1.
5கிராம் திரிபலாசூரணத்தை 200மிலி நீரிலிட்டுக் காய்ச்சி,
காயங்களை கழுவி, மத்தன் தைலம் பூசிவர காயங்கள்,
புண்கள் குணமாகும்
2.
பறங்கிப்பட்டை சூரணமாத்திரை2,தினம்3வேளை கொண்டு, குங்கிலிய வெண்ணை
அல்லது அருகன்தைலம் பூச தீப்பட்ட காயங்கள் குணமாகும்
3.
தவசுமுருங்கை இலைகளை இடித்து,வதக்கிக்கட்ட,அடிபட்ட காயம்,வீக்கம் குணமாகும்
4.
மஞ்சளை அரைத்துப் பூச சிரங்குகள்,அடிபட்ட
புண்கள்,கட்டிகள் குணமாகும்
5.
அரத்தையை வெந்நீரிலரைத்துப் பூச அடிபட்ட வீக்கம்,வலி
குணமாகும்
6.
முட்சங்கன் வேர்பட்டையை யரைத்துப் பூச அடிபட்ட
வீக்கம் கரையும்
7.
ஊமத்தைசாறு,தே.எண்ணை சமன் கலந்து,காய்ச்சி,வடித்துப் பூச புண்கள், அழுகிய புண்கள் குணமாகும்
8.
கோவை இலையை கசக்கிக் கட்ட ஆறாத புண்கள் ஆறும்.
9.
சிற்றாமுட்டி இலைகளையரைத்துப் பூச ஆறாத புண்கள்
ஆறும்
10.
அதிமதுரதூளை,நெய்விட்டுப் பிசைந்து பூச
காயங்கள்,வெட்டுக்காயங்கள் குணமாகும்
11.
அரிவாள்மனைபூண்டு இலைகளையரைத்துப் பூச.சாற்றினை
விட்டுக்கட்ட,
வெட்டுக் காயத்தினாலேற்பட்ட இரத்தப்போக்கு,காயம்
குணமாகும்
12.
அரிவாள்மனைபூண்டு இலைதூள்,சமன்
தேன்மெழுகு,சிறிது தே.எண்ணை கலந்து களிம்பு செய்துபூச
புண்கள்,காயங்கள் ஆறும்
13.
கீழாநெல்லியிலைகளையரைத்துக் கட்ட காயங்கள்
குணமாகும்
14.
ஓரிதழ்தாமரைசமூலத்துடன்,பச்சைக்கற்பூரம்,கோரோசனை கலந்து, நெய் சேர்த்துப் பூச புண்கள்,
காயங்கள் குணமாகும்
15.
சிவப்புக்குங்கிலியதூள்2கிராம்,200மிலிபாலில் கலந்து தினமும் காலை பருகிவர கட்டிகள் ,காயங்கள்
குணமாகும்
16.
சாதிக்காய் எணணையைத் தடவ புண்கள், காயங்கள்,பாரிசவாயு குணமாகும்
17.
நல்வேளைவிதை எண்ணையை பூச சொறி, சிரங்கு,புண் ஆறும்
18.
அண்டிக்கொட்டைதைலத்தை(முந்திரிக்கொட்டை)
குச்சியால் தொட்டு புண்கள்மீது வைக்க ஆறும். பித்தவெடிப்பு நீங்கும்.
19.
தொட்டாற்சுருங்கி சமூலச்சாற்றை தினமிருவேளை தடவ,அரைத்து
சுண்ணாம்பு சேர்த்துகட்ட வெட்டுக்காயங்கள் குணமாகும்
20.
வல்லாரை இலைச்சாறுடன்,சமன்
நெய் சேர்த்துப்பூச அடிபட்டகாயம், கொப்புளங்கள் குணமாகும்
21.
வெற்றிலையை நெய்தடவி வதக்கிப் பற்றிட
தீப்புண்கள் குணமாகும்
22.
மருதோண்றி இலைகளையரைத்துப் பூச கொப்புளங்கள்,தீக்காயங்கள்
குணமாகும்
23.
குங்கிலியம்,மெழுகு,வகைக்கு100கிராம்,சிறுதீயிலுருக்கி,350மிலி ந.எண்ணை சேர்த்துக் காய்ச்சி,துணியில் தடவிப் பற்றிட
புண்கள் ஆறும்
24.
சங்குப்பூவை நீரில் கொதிக்கவைத்து,பொறுக்கும்
சூட்டில் கழுவ யோனிப்புண்கள் குணமாகும்.
பால்வினைநோய்,வெள்ளைப்படுதலால் ஏற்படும் யோனி துர்நாற்றம்
நீங்கும்
25.
அருகம்புல்லுடன்,மஞ்சள்
சேர்த்தரைத்துப்பூசி,1மணிநேரம் ஊறவைத்து குளிக்க சொறி,
சிரங்கு,படர்தாமரை,புண்கள்,உடல்அரிப்பு குணமாகும்
26.
ஆமணக்கு எண்ணையை,தூய,மெல்லிய பருத்தி துணியில் ஊற வைத்துப் பற்றிட மார்புக்காம்புகளிலேற்படும்
வெடிப்புகள்,புண்கள் குணம் ஆகும்
27.
எருக்கிலைச்சூரணத்துடன்,வி.எண்ணை
சேர்த்துத் தடவ நாள்பட்ட புண்கள் குணம் ஆகும்
28.
கல்யாணபூசணிக்காயை வேகவைத்து,சதைப்பகுதியை
எடுத்து புண்கள்மீது கட்ட குணமாகும்
29.
கல்யாணமுருங்கைபட்டையை சிதைத்து,கொதிக்கவைத்த
நீரால் கழுவ புண்கள், தோல்நோய்கள் குணமாகும்
30.
தான்றிக்காயை நீரிலரைத்துப்பூச புண், சிரங்குகள்
குணமாகும்
31.
நாய்வேளை இலை10கிராம்,100மிலி நெய்யில் காய்ச்சி,வடித்துப்பூச புண்கள் குணம்
ஆகும்
32.
நுணா இலைகளையரைத்துப்பூச புண்கள், சிரங்குகள்
குணமாகும்
33.
கிணற்றுப்பாசான் இலைச்சாறுவிட்டு,அந்த
இலைகளை வைத்துக் கட்ட வெட்டுக் காயங்கள்,இரத்தப்போக்கு
குணமாகும்
34.
கிணற்றுப்பாசான் இலையுடன் சமன் மஞ்சள்
சேர்த்தரைத்துக் கட்ட புண்கள் குணமாகும்
35.
கிரந்திநாயகம் இலைகளையரைத்துக் கட்ட ஆறாத
புண்கள் ஆறும்
36.
நித்யகல்யாணிபூவை தே.எண்ணையில் வதக்கி,அந்த
எண்ணையில் அரைத்துப் பூச புண்கள் ஆறும்
37.
ஓரிதழ் அரளிப்பூவை,தே.எண்ணையில்,வதக்கி,அந்த எண்ணையிலரைத்துப் பூச புண்கள் ஆறும்
38.
மல்லிகை பூவையரைத்து,இரவில்,தொடையில் புண் உள்ள இடத்தில் வைத்துக்கட்ட குணமாகும்
39.
அரிவாள்மனைபூண்டு இலைகளையரைத்து,தேன்கலந்து,காயங்கள்மீதுபூச, தழும்பின்றி ஆறும்
40.
இளவெந்நீரில் குளித்து, இலுப்பை
புணணாக்குச் சூரணம்கொண்டு, தேய்த்துக் கழுவ, அழுகிய, நாட்பட்ட, சீழ்கோர்த்த புண்கள் ஆறும்.
41.
வெங்காயசாற்றுடன், மஞ்சள்தூள்
கலந்துபூச. தீக்காயங்கள் குணமாகும்
42.
எலுமிச்சை சாற்றுடன்,மஞ்சள்தூள்
கலந்துபூச,இரத்தக் காயங்கள் குணமாகும்
43.
மஞ்சளைசுட்டு,பொடித்து தினமிருவேளை கட்ட,நாட்பட்ட புண்கள் ஆறும்
44.
முடி அல்லது கம்பளியைக் கருக்கி,பொடித்து
அடிபட்ட புண்கள்மீது வைத்துக் கட்ட ஆறும்
45.
வேப்பங்கொட்டைபருப்பை பொடித்து, புரையோடிய
புண்களுக்கும், புழு நெளியும் இரணங்களுக்கும் வைத்துக் கட்ட
ஆறும்
46.
கெட்டியான டிகாஷனை தடவ,தீப்புண்கள்
குணமாகும்
47.
பெருங்காயத்தை இழைத்துப் பூச,காதுகளில்
தோடுபோட்ட புண்கள் ஆறும்
48.
வெங்காயத்தை இடித்துக் கட்ட,சிறுகாயங்கள்,புண்கள் ஆறும்
49.
அத்திப்பட்டை குடிநீர்கொண்டு புண்களை கழுவ
ஆறும்
50.
படுக்கை புண்களை சுத்தம் செய்து,குப்பைமேனி
இலைகளை வதக்கிக் கட்டிவர விரைவில் ஆறும்
51.
அடிபட்ட காயங்களை திரிபலாசூரணத்தில் கழுவி,திரிபலா
சூரணம்பூச ஆறும்
52.
அரக்குசூரணம் கொண்டு கட்ட,காயம்,இரத்தக்கசிவு குணமாகும்
53.
சோற்றுக்கற்றாழையை, தீப்புண்களின்மீது
தடவ குணமாகும்
54.
அருகம்புல்சாற்றை,புண்களில்
தடவ ஆறும். மூக்கிலிட மூக்கில் இரத்தம் வடிதல்
நிற்கும்
55.
காட்டாமணக்குப் பாலைத் தொட்டுவைக்க அழுகிய புண்கள்
ஆறும்
56.
மிளகாய்பூண்டு பாலைத் தொட்டுவைக்க,வெட்டுக்காயங்கள்,புண்கள் ஆறும்
57.
வெங்காயத்தை தே.எணணையில் காய்ச்சிப்பூச,காயங்கள்,புண்கள் விரைவில் ஆறும்
58.
மாசிக்காயை சுட்டு,சாம்பலை
தளமாய் வைத்தழுத்த வெட்டுக்காய உதிரப்பெருக்கு நிற்கும்
59.
பீட்ரூட்சாறு,தே.எண்ணை கலந்து பூசிவர தீப்புண்
ஆறும்
60.
மல்லிகையிலையையரைத்து,எள்நெய்யுடன்
சேர்த்துக் காய்ச்சி வடித்துப்பூச சீழ்புண்கள், ஆறாதபுண்கள் ஆறும்
61.
பீட்ரூட்சாறைத் தடவ தீப்பட்ட இடம் கொப்புளமில்லாமல்
ஆறும்
62.
அரசு தளிரிலைகளையரைத்துப் பற்றிட புண்கள் ஆறும்
63.
அரசுபட்டைதூள் கருக்கித் தே.எண்ணையில் கலந்து பூச
புண்கள் ஆறும்
64.
கானாவாழைஇலையை அரைத்துக் கட்ட படுக்கைப்புண் ,மார்புக்காம்பைச் சுற்றி
வரும் புண்கள் ஆறும்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலை இரவு ஆறாத புண்களுக்கு மேல் போட ஆறும்.
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலை இரவு ஆறாத புண்களுக்கு மேல் போட ஆறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக