ஒற்றைத்தலைவலி(migraine);மலச்சிக்கல்,கல்லீரல் கோளாறு,நரம்புத்தளர்ச்சி, அடக்கி வைக்கப்பட்ட ஆத்திரங்கள்- இப்படி பல காரணங்களால் உண்டாகும்.
சிரசில் கனல் எழுந்து,சூலையால் ரோகம் அதிகரித்து சீழ் போன்றும், சிறாய் போலும் காணுவது பீனிசம்(சைனஸ்) .
வாதபீனிசம்,பித்தபீனிசம்,சிலேத்துமபீனிசம்,இரத்தபீனிசம்,சீழ்பீனிசம்,சிறாய் பீனிசம்,மூலப்பீனிசம்,கண்பீனிசம் என 8. மூளையில் நீர்தங்கி தலைநோய் வருவது,தலைவலி,நீர்க்கோவை
பீனிச பொதுக்குணம்;மூலத்தில் கனலேறிக் கபாலத்தில் நீரையேற்றி,ஒரு நாசியடைந்து ஒரு நாசியில் நீர் வடியும். அடிக்கடி தும்மல் விழும்; பிடரியும், தலையும் கனத்து வலிக்கும்; வாரந்தோறும் கபாலம் வரண்டு நீர் திரண்டு நாறும்; தேகத்தில் வெதுப்புக்காணும்; நாவில் ருசியும்,நாசியில் மணமும் கெடும்; சிரசு நீர் நெஞ்சில் இறங்கிக் கட்டும்.
வாதபீனிசக்குணம் ;நாசி வரளும்;நீர் வடியும்; நீர் பழுத்துச் சளிபோல் திரண்டு நாற்றமின்றி விழும்.
பித்தபீனிசக்குனம் ;நாசிவழி மஞ்சள்நிறமாய்ச் சளிவடியும்;புலால் நாறும்.
சிலேத்துமபீனிசக்குணம் ;நாசி மாறிமாறி அடைத்து முத்துப்போல் நீர்வடிந்து நாறும்;துணுக்குப்போல் சளி விழும்;நாசியில் ஊசிபோல் குத்தும்; கண்களில் பீளை சாடும்.
நீர்பீனிசக்குணம் ;விஷபித்தமும் வெட்டையும் அதிகரித்துச் சிரசிலேறி நாசி வழி நீர் வடிந்து கொண்டிருக்கும்;பனிவாடை,மழையில் தோய்ந்தால் மிகுத்துப் பிடரியும் முகமும் பரபரத்து ஊறும்;நாசி அரிக்கும்;அடிக்கடி தும்மல் விழும்; தலை கனத்து வலிக்கும்.
இரத்தப்பீனிசக்குணம் ;வெட்டையின் பேரில் தத்தவமிஞ்சிக் கபாலத்திலேறி அதில் வடமாய்ப் புண்ணாகி நாசிவழி இரத்தம் விழும்;தலை வலிக்கும்.
சீழ்ப்பீனிசக்குணம் ;வெட்டையும்,பித்தமும் கபாலத்தில் அதிகரித்துக் கபால முதல் நாசிவரை புண்ணாக்கிச் சீழ் வடியும்;தலை வலிக்கும்.
சிறாய்பீனிசகுணம்;நாசிவழி சிறாய்போலவும் ஈருள்ளிகூடு போன்றும் சீழ் திரண்டு விழும். பிணம்போல்நாறும். மணம் தெரியாது.விடாமல் தலை வலிக்கும்.
மூலபீனிசகுணம்; நாசியில் கோருச்சதை போன்றும்,அதின் சூடுபோல் வளருதல்.
சண்டப்பீனிசகுணம்; நாசியில் சுண்டைக்காய்போல் சதைவளர்ந்து அடைக்கும். சிரசுநீர் நெஞ்சிலிறங்கி் கபம் கட்டும்
1.
பவளபற்பம்100மிகி,திரிகடுகுசூரணம் 1கிராம் 5-10மிலி
தேனில் கலந்து தினமிருவேளை கொள்ள தலைவலி தீரும்
2.
நிலவேம்புக்குடிநீர்100மிகி,200மிலி வெந்நீரில் தினமிருவேளை கொள்ள தலைவலி குணமாகும்
3.
நொச்சி
இலையை கொண்டு ஆவிபிடிக்க தலைவலி,தலைபாரம் நீங்கும்
4.
தென்னங்
குரும்பையுடன் மிளகு சேர்த்தரைத்துப் பற்றிட தலைவலி குணமாகும்
5.
சிற்றாமுட்டி
வேர்ப்பொடி 400கிராம் 3லி நீரிலிட்டு முக்கால் லி.ஆக காய்ச்சி,
சுக்கு,மிளகு, ஏலக்காய்,வெட்டிவேர் வகைக்கு
20கிராம், அரைத்துப் போட்டு, 1லி ந.எண்ணெயிலிட்டுக் காய்ச்சி வடித்து, வாரமிரு முறை
தலைமுழுக தலை குளிர்ச்சியடையும்
6.
சுக்கை
உரைத்துப் பற்றிட தலைவலி குணமாகும்
7.
10கிராம் சிற்றாமுட்டிவேரை,2ல்1ன்றாய்க்
காய்ச்சி,200மிலி தினம்2வேளை பருக தலைவலி
குணமாகும்
8.
மாதுளம்பழச்சாறு
100மிலி,காலையில் சாப்பிட்டு வர மயக்கம், தலை சுற்றல்,
தொண்டை வறட்சி, புளியேப்பம்,வாந்தி தீரும்
9.
மஞ்சளைச்
சுட்டு புகையை நுகர தலைநீரேற்றம்,மூக்கடைப்பு குணமாகும்
10.
வெற்றிலை
சாறுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பூச தலைவலி குணமாகும்
11.
அதிமதுரம்,பெருஞ்சீரகம், சர்க்கரை சம அளவு பொடித்து 1தேகரண்டி, வெந்நீரில் கொள்ள தலைவலி, ஒற்றைத்தலைவலி கட்டுப்படும்
12.
கற்பூரவல்லி
இலைசாறுடன்,ந.எண்ணை
சேர்த்துக் குழைத்துப் பற்றிட தலைவலி குணமாகும்
13.
திருநீற்றுப்பச்சை
இலையை கசக்கி நுகர தலைவலி,தலைபாரம் நீங்கும்
14.
கரிசாலைசாறு,குமரிச்சாறு,நெல்லிக்காய்சாறு சமஅளவு,மொத்த அளவுக்கு சமன் தே.எண்ணை
கலந்து காய்ச்சி,வடித்து தலைமுழுகிவர தலைவலி, உடல்வலி,அசதி தீரும். பார்வை தெளிவடையும்
15.
தும்பை
சமூலத்தை கொதிக்க வைத்து வேதுபிடிக்க ஒற்றைத்தலைவலி குணமாகும்
16.
புதினா
எண்ணையை பூசிக்கொண்டு உறங்க தலைவலி குணமாகும்
17.
தினமும்
5 துளசி இலைகளை
சாப்பிட்டுவர ஒற்றைத்தலைவலி குணமாகும்
18.
அரைகிராம்
மிளகுத்தூளுடன்,1கிராம் வெல்லம் கலந்து காலைமாலை சாப்பிட்டுவர தலைவலி, மூக்கடைப்பு குணமாகும்
19.
இலவங்கத்தை
அரைத்துப் பற்றிட மண்டைக்குத்தல் ,நீரேற்றம் குணமாகும்
20.
எள்எண்ணையை
தலையில் தேய்த்து,வெந்நீரில் மாதமிருமுறை தலை முழுகி வர கண்கள் குளிர்ச்சியடையும்.தலைபாரம்,உடற்சூடு குறையும்
21.
பச்சைமஞ்சளை
மல்லிகை இலை சுக்கு சேர்த்தரைத்துப் பற்றிட தலைவலி தீரும்
22.
மல்லிகை
வேர், வசம்பு சமனெடுத்து, எலுமிச்சை சாறிலரைத்துப் பூசி தலைமுழுகிவர பொடுகு,தலைவலி
தீரும்
23.
சிற்றாமுட்டிவேர்
10கிராம்
சிதைத்து 2ல்1ன்றாய்க் காய்ச்சி
200மிலி தினமிருவேளை பருக தலைவலி தீரும்
24.
ரோஜாப்பூவை
நுகர மூக்கடைப்பு தீரும்
25. தும்பை இலையை கசக்கி நுகர தலைவலி குணமாகும்
26. மிளகை ஊசியில் குத்தி நெருப்பில் காட்டி புகையை நுகர ஒற்றை தலைவலி கட்டுப்படும்
25. தும்பை இலையை கசக்கி நுகர தலைவலி குணமாகும்
26. மிளகை ஊசியில் குத்தி நெருப்பில் காட்டி புகையை நுகர ஒற்றை தலைவலி கட்டுப்படும்
27.
வெங்காயத்தை
இடித்து நுகர தலைவலி ஜலதோஷம் நீங்கும்
28.
வெங்காயத்தை
மென்று தின்றுவிட்டு சுடு நீரருந்த ஜலதோஷம் நீங்கும்
29.
கறிவேப்பிலை
பொடியுடன் சர்க்கரை கலந்து காலைமாலை திரிகடி கொள்ள நீர்க்கோவை சூதகவாய்வு தீரும்
30.
வெங்காயத்தை
அரைத்துப் பற்றிட தலைவலி விரைவில் குணமாகும்
31.
நன்னாரி,
அதிமதுரம், நெய்தல் கிழங்கு,கோஷ்டம், வசம்பு சேர்த்து புளித்த கஞ்சி விட்டரைத்து
சமன் ந.எண்ணை கூட்டித் தேய்த்துவர ஒற்றை தலைவலி குணமாகும்
32.
நொச்சித்தைலம் 2துளி நசியமிட்டு உச்சந்தலையிலும் தேய்க்க தலைவலி குணமாகும்
33.
நல்வேளை
இலைச்சாறு 1துளி
நாசியில் நசியமிட தலைவலி, தலைபாரம் நீங்கும்
34.
ஓமத்தை இளவறுப்பாய் வறுத்து துணியில் முடிந்து நுகர
தலைவலி , தலைபாரம்,பீனிசம் (SINUS) நீங்கும்
35.
குப்பைமேனி
இலை சூரணத்தை நாசியில் உறிய மூக்கடைப்பு, தலைவலி குணமாகும்
36.
கருஞ்செம்பை
இலைகளை இடித்துச் சாறெடுத்துவிட்டு திப்பியை இரவில் தலையில் வைத்துக் கட்ட தலைநீரேற்றம்
தீரும்
37.
கடுகுரோகிணியை
வஸ்திரகாயம் செய்து மூக்கில் நசியமிட தும்மலுண்டாகி
மூக்கடைப்பு தலைவலி தீரும்
38.
கருஞ்சீரகத்தை
வென்னீரில் அரைத்து தலையில் தேய்க்க, தலைவலி குணமாகும்
39.
வெள்ளைப்பூண்டு,பொரிகடலை மென்று சாப்பிட ஜலதோஷம் தீரும்.
40.
இரவில் கடுகை அரைத்துப்
பாதங்களில் பூச ஜலதோஷம் தீரும்.
41.
மிளகு 6,வெஙகாயம் 2,அரைத்துசசாப்பிட ஜலதோஷம் தீரும்
42. விபூதியை நீரில் குழைத்து மூக்கில் தடவ தும்மல் நிற்கும்
42. விபூதியை நீரில் குழைத்து மூக்கில் தடவ தும்மல் நிற்கும்
43.
துளசி இலையை மென்று
சாப்பிட தும்மல் நிற்கும்.
44.
வேப்பங்கொட்டை
பருப்பைஅரைத்துப் பற்றிட தலைவலி நீங்கும்.
45.
தும்பைபூவை ந.எண்ணையில்
காய்ச்சி தலை முழுகிவர தலைபாரம் நீங்கும்.
46.
மஞ்சள் தூளை
வி.எண்னையில் கலந்து திரி செய்து புகை பிடிக்க
பொட்டில் குத்து நீங்கும் .
47.
ஏலஅரிசி,மஞ்சள்தூள் பொடிசெய்து,துணியில் முடிந்து நெய்யில் முக்கி எரித்தனைத்துப்
புகையை நுகர பொட்டில்குத்து குணமாகும்
48.
எலுமிச்சைதோலை
நன்கு அரைத்து பற்றுப்போட தலைவலி தீரும்.
49.
மாம்பழச்சாறு 300மிலி,எலுமிச்சைசாறு 50மிலி,இஞ்சிச்சாறு 30மிலி, தேன்30 மிலி கலந்து 4மணிக்கொருமுறை,50மிலி பருகிவர பலவருடங்களாக தீராத தலைவலியும் தீரும்.
50. செவ்வரளிப்பொடியை வெந்நீரிலரைத்துப் பற்றுப்போட தலைவலி நிற்கும்.
50. செவ்வரளிப்பொடியை வெந்நீரிலரைத்துப் பற்றுப்போட தலைவலி நிற்கும்.
51.
பச்சைக்கொத்துக்கடலையை
வெந்நீரிலரைத்துப் பற்றிட தலைவலி தீரும்.
52.
வெங்காயத்தை
நீரிலரைத்து உள்ளங்காலில் பற்றிட தலைவலி தீரும்.
53.
இலவங்கபட்டையை
அரைத்துப் பற்றிட குளிரால் வந்த தலைவலி நீங்கும்.
54.
ந.எண்ணை,ஆவின்நெய்,வெற்றிலைசாறு,எலுமிச்சைசாறு வகைக்கு1படி, கருஞ்சீரகம்கால்படி
இடித்துப்போட்டு,காய்ச்சி வடித்து,
1நாள்விட்டு 1நாள் தலை முழுகிவர ஒற்றைதலைவலி,கபாலவாயு,வலி
நீங்கும்
55.
ந.எண்ணை,குப்பைமேனிசாறு வகைக்கு1படி,கலந்து,காய்ச்சி வடித்து, தலை முழுகிவர ஒற்றைதலைவலி,கபாலவாயு,வலி
நீங்கும்
56.
நல்வேளைவேர்,வெள்ளைபூண்டு,இடித்து காதில்பிழிய ஒற்றை தலைவலி, கபாலவாயுவலி தீரும்..
57.
வெற்றிலையும்,பெருங்காயமும் சமமாய் இடித்து,வெதுப்பி காதில் பிழிய ஒற்றைதலைவலி,கபாலவலி வாயு தீரும்
58.
ஈருள்ளியும் முருங்கையிலையும் சிதைத்து, வலதுபக்கம் வலித்தால் இடது, இடது பக்கமானால், வலதுநாசியில் பிழிய ஒற்றைதலைவலி தீரும்.
59.
மிளகு, தலைசுருளி வேர் சமமாயிடித்து,துணியில் சுருட்டி, அனலில் கொளுத்தி நாசியில் புகைபிடிக்க
ஒற்றைதலைவலி நீங்கும்.
60.
எலுமிச்சைசாற்றில்,திரிகடுகை
அரைத்து,நெற்றியிலும், உச்சந்தலையிலும் பற்றிட ஒற்றை தலைவலி தீரும்
61.
கண்டங்கத்திரிபழம்,துளசி,வெற்றிலை
இவற்றின்சாறு,நல்லெண்ணை வகைக்கு கால்படி கலந்து காய்ச்சி வடித்து தலை
முழுகிவர சிறாய்ப் பீனிசம், கபாலசூலை,ஒருதலைவலி தீரும்.
62.
நொச்சிச்சாறு,நல்லெண்ணய் வகைக்கு1படி கலந்ததில் ஈருள்ளி தட்டிப்
போட்டுக் காய்ச்சி தலைமுழுகிவர பீனிசம், விடாததலைவலி,
கபாலசூலை, நேத்திரவாயு நீங்கும்.
63.
சவுரிபழச்சாறு,நல்லெண்ணை,பொடுதலைச்சாறு,ஆவின்பால் வகைக்கு 1படி கலந்ததில் மிளகு40கிராம்
பாலிலரைத்துப்போட்டு காய்ச்சி வடித்து தலை முழுகி வர கபாலவலி,குத்துசூலை,பீனிசம், நேத்திரநீர்கடுப்பு, மேகசூடு தீரும்.
64.
எலுமிச்சம்பழச்சாறு,நல்லெண்னை வகைக்கு40கிராம்,நத்தைசூரிவேர் 40 கிராம் பாலிலரைத்துப்போட்டுக்
காய்ச்சி வடித்து தலைமுழுகிவர தலைவலி, கபாலசூலை,பீனிசம்,நாசிப்புண்
நீங்கும்.
65.
செந்தொட்டிவேரை
துணியில் சுருட்டி கொளுத்தி அனைத்து புகைபிடிக்க ஒற்றைதலைவலி தீரும்.
66.
கவிழ்தும்பை வேரையும்,மஞ்சளையும் பொடிசெய்து துணியில் சுருட்டி
புகைபிடிக்க ஒற்றைத்தலைவலி தீரும்.
67.
1துண்டு சுக்கை
தோல்நீக்கி கால் லி நீரில்போட்டு பாதியாகக் காய்ச்சி பால் சர்க்கரை சேர்த்து காலைமாலை சாப்பிட்டுவர தலைநீரேற்றம்
தீரும்.
68.
நல்லெண்ணையில்
10கருஞ்செம்பைபூ,சிறிது
கஸ்தூரிமஞ்சள், சாம்பிராணி
சேர்த்துக் காய்ச்சி வாரமிருமுறை தலைமுழுகிவர நீர்க்கோவை தீரும்.
69.
சந்தனத்தூள்
20கிராம் 2ல்1ன்றாய்க்காய்ச்சி வேளைக்கு 50மிலி 3வேளை குடிக்க நீர்க்கோவை தீரும்.
70.
நல்வேளைச்சமூலம்
இடித்துப் பிழிந்து சக்கையை தலையில் வைத்துக் கட்ட நீர்க்கோவை தீரும்.
71.
வில்வ இலைசூரணம்
அரைதேக்கரண்டி தேனில் கலந்து காலைமாலை கொடுக்க நீர்க்கோவை தீரும்.
72.
10துளி
நல்வேளைபூச்சாறு தாய்ப்பாலில் கலந்து பிறந்த குழந்தைகளுக்குக் கொடுக்க நீர்க்கோவை,சுரம் தீரும்.
73.
நீர்முள்ளிவேரை
10பங்கு கொதிநீரில்போட்டு 24மணிநேரம் ஊறவைத்து தெளிவை 2மணிக்கொருமுறை 30மிலி
பருகிவர நீர்க்கோவை தீரும்.
74.
கடின
(திக்கான) தேயிலை டிகாஷனில் பாதி எலுமிச்சைச்சாறு
கலந்து பருக தலைவலி நீங்கும்.
75.
காலையில்
படுக்கையை விட்டு எழுந்ததும்,
ஒரு துண்டு ஆப்பிளில் சிறிது உப்பு தடவி சாப்பிட்டு, வெதுவெதுப்பான தண்ணீர்,அல்லது சூடான பால் அருந்த
நாள்பட்ட தலைவலி குறையும்.
76.
நெற்றியில்
சிறிதளவு பாதாம் எண்ணெய் தடவி,
15 நிமிடங்கள் வரை அழுத்தித் தேய்த்துவர தலைவலி நீங்கும்.
77.
சிறிது
இஞ்சி, சீரகம்,
மல்லி ஆகியவற்றை தண்ணீரில்
போட்டு, 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து, தேநீர்
போன்று தயாரித்து வடிகட்டி அருந்த தலைவலி நீங்கும்
78.
வெற்றிலைகளை
எடுத்து நன்றாக அரைத்து நெற்றியில் பற்றுப் போட தலைவலி நீங்கும் .
79.
ஒரு
தம்ளர் வெந்நீரில் சிறிது எலுமிச்சை பழச்சாறு கலந்து குடிக்க தலைவலி கட்டுப்படும்.
80.
பட்டையை
சிறிது தண்ணீர் விட்டு பட்டுப்போல அரைத்து நெற்றியில் பற்றுப்போட தலைவலி நீங்கும்
81.
சிறிது
மல்லியையும், சர்க்கரையையும் எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து, குடிக்க
தலைவலி நீங்கும்
82.
சந்தனக்
கட்டையை தண்ணீர் விட்டு அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி பறந்துவிடும்.
83.
நெற்றியில்
சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி 15
முதல் 20 நிமிடங்கள் வரை அழுத்தித் தேய்த்துவர
தலைவலி நீங்கும்.
84.
சிறிது
பூண்டுப்பற்களை தண்ணீர் விட்டு அரைத்து,சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அருந்த தலைவலி குறையும்.
85.
ஆடாதோடை
இலையை கசாயமாக செய்து தொடர்ந்து 4
நாட்கள் குடிக்க, சளி, காய்ச்சல்
கட்டுக்குள் வரும்.
86.
ஐந்தாறு
துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு,
2 இலவங்கம், சேர்த்து அரைத்து நெற்றியில்
பற்றுப் போட தலைவலி குணமாகும்
87.
நொச்சி
இலை அல்லது கற்பூரவள்ளி இலையை சுடுநீரில் போட்டு ஆவிபிடிக்க, மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல், தும்மல், சளி பிடித்தல், இருமல், தலையில்
நீர்ஏற்றம், தலைவலி குணமாகும்.
88.
வெதுவெதுப்பான
நீரில் எலுமிச்சைச்சாறு, இஞ்சிச்சாறு, சிறிது உப்பு சேர்த்துப் பருக தலைவலி குணமாகும்.
89.
நீர்கோவை
மாத்திரையை உரைத்து பற்றுப்போட தலைவலி
தீரும்.
90.
ஒரு
தேகரண்டி கிராம்புடன் ஒரு சிட்டிகை கல் உப்பையும் அரைத்து பற்று போட தலைவலி தீரும்.
91.
பச்சை
கொத்துமல்லித் தழைகளை அரைத்து தினம் காலை எழுந்தவுடன் குடித்து வர தலைவலி நீங்கும்.
92.
1
பிடி கொத்தமல்லித் தழையை அரைத்துச் சாறு எடுத்து பனை வெல்லம் சேர்த்துச்
சாப்பிட, தலைசுற்றல் நீங்கும்.
93. கருஞ்சீரகததை
சுடுநீரிலரைத்து தலையில் தேய்க்க தலைவலி குணமாகும்
94.
விரலி மஞ்சளை அரைத்து சுட வைத்து பொறுக்கும் சூட்டில் உச்சந்தலை நெற்றியில் பற்று போட தலைவலி, காய்ச்சல் ஜலதோடம்நீங்கும்
95.சுக்கை நீர் விட்டு உரசி பற்று போட தலைவலி நீங்கும்.
96.பழுத்த எருக்குஇலையில் வேப்ப எண்ணெய்தடவி அனலில் காட்டி பிழிந்து மூக்கில் நசியம் விட ஒற்றை தலைவலி நீங்கும்.
97.முருங்கைக்காயை வேகவைத்து பிழிந்து சாற்றுடன் தேன் கலந்து இரு வேளைசாப்பிட ஜலதோஷ தலைவலி நீங்கும்.
95.சுக்கை நீர் விட்டு உரசி பற்று போட தலைவலி நீங்கும்.
96.பழுத்த எருக்குஇலையில் வேப்ப எண்ணெய்தடவி அனலில் காட்டி பிழிந்து மூக்கில் நசியம் விட ஒற்றை தலைவலி நீங்கும்.
97.முருங்கைக்காயை வேகவைத்து பிழிந்து சாற்றுடன் தேன் கலந்து இரு வேளைசாப்பிட ஜலதோஷ தலைவலி நீங்கும்.
தவிர்க்க வேண்டியவை;
சீஸ்,
சாக்லெட்டுகள், ஆட்டுக்கறி போன்றவற்றை
முழுவதுமாகத் தவிர்த்து விட. ஃபாஸ்ட் புட் மற்றும் மசாலா
உணவுகளை அறவே வேண்டும்.
சேர்க்க
வேண்டியவை;
வைட்டமின்
சி, வைட்டமின்
டி, வைட்டமின் பி12, புரதம், கால்சியம் ஆகியவை நிறைந்த உணவுகள், முட்டைக்கோஸ்,
காலிஃப்ளவர், வெந்தயக்கீரை போன்ற இலை வகைக்
காய்கறிகளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
1 கருத்து:
Useful information. தலைவலியால் அவதிப்படுபவர்களா நீங்கள்? கட்டாயம் இதை படியுங்கள் on IBC Tamil
கருத்துரையிடுக