பக்கங்கள்

15 நவம்பர், 2017

இரத்தச் சர்க்கரை (Blood sugar)

                                               

                                           இரத்தச் சர்க்கரை
                  
             கவலை வேண்டாம்


  இன்றைய உலகில் ஜாதி,மதம்,வயது வித்தியாசம் பாராமல் அனைவரையும் மருந்து 

உட்கொள்ளச் செய்வது இரத்தச் சர்க்கரை(Blood sugar) எனும் நோயாகும்.
    இது எப்படி உருவாகிறது? நம் உடலில் உள்ள முக்கியமான உறுப்பு கணையமாகும். 

இதில் உள்ள இன்சுலின் என்னும் சுரப்பியில் இன்சுலின் என்னும் திரவம் சுரந்து நாம் 

உண்ணும் உணவில் உள்ள சர்க்கரைச் சத்தை குளுக்கோசாக மாற்றி கல்லீரல் மூலமாக 

சேமித்துக் கொள்ளும்.
    இன்சுலின் சுரப்பியானது நம் உடலுக்குத் தேவையான அளவு இன்சுலினை 

எப்போதும் சுரக்கச் செய்யும்.சுரப்பியோ, கணையமோ பழுது பட்டாலொழிய அளவு 

குறையாது.இது அதிகமாகச் சுரந்தால் உடலில் அபரிமிதமான வளர்ச்சி காணப்பட்டு 

பூதம் போல் காணப்படுவர்..
   இது உணவில் உள்ள தரமான சர்க்கரையை மட்டுமே ஏற்றுக்கொள்ளும்.தரமற்ற 

சர்க்கரையானது சிறுநீரகம் மூலம் சுத்தப்படுத்தப்படுவதற்காக இரத்தத்திலேயே சுற்றிக் 

கொண்டிருக்கும்
   இதனால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் செய்ய வேண்டியது a1c எனப்படும் 3 

மாதங்களுக்காண இரத்தச் சர்க்கரை பரிசோதனையாகும்.பின்னர் கணையத்திலிருந்து 

இன்சுலின் சரியான அளவு சுரக்கிறதா என்பதை அறிய வேண்டும்.பின்னரே 

இன்சுலினுக்காக மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.
     இன்சுலின் சரியான அளவில் சுரந்து இரத்தச்சர்க்கரை அதிகமிருப்பின் உணவு 

முறையில் சரி செய்து கொள்ள வேண்டும்.அவ்வாறின்றி சரியான அளவு சுரக்கும் 

பட்சத்தில் கூடுதலாக மருந்துகள் ஏற்றால் இன்சுலின் தனது சுரப்பைக் குறைத்துக்

கொண்டே வந்து சுரப்பை நிறுத்தி செயலிழந்து நிரந்தர நோயாளியாக்கிவிடும், 

   இரத்தத்தில் ஹீமோ குளோபின்(RBC) அளவு குறைந்து இருந்தாலும் சர்க்கரை அதிகம் 

காட்டும்.எனவே முறையான பரிசோதனைகள் செய்தபின்னரே மருந்துகள் உட்கொள்ள 

வேண்டும். உணவுமுறையில் இனிப்புக்கு எதிர்மறையான சுவை (கசப்பு,காரம்)

களையும்,சமச் சுவை(புளிப்பு)களையும் சேர்த்து வந்தாலே கட்டுப்படுத்திவிட முடியும்.

கருத்துகள் இல்லை: