சித்தர்கள் கண்டறிந்த அற்புதமான வைத்திய முறை சித்த மருத்துவம். அவற்றில் எளிமையான அஞ்சறைப்பெட்டி மருந்துகளை நம் பாட்டிமார்கள் பயன்படுத்தி நம்மை வளர்த்தனர். பக்கவிளைவுகளற்ற, பெரும் பொருட்செலவு இல்லாத இந்த முறையைப் பின்பற்றி ஆரோக்கியமாக வாழுங்கள். நீங்கள் அறிந்தவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
24 மார்ச், 2018
பால் Milk
பால் (MILK)
முலைப்பாற் பொதுக்குணம்
தன்னியமன்றோதிற் சருவதோஷங்களும்போம்
உன்னியதாபமொழியுங்காண்-சந்நியொடு
வாதசுரம்பித்தசுரம் வன்கபச்சுரந்தணியுங்
கோதில்வலுமையுண்டாங்கூறு
இதுவுமது
இருந்தோஷம்போக்கு மிகற்கிரிச்சந்தீர்க்கும்
அருந்துமருந்தி னனுபானம்-பொருந்தும்
அஞ்சனத்திற்காகு மறல்வறட்சிநீக்கிவிடும்
பஞ்சினடிமாதர்முலைப் பால்
(0)முலைப்பால் எழுவகைத் தோஷங்கள் வெப்பம்
சந்நிபாதம் வாதபித்த சுரங்கள் திரிதோஷம் வாதகிரிச்சரம் நாவறட்சி ஆகிய யிவைகளை
விலகி வன்மையைத் தரும் ஔஷத அனுபானத்திற்கும் கலிக்கத்திற்கும் ஆகுமென்க (தன்னியம்
என்பது முலைப்பால்)
கருமை-செம்மை-நிற மாதர்களின்
முலைப்பாற் குணம்
கரியநிறமாதர் கலசமுலைக்கீரம்
அரியவிழிக்காமருந்திற்காகா-திருநிலத்துள்
நோயணுகாச்செய்ய நுடங்கிடையார்தம்முலைப்பால்
தீயமுத்தோஷம் போக்குஞ்சேர்
()கரியநிற மாதர் முலைப்பால் கண்
வயித்தியங்களுக்கேயன்றி ஔஷதங்களுக் குபயோகமாகாது வியாதியில்லாத செம்மைநிற மாதர்
முலைப்பால் வாதாதி மூன்று தோஷங்களையும் போக்கும் –கீரம்=பால்
பரத்தையர் முலைப்பாற் குணம்
பரத்தையர்முலைப்பாற்குப் பார்முத்தோஷங்கள்
உரத்துவரும்வாதமு முண்டாகும்-இரத்தச்
சொறிகிரந்திபுண்ணுந் தொடர்கழணோய்சேருங்
குறியறிந்துநீக்கிக் கொடு
()வேசையர் முலைப்பாலால் திரிதோஷங்கள் வாதரோகம்
இரத்தச் சொறி கிரந்தி விரணம் கழல்வாதம் யிவை யுண்டா மென்க
பசும்பாற் பொதுக் குணம்
பாலர்கிழவர் பழஞ்சுரத்தோர்புண்ணாளி
சூலையர்மேகத்தோர் துற்பலத்தோர்-ஏழுமிவர்
எல்லார்க்குமாகு மிளைத்தவர்க்குஞ்சாதகமாம்
நல்லாய்பசுவின்பால் நாட்டு
()பசுவின் பாலானது பாலருக்கும் விருத்தருக்கும்
பழயசுரம் விரணம் சூலை பிரமேகம் துர்ப்பலம் அதிகஷ்கரோகம் ஆகிய யிவைகளை
யுடையவர்களுக்கும் ஆகுமென்க
வெண்மை- செம்மை-கருமை-கயிலை யென்னும் யின்னிற முள்ள
பசுக்களின் பாற் குணம்
வெண்பசுவின்பால்போக்கும் பித்தத்தைமெய்சிவந்த
வண்பசுவின்பால்போக்கும் வாதத்தை-கண்சிறந்த
காராவின்பால்போக்கு மையங்கலைப்பால்
ஆசமிர்தாந்தோஷ மறுக்கும்
()வெண்மைநிறப் பசுவின் பால் பித்தகோபத்தையும்
செம்மை நிறப்பசுவின் பால் வாததோஷத்தையும் கருமை நிறப்பசுவின் பால் கபரோகத்தையும்
கபிலை நிறப் பசுவின்பால் திரிதோஷத்தையும் போக்கும் கபிலையென்பது கருமை கலந்த
பொன்னிறமாம் என்க
காராம்பசுவின் பாற்குணம்
கண்ணோயகற்றுங் கயரோகந்தான்போக்கு
மண்ணிலுள்ளபால்தோஷ மகற்றுங்காண்-பெண்ணே
இரத்தபித்தம்போக்கு மிராசவசியங்
கறுத்தபசும்பாலதனைக் காண்
()காராம்பசுவின் பால் விழப்பிணிக்ஷயம்
மற்றைப்பாலின் தோஷங்கள் ரத்தபித்தரோகம் இவைகளை நிக்கும் ராஜவசியமாம் பெண்ணே
நாரைமான்
–கபிலையென்னும் இந்நிறமுள்ள பசுக்களின் பாற்குணம்
நாரைப்பசுவின்பால் நாளுமுயனோயகற்று
மரரைநிறப்பசும்பால் வாய்த்திடினோ-வேதையுறு
முப்பிணியும்போகு மொழிகபிலையின்பாலுந்
செப்பிணியும்போமே யிரங்கி
()நாரைப் பசும்பால் முயல்வலி தீர்க்கும் வாணிப்
பசும்பாலால் திரிதோஷமும் கபிலை நிறப் பசும்பாற்குப் பலபிணியும் நீங்குமென்க
கொம்பசையும் பசுவின் பாற்குணம்
கொம்பசையுமாப்பாலோ கூறுயுத்தம்போக்கிவிடுந்
தம்பவாதத்தைத் தருவிக்கும்-வம்புமுலை
மானேகேள்விந்துவை வளப்பிக்கும்வன்கபத்தைத்
தானேயெலுப்புமெனச் சாற்று
()கச்சணிந்த தனங்களையுடைய பெண்ணே அசைகின்ற
கொம்பையுடைய பசுவின்பால் பித்தரோகத்தை நீக்கும் தனுஸ்தம்பவாதம் சுக்கிலதாது கபநோய்
இவைகளை விளைக்கும்
மூன்றாமீற்று நான்காமீற்றுப்
பசுக்களின் பாற்குணம்
மூன்றாமீற்றீண்பான் முதிர்கபத்தைப்போக்கிவிடும்
என்றநான்காமீற்றெனும்பாலுங்-கூன்றுதிரி
தோடமகலுந் சுகமுண்டிங்வாப்பாற்சந்
தோடமெவர்க்குமுண் டாகும்
(0)மூன்றாம் ஈற்றுப் பசுவின்பால் நீடித்த
சிலேஷ்ம நோயை நீக்கும் நான்காம் ஈற்றுப் பசுவின்பாலுக்கு வாதாதி மூன்று
தோஷங்களும்நீங்கும் சரீர சவுக்கியமும் மகிழ்ச்சியும் வுண்டாகுமென்க
ஆகாப்பசுவின் பாற் குணம்
விஞ்சுவரணைதாராநோய் மிகுத்துங்கழலல்வெண்புள்ளி
துஞ்சியலைந்துமலமருந்தல் சுடுகாடேகியெலும்புணலிவ்
வஞ்சுவகையினாவின்பா லாகாதணுகிரறிரிதோஷம்
நெஞ்சிலடையுங்கயநோயா நிறைந்தவயதுங்குறைந்திடுமே
()ஆகாப் பசுவின்பால் ஐந்து வகைப்படும் அவையாவன
அரணைநோய் தாராநோய் மிகவுஞ் சுற்றுதலோடு வெண்மைப்புள்ளி தூங்கித் திரிந்து மலம்
அருந்தல் இடுகாட் டெலும்பு வுண்ணல் ஆகிய யிவைகளையுடைய பசுக்களின் பாலாம் யிவை
சேரும் கீல் வாதாதி மூண்றுதோஷங்களும் மார்பிற் சேர்ந்து க்ஷயத்தை விளைவிப்பதும்
ஆயுளைக் குறைப்பதுமா மென்க
பகற்பசுவின் பாற்குணம்
பகற்பால்சிசுக்கட்குப் பக்குவமென்றாலுந்
விகற்பமோடைப்பெருக்குமெய்யே-யெதற்குமிதத்
தீதடரச்செய்யுமித்தாற் சேராதுட்காய்ச்சுலனல்
தாதவிழும்பூங்குழலே சாற்று
()மகரந்தங்களுதிர் மலரணிந்த அழகிய
கூந்தலையுடையாளே பகற்பசுவின் பால் குழந்தைகளுக்கும் பக்குவமா மென்றாலும் பற்பல கப
நோயையும் தாம்பூலம் பளிப்பு முதலிய சேருமிடத்துக் கெடுதியையும் செய்யும்
உட்சூட்டையும் வெப்பத்தையும் நீக்குமென்க
இதுவுமது
பகற்பசும்பால்காச்சிப் பருகினழலும்
இகற்பமுமீளையு மிராவாம்-புகல்பித்த
வேகமும்போமேனியெல்லா மேயிருந்தாதுவுமாம்
போகமுமுண்டாகும் புகல்
()அயிலை நிகர்த்த கண்களையும் ஆராய்ந்திழைக்கப்
பெற்ற ஆபரணத்தை யுடைய பெண்ணே பகலிற்
சுரந்து இரவிற் கறக்கின்ற பாலை விதிப்படி காச்சி யருந்தில் தேகஅழற்சி கபரோகம்
சுவாசம் பித்தகோபம் நேத்திரவியாதி விந்துவின் கெடுதியாலனுசரித்த சிற்சில ரோகங்கள்
ஆகிய இவை நீங்கும்
தே,இராப்பசுவின் பாற்குணம்
இரவின்பால்கண்ணி லெலுபிணிபோக்கும்பின்
பரவியநோயும்போக்கும்-விரகமுற்றார்க்
கத்தியம்பன்னவிழி யாயிழையேயாவருக்கும்
பத்தியம் மென்றைக்கும்பார்
(0)தேகத்தில் மினுமினுப்பும் சுக்கிலப்
பெருக்கமும் மாதர்மேல் விருப்பமும் உண்டாகும் இது பத்தியத்திற் குதவும் என்க பகல்
முழுதும் சுரந்து இரவில் கரப்பது பகற்பாலாம் இரவு முழுதும் சுரந்து காலை கறப்பது
இராப்பசும்பால்
தே,எருமைப்பாற் குணம்
வாதத்திமிரைவர வழைக்கும்புத்தியினற்
போதத்தெளிவைநனி போக்குங்காண்-கோதற்ற
யங்கத்துறுகருந்தை யன்றேமுறித்துவிடும்
பங்கத்துறு மேதிப்பால்
()எருமைபால் திமிர்வாயுவைத் தருவிக்கும்
தெளிந்த புத்தியின் கூர்மையும் நல்ல மருந்தின் குணத்தையும் கெடுக்கு மென்க
வெள்ளாட்டுப் பாற்குணம்
வெள்ளாட்டுப்பாலுக்கு மேவியநற்றீபனமாந்
தள்ளாடுவாதபித்த சாந்தமாம்-உள்ளிரைப்புச்
சீதமதிசாரஞ் சிலேஷ்மமறும்புண்ணாறும்
வாதகிலேசமும்போ மாய்ந்து
()வெள்ளாட்டுப் பாலினால் வாதபித்த தொந்தம்
சுவாசகாசம் சீதாதிசாரம் கபதோஷம் விரணம் வாதத்தா லுண்டாகிய வீக்கம் முதலிய துன்பம்
இவை நிங்கும் நல்ல பசியும் உண்டாகும்
செம்மறியாட்டுப் பாற்குணம்
செம்மறிப்பால்பித்தஞ்
சிலேஷ்மத்தையுண்டாக்கும்
விம்மும்வயிறுமிகமேன்மூச்சாங்-கொம்மை
வருமுலையாய்பத்தியத்தில் வாராதுவாய்வாம்
பருகுவர்க்குநாளும் பகர்
(0)திரட்சியாய் வளர்ந்து வருவனவாகிய
தனங்களையுடைய பெண்ணே வாத ரூபமான செம்மறியாட்டுப்பால் பித்தசிலேஷ்ம தொந்தம்
வயிற்றுப்பிசம் மேற்சுவாசம் பத்தியத்திற் குதவாது வாய்வு யதிகரித்து இவைகளை
யுண்டாக்கு மென்க
யானைப்பாற் குணம்
வாதம்போந்தாதுபுஷ்டி வந்தடருமவன்பலமோ
யாதுபித்தங்கூடியழகுதிக்குந்-தாதுமலர்த்
தேனைப்பாலிற்கலந்த தித்திப்பைபோலிருக்கும்
யானைப்பாலுண்ணு மவர்க்கு
()தேனும் பாலும் கலந்த ருசி போன்ற யானைப்பாலைக்
குடிப்பவருக்கு வாத கோபம் நீங்கும் சுக்கில விருத்தியும் மிகுவன்மையும் பித்த
சம்பந்தமான தேக அழகும் உண்டாகு மென்க
குதிரைப்பாற் குணம்
வீரியவிருத்தி விளைக்குமழகுண்டாகுங்
காரியத்திற்காமங் கதிப்பிக்கும்-வாரார்
கரகமெனச்செப்புமுலைக் காரிகையேகேளாய்
துரகதப்பால் செய்யுந் தொழில்
()வாரினா லிறுக்கிய பொற்கலசமெனப் புகலுங்
கொங்கைகளை யுடைய மங்கையரே குதிரைப்பால் சுக்கிலப் பெருக்கத்தையும் சரீர வனப்பையும்
புணர்ச்சியில் நிருவாகத்தையும் உண்டாக்கு மென்க
ஒட்டைப்பாற் குணம்
ஒட்டைப்பாலுமக்குமந்த மூர்வாதசூலையோ
டட்டகுணக்கரப்பா
நார்வதன்றி-மட்டிடாக்
காதிரைச்சன்மந்தமதி காசஞ்சுவாசமுமா
மாதரைகுணாளும் வழுத்து
()ஒட்டைப் பாலினால் அக்கினிமந்தம் வாதசூலை
எண்விதகரப்பான் காணநாத செவிடு அதியிருமல் இரைப்பு இவை யுண்டாகும்
கழுதைப் பாற்குணம்
கழுதைப்பால்வாதங் கரப்பான்விரணந்
தழுதளையுள்வித்திரதி தானே-யெழுகின்ற
ஒட்டியபுண்சீழ்மேக மொடுசொறிசிரங்கு
கட்டியிவைபோக்குங் காண்
இதுவுமது
கத்தவத்தின்பாற்குக் கரியகிரந்தியறுஞ்
சித்தப்பிரமைபித்தந் தீருங்காண்-தத்திவரும்
ஐயமொழியுமா மதிகமதுரமுமாஞ்
செய்யமடமயிலே செப்பு
()அழகு மிளமையும் பொருந்திய மயிலணைய பெண்ணே
கழுதைப்பால் மிகு மதுரத்தையுடையது யிது வாதநோய் கரப்பான் புண் தழுதலைரோகம்
உள்வித்திரிதிக்கட்டி ஒட்டுக்கிரந்தி சீழ்ப்பிரமேகம் சொறிசிரங்கு அற்புத விரணம்
சித்தப்பிரமை தோஷம் கபநோய் யிவைகளைப் போக்கு மென்க
பாத்திர பேததிலுண்டாகிய
பாற்குணம்
செப்பிலடும்பால்வாத சீதமொழிக்கும்பொன்மண்
கும்பத்தடுபால்போக் குப்பித்தை-யம்புவியுள்
வெள்ளியுறையிரும்பில் விட்டுக்காய்ச்சும்பாலாற்
துள்ளியுறையைமருஞ் சொல்
()செப்புப் பாத்திரத்தில் காச்சிய பால்
வாதசிலேஷ்மதொந்தத்தையும் பொன் மண் இப்பாத்திரங்களிற் காச்சிய பால்
பித்ததோஷத்தையும் வெள்ளி வெண்கலம் இரும்பு யிப் பாத்திரங்களிற் பால் காசரோகத்தையும்
போக்குமென்க
ஆடையெடுத்த பாற்குணம்
ஆடையெடுக்குபாலா லக்கினிமந்தப்படுமே
வாடைநல்லாய்சீரணமாம் மாதமறுங்-கோடையிடி
போலுமெழுந்தபித்தம் போகுமையமேகுமயில்
வேலனையகண்ணாய் விதி
(0)கூரிய வேலனைய கண்களையுடைய பெண்ணே ஏடு
நீக்கிய பாலால் அக்கினிமந்தமும் சப்ததாதுக்களின் சீரணமும் வுண்டாம் வாதபித்தகப
தோஷங்கள் நீங்கு மென்க
காய்ச்சும் பாலுக்கு
நீரளவைக் கூறல்
ஆடுபசும்பால்காச்சி லஷ்டபாகம்புனலாம்
நீடெருமைசெம்மறிக்குநேர்நேராந்-தேடரிய
சுக்குசிறுகாஞ்சொறிவேர் கூட்டிச்சுவரியபா
லொக்கும்வெள்ளாட்டுப்பாற் குரை
(0)வெள்ளாடு பசு யிவையின் பாற்கு எட்டிலொரு
பங்கும் எருமை செம்மறியாடு யிவைகளின்
பாற்குச் சரிபங்கும் ஜலம் விட்டுக் காய்ச்ச வேண்டும் யெவ்வித பால்களுக்கும் சுக்கு
சிறுகாஞ்சொறிவேர் சேர்த்துக் காச்சில் அவைகள் வெள்ளாட்டுப் பாலுக்கு நேரா மென்க
பாலேட்டின் குணம்
பாலேட்டாற்பித்தமற்றும்
பாழ்த்தகொடுஞ்சர்தியும்போம்
மாலாட்டுமூர்ச்சையும்போம் வன்பலமா-மேலாலே
தாதுமிகுந்தீபனமாந் தானேயிளைத்தவர்க்குக்
கோதுமறுமாமயிலே கூறு
()பாலிலுண்டாகும் ஏட்டினால்பயித்தியநோயும்
கொடியவாந்தியும் மூர்ச்சையும் நீங்கும் மிகுபலமும் சுக்கிலமும் ஜடராக்கினியும்
விருத்தியாம் யிதைத் துற் பலதேகிகளுண்டாலும்குற்றமில்லை என்க
தேங்காய்பாற் குணம்
வாதமாம்பித்தமுறும் மன்கரப்பனும்படரும்
தாதுவும்விருத்தியாந் தார்குழலே-யோதநல்ல
அன்னமிறங்கு மதியுரிசை யுண்டாகும்
தென்னங்காய்ப்பாலாற் றெளி
()தாழ்ந்த கூந்தலை யுடைய பெண்ணே மிகு
மதுரத்தால் யுணவையுட் செலுத்துகின்ற தெங்கின் பாலால் வாதவிகாரம் பித்தாதிக்கம்
கரப்பான் சுக்கில விருத்தியும் ஆம்
தண்ணீர் Water Aqua
அப்புவின் குணம்.
காசமருந்தங்ங்கசிலாதுமேகமுதல்
வீசுமன்றணியும் வீரியமாம்-வாசமென
உந்திவளர்குன்ம முதிரஞ்சொறியிவைபோம்
இந்தனருங் தண்ணீருக்கே
()அப்புவென்கிற தண்ணீரால் நேத்திரத்தைப் பற்றிய
பித்தகாசம் பித்தப் பிரமேகம் தேகவுஷ்ணம் பித்தகுண்மம் வெட்டுக்காயங்களினாற்
பெருகானின்ற வுதிரம் சொறி ஆகிய இவைகள் போம்,பற்களுக்குறுதியும்
சுக்கிலவிருத்தியும் உண்டாம்-என்க
ஜலவகை
மாரி ஜலத்தின் குணம்
சீதமுறுங்குளிர்ச்சி சேருமே சித்தத்துட்
போதந்தெளிவாய்ப் பொருந்த்துங்கா-ணாகமொடு
விந்தும்வளர்ந்துவரு மேதினியிலெவ்வுயிர்க்குஞ்
சிந்தும்மழைநீராற் றெளி
()சீதளம் பொருந்திய மாரி(மழை)நீரால்
சீவராசிகளுக்குக் குளிர்ச்சி நல்லறிவு சுக்கிலம் சுரோணிதம் இவைகள்
அதிகரிக்கும்-என்க
ஆலாங்கட்டி ஜலத்தின் குணம்
வெண்மாசிமேகமுடன் வீரும்பெரும்பாடு
கண்மாசிகாந்தல் கடிதகற்றுந் தண்மீறும்
விக்கற்சுவாசமுடன்மெய்ம்மயக்கமும்போக்குங்
கக்குமாலாங்கட்டி காண்
()ஆலாங்கட்டி நீரானது சிலேஷ்மப்பிரமேகம்
பெரும்பாடு நேத்திரத்திற்புகைக் கம்மல் கைகால் எரிவு விக்கல் சுவாசம் மயக்கம்
இவைகளை நீக்கும். குளிர்ச்சியை உண்டாக்கும்-என்க
பனிநீரின் குணம்
பனிச்சலத்தையெல்லுதயம் பானஞ்செய்வாரைத்
தனிச்சொறிசிரங்குகுட்டந் தாபம்-கொனிகயங்கால்
முநீதோஷநீரிழிவு மூடழல்கிராணியிவை
கொத்தோடுதாழ்ந்தகலுங்கூறு
()பனிநீரைச் சூரியோதய காலத்தில்
அருந்தினவர்க்குச் சொறி கிரந்தி குஷ்டம் தாபம் காசம் கிராணி தனிவாதம் கோபம்
திரிதோஷம் தேகவறட்சி நீரிழிவு ஆகிய இவைகள் இல்லை-என்க
தண்ணீரின் குணம்
தண்ணீர்க்குணமெல்லாந் தான்கேண்மடமயிலே
மண்ணின்குணம்ல்லான் மற்றுமுண்டோ-உண்ணுங்கால்
ஆறுகுளமேரிமடு வாழ்ந்தகூபஞ்சனையுள்
ளூறருவியென்னுமுலகு
()தண்ணீர் குணங்களெல்லாம் மண்ணின் குணமன்றி
வேறில்லை.அதன் விவரம் ஆறு குளம் ஏரி மடு கிணறு சுனை யென்னும் ஆறுவகை இடங்களிற்
தங்கி அவ்வவற்றின் குணங்களைப் பெற்ற நீரையுண்ணுமிடத்தில் அவ்வவ்விடப் பெயர் பெற்ற
நீரெனச் சொல்வர்-என்க
கங்கைநதி நீரின் குணம்
கங்கைநதிநீபிறவிக் காட்டுக்கோர்போனலாந்
துங்கமுறவப்புனலைத் தூய்க்குங்கால்-அங்கவெப்பு
மந்தங்கயம்பித்தம் வாயுமேகங்காந்தல்
உந்துந்தாகங்களும்போமுன்
()பிறவியாகிய காட்டுக்கு அக்கினியை நிகர்த்த
கங்காநதி நீரை அருந்தினால் உட்சூடு மந்தாக்கினி க்ஷயம் பித்தகோபம் வாதாதிக்கம்
சீழ்ப்பிரமேகம் தேகஎரிச்சல் தாகம் ஆகிய இவை நீங்கும்-என்க
யமுனைநதி நீரின் குணம்
யமுனாநதிநீரா லதிசுரம்வெண்குட்டஞ்
சமனைநிகர்காசம்வெட்டைதாகம்-வமனமுறு
பித்தமிறைப்பிளைப்பு பேசரியதாதுநட்டஞ்
சுத்தவெள்ளைப்பாண்டிவைபோஞ்சொல்
()யமுனைநதி நீரினால்
அதிசுரம்,வெண்குஷ்டரோகம்-இருமல் வெட்டை தாகம் பித்தவாந்தி சுவாசம் அயர்ச்சி
விந்துநஷ்டம் வெண்பாண்டுரோகம் ஆகிய இவைகள் ஒழியும்-என்க
கோதாவிரிநதியின் குணம்
கோதாவிரியென்னுங் கோதினதிநீரதனால்
வாதாதிமுத்தோஷவன்சினமும்-பேதாயே
தச்சொறியுமுட்சிரங்குந்தரவுநளிர்சுரமு
மிச்சகுவிட்டேகுமிசை
()கோதாவிரிநதி நீரினால் முத்தோஷகோபம் பலவிதச்
சொறிகள் உள்சிரங்கு நடுக்கற்சுரம் ஆகிய இவை போம் – என்க
துங்கபத்திரிநதி நீரின் குணம்
மாதுங்கபத்திரிநீர் வன்றாகவென்புருக்கி
யோதுங்கரபா நரோசிகநோய்-தாதுநட்டம்
நேத்திரதோஷங்காச நீரடைப்புமெய்விவன்னக்
கோத்திரமென்றோதிவை போக்கும்.
()துங்கபத்திரிநதி நீரானது வெப்பம்
யென்புருக்கிரோகம் கரப்பான் விந்து நஷ்டம் கண்புகைச்சல் இருமல்
மூத்திரக்கிரிச்சரம் சரீரநிற மாறல் ஆகிய இவைகளை நீக்கும்-என்க
நருமதாநதி நீரின் குணம்
நருமதாவென்னு நதிப்புனலால் வாந்தி
சுரம்விக்கல் காமிலத்தின் றோஷம்-பொருமலிரு
கைகாலெரிவுநீர்க் கட்டுகோழைக்கட்டேங்
டைவாதமென்பவைபோ மாங்கு
()நருமதாநதி நீரினால் வாந்தி விக்கல் காமாலை
வயிற்றுப்பிசம் கைகால் யெரிவு கபச்சேர்க்கை சிலேஷ்மவாத தொந்தம் ஆகிய இவைகள்
நீங்குமென்க
சிந்துநதி நீரின் குணம்
சிந்துநதிப்புனலாற் றேகத்துறுங்கடுப்பு
புந்திமயக்கம்மேகம் புணவியர்வை-விந்துநட்டம்
அத்திசுரம்வெட்டை யடர்மூத்திரச்சிக்கல்
முற்றியதாகப் பிணிபோ முன்
()சிந்துநதி நீரால் சரீரக்குடைச்சல்
புத்திமயக்கம் வெட்டை புண் வியர்வை தாதுநஷ்டம் அஸ்திதாதுகதசுரம் வெள்ளை
மூத்திரகிரிச்சுரம் விதாகமாகிய இவைகள் விலகுமென்க
வைகைநதி நீரின் குணம்
வைகைநதிப்புனலால் வாதநீர்குஷ்டொடுமெய்ச்
செய்கைதவிர்க்குஞ்சோபை திண்கரப்பாந்மெய்யெரிவு
தாகநடுகனிலந் தாதுநஷ்டஞ்சிலவிடமு
மேகுமிந்தவையம் விடுத்தே
()வைகையாற்றுச் சலத்தினால் வாதமேகம் குஷ்டம்
சோபாரோகம் கரப்பான் தேகயெரிச்சல் தாகம் பாதாக்ஷேபகவாதம் தாதுநஷ்டம் சில்விஷம் ஆகிய
இவைகள் நீங்குமென்க
சித்திரநதி நீரின் குணம்
சித்திரனப் புனற்குத் தேகத்துறுங்கடுப்பு
தொத்துகரப்பான்சாத்திசூலைகுன்மங்-குத்துகின்ற
மூத்திரதோஷதோஷ மூடுவாதாதிக்கங்
கோதவூண்வீக்கமும்போங் கூறு
()சித்திரநதினீரினால் சரீரநோவு கரப்பான் வாந்தி
தேகத்தின் குத்தல் வயிற்றுவலி மூத்திரம்தோஷம் த(ச)ங்கரைதமம் திரிதோஷம் வாதகோபம்
சரீர வீக்கம் ஆகிய இவைகள் போமென்க
காவிரிநதி ஜலத்தின் குணம்
காவிரினீராற் பொருமல்காச்சுவாசஞ்சோபை
னீவுதொண்டைக்கட்டிளைப்பு நீரேற்றம்-பூவுலகின்
மன்னுதிரக்கட்டியொடு வாயுலரலென்பவைபோம்
பின்னுடற்குக்காந்தியுமாம்பேசு
()காவிரியாற்றுச் சலத்தினால் வயிற்றுப்பிசம்
இருமல் இரைப்பு வீக்கம் கபக்கட்டு ஆயாசம் சலதோஷம் ரத்தகுன்மம் நாவறட்சி ஆகிய
இவைகள் நீங்கும்.அழகுண்டாகுமென்க
தாம்பரபன்னிநதி ஜலத்தின் குணம்
தாம்பிரப்பன்னிப்புனலாற் சர்வசுரம்பித்துவிழித்
தூ(நூ)மபிரமூட்காய்ச்சல்சுவாசநோய்-ரொம்பிமிகக்
கக்குகபமென்புருக்கி கைகாலெரிவுடனே
மிக்குறுதாகங்களும்போம் விள்
()தாம்பரபன்னிநதி ஜலத்தினால் சகலசுரம்
பித்ததோஷம் கண்புகைச்சல் உட்சுரம் சுவாசரோகம் க்ஷயம் எலும்புருக்கி கைகாலெரிவு
அதிதாகம் ஆகிய இவைகள் விலகுமென்க
பச்சையாற்று ஜலத்தின்
குணம்
பச்சையாற்றுப் புனலைப்பார்த்துவந்தபேர்தமக்கு
நச்சிருமலீளை கப நண்ணுமே-நிச்சயமா
யவ்வளவோ வென்னி லனில்முதிரக்கடுப்புங்
கவ்வுசுரமுங்காணுங்காண்
()பச்சையாற்றுனீரால் நச்சிறுமல் இரைப்பு மந்தம்
வாதகோபம் ரத்தக்கடுப்பு சுரம் ஆகிய இவை உண்டாம் என்க
குளத்து சலத்தின் குணம்
குளத்துசலந்தானே கொடிதானேவாதம்
வளர்த்திவிடுமப்பான் மதுவாங்குளர்ச்சியையு
மெத்தவுண்டாக்குமென மேதினியோர்தங்களுக்கு
கொத்தலரும்பூங்குழலாய்கூறு
()புட்பக் கொத்துக்களலரும் அழகிய கூந்தலையுடைய பெண்ணே குளத்து சலமானது
வாதரோகத்தை விருத்தி செய்வதுமன்றி மதுப்பிரமேகத்தையும் சீதளத்தையும்
உண்டாக்குமென்க
தாமரைக்குளத்து சலத்தின்
குணம்
தண்டாமரைக்குளத்திற் றங்குபுனலனாக
லுண்டாகும்வாதபித்த முண்மையே பண்டான
வெக்கைநோய்மாறாது வீறுதவனமுமா
மைக்கருங்கணமாதே வழுத்து
()மையணிந்த கண்களையுடைய மாதே தாமரைக் குளத்து
தண்ணீரால் வாதபித்த தொந்தம் புராணசுரம் அதிதாகம் ஆகிய இவைகள் அதிகரிக்கும் என்க
அல்லிக்குளத்து ஜலத்தின்
குணம்
அல்லிக்குளத்துனீர்க்கினிமந்தப்பேதி
மெல்லச்சொறிசிரங்கு வெப்புடனேதொல்லுலகில்
கோலமலர்த்திருவேகூறு
தாலுதனிலட்சரமுந் தாஅதுநஷ்டமுங்கொடுக்குங்
()அல்லிகுளத்து சலம் அஜீரணபேதி சொறி புண் சுரம்
தாலுகண்டகரோகம் தாதுநஷ்டம் இவைகளை உண்டாக்கும் என்க
அதிகுளிர்ச்சிசரகூரல் உள்ள குளத்து ஜலத்தின் குணம்
சீதமிகுந்தசலம் தேகத்தளர்ச்சிவிக்கல்
வாதபங்கடிகள் வாந்திநளிர் மோதிருமல்
வீறுகுன்மநோயிவை விளைக்குஞ் சரகுமதி
லூறுமெனினோய்பலவாமுன்
()அதி குளிர்ச்சியுடைய குளத்து சலமானது
தேகங்கட்டுவிடல் விக்கல் வாதசிலேஷ்ம தொந்தம் வண்டுகடி முதலிய சில்விஷம் வாந்தி
குளிர்காசம் வயிற்றுவலி ஆகிய இவைகளை உண்டாக்கும்-என்க
ஏரிஜலம்சுனைஜலம் இவைகளின்
குணம்
ஏரிசலம்வாதமிலைத்த துவர்ப்பாகுங்
கூறியதோர்கற்சுனைனீர் கூறுங்காற் சீரியதோர்
வாத்மொடுபித்தமேழும் வைத்தொருநாட்பின்ணுண்ணிற்
சீதமில்லையுட்டினமாஞ்செப்பு
()இலைத்த துவர்ப்சிவையைபுடைய ஏரி சலமானது வாயுவை விருத்தி செய்யும் கற்சுனை
சலம் வாதபித்த தோஷமாம் அதை யொருநாள் வைத்திருந்து மறுநாளருந்தினால்
குளிர்ச்சினீங்கி உஷ்ணமுண்டாகும்-என்க
ஓடை சலத்தின் குணம்
ஓடைதருசலம் யுண்ணவதிதாகமுமா
மேடையெனத்தோட்பலனு மெத்தவர் மோடைமலர்க்
கண்ணாயதுதுவர்ப்புங்காணாமதுரமுலாம்
எந்நாளும் பாரிலியம்பு
()தமரல் மலரையொத்த கண்களையுடைய பெண்ணே
துவர்ப்பும் மதுரம் உள்ள ஓடைசலங் குடிப்பவர்களுக்கு மிகுந்த தாகமும் புஜபலமும்
உண்டாகும் –என்க
கிணற்றுசலத்தின் குணம்
ஆசாறக்கூபத் தறலாலதிதாகம்
வீசாகச்சூடுபசி மெய்க்காந்தன் மாசூலை
மெய்யுள்வலிசந்துளைப்பு வீழ்மயக்கஞ்சோபைபித்தம்
பையவறுமீணையும்பார்
()குற்றமில்லாத கிணற்று ஜலத்தினால் மிகுதாகம்
உஷ்ணம் தீபனம் தேக அழற்சி சூலை சரீரத்துட்கடுப்பு
இடுப்புக்குடைச்சல் மயக்கம் வீக்கம் பித்த தோஷம் சுவாசம் ஆகிய இவைகள்
விளங்கும் –என்க
சுனைசலத்தின் குணம்
சுனைப்புனலைத்துய்த்தார்க்குஞ் சூழ்ந்ததிற்றோய்ந்தார்க்குங்
கனைப்புறுசீதச்சுரமுங் காணும்வினைக்குரிய
வாதமுறுமத்தால் வருமேநடுக்கலின்னும்
ஓதுபித்தகோபமுமாம்
()சுனைத் தண்ணீரை யுண்டவர்க்கும் அதில் ஸ்நானஞ்
செய்தவருக்கும் இருமலோடுக்கூடிய சீதசுரம் வாதகோபம் கபவாதரோகம் பயித்தியதோஷம் இவை
உண்டாகும்-என்க
ஊற்றுசலத்தின் குணம்
ஊற்றுசலம் பித்தமொழிக்குமினிப்பாகும்
ஆற்றுவிடுந்தாகத்தையப்பொழுதே கூற்றுவிழித்
கொம்பரிடையாய் குணாகுணங்களைத்தெனிவாய்
நம்பியுலகோரறியநாட்டு
()மதுரம் பொருந்திய ஊற்று சலமானது மிகுந்த
பித்தத்தையும் அதிதாகத்தையும் உடனே சாந்தி செய்யுமென்க
பாறைசலத்தின் குணம்
பாறைமீதூறுகின்ற பானீயந்தன்னையுண்ணி
லேறுமுடலமெல்லா மீரிப்பேவீ றுகின்ற
வாதகோபத்துடனே மாறாச்சுரமுமெழும்
ஒதசனத்துண்டா முவர்ப்பு
()போஜனானந்தத்தில் உவர்ப்பைத் தருகின்ற பாறை
சலத்தினால் தேகஞ் சில்லிடலும் வாததோஷமும் சந்தசுரமும் உண்டாமென்க.
சுக்கான் பாறை ஜலத்தின் குணம்
விருத்த்ம்
நீர்க்கடுப்பொழு நெஞ்சினிற்சீழ்க்கட்டு
யார்க்கிற்பித்தம் பலபிணிசூழ்வகாந்
தீர்க்கதாயுவைத் தீர்த்திடுஞ்சிந்தைநோய்
தரக்குஞ்சுக்கான் றனிப்பாறைத்தோயமே
()சுக்கான்பாறை சலம் மூத்திரக்கடுப்பு
நெஞ்சிற்கபகட்டு பித்தாதிக்கம் கபத்தைப் பற்றிய சில ரோகங்கள் மனோவியாதி ஆகிய
இவைகளை யுண்டாக்கும்,ஆனால் மகாவாதரோகத்தை விலக்குமென்க
கரும்பாறைசலத்தின் குணம் வெண்பா
கரும்பாறைத்தண்ணீர்கனசோபைவாந்தி
பெரும்பாடுபித்தசுரம் பீடை யருந்தயக்க
நீர்க்கடுப்புதாகமிவை நீக்கிவித்தைபுத்தியழ
தேற்கவளப்பிக்குமெய்யை யெண்
()கரும்பாறை ஜலமானது வீக்கம் சர்த்தி
அசிர்க்காரோகம் பித்தசுரம் மயக்கம் மூத்திரக்கடுப்பு தாகம் ஆகிய இவைகளை விலக்கும்
வீரியம் புத்தி அழகு ஆகியவற்றை உண்டாக்குமென்க
அருவி சலத்தின் குணம்
அருவிநீர்மேகமகற்றுங்கபத்தை
வருவிக்கும்ரத்தபித்த மாற்றும்பெருமிதமாம்
வேலையுலகின் மிகுந்தபலமுண்டாக்குங்
காலைமலர்முகத்தாய்காண்
()தாமரை மலரை நிகர்த்த முகத்தையுடைய பெண்ணே
மலையருவி சலப்பிரமேகத்தையும் ரத்தபித்தரோகத்தையும் விலக்கும்.சிலேஷ்மத்தையும்
தேகபலத்தையும் உண்டாக்கும் என்க
அடவிசலத்தின் குணம்
அடவிப்புனலாலதிசீதாதிக்கம்
உடலிற்கணப்பிளைப்புமுண்டாம் உடல்வயிறு
நாவிவ்விடம்வெதும்புகண்ணுந்தலைப்பாரந்
தீவவ்விடற்சுரமாந்தேர்
()கான்யாற்று சலத்தைக் குடிப்பவர்க்கு
அதிகசீதளம் தேகபாரிப்பும் யிளைப்பு சரீரம் வயிறு நா ஆகிய இவ்விடங்களில் வெப்பம்
தலைக்கனம் வலிய விஷம் சுரம் ஆகிய இவைகள் உண்டாமென்க
சிவந்தசலத்தின் குணம்- விருத்தம்
காசபித்தத்தாற் காந்தியுமேகிடும்
ஊசலூட்டினமுட் சுரங்காந்தலாம்
நாசதாதுவுநண்ணிடுமென்றுரை
வாசமிறசிவப்பாம்புனல்வண்மையே
()சிவந்தநிறத் தண்ணீரால் இருமலாறி பிறந்த
பித்தவுஷ்ணம் விலங்கும்-சுரமும்-எரிவும்-விந்துநஷ்டமும் உண்டாகுமென்க
கறுத்தசலத்தின்
குணம்-வெண்பா
கறுத்தாசலம்வாந்தி கரப்பான்வெப்புகாந்தல்
இறுத்தநெஞ்சுக்கட்டிரும்லீளைமறைப்பிலசுர
நீக்கறியநெஞ்செரிப்புநீள்தோஷந்தாகநளிர்
போக்குமனலங்கொடுக்கும்போற்று
()கருமைநிறத் தண்ணீர் வாந்தி கரப்பான் உஷ்ணம்
யெரிவு மார்புச்சளி காசம் சுவாசம் விடாச்சுரம் புளித்தேப்பம் சகலதோஷம் தாகம்
நடுக்கம் ஆகிய இவைகளை விலக்கும் பசியைத் தரும் என்க
வயல்சலத்தின் குணம்
மேகம்போந்தாகம்போம் வெட்டையுடனேசுரம்போந்
தேகங்குளிர்ச்சியுற்றுத் தேறுங்காண்-சோகமெல்லா
மாறுமிரத்தகய்மாறுநோய்க்கோபமிக
மாறும்வயப்புனற்குவை
()நெற்கழனிகளிலிருக்கும் தண்ணீரால்
பிரமேகவிதாகம் வெள்ளை சுரம் மூர்ச்சை ரத்தம் காசம் சுரவேகம் ஆகிய இவைகள் விலகும்
சப்த தாதுக்களும் குளிர்ச்சியடைந்து தேகம் பலக்கும்-என்க
நண்டுக்குழி நீரின் குணம்
வாந்தியறுந்தாகமறு வாறாதவிக்கலறுங்
காந்தலெரிவுங்
கடிதேகுந்-தோய்ந்துவருங்
கண்டுக்குயர்ந்த கனிமொழியே பண்னாளு
நண்டுக்குழிநீரை நாடு
()கண்டினுமினிய மொழியையுடைய பெண்ணே
வயல்களிலிருக்கின்ற நண்டுக்குழி நீரினால் வமனம் விடாகம் நீங்காத விக்கல்
தேகவெப்பம் எரிவு ஆகிய இவை போம் –என்க
பாசிநீர் முதலிய
பலநீரின் குணம்
பாசித்தண்ணீர்நோயாக்கும்
பருத்தவோடைத்தெளிவூறல்
நேசித்திடவே பிணியில்லை
நிலைநீர்க்குண்டாம் குடல்வாதம்
மாசித்தண்னீர்பித்தகற்றும்
வளர்க்குஞ்சுரத்தைச்சரகூறல்
தேசத்தண்னீர்குணந்தன்னைத்
தெரியச்சொன்னோம் திண்ணமிதே
()வழுவழுத்த பாசிஜலம் பலபிணிகளையும் உண்டாகும்
ஊற்றுள்ள ஓடை ஜலத்தால் சகல நோய்களும் நீங்கும் கட்டுக்கடை ஜலத்தால் குடல்வாதம்
பிறக்கும் பனிமாசு படிந்த சலமானது பித்தகோபத்தை விலக்கும் சரகூறியசலம்
சுரரதிக்கத்தை செய்யும்-என்க
இதுவுமது
ஆற்றுத்தண்ணீர்க்கழகுண்டா
மடைந்தசுனைக்கும்கோதரமாந்
தூற்றுமாறிமெய்யிலுக்குந்
துலையாக்கிணறேகயந்திரட்டும்
மாற்றுங்குளமேவியாதில்லை
மாறாக்குளமேவியாதியுண்டு
தோற்றுமதுரமொழிமயிலேதுலக்குந்தண்ணீர்குணங்காணே
()மதுரம் பொருந்திய சொல்லையும் மயில்போலுஞ்
சாயலுமுடைய பெண்ணே ஜீவநதி ஜலத்தால் அழகுண்டாம் நிழலையடைந்த சுனை ஜலத்தால்
பெருவயிறாம் மழைஜலம் தளர்ந்த தேகத்தையும் இறுக்கும் இறைப்பில்லா கிணற்று ஜலம்
க்ஷயத்தை வளர்க்கும் வரத்தும் போக்குமுள்ள குளத்து ஜலத்தால் நோயில்லை இவ்வாறு
மாற்றாத குளத்து ஜலம் பிணியைத் தரும் –என்க
ஸ்நானபானங்களுக்குதவாத
நீர்-வெண்பா
சந்திராதித்தர்வலி சாராதநீர்புழிதுற்
கந்தமதிசேறு கனப்பிலையு-திரந்தநீர்
தங்குசுவையில்லாநீர்
சாற்றுமிவைஸ்நானபா
னங்களுக்காகாவுறினோயாம்
()சந்திர சூரிய கிரணங்கள் காற்று இவைகள்
அணுகாததும் கிருமி துர்வாசனை சேறு தடித்தல் சரகுதிரல் ருசியின்மை என்னும் இவைகள்
பொருந்தியதும் ஆகிய ஜலமானவை ஸ்நானபானங் களுக்கு ஆகாவாம்-ஆகில் ரோக சம்பவமாம்-என்க
நீராகார நீரின் குணம்
வாதபித்தவைய வறட்சிகளைமாற்றிவிடுந்
தாதுவுமுண்டாக்கும்
தாகம்போக்கு-மாதர்மெச்ச
வாராகாரங்கொடுக்கு
மாமதுரத்தைக்கொடுக்கும்
நீராகாரத்தெளிவுநீர்
()மிகுமதுரமான நீராகாரத் தெளிஜலமானது
வாதபித்தச்சிலேற்பன வரட்சிக ளையுந் தாபத்தையும் விலகும் சுக்கிலத்தையும் அழகையும்
விருத்தி செய்யும்-என்க
காடிநீரின் குணம்
பித்தமயக்கமறும் பேரவுஷதம்முறியும்
உற்றபிணியிற்சிலவை யோடுங்காண்-சற்றும்
வழங்காவசீரணுமும் வண்பேதியும்போம்
பழங்காடிக்குள்ள பயன்
()பழமையாகிய காடி சலத்தினால் பித்தமயக்கமும்
சோபாரோகம் முதலிய சிற்சில ரோகங்களும் அசீரணமும் வாதாதிசாரமும் பெரிதாகிய
ஔஷதங்களின் நற்குணங்களும் விலகுமென்க
உப்புநீரின் குணம்
உப்புநீராலுலவை யுள்ளிலோடிக்குத்தும்
எய்ப்பசனமாம்பித்த
மேறிடுங்கான்-செப்புகின்ற
வாயிலூலுஞ்சலமு மாதுவர்பாமாதரசே
யோயுங்குடல்வாத மோர்
()உப்பு தண்ணீரால் சரீரத்தில் ஓடிக்
குத்துகின்ற வாயுவும் அற்ப போஜனமும் பித்தமதிகரிப்பும் வாயில் துவர்ப்பாக
வூறுகின்ற ஜலமும் அதிகரிக்கும் ஆனால் குடல்வாதம் விலகுமென்க
சமுத்திர நீரின் குணம்
கடலின் புனலாற் கவிகைபெருநோய்
உடலின்கடுப்புதிரச் சூலை-யடர்குஷ்டம்
வாதகுன்மம்வெப்பிரத்த வாதநீராமை
கோதரம்பீலீகமறுங்கூறு
()கடற்சலத்தினால் கவிகையென்னும் ஒருவித
உதரரோகம் பெருவியாதி சரீரக்குடைச்சல் ரத்தகுன்மம் குஷ்டம் வாதகுன்மரோகம் சுரம்
உதிரவாதம் நீராமைகட்டி பெருவயிறு பிலீகத்தைப் பற்றிய வியாதி ஆகிய இவைகள்
விலகுமென்க-பீலிக மென்பது இருதயத்துக்கிடப் புறத்திலிருக்கும் ஒருவித மாமிச கண்டம்
இதுவுமது-விருத்தம்
குன்மவாயு குடற்கரியென்பது
வன்மமான மலசல பந்தமுங்
கன்ம்மாகுன்வன் நோய்களுங்காணுமோ
நுன்மைவாரிநீர் காய்ச்சிநுகரினே
இதுவுமது
உடற்கடுப்புட நூற்றெழுசோனிதம்
நடுக்குவாதமு நாப்பிடிப்போடுபல்
இடுக்கிரத்தமு நிற்றுவிழுவதுந்
துடுக்கதரஞ்சந்நி தோஷ்முமோடுமே
()சமுத்திர சலத்தைக் காச்சியுண்டால் வாதகுன்ம்ம்
குடற்கரிரோகம் மலசல பந்தம் மிகு உழைப்பினால் வந்த வியாதிகள் தேக்க்கடுப்பு
சோணிதவாதம் கம்பவாதம் நாக்குப்பிடிப்பு சிதாஅதரோகம் தந்த புப்புட ரோகம் சந்நிதோஷம்
ஆகிய இவைகள் விலகுமென்க
நாவல் நீரின் குணம்
நாவல்வேறூருசல நாளுமதிசாரத்தை
மாவலிய்யமேகத்தை
மாற்றுங்காண்-பூவுலகில்
விந்தோடதிசீதம் வீறுபலம்வெப்பையும்
மந்தமிவையுண்டாக்குமால்
()நாவல் வேரூறிய சலமானது பித்தாதிசாரத்தையும்
மதுமேகத்தையும் நீக்கும் சுக்கிலவிருத்தி அதிகுளிர்ச்சி தேகபலம் சுரம் சிலேஷ்ம
கோபம் அக்கினி மந்தம் ஆகிய இவைகளை உண்டாக்குமென்க
கருங்காலி நீரின் குணம்
குட்டங்கமரோகம் குன்மம்பெருவயிறு
நெட்டைப்புழுதிமிரு நீரிழிவும்-விட்டே
யருங்கானகத்தேகு மஞ்சுகமேநல்ல
கருங்காலிநீரதனைக்கண்டு
()கிளி போல் வசனிக்கும் பெண்ணே கருங்காலி
வேரூறிய சலத்தினால் அவதும்பா குஷ்டம் பித்தக்ஷயம் பித்தகுன்மம் மகோதரம்
பெரும்பூநாகக்கிருமி ரத்தப்பசையற்ற திமிர்வாதம் நீரிழிவும் ஆகிய இவைகள் விலகுமென்க
இலவுநீரின் குணம்
அட்டகுன்மநீரிழிவு மற்ரிடுமேதேகத்திற்
கெட்டவிரணக் கிருமியறு-மட்டலறுங்
கூந்தன்முடிமாதரசே கோதிலவின்புனலாற்
சேர்ந்தவழலுந்தணியுஞ் செப்பு
()தேன் பொருந்திய புஷ்பங்களையணிந்த
கூந்தலையுடைய மாதரசே இலவ மரத்தின் வேரூறிய சலத்தால் அஷ்டகுன்மம் நீரிழிவு
ரத்தமற்றவிரணக்கிருமி உற்சூடு ஆகிய இவைபோம் என்க
வாழைநீரின் குணம்
வாழைநிர்சீகவெப்பு வல்லபலமுண்டாக்கும்
பேழைவயிறுடைக்கும் பெண்மயிலே-யீழும்வல்லி
ரத்த்ங்கிரிச்ச மெரிநீரிவையுடனே
சிற்றிரணம்போக்குந்தெளி
இதுவுமது
சோமரோகங்க டுலையுமிளைப்புழலை
நாமமறும்பாண்டுவகை நாடாதே-பூமிதனில்
காழையெலும்புருக்கி காணாவணங்கரசே
வாழைநீர்க்கென்று ளத்தில்வை
()வாழைக் கிழங்கில் ஊறுகின்ற சிதோஷ்ண நீரானது
பெருவயிறு ரத்தக்கிரிச்சரம் எரிமூத்திரம் அற்பவிரண்டும் சோமரோகம் அயர்வு உழலைநோய்
பாண்டு யெலும்புருக்கி ஆகிய இவைகளை விலகும் தேகத்திற்கு வண்மையுண்டாகும்
மாதரசேயென்க
மட்டை நீரின் குணம்
மட்டைநீராற்கிரிச்ச மாறுமடமயிலே
யொட்டிநின்றநீரிழிவு மோடுங்கான் –கொட்ட
பௌத்திரமும்புண்னும் பறக்கும்பயந்தே
புவிக்குள்வயிற்றுக்கடுப்பும் போம்
()தெங்கு பனை முதலிய மட்டைகளிற் பிழிந்த
நீரினால் மூத்திரகிரிச்சரம் நீரிழிவு பசுந்தரரோகவிரணம் வயிற்று அளைவு ஆகிய இவை
போம் என்க
இளநீரின் பொதுக்குணம்
இளநீரால்வாதபித்த மேகுமனதுந்
தெளிவாய்த்துலங்குமிரு திஷ்டிக்-கொளிவுங்
குளிர்ச்சியுமுண்டாகுங் கொடியவன்னீங்குந்
தளிர்த்தகனநோய்தாகுஞ்சாற்று
இதுவுமது
என்றுமிளனீர்நி ரிறங்குங்கபமறுக்குந்
துன்றனலாஞ்சீதமெனச் சொல்லுவார்சா-ணின்றெழும்பும்
பித்தமொடுவாந்தியும்போம் பேதிகட்டிரண்டுமுண்டாங்
கொத்தலரும் பூங்குழலாய்கூறு
()கொத்துக்களினின்று மலர்ந்தவழகிய கூந்தலையுடைய
பெண்ணே துறைமையாய் யிளநீரைப் பருகினால் வாதகோபம் பித்தம் பித்த்தோஷம் வெப்பம்
தேகபாரிப்பு கபாதிக்கம் பயித்தியகோபம்
வமனம் அதிசாரம் ஆகியவை நீக்கும் மனத்தெளிவு நேத்திரத்துலக்கம் குளிர்ச்சி
மூத்திரப் பெருக்கம் மலப்போக்கு ஆகியவை உண்டாகும் யிது உஷ்ண சீதளத்தை யுடையது என்க
செவ்விளநீரின் குணம்
பித்தமொடுதாகம் பெருத்தவழிநடையா
லெய்த் தலாயாச மிவையேகு-நித்தியமுஞ்
செவ்விளநிருண்டக்காற் றீரும்பலகயமு
மவ்விளநிர்கொங்கைமின்னே யாய்
()தினமுஞ் செவ்விள நீரையருந்தில் பித்தவிருத்தி
தாகம் வழிகடையாலாம் யிளைப்பு அயர்வு பற்பல க்ஷயம்
ஆகியயிவை நீங்கும் அந்தச் சிவந்த விளநிரனைய கொங்கைகளையுடையமின்னே
நியறிவாயாக
புதிய பழைய இளநிரின் குணம்
விதியிளநிர்பித்தமறும் பூதலத்தோருண்ணும்
பதமுடனேயுண்பார் பரிவாய்-நிதநிதமு
முண்ணப்பழவிளநி ருண்டாபலவகைநோய்
யெண்ணியறிவா யினி
() யிள வழுக்கையையுடைய புதிதாகப் பறிக்கப்பட்ட
யிளநிரை யுண்பவர்க்குப் பித்தகோபம் விலகும் பழைய யிளநிரையுண்டால் ஜலதோஷ முதலிய
பற்பல ரோகங்களும் உண்டாகும்-என்க
பச்சையிளநிரின் குணம்
பச்சிளநிர்மேகம் பழஞ்சுரங்களைப்போக்கும்
கச்சிமுலைமாதே கபமறுக்கு-மெச்ச
வயிற்றிற்கிருமியொடு வன்சொறிகண்டோடப்
அயர்த்தோடச்செய்யுமறி
()வாரிருக்கிய தன்ங்களையுடைய பெண்ணே
பச்சையிளநிர் சீழ்பிரமேகம் பழையசுரம் கபாதிக்கம் எரிகிற(ரு)மி யானைச்சொறி கண்ணோய்
ஆகிய இவற்றை நீக்கும் என்க
கேளியிளநிரின் குணம்
கேளியுண்ணமேகம்போங் கேளாய்மடமயிலே
நிளகட்டுக்கீட நிலையாவதந்-தாளாத
தாகமொடுமந்தமறுந் தானேகரப்பனும்போய்
வேகவனலுந்தணியுமே
()யிளமை பொருந்திய மயில் போலுஞ் சாயலையுடைய
மாதே கேளி யிளநிரை யுண்பவர்க்கு ரத்தமேகம் மலக்கிருமை விதரம்மந்தாக்கினி கரப்பன்
அதிசுரம் ஆகிய யிவை நீங்கும் –என்க
மஞ்சள்கச்சியிளநிரின்
குணம்
பித்தம்போஞ்சோபையறும் பேருலகிலியாவருர்க்குந்
தொத்துகபமுந்தொலையுங்காண்-தத்துகின்ற
பொல்லாப்பழஞ்சுரமும்போகும்மஞ்சட்கச்சிக்குப்
பொல்லாப்பொன்றில்லைபுகல்
()மஞ்சள் கச்சியிளநிரை யருந்தினால் பித்ததோஷம்
சோபை சிலேஷ்மாதிக்கம் பழையசுரம் ஆகிய யிவை விலகும்-யென்க
அடுக்குளநிரின் குணம்
அடுக்குளனீரையத்தை யண்டாதகற்றும்
வடுக்கண்ணாயின்னும் வகுப்போம்-படுக்கும்போ
துண்டாற்சுகமெய்து முள்ளாங்கிருமியிதைத்
கண்டாலிறந்துவிடுங்காண்
()மாவடுவையொத்த கண்களையுடைய பெண்ணே யின்னுஞ்
சொல்வேன் படுக்குமுன் அடுக்கிளநீரையுண்டால் கபதோஷமும் மலப்பையைப் பற்றிய
கிருமியும் போம் நண்மையுண்டாம்-என்க
கருவிளநிரின் குணம்
மருமலர்வாழ்மானேகேள் வையகத்தோர்நித்தங்
கருவிளனீருண்ணக் கபமும்-கிருமிநெளி
புண்ணுங்கரப்பானும் போகுமிகக்காந்தியுறு
மெண்ணுமனப்பூரிப்பா மென்
()வாசனை பொருந்திய தாமரை மலரில் வசிக்கின்ற
மான் போலுங் கண்களையுடைய பெண்ணே கருமை நிற யிளனீரால் கபாதிக்கமும் புழு நெளிகின்ற
விரணமும் கரப்பானும் நீங்கும் தேஜசும் மகிழ்ச்சியும் உண்டாம்-என்க
சோரியிளநிரின் குணம்
காரிலருகூந்தற் கருங்கண்மடமயிலே
சோருயிளனீரருந்தச் சோபையறுங்-கூறியுதோர்
பூச்சிகிருமிபொன்றும் பொன்மேனியாமுடலம்
பேச்சிற்தெளிவுண்டாம் பேசு
()மேகம்போலக் கறுத்த கூந்தலையும் கரிய
கண்களையும் மயில் போலுஞ் சாயலுமுடைய பெண்ணே ரத்தவண்ண யிளநிரால் வீக்கமும்
னீர்ப்பாம்புக் கிருமியும் சன்னகிருமியும்போம் தேஜசும் தெளிந்த வதனமுமுண்டாமென்க
ஆயிரங்கச்சியிளநிரின்
குணம்
வேகமுறுந்தீபனமாம் விட்டோடும்வாதகம்
மாகமதிற்சேர்ந்தவரிப்பும்போம்-வாகுறுபுண்
வாயிரஙுசீழும் வயிற்றுவலியுந்தொலையும்
ஆயிரங்கச்சிக் கறி
()ஆயிரங்கச்சி யிளனீரால் வெப்பமும் பசியும் ஆம்
வாதகபத் தொந்தம் நமச்சல்
விரணச்சூழ்குன்மம் ஆகிய இவை நீங்கு மென்க
குண்டற்கச்சி இளநீரின்
குணம்
அண்டையிலேநின்றார்க் கரோசிகெடுந்தீபனமாங்
கெண்டைவிழிமாதரசே –கேளின்னுங்-கண்டபடி
குண்டற்கச்சிக்குக் கொடுந்தாகமாறிவிடும்
பண்டப்பழமலம்போம் பார்
()மகர நோக்கியே கேளின்னமுங் குண்டற்கச்சி
யிளநிரால் அருசி விதாகம் நாட்பட்ட பழையமலம் ஆகிய இவை போம் ஜடராக்கினி யுண்டாம்
மென்க
உண்பதற்கு முன்பருந்தும்
இளநிரின் குணம்
ஊணுக்குமுன்பிளனி ருண்டாற்பசிபோகும்
வீணுக்குக்குன்மம்விளையுங்காண்-பேணியிதை
மாலைதனிலருந்த மன்னுபுழுச்சாகும்
வேலையொத்தகண்ணாய் விளம்பு
()வேலை நிகர்த்த கண்களையுடைய மாதே காலைப்
புசிப்பிற்கு முந்தி இளநிருண்டால் பசி நிங்கலன்றிக் குன்மமாம் மாலையில் உண்டால் எரி
கிருமிகள் ஒழியும் என்று சொல்லுவாயாக
உண்ட பின்பு அருந்தும்
இளநிரின் குணம்
வாதபித்தமீறாது வன்பயித்தியந்தீருங்
கோதின்மலஞ்சாறுங்கொடும்பசியா-மாதரசே
மிண்டியதோர்வாராது மேனிமினுமினுக்கும்
உண்டபின்புநல்விளனீ ருண்
()பெண்க ணாயகமே புசித்த பின்பு இளநிரையுண்டால்
வாதபித்த கோபந் தணிவது மட்டுமன்றித் தனிப் பித்த்தோஷம் விலகும் தாராளமாக மலங்
கழியும் அதிதீபனமும் உண்டாம்,நோய் அணுகாது-என்க
காய்ந்தாறிய
இளநிர்-செவ்விளனீர்-கெளிபு பாத்திரை இளநிர் இவைகளின் குணம்
காய்ந்தாரறியவிளநிர் காசங்கபந்தீர்க்கு
மாய்ந்திடாத தாகசுரமாற்றுங்காண்-ஆய்ந்த்தொரு
செவ்விளநிர்பித்தஞ் சிதைக்குங்கெவுளிகொண்டால்
யெவ்வளவுந்தாபமில்லை யெண்
()மட்டையைச் சீவித் தண்ணீரிற் போட்டுக்
காய்ச்சி யாற்றிய யிளநிரானது யிருமல் சகலதோஷம் வறட்சுரம் யிவைகளைப் போக்கும்
செம்மை நிறமுள்ள நீர் பித்த்தோஷத்தை விலக்கும் கெவுளி பாத்திரை யென்னும் யிளநிரை
யுண்டால் உஷ்ணம் விலங்கு மென்க
வெந்நீர் வகை
வெந்நீர் பொதுக் குணம்
நெஞ்செதிர்ப்புநெற்றிவலி நீங்காப்புளியேப்பம்
வஞ்சமுறவந்த வயிற்றுநோய்-விஞ்சியே
வீழாமக்கட்டோடு வெப்பிருமற்சுட்டநிர்
ஆழாக்குட்கொள்ள வரும்
()ஆழாக்கு என்னும் அளவாக்க் குடிக்கின்ற
வெந்நீரினால் எதிர்க்கின்ற உணவு நெற்றிநோவு புளியேப்பம் குன்மம் சீதக்கட்டு சுரம்
காசம் ஆகிய இவைகள் போம்-என்க
காய்ந்தாறிய
வெந்நீரின் குணம்
காய்ந்தாறவைத்தநீர் கட்டுழலைவிக்கலொடு
வாய்தவதிசாரபித்த மாற்றுங்காண்-சேர்ந்துவரு
மூர்ச்சைவிஷஞ்சாந்த முன்மயக்கமேகமதி
யூர்ச்சிதமுத் தோஷம் போக்கும்
இதுவுமது
காய்ந்தநீருண்ணுங்காற் கண்செவிநோய்சூலைகுன்மம்
தோய்ந்தசுரவேக தொடரையும்-பாய்ந்தடரும்
வாத்த்தின்கோபமிவை மாறுமெனலாதியருள்
வேத்த்தின் வாக்கியமாம் விள்
()காச்சி ஆற்றிய வெந்நீர் உழலைநோய் விக்கல்
பேதியாற் கிளைத்த பித்தகோபம் மூர்ச்சை சில்விஷம் வாந்தி மயக்கம் சுக்கிலமேகம்
திரிதோஷம் கண்ணோவு செவிகுத்தல் சூலை குன்மம் சுரவேகம் வாதாதிக்கம் யிவைகளை
நீக்கும்-என்க
கால்கூறு
அரைகூறு காய்ந்த வெந்நீரின் குணம்
கால்கூறுகாய்நீராற்
காரிகையேபித்தம்போ
மேற்கூறுபாதிசுட்ட வெந்நீரால்-மேற்கூறும்
வாதமொடுபித்தம் வைத்ததொருநாட்சென்றுண்கு
ரோதம்போமோடி யொளித்து
()வைத்த அளவுக்குக் கால்பாகம் சுண்டிய
நெந்நீரால் பித்தகோபம் நீங்கும் பாதி சுண்டிய வெந்நீரால் வாதபித்ததோஷம் விலகும்
அதை மறுநாள் வைத் துண்ணில் திரிதோஷகோபம் போம்-மென்க
முக்காற்கூறு காய்ந்த
வெந்நீரின் குணம்
முப்பங்கறங்காந்த மூர்த்தவெந்நீரால்வாதஞ்
செப்புங்குளிர்நடுக்கல் தீச்சுரம்வெக்-கைப்பலநோய்
வாதபித்தவையமிவை மாறுஞ்சுரிகுழலே
பூதலத்துணாளும்புகல்
()சுரித்த கூந்தலையுடைய பெண்ணே முக்காற் பாகஞ்
சுண்டிய வெந்நீரல் வாதவிருத்தி குளிர் நடுக்கல் கொடுஞ்சுரம் பற்பல பேதி திரிதோஷம்
இவை போம்-என்க
ஊணுக்கு
முன்பு பின்பு நடு இக்காலங்களில் அருந்தும்
வெந்நீரின் குணம்
ஊணுக்குமுன்புவெந்நிருண்டாக்காற்தீபனம்போம்
ஊணுக்குப்பின்பருந்தி லூதியமாம்-ஊணுக்குப்
பாதியிலுண்டாற்பசியுப் பாதியாம்வெந்நிரே
யோதுவாதசுரமகற்றும்
()உணவுக்குமுன் வெந்நிரை குடித்தால் பசி
மந்தப்படும் பின்பு உண்டாம் நன்மை யுண்டாம் சாப்பிடும்போது மத்தியி லருந்தினால்
பசியு மத்திபமாம் மேலும் வெந்நிரின் சுபாவம் வாதசுரத்தை நீக்கும்-என்க
பாத்திரபேத வெந்நிரின்
குணம்
பொற்கெண்டி வெந்நிரின்
குணம்
பொற்கெண்டிதன்னில்வெந்நிர்பூரித்துட்கொள்லுங்காண்
மற்கொண்டவாயுகபம் வாயருசி-யெற்கொண்ட
மெய்யழல்வெப்புந்தணியும் விந்துவுநற்புத்தியொடு
மெய்யறிவுமோங்குமென் வில்
()வெந்நிரைப் பொற்கெண்டியில் ஆற வைத்த ருந்தில்
வாதவிருத்தி கபகோபம் அரோசகம் சரீரவுஷ்ணம் சுரம் ஆகிய யிவை போம் சுக்கிலமும் நல்லறிவும் ஸ்பரிச ஞானமு முண்டா மென்க
சரிகை
வெள்ளிக்கெண்டிவெந்நிரின் குணம்
சரிகைவெள்ளிக்கெண்டி தனிலெட்டிலொன்றாய்ப்
பெருகக்காய்ச்சும்புனலைப் பெயதே-பருகுங்கால்
வெப்பொடுதாகங்குன்மம் வீறுபித்தக்காய்ச்சலும்போந்
துப்பொடுடலெஞ்செழிக்குஞ் சொல்
()எட்டிலொரு பங்காய்க் காச்சி நிரைச் சரிகை
வெள்ளிக்கெண்டியில் விட்டுச் சாப்பிட்டால் உஷ்ணம் தாகம் குன்மம் பித்தசுரம் யிவை
விலகும் தேகத்திற்கு வன்மையும் புஷ்டியு முண்டா மென்க
தாம்பரம்-வெள்ளி-பஞ்சலோகம்-வெண்கலம்
இப்பாத்திரங்களின் வெந்நிர் குணம்
*இரவிவட்டிற்றூம மிரத்தபித்தம்போக்கும்
இரசிவட்டிற்கைய மேகும்-வருகலப்பு
வட்டிலறல்முத்தோஷமாற்றும்
வெண்கலச்சலமெய்க்
கொட்டிரத்ததாதுவைச் சேர்க்கும்
()தாம்பரக்
கிண்ண வெந்நிர் கண்புகைச்சலையும் ரத்தப்பித்தப் பிணியையும் நீக்கும் வெள்ளிக்
கிண்ணத்து வெந்நிருக்குக் கபநோய் நீங்கும் பஞ்சலோக வட்டில் வெந்நிர் திரிதோஷத்தை
விலக்கும் வெண்கலப் பாத்திர வெந்நிர் வுதிரத்தைப் பெருக்கு மென்க (*இரவி=தாம்பரம்)
கெண்டிவெந்நிரின் குணம்
கெண்டிதனிற்காய்ந்திடுகீ லாலதையாற்றியுண
அண்டியநோயுமடர்சிரங்கும்-பண்டைக்
குடைச்சலுங்கைகாலிற் குடைச்சலொடுசந்தின்
குடைச்சலும்போநன்றாகக் கூறு
()கெண்டியில்
காய்ந்த வெந்நிரை யாற்றி யுண்ணச் சுரம் சிரங்கு அஸ்தி கைகால் இடுப்பு யிவ்
விடங்களில் ஆகிய யிவை போமென்க
பந்நிர்ச்செம்பு வெந்நிரின்
குணம்
பந்நிர்ச்செம்ம்பிற்காய்ந்த
பானீயம்விட்டருந்த
பன்னியசுவாசம்விக்கல் மாபிரமை-பன்னரிய
பித்தசிலேஷ்மவலிபேசரியதாளின்வலி
யித்தரையைவிட்டகலு மெண்
()பந்நிர்ச்
செம்பில் காய்ந்த வெந்நிரை விட்டருந்த யிரைப்பு விக்கல் சித்தப்பிரமை திரிதோஷம்
தாளுபாகரோகம் ஆகிய யிவை போம்
இரும்புக்கெண்டி வெந்நிரின்
குணம்
இரும்புநறுங்கெண்டிதனி லேந்தியவெந்நிரை
விரும்பியுணப்பாண்டுவிலகுந்-திரும்பவுமோ
தாதுவுமாநாடிகளுந் தாமுரக்குந்தேகமதிற்
சீதசுகமுண்டாந் தெளி
()இரும்புக்
கெண்டி வெந்நிருக்குப் பாண்டு நீங்கும் தாது விருத்தியும் நரம்பு களுக் குறுதியும்
தேகத்தில் சீதோஷ்ண சுகமு முண்டாகும்
னீர் வகை முற்றிற்று
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)