பக்கங்கள்

15 நவம்பர், 2017

அறிந்து கொள்வோம் - இரத்த அழுத்தம்



          இரத்த அழுத்தம் – ஒரு நோயா?

இன்று அனைவரும் இரத்த அழுத்தம்  - நோய் என்று கருதி மருந்து வில்லைகள் எடுத்துக்

கொண்டு இருக்கிறோம். உண்மையில் இரத்த அழுத்தம் என்றால் என்ன என்பதை யாருமே 

சிந்திப்பது இல்லை.

     இதயம் என்னும் தானியியங்கி மோட்டார் உடலின் பல பாகங்களுக்கும் இரத்தத்தை

 கொண்டு செல்கிறது. இதன் கட்டுப்பாட்டு அறை மூளை .சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் 

இது இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும்.

      அதிக உடல் உழைப்பின் போதும் மன அழுத்தத்தின் போதும் இரத்த அழுத்தம் அதிகமாக 

இருக்கும். உதாரணமாக ஒரு மாணவன் ஒட்டப்பந்தயத்தில் ஓடி முடித்தவுடன் பார்த்தால் இரத்த 

அழுத்தம் அதிகமாக இருக்கும்.அதே மாணவன் தேர்வு எழுத போகுமுன்போ அல்லது 

தேர்வு,போட்டி முடிவுகள் வெளியாகும் நேரத்திலோ இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்.

       உடலில் காயங்கள் ஏற்பட்டு இரத்தம் வெளியேறும்போது அதனை தடுக்க இரத்த அழுத்தம் 

குறையும். இச்சமயம் பதட்டமும்,சோர்வும்,மயக்கமும் உண்டாகும்.எனவே மன நிலை,உடல் 

நிலைக்கேற்பவே இரத்த அழுத்தம் இருக்கும்.

      நீங்கள் மருத்துவரிடம் முன் அனுமதி பெற்று அந்த நேரத்திற்கு பிரயாணம் செய்து, 

மருத்துவமனையில் காத்திருந்து,அங்குள்ளவர்களிடம் நோயைப் பற்றிப் பேசி,சிந்தித்து, பின் 

சோதனை செய்யும்போது உங்களுக்கு இரத்த அழுத்தம் கூடுதலாகவே இருக்கும்.



           இதற்கு மனமே காரணம்

       இந்திய மருத்துவ சாஸ்திரத்தின்படி இரத்த ஒட்டத்தை நாடித்துடிப்புகளின் மூலம் 

காணும் முறைகளை விளக்கியுள்ளனர். இதன்படி காலம்,உடல்நிலை,வயதுகளுக்கேற்ப ஒருவரின் 

நாடி வித்தியாசப்படும்.

காலங்கள் ; சித்திரை,வைகாசி மாதத்திற்கு காலையிலும்,ஆனி,ஆடி,ஐப்பசி,கார்த்திகைக்கு 

மதியமும், மார்கழி, தை,மாசிக்கு மாலையிலும்,ஆவணி,புரட்டாசி,பங்குனிக்கு இரவிலும் 

தெளிவாய் இருக்கும்.


நேரங்கள் ;நடந்து(பிரயாணம் செய்து) தேகம் களைத்திருந்தாலும்,சாப்பாடு,சுடு பதார்த்தங்கள் 

(காபி,டீ),சாராயம், புகையிலை போன்றவை எடுத்திருந்தாலும், வெயில்,தூக்கமின்மை ,சுரம், 

மனசஞ்சலம்,அதிக பலவீனம்,இரத்தம் வடிதல் ஆகியவைகளினாலும் படபடவென்று ஓடும்.

பசி,விசனம்(கவலை),குளிர்,அதிக நித்திரை களினால் குறையும்.

நாடி துடிப்பு ; குழந்தை பிறந்தவுடன் 140  - பாலியத்தில் 120-130, -குழந்தையில் 100, -இளமையில் 

90, - முழுமையான(பருவ) ஆண் 70-75, - (பருவ)பெண் 75-80, -முதுமையில் 75-80, -ஹீன பருவத்தில் 

70, -உட்கார்ந்திருக்கும்போது 40,- நிற்கும்போது 70, -படித்திருக்கும்போது 67,-  என நேரங் 

காலங்களுக்கேற்ப மாறுபடும். விருத்தர்,பாலர்,க்ஷயரோகி,தரித்திரர்,சிற்றின்பஞ் 

சேர்ந்தவர்கள், தண்ணீரில் மூழ்கியவர்கள் உண்மை தெரியாது.நாடி பார்க்கும் ஸ்தானத்திற்குமேல் 

யாதொரு கட்டிருந்தாலும்,பூமியில் கரத்தை ஊன்றியிருந்தாலும்காலைக் கட்டிக்கொண்டிருந்தாலும் 
 

சரியாகத் தெரியாது.


          இவ்வாறு இந்திய மருத்துவ சாஸ்த்திரத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. நாடி துடிப்பு 

என்பது இதய துடிப்பாகக் கொண்டாலும் கூட இரத்த அழுத்தமும்,இதயத் துடிப்பும் ஒன்றுடன் 

ஒன்று சம்பந்தப்பட்டவையே.

       எனவே இரத்த அழுத்தம் என்பது கவலை தரக்கூடிய ஒன்றில்லை.குளிர்ந்த நீர் அதிகம் 

பருகினாலே இரத்த அழுத்தம் சரியாகும் என்கிறது அமெரிக்க ஆய்வு.மனதை சலனமின்றி 

வைத்துக்கொண்டாலே போதுமானது.

         உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் என்பதுகோடி நினைந்து எண்ணுவன என்கிறார் 

ஔவையார். வீண் சிந்தனை தவிர்த்து, மனதை செம்மையாக்கிக் கொள்ள இரத்த அழுத்தம் 

நம்மை அண்டாது.

         பாதி நோய்க்கு ஆதி காரணம் மலச்சிக்கல் என்கிறது வைத்திய சாஸ்திரம்.

மலச்சிக்கல் இன்றி உடலை நோய் அணுகாவண்ணம் பாதுகாத்து மனதை உபாதைகளில் 

ஈடுபடாவண்ணம் தடுத்தாலே நோயின்றி வாழ முடியும். 

     மேலும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான உடல்வாகு கிடையாது. 

கப,வாத,பித்த,பித்தவாத,கபவாத, வாதபித்த உடல் என்று உள்ளது.எனவே ஒருவருக்கு பொருந்தும் 

மருந்து எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. நாம் உண்ட உணவினால் நம் 

உடலே தினம் மாறுபடும்.எனவேதான்

     நோய்நாடி நோய்முதல்நாடி அதுதணிக்கும்

     வாய்நாடி வாய்ப்பச் செயல்    என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
 

 எனவே உணவுப் பழக்கத்திலும் அன்றாட வாழ்க்கை 

நடைமுறையையும் மாற்றி அமைத்து நோயின்றி 

வாழ்வோம்

கருத்துகள் இல்லை: