பக்கங்கள்

29 அக்டோபர், 2016

நகச்சுற்று,காலாணி,சேற்றுப்புண்(WHITLOW,CORN, ATHLETES FOOT)..



பாதங்களைத் தாக்குவதில் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப்பது கால் ஆணி. பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதே கால் ஆணி.
காரணம்

அதிகமான உடல் அழுத்தம் .அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களாலும்,கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்துவதாலும் வர வாய்ப்புள்ளது..வெறும் காலில் நடப்பதாலும் கூட கால் ஆணி ஏற்படலாம்.கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு


  1. பறங்கிபட்டைசூரண மாத்திரை2,தினம்2வேளை சாப்பிட நகச்சுற்று, சேற்றுபுண் குணமாகும்
  2. மயில்துத்தம் 1கிராம்,பொரித்து,தே.எண்ணையில் இழைத்துபூச காலாணி குணமாகும
  3. அரிசியுடன் ஆளிவிதையை களிசெய்து கட்ட நகசுற்று குணமாகும்
  4. புங்கன்தைலம் அல்லது விரண சஞ்சீவி தைலம் பூச சேற்றுப்புண் குணமாகும்
  5. தே.எண்ணையை பூச சேற்றுப்புண் குணமாகும்
  6. திருநீற்று பச்சையை அரைத்து கட்ட காலாணி குணமாகும்
  7. நல்வேளை  இலைகளை கசக்கிக்கட்ட  நகசுற்று குணமாகும்
  8. மருதாணியுடன் பாக்கு சேர்த்தரைத்து இரவில்பூசி,காலையில் கழுவ நகசுற்று நீங்கி பளபளக்கும்  
  9. மஞ்சள்,வேப்பிலை சமனரைத்து பற்றிட சேற்றுபுண், அம்மை கொப்புளங்கள் குணம் ஆகும்
  10. அம்மான்பச்சரிசி பாலை பூசிவர காலாணி குணமாகும்                                            
  11. மஞ்சள் 1துண்டு,வசம்பு 1துண்டு. மருதோன்றி இலை10.கற்பூரம் சிறிது சேர்த்தரைத்து கட்ட காலாணி குணமாகும்
  12. மருதோண்றி இலைகளை தயிர் விட்டரைத்து கால் வெடிப்புகளில் பூச குணம் ஆகும்
  13. அண்டி கொட்டை தைலத்தை பூச கால் வெடிப்புகள் மறையும்
  14. மருதோண்றி இலையை கசாயம் செய்து 25மிலி தினம் பருகி வர விழுந்து போன நகம்,சொத்தை விழுந்த நகம் புதிதாக முளைக்கும்
  15. பச்சைமஞ்சளும் வேப்பிலையும் சேர்த்தரைத்துப் பூசிவர குதிகால் வெடிப்பு குணமாகும்
  16. மஞ்சள்,மருதாணி சேர்தது அரைத்து பூச நகசுற்று குணமாகும்
  17. பசுநெய்,வி.எண்ணை,மஞ்சள்தூள் கலந்து சூடேற்றி,பூசி 3 மணிநேரம் சென்று கழுவ கால்வெடிப்பு குணமாகும்
  18. கடுக்காய்,மஞ்சள் சேர்த்தரைத்து தே.எண்ணையில் கலந்து பற்றிட காலாணி  குணமாகும்
  19. மருதாணி வேர்பட்டையை அரைத்துகட்ட காலாணி குணமாகும்
  20. சோறுவடித்த கஞ்சியோடு மஞ்சள்தூள் கலந்து இளம்சூட்டில் தடவ சேற்றுபுண் குணமாகும்
  21. கிளிஞ்சல் மெழுகை  வி.எண்ணையில் கலந்துபூச பித்தவெடிப்புகள் குணமாகும்.
  22. களிப்பாக்கை,மருதாணியுடன் அரைத்து பூச பித்தவெடிப்புகள் குணமாகும்
  23. வேப்பிலை,மஞ்சள் சேர்த்து அரைத்துபூச பித்தவெடிப்பு,பாத எரிச்சல், நகசுற்று குணமாகும்.
  24. சித்திரமூலம் (கொடிவேலி) வேர்ப்பட்டையை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைத்து இரவு பூசி படுக்க மூன்று நாளில் குணம் கிடைக்கும். சிலருக்கு புண் உண்டாகும். ஒரு தேகரண்டி விளக்கெண்ணெயில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து குழைத்து பூச புண் ஆறும்.
  25. இஞ்சிச் சாற்றுடன் சிறிதளவு நீர்த்த சுண்ணாம்பைக் கலந்து கால் ஆணிக்கு மருந்தாக போட்டு வர கால் ஆணி நீங்கும்.
  26. 5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு, கைப்பிடி மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து, துணியினால் இறுகக் கட்ட (20 நாட்கள்) கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறையும்.
  27. பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வர குணமாகும்.
  28. இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப் போட்டு காலையில் எடுத்துவிட(ஒரு வாரம்) கால் ஆணி குணமாகும்
  29. மல்லிகை இலைச் சாறை எடுத்து பாதத்தில் பற்று போட கால் ஆணி குணமாகும் பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாது.
  30. வெள்ளை எருக்கின் இலைகளை அரைத்து தினமும் காலை மாலை பற்றிட கால்ஆணி குணமாகும்
  31. மருதாணி இலை, மஞ்சள் துண்டு இரண்டையும் நன்றாக அரைத்து நெல்லிக்காய் அளவு , இரவு தூங்குவதற்கு முன் கட்ட(தொடர்ந்து 10 நாள்)  கால்ஆணி குணமாகும்.
  32. கிளிசரின் மற்றும் ரோஸ்வாட்டரை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து தனியாக வைத்துக் கொண்டு, பின்னர், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, அந்த நீரில் 15-20 நிமிடம் பாதங்களை ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல் கொண்டு பாதங்களை தேய்த்து கழுவி, உலர வைத்து, இறுதியில் அந்த கிளிசரின் கலவையை பாதங்களில் தடவி வர  குதிகால் வெடிப்புகள் மறையும்
  33. .ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு பாதங்களை மசாஜ் செய்து இரவு முழுவதும் ஊற வைத்து வர பாதங்கள் மென்மையாக இருக்கும்.
  34. வேப்பிலையை அரைத்து, சிறிது மஞ்சள் தூள்  கலந்து, பாதங்களில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவிவர குதிகால் வெடிப்பு  மறையும்                               (தினமும் இரண்டு முறை).
  35. அரிசி மாவு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் ஒன்றாக கலந்து, (வெடிப்பு அதிகம் இருப்பவர்கள், இத்துடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கொள்ள வேண்டும்). பாதங்களை உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் 20 நிமிடம் ஊற வைத்து, இந்த கலவையைக் கொண்டு குதிகால்களை மசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைத்து கழுவ  பாதங்கள் மென்மையாக இருக்கும்
  36. வாழைப்பழத்தை மசித்து, 2 தேகரண்டி ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, குதிகால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, கழுவ குதிகால் வெடிப்பு குணமாகும்.
  37. துளசியை அரைத்து, சிறிது மஞ்சள் தூள், கற்றாழை பிசின் மற்றும் சூடம் சேர்த்து நன்கு கலந்து, பாதங்களில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ குதிகால் வெடிப்புகள் மறையும்.
  38. 1/2 வாளி வெதுவெதுப்பான நீரில், 1 கப் தேன் கலந்து, அந்நீரில் பாதங்களை 15-20 நிமிடம் ஊற வைத்து, மெருகேற்ற உதவும் கல் பயன்படுத்தி தேய்த்து வர குதிகால் வெடிப்பைத் தடுக்கலாம்.
  39. எலுமிச்சை சாற்றுடன் பப்பாளியை மசித்து சேர்த்து நன்கு கலந்து, பாதங்களில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ பாதங்கள் மென்மையாக, வெடிப்புகளின்றி இருக்கும்.
  40. நன்னாரிவேர் 10 கிராம், ஒரு தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து பாதியாக்கி வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க பித்தவெடிப்பு மறையும்.
  41. பித்தவெடிப்பு உள்ள இடத்தில் மருதாணி இலையை அரைத்து பற்றிட குணம் கிடைக்கும்.
  42. வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வர பித்தவெடிப்பு சரியாகும்.
  43. கண்டங்கத்திரி இலை சாற்றை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வர பித்த வெடிப்பு குணமாகும்
  44. கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வ பித்த வெடிப்பு குணமாகும்.

கருத்துகள் இல்லை: