பக்கங்கள்

29 ஜூன், 2013

முன்னோர் கூறும் நல்ல பழக்கங்கள்

ஆய்வுக்கு உதவும்  நமது உணவு பழக்கங்கள்

  கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடிமக்கள் நாம்  என்பதை நிரூபிக்கும் வகையில் நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்த
உணவுபழக்கங்கள் கூட இன்று ஆராய்ச்சி செய்யும் நிலையில் உள்ளது என்றால்  நாம் எந்த அளவு உலகின் முன்னோடியாக விளங்கினோம் எனபதை சிந்தித்து  பாருங்கள்.
                  மேல்நாட்டு மோகத்தால் நாகரீக உணவு பீசா பூசா கூசா என்று நாம் போகின்ற  நிலையில் நம் முன்ளோர்கள் கடைபிடித்துவந்த கஞ்சி பழைய சோற்றில் உள்ள  மருத்துவ குணங்களுக்கு இவை ஈடாகுமா?

  காலை நீராகாரம் பருகி,பழையசோறு சாப்பிடுவதால் உடல் எப்போதும்
குளிர்ச்சியாகவே இருக்கும்.இதனால் கடும் வெயில் என்றாலும் கூட நீர்
வியர்வையாக வந்து தோல்களில் நின்று உஷ்ணம் தாக்கா வண்ணம்
பாதுகாக்கிறது.குளிர்சாதன பெட்டியிலிருந்த நீரை வெளியே எடுத்தவுடன் நீர்
திவலைகள் காணப்படுவதுபோல வியர்வை செயல்படுகிறது.
   நிலத்தைவிட நீர் உஷ்ணமாகும் காலம் அதிகம் என்பது விஞ்ஞான உண்மை.
நிலமாகிய சரீரத்தை நீரான வியர்வை வந்து வரட்சியடையாமல் காக்கிறது.
  ஆனால் இன்று நாம் குளிர்சாதன கருவியை(A.C)பயன்படுத்துவதால் வியர்வை  வெளியேறாவண்ணம் தடை செய்யப்பட்டு உடலில் தங்கி பிணிகளுக்கு காரணிகளாக  அமைகின்றன.
  இன்று நாம் காலை சிற்றுண்டி என்று எடுத்துக் கொள்ளும் உணவுகள் சீரணமாக  அதிக நீர் தேவைப்படுகிறது.நீங்கள் சாப்பிடும் 4 இட்லிகள் சீரணமாக 1லி  தண்ணீர் தேவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.எனில் ஏனைய உணவுகளுக்கு  எவ்வளவு நீர் தேவைப்படும் என்று கணக்கிட்டு பாருங்கள்.
  காலை பணிகளின் காரணமாக நாம் இந்த உணவுகள் சீரணமாக போதுமான நீர்  எடுத்துக் கொள்வதில்லை யாதலால் உடல் வரட்சியாகி உஷ்ணமதிகரித்து பாதி  பிணிகளுக்கு காரணமாகிவிடுகிறது.
  கோதுமையின் கடைசிக்கழிவே மைதா என்றும்.அதனை தயாரிக்க பயன்படுத்தும் மூலபொருட்களால் பாதிப்புகள் உண்டாகின்றன என்றும், எனவே மைதாவை தடை செய்ய வேண்டும் என்றும் குரல்கள் இன்று நாட்டில் ஒலிக்கத் துவங்கி உள்ளன.எனில்  இதனால் தயாரிக்கப்படும் பீசா பிஸ்கட் புரோட்டா போன்ற உணவுகள் எத்தனை கேடு உண்டாக்கும் என்பதனை சிந்தித்து பாருங்கள்.
 தமிழன் என்றொரு இனம் உண்டு. தனியே அவனுக்கொரு குணம் உண்டு என்று நம்  முன்னோர்கள் நம் மண்ணுக்கும் உடலுக்கும் ஏற்ற உணவுகளை பயிர் செய்தும்  உண்டும் வாழ்ந்திருக்கிறார்கள்.நாகரீக காலத்தில் நாம் அவற்றை இழந்தாலும்  மீண்டும் புதுப்பிப்போம்
  ஆராய்ச்சி செய்யும் அளவு நாம் கொண்டிருந்த உணவுகள்,நடைமுறைகளை
பின்பற்றி மீண்டும் நம் பெருமையை நிலைநாட்டுவோம்.
   வருங்காலம் பயன்படுத்த அழிந்துவரும் நம்உணவு செயல்முறைகளை
கொடுத்து(வெளியிட்டு)ச் செல்வோம்

இன்று காடைக்கண்ணி, குதிரைவாலி, சாமை, வரகு போன்ற பயிர்கள்  காணாமல் போய்விட்டன. இவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எது நலம் தரும்   நடைபயிற்சி

நொறுங்கத்தின்றால் நூறு வயது என்பார்கள். அதாவது உணவு நன்கு
சீரணமாகும்வண்ணம் நிதானமாக மென்று உண்டால் அதிககாலம் ஆரோக்கியமாய்  வாழலாம் என்பது பொருள்.
   ஆனால் உண்பதற்க்கு கூட நேரமில்லாமல் நின்றுகொண்டே துரித உணவு(FAST FOOD)அதிவேகஉணவு(SUPERFASTFOOD) என்று போகும் இக்காலத்தில்    பலரும் அதிகாலையிலேயே புகைவண்டி,பூங்கா,சாலையோர
நடைபாதைகளிலோ,மைதானங்களிலோ,டிராக்சூட்,கேன்வாஸ் ஷு சகிதம் நடை பயிற்சி  செய்வதை(WALKING) நாம் பார்க்கலாம்.அவர்களில் ஒருவராகக்கூட நாமிருக்கலாம்.    மருத்துவர்களும் எந்த ஒரு பிணிக்கும் நடை பயிற்ச்சி மேற்கொள்ளச்  சொல்கிறார்கள். இதனால் காலையில் சுத்தமான ஓசோன்வாயு கிடைக்கிறது,உடலில் தேங்கும் கொழுப்பு (CHLOSTRAL) சத்துக்கள் (CALORIES) கரைந்து ஆரோக்கியம்
கிடைக்கிறது என்பார்கள். இது எநதளவு நலம் பயக்கிறது? இப்படி நலம் தரும்
நடைபயிற்சி எவ்வாறு செய்ய வேண்டும்?

          காலை வெறும் வயிற்றில் நடப்பதனால் உடல் உஷ்ணம் ஏற்பட்டு பித்தநீர் அதிகம் சுரந்து,இரவு உணவை சீரணித்து ஓய்வு நிலையில் இருக்கும் உணவு  நாளங்களை அழிக்கிறது. அதிகம் நடப்பதால் நரம்பு,தசைகள் முறுக்கேறி அடிவயிற்றில் வலி,தசை முறுக்கல், நரம்பு முறுக்கல் உண்டாகிறது.  நடைபயிற்சி முடிந்தபின்னர் இயல்புநிலை பயிற்சி (RELEASING
EXCERCISE) செய்யாததால் தினமும் முறுக்கேறும் தசை நரம்புகள் நாளடைவில்  பலமிழந்து உடைந்து விடுகின்றன.
   பாதணிகள் அணிந்து கொள்வதால் பாதங்களில் சமமான அழுத்தமே
கிடைக்கிறது.உச்சந்தலையில் துவங்கி பாதங்களில் முடியும் நரம்புகளுக்கு
போதுமான அழுத்தம்(ACCU PUNCTURE, ACCU PRESSURE) கிடைக்காமல் ,முழுபயனும்  கிடைப்பதில்லை.

  உணவு அனைத்தும் சீரணிக்கப்பட்ட நிலையில் செய்வதால் சர்க்கரை, ஊட்டச்சத்து(GLUCOSE,CALORIE) இழப்பு ஏற்பட்டு குறைந்த இரத்த
அழுத்தம் (LOW BP) ஏற்படுகிறது.இந்நிலையில் சிற்றுண்டி மேற்கொண்டு
பணிக்குச் செல்லும்போது இழப்பின் காரணமாக சோர்ந்திருந்தவை,உணவை சீரணிக்க  முடியாமல் சோர்வும் அசதியும் உண்டாக்குகின்றன.இதனால் பணிநாட்டமின்மை  தூக்கம் உண்டாகிறது. சிமெண்ட்,டைல்ஸ் களில் நடப்பதனால் உஷ்ணம்,குளிர்ச்சி உடலை தாக்குகின்றன.
             இங்கு வள்ளல் பெருமான் மாலை வெயில் உடலில்படும்படி உலாவுதல் நல்லது  என்றதையும்,பாரதியார் மாலை முழுவதும் விளையாட்டு என்பதையும் கருத்தில்  கொள்ள வேண்டும்.

   ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது ஆன்றோர் வாக்கு. ஆலயம் செல்வதால்  என்ன கிடைக்கப்போகிறது என்பது நாத்திக வாதம். ஆலயம் செல்லுமுன்  அதிகாலையிலேயே குளித்து விடுவதால் உடல் நன்கு குளிர்ந்து விடுகிறது.பின்  ஆலயம் சுற்றும்போது உண்டாகும் உஷ்ணம் குளிர்ச்சியை போக்கி புத்துணர்வு  தருகிறது.
   பாதணி இன்றி கல்தரைகளில் வலம் வருவதால் பாத நரம்புகள்
அழுத்தப்பட்டு(ACCU PUNBTURE,PRESSURE)நரம்புமண்டலம் தூண்டப்பட்டு பிணி
நீங்குகிறது.     தோப்புக்கரணமிட்டும்,கீழேவிழுந்தும், குனிந்தும்,கைகளை தூக்கியும் ,சம்மணமிட்டு அமரும்போதும் முறுக்கேறிய தசை நரம்புகள் இயல்புநிலைக்குத் திரும்புகின்றன.இது இயல்புநிலை திரும்பும்(RELEASING
EXCERCISE) பயிற்சியாகிறது.    தீர்த்தம்,பிரசாதம் அருந்துவதால் இலகுவான உணவால் வயிறு நிதானமாக சீரண  வேலையை துலக்குகிறது.
   ஓங்கி உயர்ந்த மதில்களுக்கிடையில் நடப்பதால் சுற்றுப்பற மாசுபட்ட
காற்று தடை செய்யப்பட்டு சுத்தமான காற்று கிடைக்கிறது.இதனால் சுவாசம்
சீராகி உடல் ஆரோக்கியம் கூடுகிறது.மனமும் அமைதியடைவதால் பணிகளை சிறப்பாக  செய்யமுடிகிறது.
   எனவே,ஆரோக்கியம் தரும் நடைபயிற்ச்சி எனபது ஆலயத்தில்தான்
உள்ளது. எனவேதான் கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றும், கோவில் இல்லா ஊர் பாழ் என்றும் கூறினர் பெரியோர். 
          கோவில் பிரகாரங்களை சுற்றும்போது அதுவும் இறை சிந்தனையோடு சுற்றும்போது உடலுக்கும் மனதிற்கும் நலம் தருவதோடு புண்ணியம் கிடைக்கிறது. கோவில்களில் கிடைக்கும் நலம் தரும் அதிர்வுகள் தெருவைச் சுற்றினால் கிடைப்பதில்லை.

இப்படி ஆரோக்கியத்திற்க்கு அடிகோலும் ஆலயம் காத்து, தொழுது நலமோடும்  வளமோடும் வாழ்வோம்!              

          வாரம் ஒருமுறை எண்ணெய்க்குளியல்,  மனைப் பலகையில் அமர்ந்து குளித்தல், நாசிசுத்தி,  எண்ணெய்க்குளியல் செய்த அன்று வெந்தயக் களி, தரையில் விரிப்பில் அமர்ந்து உண்ணுதல் போன்ற முன்னோர் கற்றுக்கொடுத்த பல நல்ல பழக்கங்கள் நம்மை விட்டுப் போய்விட்டதால் மருத்துவத்திற்கு ஏராளமாக செலவழிக்கும் நிலை ஏற்படுகிறது.  இவற்றை பின்பற்றி உடல்நலத்தைக் காத்துக்கொள்வோம்.