காதில் சீதளமனுசரித்து என்னேரமும் ஜலம் தங்கி ரோகம் விளைவிப்பது.
செவிப் பரை என்பது காதினுள் இருக்கும் மெல்லிய ஜவ்வுப்படலமாகும்.இதில் நாம் பேசும் ஒலியானது மோதி மூளைக்குச் செய்தியாக அனுப்பி கிரகிக்கின்றது. இப்படலத்தில் அழுக்குகள்,தூசுகள் படிந்தோ,அல்லது வேறு பொருட்களால் பாதிக்கப்படும் போது அழற்சி,புண்கள் உண்டாகி மந்தம்,சீழ்,இரைச்சல் போன்ற பலவிதமான கோளாறுகள் உண்டாகின்றன.
1. பறங்கிபட்டைச் சூரண மாத்திரை 2தினம் 3வேளை சாப்பிட்டு வர காதுவலி தீரும்
2. ஊமத்தன்தைலம் 2துளிகள் தினம் 2வேளை காதிலிட காதுவலி நீங்கும்
3. மருள்பட்டையை வாட்டிப்பிழிந்த சாறு ஓரிரு துளி தினமிருவேளே
காதிலிட காதுவலி தீரும்
4. திருநீற்றுபச்சிலைச் வாட்டிப்பிழிந்த சாறு 2துளிகள் காதில்விட காதுவலி நீங்கும்
5. பூண்டை கசக்கிப்பிழிந்த சாறு2துளி தினமிருமுறை காதிலிட காது வலி குணமாகும்
6. நல்வேளையிலைசாறு 3 துளி காதில்விட காதுவலி தீரும்
7. நாய்வேளை இலைச்சாறு 2 துளி காதிலிட காதுவலி தீரும்
8. 2கிராம் பெருங்காயத்தை 20 மிலி ந.எண்ணையில் வடித்து 1துளி காதிலிட காதுவலி குணமாகும்
9. சாதிக்காயை சுட்டு பொடித்து தேனில் குழைத்து நாவில் தடவ காதிரைச்சல், சீதபேதி,வயிற்றுபோக்கு தீரும்
10. துளசிச்சாறு,கரிசாலைசாறு சமன் கலந்து காதிலிட காதுவலி,காதில் சீழ்வடிதல் குணமாகும்
11. தூதுவேளை கஷாயம் சாப்பிட்டுவர காதுமந்தம் நீங்கும்
12. மிளகு,வெள்ளப்பூண்டை தட்டி துணியில் முடிந்து காதில் பிழிய காதடைப்பு குணமாகும்
13. எலுமிச்சைசாறு 2சொட்டு காதிலிட வலி, குடைச்சல் தீரும்
14. தூதுவேளையிலை சாறு 2சொட்டு காதில்விட இரைச்சல் நீங்கும்
15. கடுகு எண்ணையை சுடவைத்து காதிலிட இரைச்சல் நீங்கும்
16. காதில் ஈ,எறும்பு புகுந்து
விட்டால்,உப்பு நீரை
விட,உடனே வெளியேறும்
17. குப்பைமேனி இலைச்சாறை
சூடுபடுத்தி காதைச்சுற்றித்
தடவ
காதுவலி குணமாகும்
18. வெங்காயச்சாறு
காதிலிட
காதுவலி நீங்கும்
19. வில்வபழ சதையை ந.எண்ணையில் வேகவைத்து காதிலிட
காதுசீழ்
நீங்கும்
20. பருத்தியிளங்காயும்,எருக்கன் இளங்காயும் வெதுப்பிச் சாறு பிழிந்து
காதில்
விட காதுசீழ்குத்தல் குணமாகும்.
21. தைவேளைச் சாறு சமன் ந.எண்ணை கூட்டி காய்ச்சி
காதிலிட காதிலிட
காதிரைச்சல்
நீங்கும்
22. 40 மிலி ந.எண்ணையில்
1
கரப்பான்பூச்சியைப் போட்டு காய்ச்சி காதிலிட காதில் சீழ்வளர்த்தி, சீழ் குணமாகும்
23. மல்லிகை இலையை அரைத்து
எள்
நெய்யில் காய்ச்சி
வடித்து காதிலிட சீழ்வடிதல்,வலி குணமாகும்
24. வெற்றிலைசாறு 3 துளி
காதிலிட காதுவலி
நீங்கும்
25. கணு நீக்கிய அருகம்புல் 30கிராம்,மாதுளையிலை 30கிராம்,2ல்1ன்றாய் காய்ச்சி, 2 மணிக் கொரு முறை,50மிலி பருகிவர காது,மூக்கு,ஆசனவாய் இரத்த
ஒழுக்கு நிற்கும்
26. முசுமுசுக்கையிலையும்,வெள்ளுள்ளியும் சிதைத்து காதில் பிழிய காதிரைச்சல், வலி தீரும்.
27. தேள் கொடுக்கிலைச்சாறு சமன் ந.எண்ணை கலந்து காய்ச்சி
காதிலிட காதடைப்பு
நீங்கும்
28. திராட்சை,அத்திப்பழம்
வகைக்கு 25கிராம் காலை வெறும்வயிற்றில் சாப்பிட்டு பசும்பால் அருந்த காதுமந்தம்
நீங்கும்.கண்ணொளி பெருகும்.
29. தோலுரித்த பூண்டு3,வாதுமை எண்ணையில் கருக காய்ச்சி வடித்து,இளம்
சூட்டில் 2-3துளி காதிலிட்டுவர காதுவலி, செவிடு நீங்கும்.
30. பெருங்காயம்,பூண்டு,வசம்பு சமனிடித்து வேப்பெண்ணயில் காய்ச்சி
காதிலடைக்க சீய்மாறல் நீங்கும்.
31. கிலுகிலுப்பைவேரையரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி காதிலடைக்க
காதெழுச்சி தீரும்.
32. கையாந்தகரை,நாயுருவி,சங்கு,தூதுவேளை,வேலிப்பருத்தி இவற்றின் இலைகள் எருக்கம்பூ சமனரைத்து,10நாள்,காலை சிரசில்வைத்து மாலை குளிக்க காதுமந்தம் தீரும்
33. கால்படி வேப்பெண்ணையில் மஞ்சள்40கிராம்,வசம்பு,ஈருள்ளி வகைக்கு 60 கிராம் சிதைத்துப் போட்டு காய்ச்சி வடித்துகாதில்
அடைத்து,உச்சியில் தேய்த்து வர காதிரைச்சல், குத்தல்,மந்தம்,எழுச்சி
முதலான செவிநோய்கள் தீரும்.
34. 1படி ந.எண்ணையில் 40கிராம் நிலப்பனங்கிழங்கை அரைத்து போட்டு
காய்ச்சி வடித்து தலைமுழுகிவர காதிரைச்சல்,குத்தல்,மந்தம்,எழுச்சி
முதலான செவி
நோய்கள் தீரும்
35. முத்தெருக்கஞ்செவி
இலையைக் கசக்கி காதில்
விட காதில் புகுந்த ஈ செத்து விழும்
36. கோழியவரை
இலை குப்பைமேனி இலை சேர்த்து
கசக்கிப் பிழிந்து
காதிலிட காதில் புகுந்த ஈ செத்து
விழும்
37. கடுகை
நன்கு அரைத்து, காதுக்குப் பின்னால் பற்று போட காதுவலி வீக்கம் குணமாகும்
38. பூண்டின்
தோலை உரித்துத் தலைப் பக்கம் கிள்ளிவிட்டுக் காதில் வைக்க காது வலி வீக்கம்
குணமாகும்
39. தேனுடன்
துளசிச் சாற்றைக் கலந்து குடிக்க காதுவலி குணமாகும்
40. வாழைபட்டையை
தீயில் காட்டி சூடேற்றி பிழிந்து ஓரிரு துளிகள் விட காதுவலி குணமாகும்.
41. எலுமிச்சம்பழசாறை
ஓரிரு துளிகள் காதில் விட காது வலி தீரும்.
42. வெங்காய
பொடியை தண்ணீரில் குழைத்து காதின் வெளிப்பகுதிகளில் தடவ வீக்கத்தால் ஏற்பட்ட
காதுவலி தீரும்.
43. தேங்காய் எண்ணெயில் சிறிது பூண்டு சேர்த்து கொதிக்க விட்டு, ஓரளவு வெப்பத்துடன் காதுகளில் ஊற்ற, பூண்டில் உள்ள செலினியம் மற்றும் சல்பர், காதுகளில் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து, காயங்களை குணப்படுத்தும்.
44. கைப்பிடி ஓமத்தை பால்விட்டு அரைத்து கொதிக்க வைத்து பொறுக்கும் சுட்டில் தலை முழுவதும் தப்பளமிட்டு 1 மணிநேரம் கழித்து குளிக்க வேண்டும். அதன்பின் மருள் செடியை விரலளவு வெட்டி விளக்கில் சுடுபடுத்தி பொறுக்கும் சுட்டில் சாறுபிழிந்து காதில் விட வேண்டும். ஓமத்தை 5 நாட்களுக்கு ஒருமுறையும், மருள்செடியை 2 நாட்களுக்கு ஒருமுறையும் பயன்படுத்தவும். 10முறை ஓமம் பயன்படுத்துவதற்குள் பிறவி செவிடு அல்லாத எல்லாவித காதுபிரச்னைகளும் தீரும்.
43. தேங்காய் எண்ணெயில் சிறிது பூண்டு சேர்த்து கொதிக்க விட்டு, ஓரளவு வெப்பத்துடன் காதுகளில் ஊற்ற, பூண்டில் உள்ள செலினியம் மற்றும் சல்பர், காதுகளில் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து, காயங்களை குணப்படுத்தும்.
44. கைப்பிடி ஓமத்தை பால்விட்டு அரைத்து கொதிக்க வைத்து பொறுக்கும் சுட்டில் தலை முழுவதும் தப்பளமிட்டு 1 மணிநேரம் கழித்து குளிக்க வேண்டும். அதன்பின் மருள் செடியை விரலளவு வெட்டி விளக்கில் சுடுபடுத்தி பொறுக்கும் சுட்டில் சாறுபிழிந்து காதில் விட வேண்டும். ஓமத்தை 5 நாட்களுக்கு ஒருமுறையும், மருள்செடியை 2 நாட்களுக்கு ஒருமுறையும் பயன்படுத்தவும். 10முறை ஓமம் பயன்படுத்துவதற்குள் பிறவி செவிடு அல்லாத எல்லாவித காதுபிரச்னைகளும் தீரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக