அதிமதுரம் Glycyrrhiza glabra L,;papilionoideae
வளரியல்பு ;சிறு செடி
இலை ; மாற்றடுக்கில் அமைந்த இலைகளும்,நீல நிறப் பூக்களும்.
மருத்துவ பாகம் ; உலர்ந்த தண்டு
செய்கை ;கபஹரகாரி,அந்தர்ஸ்திக்தகாரி,இலகுமலகாரி,ரக்தஸ்தம்பனகாரி,ஸோனகாரி,
பித்தகாரி,தாதுக்ஷீணரோதி
மருத்துவ குணம் ;ஆயுதங்களிலாலுண்டான சத்தியோவிரணம்,வாதாதிகளாற்
பிறந்த
நிஜவிரணம்,நாவறட்சி,நேத்திரநோய்,உன்மத்தம்,விக்கல்,5விதமான வலிகள்,
வெண்குட்டம்,பயித்தியம்,எலும்புருக்கி,கிரிச்சரம்,மதமூர்ச்சை,பித்தவிஷபாகம்,சுரம்,
வாதசோனிதம்,காமாலை,தாவர சங்கம விஷங்கள்,குய்யரோகம்,சுக்கிலநஷ்டம், புகையிருமல்,முகபாகம்,சிரநோய்,ஓஷ்டரோகம்,சோமரோகம்,ஸ்தனவித்திரிக்கட்டி,
போம்.
கத்தியரி முப்பிணியால்
வருபுண் தாகங் கண்ணோயுன் மாதம்விக்கல்
வலிவெண் குட்டம்
பித்தமெலும் புருக்கிச்
சரமா வர்த்த
பித்தமத மூர்ச்சைவிட
பாகம்வெப்பந்
தத்திவரு வாதசோ ணிதங்கா
மாலை
சருவவிடங் காமியநோய்
தாதுநட்டங்
குத்திரும லாசியங்க
மிதழ்நோ யிந்து
குயப்புண்னுபோ மதூக
மெனக் கூறுவாயே.
பாரிலதி மதுரம்பால தனைவாயிலிட்டு
ஊறிவருஞ் சுவையைஉட் கொள்ளக் – காரிகையே
குத்திருமற் தன்னோடுகூறு குரல்வளையி
லெத்திவ ருங்கபமு மேது
- அதிமதுரம், திராட்சை சமமாகப் பொடி செய்து 100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வர, ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள் சாப்பிட நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
- அதிமதுரத்தை நன்கு பொடித்து 1 -2 கிராம் தேன் சேர்த்துச் சாப்பிட்டு வர, மார்பு,ஈரல்,இரைப்பை,தொண்டை ஆகியவற்றில் உள்ள வறட்சி தீரும். இருமல்,நாட்பட்ட மூலம்,தொண்டைகரகரப்பு,நரம்புத்தளர்ச்சி தீரும்.
- அதிமதுரம், கடுக்காய், மிளகு சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணித்து 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட, அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.
- அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமன் எடுத்துப் எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி,காலைமாலை பசும்பாலில் சாப்பிட்டுவர, மஞ்சள் காமாலை தீரும். புளியில்லா பத்தியம்.
- அதிமதுரம், தேவதாரம் வகைக்கு 35 கிராம், வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுக்க சுகப்பிரசவம் ஏற்படும்.
- அதிமதுரம்,சோம்பு சமஅளவு இடித்துச் சலித்து, இரவு படுக்கும் போது 6 கிராம் பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் இருக்காது.
- சோம்பு,அதிமதுரம்,சர்க்கரை தலா 50 கிராம்,கொடிவேலி வேர்பட்டை 25கிராம் பொடித்து,காலைமாலை 1கிராம்,தேனில் சாப்பிட்டுவர,தலைவலி,ஒற்றைத் தலைவலி,தீராத மண்டையிடி தீரும்.
- அதிமதுரச் சூரணம், சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 4 வேளை சாப்பிட்டுவர, இரத்தவாந்தி நிற்கும். உள் உறுப்பு ரணங்கள் ஆறும்.
- அதிமதுரம்,வால்மிளகு,சித்தரத்தை,திப்பிலி வகைக்கு 5 கிராம் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை 30 மில்லி வீதம் சாப்பிட இருமல் தீரும்..
- அதிமதுரபால்,வாதுமைப்பிசின்,வேலம்பிசின்,கோதுமைப்பால்(உலர்ந்தது) வகைக்கு 10 கிராம், கற்கண்டு சேர்த்து மெழுகுபோல் அரைத்து கடலை அளவு மாத்திரை செய்து,வேளைக்கு 1மாத்திரை,தினம்3வேளை வாயிலடக்க தொண்டை வறட்சி, தொண்டைப்புண் ரணங்கள்,வரட்டுஇருமல்,கோழையுடன் உள்ளஇருமல் தீரும்.(அதிமதுரபால் என்பது அல்வாவிற்கு கோதுமை பால் எடுப்பது போன்று எடுத்தல்)
- அதிமதுரத்தை எருமைபாலில் அரைத்து தேய்த்துக் குளித்து வர,வழுக்கையில் முடி முளைக்கும். இளநரை ஏற்படாமல் தடுக்கும்.முடி உதிராது.
- அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை தலா பத்து கிராம், முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இடித்து 200 மில்லி தண்னீரில் காய்ச்சி 50 மில்லியாக்கி வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வர, நெஞ்சுச்சளி வெளியாகும். இருமல் நிற்கும். ஆஸ்துமா நிவாரணமாகும்.
- அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் சம எடை சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும்.
- சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.
- அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்க,சுரக்கும் உமிழ்நீரை விழுங்க இருமல்,தொண்டைக் கரகரப்பு நீங்கும்.
- அதிமதுரம்,கோஷ்டம்,அக்கராகாரம்,விலாமிச்சம்வேர்,தக்கோலம்,சிறுநாகப்பூ, ஏலம்,தனியா,கிராம்பு,சிறுதேக்கு,மிளகு,திரிபலா,கூகைநீறு,முத்தக்காசு,இலவங்க பட்டை,இலவங்கபத்திரி,நன்னாரிவேர்,பருத்திவிதை பருப்பு,நெல்பொரி,சீரகம், வகைக்கு 5கிராம்,தாளிசபத்திரி 10கிராம்,பொன்னிறமாய் வறுத்து,பொடித்து (அதிமதுர சூரணம்)திரிகடி காலைமாலை சர்க்கரையுடன் சாப்பிட பித்தம், அரோசிகம்,நெஞ்செரிவு,கிறுகிறுப்பு,வாந்தி தீரும்.
- அதிமதுரம் 3பங்கு,தோல்நீக்கி நறுக்கி உலர்ந்த இஞ்சி 2பங்கு,திப்பிலி 2பங்கு, ஏலம்1,சீரகம் 1பங்கு,பொடித்து,4பங்கு சர்க்கரை கூட்டி 2வேளை தினம் 200மிலி காய்ச்சிய பசும்பாலில் சாப்பிட்டுவர பித்தம்,தலைநோய்,வெள்ளோக்காளம், தேககாங்கை,மயக்கம்,தேக ஊறல் போகும்.
- முலைப்பாலில் உரைத்துத் தீட்ட கண்களுக்கு ஒளி உண்டாகும்.
- 50கிராம் அதிமதுரம்,10கிராம் மிளகு ,இளவறுப்பாக வறுத்து,சூரணித்து 1 தேகரண்டி, தேனில் குழைத்துச் சாப்பிட்டுவர இருமல் கட்டுப்படும்
20. சித்தரத்தை,அமுக்கராகிழங்கு,தேவதாரு,கடுகுரோகிணி,கரியபோளம், வெள்ளை குங்கிலியம்,வசம்பு,கோஷ்டம்,மஞ்சள்,பூங்காவி,அதிமதுரம்,சிற்றாமுட்டிவேர், கோரைக்கிழங்கு,திரிகடுகு,சகஸ்ரவேதி,வெட்டிவேர், விலாமிச்சைவேர்,
கடல் நுரை, அகில்கட்டை,சந்தனம் ,வகைக்கு சமன் பொடித்து 2சிட்டிகை உச்சந் தலையில் அழுத்தி தேய்த்து.நுகர ,சளிகட்டு நீங்கும் குழந்தைகளுக்கு ஆகாது.
21. ஆடாதொடையை தேன் விட்டு
வதக்கி,தாளிசபத்திரி.அரிசிதிப்பிலி, அதிமதுரம் சமன் பொடித்துப் போட்டு,4ல்1ன்றாய்க் காய்ச்சி,50மிலி அருந்திவர காசநோய், இருமல்,இரைப்பு குணமாகும்
22. கரிசாலைசாறு,ந.எண்ணை வகைக்கு 1லி,அதிமதுரதூள் 40கிராம், கலந்து, காய்ச்சி வடித்து,1தேகரண்டி கொள்ள இருமல் தீரும். தலை முழுகியும் வரலாம்
23. சித்தரத்தை,பேரீச்சம்பழம்,சுக்கு,அதிமதுரம்
வகைக்கு10கிராம், ஒன்றிரண்டாய் நறுக்கி,50மிலி
பால்,50மிலி நீர் சேர்த்து காய்ச்சி, கற்கண்டு
கலந்து காலை மாலை 50மிலி சாப்பிட்டுவர வறட்டுஇருமல், சளியுடன்
கூடிய இருமல், சுரத்துடன் கூடிய இருமல் தீரும்.
24. நன்னாரி,
அதிமதுரம், நெய்தல் கிழங்கு,கோஷ்டம், வசம்பு சேர்த்து புளித்த கஞ்சி விட்டரைத்து
சமன் ந.எண்ணை கூட்டித் தேய்த்துவர ஒற்றை தலைவலி குணமாகும்
25. பற்பாடகம்,நிலவேம்பு,சுக்கு,அதிமதுரம்,சீரகம் வகைக்கு 10கிராம்,4ல் 1ன்றாய் காய்ச்சி,தினம்6வேளை,20-60மிலி கொடுக்கச்
சுரம் தீரும்
26. சுக்கு,மிளகு,சாதிபத்திரி,சாதிக்காய்,ஏலம்,கிராம்பு,கசகசா,அதிமதுரம், கற்கண்டு வகைக்கு சமன் பொடித்து,3மணிநேரத்திற்கொருமுறை
3.5 கிராம் (1விராகனெடை) 3 நாள்,உணவுக்கு முன் சாப்பிட சகல சுரங்களும் தீரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக