அமுக்கரா கிழங்கு Withania somnifera (L.;)Dun solananceae
வளரியல்பு ; 5 அடி உயரம் வளரக்கூடிய செடி.
மாற்றுப்பெயர்
; அஸ்வகந்தா,அசுவகெந்தி
இலை ;சிறு கிளைகளுடன் மாற்றடுக்கில் அமைந்த
இலை.
மருத்துவபாகம் ; இலை,காய்,வேர்.
செய்கை ; வியதாபேதகாரி,பித்தகாரி,உதரவாதஹரகாரி,ஜடராக்கினிவர்தினி,சமனகாரி,
காமவிர்தினி
மருத்துவ குணம் ;க்ஷயம்,வாதசூலை,பாண்டு,சுரம்,வீக்கம்,சலதோசம்
நீக்கும்.காமம் பெருக்கும்
கொஞ்சந் துவர்ப்பாங் கொடியகஞ் சூலையரி
மிஞ்சுகரப் பான்பாண்டு வெப்பதப்பு –விஞ்சி
முசுவுறு தோடமும்போ மோகம் அனலுண்டாம்
அசுவகெந் திக்கென் றறி
-பதார்த்த குண விளக்கம்-
- அமுக்கராப்பொடியை தேனில் குழைத்து 2கிராம் காலை மாலை சாப்பிட்டு வர உடல் பலவீனம், காசம்,பசியின்மை,மூட்டு வலி, ஜீரணக்கோளாறுகள்,உடல் வீக்கம்,முதுமைத்தளர்ச்சி ஆகியவை நீங்கும்,
- அமுக்கரா சூரணம் 10கிராம், கசகசா 30கிராம், பாதாம் பருப்பு 10கிராம், ,சாரப்பருப்பு, 5கிராம், பிஸ்தாப்பருப்பு 5கிராம் என இரவில் ஊறவைத்து காலையில் தோல் நீக்கி அரைத்து 200மிலி பாலில் கலந்து பனங்கற்கண்டு சேர்த்து 90 நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர காணாமல் போன இளமை மீண்டும் காணலாம்.
- இலையை மென்மையாய் அரைத்துப் பற்றுப்போட அரசபிளவை,எரிகரப்பான், பாலியல் நோய்ப்புண் குணமாகும்.
- பச்சைக்கிழங்கை வில்லையாய் நறுக்கி பாலாவியில் வேகவைத்து உலர்த்திப் பொடித்து 1 தேகரண்டி காலைமாலை தேனில் சாப்பிட்டுவர இடுப்பு பிடிப்பு விலகும்.
- சுத்தி செய்த பொடியுடன் சமன் சர்கரை கூட்டிதினம் 2வேளை 5கிராம், பசுவின் பாலில் கொடுக்க துர்நீர்,கபம்,சூலை,கரப்பான்,பாண்டு,மேகஅழலை, வெட்டை,வீக்கம், கட்டி,பித்தமயக்கம் நீக்கி தேஜஸ் தரும்.
- இலை,கிழங்கு சமனாய் அரைத்துப் பற்றுப்போட ராஜபிளவை,ஆறாத புண்கள். மூட்டு அழற்சியினால் ஏற்படும் வீக்கம் தீரும்.
- வேர்ச்சூரணம் 5கிராம் காலைமாலை தேனில் கொள்ளச் சளி கரைந்து (நிமோனியா) கபவாதசுரம் தீரும்.
- சூரணத்தைப்பாலில் குழைத்து வீக்கம்,படுக்கைப்புண் மீது பூச ஆறும்.
- வேர்ச்சூரணம்,தூதுவேளை சூரணம் சமன் கலந்து 5கிராம்,நெய்,வெண்ணெய், பால்- ஏதேனும் ஒன்றில்தினம் 3வேளை பத்தியத்துடன் கொள்ள சிலேத்துமக் காய்ச்சல், பக்கச்சூலைக் காய்ச்சல்(Plurasy)தீரும்.
- காயை அரைத்து படர்தாமரையில் தடவிவர தீரும்.
- கிழங்குடன் சுக்கு சேர்த்து அரைத்துப் பற்றிட கட்டி,வீக்கம் கரையும்.
- கிராம்பு1பங்கு,சிறுநாகப்பூ2பங்கு,ஏலம்4, மிளகு8, திப்பிலி1, சுக்கு32,அமுக்கரா64, சர்க்கரை128பங்கு என்ற விகிதத்தில் சுத்தம் செய்து பொடித்து,சலித்து,1-2கிராம், (அமுக்கராச்சூரணம்)
தினம்2
வேளை பாலுடன் கொள்ள வாய்வு, வயிற்றுப் புண் ஈரல்நோய்,விக்கல்,பாண்டு, வறட்சி, கைகால் எரிவு குணமாகும்.
- மேற்படி சூரணத்தை சர்க்கரை பாகில் தூவிக் கிளறி, நெய், தேன் சேர்த்து இறக்கி இலேகியமாகச் செய்தும் சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக