பக்கங்கள்

29 அக்டோபர், 2016

கண்அழற்ச்சி,கண்இமைக்கட்டி,மாலைக்கண் (CONJUNCTIVITIS, HARDEOLOMISTYE,NIGHTBLINDNESS)



                                                        காரணம் ;                                                                                                                                                                                 மாதர்களை உற்றுப் பார்த்து மோகித்தல்,துயில் நீங்கும் பெண்களின்மேல் பயில்விழி நாட்டல்,மாதர் குளிக்கும் நீர்க்கரையிலிருந்து நீங்காதிருத்தல், உயிர்வதை செய்வதைக்கண்டு விலக்காதிருத்தல்,பசுக்கள் பால் கரக்கையில் விழி நோக்கி பிரமித்தல் இன்னும் இதுபோன்ற பலவித குற்றங்களால் நேத்திர நோய்கள் 96 விதமாக சம்பவிக்கும்.    
மூலத்திலக்கினி அதிகரிப்பதாலும் மேக நீராலும், மலக்கட்டினாலும், தலை வறட்சியினாலும்,எண்ணெய் முழுக்குத் தவறாலும், அதிக விசனத்தாலும்,கடும் வெயிலில் ஓயாது நடக்கிறதாலும், அதிக சுமை எடுக்கிறதாலும்,மழை, காற்றில் அவதிப் படுவதாலும்,தாம்பூலம் அடக்கி நித்திரை செய்வதாலும், ஆழ்ந்த பார்வையினாலும் உண்டாகும்.                                            
 கண் நோய் வகைகள்; வாதகாசம்,பித்தகாசம்,சிலேத்மகாசம்,நீலகாசம்,நீரொளிகாசம்,குமரிகாசம்,மந்தரகாசம்,இரத்தகாசம்,சலகும்பம்,பில்லம்,படலம்,வெண்மாசுபடலம்,மாலைக்கண்,விழிவிழுங்கி,மணிவளர்த்தி,மதியந்தம்,பருவணிகை,சுற்றுக்கண்,உளைவு, காசவெரி,அன்னகோபம்,புகைச்சல்,பற்பரோகம்,ஒட்டுக்கண்,கண்மங்கல், கண்பிரிவு,நீர்பாச்சல்,செவ்வேர்குந்தம்,சுக்கிரன்,அமரம்,அக்கரம்,கண்கட்டி, இருட்கண்,செவ்வரிப்பலம்,கூச்சம்பூ,ஆணிப்பூ,புழுவெட்டு,நேத்திரவாயு, வெள்ளெளுத்து,கண்வலி,அழற்றிவிழி,கண்குருடு,செஞ்சுடர்,எழுச்சி,அழிகண், புளித்தகன்,முடமயிர்,கண்ணிரைச்சி என கண்ரோகம் 96.                 
        
தோன்றுமிடம் ;                                                                                                                 வாதகோபத்தினால் கருவிழியிடத்து 45ம்,சிலேத்மகோபத்தால் வெள்ளை விழியிடத்து 20ம்,பித்தகோபத்தால் இமையோரத்தில்16ம்,கடைக்கண்ணில் 15ம் பிறக்கின்றன.                                                      மையோப்பியா(myopia) என்கிற கிட்டப்பர்வை(short sight), ஹைப்பர்மெட்ரோப்பியா(hyper metrophea) எனப்படும் வெள்ளெளுத்து(long sight), ஸ்ட்ரேபிஸ்மஸ்(stray pismas) எனப்படும் மாறுகண்(squint) எல்லாம் பார்வையிலேற்படக்கூடிய குறைபாடுகளே தவிர நோய் அல்ல.       

  கண்ணில் நீர்வடிதல்(epiphora);                                                        

கன்ஜங்க்டிவிடிஸ்(conjunctivitis);விழிகளுக்கு மேலேயும்,இமைகளின் உட்புறத்திலும் உள்ள ஒரு மெல்லிய தோலுக்கு கன்ஜங்க்டிவா என்று பெயர். இந்தத் தோலில் வீக்கமும்,எரிச்சலும் தோன்றும் போது உண்டாவது.   
 ட்ரக்கோமா(trachoma);கன்ஜக்டிவா முற்றினால் ட்ரக்கோமா.      மாலைக்கண்(night blindness);இரவு வந்தால் கண் தெரியாது.மாலை நேரத்தில் இருட்டடித்தது போல் தோன்றும்                                          

கண்புரை என்ற காட்ராக்ட்(cataract);                                      

வாதகாசத்தின்குணம்;விழி வீங்கிக் கடுத்துத் தனற்போல் எரிந்து நீர் வடியும்; நித்திரை சற்றும் வராது.                                

பித்தகாசத்தின் குணம்;வெள்ளைவிழியில் வென்மேகம்போல் நீர்படர்ந்து கருவிழியிற் பாதி உளுந்து அளவு வெண்மையாய்த் தோன்றும்.   

குமரிகாசத்தின் குணம்; கண்வீங்கிக் கடுப்பும் வலியுங் காணும்;பீளை கட்டும். 

நீலகாசத்தின் குணம்; கண்சோதியையடுத்து சற்றுச் சுணங்குபோல் வெளுத்துக் காணும்;பாசிபோல் படர்ந்து ஒளி மயங்கும்.                    
நீரொளிகாசத்தின் குணம்; கண்னிற் சலங் கோர்த்துத் திரண்டு கருவிழியினடியில் பூப்போல் தோன்றி,தீப்பொறிபோல் ஒளிவிடும்.   
அன்னகோபமென்ற அனல் கோபத்தின் குணம்; நயனம் நொந்து சிவந்து வலித்துப் புடைத்துத் தீப்போலெரிந்து நீர் வடியும்                          
காசவெரிக்குணம்;எழுத்தைப்பார்த்து பின் மனிதரை பார்த்தால் இருள் போலிருக்கும்.                                                               
 புகைச்சலின் குணம்;ண் மங்கலாயும்,உருவம் அநேகமாயும் தோன்றும்.  
 மதிமந்தகுணம்;கண் சிவந்து உறுத்தி வலிக்கும்;பீளை சாடும்,நீர் வடியும், பார்வை மந்தமாயிருக்கும்.                                       
பற்பரோகத்தின் குணம்;கண்ணிமையினுள் இரத்தங்கட்டித் திரண்டு இளமாமிசம் போல் இருக்கும்.                                            
சகலகும்பத்தின் குணம்; வெள்ளைவிழியில் நீர்கோர்த்து இமைவீங்கிக் கடுத்து வலிக்கும்;பீளை கட்டும்.                                
பில்லத்தின் குணம்;கண்ணிமை,புருவம் முழுமையும் நீர் கட்டித் திரண்டு புடைத்து விம்மியிருக்கும்.                                     

 செவ்வேர்க்குணம்;கடைக் கண்ணிலிருந்து வெள்ளைவிழியெங்கும் சிகப்பு நூல்போல் செவ்வரியோடிப் படர்ந்திருக்கும்.       

பரிவணிகைக்குணம்;கடைக் கண்ணில் சதைவளர்ந்து படர்ந்து உறுத்தி வலிக்கும்.                                                           
படலத்தின் குணம்;வெள்விழியில் பாலாடைபோல் மாசுபடர்ந்திருக்கும்.                      
 வெண்மாசுப்படலத்தின்குணம்;விழியில் வெண்மாசு படர்ந்து கரகரத்துக் குத்தல் எடுக்கும் .                                                       

விழிவழுங்கின்குணம்;ஒருநேரம் காலை முதல் மதியம்வரை தலை மிகுதியாய் அதிர்ந்துக் குடைந்திடிக்கும். ஒருசமயம் உச்சிமயிரை பிடுங்குவது போலிருக்கும். நாள் செல்லச் செல்ல சதை ஓங்கி மூடும்                                     

 மாலைகாசத்தின்குணம்;கண் உறுத்தி வலிக்கும்.கருவிழி லேசாக கலங்கி இருக்கும். தீபம் வேறாய் காட்டும்                                                                
  
மந்திரகாசத்தின்குணம்;கண்ணை சுற்றிவரி உண்டாகி அரிப்பு எடுக்கும்,கண் சிவந்து வலிக்கும்.விழிசிறுக்கும்                          

உளைவுகண்ணின்குணம்;கண்மணியினுள் எப்போதும் உளைந்து கொண்டே இருக்கும்                                                                                                  

சுருங்குகண்ணின்குணம்;குவளை புண்ணாகி நாளுக்கு நாள் கண் சுருங்கும் 

 ஒட்டுக்கண்ணின்குணம;கண்ணில் எப்போதும் பீளையும்  நீரும் சொரியும் 

 மலங்குகண்ணின்குணம்;இரவில் கண்ணில் நீர் நிறைந்து,பகலில் மலங்கும். 

       விழியில் மருந்திடக் கூடாகாலம்;
நெடுந்தூரம் வெயிலில் நடந்து அலுத்திருக்கும் போது,போதைபொருள் உபயோகித்திருக்கும் போதும்,எண்ணைகுளியல் செய்த நாளும்,கண்வலித்த நாளும் மருந்திடக்கூடாது.                          
அனுசரிக்க வேண்டியது;                                                                               

காற்று,வெயில்,லாகிரி பொருட்கள், குளிர்ந்ததண்ணீர், கைப்பு,புளிப்பு, கரப்பன் பதார்த்தம் நீக்கி வெந்நீர், ஆவின்பால், நெய்,துவரை, பாசிப்பயறு,  சிறுகீரை, வாழைக்கச்சல்,பொண்னாங்காணி,முருங்கைக்கீரை சேர்த்துவர நன்மை உண்டு.                                                 ஒளிப்படக்கருவியில்(வீடியோ) ஒரு வினாடியில் நாம் செய்யும் ஒருசெயல் 12 கட்டங்களாக (பிரேம்) பதிவு செய்யும்.அதுவே நாம் காணும் திரைப்படம், ஒளிப்படமாக தோற்றமளிக்கிறது.இது குறைவாக பதிவானால் மெதுவாகவும் (ஸ்லோமோஷன்),அதிகமாக பதிவானால் வேகமாகவும் தெரியும். அப்படியானால் நம் கண்னில் உள்ள விழித்திரை(லென்ஸ்) எந்தளவு வேகமாக படம் பிடித்து மூளைக்குத் தகவல் அனுப்புகிறது என்று யோசித்துப்பாருங்கள். வாகனங்களில் வேகமாக செல்லும்போது  எதிர்காற்றினாலும்,தூசி, பூச்சிகளாலும்  கண் தாக்கப்படுவதால் உண்டாகும் வலி எப்படி இருக்கும் சிந்தியுங்கள். அதிவேகதினால் கண்விழித்திரை எவ்வளவு வேகமாக செயல்பட வேண்டும்.அதனால் ஏற்படும் வேளைப்பளு எத்தகையதாக இருக்கும் என சிந்தித்து அதிவேக பயணங்களை தவிர்த்து கண்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்
  1. .நேத்திரப்பூண்டுசமூலம்,தூய்மைசேய்து,குறுக அரிந்து, 200கிராம், துணியில் முடிந்து, 400மிலி ந.எண்ணையிலிட்டு, வேடுகட்டி, 15நாள் சூரியபுடமிட்டு, வடித்துக் காலைமாலை, 2துளி கண்ணிலிட பார்வை மங்கல், கண்பீளை,எரிச்சல், சிவப்பு,வெள்ளெழுத்து,பூவிழுதல், சதை வளர்தல், பார்வைக்குறைவால் உண்டாகும் ஒற்றைத்தலைவலி தீரும் 
  2. பவளபற்பம் 100-200மிகி,5 -10மிலிவெண்ணை அல்லது நெய்யில் தினமிரு வேளை கொள்ள மாலைக்கண் குணமாகும் 
  3. தேற்றான்கொட்டைஇளகம் 5 -10கிராம்,தினமிருவேளை சுவைத்துச் சாப்பிட மாலைக்கண் குணமாகும் 
  4. 100 -200மிலி, அருகம்புல்சாறு, காலையில் பருகிவர மாலைக்கண் குணமாகும்
  5.  பொண்ணாங்கண்ணி,கரிசாலைகீரைகளை தினமும் உணவில் சேர்த்து வர மாலைக்கண் குணமாகும் 
  6.  பறங்கிப்பட்டை சூரணமாத்திரை2,தினம்3வேளை சாப்பிட  கண் இமைக்கட்டி குணமாகும்
  7.  குங்கிலியெண்ணை தடவ கண் இமைக்கட்டி குணமாகும் 
  8. வெண்சங்கை தாய்பாலில் இழைத்து கண்இமைக்கட்டி மீது பூச குணமாகும் 
  9. திருநீற்றுப்பச்சிலை இலைச்சாறு 1,2துளிகள் தடவ கண் இமைக் கட்டி குணமாகும்
  10.  நாமக்கட்டியை நீரில் இழைத்துப் பூச கண்கட்டி குணமாகும் 
  11. பலகறைபற்பம் 100-200மிகி, 50மிலி பாலில் கொள்ள  கண்அழற்சி (கண் சிவத்தல், எரிச்சல்,கூச்சம்,வலி,நீர்வடிதல்) குணமாகும்
  12.  2,3துளி படிகப் பன்னீரை தினம்2வேளை கண்ணில் விட கண் அழற்சி குணமாகும் 
  13. சுத்தமான ஆமணக்கெண்ணை கண்ணில்விட கண் அழற்சி குணமாகும் 
  14.  தாய்ப்பால் ஓரிருதுளி கண்ணிலிட கண்அழற்சி குணமாகும்
  15.  சித்தாமணக்கெண்ணை ஓரிருதுளி கண்ணிலிட்டு, தலைக்குத் தேய்க்க பார்வை குறைபாடு நீங்கும்
  16.   சோற்றுக்கற்றாழை மடலைக்கீறி,சதைப்பகுதியை கண்ணில் வைத்துக் கட்ட  கண்அழற்சி குணமாகும். 
  17.  தாமரைக்கிழங்கை அரைத்து எலுமிச்சையளவு,பாலில் கலந்து தினம் காலையில் பருக பார்வைமங்கல் குணமாகும்
  18.  தூதுவேளை இலை,காய்,வற்றல் உணவில் மண்டலம் கொள்ள கண்அழற்சி, உடல்எரிச்சல், அரிப்பு நோய்கள் நீங்கும்
  19.  நந்தியாவட்டை பூவிதழ்சாறுடன்,சமன் தாய்ப்பால் கலந்து,2துளி கண்ணில் விட கண்அழற்சி குணமாகும் 
  20. சந்தனக்கட்டையை எலுமிச்சை சாறிலுரைத்துப் பூச கண்கட்டிகள் கரையும் 
  21. சிறுநெருஞ்சில்செடி2,அருகம்புல் கைப்பிடி சிதைத்து,1லி.நீரில் போட்டு 250மிலியாகக் காய்ச்சி,50மிலி தினம்3வேளை பருக கண்அழற்சி குணமாகும் 
  22. 2 தேகரண்டி திரிபலாசூரணத்தை,நீரிலிட்டுக் காய்ச்சி வடித்து அந் நீரால் தினம் 6 முறை கண்களை பஞ்சு கொண்டு கழுவிவர கண்அழற்சி குணமாகும் 
  23. பற்பாடகம் சமூலத்தை அரைத்து பாலில் கலந்து தலையில் தேய்த்து 1மணிநேரம் கழித்து வெந்நீரில் வாரமிருமுறை தலைமுழுக கண்அழற்சி குணமாகும் 
  24. மஞ்சள்தூள்1தேகரண்டி,200மிலி நீரில் கொதிக்கவைத்து,வடித்து, பஞ்சு கொண்டு, மூக்கிலிருந்து பக்கவாட்டில்,தினம்6முறை துடைத்துவர கண்அழற்சி குணமாகும் 
  25. முசுமுசுக்கை இலைச்சாறுடன்,சமன் ந.எண்ணை கலந்து காய்ச்சி, வாரமிருமுறை தலைமுழுகி வர கண்அழற்சி,உடல்எரிச்சல் குணமாகும் 
  26. சாதிக்காயை10 சுற்றுகள்,தேனில் உரைத்துப் பற்றிட கண் கருவளையம் மறையும்
  27.  1தேகரண்டி கொத்தமல்லி விதையை, 500மிலி நீரில் 3மணிநேரம் ஊறவிட்டு,வடித்த நீரில் தினம் 4முறை கண்களை கழுவிவர, அம்மை நோயின்போது கண்கள் பாதிக்கப்படாது. கண்வலி தீரும் 
  28. முருங்கைக் கீரையைத் துவட்டியோ,கடைந்தோ தினமும் உணவில் சேர்த்துவர கண்நோய்கள், மாலைக்கண் வராது.இரத்தம் விருத்தியாகும். பார்வை தெளிவடையும்             
  29. எள்எண்ணையில் வாரமொருமுறை தலைமுழுகிவர கண்வலி, கண் சிவப்பு குறையும் 
  30. கரிசாலைச்சாறு,சோற்றுக்கற்றாழைச்சாறு, நெல்லிக்காய்சாறு, சமனெடுத்து, மொத்தளவிற்குத் தே.எண்ணை சேர்த்துக் காய்ச்சி, வடித்துத் தலைமுழுகி வர கண்பார்வை தெளிவடையும். தலைவலி, உடல்வலி, உடல்அசதி குணமாகும் 
  31.  கறிவேப்பிலையை நெய்யில் வறுத்து,பொடித்து,1தேகரண்டி, சூடான சாதத்துடன், நெய் சேர்த்து  சாப்பிட பார்வை தெளிவடையும்.
  32.  தான்றிக்காய் தூள் 1தேகரண்டி,200மிலி நீரில்,காலைமாலை பருகிவர பார்வை தெளிவடையும்
  33.  தினமும்1துண்டு பப்பாளிபழம் சாப்பிட்டுவர பார்வை தெளிவடையும் மாலைக்கண் குணமாகும்.மலச்சிக்கல் தீரும் 
  34. மூக்கிரட்டைவேர்தூள் கால் தேகரண்டி,தேனில்குழைத்து, தின மிருவேளை சாப்பிட்டுவர பார்வை தெளிவடையும்
  35.  நந்தியாவட்டை பூ, இலைகளை தாய்ப்பாலில் ஊறவைத்து கண்ணில் விட்டுவர கண்வலி குணமாகும் 
  36. பாகற்காய்சாறு 2 துளியில் பாதி மிளகை உரைத்துப் போட பார்வைக் கோளாறு நீங்கும் 
  37. பெரியகடுக்காய்தோல்,பிஞ்சுகடுக்காய்தோல்,நெல்லிவற்றல் வகைக்கு 50கிராம் பொடித்து, கஷாயம் செய்து,50கிராம் நெய் சேர்த்து சாப்பிட்டு வர பார்வைக்குறைவு நீங்கும்
  38.  வில்வ இலை துளிரை வதக்கி இளம்சூட்டில்  ஒற்றடமிட கண்வலி, கண்சிவப்பு, கண்அரிப்பு தீரும்
  39.  பிரமதண்டுபால் 1துளி கண்ணிலிட,கண்வலி, சதைவளர்தல்,அரிப்பு, சிவத்தல்,கூச்சம், எரிச்சல், நீர்வடிதல் குணமாகும்
  40.  முருங்கைப்பூவை பருப்புடன் சமைத்துண்ண கண்எரிச்சல் தீரும் 
  41. 15மிலி முருங்கைச்சாற்றில் சமன் தேன் கலந்து தினமிருவேளை சாப்பிட்டுவர கண்புறை கட்டுப்படும்
  42.  முருங்கைப்பூவை பாலில் காய்ச்சி சாப்பிட்டுவர அதிக உஷ்ணம், கண் எரிச்சல், உள்ளங்கால் எரிச்சல் குணமாகும் 
  43. 1லி நீரில்,20கிராம் கொத்தமல்லிவிதை,உரித்தவெங்காயம்4,போட்டுக் காய்ச்சிப் பருகிவர ,அம்மைநோய்தாக்கம்,அம்மையால் கண்கள் சிவப்பு தீரும் 
  44. திரிபலா சூரணத்தை தேனும்நெய்யும் கலந்து சாப்பிட கண் நோய்கள் யாவும் தீரும் 
  45. பிரமதண்டு சாம்பலை 50மிலி பன்னீரில் கரைத்து வடித்து சொட்டு மருந்தாக கண்ணிலிட கண்வலி,எரிச்சல்,சிவத்தல் குணமாகும் 
  46. பிரமதண்டுபூவை நீரிலூறவைத்துக் குளிக்க பார்வைமங்கல் குணமாகும் 
  47. மருதாணி இலையை அரைத்து,நீரில் கரைத்து வடித்த தெளிவை இரவில் கண்ணிலிட கண் சுத்தமாகும் 
  48. நெல்லிக்காயை ஊசியால் குத்தி வரும் நீரை கண்ணிலிட கண்நோய் தீரும் 
  49. அத்திமரப்பூவை அரைத்து வடித்து 3துளிவிட கண்நோய் தீரும்
  50.  ஈருள்ளியும்,குறிஞ்சானிலையும் சமனெடை எடுத்துச் சிதைத்து  கண்ணில் 4,5 துளிவிட கண்ணில் சதை வளர்தல் குணமாகும்
  51.  அருகு சமூலம்100கிராம்,மிளகு75கிராம்,சீரகம்50கிராம் இடித்து1லி ந.எண்ணயிலிட்டு 15 நாட்கள் கடும்வெயிலில் வைத்து தலைக்குத் தேய்த்துவர கண்நோய்கள் யாவும் தீரும்
  52.  ஈனாத எருமைச்சாணிப்பாலில் சிற்றாமணக்கு முத்தை  உரசிப் போட  கண்ணில் நீர்வடிந்து சுத்தமாகும்
  53.  கடுகுரோகிணியை இடித்து மைபோல் பவுடர் செய்து குச்சியால் தொட்டு தீட்டிவர கண் சுத்தமாகும்.மாசுகளை அகற்றும்
  54.  சிறுதுத்தி இலையுடன் உப்பு சேர்த்தரைத்து,கண்ணிலுண்டாகும் பரு, புண்களுக்குத் தடவ குணமாகும் 
  55. சந்தனத்தை எலுமிச்சைசாறிலரைத்துப்பூச கண்கட்டிகள் கரையும் 
  56. வெள்ளைசாறுவேளையின் முற்றினவரை நிழலிலுலர்த்தி முலைப்பாலிலுரைத்துக் கண்ணில் தீட்ட(10நாள்,2வேளையும் )நேத்திர நோய்களனைத்தும் தீரும்
  57.  புளிப்பு மாதுளம்பழச்சாறு,சீனாகற்கண்டுசம அளவு அரைத்து கண்ணில் 1துளி விட ஆணி முதலிய  யாவும் நீங்கும்
  58.  சத்திச்சாரணை இலைச்சாற்றை தாய்ப்பாலுடன் கலந்து கண்களுக்கு மைபோல் தீட்டிவர கண்நோய் அனைத்தும்  தீரும் 
  59. குப்பைமேனிச்சாறு,வலது காதிலிட இடதுகண்,இடது காதிலிட வலதுகண் ,இரண்டு காதிலும் (கண்ணிலும்)விட கண்நோய்கள் தீரும்
  60.  சிலந்திநாயகம்பூ,பிஞ்சை,பன்னீரில்போட்டு,4அரிசிஎடை பொரித்த படிகாரம் கலந்து, 4மணி நேரம் ஊறவைத்து, தெளிவை வடித்து, 2துளி, தினம்4வேளை கண்ணிலிட கண்கோளாறு, வலி, பார்வை மங்கல், கண் சிவப்பு,கூச்சம் தீரும்                  
  61.  அதிமதுரத்தை விதிப்படி குடிநீர் செய்து,பால்,சர்க்கரை,சேர்த்து பாகுபதம் காய்ச்சி, 2 தேக்கரண்டி, தினம் 2வேளை உண்டுவர நீரெரிச்சல் , வயிற்றெரிச்சல்  வயிற்றுவலி, பசியிண்மை, சுவையிண்மை, கண் எரிச்சல் தீரும். 
  62. மருதோன்றி இலைகளை அரைத்து,அடைதட்டி,நிழலிலுலர்த்தி பின் தே.எண்ணையில் 21நாள்சூரியபுடமிட்டு தலைக்கு தேய்த்துவர கண்கள் குளிர்ச்சி அடையும். இளநரை மாறும்.                     
  63.  தினம் காலை வெறும் வயிற்றில் வாதுமை பருப்புகளை சாப்பிட்டு வர கண்ணில் நீர்வடிதல் குணமாகும்.
  64.  கருவேலங்கொழுந்தின் சாற்றை இமைகளில் தடவிவர கண்னில் நீர் வடிதல் குணமாகும். 
  65. கண்களை நன்கு மூடிக்கொண்டு இளஞ்சூரியனைப் பார்த்துவர கன்ஜங்க்டிவிடிஸ் குணமாகும் 
  66.  கருவேலங்கொழுந்தை மையாக அரைத்து கண்ணில் கட்டிப் படுக்க கன்ஜங்டிவிடிஸ் குணமாகும் 
  67. சீயக்காயை இரவு முழுதும் ஊறவைத்து காலையில் வேகவிட்டு, பிசைந்து,தெளிவை இறுத்து, இரவில் கண்ணில் விட்டுவர மாலைக்கண் குணமாகும். 
  68. ஆடாதொடை இலைகளை சாறுபிழிந்து வடித்து,கலுவத்தில் அரைத்து ஈரம் போக்கி காலைமாலை கண்னில் தடவி,காரம்,ஒளி,தூசி தவிர்க்க காட்ராக்ட் குணமாகும். 
  69. சாம்பார் வெங்காயச்சாறு கண்ணில் படும்படி தினம் 1-2கிலோ அரிய காட்ராக்ட் குணமாகும்    
    70.   புளியம்பூவை அரைத்துப் பற்றுப்போட கண்வலி நீங்கும்.கண்சிவப்பு மாறும். 
    71.   .சம்பங்கிப்பூவை ஆலிவ் எண்ணை விட்டு வெண்ணைபோலரைத்து கண்களைச்சுற்றி பற்றுப்போட கண்நோய்கள் குணமாகும்.
    72.   வாதுமைபருப்பு,பேரீச்சம்பழம் வகைக்கு 15கிராம்,அத்திப்பழம்10கிராம், சோம்பு 5கிராம், அரைத்துப் பாலில் இரவு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர கண் ஒளி பெருகும்.
    73.   அதிகாலையில் எழுந்தவுடன் கண்களைக் கழுவி,மைதீட்டுவதுபோல் தேனை தீட்டி வர கண்நோய்கள் வாரா. பார்வை கூர்மையாகும்.
    74.   திராட்சைபழம்,அத்திப்பழம் வகைக்கு25கிராம்,காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு பசும்பால் அருந்த கண்ணொளி உண்டாகும். காதுமந்தம் நீங்கும்.
    1. 75 எலுமிச்சைசாறு1துளி,ந.எண்ணை1துளி,இலுப்பை அரைப்பு ஊறின தண்ணீர்1துளி கலந்து கையில் மத்தித்து கண்ணிலிட புகைச்ச
    1. 76.நல்லெண்ணை அரைபடியில் அதிமதுரம்,மிளகு வகைக்கு 40கிராம் பசும்பாலிலரைத்துப் போட்டு காய்ச்சி வடித்து தலைமுழுகிவர புகைச்சல் குணமாகும்.              
    77. வெள்ளைச்சாறனைவேர்,மிளகு,திப்பிலி சமனாய் உத்தாமணிச் சாற்றிலும்,  சிறு குறிஞ்சான் சாற்றிலும் நந்தியாவட்டைபூச்சாற்றிலும் அரைத்துக்கயிறு செய்து நீரிலரைத்துக் கண்ணில் தீட்ட புகைச்சல் தீரும்.                                                     
    78.   கடல்நுரையும் கற்கண்டும் சமனாய் தேனிலரைத்துத் தீட்ட மதிமந்தம் குணமாகும். 
    79.   சந்தனம்,அதிமதுரம் வகைக்கு 40கிராம்,கற்றாழைச்சோறு1பிடி பசும் பாலில் கொதிக்க வைத்து தலையில் தளமாய் போட்டு அழுத்தித் தேய்த்துக் குளிக்க கண்மந்தம், பித்தநீர்பாய்ச்சல் தீரும்.                                 
    80.   மருதம்பட்டை,சீரகம்,ஈருள்ளி இடித்துப் பிழிய மாலைக்கண் குணமாகும். 
    81.  இலுப்பைப்பூவை முலைப்பாலிலரைத்துப்போட மாலைக்கண் நீங்கும்.   
    82.   காட்டாமணக்கின் முத்தை முலைப்பாலிலரைத்துப்போட மாலைக்கண் தீரும்.                                                
    83.    அழிஞ்சில்விதையை முலைப்பாலிலரைத்துப்போட மாலைக்கண் தீரும்.              
    84.   பொன்னாவாரைவேரை வெள்ளாட்டுப்பாலில் அரைத்துப்போட மாலைக்கண் குணமாகும்.                                                    
    85.   தேட்கொடுக்கிலையைக் கசக்கி விழியில் பிழிந்துவர அருத்த பாய்ச்சல் குணமாகும். 
    86.   செஞ்சந்தனம்,சாஸ்திரபேதி,தேற்றான்விதை சமனாயரைத்து வெண்ணெயில் குழப்பி புறவளையமிட கண்ணெரிவு தீரும்.                                                     
    87.   1படி ஆவின் பாலில் 40கிராம் பொண்னாங்கானிவேரை அரைத்துக் கலக்கி புரைகுத்தி வெண்ணையை கண்ணில் தீட்டிவர கண்ணெரிவு தீரும்.                        
    88.   முத்தெருக்கெஞ்செவி வேரை முலைப்பாலிலரைத்துப் புருவத்தில் தடவிவர புழுவெட்டுமாறி முடி முளைக்கும்.                                                    
    89.   தேட்கொடுக்கிலையும் நந்தியாவட்டப்பூவும் இடித்துப் பிழிய கண்பூ மாறும். 
    90.   முசுமுசுக்கையிலையும் சீரகமும் சமனாய் முலைப்பாலில் இடித்துப் பிழிய கண்பூ தீரும்.                                                             
    91.   உத்தமதாளியிலையும் சீரகமும் சமனாய் முலைப்பாலில் இடித்துப் பிழிய கண்பூ நீங்கும்.                                                                                
    92.   புளிய இலையை எலுமிச்சைசாறுவிட்டு இடித்து பிழிந்து அதில் தேற்றா விதையும், பச்சைக்கற்பூரமும் இழைத்துப்போட முளை-ஆணிப்பூ நீங்கும்.       
    93.   இந்துப்பு,கடுக்காய்விதை சமனாய் வெண்ணையாலரைத்து  செப்புப் பாத்திரத்தில் வைத்து களிம்பேறி பசுமையானபின் எடுத்துக் கண்ணிலிட அழிகண்ரணம்,சுக்கிரன் தீரும். 
    94.   ந.எண்ணை250,சீதேவிசெங்கழுநீர்சாறு250,பூண்டு5கிராம்,மிளகு40கிராம், வெந்தயம்40 கிராம்,காய்ச்சி வடித்து தலைமுழுகிவர நேத்திரவாயு, மண்டையிடி தீரும்.                                   
    95.   முயலின் புழுக்கை சுட்ட சாம்பலை பசுநெய் விட்டு மைபோலரைத்து விழியில் தீட்ட ஒளிமயக்கம்,வெளிமயக்கம் தீரும்.                                      
    96.   வேப்பங்கொழுந்தை நல்லெண்ணைவிட்டுக் களிம்பு போலரைத்துப் புருவத்திலிட்டுவர அக்கரம் புழுவெட்டு தீரும்.                                                
    97.   வெள்ளைச்சாறனைவேரைத் தேனிலரைத்து விழியில் தீட்டிவர நீர்வடிதல் குணமாகும்.                                                                                   
    98.   எலுமிச்சம்பழத்தை நூலில்கட்டி,108 கிராம்பு குத்தி,100கிராம் பசு வெண்ணையில் பொதிந்து மண்பானையில் அடியில் தொடாமல் தொங்கவிட்டு,தினமும் தண்ணீர் மாற்றி வெண்ணையை செப்புச் சிமிழில் அடைத்து,தேவைக்கேற்ப சத்திச்சாரணை சாற்றிலரைத்து, 40நாள் தீட்டிவர,கணரோகமணைத்தும் நிவர்த்தியாகும்                                  
    99.   மேற்படி வெண்ணை 40கிராம்,பீதரோகிணி 10கிராம் எலுமிச்சைச் சாற்றாலரைத்து செம்புச் சிமிழில் அடைத்து விழியில் தீட்டிவர வெள்ளெளுத்து முதலிய கண்ரோகமனைத்தும் தீரும்.       
    100.                        மேற்படி வெண்ணை 40கிராம்,மிளகு 15கிராம் மைபோல ரைத்துத் தீட்டிவர வெள்ளெளுத்து முதலான கண் ரோகமனைத்தும் தீரும்.         
    1. 101. பசும்பாலை 46நாள் கண்ணிலிட்டுவர வெள்ளெளுத்து நீங்கும்
    2.  தும்பை,நந்தியாவட்டை,காரெள்ளு  இவைகள் பூவும்,திப்பிலியும் தேன் விட்டரைத்துத் தீட்டிவர வெள்ளெளுத்து நீங்கும்.
      103.                        சிற்றாமணக்கின் வேரும்,பேராமணக்கின் வேரும் சமனாய் வேலிப்பருத்திச் சாற்றிலரைத்து கலக்கிக் குழம்புபோல் காய்ச்சி விழியில் புறவளையமிட்டு தலையில் தளமிட விழி வேதணை படலம் நீங்கும். 
      104.                        ஈருள்ளியும் குரிஞ்சானிலையும் சமனாய் சிதைத்து 3நாள் விழியிலிட சதைவளர்ச்சி குணமாகும்
      105.                        சிற்றாமணக்கின்வேரை அரைத்து ஆவின்பாலில் கலந்து காய்ச்சி புரைகுத்தி கடைந்து வெண்ணையை தீட்டிவர கண் ரோகமனைத்தும் குணமாகும். 

      106.                        களாப்பூவை ந.எண்ணையிலிட்டுப் பூ மிதக்கும்வரை வெயிலில் வைத்து எடுத்து வடிகட்டி கண்ணிலிட்டுவர வெண்படலம், கரும்படலம், இரத்தப்படலம் தீரும்.
      107.                        புளியம்பூவை அரைத்து கண்ணைச்சுற்றி பற்றுப்போட கண்வலி, சிவப்பு மாறும்.  
      108.                        1பிடி கோவையிலையை 200மிலி நீரில் 100மிலியாகக் காய்ச்சி காலை மாலை பருகிவர கண் எரிச்சல் தீரும்.   
      109.                        சீதேவிசெங்கழுநீர்ப்பூச்சாறு 1துளி கண்ணிலிட்டுவர கண் சிவப்பு, அறுகல்,வலி தீரும்.
      110.                        வெற்றிலைச்சாறு 1-2துளி 2வேளை கண்ணிலிட்டுவர கண்வலி, மாலைக்கண் நீங்கும்.
      111.                        ஈச்சம்விதையை உரைத்து இமைகளில் பற்றிட்டுவர கண்மங்கல் தீரும்.
      112.                        பற்பாடகத்தைப்பாலில் அரைத்துத் தடவிக்குளித்துவர கண் பிரகாசிக்கும்
      113.       கீழாநெல்லியிலை,மூக்கிரட்டையிலை,பொண்ணாங்கானியிலை சமனாயரைத்து 10கிராம் மோரில் கலக்கி 45நாட்கள் கொள்ள மாலைக்கண்,பார்வைமங்கல், வெள்ளெளுத்து தீரும்.
      114.                        கீழாநெல்லிச்சாறு,பொண்னாங்கானிச்சாறு சமன் ந.எண்ணெயில் கலந்து காய்ச்சித் தலைமுழுகிவர பார்வைக் கோளாறுகள் தீரும்.
      115.                        நந்தியாவட்டைப்பூ50கிராம்,களாப்பூ.30கிராம் பாட்டலில் போட்டு நல்லெண்ணையில் மூழ்கவிட்டு 40நாள் புதைத்தும் 20நாள் வெயிலிலும் வைத்து எடுத்து வடிகட்டி 1-2துளி கண்ணிலிட்டு வர பூ, சதைவளர்ச்சி, பலவிதப்படலங்கள், பார்வைமந்தம் குணமாகும்.
        116.         எள்ளுப்பூவை நெய்யில் வதக்கி இரவில் கண்களின்மீது வைத்துக் கட்ட பார்வை தெளிவடையும்  
        117. இரவு ஆகாரத்துக்கு பிறகு தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும். 
        118.ஜாதிக்காயை பசும்பாலில் இழைத்து இரவில் கண்ணை சுற்றி பற்றுப் போட்டு காலையில் கழுவி,திரிபலா சூரணத்தை தேனில் கலந்து உட்கொண்டு வர கண்பார்வை விரைவில் தெளிவடையும். 
        119.நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்தி வர கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். 
        120.நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவ கண்நோய்கள் தீரும். 
        121.நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர கண்கள் குளிர்ச்சி பெறும். 
        122.குங்குமப்பூ,பச்சைக்கற்பூரம்,சமனாய் எலுமிச்சை சாற்றிலும், தேனிலும் குழம்பு போலரைத்து கண்ணிலிட்டு,
        123.ஆனைதிப்பிலி, அதிமதுரம், தக்கோலம், வெள்ளிலோத்திரம், சுக்கு,திரிபலை வகைக்கு 40கிராம் பசும்பாலிலரைத்து,1படி நெய்யில் காய்ச்சி வடித்து தலை முழுகிவர நீரொளிகாசம் தீரும்.    
        124.பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும். 
        125.இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு தேகரண்டி உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். 
        126.கடுக்காய் தோல், நெல்லிக்காய்  கொட்டை நீக்கி உலர்த்தி,பொடித்து தினம் 3 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வர கண்பார்வை சக்கி அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும். சளியினால் ஏற்படும் தலைவலி குணமாகும். 
        127.    1 தேகரண்டி கொத்தமல்லி விதையை, அரைலி.நீரில் 3 மணிநேரம் ஊற வைத்து, வடித்து,தினம்4வேளை கண்களை கழுவ அம்மை நோயின் போது கண்கள் பாதிக்கப்படாது
        128.    மருதாணி இலைகளை அரைத்து பாதங்களில் வைத்துக் கட்ட கண்கள் பாதுகாக்கப்படும்
        129.மல்லிகை பூக்களை கண்ணில் வைத்து கட்ட கண் சிவப்பு குணமாகும்.
        130.கழுதை எலும்பை எடுத்து அமிர்தபாலில்இட்டு உரசி விழி கண் குருடு உள்ள கண்ணில் தடவினால் பார்வை நன்றாக தெரியும்.
        131.பொன்னாங்கண்ணி சாற்றை சம அளவு பசும்பாலில் உரை ஊற்றி மறுநாள் கடைந்து வெண்ணையை எடுத்து தினம் காலை மாலை ஒரு ஸ்பூன் பதினெட்டு நாள் சாப்பிட பார்வை தெளிவுறும்.
        132.நந்தியாவட்டை பூ இதழ் ஐநூறு எடுத்து ஐநூறு மிலி சிற்றாமணக்கு எண்ணையில் பதினெட்டு நாள் வெயிலில் வைத்து ஏழு மெல்லிய துணியில் வடிகட்டி மூன்று சொட்டு நாற்பத்திரண்டு நாள் விட கண் மங்கல்நீங்கும்.
        133.வல்லாரைகீரை ஒரு கைப்பிடி எடுத்து மையாக அரைத்து ஒருகொட்டைபாக்களவு வாயில் போட்டு ஒரு தம்ளர் பசும்பால் குடித்துவர மாலைக்கண் குணமாகும்.
        134.மிதிபாகர்காயை அம்மியில் அரைத்து சாறு எடுத்து புட்டியில் பத்திரபடுதவும். மிளகாய் இந்த சாறு விட்டு உரைத்து இரவு படுக்க போகுமுன் கண் ரப்பைகளின் மேல் பற்றுபோட்டு காலையில் கழுவ வேண்டும். இருபத்தொரு நாள் செய்ய பார்வை தெளிவாகும்.
                                        
                   
                                                              
                                                                    
                                                         
              
                               
                                  
      .                                                       

                                                               
                                     














கருத்துகள் இல்லை: