடன் கலந்து சாப்பிட தாது விருத்தியாகும்.
  59. துவளைப்பூ, முருங்கைப்பூ இரண்டையும் கைப்பிடி எடுத்து நெய், வெங்காயம் சேர்த்து சமைத்து உண்ண தாது விருத்தியாகும்.
  60. வில்வப் பிசின், வாதுமைப் பிசின் சம அளவு எடுத்துப் பொடித்து கால் தேகரண்டி,பாலில் குடிக்க தாது விருத்தியாகும்.
  61. முள்முருங்கை இலையை நெய், அரிசி மாவு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட தாது விருத்தியாகும்
  62. நாவல் வேர்ப் பொடி ஒருதேகரண்டி, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்த தாது விருத்தியாகும்
  63. தேங்காய்ப்பால்  அரை தம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும்.
  64. அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்க தாது பலம் பெறும்.
  65. அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வர தாது பலம் பெறும்..
  66. அரசம்பழத்தை பாலில்போட்டு காய்ச்சி வெல்லத்துடன் தினம் பருகிவர ஆண்மை வலுப்பெறும், தழற்சி நீங்கும்..
  67. ஓரிலைத்தாமரையை அரைத்து பாலில்கலந்து குடிக்க தழற்சி நீங்கும்.
  68. செம்பருத்திப்பூவை உலர்த்தி இடித்து நீரில் கொதிக்கவைத்து சர்க்கரை சேர்த்து குடிக்க தாது பலம் கிடைக்கும்.
  69. பேரீச்சம்பழம்,உழுந்து இவைகளை தேனுடன் சேர்த்து அருந்த தழற்வு நீங்கும்..
  70. இலுப்பைப்பூகஷாயத்துடன் பசும்பால் சேர்த்து குடித்துவர ஆண்மை வலுப்பெறும்.
  71. எள், பழம், மஞ்சள், கோரக்கிழங்கு இவற்றை நன்றாக நசுக்கி நெய்யுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர ஆண்., பெண்ணின் உடல் தங்கம் போல தளதளக்கும்.
  72. எள். வெள்ளரிக்காய், இவற்றை ஒன்றாக அரைத்து ஆட்டுப்பால், தேன் கலந்து தொடர்ந்து 7 நாட்களுக்குச் சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும்.
  73. அம்மான் பச்சரிசி, தூதுவளை சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு சேர்த்து கூட்டு வைத்து,தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வர தாது பலப்படும்.
  74. அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வர, தாது விருத்தி உண்டாகும்.
  75. முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, சம அளவில் சேர்த்து, சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்துண்ண ஆண்மை அதிகரிக்கும்..
  76. முருங்கைக் கீரையும், பூவும் சம அளவில் சேர்த்து, வேகவைத்து கடைந்து உணவுடன் சேர்க்க ஆண்மை அதிகரிக்கும்
  77. முருங்கைப் பூ 10,பசும்பாலில் காய்ச்சி இரவு படுக்கும் போது குடிக்க, சுக்கிலம் விருத்தியாகும், தேகம் பலம் பெறும், அத்துடன் பேரீச்சம்பழம் சேர்த்துச் சாப்பிடலாம்.
  78. அரைக்கீரையுடன் அரை பங்கு முருங்கை பூ சேர்த்துக்கடைந்து, சோற்றுடன் சாப்பிட ஆண்மை அதிகரிக்கும்,  :
  79. முருங்கைக் கீரையைப் பொடியாக அரிந்து, அதில் கேரட் திருவி போட்டு, பசு நெய் விட்டு, பொரித்து, இறுதியில் முட்டையை அதில் ஊற்றி கிளறி, பொரித்துண்ண ஆண்மை அதிகரிக்கும்.
  80. முருங்கையின் இளம் பிஞ்சுக் காயைக் கொண்டு வந்து அனலில் காட்டி, சாறு பிழிந்து குடிக்க, ஆண்மை அதிகரிக்கும்,:
  81. முருங்கையின் மிகவும் பூப்போன்ற இளம்பிஞ்சு எடுத்து வந்து, பட்டாணி அளவு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, லேசாக உப்பு, மிளகு தூவி, பச்சையாக உண்ண ஆண்மை அதிகரிக்கும்.
  82. தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

வெந்தயம் தேங்காய் பாலில் பணம் கற்கண்டு