அக்கராகாரம் Anacyclus pyrethrum,Compositae
மாற்றுப்பெயர் ;
வளரியல்பு ; மலைப்பாங்கான பகுதிகளில் தரையில் படர்ந்து வளரும் சிறு
செடி
இலைஅமைப்பு ;
பூ,காய் ;
மருத்துவ பாகம் ; வேர்.
குணம் ; உற்சாககாரி,திரவகாரி,ஷோணகாரி.
தீர்க்கும் நோய்கள் ;
அக்கர காரமதன்பே
ருரைத்தக்கா
லுக்கிரகால த்தோட
மோடுங்காண் – முக்கியமாய்க்
கொண்டாற் சலமூறுங்
கொம்பனையே தாகசுரங்
கண்டாற் பயந்தோடுங்
காண்.
அக்கரகாரத்தால் பயங்கரமான வாத தோஷமும், தாகசுரமும் நீங்கும்.இதை
வாயிலடக்கிக் கொள்ளின் சலம் ஊறும்.
1. சிறு
துண்டு அக்கரகாரத்தை மென்று எச்சிலை சுவைத்து விழுங்க நாவின் அசதி,பல்வலி,உள்நாக்கு
வளர்ச்சி, தொண்டைக்கம்மல், தாகம் இவைகள் போம்.
2. 40 கிராம்
அக்கராவை இடித்து 2ல்1ன்றாய்க் காய்ச்சி தினம் 2-3 வேளை வாய் கொப்புளித்துவர வாய்விரணம்,தொண்டைப்புண்,
பல்வலி, பல்அசைவு, தீரும்.
3. இதை
தனியாகவோ அல்லது மற்ற சரக்குகளுடன் சேர்த்தோ பொடி செய்து பல் துலக்கிவர பற்சொத்தை நீங்கும்.
புழுக்கள் சாகும்.
4. முறைப்படி
குழித்தைலம் இறக்கி உணர்ச்சி குறைவான இடங்களில் தேய்க்க உணர்ச்சி உண்டாகும்.இலேசாகப்
பூசிப் புணர இன்பம் அதிகரிக்கும்.
5. சூரணத்துடன்
சமன் சோற்றுப்பு சேர்த்து காடி விட்டரைத்து உண்னாக்கிற் தடவ அதன் சோர்வு நீங்கும்.நாவில்
தடிப்பை மாற்றும்.
6. சூரணத்தை
மூக்கிலூத மூர்ச்சை தெளியும்.பற்கிட்டலையும் திறக்கும்.
7. சூரணத்தை
நசியமிட காக்கைவலிப்பு தணியும்.அதனால் ஏற்பட்ட நரம்புப் பிடிப்பு தீரும்.
8.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக