பக்கங்கள்

29 அக்டோபர், 2016

யானைக்கால் (Elephantiasis)



1.   நீர்முள்ளிக் குடிநீர் செய்து,100-200மிலி வெந்நீரில் தினம்3வேளை கொள்ள யானைக்கால் கட்டுப்படும்
2.   அமுக்கரா அல்லது மூசாம்பரம் பற்றிட யானைக்கால் கட்டுப்படும்
3.   மிளகாய்பூண்டு இலைகளை நீரில் கொதிக்கவைத்து,வடித்துக் குடித்துவர யானைக்கால், நீர்க்கோவை தீரும்
4.   ஞ்சள்தூளுடன் கோமியம்,வெல்லம் கலந்து சாபபிட்டுவர யானைக்கால் கட்டுப்படும்
5.   கரிசலாங்கண்ணி சாறில்,பச்சைமஞ்களை அரைத்துப்போட்டு,சூடாக சாப்பிட்டு வர யானைக்கால் கட்டுப்படும்
6.   உத்தாமணி சாறுடன்,சுக்கு,பெருங்காயம் பொடித்துக் காய்ச்சி இளம்சூட்டில் பற்றிட வாதவலி வீக்கம் குணமாகும்.40-50 நாளில் ஆரம்பநிலை யானைக்கால் குணமாகும்
7.   சத்திச்சாரனை முற்றிய வேர்ச்சூரணம் .500கிராம் சாப்பிட்டுவர யானைக்கால்,வீக்கம், பீனிசம், வாதநோய்கள் நீங்கும்.
8.   தழுதாழை இலைகளை ஆலிவ் ஆயிலில் வதக்கி கட்ட விரைவாதம், நெறிக்கட்டிகள், வாதவீக்கம், யானைக்கால் வீக்கம்  குணமாகும்
9.   வல்லாரை இலையை வி.எண்ணையில் வதக்கிக்கட்ட வீக்கம்,கட்டி கரையும். நீடித்துகட்டிவர யானைக்கால்,விரைவாதம்,அரையாப்பு, நெறிக்கட்டி, கண்டமாலை தீரும்.
10. வல்லாரை இலைசூரணம் 5அரிசிஎடை நெய்யுடன் காலைமாலை கொள்ள வாதம்,வாயு,அண்டவீக்கம்,யானைக்கால்,குட்டம்,நெறிக்கட்டி, கண்டமாலை, மேகரணம்,சூதகக்கட்டு தீரும். மூளைபலம், சிந்தனை திறன், சுறுசுறுப்பு தரும்.
11. காக்கரட்டான் விதைத்தூள் 50கிராம்,இந்துப்பு 50கிராம்,சுக்குத்தூள்25 கிராம், கலந்து தினம் 1வேளை,3கிராம் சாப்பிட்டுவர மலப்போக்கு பெருகி, யானைக்கால் வீக்கம் மெல்லக் குறையும். 
12. .மிளகு4கிராம்,பெருங்காயம்1கிராம்,கழற்சிபருப்பு10கிராம்,பொடித்து 200மி.கி தேனில் கொடுத்துவர யானைக்கால் காய்ச்சல் தீரும். 
13. உத்தாமனி இலைச்சாற்றுடன் சுக்கு,பெருங்காயம் பொடித்துக் காய்ச்சி இளஞ்சூட்டில் பற்றிட 40-50 நாளில் ஆரம்பநிலை யானைக்கால் குணமாகும்

கருத்துகள் இல்லை: