பக்கங்கள்

30 அக்டோபர், 2016

பிறந்த குழந்தைகளுக்கு; (For born babies)



நோய் என்பது எல்லோருக்கும் பொது என்றாலும் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலே உணவு என்பதால் தாய் உணவில் பத்தியம்,கட்டுப்பாட்டுடன் இருந்து மருந்து சாப்பிட்டு தன்னையும் சிசுவையும் பேணுதல் நலம்.                                    

உணவு முறை  

4 -6  மாதம் ;  அரிசிக் கஞ்சி,கேழ்வரகு கூழ்,வேகவைத்த காய்கறிகள்,கீரைகள்                (வடித்து நீராக)
5 – 6        ;  நன்றாக மசித்த உருளைக்கிழங்கு,பருப்பு,வாழைப்பழம்,சாதம்,பால்,             தண்ணீர்
6 – 7        ;  நன்றாக மசித்த காய்கறிகள்,கீரைகள்,சாதம்,தண்னீர்,பால்.
7 -8         ;  மசித்த பருப்பு,காய்கறிகள்,கீரைகள்,சாதம்,தண்னீர்,பால்,தயிர்,
9 – பல் தோன்றும் சமயம் ;இட்லி,தோசை,பயறு வகைகள். ஒரு வருட முடிவில்        அனைத்து சுவைகளையும் சாப்பிட வேண்டும்.

 வளர்ச்சி விபரம்;
5-6 மாதத்தில் குப்புர விழ வேண்டும்.
8 மாதத்தில் எட்டு(பிடித்துக்கொண்டு நடக்க)வைக்க வேண்டும்.
1 வருடத்தில் ஓடியாட வேண்டும்.

             வளர்க்கும் முறை;

5 வயதுவரை அரசனை போல வளர்க்க வேண்டும்.
15 வயது வரை மாணவணைபோல வளர்க்க வேண்டும்.குழந்தைகள் 12 வயது வரை செய்யும் பாவங்கள் பெற்றோரையே சேரும்.எனவே இக்கால கட்டத்தில் நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து திருத்தி வளர்க்க வேண்டும்.ஒடித்து வளர்க்காத முருங்கையும் அடித்து வளர்க்காத குழந்தையும் உருப்படாது என்பது பழமொழி.
15 க்குமேல் நண்பனைப்போல் வளர்க்க வேண்டும்.விடலைப்பருவமான இக்கால கட்டத்தில் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களினாலும் குழப்பமான மன நிலையிலும் உங்களின் அரவனைப்பும் தக்க ஆலோசனையும் இல்லையெனில் திசை மாறுவது நிச்சயம்.தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்பது பழமொழி.
       
             குழந்தைகளுக்கு தோன்றும் நோயின் விவரம்.                    

கிரந்தி,செங்கிரந்தி,கருங்கிரந்தி,பட்சிதோஷம்,மாந்தம்,கணம்,பிரளிகரப்பன், செவ்வாப்பு, தொண்டைக்கட்டு,வைசூரி போன்ற அனேக ரோகங்கள் சம்பவிக்கும்.                                                                                       காரணம் ;                                                                                                           

மாந்தம் தாய் முலைப்பாலாலும்,கணம் கர்ப்பச்சூட்டினாலும், மற்றைப் பிணிகள் தாய்தந்தையின் புணர்ச்சினால் எழுந்த சூட்டினாலும், தோஷம் தீட்டான பெண்ணின் ’பரிசத்தினாலும், பட்சிகள் இரைதேட காலை கூட்டிலிருந்து போகும்போதும்,மாலை இரை தேடிதிரும்பும்போது மரத்தினடியில் நிற்பதாலும் உண்டாகின்றன.                                                                      
                       அறிகுறிகள் ;                                                                                                                                      
 செங்கிரந்திக்குணம் ;பிள்ளை பிறந்தவுடன் தொண்டைகட்டிப் பூனைக்குரல் போல் அழும்.நீரும் மலமுங்கட்டி வயிறூதும்.கால் சிவப்பேறும்.                                     

 கருங்கிரந்திக்குணம் ;குழந்தை அலறியழுது குரல் கம்மும்.முலை யுண்ணாது. மூர்ச்சையாகும்.உடல்வெதும்பும்.கண்திறவாது.நாவறட்சி காணும்.கீழுதடு,கைகால் கருப்பேறும்.வயிறூதி வலி காணும்.                                                                                                                  
                                                                         தோஷம்                                                                
பக்ஷிதோஷகுணம் ;குழந்தை முலையுண்ணாது;ஜலமாய் வயிறு கழியும். வாந்தி பண்ணும்;தலையெடாது.கண்குழியும்,பீழைசாடும்.உடல் பேதப்படும். வெதும்பும், அலறும்,சீறியழும்.கழுத்தும்,முகமும் சிறுக்கும்.   

பறவைதோஷகுணம்;சிரசிற்கனலேறி உடல் நொந்து வெதும்பும். நாஉலரும் , சத்திக்கும்,நெஞ்சைசுழியவாங்கும்,உச்சியுங்கண்ணும் குழியும்,வலிப்புக் காணும், இளைக்கும்.அடிக்கடி திடுக்கிட்டெழுந்து சீறும்,வயிருபோகும்,விழி வெளுக்கும். முகம் மஞ்சட்போலிருக்கும்.                                                          

 எட்சிதோஷ குணம் ;உதிரத்தில் கனலேறி உடம்பு தேயும்.நாறும்.கண்ணிற் பீளை கட்டும், சற்றே வயிறு கழியும்.குழந்தை முலையுண்ணாது பதறியழும். கண்ணைப் பிசையும், மயங்கிப்புரளும்.                          

வீங்குபுள்ளின்தோஷகுணம்;குழந்தை வாந்தி பண்ணும்; பசுமையாயும், பால் போலுங் கழியும். பின்கையால் முகத்தைத் துடைக்கும்.உச்சிக்குழியும், நா உலரும்.                                                  தூங்குபுள்ளிந்தோஷ்குணம்;வயிறு கழியும்,வாந்தி பண்னும்,மயக்கமாய்த் தூங்கி வீறிட்டலறி எழுந்திரிக்கும்.முகத்தைப் பார்க்கும்.அடிக்கடி தாகித்துத் தண்ணீர் விரும்பும்.முகம் வேறுபடும்;கண்கள் இருண்டு சோரும்.நெறுநெற வெனப் பற்கள் கடிக்கும்;உச்சி பள்ளம்விழும்.                                                    

விளக்கொளிக்கண்புள்ளின்தோஷகுணம் ;பாலெதிரெடுக்கும்;உடலடிக்கடி காயும். குழந்தை முலையுண்ணாது;பெருவிடாய்கொண்டு சோரும். 

வெங்கன்புள்ளின்தோஷ்குணம்;பால்போற்கழியும்;மேனிகாயும்;வெளுக்கும். வயிற்றிரைச்சல் வலி காணும்.   

கருடக்கண்புள்ளின்தோஷகுணம்;வாய்நீர்வடியும்;வாந்திபண்ணும்;இரு விழியும் தாழும்;பீளைகட்டும்.

 செங்கண்புள்ளின்தோஷகுணம்;கண் சிவந்து நீர் வடியும்;சிரம் குளிரும். தவழ்ந்து போய் நிலத்தில் விழும்.கையால் முகத்தைத் துடைக்கும்;சீறி யெழும்;வெப்பநீராய் கழியும்.                                                                                                   

 அந்திபுள்ளிந்தோஷகுணம்;மேனி வெளுக்கும்;காயும்;அதில் நரம்பு தோன்றும்; கால் கை குளிரும்;கபாலம் நடுங்கும். 

 நீர்புள்ளின்தோஷகுணம்;நெஞ்சு வரளும்;கண்குழிந்து வெளுக்கும்;  பெருமூச்சிடும்; பாலுண்ணாது.இரவும்பகலும் அலறிஅழும்;உடல்வியர்க்கும்.  

புள்ளின்தோஷகுணம்;உச்சியுங்கண்ணும் குழியும்;குடித்தபால் பச்சையாய் வயிறு கழியும்;பரவைக்குரல்போல்சீறியழும்;இளைக்கும்;தண்ணீரை விரும்பும்; மெய்மறக்கும்.                                      

முட்டுதோஷகுணம்;மாதவிடாயானவர்கள் குழந்தையை எடுத்தால் மேனி வாடும்; வேறுபடும்;வாந்திபண்னும்;உச்சியுங்கண்ணும் குழியும்;நாக்குவாய் கறுக்கும்.                                                               

குளிதோஷகுணம்;உச்சியுங்கண்ணுங் குழியும்;வாந்திவியர்வைமிகும்;பல வண்ணமாய் கழியும்;தேகம் தணல்போல் காய்ந்து வற்றும  நெஞ்சுலரும்; தாகிக்கும்; கண்ணில் நீர் சொரியும்;கால் வீங்கும்;குய்யம் புண்ணாகும். 

கெர்ப்பமழிந்ததோஷகுணம்;உடம்பு நொந்து சிவக்கும்;இளைக்கும்;நாறும்; சத்திக்கும்; கைகால் அழுக்கேறும்;கால்பின்னும்;கழியும்;விழிசொருகி மயங்கும்.                                                       

தேரைதோஷகுணம்;உடம்புலர்ந்து வற்றும்;நெஞ்சுலர்ந்து கூடும்;கண் பொடிக்கத் திருக்கும்;கைகால் வற்றிச் சுருங்கி முடங்கும்;வயிறு பொருமும்; மலந்தீயும்; நா உலரும்;தாகிக்கும்;முகம் வாடும்;செவி தாழும்; மூச்சு வாங்கும்;நெரிகுறற்படும். பிள்ளை சற்றுந் தேறாது.                                                                                                                                               மாந்தம்;                                                                                                                                                                            

             காரணங்கள்;   

மேதிப்பால்(எருமை),நெய்,கதலிப்பழம்,தேங்காய்,இளாநீர்,கடலை,வெல்லம், புளித்த மோர்,மாக்கிஷம்,கனிகள்,மலைத்துவரை,உளுந்து,மொச்சை,உளுவை,புளியங்கொட்டை, வாளைமீன்,கெண்டை,பாகல்,சுரை போன்ற வாயுப் பதார்த்தங்களை தாய் அதிகமுண்டாலும்,குழந்தைகள் உண்டாலும் வாத மாந்தம்,பித்தமாந்தம், சிலேத்தும மாந்தம்,விஷமாந்தம்,போர்மாந்தம்,வாலைமாந்தம்,கணமாந்தம்,வலிப்புமாந்தம்,சுழிமாந்தம்,முக்குமாந்தம்,சன்னிமாந்தம்,ஊதுமாந்தம்,வீக்கமாந்தம், என்று 20வகை மாந்தங்கள் உண்டாகும்.                                                        அறிகுறிகள்           
  குழந்தை உடல் வெதும்பி வியர்க்கும்;முலையுண்ணாது,வாந்தி பண்ணி மயங்கும்; சீதமும்,மலமுமாயுங்,கெட்ட பால் போலுந்,தெளிந்த தண்ணீர் போலுங் கழியும். தேகம் வெப்பு நாறும்;கைகால் குளிரும்;நாஉலரும்;குரல் கம்மும்;கண்குழிந்து சுழன்று சிவக்கும்.கால் பின்னும்;முகம் பளிங்குபோல் மின்னும்.  தங்கம் போல் மேனி மினுமினுக்கும்.                                          

 வாதமாந்தகுணம் ;வயிறு பொருமி அழும்,உடல் வியர்க்கும்,பலவிதமாய்க் குழிய வலிக்கும்,துடிக்கும்,கொட்டாவிவிடும்,நாசி புண்ணாகும்.  

பித்தமாந்தகுணம்;வாந்தி,பேதி,வலிப்பு,மூர்ச்சை காணும்;குரல் கம்மும்; மேனி மஞ்சனித்து வியர்த்துக் குளிரும். 

சிலேத்துமமாந்தகுணம்;உடம்புசிலிர்த்துநளிரும்;நா வெளுக்கும்;நெஞ்சிற் கபங் கட்டும்; வயிறு பொருமிக் கழியும்;குழந்தை மயங்கும்.               

 ஊதுமாந்தகுணம்;உடல் ஊதிக் காணும்;வயிறிறையுங்,கழிச்சல்,கடுப்பு,வாந்தி தொண்டைவலி,சுரந் தோன்றும்.                                     


நீர்மாந்தகுணம்;உடல் மெலிந்து,தணிந்து சிலிர்க்கும்;வாய்நீர் சுழற்றி வாந்தி பண்ணும்;முலையுண்ணாது;தூங்கிவிழித்து சிரிக்கும்;வயிறு பொருமிக் கழியும்; உடம்பு கைகாலில் தினவெடுக்கும்;வீங்கும்;தலை வலிக்கும்;முக மினுக்கும்; மலஞ்சிறுத்து,நீர் கடுத்திறங்கும்.   

 விஷமாந்தகுணம்;மலஞ்சிக்கிவயிறுவலித்திரைந்து கழியும்;நின்றுநின்று சுரங் காயும்; மேனி வாடும்,அரையின்கீழ் குளிர்ந்திருக்கும்;உடல் வியர்க்கும்; கையிற் பிள்ளை தங்காது;அடிக்கடி வாந்தி பண்ணும்.    

 போர்மாந்தகுணம்;பாலுண்ணாது;வாந்தி பண்ணும்;மயங்கும்;தலையை அசைக்கும்; மார்பு துடிக்கும்;மேனி வாடும்;நெற்றிநரம்பு புடைக்கும்;கண் குளியும்;தாகமிகும்; நெஞ்சம் உலரும்                         .                         

 பால்மாந்தகுணம்;வயிறூதிப் புளித்த நாற்றமாய் வயிறு கழியும்;கண் குளியுஞ்; செவி தாழும்;தொண்டையிற் கோழைகட்டும்;கைகால் வெதும்பும்; குளிரும்; வாந்தி பண்ணி பரிதவிக்கும். 

செரியாமாந்தகுணம்;சுரங்காயும்;தலைவலிக்கும்;வயிறுநொந்து சீறிஅழும்; மாக்கரைத்தது போற் கழியும்;அரைக்கண் நித்திரையாய் தூங்கி கீரைத்த்ண்டு போற் சோரும்.                                                       
  

கட்டுமாந்தகுணம்; மந்தித்து இரைந்து வலித்துக் குழந்தை அடிக்கடி மும்மலஞ் சிக்கி வயிறு கழியும்;சற்றே பாலுண்ணும்;திகைத்திருக்கும்; தூக்கம் போல் சோர்ந்து விழும்; சற்று இருமல்,சுரம்,கொட்டாவி,தலைவலி, வியர்வை உண்டாகும்.                                                                              
தலைமாந்தகுணம்;உடல் ஊதிப் புண்போல் நோகும்;வயிறுபொருமி வலித்துக் குழந்தை துள்ளி விழும்;ஏப்பம்,கொட்டாவி விடும்;கைகால் குளிரும்;முகம் வியர்க்கும்;தலைகனத்து வலிக்கும்;நாசியில் நீர் வடியும்; குளிர் சுரங் காணும்;                                                                                                 
 துலைமாந்தகுணம்;அதிகமாய் வாந்தி பண்ணும்;அடிக்கடி முறுக்கிக் கொட்டாவி விடும்; உடம்பு வியர்க்கும்;முகங் கடுப்பாயிருக்கும்;வலிப்புக் கண்டு கால் கை விரைக்கும்.                              

சுழிமாந்தகுணம்;சுரங்காயும்;இரைப்பு,சுவாசம்,விக்கல்,கக்கல்,காணும்; குழந்தை முலையுண்ணாது,நித்திரை செய்யாது.             
  
 வீக்கமாந்தகுணம்;சுரங்காயும்;காதுங் கண்ணும் வீங்கி வற்றும்;நா புண்ணாகும்; கைகால் நோகும்;அன்னஞ் செல்லாது.                     

 முக்குமாந்தகுணம்;முக்கிமுக்கி சீதமும் மலமுமாய் கழியும்;உடலுருகி மெலியும்; சுரங்காயும்;தாகங்காணும்;பின் கால் வீங்கும்.                 

வாள்மாந்தகுணம்;உடல் இரைந்து வெளுத்து வற்றிக் குழந்தை உருவு கெடும்; கடுப்பு வலிப்பு முதலான பல குணங்கள் காணும்;                
  
உளைமாந்தகுணம்;மலஞ்சலங் கட்டி வயிறு வலித்துக் குழந்தை அலறி அழுது பால் உண்ணாது மிரண்டு பார்க்கும்.                                 

அட்சரமாந்தகுணம்;அஸ்தியில் கனலேறிக் குளிர் சுரம்,பேதி காணும்;வாயும் உதடும் வெளுத்துப்  புண்ணாகும்;உடல் மெலியும்.                                         

            கணம்                                                                                                                                   

 மாந்தம் முதிர்ந்து  வாதகணம்,பித்தகணம்,சிலேத்மகணம்,மாந்தகணம், நீர் கணம்,சூலைகணம்,பிரளிக்கணம்,ஊதுகணம்,சுழிகணம்,மாகணம்,வறட்கணம், கொதிபுகணம்,பிறக்கணம்,வீக்கணம்,ஆமக்கணம்,தேரைக்கணம், முக்குக்கணம், மூலக்கணம்,போர்க்கணம்,இரத்தக்கணம்,விஷ்மாந்தகணம், ஊதுமாந்தகணம், அந்தக்கணம்,மந்தாரக்கணம்,எரிகணம் என 25 கணங்கள் 12 ஆண்டுகள் மட்டும் குழந்தைகட்கு வரும்.                                                                                      அறிகுறிகள்                   

வாதகணத்தின்குணம்; உடல் கனத்துக் குழந்தை புகைந்திருமும்,இரைப்பு, நாவறட்சி, தாகம், சுரம்,பசி,மந்தம்,நீர்சுருக்குக் காணும்,மலம்கருகும். 

பித்தகணத்தின்குணம்;மஞ்சள்போல் கழியும்,நாக்கும்,கடைவாயும் புண்ணாகும் , உடலெரிச்சல்,சுரம்,தலைகிறுகிறுப்பு,மயக்கங் காணும்.   

சிலேத்துமகணத்தின்குணம்;உடம்பில் தினவு,சொறி,கைகாலில் வீக்கம், வாய் நாற்றம், வெப்பு, இருமல்,கோழை கானும்.கீழ்வாய்,மேல்வாய் வெடித்துப் புண்ணாகும்.                                                                                                               
 கணமாந்தகுணம்;பாலன் தேகம் இளைக்கும்.பொருமல்,வாந்தி ,வாய்நீர், தலை சுழற்றல், சோபதாப,அசதி காணும்.வயிறு இரைந்து பாசிபோல் கழியும். விழி சுழலும்,நா உலரும்.                          
 ஊதுமாந்தகுணம்;குழந்தை உடல்,கண்,கால் வீங்கும்.நாவு புண்னாகும்;சுரங் காயும்; அன்னந்தண்ணீர் செல்லாது;கால்கை சோரும்;சுவாசம் மிகும். 

நீர்க்கணமாந்தகுணம்;இருமும்;மூக்கில் நீர்வடியும்;இடையில் சுரங்காயும்; வயிறு பொருமி இரைந்து பலவிதமாய்க் கழிச்சலும்,தலைப் புரட்டல், மயக்கம் காணும். உடம்பு,கண்,முகம் சோரும்.   

 சிங்கிமாந்தகுணம்/விஷமாந்தகுணம்;உந்தியிற்கனலேறி ஈரல் வெந்து புண்னாய் உடலாதி அந்தமும் தீப்போல் காயும்;சுவாசம் மேல்நோக்கி இளைக்கும்.குழந்தை திக்குமுக்காடி மயங்கும்.                     

நீர்க்கணத்தின்குணம்;சுரம்விட்டுவிட்டுக் காயும்;மிகுந்த தாகமொடு வியர்வை காணும்;  கண் குழியும்;நாக்கு,வாய் வெடித்துப் புண்ணாகி வரளும்; தண்ணீர் போல் கழியும்;தலை சுழலும்;வயிறு நோகும்;கைகால் சோர்ந்து குளிரும்;முகங் கால் புறங்கை மினுமினுப்பா யிருக்கும்.                                  

சுழிக்கணத்தின் குணம்; (அ)நளிர்சுரம் சுவாசங்காணும்;கண் பஞ்சடையும்; உச்சி குழியும்; நெஞ்செரியும்;உடல் நொந்து குழந்தை அயரும்;                      

  (ஆ)சுவாசம்,இருமல் காணும்;முகம்,மார்பு புடைத்துக் காணும்;வயிறு,ஈரல், நெஞ்சு , தொண்டை,நா வெந்து புண்ணாகும்;முலையுண்ணாது அலறி அழும்; கால்கை குளிரும்;  வயிறு பொருமிச் சுரங் காயும்;கண் சொருகும்;நாவு வரளும்.                     

 (இ)நெஞ்சிற் கபம் கட்டிஇருமல், இளைப்பு,மயக்கங்காணும்.மார்பு சுழியாய் வாங்கும்;  வாயில் நுரை தள்ளும்;வாந்தி பண்னும்;சுரங் காயும்;சுழியும்;முகம் மஞ்சள் போலிருக்கும்;தலை நோகும்.   

 சூலிக்கணத்தின்குணம்;நெஞ்சு,வாய்,தொண்டை,நாவு வெந்து புண்ணாகி இருமல், சுவாசம்,வயிற்றுப்பொருமல் காணும்,குழந்தை முலையுண்னாது.  முகம் நாறும்.   

மகாகணத்தின்குணம்;முகம்,புறங்கால்,புறங்கைமினுமினுக்கும்;விழி வெளுக்கும்; உடல் வெதும்பும்;நாவு,உதடு புண்ணாகும்;குழந்தை மயங்கும். 

பிரளிக்கணத்தின்குணம்;வயிறு பொருமி ஏப்பமுண்டாகும்;உடல் புண்போல் நொந்து, குழந்தை துடிதுடித்து ஏங்கி அழுது அலறும்;மாப்போல் மலங் கழியும்;  வேறு மலங்கட்டி வயிறுபொருமி அடிக்கடி முக்கும்;குடலைப்புரட்டி வலிக்கும்; முலையுண்ணாது நாஉலரும்;மேல்மூச்சு,இளைப்புக் காணும்; முத்துப்போல் மூக்கில் நீர் வடியும்;முகத்தில் மஞ்சள் மணக்கும்.           

 பிறக்கணத்தின்குணம்;வயிறு பொருமி பசுமையாயும்,தோய்த்ததயிர் போலும் கழியும்;தூக்கமிகும்;பாலருந்தி வாந்தி பண்ணும்;சுரங்காயும்;விழி சொருகும்; கைகால் சில் என்று இருக்கும்; தலையைப்புரட்டும்.                              

 வறட்கணத்தின்குணம்;சரீரமெல்லாம் சிவந்து நெஞ்சு துடிக்கும்;புகைந்து இருமும்; நா கறுக்கும்;வயிறு எரியும்.                                                  

 (ஆ)நாக்கில் மஞசளாயும்,வெண்மையாயும் முட்களும் அதன் நடுவில்3 வெடிப்புந் தோன்றும்; இருமல்,சளியுடன்மிகுந்த தூக்க மயக்க்ங்காணும்; முகம் மஞ்சட் பூத்திருக்கும்; உடல் வற்றும்.           

கொதிப்புக்கணத்தின்குணம்;நெஞ்சும்,விலாவும் கொதிக்கும்;நெற்றி வியற்கும்; பஞ்சுபோல் கண் வெளுக்கும்;இருமலும்,தலைவலியுங் காணும்; குரல் கம்மும்.    

அந்தக்கணத்தின்குணம்;மூளையிற் கனலேறி உடல் வெதும்பும்;நாஉலரும்; விழி வெளுக்கும்;முகம் மஞ்சள்நிறமாய் மினுக்கும்;                                   

  மந்தாரகணத்தின்குணம்; வயிறு ஊதி சுரம்,மயக்கம்,சுவாச காசங் காணும்.   

எரிகணத்தின்குணம்;உடலாதியந்தமும் எரியும்;வாய்வழி சுவாசம் போகும்;  
வாய்நீர் வடியும்;குழந்தை அலறிஅழும்;நித்திரை கொள்ளாது.                        

சீதகணம் என்ற ஆமகணத்தின் குணம்;சாமந்தோறும் உடல் வெதும்பி நாளுக்கு நாள் தேகம் வற்றும்;தாகமிகும்;பசிமந்திக்கும்;வயிறுபொருமி இரைந்து கழியும்; சுவாசமிகும்; கால்குளிரும்;கண்விழியாது அயரும்; திடுக்கிட்டெழுந்து சீறியழும்; மூக்குயரும்;புருவஞ்சுழிக்கும்.                 

நீராமக்கணத்தின்குணம்;தண்ணீரும்,சீதமுமாயுஞ் ,பச்சைமஞ்சள்போலும் கழியும்; கண்ணில் நீரும் பீளையும் வடியும்;மயக்கமும்,கடுப்புங் காணும். 

பேராமக்கணத்தின்குணம்;கைகால் குளிரும்;கண் வளையமாகும்;சுரங்காயும்; வாந்தி பண்னும்;திடுக்கிட்டேங்கும்;வயிறுபொருமிக்கழியும்;சோரும்; முலையுண்ணாது சீறி வெருவிப் பார்க்கும்.                                          

    முக்குக்கணத்தின்குணம்;குழந்தை அடிக்கடி வாந்தி பண்னும்; முலையுண்ணாது சோரும்; மலத்தில் விழும்;நாக்கு வேகும்;சுரம்,தலைவலி, நடுக்கம்,வாந்தி, நாவறட்சி, தாகங்காணும்; சந்துப்பொருந்துகள் உளையும்; முக்கிச் சீதமும்,மலமுமாய்க் கழியும்; ஆசனவாய் கடுத்துத் தீப்போலெரியும். அடித்தள்ளும்.மேனி கறுத்து வற்றும்;                            

மூலகணத்தின்குணம்;வாத பித்தமதிகரித்துக் குழந்தை சீத இரத்தமாய்க் கழியும்; ஆசனங் கடுத்துளையும்;காய்ச்சல்,வயிற்றிரைச்சல்,விடாத தலைவலி காணும்; முகங்கறுகும்; சிவக்கும்;அடித்தள்ளும். 

இரத்தகணத்தின்குணம்;குழந்தை அடிக்கடி இருமும்;கழியும்;இரத்தக்கடுப்பு காணும்; இடுப்புந்துடையும் உளையும்;சுரங்காயும்;தாகிக்கும்;நாடிஅயரும்; உடலெல்லாம் வாடும்; அன்னஞ் செல்லாது. 

 முக்கல்வயிற்றுக்கடுப்பின்குணம்;முக்கலுடன் அபானங்கடுத்துச் சீதரத்தமும் விழும்; தாது வற்றும்;தாகங் காணும்;அன்னஞ் செல்லாது.                                                
கரப்பான்  

 வாத,பித்த,சிலேத்துமகரப்பான்,செங்கரப்பான்,கருங்கரப்பான்,மண்டைக் கரப்பான், அரகரப்பான்,பொரிகரப்பான்,கிரந்திசூலைகரப்பான்,வாலைக்கரப்பான்,ஊதுகரப்பான், செவ்வாப்பு,கொள்ளிக்கரப்பான்,கட்டியொடுவீங்குகரப்பான், உதிர்கரப்பான், சட்டைதடிவெடிகரப்பான்,சிங்கமுகஎரிகரப்பான் என 18 வகை. 

விஷவாதகரப்பான்குணம்;உடல் வெதும்பும்;உளையும்;பரபரவென ஊறும்; கைகால், அரை,வயிறு வீங்கி வரண்டு வெடித்துப் புண்ணாகும்.         

 வாதகரப்பான்குணம்;உடல் கனத்து,வெளுத்து,பிரண்டைபோல் தடித்து காட்டும்;கண் சிவக்கும்.           

பித்தகரப்பான்குணம்;உடம்பில்தினவு,காய்ச்சல்,தலைவலி,வாந்தி காணும்;நீர் சிவந்து இறங்கும்;மலஞ்சிக்கும்.                            

 செங்கரப்பான்குணம்;தேகம் மெலியும்;சிவக்கும்;வெடித்துநீரோடும்;தலைவலி காணும்;  நீர்க்கட்டும்;மரணக்குறிகள் காணும்   

 கருங்கரப்பான்குணம்;உடல்வெதும்பும்;பசிய நரம்பு தோன்றி நிறம் பேதப்படும்; தேகம் பரபரத்து முறுக்கிக் குழந்தை துள்ளிஅழும்; முலையுண்ணாது.முகங்கால் ஊறும்.     

சூலைக்கரப்பான்குணம்; தேகமெல்லாம் வெடித்து முழங்கால், முழங்கையில் சூலை கட்டும்; 

ஊதுகரப்பான்குணம்;குளிர்காய்ச்சல் கழலைக்கட்டி காணும்; நாள்தோறும் பூதம் போல் உடல் வீங்கும்;புண்ணாகும்;மூக்கரிக்கும்.            

பாலகரப்பான்குணம்;தேகம் மெலியும்;சந்து கடுகடுக்கும்;கண்டம் வெடித்துப் புண்ணாகி கடிவிஷம் போல் நீர் பாய்ந்து நாறும்.           

 அரிகரப்பான்குணம்;யோனி,லிங்க ஸ்தானங்களில் புற்றுண்டாகி புண்பட்டு ஆறாது, தசையை அரித்து உருவை அழிக்கும்.                  

 வறட்சிக்கரப்பான்குணம்;உச்சி முதல் உள்ளங்கால்வரையில் சிறு சிரங்கு மிகுந்தும், வெடித்துத் தினவுஞ்,சொறியும் காணும்;நித்திரை வராது.                                                                                                                                    
  சுரம்       

    ஆமசுரம்,இரத்தசுரம்,அன்பனாதிசுரம்,மாங்கிஷசுரம்,அஸ்திசுரம்,வாதபித்த, சிலேத்ம சுரம்,மாந்தசுரம்,அட்சுரம்,மகாதோஷமாந்தசுரம்,இரத்தகணசுரம், கணகாய்ச்சல், குளிர்சுரம்,மாறல்சுரம்,பழஞ்சுரம்,சீதசுரம்,அதிசாரசுரம்,வாந்தி சுரம்  என பலவகை காய்ச்சல் வரும்.                                                                                         அறிகுறிகள்                                                    

கணக்காய்ச்சலின் குணம்;உந்திமுதல் ஈரல் வரை புண்னாகிச் சுரங்காயும்; திகைத்து மயக்கமுண்டாகும்.  

 உடம்புநோய்க்காய்ச்சலின்குணம்;உடம்புநொந்துகாயும்;குழந்தை உதட்டைக் கடிக்கும்; முஷ்டியை உறக்கப் பிடிக்கும்;நட்ட கண்னை விழிக்கும்; பதட்டமுடன் கொங்கையைப் பிடித்திழுக்கும்;               

 உட்காய்ச்சலின்குணம்;உட்சுரம் காயும்;அபானம் எரியும்;மயக்கங் காணும்; மலசலந் தீயும்.                                           

 ஆமசுரத்தின்குணம்;சாமந்தோறும் மட்டாய் சுரங் காயும்;குழந்தை சீறியழும்; பாலுண்ணாது உடல் கறுக்கும்;இளைக்கும்;நடுங்கும்;தாகம்,தலைவலி காணும்; கைகால் குளிர்ந்திருக்கும்.                   

 இரத்தசுரத்தின்குணம்;வயிற்றுவலி,தாகம்,தலைசுற்றல் காணும்;சுரம் விட்டுவிட்டுக் காயும்;கண் தாழும்;நாஉலரும்;கைகால் சோர்ந்து தண்ணீர் போல் இருக்கும்.   

அன்பனாதிசுரத்தின்குணம்;வியர்க்கும்;வெதுப்பும்;கண்சிவக்கும்;பலகாலும் வெந்நீர் வேண்டும்;பார்க்க பயமாயிருக்கென பதறிஅலறி அழும்;வயிறு சிக்கிவிடும்; தெருவிற் புறப்பட்டோடும்.                             

 மாங்கிஷசுரத்தின்குணம்;அதிகமாய்ச் சுரங்காயும்;உடல் நடுங்கும்;மூச்சு மெத்த ஓடும்; உதிரம் வற்றி உடல் வெளுத்துருகிக் கருகும்;மூர்ச்சை காணும்; உரோமங்கள் சிலிர்க்கும்.   

 அஸ்திசுரத்தின்குணம்;அனல்போல்வெதுப்பும்;முலையுண்ணாது;புத்தி கலங்கும்;உள் உளையும்;வெள்ளோக்காலமிகும்;சத்திக்கும்;சாமத்திற் சுரங் காயும்;உடல் வற்றி ஊதும்;இருமல்,சோகை,கடுப்புக் காணும்.                                            

                     காய்ச்சலுக்குப் பத்தியம்      

பால்,நெய்,இளநீர்,தயிர்,புளிப்பு,கடுகு,பச்சைமீன்,இறைச்சி,கோழி,தேங்காய், மாங்காய், பருப்பு,முட்டை,சந்தனம்,புனுகு,பயறு,அவல்பொரி,கடலை,வாழை, மஞ்சள்,பழங்கறி, பழஞ்சோறு,புணர்ச்சி இவைகளை அனுசரித்தால் சன்னி தோன்றி மரணம் சம்பவிக்கும்.                                                                     

                        சன்னி      

மாந்தசன்னிகுணம்;சுரம்,மயக்கம்,தாகங் கானும்;நாவு முள்ளுபோல் இருக்கும்;கண் தாழும்; புத்தி கலங்கும்                        .                

ஆமசன்னிகுணம்;குழந்தை முலையுண்னாது அழும்;கண் விழியாது மயங்கும்; முகம் வேறுபடும்;பற்பல வலிப்புண்டாகும்;குரல் கம்மும்; மலங்கட்டும்; சுரங்காயும்; தாகிக்கும்; வயிறூதும்;நெற்றி சுழிக்கும்;மயக்கங் காணும்.                                             
 கோராமசன்னிகுனம்;வாயுமிகும்;உடம்பு தீப்போல் காயும்;சதை குலுங்கி வலிக்கும்; விழி,கால்கைகள் பதைக்கும்;வாதநீர் தாளில் இறங்கும். 

தாந்திரீகசன்னிகுணம்;குழந்தை முலையுண்ணாது;காய்ச்சல் காயும்;தாகங் காணும்; மேனி பதைக்கும்;அரை குளிர்ந்திருக்கும்;மூர்ச்சை காணும். 

தீராதசன்னிகுணம்;உடல் மஞ்சனிக்கும்;முலையுண்ணாது;பெருமூச்சு விடும்;கண், நாக்கு,  
 புருவம்,கைகால் கோண வலிக்கும்;விழி மேல் நோக்கும்.                     

                                                          வலிப்பு                                                

 தின் பண்டங்களினால் மாந்தம் பற்றிப் பலவித வலிப்பு,மயக்கம்,இசிவு, பற்கடி, பற்கிட்டல் காணும்.அன்னந் தண்ணீர் செல்லாது.                                                            
 கழிச்சல்     

சுழிமாந்தக்கழிச்சல்,பாற்கழிச்சல்,வறட்கழிச்சல்,வாந்திகழிச்சல்,கணக்கழிச்சல்,மாந்தக்கழிச்சல்,ஆமகழிச்சல்,சலக்கழிச்சல்,வெதுப்புக்கழிச்சல், இரத்தக்கழிச்சல்,   அதிசாரக் கழிச்சல்,பொருமல்கழிச்சல்,சீஇரத்தக்கடுப்பு,பச்சிலைக் கழிச்சல், விடாக்கழிச்சல் என பலவகையான கழிச்சல் பாலருக்கு காணும்.   

மாந்தக்கழிச்சலின்குணம்;வாந்தி,பிராந்தி,மூர்ச்சை,மேனியில் வெதுப்பு,கால் கையிற் குளிர்ச்சி, வலி காணும்;பலவிதமாய் மலங் கழியும்;வாயுலரும்; குரல் கம்மும்.                                      

கணக்கழிச்சலின்குணம்;சீதமாயும்,மலமாயும்,கெட்டபாலும் கரித்தண்ணீரும் போல் பிரவிர்த்தியாகும்;கைகால் குளிரும்;காதடைக்கும்;உடல் வெதும்பும். 

ஆமக்கழிச்சலின்குணம்;பாலெதிரெடுக்கும்;வயிறு இரையும்;இரத்தம் விழும்; சுரங்காயும்;குரல்கம்மும்;கால்கை குளிர்ந்திருக்கும்.               

                                     அட்சரங்கள்    

         சூலி,நீலி,சோதி,வீழி,குண்டி,கபாலி,குமரி, உள் என அட்சரங்கள் 8 வகை. 

பொதுக்குணம்;உடல் குளிரும்;தலை வலிக்கும்;தாது மிகத் துடித்து நிற்கும்; குலையும்,நாவும்,தொண்டையும் வெந்து புண்ணாகும்;நாவு வெளுக்கும்;நாசியில் நீர் வடியும்.                                                                          
                   அறிகுறிகள்                                  

சூலி அட்சரத்தின்குணம்;சுரங்காயும்;இடை கடிக்கும்;நாவு வெளுத்து வெந்து புண்னாகி வெள்ளாவிபோல் நாறும்;வாய்நீர் மிக ஒழுகும்;வாந்தி , வெள்ளோக் காலங் காணும்        
நீலிஅட்சரத்தின்குணம்;உடல் குளிரும்;தலைவலிக்கும்;சுரங்காயும்;வாய் கசக்கும்; வரளும்;நாவு வெந்து மாப்போலிருக்கும்;நெஞ்சு கரிக்கும்.   

சோதிஅட்சரத்தின்குணம்;முதுகு,வயிறு எரியும்;தலையிடிக்கும்;சுரங்காயும்;  கணைக்கால் நோகும்;நாக்கும்,பல்லும் அழுக்குநிறமாயிருக்கும்;வயிறு கழியும்; வாந்தி பண்ணும்;          

வீழிஅட்சரத்தின்குணம்;ஈரல் நொந்து காய்ச்சல்,மயக்க ம்,குளிர்,தலைவலி, தாகம் காணும்;உடல் கறுக்கும். 

 குண்டியட்சரத்தின்குணம்;(அ) உடல்நொந்துகடுக்கும்;வாய் கூசும்;நாவு வெந்து சிவக்கும்;வயிறு கழியும்;நெஞ்சு கரித்து வாந்தி பண்ணும்;இருமல், தாகம் மிகும்; ஈரல் விலா நோகும். 
(ஆ)அரைக்குமேல் சுரங்காயும்;மீன்போல் தேகம் வெளுக்கும்;மஞ்சள் நிறமாய் நீர் விழும்; ஆசனவாயிற் சுருக்கென்று வலிக்கும்; உடம்பிளைத்துக் கடுப்பாகும்; தொண்டை வலிக்கும்.                  

கபாலியட்சரத்தின்குணம்;உடல்கனக்கும்;வலிப்பெடுக்கும்;காய்ச்சல்காயும்; நெஞ்சும் தலையும் வலிக்கும்;நாவு,குடல்,தொண்டை,ஈரல் புண்ணாகும்; பேதி கானும்.            

குமரியட்சரத்தின்குணம்;நாவு கசக்கும்,தடிக்கும்,கூசும்;அழன்று வெடித்து விதனமுறும்; சுரங்காயும்;இரத்தமாய் வயிறு போகும்;இரு கண்னும் நொந்து விடும்;வாந்தி எடுக்கும்; உண்ணாக்கு வளரும்;பல் பசுமையாயிருக்கும்; மூக்கில் இரத்தம் வடியும்.                                           
உள்அட்சரத்தின்குணம்;மூக்கில் நீர் வடியும்;முகமும்,நாக்கும் வெளுக்கும் ; நாக்கில் ஆவி தோன்றும்;தூக்கம்,சுரம்,தாகம் மிகுந்து காணும்.                                      

                  சோகை                   

 வாதசோகைகுணம்;சோகை அனுகும்போது சுரங் காயும்;தாகமதிகப்படும்; சிரசில் நீர் கொண்டு தலைவலி,களைப்பு,சோபம்,கைகால் அசதி காணும்; தேகம் துடிக்கும்; உதடு வெளுத்து வெடிக்கும்;முகம் வேறுபடும்;பசி மந்திக்கும்; மூலத்திற் கடுப்புக் காணும்.                                        

 பித்தசோகைகாமாலைக்குணம்;பித்தநீர் அதிகரித்துச் சரீரம் முழுதும், கண்ணும் வெளுக்கும்.களைப்பு,அசதி காணும்.                    

 ஊதுகாமாலைக்குணம்;முகங் கால் அதைக்கும்;பசித்தவுடன் மந்திக்கும்;சுரம்  காதடைப்பு,இளைப்பு காணும்.நாவு புண்ணாகும்;கைகால் சோரும். 

மஞ்சட்காமாலைகுணம்;உடலில் இரத்தம் வற்றி,வெதுப்பிக் குளுப்பை பாய்ந்து, முகங்,கால் வீங்கும்;மலஞ்சிக்கும்;மஞ்சள் போல் நீர் இறங்கும்;கண் வெளுத்திருக்கும்.                             

 வறட்காமாலைக்குணம்;கண் பசத்திருக்கும்;கால் ஓயும்;உடம்பு உலரும்; தாகமிகும்.                                                                                       பற்பல வியாதிகள் 

  செவிநோயின்குணம்;குழந்தைகண்ணில் பீளை சாடும்;கையினாற் தலையைத் தேய்க்கும்குரல் தாழும்;தேகம் நொந்து வாடும்;புரண்டழும்.          

நாமுள்தோஷகுணம்;குழந்தை முலையுண்ணாது சீறி அழும்;அனல்போல் சுரம் காயும்;இருமல்,கபம்,தலைவலி,பொறிகலக்கம்,தலைநடுக்கம்,வாந்தி, வாயில் நா முள் தோன்றும்;இரு விலாவும் இழுக்கும்;கண்மிரள விழித்து .நீர்வடியும்;வேப்பம்பூ போல் கழியும.                                          

 கெந்ததாளிக்குணம்;வாயுந் தொண்டையும் புண்ணாகி நாறும்;உடல் வெதும்பும்; நீர் வெந்நீர் போலிருக்கும்;மலந்தீயும்

மசரைப்புழுநோயின்குணம்;(அ)மலம் சீதமலமாயும்,தண்ணீர்போலும்,கறுத்த நிறமாயும், கத்தரிக்காய் கசக்கிப் பிழிந்த சாறு போலும் பிறவிர்த்தியாகும். 
(ஆ)மலங்கருகி நின்று சூதவாயிற் குத்திக் குமுறிக் குருதி விழும்; மலத்துடன் சீதஞ் சிதறிக் காணும்;உதப்பைத் தள்ளும்;கீழ் வயிறுளைந்து நோகும்.                                                                

                              வைசூரி  

  பனைமுகரி,வரகுதிரி,பாலம்மை,கொள்ளம்மை,கல்லுதிரி,கடும்மை, மொழுக்கன், உப்புத்திரி,கரும்பனசை,வெந்தயம்,பாசிப்பயரம்மை,விச்சிரிப்பன்,நீர்க்குளுவன், தவளை என வைசூரி 14 வகை.                                                              

        காரணம்                                                                              

 சரீரத்திற் வெட்டை மிஞ்சி,மூலத்திற் சூடு கொண்டு,மூளையில் அதிக கொதிப்புண்டாகி அஸ்தியிற்கனலேறி, மேற்படி ரோகம் சம்பவிக்கிறது. மேற்படி வியாதி கண்டபேரைக் கண்டு பயந்து இருதயம் கலங்கினாலும் இது சம்பவிக்கும் என்று கூறப்படுகிறது.        

பனைமுகரிக்குணம்;காய்ச்சல் மிதமாய்க் காய்ந்து உடல் நடுங்கும்.கண் சிவக்கும்; கண்டதுண்டம் வீங்கும்;பெரும்பாடு,பிதற்றல்,சன்னிகள் தோன்றும். 

பாலம்மைக்குணம்; அகோரமாய்க் காய்ச்சலடிக்கும்; 3நாளில் சிரசிற் குரு தோன்றி உடம்பு கடுக்கும்; 7ல் நீர்கோர்த்து 9ல் இறங்கும்; 15ல் ஆரோக்கிய ஸ்நானஞ் செய்யவும்.  

வரகுதிரிக்குணம்;காய்ச்சலதிகமாய்க்காய்ந்து 3ம் நாளில் சிரசிற் குரு தோன்றும்,7ல் நீர் கட்டி,11ம் நாளிறங்கும். நீர்த் தாரையிற் இரத்தம் காணும் 

கொள்ளம்மைக்குணம்;காய்ச்சல்,பிதற்றல்,சன்னி,வலிப்புத் தோன்றி 3ம் நாளிற் குரு தோன்றி, 13ம் நாளிறங்கும்.                   

கல்லுதிரிக்குணம்;அகோரக்காய்ச்சல்,பேதி,வாந்தி கண்டு,3ம் நாளிற் சிரசிற் குரு தோன்றி, 7ம் நாளிற் சங்கங்கனி போல்நீர் கட்டி,10ம் நாளிறங்கும்;11ம் நாள் ஸ்நானஞ் செய்விக்கவும்.     

கடும்மைக்குணம்;காய்ச்சலடித்த3ம்நாலிற் சிரசில் கடுகு போல் குரு தோன்றி உடம்பெல்லாம் அதிகமாய் வலிக்கும்;குரல் கம்மும்;பேதி காணும். 

மொழுக்கன்குணம்;காய்ச்சல் மட்டமாய்க் காயும்;இடுப்பு வழங்காது;சரீரம் வீங்கும்; காந்தல் காணும்;7ல்குரு தோன்றும்.மருந்து கொள்ள குணமாகும். 

உப்புத்திரிக்குணம்;காய்ச்சல்கண்டு3 நாளில் சிரசில் குரு தோன்றி ,உடம்பெல்லாம் உப்புப் போலிருக்கும்;5ல் நீர்கட்டி,7ம்நாள் இறங்கும்;11ல் ஸ்நானஞ் செய்வித்து, மருந்து கொடுக்கவும்.                   

கரும்பனசைக்குணம்;காய்ச்சலடித்து 4ம் நாளில் சிரசிற் குரு தோன்றும்; உடம்பெல்லாம் குத்தும்,கருக்கும்,வசூரி உள்ளே வாங்கும்,பேதி,மூர்ச்சை காணும்; மலங்கட்டினால் 13ம் நாளிறங்கும்;. உடம்பெலாம் விரிந்து இரணமாகி கிருமியுண்டாகும்;பிரக்ஞையற்று சுவாசம் மேல் நோக்கும்; 21நாட்சென்று ஸ்நானஞ் செய்து மருந்து கொடுக்கவும்;இந்த ரோகம் கண்டவர்கள் பிழைப்பது அரிது.                                    

வெந்தயம்மைக்குணம்;காய்ச்சலடிது,3ம்நாளிற் குரு தோன்றி,7ல் நீர்கட்டி,9ல் இறங்கும்.15ல் ஆரோக்கியமாய் ஸ்நானஞ் செய்விக்கவும்.   

 பாசிப்பயற்றம்மைக்குணம்;காய்ச்சலும் பிதற்றலுமுண்டாகி,2ம்நாள் சிரசிற் குரு தோன்றும்; 7ல் நீர்கட்டி,9ல்ஸ்நானஞ் செய்வித்து,தேகம் பலக்க நீர்மோர் அன்னம் கொடுக்கவும்.                         

விச்சிருப்பன்குணம்;காய்ச்சலடிக்கும்;கண்சிவக்கும்;வாந்தி,பேதி காணும்; 3ம்நாள் சிரசிற் தோன்றி தேகம் எல்லாம் உமி போல் வாரியிட்டு மறையும்; 7ம்நாள் ஸ்நானஞ் செய்விக்கவும்; வயிற்றுளவு காணும்.
 

நீர்குளுவன்குணம்;காய்ச்சலடித்து 3ம்நாள் சங்கம்பழம் போல் தோன்றி,7ம் நாள் இறங்கும்;9ம்நாள் ஸ்நானஞ்செய்து,தேகத்தைக் குளிர்ச்சி செய்யவும். 

தவளைக்குணம்;காய்ச்சல் கண்டு நடக்கவொட்டாது;குலை வலிக்கும்; அன்னஞ் செல்லாது; 4ல் குரு தோன்றி,9ல் இறங்கும்.11ல்ஸ்நானஞ் செய்யவும்.                                            


மறுமுள்ளின்குணம்;வசூரி இறங்குமுன் ஸ்நானஞ் செய்வித்தால் சுரங் காய்ந்து, மறுமுள் புடைத்து,இரணம் காணும்.                                                           

பத்தியத்திற்கு  

 எலுமிச்சம்பழம்,பழம்புளி,நெல்லிக்காய்,பனங்கற்கண்டு,பாசிப்பயறு,வாழைக் கச்சல், அத்திப்பிஞ்சு,நீர்மோர்,ஈருள்ளி ஆகும்.        

மாங்காய்,தேங்காய்,இலுப்பைஎண்ணை,ந.எண்ணை,சோற்றிலி,நெல்லாவி,கொட்டைமுத்தாவி,தாளிதவாடை ஆகா.இந்த வாடைகள் தேகத்தில் பட்டால் கருஞ்சூலை, கடுப்பு,கைகால் முடக்கல் சம்பவிக்கும்.                             

 வைசூரி இறங்கியபின் செய்ய வேண்டியவை. 

பருத்திப்பிஞ்சு,அத்திப்பிஞ்சு,சாதிக்காய்,சீரகம் சமனாய் மோரிலரைத்து உள்ளுக்குக் கொடுக்கவும்.                           

(1)வேப்பிலையும்மஞ்சளும் அறுகும் சமனாயரைத்து உச்சி முதல் பாதம் வரைதேய்த்து குளிர்ந்தநீரில் ஒருநாள் விட்டு ஒருநாளாக 3நாள் ஸ்நானஞ் செய்விக்கவும்.     

(2)வெப்பிலையும்,மஞ்சளும் அரைத்து புண்ணில்பூசியபின் தயிரைத் தேய்த்து முன்புபோல் 3நாள் குளிப்பாட்டவும். 
 
(3)பின் அவரையிலையை மோரிலரைத்து சிரசிலும்  உடலிலும் தேய்த்து 3நாள் குளிர்ந்தநீரில்

(4)ஆமனக்கெண்ணெய் தேய்த்து உசிலைபொடி கொண்டு ஸ்நானஞ் செய்வித்து மோர் நீரும் அன்னமும் ஈருள்ளியும் உண்ணக்கொடுக்க தேகங் குளிர்ந்து பலக்கும்.     

இவர்களுக்கு உறுப்புகள் பலங் கெட்டிருப்பதால் 6மாதம்வரை காரமான எதுவும் கொடுக்கக் கூடாது. கொடுத்தால் வியாதியை உண்டாக்கும்
  1.    கோரோசனையை முலைப்பாலில் உரைத்துக் கொடுக்க செங்கிரந்தி தீரும்.    
  2.  கற்பூரவல்லி இலை,குன்றிமனி இலை,ஈருள்ளி சமனாய் தட்டி சாறு பிழிந்து முரித்துக் கொடுக்க செங்கிரந்தி தீரும்
  3.  முருங்கைஇலைசாற்றை முரித்துக் கொடுக்க செங்கிரந்தி தீரும். 
  4. செம்முள்ளி இலையை காய்ச்சிக் குளிப்பாட்ட செங்கிரந்தி தீரும். 
  5.  ஆமனக்கெண்ணை,தேங்காய்ப்பால்,செம்பருத்திச்சாறு வகைக்கு 1லி, காய்ச்சி வடித்து,அதில் சுக்கு,கிராம்பு,ஏலம்,திப்பிலி,மிளகு வகைக்கு 2 கிராம் பொடித்துப் போட்டு,குழந்தைகட்கு கொடுக்க கிரந்தி12,சூலை18 தீரும்.   
  6.   பிள்ளை சீறி அழுதால்,விக்கலெடுத்தால், வயிறு பொருமினால் திப்பிலியும், சிறுதேக்கும் பொடித்து அல்லது திப்பிலியும், கடுகு ரோகிணியும் பொடித்து தேன் அல்லது ஆவின்நெய்யில் மத்தித்து கொங்கையிற்பூசி பால்கொடுக் தீரும்
  7.   பிள்ளைவயிறு வீங்கினால் அதிமதுரத்தை காடியிலரைத்து வயிற்றிற்பூச வீக்கந் தீரும்.   
  8.  கஸ்தூரியை வெற்றிலைச்சாற்றில் கொடுத்தாலும் அல்லது கஸ்தூரி, திப்பிலி சமன் வெற்ரிலைச்சாற்றில் கொடுத்தாலும் குழந்தைகட்கு கழுத்து வீங்கி, முழங்கால், முழங்கை குளிர்ந்து வயிற்றில் வலி கானல் தீரும். 
  9. அதிமதுரத்தை முலைப்பாலிலரைத்து முலைக்காம்பிற் பூசி பால் புகட்ட எதிரெடுக்காமல் உண்ணும்.         
  10.  மணித்தக்காளிவேர்,பிச்சிவேர்,ஈருள்ளி நறுக்கி சிற்றாமணக்கெண்ணை யில் போட்டு ரவியில்(வெயில்) வைத்து உள்ளுக்கும் கொடுத்து, உச்சியிலும் தேய்க்க பஷி தோஷம் தீரும். 
  11.  சீரகம்,ஈருள்ளி,வரட்பூலாவேர்,சமன் கசாயம் செய்துகொடுக்க பறவை தோஷம் தீரும்                                                             
  12.  வில்வ இலையும்,சீரகமும் கசாயம் செய்து கொடுத்து,வில்வம் அல்லது நிலவிளா இலையை அரைத்துக் குளிப்பாட்ட எட்சி தோஷம் தீரும்   
  13.  அதிமதுரம்,முத்தக்காசு,அதிவிடையம்,கடுக்காய்,வசம்பு,தேவதாரு, மஞ்சள் சமனாய் பொடுதலைச்சாற்றிலரைத்து, உருண்டைசெய்து, முலைப் பாலில் கொடுக்க வீங்குபுள்ளிந்தோஷம் தீரும்    
  14. அதிமதுரம்,முத்தக்காசு,அதிவிடையம்,கடுக்காய்,வசம்பு,தேவதாரம், மஞ்சள் சமனாய் பொடுதலைச்சாற்றிலரைத்து,குன்றிபோல் உருண்டை செய்து, முலைப்பாலில் அல்லது தேனில்  கொடுக்க சகலதோஷமும் தீரும்.
15.    மஞ்சள்,வசம்பு,ஏலம்,ஓமம்,வேப்பீர்க்கு,குட்டிவிளா, நறுக்கி வெதுப்பி கசாயம் செய்து,அதில் கோரோசனையை உரைத்து உள்ளுக்குக் கொடுத்து, மேற்படி மருந்துகளை அரைத்து மேலேயும் பூசி குளிப்பாட்ட தூங்குபுள்ளின் தோஷம் தீரும்.                                               
16.    சின்னி,வசம்பு,குட்டிவிளா அரைத்து மேலேதேய்த்து முழுக்காட்டி, அவற்றை துணியில் முடிந்து,கழுத்திலுங்,கையிலும் கட்ட விளக்கொளிக்கன் தோஷம் தீரும்.                   
17.    கற்றாழஞ்சோற்றில் கடுக்காய்பொடி தூவி பிசைந்து வைக்க சேகரமாகும் நீரில் திப்பிலியை வறுத்துப் பொடித்து தூவிக் கொடுக்க வெங்கண்புள்ளின் தோஷம் தீரும்.                                                
18.    கோரோசனை,அதிமதுரம்,  திப்பிலி முலைப்பாலில் அரைத்துஒரு சங்கு கொடுக்க கருடக்கண் புள்ளிந்தோஷம் நீங்கும். 
19.    சின்னி,குட்டிவிளா,நொச்சி,சீந்தில்,வேம்பு,வசம்பு,உள்ளி அரைத்து மேனி முழுதும் பூசி,சிறு பொட்டணமாய்க் கட்டி கழுத்திலும், காலிலுங் கட்ட அந்திபுள்ளின் தோஷம் நீங்கும்.                                          
20.    விஷ்ணுகிரந்தி,சீரகம் கூட்டி கசாயம் செய்துகொடுக்க,நீர்புள்ளின் தோஷம் நீங்கும்.                 
21.    ஓரிதழ்தாமரை,வெந்தயம்,விடத்தலைவேர்,சுக்கு,வால்மிளகு, சமனாய் கசாயம் செய்து கொடுக்க புள்ளிந்தோஷம் தீரும்.              
22.    மயிரோசனை,திரிகடுகு,சீரகம் கசாயம் கொடுக்க முட்டுதோஷம் தீரும்.
23.    குட்டிவிளா,வேம்பு,சோம்பு,மஞ்சள்,வசம்பு,சுக்கு அரைத்து தாய், சேய்க்குத் தேய்த்து, வாகையிலையை காய்ச்சிய நீரில் நீராட்டி, ஆவி நெய் அரை கிலோ, ,எண்ணெய் கால் கிலோ, நன்னாரி, தண்ணீர் விட்டான், கரந்தை, பொண்ணாங்கண்னி வகைக்கு 40கிராம், ஏலரிசி, சீரகம் வகைக்கு15கிராம், பால் விட்டரைத்து பதமாய் காய்ச்சி, சிறு கரண்டி வீதம் கொடுக்க சகலதோஷமும் தீரும். இச்சாபத்தியம்,                       
24.    சின்னி,விளா,நொச்சி,சீந்தில்,வேம்பு,உள்ளி. இவற்றையரைத்துமேலில் தேய்த்து, தட்டி துணியில் முடிந்து கால்கையிற் கட்டி வைக்க சகல தோஷமும் தீரும்.                
25.    நொச்சி,பொடுதலை,நுணா,உத்தாமணி, வகைக்கு1பிடி வெதுப்பி சாறு பிழிந்து கொடுக்க வாதபித்தசிலேத்தும மாந்தம் தீரும்.
26.    வெற்றிலைக்காம்பு,வசம்பு,பூண்டு,திப்பிலி சமன் வெதுப்பி,வெந்நீரி லரைத்துக் கொடுக்க திரிதோஷ மாந்தம் தீரும்.                   
27.    ஓமம்,வெள்ளுள்ளி,மிளகு சீலையில்முடிந்து,1படி நீரில் வற்றக் காய்ச்சிக் கொடுக்க திரிதோஷ மாந்தம் தீரும்.
28.    நொச்சி,நுணா,பொடுதலை,வேம்பு,புளி,மா,வேலிப்பருத்தி இவற்றின் ஈர்க்கும், ஓமம், உள்ளி,திப்பிலியும் இடித்து 1படி நீரில்(8ல்1) வற்றக் காய்ச்சி சங்களவு கொடுக்க ஊதுமாந்தம்,போர்மாந்தம், செரியா மாந்தம்,சத்திமாந்தம் , கட்டுமாந்தம் தீரும்.இச்சாபத்தியம்.                                            
29.    வேலிப்பருத்தி இலையை வதக்கியசாறில் சீரகமும்,கடுகுரோகணியும் சமனாய் முலைப்பாலிலரைத்து கலக்கிச் சங்களவு கொடுக்க ஊதுமாந்தம், மயக்கம்,வெப்பு தீரும்.                                                                
30.    ஓமத்தை வறுத்துப் பொடித்து,வெந்நீர் அல்லது முலைப்பாலில் கொடுக்க போர்மாந்தம் தீரும்.                     
31.    பொடுதலைக்காய்,இந்துப்பு,வசம்பு,பூண்டு சமனாய் வெதுப்பி,கசாயம் செய்து கொடுக்க பால்மாந்தம் தீரும்.                             
32.    வேலிப்பருத்தியிலையை வதக்கிப் பிழிந்ததில்,மிளகு,வசம்பு,பூண்டு வெதுப்பி அரைத்துக் கலக்கி 1துளி நெய் விட்டுக் கொடுக்க செரியா மாந்தம் தீரும்.                                    
33.    இஞ்சியும்,பெருந்தும்பையும் தட்டி, எருமை வெண்ணையில் வேக வைத்துக் கொடுக்க செரியாமாந்தம் தீரும்.                                                 
34.    வெள்ளைக்காக்கணம்வேர் பாக்களவரைத்து முலைப்பாலில் கொடுக்க துலைமாந்தம் தீரும்.              
35.    துத்தியிலை,வெந்தயம்,ஆடாதொடை,நுணாயீர்க்கு கசாயம் செய்து கொள்ள அட்சரமாந்தம் தீரும்.                                                              
36.    ஈருள்ளியும்,முடக்கற்றானையும் வெதுப்பிப் பிழிந்த சாறு கொடுக்க தோஷமாந்தம் தீரும்.                                                                          
37.    வேலிப்பருத்திஇலையை வெதுப்பி சாறுபிழிந்ததில் ஓமம்,வசம்பு, சமனாய் வறுத்து பொடித்துப்போட்டு 8ல் 1ன்றாய்க் காய்ச்சிக் கொடுக்க மாந்தம் தீரும்.                                                     
38.    சிறுதேக்கு, வாய்விளங்கம்,வால்மிளகு,கடுகுரோகிணி,சுக்கு, ஏலம், திப்பிலி, இலவங்கம்,தான்றி,தக்கோலம்,போஸ்தக்காய் வகைக்கு 10 கிராம் இடித்து 8ல்1ன்றாய்க் காய்ச்சி 3நாள் கொடுக்க கிரானி மாந்தம், சுரக்கட்டி,இசிவு. விஷ தோஷங்கள்,மாந்தம்,சோகை, காமாலை, சுரம், கோழை,கொட்டாவி, பொருமல், தும்மல், பித்தகணம், பாண்டு தீரும். இச்சாபத்தியம்.   
39.    சீரகம்,வில்வபத்திரி,வெங்காயம்,வெந்தயம்,சமனாய் கசாயம் செய்து கொடுக்க வாத,பித்த,சிலேத்ம கணம் தீரும்.இச்சாபத்தியம்.
40.    வில்வம்,அவுரி,ஈருள்ளி,கடுக்காய் இவற்றை தட்டி விளக்கெண்ணெ யில் காய்ச்சிக் கொடுக்க வாத,பித்த,சிலேத்ம கணம் தீரும்.
41.    நொச்சி,துளசி,முசுமுசுக்கை வகைக்கொரு பிடி இலையை பிட்டவித்துச் சாறுபிழிந்து ஒருசங்கு கொடுக்க கணமாந்தம் தீரும்.
42.    வெங்காயம்,வசம்பு,உசிலம்பட்டை சமனாய்த் தட்டி கசாயம் செய்து கொடுக்க சுழிக்கணம் தீரும்.                                                          
43.    ஆவின்வெண்ணை எலுமிச்சையளவு உருக்கியதில்,மணத்தக்காளிக் கொட்டைப் பாக்களவு அரைத்துப்போட்டு பதமாய் காய்ச்சி 5நாள் கொடுக்க நீராமக்கணம் தீரும்.                                         
44.    தும்பை,கொழிஞ்சி,பொடுதலை இவற்றின் வேர்,திப்பிலி,ஓமம்,இந்துப்பு சமனாய் படி ஆவின் மோரிலரைத்துக் கரைத்துக் காய்ச்சிக் கொடுக்க பேராமக்கணம் தீரும்.                                        
45.    7தடவை கழுவின கற்றாழஞ்சோறு,வெந்தயம்,எலுமிச்சைச்சாறு ஒன்றாய்க் கலந்து காய்ச்சிக் கொடுக்க முக்குக் கணம் தீரும்.                      
46.    பழம்பாசி சமூலம் வெள்ளாட்டுப்பாலில் காய்ச்சி வடித்து,அதில் ஒரு எலுமிச்சம்பழம் பிழிந்து கொடுக்க மூலகணம் தீரும்.   
47.    சாஸ்திரபேதி.கோஷ்டம்,ஏலம்,இலவங்கம்,சந்தனம்,கடுகுரோகிணி, இலுப்பைப்பூ, நன்னாரி,விலாமிச்சு,வெட்டிவேர்,திப்பிலி,அதிமதுரம், முத்தகாசு,கொடிமுந்திரிப்பழம்,பேரீச்சம்பழம் சமனாய் கரிப்பான் சாற்றிலரைத்து கடலையளவு உருண்டை செய்து முலைப்பால் அல்லது வெந்நீரில் கொடுக்க அஷ்டகணங்கள்,மாந்தசுரம் தீரும்.                                                                                                                                                          
48.    7தரம் கழுவின கற்றாழஞ்சோறு ஒரு தேங்காயளவு,வெந்தயம் 10 கிராம், ஈருள்ளி 40கிராம் 1படி விளக்கெண்னயிற் காய்ச்சி 1கரண்டி கொடுத்துவர 18வகைக்கணம், வெட்டைசுரந் தீரும்.                                                                                 
49.    மாதுளைசமூலம்,சீந்தில் அரைத்து வகைக்கு 30கிராம்,ஆவின் வெண்ணை 120கிராம் ஜாதிக்காய்,ஜாதிபத்திரி,ஏலம் வகைக்கு5கிராம் பொடித்துப் போட்டு பதமாய்க் காய்ச்சி வடித்து 1கரண்டி கொடுத்துவர சகல கணம்,தோஷம், வயிற்றிரைச்சல்,கழிச்சல் தீரும்.இச்சாபத்தியம்.
50.    நீர்முள்ளி,ஈருள்ளி,திரிபலா,சங்கம்வேர் சமனாய் படி மோரில் அரைகால் படியாய் காய்ச்சி இரும்பு பாத்திரத்தில் ஊற்றி வைத்து 1-2 சங்கு கொடுக்க தீராத கணமுந் தீரும்.           
51.    மணித்தக்காளி1பிடி,வெந்தயம்40கிராம்,ஈருள்ளி3,ஏலம் சிறிது பொன்னிறமாய் வறுத்து,2படி நீரில் கால் படியாய் காய்ச்சி 3நேரம் கொடுக்க கணம்,இருமல்,வாய் நாற்றம் நீங்கும்.                             
52.    சாரணைவேர்ப்பட்டை,தேசாவரம் சமனாய் கசாயம் செய்து கொடுக்க பொருமல் மாந்தகணம் தீரும்         .          
53.    ஆமணக்கெண்ணையும்,எலுமிச்சஞ்சாறும் சமன் கலந்ததில் வெந்தயத்தை அரைத்துப்போட்டு காய்ச்சிக் கொடுக்க கணக்கடுப்பு தீரும்.                
54.    ஒருபடி ஆவின் பாலில்40கிராம் வெந்தயத்தை வேகவைத்திறக்கி வெல்லமும் நெய்யும் விட்டு களி கிண்டி காலைமாலை கொடுக்க இரத்தக்கடுப்பு,அடிப்புறப்பாடு தீரும்.                                                          
55.    இளந்தென்னம்பூ இடித்துப் பிழிந்த சாறு,தயிர் வகைக்கு200மிலி, எலுமிச்சம்பழச்சாறு40மிலி,கலந்து,புளி தள்ளி3நாள் காலைமாலை கொள்ள இரத்தம்,சீதம்,கடுப்பு,நீர்சுருக்கு தீரும்.                                                         
56.    எலுமிச்சம்பழச்சாறில் வெந்தயத்தை வேகவைத்துண்ன கிராணி கடுப்பு தீரும்.    
57.    கோரோசனை,சண்பகப்பூ,கோஷ்டம்,வெட்டிவேர்,ஏலம்,அதிமதுரம், சாத்திரபேதி,மாசிப்பச்சை,தானரிக்காய்,வகைக்கு சமனாய் வெட்டிவேர் கியாழத்திலும் முலைப் பாலிலும் அரைத்து உருண்டை செய்து எலுமிச்சை சாறில் கொடுக்க கிராணி கடுப்பு, வாதபித்தசுரம், உஷ்ணம், கடுப்புமாந்த்ம், சன்னிக்கழிச்சல்,பிரளி,குடல்பிரட்டல், நீங்கும்.அமிர்தாதி உருண்டை. 
58.    பருத்திவிதைபருப்பு,சாதிக்காய்,நன்னாரிவேர்,வட்டத்திருப்பி,சீரகம், கிராம்பு சமனாய் அரைத்து சிறுபுள்ளடி சாற்றில் கலந்து கொதிக்க வைத்து கொடுக்க ஆமக்கடுப்பு நீங்கும்.                                                                     
59.    விளாம்பிசினும் உள்ளியும் அரைத்து தயிரில் கொடுக்க இரத்தக் கடுப்பு நீங்கும்.                                      
60.    கரிசலாங்கண்ணி,பழம்புளி சமமாய் அரைத்து புன்னைக்காயளவு 8 நாள் கொடுக்க அடித்தள்ளியது தீரும்..                                                      
61.    இஞ்சியை மேல்தோல்சீவி துளையிட்டு பெருங்காயம் வைத்து மூடி நூலால் கட்டி, தயிரில் வேகவைத்தரைத்து, வேறு தயிரில் கொடுக்க அடிதள்ளியது நீங்கும். 
62.    பருத்திப்பிஞ்சு,சாதிக்காய்,கிராம்பு,அதிவிடயம்,அசமதாமம்,இலந்தைப் பழம் சமனாய் அரைத்து தயிரில் கலந்துண்ண முக்கல் வயிற்றுக் கடுப்பு தீரும்.
63.    பருத்திப்பிஞ்சும்,சீரகமும் பசுவின் பாலிலரைத்துக் கொடுக்க முக்கல் வயிற்றுக்கடுப்பு தீரும்.                                                                   
64.    ஒதியம்பட்டையை பசும்பாலிலரைத்துக் கலக்கி கொடுக்க முக்கல் வயிற்றுக் கடுப்பு தீரும்.                    
65.    வில்வவேர்,கருவேலங்கொழுந்து,கிராம்பு,எலுமிச்சைவிதை,சீரகம், ஆவாரம்பூ, ஏலரிசி,சாதிபத்திரி,சாதிக்காய் சமமாய் அரைத்து சிறு கொட்டைப் பாக்களவு முலைப்பாலில் கொடுக்க இரத்தகணம், மூல கணம்,அதிசாரம் தீரும்.          
66.    கற்கடகசிங்கி,சீந்திற்கொடி,சீரகம்,வில்வவேர்,அதிவிடையம், கடுகு ரோகிணி, கண்டங்கத்திரிவேர்,முசுமுசுக்கை,செம்முள்ளிவேர், தூதுவேளை வேர், திப்பிலி வகைக்கு 10கிராம் இடித்து கியாழஞ் செய்து கொடுக்க சுழிகணம் தீரும். 
67.    எருக்கு,மரக்காரை,வட்டக்கிலுகிலுப்பை,வேலிப்பருத்தி, இவற்றின் வேர்ப்பட்டை,கடுக்காய்,பூண்டு வகைக்கு 10கிராம்,ந.எண்ணெயில் காய்ச்சி புண்ணின் மேல் தடவ அரிகரப்பன் தீரும்.                                                 
68.    இந்துப்பைப் பொடித்து நெய்யில்போட்டு  ரவியில் வைத்து பூசி மறுநாள் முழுக பேய்ச்சொரி தீரும்.                                                                
69.    கொடிக்கள்ளியை வாட்டிச் சாறுபிழிந்து வயதுக்கும் பலத்துக்கும் தக்க கொடுக்க சிறுசிரங்கு,சொரிசிரங்கு தீரும்.                                                      
70.    சீதேவிப்பூண்டையிடித்துச் பிட்டாயவித்துச் சாறுபிழிந்ததில் கடுகுரோகினியை அரைத்துக் கலக்கி வெள்ளாட்டுப்பாலில் கொடுக்க உடம்புநோய்க்காய்ச்சல் தீரும்.    
71.    பாவட்டை,கொன்றை,சிற்றாமுட்டி,வேலிப்பருத்தி இவற்றின்வேர் மிளகு வகைக்கு 20கிராம் தட்டிப்போட்டு கசாயம் செய்துகொடுக்க ஆமசுரம் தீரும்.
72.    சீரகம்,கிராம்பு,திப்பிலி,நெல்லி,வேம்பு,புளி,விஷ்ணுகிரந்தி,பேராமுட்டி, சிற்றாமுட்டி, ஓரிலைதாமரை சமனாய் கசாயம் செய்துகொடுக்க மாந்தசுரம் தீரும்.                                          
73.    உள்ளி,அவுரி,குட்டிவிளா சமனாய் சிவக்கவறுத்து கியாழஞ்செய்து சங்களவு கொடுக்க மாந்தசுரம் தீரும்                                                
74.    புரசுஇலை,பட்டை,கற்றாழஞ்சோறு  தட்டிச்சாறு பிழிந்து 1கரண்டி கொடுக்க குளிர்சுரம் தீரும்.
75.    அதிமதுரம்,இலவங்க்ம்,ஏலம்,சண்பகமொக்கு,கோஷ்டம்,சுக்கு,சீரகம், முத்தக்காசு, வறுத்திடித்து சலித்து சர்க்கரை கலந்து திரிகடி சாப்பிட கணசுரம், மாறல்சுரம் தீரும்.                                                                                     
76.    அதிவிடயத்தைப் பொடித்து தேனில் கொடுக்க,அதிசாரசுவாசம் தீரும்.
77.    கண்டங்கத்திரிவிதை,அமுக்கரா,திப்பிலி சமன்பொடித்து திரிகடிகை கொள்ள விக்கல்,வாந்தி,சுரம்,இருமல் தீரும்.                                                     
78.    சுக்கு,மிளகு,திப்பிலி,வசம்பு வகைக்கு10கிராம் 1படி நீரில் 8ல் 1ன் றாய்க் காய்ச்சி தேன் விட்டு கொள்ள சீதம் விஷசுரம் தீரும்.                                                      
79.    ஆல்,மா,நாவல் தளிரைந்றுக்கி கியாழஞ்செய்துகொடுக்க சுரம்,தாபம், விக்கல்,  அதிசாரம் தீரும்                                                              
80.    கடுக்காய்,கடுகுரோகிணி,சிவதை,திரிகடுகு சமனாய் இடித்துக் கியாழம் கொடுக்க ஆமசன்னி தீரும்.                                                                           
81.    கன்னிக்கோழி முட்டைத்தைலம்,வேப்பெண்ணை சமன்கலந்து உள்ளுக்குக் கொடுத்து மேலிலும்பூச ஆமசன்னி தீரும்.
82.    நல்லெண்ணைஅரைப்படி,முருங்கைபட்டைசாறு1படி கலந்ததில், பூண்டு 40 கிராம்,வசம்புசுட்டகரி10கிராம்,கலந்து காய்ச்சிக் கொடுக்க சகல மாந்த சன்னி தீரும்..                          
83.    மாசிக்காய்,திப்பிலி,கோரோசனை,கோஷ்டம்,கருஞ்சீரகம்,அக்கராகாரம் சமனாய் முலைப்பால் விட்டரைத்து  குன்றிபோலுருண்டை செய்து முலைப்பாலில் கொடுக்க மாந்தகணசன்னி தீரும்.                                           
84.    தும்பை,துளசி,இஞ்சிஇலைகளை சமனாயரைத்து கழற்சிக்காயளவு சிற்றாமணக்கிலையில் வைத்துச்சுருட்டி இளகவெதுப்பி சாறுபிழிந்து 3வேளை கொடுக்க இசிவு தீரும்.                                                  
85.    கோரோசனை,களிப்பாக்கு,சீரகம்,காசிக்கட்டி சமனாய் எலுமிச்சை சாறிலரைத்து பாக்களவு முலைப்பாலில் கொடுக்க கழிச்சல் நிற்கும்.
86.    தைவேளைஇலை,வசம்பு,,பூண்டு தட்டி வெதுப்பி சாறு பிழிந்து கொடுக்க கழிச்சல் தீரும்.                                                         
87.    ஈருள்ளி,வேலிப்பருத்தியிலை,முடக்கற்றானிலை சமனாய் வெதுப்பி சாறுபிழிந்து கொடுக்க கழிச்சல் தீரும்.                                        
88.    கீழாநெல்லிவேரை கொட்டைப்பாக்களவு அரைத்து முலைப்பாலில் கொடுக்க கழிச்சல் நிற்கும்.                                                
89.    நெல்லி,மா,அத்தி,அரசு இவற்றின் பட்டை, பருத்திப்பருப்பு,பிஞ்சு, அத்தி தளிர் வகைக்கு சமன் நறுக்கி கசாயம் செய்துகொடுக்க கழிச்சல், வாந்தி நிற்கும்.
90.    வேலிப்பருத்திசாறு,எருமைஎண்ணெய் வகைக்கு250மிலி,கருஞ்சீரகம் 5கிராம்,அரைத்துப்போட்டு காய்ச்சிக்கொடுக்க கழிச்சல இருமல் வாந்தி நிற்கும்.                           
91.    தாழைவிழுதின்சாறு,இளநீர்,எலுமிச்சஞ்சாறு சமன்கலந்து சுக்கு,சீரகம் வெதுப்பி பொடித்த தூள் கலந்துகொடுக்க இரத்தக்கழிச்சல் தீரும்.
92.    சீரகம்,மாதுளம்பிஞ்சு,கீழாநெல்லிவேர்,சமனாய் வெந்நீர்விட்டரைத்து கழற்சிக்காயளவு காலையில் கொடுத்து தயிரும்சோறும் உண்ண இரத்தக்கழிச்சல் தீரும்.                                                                                  
93.    அத்திக்காயின்சாற்றால் ஒமத்தையரைத்து தயிரில் கலந்துகொடுக்க அதிசாரக்கழிச்சல் தீரும்.                                                    
94.    ஏலம்,சாத்திரபேதி,அதிமதுரம் வகைக்குசமன் நீராகாரதண்ணீர் விட்டரைத்து 3நாள் கொடுக்க பச்சிலைபோல் கழிதல் தீரும்.                                   
95.    புளியாரை,வாழைப்பூ இடித்து பிட்டவியலாய் அவித்து சாறுபிழிந்து 1 துளி தேன் கலந்து கொடுக்க சகல கழிச்சலும் தீரும்.                                                   
96.    கரிப்பான்,சீரகம் அரைத்துப் பாக்களவு கொடுக்க அட்சரம் தீரும்.
97.    சுண்டைவேர்,எலுமிச்சங்காய் சமனாயரைத்து ஆவின் வெண்ணெயில் கலந்துகொடுக்க  அட்சரம் தீரும்.                                      
98.    கையாந்தகரை,நீர்முள்ளி,நாயுருவி இவற்றின் வேர்,இலை,சுக்கு,மிளகு, சீரகம் வகைக்கு40கிராம் கசாயம் செய்து காலைமாலை 100மிலி கொடுக்க பித்தசோகைக்காமாலை தீரும்.                                     
99.    மணித்தக்காளி,கீழாநெல்லி சமூலம்சமனாயரைத்து எலுமிச்சையளவு, 100மிலி எருமைத்தயிரில் கொடுக்க வறட்காமாலை குணமாகும்.                                            
100.வில்வ இலையை ஆவினீர் விட்டிடித்து சாறுபிழிந்து 100மிலி 3நாள் கொடுக்க பாண்டு,காமாலை,சோகை,விஷபாகவீக்கம் தீரும். 
101.கடுக்காய்40,மிளகு10கிராம்,மாவிலங்கப்பட்டை,கற்றாழஞ்சருகு, அமுக்கரா வகைக்கு20கிராம்,பொடித்து,திரிகடி,100மிலி ஆணுக்குப் பெண்னீரிலும், பெண்ணுக்கு ஆண்னீரிலும் கொடுக்க பாண்டு, காமாலை , சோகை,  விஷபாக வீக்கம் தீரும்.                      
102.கரிப்பானும் சீரகமும் அரைத்துப் பாக்கவு கொடுக்க அட்சரம் தீரும்.
103.நீர்முள்ளியைச்சுட்டு சாம்பலாக்கி நீரில் குழைத்துப் பூச, விஷபாக வீக்கம் தீரும்.                                                 
104.வெற்றிலையில் நரம்பெடுத்துச் சுண்ணாம்பு பூசி மடித்து நன்றாய் வறுத்து 1படி தண்ணீர்விட்டு 8ல் 1ன்றாய்க் காய்ச்சி சங்களவு கொடுக்க வயிற்றுநோய்,சீதக்கடுப்பு,தாகம்,அஜீரணம்,ன்ணி, சயித்தியம்,வாந்தி,பிராந்தி தீரும்.                                           
105.திப்பிலி,கடுகுரோகிணி சமனாய் வறுத்து மயிலிறகு சுட்டசாம்பல் கலந்து,தேன்விட்டு மத்தித்து கழற்ச்சியளவு கொடுக்க விக்கல் தீரும். 
106.மாதுளை,நெற்பொரி,சர்க்கரை,திப்பிலி சமனாய்பொடித்து,திரிகடி , தேனில் கொடுக்க விக்கல் தீரும்..                                                                
107.கிராம்பு,ஏலம்சீரகம் வெதுப்பி,மயிலிறகுசுட்ட சாம்பல் சமன் கூட்டி திரிகடி, தேனில் கொடுக்க வாந்தி,விக்கல் தீரும்.                                                  
108.பிரண்டையை வெதுப்பிச் சாறுபிழிந்து 5நாள் சங்களவு அந்திசந்தி கொடுக்க மார்புச்சளி, கோழைக்கட்டு நீங்கும்.                                                   
109.கடுக்காயைதட்டித் துணியில் முடிந்து ஆமணக்கெண்ணெயில்போட்டு சூரியபுடமிட்டு கண்ணில் பிழிய அமரம் நீங்கும்.                     
110.கற்கண்டைபொடித்துத் துணியில் முடிந்து புளிப்பு மாதுளம்பழச் சாறில் ஊறவைத்துக் கண்ணில் பிழிய கண்நோய் நீங்கும்      .                     
111.சதுரக்கள்ளியை அனலில் வெதுப்பி சாறுபிழிந்து காதிலடைக்க செவிநோய் தீரும்.                                                                                     
112.குப்பைமேனி இலையில் சிறுநீர்விட்டிடித்து காதில் பிழிய ஈ செத்து விழும்.                                          
113.பச்சைநன்னாரிவேரை வெந்நீரிலிட்டுக் கொட்டைப்பாக்களவு அரைத்து வெந்நீரில் கொடுக்க பல்லில் இரத்தம் வடிதல் குணமாகும்.                   
114.கடுக்காய்,சீரகம் சமனாயரைத்து கற்றாழஞ்சாற்றில் கலக்கி ஒருசங்கு கொடுக்க நாமுள்தோஷம் குணமாகும். 
115.மணத்தக்காளிச்சாறு,அத்திப்பாலாலம்பால் சமன் கலந்து கொடுக்க நாமுள்தோஷம் குணமாகும்.                               
116.பழம்பாசி,வல்லாரை,ஈருள்ளி சமனாயிடித்து சாறுவாங்கி சுரசஞ் செய்து வெள்ளாட்டுப்பாலில் கலந்து சீரகத்தை வெதுப்பிப் பொடித்து தூவி ஒருசங்கு கொடுக்க கெந்ததாளி குணமாகும்.        
117.தூதுவேளை,கண்டங்கத்திரி,செம்முள்ளி,ஆடாதொடை,சங்கு இவற்றின் இலை வகைக்கொருபிடி,இடித்துப் பிட்டவித்து சாறுவாங்கி,சுக்கு, மிளகு,  இந்துப்பு,திப்பிலி வகைக்கு10கிராம் வறூத்து பொடித்துத் தூவி சிறிது தேன்விட்டு ஒருசங்கு கொடுக்க இளைப்பு இருமல் குணமாகும்.                                             
118.200மிலிஆடாதொடை இலைச்சாற்றில் சுக்கு,திப்பிலி சமனாய் அரைத்துக் கலக்கி முறித்து தேனில் கொடுக்க இளைப்பு இருமல் குணமாகும்.                               
119.தேன்,இஞ்சி,மாதுளம்பழம் சாறு சமன் கலந்து கொடுக்க இளைப்பு இருமல் தீரும்.                                                                         
120.எவச்சாரம்,கற்சுண்ணம் எலுமிச்சம்பழச்சாற்றால் அரைத்து உண்ணாக்கில் தடவ உண்ணாக்குவளர்தல் நிற்கும்.                       
121.மயிலிறகுச் சாம்பலும் மிளகுச்சாம்பலும் சமனாய் பொடித்து ஆவினெய்யில் மத்தித்துக் கொடுக்க கக்குவான் தீரும்.  
122.விலாமிச்சுவேர்,செங்கழுநீர்க்கிழங்கு,கோஷ்டம் சமனாயரைத்து வெள்ளைக் கொப்புளம் வெடித்தால் பூச குணமாகும். 
123.ஆவாரையிலையும்,அல்லியிலையும் சமனாய்க் கழுநீர் மண்டியில ரைத்து வெள்ளைக்கொப்புளம் மேல்பூச குணமாகும்.   
124.திரிகடுகு,வசம்பு,ஓமம்,பூண்டு,கழற்ச்சிப்பருப்பு,வேப்பங்கொழுந்து வகைக்கு 5 கிராம் அரைத்து,1படி விளக்கெண்ணெயில் பதமாய்க் காய்ச்ச்சி வடித்து1கரண்டி 2வேளை கொடுத்துவர குழந்தையின் விதைவாதம் குணமாகும். 
125.சாரனைவேர்,முடக்கற்றான்வேர்,சுக்கு,கழற்சிப்பருப்பு,வகைக்கு10 கிராம் தட்டிப்போட்டு கியாழஞ்செய்து கொடுக்க விதைவாதம் குணமாகும்.   
126.400ஆவினெய்யில்,நாயுருவி,மேனி,கொழுஞ்சி,தூதுவேளை,வசம்பு, சுக்கு மஞ்சள் வகைக்கு பாக்களவு அரைத்துப்போட்டு காய்ச்சி ஒருகரண்டி கொடுக்க மசரைப்புழு நீங்கும்.                                                                         
127.நஞ்சறுப்பான்வேரை நரம்பு நீக்கியரைத்துப் புன்னைக்காயளவு வெந்நீரில் கொடுக்க வாந்தி பேதியாகும்.மதியம் சுடுகஞ்சி கொடுக்க வைசூரி அதிகப்படாது. 
128.சுக்கு,வேப்பீர்க்கு,எலுமிச்சம்வேர்,கோரைக்கிழங்கு இளவெதுப்பாய் வறுத்து கியாழஞ்செய்து 100மிலி கொடுக்க வைசுரியின்பேரில் கண்ட அதிசாரபேதி நிற்கும்.                                                              
129.பொன்முசுட்டை,வேப்பீர்க்கு சமனாய் கியாழஞ்செய்து கொடுக்க (வைசூரி) பேதி அதிசாரம் தீரும்.                                                             
130.முற்றின நாவல்பட்டையை ஆவின்பால் விட்டிடித்துப் பிழிந்து 100 மிலி 3 வேளை கொடுக்க (வைசூரி) கடுப்பு,சீதம்.இரத்தம் காணல் தீரும்.                                       
131.ஆவாரை பஞ்சாங்கத்தை வறுத்து கசாயம் செய்து 3வேளை கொடுக்க (வைசூரி) கடுப்பு,சீதம்,இரத்தம்காணல் தீரும்.                                                                                     
132.பழைய மாங்கொட்டையை இளவறுப்பு செய்து அரைத்துக் கொடுக்க (வைசூரி) கடுப்பு,சீதம்,இரத்தம் காணல் தீரும்.                                                                   
133.ஈருள்ளிச்சாறு,ஆவினெய் சமன் கலந்து 100மிலி 3வேளை கொடுக்க மேற்படி தீரும்.                
134.எலுமிச்சம்வேர்ப்பட்டை,ஏலம்,சீந்தில்,விலாமிச்சு,பற்பாடகம்,சந்தனம், கோரைக்கிழங்கு சமனாய் தட்டி கியாழஞ்செய்து 3வேளை கொடுக்க வைசூரியின்பேரில் கண்ட சுரம் நீங்கும.                                    
135.ஈருள்ளி,கற்கண்டு சமனாயரைத்து விளக்கெண்ணெயில் கொடுக்க (வைசூரி)மலசலக்கட்டு,வயிறு உப்பிசம் தீரும்.                                            
136.சீரகத்தை துணியில்கட்டி முலைப்பாலிலூற வைத்துக் கண்ணில் ஒற்றடமிட வைசூரியால் உண்டான விதனம் தீரும்.                                                           
137.முற்றின தேங்காயைத்துருவி புளியவிதையின் மேல்தோல் பொடித்துப் போட்டு பிழிய வரும் தைலத்தை ஆறாத வைசூரி புண்ணில் போட ஆறும். வீக்கத்தில் தடவ வற்றும்.                                                                   
138.பனங்குருத்தைதட்டி கண்ணில் பிழிய வைசூரியால் விழுந்த பூ மாறும் .
139.முருங்கைப்பூ,நெருஞ்சிப்பூ,நந்தியாவட்டைப்பூ,சீரகம் ஒன்றாய்ச் சேர்த்து தட்டி கண்ணில் பிழிய வைசூரியால் விழுந்தபூ மாறும்.                      
140.வட்டத்துத்தியிலையும் சூடனும் சமன்சேர்த்தரைத்து ஆமணக் கெண்ணயில் மத்தித்து மறுமுள் இரணத்தின் மேல்பூச ஆறும்..
141..உத்தாமணி இலைச்சாற்றில் மிளகை 7முறை ஊறவைத்துலர்த்தி, தூள்செய்து 2-4அரிசி எடை தேன் அல்லது பாலில் கொடுக்க மாந்த இலுப்பு தீரும்.                      
142.நல்வேளை பூச்சாறு 10துளி,தாய்ப்பாலில் கலந்து கொடுக்க பிறந்த குழந்தைகளுக்குக் காணும் சுரம், நீர்க்கோவை தீரும்.,
143.நல்வேளை பூச்சாறு 10துளிகள் தாய்ப் பாலுடன் கலந்து கொடுக்க பிறந்த குழந்தைகளுக்கான சளி,மூச்சுத் திணறல் கட்டுப்படும்                      
144.உருத்திராட்சத்தை இழைத்து தேனில் கலந்து நாவில் தடவ தொண்டைக்கட்டு,கோழை நீங்கும்                                                                          
145.தவசுமுருங்கை இலை சாற்றுடன்,தே.எண்ணை கலந்து,காய்ச்சி வடித்து, 5-10துளி கொடுக்க, குழந்தையின் சளி நீங்கும்                                                                                                             
146.2கிராம் பற்பாடகத்தை அரைத்து, 200மிலி மோரில் கலந்து தினமிரு வேளை குழந்தைகளுக்குக் கொடுக்க காய்ச்சலுடன் கூடியபேதி குணமாகும்                       
147.வேப்பங்கொழுந்து,மிளகு,சீரகம்,சேர்த்தரைத்து வெந்நீரில் கலந்து, 1பாலடை ஊற்ற,குழந்தைகளுக்கு சளி,கபம் தீரும்.                                                                              
148.மஞ்சளை அரைத்து இளம்சூட்டில் நெற்றியில் பற்றிட சளி,தடுமன் விலகும்
149.குப்பைமேனி இலைத் தூளை வே.எண்ணையில் குழைத்து குழந்தைகளுக்கு நாவில் தடவ கோழை நீங்கும்.                               
150.உத்தாமணி இலைச்சாற்றில் மிளகை 7முறை ஊறவைத்துலர்த்தி, தூள் செய்து 2-4அரிசி எடை தேன் அல்லது பாலில் கொடுக்க மாந்த இலுப்பு தீரும்.

1 கருத்து:

Youngjewel2704 சொன்னது…

விஷவாதகரப்பான் நோய்க்கு மருத்துவமும் உணவு முறையும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.