பக்கங்கள்

13 டிசம்பர், 2017

அகத்தி

                                                                       அகத்தி                           

                   Sesbania grandiflor    a (L)  Poiret,;Papilionoideae   (Agati  grandiflora)    

  வளரியல்பு           ; சிறு மென் மர வகை.வெற்றிலைக் கொடி படர   பயிரிடப்படும்.

 இலை               ;   

மாற்றுப்பெயர்         ;

மருத்துவ பாகம்       ; இலை,பூ,வேர், பட்டை

செய்கை               ; வெப்பகற்றி,மலமிளக்கி

மருத்துவ குணம்       ;

செய்கை; இலகுமலகாரி,சமனகாரி,விஷநாசகாரி.

மருந்திடுதல் போகுங்காண் வன்கிரந்தி                                                                          திருந்த வசனஞ் செரிக்கும்-வருந்தச்                                                         சகத்திலெலு பித்தமது சாந்தியாம் நாளும்                                                      அகத்தியிலை தின்னுமவர்க்கு

அகத்திக்கீரையை உண்ணில் இடுமருந்தும்,பயித்திய தோஷமும் நீங்கும்.கடுவனும் வாய்வும் உண்டாம்.ஆகாரம் எளிதில் சீரணமாகும்.

              அகத்தி ப்பூ                         Agati  grandiflora flower
புகைப்பித்த மும்அழலார்பூரிக்கும் அந்த
வகைப்பித்த மும்அனலும் மாறும் – பகுத்துச்
சகத்தி லருந்தாத் தனியமிர்தே ! நாளும்
அகத்தி மலருக்கறி
செய்கை ;சமனகாரி,சங்கோசனகாரி.
சுருட்டு முதலிய புகைகளாலும் வெய்யில்லாலதி உஷ்ணாதிக்கத்தினாலும் பிறந்த பித்தங்களும் தேக அழலையும் அகத்திப்பூவினால் நீங்கும் என்க.
              
              அகத்தி வேர்                         Agati  grandiflora root
நல்லகத்தி வேரதனை நாடுங்கால் மேகமெனுஞ்
சொல்லகலுந்த தாகமறுஞ் சொல்லவெனின் – மெல்லமெல்ல
மெய்யெரிவுகையெரிவுமேகநத்தி னுள்ளெரிவு
மையெரிவும் போமென் றறி
செய்கை ; பலகாரி,சங்கோசனகாரி.
     நல்ல அகத்திமரத்தின் வேரால் வெள்ளை,விதாகம், உடல், உள்ளங்கை, ஆண்குறிநாளம்,பஞ்சேந்திரியமிவ் விடங்களில் உண்டாகும் எரிச்சல் இவைகள் நீங்கும்.
1.   அகத்திக்கீரையை காம்பு,பழுப்பு,புழுக்கள்,தூசி போகும்படி கழுவி தனிச் சாம்பாரிட்டோ,கீரை துவட்டலாகச் செய்தோ வாரமிருமுரை உண்டு வரத் தேக உஷ்ணம் தணியும்.கண்கள் குளிர்ச்சியடையும்.சிறுநீர் தாராளமாகப் போகும்.மலம் இளகலாகப் போகும்.மகோதர வீக்கம், நீரடைப்பு, பித்த மயக்கம் நீங்கும்.
2.   அடிபட்டு இரத்தம் சொரியும் காயங்களுக்கு இலையை அரைத்துக் கட்டச் சீழ் பிடிக்காமல் ஆறும்.
3.   சுத்தப்படுத்திய இலைச்சாறு அரைபடி, சமன் ந.எண்ணையில் பழகிய தைல மண்பாண்டத்தில் காய்ச்சி, மெழுகு பதத்தில் கஸ்தூரிமஞ்சள், சாம்பிராணி,பச்சைக் கிச்சிலிக் கிழங்கு,விலாமிச்சம்வேர் வகைக்கு 20 கிராம் தூள் செய்து போட்டு வடித்து வாரம் 1 நாள் தலைமுழுகி வர பித்தம் தணியும்.பித்தத் தலைவலி போம். அன்று பகல் நித்திரை, அலைச்சல், திரிச்சல் கூடாது.
4.   அன்று மலர்ந்த அகத்திப்பூ 40-60 கிராம் சுத்தம் செய்து பாலில் வேக வைத்துச் சர்க்கரை கூட்டி 5 -7 நாள் சாப்பிட பித்தம்,உட்காங்கை தீரும்.
5.   பூவை அரிந்து துவட்டலாக செய்து உண்டுவர பாடலில் கண்ட பல பிணிகளும் நீங்கும்.

6.   30-40 கிராம் வேர் பட்டையை இடித்து பழகிய மண்பானையிலிட்டு 8ல் 1ன்றாய்க் காய்ச்சி வடித்து,வேளைக்கு 30-50மிலி பருகிவர பித்தத்தா லெலுந்த தேக எரிச்சல்,துர்ப்பலம்,தாகம் முதலியவை நீங்கும்.உதிரக் கொதிப்பினால் சரீரத்தில் கண்ட தழும்புகளையும் அடக்கும்.

7.   மரப்பட்டை,வேர்ப்பட்டையையும் குடிநீர் செய்து குடித்துவர சுரம்,தாகம், கைகால் எரிவு,மார்பு எரிச்சல்,நீர்க்கடுப்பு,நீர்த்தாரை எரிவு,உள்ளங்கை உள்ளங்கால் எரிச்சல்,அம்மைச் சுரம் தீரும்.

