சிறுநீர்ப் பாதையில்
கிருமித் தொற்று அல்லது புண் இருப்பது, அதிகம் தண்ணீர் அருந்தாதது, பால்வினை
நோய்கள், அடிபடுதல், கருத்தடைச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள்
போன்றவற்றால் நீர்க்கடுப்பு ஏற்படலாம்.
அறிகுறிகள்:
ஆண்களுக்கு சிறுநீர்
கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, சிறுநீர் மற்றும் விந்துடன் ரத்தம் கலந்து
வெளியேறும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, தாமதித்து நீர்
இறங்கல்,சொட்டு சொட்டாக இறங்கல்,சிறுநீர் கழித்தபின் எரிச்சல் காணல்.
பெண்களுக்கு
வயிற்றுவலி, சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, குளிர் மற்றும்
காய்ச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, பிறப்புறுப்புக் கசிவு
போன்றவை காணப்படும்
சேர்க்கவேண்டியவை:
திராட்சை,எலுமிச்சை, அன்னாசி, வெங்காயம், உருளைக்கிழங்கு
முள்ளங்கி, பூசணி, வெள்ளரி.
தவிர்க்க
வேண்டியவை:
துவர்ப்பு
மற்றும் கார உணவுகள்.
1. நண்டுக்கல்பற்பம்
100மிகி, குங்கிலியபற்பம் 100மிகி,
பறங்கிபட்டைசூரணம் 1கிராம் பாலில் கலந்து தினம்3வேளை அருந்த நீர்சுருக்கு(சிறுநீர்சரிவரச்செல்லாமை) தீரும்
2. நீர்முள்ளிக்குடிநீர்100மிகி,200மிலிவெந்நீரில்தினம்3வேளைகொள்ளநீர்சுருக்கு,
நீர்கடுப்பு தீரும்
3. திருநீற்றுப்பச்சிலை
விதையை நீரிலூற வைத்துப் பருக நீர்சுருக்கு தீரும்
4. வாழைக்கிழங்குச்சாறு
60-100மிலி,காலையில் பருகிவர நீர்சுருக்கு குணமாகும்
5. குங்கிலியபற்பம்
0.500-1கிராம்,100மிலி இளநீரில் கலந்து தினம்3வேளை பருக நீர்க்கடுப்பு தீரும்
6. நண்டுக்கல்பற்பம்100-300மிகி,60மிலி முள்ளங்கிச்சாறில் கலந்து பருக நீர்கடுப்பு
தீரும்
7. நன்னாரிமணப்பாகு
15-30மிலி,தினம்3வேளை பருக நீர்க்கடுப்பு
தீரும்.
8. குங்கிலியபற்பம்
0.500-1கிராம், 100மிலி இளநீரில் கலந்து தினம்3வேளை பருக நீர்க்கடுப்பு தீரும்
9. நண்டுக்கல்பற்பம்
100-300மிகி, 60மிலி முள்ளங்கிச்சாறில் கலந்து பருக நீர்கடுப்பு
தீரும்
10. மூக்கிரட்டைக்குடிநீர்
30மிலி தினம் 3வேளை பருக நீர்கடுப்பு குணமாகும்
11. 10மிலிவாழைத்தண்டுச்சாறு, வெண்பூசணிச்சாறுடன், 10
கிராம் சர்க்கரை கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு தீரும்
12. சிறுகீரை
வேர் குடிநீர்30மிலி, தினம் 3வேளை பருகிவர சிறுநீர்க்கட்டு, எரிச்சல் குணமாகும்
13. ஆரைஇலையை
அரைத்து,எலுமிச்சைஅளவு,எருமைமோரில், தினம்2வேளை
பருகி வர சிறுநீர்க்கட்டு,எரிச்சல் குணமாகும்.
14. ஆரைஇலையை
பொடித்து 30கிராம்,2ல்1ன்றாய்க் காய்ச்சி,பாலும் கற்கண்டும் கலந்து,
தினமிருவேளை பருகிவர சிறுநீருடன்இரத்தம்போதல்(இரத்தச்சூடு ) கட்டுப்படும்
15. ஓரிதழ்தாமரை
சமூலத்தை அரைத்து,எலுமிச்சையளவு,200மிலி பச்சைப் பசும் பாலில் மண்டலம் கொள்ள நரம்புத்தளர்ச்சி,நீர்எரிச்சல் குணமாகும்
16. மேலாநெல்லிசமூலம்
கைப்பிடி சிதைத்து,2ல்1ன்றாய்
காய்ச்சி தினமிருவேளை பருக நீர்எரிச்சல் குணமாகும்
17. 1தேகரண்டி சந்தனத்தூளை குடிநீர் செய்து பருகிவர நீர்எரிச்சல் தீரும்
18. கல்யாணமுருங்கை
இலைகளுடன் சிறுபயறு,சேர்த்தவித்து,கர்ப்பிணிகளுக்குக் கொடுக்க சிறுநீர் தாராளமாய் இறங்கும்.பால்சுரப்பு கூடும்
19. நெருஞ்சில்
50கிராம்,2ல்1ன்றாய் காய்ச்சி 25மிலி,2மணிநேரத்திற்கொருமுறை பருக நீர்கடுப்பு குணமாகும்
20. நெருஞ்சில்
சமூலச்சாறு 50மிலி,200மிலி மோர் கலந்து
பருக சிறுநீருடன் இரத்தம் வருதல் கட்டுப்படும்
21. ஆவாரைபூச்சூரணம்
அரைகிராம்,2கிராம் வெண்ணையில் குழைத்துச் சாப்பிட வெள்ளைப்படுதல்,
நீர்எரிச்சல் குணமாகும்
22. சங்குப்பூவேர்,கீழாநெல்லிசமூலம்,யானைநெருஞ்சில்இலை,அருகம்புல் வகைக்கு சமனெடுத்து, 5மிளகு சேர்த்தரைத்து,நெல்லிக்காயளவு,தயிரில்,தினமிருவேளை
உட்கொள்ள வெள்ளைப்படுதல், நீர்எரிச்சல் குணமாகும்
23. கட்டுக்கொடி
இலைச் சாற்றுடன் எருமைமோர் கலந்து பருகிவர நீர்எரிச்சல், வெள்ளை தீரும்
24. கொத்தமல்லியை
பொடி செய்து,இளநீரிலூற வைத்துப் பருக குறியிலிருந்து இரத்தம்
வடிதல் நிற்கும்
25. 200மிலி காரட்சாறில்,25மிலி முருங்கையிலைச்சாறு கலந்து பருக
அதிதாகம், நீர்க்கடுப்பு நீங்கும்
26. கட்டுக்கொடி
இலைச்சாற்றுடன் எருமைமோர் கலந்து பருகிவர நீர்எரிச்சல், வெள்ளை தீரும்
27. நாவல்மணப்பாகு
1தேகரண்டி தினமிருவேளை உண்டுவர நீர்கட்டு,நீர்எரிச்சல்
தீரும்
28. கொத்தமல்லியை
பொடிசெய்து,இளநீரிலூறவைத்துப் பருக குறியிலிருந்து இரத்தம்வடிதல்
நிற்கும்
29. 200மிலிகாரட் சாறில்,25மிலி முருங்கையிலைச்சாறு கலந்து பருக
அதிதாகம், நீர்க்கடுப்பு நீங்கும்
30. சிறுசெருப்படைசமூலம்
20கிராம் சிதைத்து 4ல்1ன்றாய் காய்ச்சி
30மிலி, பனைவெல்லம் சேர்த்து, தினமிருவேளை பருகிவர வெள்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல்
குணமாகும்
31. தண்ணீர்விட்டான்கிழங்குசாறு200மிலியுடன்,1தேகரண்டி சர்க்கரை சேர்த்துக் காலையில் பருகிவர
நீர்கட்டு,நீர்க்கடுப்பு,வயிற்றுஎரிச்சல்
குணமாகும். தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்
32. தண்ணீர்விட்டான்கிழங்கு
சூரணம்5கிராம்,பசுநெய்யில் கலந்து,தினமிருவேளை
சாப்பிட நீர்ச்சுருக்கு,நீர்க்கட்டு நீங்கும்
33. வாழைதண்டுச்சாறு100மிலி,தினம்2வேளை பருகிவர நீர்எரிச்சல்
தீரும்
34. அதிமதுரக்குடிநீர்,பால்,சர்க்கரை சேர்த்துக் காய்ச்சி,2தேகரண்டி தினமிருவேளை கொள்ள நீர்எரிச்சல் தீரும்
35. நன்னாரிவேரை
ஆவின் பாலிலரைத்துச் சாப்பிட்டுவர நீர்கடுப்பு,நீர்சுருக்கு தீரும்
36. நன்னாரிவேருடன்
சீரகம் சேர்த்துகுடிநீர் செய்து பருக நாட்பட்ட நீர்சுருக்கு நீங்கும்
37. நெருஞ்சில்,நீர்முள்ளி,மூக்கிரட்டை கஷாயம்செய்து சாப்பிட்டுவர சோபம்(வீக்கம்)
குணமாகும்
38. தண்ணீர்விட்டான்கிழங்குப்பால்
அல்லது கஷாயம் தினமிருவேளை பருக சிறுநீரில் இரத்தம் போதல் ,நீர்கடுப்பு தீரும்
39. சுத்தம்செய்தகற்றாழை
சோற்றுடன் கடுக்காய்தூள் அல்லது படிகாரத்தூள் கலந்து பாத்திரத்தில் சாய்வாக வைக்க,சேகரமாகும் நீரை 5-10மிலி அருந்திவர உடற்சூடு,
வெள்ளைபடுதல், நீர்க்கடுப்பு,நீர்எரிச்சல் தீரும்
40. நெருஞ்சில்சமூலம்2,பிடி அருகம்புல்லுடன் 2ல்1ன்றாய்
காய்ச்சி 50மிலி தினமிரு வேளை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர
நீர்க்கடுப்பு,கண்எரிச்சல், கண்ணில் நீர்
வடிதல் தீரும். உடல்வெப்பம் தணியும்
41. செம்பரத்தைஇலை
அல்லது வேர்பட்டை குடிநீர் செய்து தினமிருவேளை பருகிவர நீர்எரிச்சல், நீர்கடுப்பு,சூடுபிடித்தல்,நீர்த்தாரையில்புண்
ஆகியன குணமாகும்
42. தேற்றான்கொட்டைசூரணம்1கிராம்,தினமிருவேளை,பாலில் கலந்து
பருகிவர நீர்சுருக்கு, நீர்க்கட்டு,வெள்ளை,மூலம் ஆகியன தீரும்.உடல் பலப்படும்
43. ஆவாரம்பூவை
பாலில் வேகவைத்துப் பொடித்து,சர்க்கரை கலந்து,பாலில் பருகிவர வெள்ளை, நீர்க்கடுப்பு,நீர்எரிச்சல்,உள்ளங்கால் எரிச்சல் தீரும்
44. அருகம்புல்சமூலம்
30கிராம்,கீழாநெல்லிச்சமூலம் 15கிராம்
மையாயரைத்து தயிரில் கலந்து காலையில் பருகிவர வெள்ளை,மேகஅனல்,உடல்வறட்சி, நீர்தாரை புண்ணால் கடுப்பு, நீருடன் இரத்தம் போதல் குணமாகும்
45. அம்மான்பச்சரிசி
இலையை அரைத்து,நெல்லிக்காயளவு,காலை பசும்பாலில்
கொள்ள நீருடன் குருதிப்போக்கு,மலக்கட்டு,நீர்க்கடுப்பு,உடம்பு நமைச்சல் தீரும்
46. அரசுவேர்ப்பட்டை30கிராம்,3ல்1ன்றாய்க் காய்ச்சி,பால் சர்க்கரை கலந்து,100மிலி பருகிவர வெட்டைச்சூடு,சொறி,சிரங்கு,தினவு,நீர்எரிச்சல் தீரும்
47. அத்திப்பால்15மிலி,வெண்ணை சர்க்கரை கலந்து காலைமாலை கொள்ள நீரிழிவு,
இரத்தக் கழிச்சல், பெரும்பாடு,நீரில்குருதிபோதல்,நரம்புபிடிப்பு,பித்தம் தீரும்
48. தக்காளிச்சாறுடன்
ந.எண்ணை கலந்து,7நாள் காலையில் கடும்பத்தியத்துடன கொள்ள நீர்க்கட்டு
நீங்கும்
49. நித்தியகல்யாணி
பூகஷாயம்25மிலி,தினம்4வேளை சாப்பிட்டுவர சிறுநீர்தாரை
நோய்கள் நீங்கும்
50. முள்ளங்கி
கிழங்குச் சாறுடன் சர்க்கரை கலந்து சாப்பிட நீர்சுருக்கு தீரும்
51. வால்மிளகு
அரைவிராகனெடை இடித்து சலித்து 400மிலி நீரில் கரைத்து,தினம் 4 வேளை பருக நீர்அடைப்பு நீங்கும்
52. துத்திவேர்
120கிராம்,திராட்சை 60கிராம் கஷாயம்
செய்து சாப்பிட்டுவர நீர்கடுப்பு நீங்கும்
53. செம்பரத்தை
பூவிதழ் 10
நீரிலிட்டுக் காய்ச்சிப் பருக
சிறுநீர் எரிச்சல் குணமாகும்
54. சத்திசாரணை
இலையை நெய்விட்டு வதக்கி,கீரைசெய்து சாப்பிட்டுவர பசியின்மை,
நீர்க்கட்டு, வயிற்றிரைச்சல்,வீக்கம்,வயிற்றுவலி தீரும்
55. முட்சங்கன்வேர்பட்டைசாறு20மிலி,100மிலி வெள்ளாட்டுப்பாலில் கலந்து சாப்பிட சிறுநீர்தடை
நீங்கும்
56. நித்தியகல்யாணி
வேர்சூரணம்1தேகரண்டி வெந்நீரில் கொள்ள சிறுநீர்தாரை நோய்கள்
நீங்கும்
57. சந்தனத்தை
அரைத்து,சுண்டைக்காயளவு தினமிருவேளை சாப்பிட்டுவர வெட்டை சூடு, நீர்ப்பாதை அழற்சி,இரணம்,மேகஅனல்,கர்ப்பச்சூடு குணமாகும்
58. சந்தனத்தூள்1தேகரண்டி,அரைலி.நீரிலிட்டு குடிநீர் செய்து பருகிவர நீர்எரிச்சல்
தீரும்
59. 1பிடி
அருகம்புல்லை கசாயம் செய்து,பால்,பனைவெல்லம் சேர்த்து காலைமாலை பருகிவர நீர் தடையின்றி இறங்கும்.
60. வெள்ளரி
விதையை அரைத்து வயிற்றின்மீது பற்றிட நீரடைப்பு உடனே குணமாகும்.
61. நன்கு
பழுத்த வில்வப்பழத்தை கரைத்து,வடித்து,பால்,சர்க்கரை சேர்த்து சாப்பிட நீரடைப்பு
நீங்கும்.
62. உலர்ந்த
திராட்சை பழங்கள் 3ல்,கொட்டை நீக்கி உள்ளே ஒவ்வொரு
மிளகு வைத்து மூடி,இரவு படுக்கு முன் வெறும் வயிற்றில்
சாப்பிட்டுவர நீர் கழிப்பதில் உள்ள சிரமங்கள் நீங்கும்.
63. நாவல்பழச்சாறு
3
தேகரண்டி,சர்க்கரை 1 தேகரண்டி
கலந்து தினமிருவேளை பருகி வர நீர்கடுப்பு,நீர்எரிச்சல்
தீரும்
64. 50கிராம்
செம்பரத்தைக்கொழுந்து,5 பூ சேர்த்து 4ல் 1ன்றாய்க் காய்ச்சி,
காலை மாலை 250மிலி பருக நீர்க்கடுப்பு குணமாகும்.
65. எலுமிச்சைசாறு
ந.எண்ணை கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு எரிவு தீரும்
66. நீராகாரத்தில்
பழங்கூரை வைக்கோலை ஊறவைத்து பிசைந்து வடித்து கால்படி சாப்பிட நீரடைப்பு
கல்லடைப்பு சதையடைப்பு தீரும்.
67. ஆவாரைவேர்ப்பட்டை,விஷ்ணுகிரந்தி
சமூலம் வகைக்கு எலுமிச்சையளவு அரைத்து, பசும்பாலில் கரைத்து,சர்க்கரை சேர்த்து 3நாள் கொள்ள இரத்த பிரமியம் தீரும்.
68. விஷ்ணுகிரந்திவேரை
எலுமிச்சையளவு அரைத்து,பசும்பாலில்
கரைத்து, சர்க்கரை சேர்த்து
3 நாள் கொள்ள இரத்தபிரமியம் தீரும்.
69. அம்மான்பச்சரிசியை
எலுமிச்சையளவு அரைத்து,பசும்பாலில்
கரைத்து, 3நாள் கொள்ள பிரமியம் தீரும்
70. அல்லிவிதையை
எலுமிச்சையளவு அரைத்து,பசும்பாலில்
கரைத்து, 3நாள் கொள்ள
இரத்தபிரமியம் தீரும்
71. .விடத்தலைக்கொழுந்து,ஏலம் எலுமிச்சையளவு
அரைத்து,தயிரில் கரைத்து கொள்ள இரத்தபிரமியம் தீரும்
72. நெருஞ்சில்வேரை
எலுமிச்சையளவு அரைத்து,எருமை மோரில் கரைத்து 3நாள் கொள்ள இரத்தபிரமியம் தீரும்
73. ஓரிலைத் தாமரை
சாற்றில் சர்க்கரை சேர்த்து
வேளைக்கு250மிலி 3நாள் கொள்ள இரத்தபிரமியம் தீரும்
74. 1பிடி வல்லாரையை
அரைத்து 250மிலி பசும்பாலில் கரைத்து,3நாள் கொள்ள இரத்த பிரமியம் தீரும்
75. கோரைக்கிழங்கு,விஷ்ணுகிரந்தி,மிளகு வகைக்கு 20கிராம்,4ல்1ன்றாய்க்
காய்ச்சி வேளைக்கு 150மிலி 6வேளை கொள்ள சுக்கில பிரமியம் தீரும்.
76. ஓரிலைதாமரை,சீரகம் சமனரைத்து வேளைக்கு
பாக்களவு 3நாள் கொள்ள சுக்கில பிரமியம் தீரும்.
77. மிளகை
எலுமிச்சையளவு அரைத்து,நல்லெண்ணையில்
மத்தித்து 3நாள் கொள்ள சீழ்பிரமியம் தீரும்
78. அதிமதுரச்சூரணம்
திரிகடி நீராகாரத்தில் 10நாள் கொள்ள சீழ்பிரமியம் தீரும்.
79. குப்பைமேனியிலையை
உப்பில்லாமல் அவித்து மிளகும்,அரிசியும் பொரித்து பொடித்துத் தூவி மாங்காய் அளவு காலை 3நாள் சாப்பிட
சீழ்பிரமியம் தீரும்.
80. வெந்தயத்தை இரவில்
ஊறவைத்து காலை அரைத்து மோரில் கொள்ள பிரமியம் தீரும்.
81. துளசியிலையை
பிட்டவித்து 150மிலி சாறெடுத்து,எலுமிச்சையளவு வெண்ணை சேர்த்து 3நாள்
கொள்ள பிரமியம் தீரும்.
82. 1 பிடி கற்றாழைவேரை
இளநீரில் அரைத்து
சர்க்கரை சேர்த்து
3நாள் கொள்ள பிரமியம் தீரும்
83. பற்பாடகம்
எலுமிச்சையளவு அரைத்து,பசும்பாலில்
கரைத்து, சர்க்கரை சேர்த்து
3 நாள் கொள்ள பிரமியம் தீரும்
84. பொண்ணாங்கானிவேர்
எலுமிச்சையளவு அரைத்து 2லி எருமைபாலில் கலக்கி காய்ச்சி புரைகுத்தி கடைந்து வெண்ணை
எடுத்து அதை 3நாள் சாப்பிட்டு,மோரை தாகசாந்தி பண்ண இரத்தம் போல் நீர்
இறங்கல் தீரும்.
85. கீழாநெல்லி 1பிடி,சீரகம்4கிராம்
அரைத்து எருமைதயிரில் கலக்கி 3நாள் கொடுக்க நீர்கடுப்பு எரிவு தீரும்.
86. எலுமிச்சம்பழச்சாறு,நல்லெண்ணை கலந்து
சாப்பிட நீர்கடுப்பு எரிவு தீரும்.
87. கைப்பிடி உளுந்தை
நீரில் ஊறவைத்து, மறுநாள் அதிகாலை நீரை வடித்து,அரை தம்ளர் அருந்த நீர்கடுப்பு தீரும்
88. சிறு துண்டு கற்றாழையை
நன்றாகக் கழுவி, வெண்ணெய், கற்கண்டு, வால் மிளகுத்தூள் சேர்த்து உண்ண நீர்கடுப்பு தீரும்
89. கற்பாசியை அரைத்து
இடுப்புப் பகுதியிலும், அடிவயிற்றிலும் பூச நீர்கடுப்பு தீரும்
90. அரை தேகரண்டி
முள்ளிக்கீரை வேர்ப்பொடியை நீர் கலந்து அருந்த நீர்கடுப்பு தீரும்
91. கால் தம்ளர் பருப்புக் கீரையின் சாற்றை இரண்டு வேளை
அருந்த நீர்கடுப்பு
தீரும்.
92. சரக்கொன்றை புளியுடன்
கடுகுரோகிணி, சுக்கு, வாய்விடங்கம், பெருங்காயம், படிகாரம், பொட்டிலுப்பு கூகைநீறு
ஆகியவற்றை சேர்த்து அரைத்து அடிவயிற்றில் பற்றுப் போட நீர்கடுப்பு
தீரும்
93. செண்பகப் பூவுடன்
பத்து மடங்கு நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை தம்ளர் அருந்த நீர்கடுப்பு தீரும்
94. கைப்பிடியளவு
சுரைக்கொடியை தண்ணீர் விட்டுக் காய்ச்சி, வடித்து வெண்ணெய் கலந்து அருந்த நீர்கடுப்பு தீரும்
95. துத்தி வேர்ப்பொடி அரை
தேகரண்டி திராட்சைப் பழச்சாற்றில் கலந்து சாப்பிட நீர்கடுப்பு தீரும்
96. சதாவேரிக் கிழங்கின்
பொடி அரை தேகரண்டி வெண்ணெயில் கலந்து உண்ண
நீர்கடுப்பு தீரும்
97. அரை தேகரண்டி தேற்றான்
விதைப்பொடியை எலுமிச்சைச் சாறு, நீர் சேர்த்து உண்ண நீர்கடுப்பு
தீரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக