ஊமத்தையில் பல வகைகள் உள்ளன. மேலே காண்பது கரு ஊமத்தை. நீலம், வெள்ளை, மஞ்சள் என பல நிறங்களில் உள்ளன. எல்லா வகை ஊமத்தைகளின் பயனும் ஒன்றாக இருந்தாலும் கரு ஊமத்தை சற்று விசேஷமானது. ஊமத்தை வெளிப்பிரயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
- இதன் பிஞ்சை உமிழ்நீர் விட்டு அரைத்து தலையில் புழு வெட்டு ஏற்பட்ட இடங்களில் தடவ புழுவெட்டு நீங்கி முடி முளைக்கும்
- இதன் இலைச்சாற்றுடன் சமன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி தைலமாக்கி ஆறாத புண்கள், ரணங்கள் மேல் தடவி வர விரைவில் ஆறும்.
- இதன் இலையை உலர்த்தி சுருட்டி புகைபிடிக்க ஆஸ்துமாவினால் ஏற்படும் மூச்சு திணறல் தற்காலிகமாக நீங்கும். தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது.
- இலையை நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கட்ட மூட்டு வலி, வாதவலிகள் நீங்கும்.
- கரு ஊமத்தை சாறு பாதரசத்தை கொண்டு ரசமணி செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
1 கருத்து:
super tips.
கருத்துரையிடுக