                                            Sesbania grandiflora (L)  Poiret,;Papilionoideae   (Agati  grandiflora)      வளரியல்பு           ; சிறு மென் மர வகை.வெற்றிலைக் கொடி படர பயிரிடப்படும்.
 இலை               ;   
மாற்றுப்பெயர்         ;
மருத்துவ பாகம்       ; இலை,பூ,வேர், பட்டை
செய்கை               ; வெப்பகற்றி,மலமிளக்கி
மருத்துவ குணம்       ;
செய்கை; இலகுமலகாரி,சமனகாரி,விஷநாசகாரி.
மருந்திடுதல் போகுங்காண் வன்கிரந்தி                                                                                                  திருந்த வசனஞ் செரிக்கும்-வருந்தச்                                                                                                     சகத்திலெலு பித்தமது சாந்தியாம் நாளும்                                                                                      அகத்தியிலை தின்னுமவர்க்கு
அகத்திக்கீரையை உண்ணில் இடுமருந்தும்,பயித்திய தோஷமும் நீங்கும்.கடுவனும் வாய்வும் உண்டாம்.ஆகாரம் எளிதில் சீரணமாகும்.
          அகத்தி ப்பூ                         Agati  grandiflora flower
புகைப்பித்த மும்அழலார்பூரிக்கும் அந்த
வகைப்பித்த மும்அனலும் மாறும் – பகுத்துச்
சகத்தி லருந்தாத் தனியமிர்தே ! நாளும்
அகத்தி மலருக்கறி
செய்கை ;சமனகாரி,சங்கோசனகாரி.
சுருட்டு முதலிய புகைகளாலும் வெய்யில்லாலதி உஷ்ணாதிக்கத்தினாலும் பிறந்த பித்தங்களும் தேக அழலையும் அகத்திப்பூவினால் நீங்கும் என்க.
               அகத்தி வேர்                         Agati  grandiflora root
நல்லகத்தி வேரதனை நாடுங்கால் மேகமெனுஞ்
சொல்லகலுந்த தாகமறுஞ் சொல்லவெனின் – மெல்லமெல்ல
மெய்யெரிவுகையெரிவுமேகநத்தி னுள்ளெரிவு
மையெரிவும் போமென் றறி
செய்கை ; பலகாரி,சங்கோசனகாரி.
     நல்ல அகத்திமரத்தின் வேரால் வெள்ளை,விதாகம்,உடல்,உள்ளங்கை, ஆண்குறிநாளம்,பஞ்சேந்திரியமிவ் விடங்களில் உண்டாகும் எரிச்சல் இவைகள் நீங்கும்.
1.   அகத்திக்கீரையை காம்பு,பழுப்பு,புழுக்கள்,தூசி போகும்படி கழுவி தனிச் சாம்பாரிட்டோ,கீரை துவட்டலாகச் செய்தோ வாரமிருமுரை உண்டு வரத் தேக உஷ்ணம் தணியும்.கண்கள் குளிர்ச்சியடையும்.சிறுநீர் தாராளமாகப் போகும்.மலம் இளகலாகப் போகும்.மகோதர வீக்கம், நீரடைப்பு, பித்த மயக்கம் நீங்கும்.
2.   அடிபட்டு இரத்தம் சொரியும் காயங்களுக்கு இலையை அரைத்துக் கட்டச் சீழ் பிடிக்காமல் ஆறும்.
3.   சுத்தப்படுத்திய இலைச்சாறு அரைபடி, சமன் ந.எண்ணையில் பழகிய தைல மண்பாண்டத்தில் காய்ச்சி, மெழுகு பதத்தில் கஸ்தூரிமஞ்சள், சாம்பிராணி,பச்சைக் கிச்சிலிக் கிழங்கு,விலாமிச்சம்வேர் வகைக்கு 20 கிராம் தூள் செய்து போட்டு வடித்து வாரம் 1 நாள் தலைமுழுகி வர பித்தம் தணியும்.பித்தத் தலைவலி போம். அன்று பகல் நித்திரை, அலைச்சல், திரிச்சல் கூடாது.
4.   அன்று மலர்ந்த அகத்திப்பூ 40-60 கிராம் சுத்தம் செய்து பாலில் வேக வைத்துச் சர்க்கரை கூட்டி 5 -7 நாள் சாப்பிட பித்தம்,உட்காங்கை தீரும்.
5.   பூவை அரிந்து துவட்டலாக செய்து உண்டுவர பாடலில் கண்ட பல பிணிகளும் நீங்கும்.
6.   30-40 கிராம் வேர் பட்டையை இடித்து பழகிய மண்பானையிலிட்டு 8ல் 1ன்றாய்க் காய்ச்சி வடித்து,வேளைக்கு 30-50மிலி பருகிவர பித்தத்தா லெலுந்த தேக எரிச்சல்,துர்ப்பலம்,தாகம் முதலியவை நீங்கும்.உதிரக் கொதிப்பினால் சரீரத்தில் கண்ட தழும்புகளையும் அடக்கும்.
7.   மரப்பட்டை,வேர்ப்பட்டையையும் குடிநீர் செய்து குடித்துவர சுரம்,தாகம், கைகால் எரிவு,மார்பு எரிச்சல்,நீர்க்கடுப்பு,நீர்த்தாரை எரிவு,உள்ளங்கை உள்ளங்கால் எரிச்சல்,அம்மைச் சுரம் தீரும்.

கருத்துகள் இல்லை: