1.காலை எழுந்தவுடன் நிதானமாக 1லி தண்ணீர் பருகுங்கள் இதற்காக 30-40 நிமிடங்கள் ஆனாலும் பரவாயில்லை. இதனால் மலச்சிக்கல் ஏற்படா வண்ணம்.வரண்டுபோன திசுக்கள் புத்துணர்வு பெறுகின்றன.திசு இழப்பு குறைகிறது. 2. காலை பல்துலக்கும் போதும்,குளிக்கும்போதும் தொண்டைக்குழியை சுத்தம் செய்யுங்கள். அப்போது நாசியும் சேர்ந்து சுத்தமாகும். இதனால் தொண்டை, நாசியிலுள்ள சளி,தலையிலுள்ள நீர் இறங்கி சுவாசம் சீராகும்.தலைவலி,ஜலதோஷ தொல்லை எழா. 3.காலையில் மனதிற்க்கு பயிற்ச்சியும் மாலையில் உடலுக்கு பயிற்ச்சியும் கொடுங்கள். காலை உடலை வருத்தாமல் தியானம், மூச்சுப்பயிற்ச்சி, யோகா செய்வதால் மனம் அமைதியடைந்து படபடப்பு (டென்ஷன்) இரத்த அழுத்தம்(BP) ஏற்படுவதில்லை.வீண் சத்து இழப்பு(CALORIE LOSS) இல்லாமையால் பணிகளை செவ்வனே செய்ய முடிகிறது. மாலையில் உடலுக்கு பயிற்சியால் உணவு செரித்து,கொழுப்புகள் போன்றவை கரைந்து விடுகின்றன. 4.உணவு உண்டபின் அரைமணி நேரம் கழித்து தண்ணீர் அதிகம் பருகுங்கள். தண்ணீர் அதிகம் பருகுவதால் உணவு கரைந்து எளிதாக குடலுக்குள் செல்வதால் குடல்வாயு கலைகிறது. அதனால் அஜீரனம்,முதுகுவலி,மூட்டுவலி ஏற்படுவதில்லை 5.இரவு எளிய உணவுகளை முன்னிரவில் (8மணிக்குமுன்) எடுத் பழமும் பாலும் மட்டும் சாப்பிடுங்கள். 6.இரவு அதிகம் கண் விழிக்காதீர்கள்.கணிணி,
தொலைக்கா
பறவைகள்,விலங்குகள் கூட மாலையில் தம் இருப்பிடம் திரும்பி ஓய்வெடுக்கும்போது, நாம்மட்டும் விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் இரவு விழித்து ஆரோக்கியம் கெடுப்பது ஏன் ? தண்ணீரில் உண்டான உடலுக்கு, பின்னர் தண்ணீர்காட்ட மறுப்பது ஏன்? |
சித்தர்கள் கண்டறிந்த அற்புதமான வைத்திய முறை சித்த மருத்துவம். அவற்றில் எளிமையான அஞ்சறைப்பெட்டி மருந்துகளை நம் பாட்டிமார்கள் பயன்படுத்தி நம்மை வளர்த்தனர். பக்கவிளைவுகளற்ற, பெரும் பொருட்செலவு இல்லாத இந்த முறையைப் பின்பற்றி ஆரோக்கியமாக வாழுங்கள். நீங்கள் அறிந்தவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
17 ஏப்ரல், 2013
ஆரோக்கிய வாழ்விற்க்கு சில அன்றாட பழக்கங்கள்
8 ஏப்ரல், 2013
அதிகாலை குளியல் மகத்துவம்
காலையில் படுக்கை தேனீர்அருந்துபவரா நீங்கள்? இது
உங்களுக்குத்தான்! அதிகாலையில் விழித்து எழுபவர்களை பற்றிய இலண்டன் பல்கலை
ஆய்வை கீழே படியுங்கள்.
அதிகாலையில் பிரம்மமுகூர்த்தத்தில் செய்யும் செயல்கள் இரட்டிப்பு பலன் தரும் என்று முன்னோர்கள் கூறி அதிகாலை எழும் பழக்கத்தை உண்டாக்கினார்கள்.
பாரதியாரும் காலை எழுந்தவுடன் படிப்பு என்கிறார். கோவில்கள்,ஆஸ்ரமங்கள், காலை 5-5.30மணிக்கு,பூஜைக்காக அழைக்கிறார்கள் வேதங்கள் படிக்கிறார்கள். காலை 3 முதல் 4 வரை தேவகுளியல், மானிடர் குளிக்கலாகாதென்றும், 4 முதல் 6 வரை மானிடக் குளியலென்றும், சூரியோதயத்திற்க்குப் பின் ராட்சச குளியல் குளிக்கலாகாதென்றும் வகுத்து அதிகாலை எழும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள். அதுவும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிப்பதால் நாடி நரம்புகள் புத்துணர்ச்சி பெறுகின்றன.வியாதியஸ்தர்கள் மட்டுமே வெந்நீரில் குளிக்கலாம்.
இப்படி உடலை கெடுக்கும்-சோம்பேறியாக்கும் பழக்கம் நமக்கு தேவையா?
அதிகாலையில் விழித்தெழுங்கள்!
சுறுசுறுப்பாயிருங்கள்!!
மேலை நாட்டினரை நம் கலாச்சாரத்திற்க்கு வரும்போது நீங்கள் ஏன் அவர்களை
போல் மாறுகிறீர்கள்?
நாம் நாமாகவே இருப்போம்!
நமது கலாச்சாரம்,பண்பாடு காத்து -ஆரோக்கியமாய் வாழ்வோம்!

அதிகாலைக் குளியல் தங்கத்திற்கு சமம். தங்கத்தை சுடாக்கியபின் சில விநாடிகளில் சுடு ஆறிவிடும். அது போல் பிரம்ம முகூர்த்த குளியலில் உடல் சுடு முழுமையாக வெளியேறுகிறது. ஆறுமணிக்கு பின் ஒரு மணி நேரத்திற்குள் குளிப்பது வெள்ளிக்கு சமம். உடல் சுடு பாதிதான் வெளியேறுகிறது. ஏழுமணிக்கு பின் குளிப்பது இரும்பிற்கு சமம். இரும்பு சுடு ஆற அதிக நேரம் ஆகும் அதுபோல் உடல் சுடு முழுமையாக வெளியேறாமல் உடலிலேயே இருக்கும். குளிப்பதனால் கிடைக்க வேண்டிய பலன் கிடைக்காது.
மேலும் படுக்கையில் இருந்து வெறும் வயிற்றில் சூடாக
அருந்துவதால், இயல்பான நிலையிலிருக்கும் குடல் விரிவடைந்து,
பலமிழக்கின்றன.ஜீரண சுரப்பிகள் அழிந்து அஜீரணக்கோளாறுகள் உண்டாகின்றன.
இப்படி உடலை கெடுக்கும்-சோம்பேறியாக்கும் பழக்கம் நமக்கு தேவையா?
அதிகாலையில் விழித்தெழுங்கள்!
சுறுசுறுப்பாயிருங்கள்!!
மேலை நாட்டினரை நம் கலாச்சாரத்திற்க்கு வரும்போது நீங்கள் ஏன் அவர்களை
போல் மாறுகிறீர்கள்?
நாம் நாமாகவே இருப்போம்!
நமது கலாச்சாரம்,பண்பாடு காத்து -ஆரோக்கியமாய் வாழ்வோம்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)