பக்கங்கள்

4 ஜூலை, 2018

அன்னாசிப்பூ Illicium verum Illicium verum

அன்னாசிப்பூ                      
                                               Illicium  verum                                                                     மாற்றுப்பெயர் ;                                                                                                                     வளரியல்பு ;                                                                                                                           இலைஅமைப்பு ;                                                                                                                              பூ,காய் ;                                                                                                                                               மருத்துவ பாகம் ;                                                                                                                              குணம் ;                                                                                                                                                 தீர்க்கும் நோய்கள்; உற்சாககாரி,ஜடராக்கினிவர்தினி,உதரவாதஹரகாரி.   
 அன்னாசிப்பூவை யருந்தக் கறியிலிட்டு
 என்னாகு மன்பதைக்கிங் கேந்திழையே – இன்னாசெய்
 வாதமறும் பித்தமறும் மாறாப் பிடிப்பகலுந்
 தீதறவே தீபனமாந் தேர்    
() அன்னாசிப்பூவைக் கறிகளிலே கூட்டியுண்ண வாதரோகங்களையும், மேகவாயுப் பிடிப்புகளையும்      குணப்படுத்தும்.பசியை அதிகரிக்கும்
1. பூவுடன் இலவங்கப்பட்டை, கிராம்பு,ஏலம்,சோம்பு சேர்த்து நெய் விட்டு வறுத்து பொடி செய்து உணவுடன் சேர்த்து வரலாம்.

அன்னாசி Ananas cosmosus L; Bromeliaceae

                                                   அன்னாசி 
                                     Ananas cosmosus L; Bromeliaceae         மாற்றுப்பெயர் பூந்தாழம்பழம்                                                                                  வளரியல்பு ;       சிறு செடி                                                                                                        இலைஅமைப்பு ;       தாழை இலை போன்ற    மடல்கள்                                            பூ,காய் ;                                                                                                                                       மருத்துவ பாகம் ;      இலை,பழம்.                                                                                          குணம் ;            நுண்புழுக்கொல்லுதல்,வியர்வை,சிறுநீர் பெருக்குதல், குருதிப் பெருக்கை தணித்தல்,மாதவிலக்கைத்தூண்டுதல்.                   
1.       இலைச்சாறு 10மிலியில்  சிறிது சர்க்கரை கலந்து கொடுக்க விக்கல் நிற்கும்.       சற்று சூடு செய்து பருகிவர வாந்தி,வயிற்றுக்கடுப்பு, காமாலை தீரு    ர்க்கரை சேர்த்துத் தேன் பதமாய்க் காய்ச்சி தினமிருவேளை 1    15 மிலி உண்டுவரத் தாகம்,வாந்தி,வெள்ளை ,வெட்டை, சுவையின்மை தீரும்.

அறுவதா Ruta graveolens L;Rutaceae

அறுவதா   Ruta graveolens L;Rutaceae
 மாற்றுப்பெயர் ; சதாப்பு                                                      வளரியல்பு ; மணமுடைய பசுமையான குறுஞ்செடி.                                               இலைஅமைப்பு ;                                                                                                                           பூ,காய் ;                                                                                                                                   மருத்துவ பாகம் ;   இலை                                                                                                         குணம் உற்சாககாரி,அங்காகர்ஷணநாசினி,ருதுவர்தனகாரி, கிருமிநாசினி, கபஹரகாரி                                                                                                        தீர்க்கும் நோய்கள்;வலி போக்குதல்,வெப்பமுண்டாக்கல்,கோழையகற்றுதல், மாத விலக்கு உண்டாக்குதல்
  கணமாந்த ரூட்சை கணக்கழிச்சல் வாந்தி
  குணமாம் பசியுங் குலவும் – வணமயிலே
  கூடுநிறைகருப்பக் கோதையர்க்காம் வேதகலு
  நாடு சதாபலையி னால்
()சதாபலை எனும் சதாப்பு இலையினால் பால்மாந்தம் முதலியவற்றால் விளகின்ற சுரம் ,கணபேதி,கபவமணம்,பிரசவ மாதர்களின் வேதனை நீங்கும். தீபனமுண்டாகும் என்க.
1.       இலைச்சாறு 10 மிலி தாய்ப்பாலுடன் கலந்து சிறு குழந்தைகளுக்குக் கொடுக்க சளியை வெளியேற்றி காய்ச்சல்,இசிவு ஆகியவற்றைப் போக்கும்.  
2.      இலையுடன் கால் பங்கு மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசி உடலில் தேய்த்துக் குளித்துவர சளி,நீர்க்கோவை முதலிய குளிர்ச்சி நோய்கள் வராமல் தடுக்கும்.
3.      இலையை பொடித்து வயதிற்கேற்ப ¼-1 தேகரண்டி தேனில் குழைத்துக் கொடுத்துவர வயிற்றுப்பொருமல்,வயிற்றுவலி, செரியாமை,நாட்பட்ட மார்புச் சளி, பால்மாந்தம்,மாந்தசுரம்,கணை, வயிற்றுப்போக்கு தீரும்.
4.      உலர்ந்த இலையை நெருப்பிலிட்டு வரும் புகையை மென்மையாய் சுவாசிக்க இருமல் தணியும்.
5.      இலையுடன் சிறிதளவு மிளகு சேர்த்து வெண்ணையாய் அரைத்து வேளைக்கு 200-300 மிகி தாய்ப்பாலில் கலந்து சிறு குழந்தைகளுக்குக் கொடுக்க சளியை வெளியேற்றி காய்ச்சல் ,இசிவு ஆகியவற்றைப் போக்கும்
6.      நிழலில் உலர்த்திய சதாப்பிலை,சீரகம்,அதிமதுரம்,கருஞ்சீரகம், சன்னலவங்கப்பட்டை,சதகுப்பை வகைக்கு 40 கிராம்,தனியா 250 கிராம்,நன்கு பொடித்து சலித்து,சமன் கற்கண்டு பொடிகலந்து, தினம் 2-3 வேளை கொடுத்துவர வாயுவை கண்டிக்கும்.சீதளத்தை அகற்றும். ஸ்திரீகளுக்குண்டான உதிரச் சிக்கலையும்,வயிற்றில் மரித்துப்போன கருவையும் வெளியாக்கும்.சூதக சன்னி வாயுவினால் கானும் வயிற்றுவலி,இசிவு முதலியவைகளுக்கு சிறந்த அவிழ்தமாகும்.
7.      இச்செடியிலையை உண்டு பெருத்துவரும் புழுவை, புழு ஒன்றுக்கு 120மிலி ந.எண்ணை வீதம் விட்டு சூரிய புடமிட்டு,வடித்து 3-4 துளி ,5-6 நாள்,தினமிருவேளை நாசியினுள்விட்டுவர மேகத்தினால் நாசியினுட்புறத்தில் தின்றுகொண்டு போகும்படியான விரணங்கள் ஆறும்.
8.      மேற்படி தைலத்தை காதில் 1-2 துளி விட்டுவர மண்டையின் உட்கரப்பான்,சீழ்வடிதல்,காதுவலி,மந்தம்,கர்ணவாதம் தீரும்.

அறுகீரை Amaranthus tritis Roxb.;Amaranthaceae

அறுகீரை
              Amaranthus tritis Roxb.;Amaranthaceae 
மாற்றுப்பெயர்  ; அரைக்கீரை                                                                                             வளரியல்பு ;                                                                                                                      இலைஅமைப்பு ;                                                                                                                            பூ,காய் ;                                                                                                                                                 மருத்துவ பாகம் ;     இளந்தண்டுடன் கூடிய இலைகள்  சமைத்துண்ணக் கூடியவை                                                                                                                    குணம் ;                                                                                                                                                 தீர்க்கும் நோய்கள்     ;காய்ச்சல் போக்குதல்,மலமிளக்குதல்,காமம் பெருக்குதல்
1.   கீரையை நெய் சேர்த்துச் சமைத்துண்டு வர நீர்க்கோவை,சளிக் காய்ச்சல், குளிர் சுரம்,விஷ சுரம்,சன்னிபாதசுரம்(டைபாய்டு) தீரும்.
2.   எழுவகை உடற் சத்துக்களையும் பெருக்கி வலிவும் வனப்பும் உண்டாக்கும்
3.   பிடரிவலி,சூதகச்சன்னி ஆகியவை தீரும்.

அருகம்புல் cynodon dactylon (L.;)Pers,. Poaceae

                 அருகம்புல்

           cynodon dactylon (L.;)Pers,. Poaceae 

வேறு பெயர்கள் ; அருகு, பதம், தூர்வை, மோகாரி,மூதண்டம்
வளரியல்பு ; நீர்க்கசிவு உள்ள இடங்கள், வயல் வரப்புகள் போன்ற இடங்களில் தானாக வளரும் புல்.
இலை ; பசுமையான, அகலத்தில் குறுகிய, நீண்ட கூர்மையான இலைகள்.தண்டு குட்டையானது. நேரானது,
மருத்துவபாகம் ; முழுத்தாவரம்
செய்கை ;
மருத்துவகுணம்;
 இனிப்பு சுவையுடைய இதில் இருந்து பெறப்படும் ஒருவித ஆல்கலாய்ட்ஸ், வாக்ஸீனியா வைரஸ் என்ற நுண்ணுயிரியை அழிக்க வல்லது. இதில் பொட்டாசியம், கால்சியம், சோடியம் போன்ற தனிமங்களின் ஆக்சைடுகள் மற்றும் சத்துகள் அடங்கியுள்ளன.
  1. தேவையான அளவு அருகம்புல்லுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க சொறி,சிரங்கு,உடல் அரிப்பு (தினவு),அடங்காத தோல்நோய்,வேர்க்குரு,தேமல்,சேற்றுப்புண்,வேனல்கட்டி தீரும்.
  2. புல் 30 கிராம் அரைத்து 200 மிலி பாலில் கலந்து காலையில் குடித்து வர இரத்த மூலம் குணமாகும்.
  3. கணு நீக்கிய அருகம்புல் 30கிராம்,வெண்ணை போலரைத்து சமன் வெண்ணை கலந்து காலையில் 20-40 நாட்கள் வரை குடித்து வர உடல் தளர்ச்சி நீங்கி உறுதிப்படும்.அறிவு மிகுந்து முக வசீகரம் உண்டாகும்.
  4. கணு நீக்கிய அருகம்புல்30கிராம்,மாதுளை இலை30கிராம்,அரைலி நீரில் கால் லி ஆகக் காய்ச்சி,50மிலி,2 மணி நேரத்திற்கு 1முறை குடித்துவர காது,மூக்கு,ஆசன வாய் இரத்த ஒழுக்கு நிற்கும்.வெப்பம் தணியும்.மாத விலக்குச் சிக்கல் நீங்கும்.
  5. அருகம்புல் 30கிராம்,கீழாநெல்லி 15கிராம்,மையாய் அரைத்து தயிரில் கலந்து காலையில் குடித்துவர வெள்ளை,மேக அனல்,உடல் வறட்சி.சிறுநீர்த்தாரை புண்ணால் நீர்கடுப்பு,சிறுநீருடன் இரத்தம் போதல் தீரும்.
  6. வேர் 30கிராம்,சிறுகீரை வேர் 15கிராம்,மிளகு 5கிராம்,சீரகம் 5கிராம், 1லி நீரில் கால் லி ஆகக் காய்ச்சி பருக மருந்துவீறு தணியும்.( மருந்துவீறு=கடும் மருந்துகள் உட்கொள்வதால் வாய் வயிறு வெந்து காணல்)
  7. சமூலம் 100 கிராம்,மிளகு 75 கிராம்,சீரகம் 50 கிராம்,இடித்து 1லி ந.எண்ணையில் பொட்டு 15 நாட்கள் சூரியபுடம் பொட்டு எடுத்து,45,90,150 நாட்கள் தலையில் தடவிவர கண் நோய்கள் தீரும்.
  8. 1கிலோ அறுகன் வேரை இடித்து 8 ல் 1ன்றாய்க் காய்ச்சி,சமன் ந,எண்னை (1லி) கலந்து,அமுக்கரா,பூமிசர்க்கரைக் கிழங்கு வகைக்கு 20 கிராம்,பாலில் மையாய் அரைத்து கலந்து,பதமுறக் காய்ச்சி,வடித்து(அறுகுத் தைலம்)தலையில் இட்டு அரைமணி கழித்துக் குளிக்க வாதம்,பித்தம்,நெஞ்சுவலி,வயிற்றெரிச்சல்,உடல் வறட்சி,மூலச் சூடு,தலை வெப்பு,நீர்க்கடுப்பு ஆகியவை தீரும்.
  9. வேர்,நன்னாரிவேர்,ஆவாரம்வேர்ப்பட்டை,குமரிவேர் வகைக்கு 50 கிராம்,2லி நீரில் அரை லி ஆகக் காய்ச்சி வடித்து 100மிலி யாக தினம் 5 வேளை கொடுத்துவர மதுமேகத்தால் உண்டான மிகு தாகம் தணியும்.

அழிஞ்சில் Alangium salvijfoliunmgium salvijfoli L;fLf Alangiaceae (Alangium decapetalum )

                                            அழிஞ்சில்          
Alangium  salvijfoliunmgium salvijfoli L;fLf  Alangiaceae (Alangium decapetalum )

மாற்றுப்பெயர்  ; அங்கோலம் .                                           வளரியல்பு     ; முள்ளுள்ள மரம்-புதர் காடுகளிலும்,வேலிகளிலும் தானே வளரும்.
இலைஅமைப்பு ;  நீண்ட இலைகள்
பூ,காய் ; கருப்பு,வெள்ளை,சிவப்பு,மஞ்சள் என பூக்களில் வேறுபாடு உண்டு.                                                                  மருத்துவ பாகம் ;  வேர்பட்டை,இலை,விதை.                               குணம்வியதாபேதகாரி,வமனகாரி,கிருமிநாசினிபித்தகாரி,சுரஹரகாரி தீர்க்கும் நோய்கள் ;
 அழிஞ்சிலது மாருதத்தை பையத்தைத் தாழ்ந்து
 மொழிஞ்சபித் தத்தையுயர்த்தும் – விழுஞ்சீலாங்
 குட்டமெனு நோயகற்றுங் கூறுமருந் தெய்திடில்
 திட்டமென வறிந்து சேர்
()அழிஞ்சில் மரமானது வாதகோபம்,கபதோஷம்,சீழ்வடியும் பெருநோய் (குஷ்டம்) போக்கும்.ஆனாலும் பித்தத்தை உபரி செய்யும்.
   பொல்லா விஷக்கடியும் போராடும் பேதிவகை
   செல்லாக் கிரந்திரணம் சேர்நோய்க – ளெல்லாமும்
   அங்கோலங் காணில் அரந்தைசெய் நோய்களெல்லாம்
   பொங்கோல மிட்டோடிப் போம்.
() அங்கோலம் என்று சொல்லப்படுகின்ற அழிஞ்சி கபத்தினால்,ஜீவ ஜந்துக்களின் பற்கடியால் நேர்ந்த எல்லாவித தோஷங்களும்,பேதி,கிரந்தி, விரணம் ஆகியவையும் போம்.
               அழிஞ்சில் வித்து(Alagium Decapetalum Seeds)
 நிகருமிடை மெல்லியலே இத்தரையில்
அழிஞ்சில் வித்ததனாற் சாறுபல – மென்னவெனில்
 மறையு மஞ்சனமா முகும் சனவசியம்
 அது செய்திடவே நன்று.
(0 நாளறிந்து காப்பிட்டு எடுத்த அழிஞ்சில் வித்தினால் அஞ்சன மறைப்பு மையும்,உலக வசியமும் உண்டாகும்.
  1. வேர் பட்டைச் சூரணம் 1-2 கிராம் நீரில் கொடுக்க வாந்தியாகும்.அரை கிராம் கொடுக்க வாய் குமட்டும். சுரத்தைப் பரிகரிக்கும்.
  2. நீடித்து கொடுக்க 1-1/2 குன்றி(100-150மிலி) போதுமானது என்று அனுபவத்தில் கண்டறியப்பட்டுள்ளது.இதனால் பற்கடிகளாலேற்பட்ட விஷங்கள்,குட்டம்,கிரந்தி,விரணம்,பேதி,நீங்கும்.(விஷக்கடிகளுக்கு ஒருமுறை ஆந்திக்குக் கொடுத்தல் நலம்)
  3. அழிஞ்சில் வேர்,விழுதிவேர் சமனெடுத்து 5-6 நாள் நிழலிலுலர்த்தி, முறைப்படி குழித்தைலம் இறக்கி புறைகண்ட ரணத்தில் செலுத்தி கட்டிவர விரைவில் ஆறும்.
  4. ஜாதிக்காய்,ஜாதிபத்திரி,இலவங்கம் சமன் பொடித்து,சமன் அழிஞ்சில் வேர்பட்டை சூரணம் கலந்து தினமிருவேளை 6-10 கோதுமை எடை கொடுக்க குஷ்டரோகம் குணமாகும்.
  5. அழிஞ்சில் வித்து தைலத்தை சரும ரோகங்களுக்குப் பூச ஆறும்.
  6. உள்ளுக்குக் கொடுக்க கபவாதத்தையும்,குட்டத்தையும் நீக்கும்.
  7. இதில் காய்,இலை,நரம்புகளில் கருப்பு நிறமோடிய கருப்பழிஞ்சில் உண்டு.இது வசியம்,ஜால வித்தைகளுக்கு சிறந்தது.மேலும் விபரங்களுக்கு புலிப்பாணி ஜால காண்டம் காண்க. ஆனாலும் மருத்துவத்திற்கு சிவப்பே சிறந்ததென்று அறிக.
  8. இலைச் சாறு அல்லது கற்கம் 1-2 கிராம் அளவாக காலைமாலை கொடுத்துவர கிராணி,குன்மம்,கப நோய்கள் தீரும்.

அவுரி Indigoferra tinctoria

அவுரி                                      

              Indigoferra tinctoria 

அவுரி என்னும் நீலியடா அவள் 64 பேரைக் கொண்டவளடா

                                                     -பழமொழி-

நீலி,சாய வேர் முதலாய 64 பெயர்கள் உண்டு                                 

 வளரியல்பு      ; சிறு செடி                                                                                                 இலைஅமைப்பு ; கரும்பச்சை                                                                                              பூ,காய்          ;                                                                                                              மருத்துவ பாகம் ;   சமூலம்                                                                                                   குணம்           ;                                                                                                                              தீர்க்கும் நோய்கள்

உரியவு ரித்தழைதானோது பதிணெண்

ணரிய நஞ்சைத் தின்றவர்க்கு மாகுந் – தெரிவரிய

வாதவெப்பு காமாலை மைந்தர்க் குறுமாந்தஞ்

சீதமகற்றுந் தெளி.

               சந்நி பதின்மூன்றுஞ் சந்தொடித்த வாதமுத

               லுன்னு விஷக்கடியு மோடுங்காண் – மின்னுங்

                கவுரிநிற முண்டாகுங் காசினியு ளேநல்

               லவுரி யிலையா லறி

 செய்கை ; சோபாநாசினி,விஷநாசகாரி,வியதாபேதகாரி,மலகாரி,உற்சாககாரி.

அவுரி இலை தாவர கந்தமூல விஷங்கள் 18ம்,வாதசுரம்,காமிலம், மாந்தம், சீதளம்,சந்நிபாதங்கள்,கீல்வாதம்,சர்ப்பவிஷம் இவற்ரை நீக்கும். தேகத்திற்குப் பொன் மேனியைத் தரும்.

                              வேர்

எல்லா விஷங்களுக்கு மேற்ற முறிப்பாகும்

பொல்லாச் சுரமூர்ச்சை பொங்குவேட்டை நில்லாப்  

பவுரிதருங் குன்மமுதற் பன்னோ யொழிவு

மவுரி தருவேருக் கறி

செய்கை ; விஷநாசகாரி.

அவுரி வேரினால் சர்வ விஷம்,சுரம்,மூர்ச்சை,வெள்ளை,வயிற்றுநோய் முதலிய பல ரோகங்கள் போம்.         

1.   இலையை அரித்து கொட்டைப் பாக்களவு காலை 200மிலி வெள்ளாட்டுப்பாலில் 3 நாள் கொடுக்க மஞ்சள்காமாலை, அந்திமாலை தீரும்.

  1. இலையை அரைத்து சிரங்குகளுக்குப் பூசி மாலை ஸ்நானம் செய்விக்க ஆறும்
  2. இலைச் சாற்றை உலர்த்திப் பொடித்தி சிரங்குகளின்மேல் தூவ ஆறும்.
  3. மேற்படி பொடியை 100மிகி ,நீரில் கலந்து தினம் 2 வேளை கொடுக்க ரத்தவாந்தி,காக்கைவலி,ஈரல்களின் வீக்கம்,நரம்புகளைப் பற்றிய ரோகம் நீங்கும்.
  4. மேற்படி பொடியை சிற்றாமணக்கெண்ணையில் குழைத்து குழந்தைகளின் வயிற்ரைச் சுற்றி தடவ மலத்தை வெளியாக்கும்.
  5. இலை,கையாந்தகரை,குப்பைமேனி,கொட்டைக்கரந்தை,வல்லாரை, பொற்றலைக்கையாந்தகரை,செருப்படைபொடித்து சமன் கலந்து  திரிகடி,காலைமாலை,தேனில் கொடுத்துவர ஸ்திரிகளுக்குண்டான உதிரக்கட்டு,வயிற்றிலுண்டாகின்ற கிருமிக் கூட்டம்,கீல்வாதம், சர்ப்பவிஷம் நீங்கும்.தேகம் பொன்மேனியாகும். இம்முறை கற்பத்தில் ஒன்று.இச்சா பத்தியம் புளி,புகையிலை,போகம் நீக்கவும்.
  6. வேரை அரைத்து நெல்லிக்காயளவு,200மிலி பசும்பாலில் கலந்து காலை 8 நாள் கொடுக்க விஷ சிலந்தி,எலிவிஷம் போம்.உப்பில்லாப் பத்தியம்.
  7. வேர்,சுக்கு வகைக்கு 10கிராம் இடித்து சுண்டக் காய்ச்சி கொடுக்க மருந்து வீறு தணியும்.
  8. வேர்ப்பட்டையுடன் மிளகு சேர்த்தரைத்து கொட்டைப்பாக்களவு,ஆவின் பால் அல்லது வெள்ளாட்டுப்பாலில் கொடுக்க விஷ செந்துக்களின் கடிவிஷமும்,நஞ்சுபொருள் விஷமும்,கரப்பான் வகைகளும் தீரும்.
  9. வேர் 20கிராம்,அறுகம்புல் 30கிராம்,மிளகு 3,மையாய் அரைத்து புன்னைக் காயளவு தினம் 3 வேளை உப்பு,புளி நீக்கிச் சாப்பிட பாம்பு, தேள்,பூரான், செய்யான் நஞ்சு நீங்கும். காலைமாலை சாப்பிட்டு இச்சாபத்தியமிருக்க மருந்து வேகம் தணியும்.
  10. வேர் 30கிராம்,பெருநெருஞ்சில் இலை 50கிராம் அரைத்து எலுமிச்சை யளவு மோரில் கொடுக்க வெள்ளை தீரும்.
  11. வேர்பட்டை,இலை,பொரித்த பெருங்காயம்,மிளகு சமனரைத்து சுண்டைக்காயளவு மத்திரை செய்து தினம் 3 வேளை கொடுக்க நரம்புச் சிலந்தி,ஓடுவாயு கட்டிகள்,கீல்வாதம் தீரும்.
  12. 1பிடி இலை,2 சிட்டிகை சீரகம் 6 மிளகு இடித்து 4ல் 1ன்றாய்க் காய்ச்சி வடித்து வேளைக்கு 2மடக்கு தினம் 4வேளை கொடுக்க வாதக்காய்ச்சல், சன்னிக்காய்ச்சல், கீல்வாதம், குன்மம், மாந்தம், காமாலை தீரும்.

அவரை Lablab purpureus LurpureusL; Papilionoideae

                     அவரை                                                         Lablab purpureus  Lurpureus L,; Papilionoideae (Dolichos Lablab)                                                   மாற்றுப்பெயர் ;                                                               வளரியல்பு   ; உணவுக்காகப் பயிரிடப்படும்கொடிவகை.                   இலைஅமைப்பு ;                                                               பூ,காய்;                                                                மருத்துவ பாகம் ; இலை,பிஞ்சு   விதை முதிர்ந்த காய்களை உண்ணாதிருத்தலே நலம்                                                                             குணம்  ; பிஞ்சு - இலகுமலகாரி,சமனகாரி. இலைசங்கோசனகாரி (உள்ளுக்கு), அந்தர்ஸ்நிகதகாரி (வெளிக்கு)                                      தீர்க்கும் நோய்கள்
கங்குலுண விங்குற் கறிக்கு முறைகளுக்கும்
பொங்குதிரி தோடத்தோர் புண்சுரத்தோர் – தங்களுக்கும்
கண்முதிரைப் பில்லநோய்க் காரருக்குங் காழுறையா
வெண்முதிரைப் பிஞ்சாம் விதி.
     விதை முதிராத வெள்ளை அவரைப் பிஞ்சு ராப் போஜனத்திற்கும், மருந்துண்பவர்களுக்கும், வாதாதி முத்தோஷம்,விரணம்,சுரம்,விழிக்குள் முதிர்ந்த சிலேத்தும பில்லம் முதலிய ரோகிகளுக்கும் ஆகும்.
கொட்டைய வரைக்காயாற் கோரவரோ சகனோய்
கிட்டாதென் பார்மருந்தின் கீர்த்திகெடுந் – துட்டமந்தம்
பையவுண்டாம் பேதியுண்டாம் பாரிப் பனிலமுண்டாம்
ஐயமுண்டாஞ் சூலையுமுண் டாம்
  விதை முதிர்ந்த காய்களை உண்ணாதிருத்தலே நலம்.
அவரையிலைக் குத்தலைநோ யாழ்ந்தகிராணி
யிவரும் விஷிசிமுத லேகுந் – தவறாமற்
கொண்டவர்க்குத் தீபனமாங்கோதாய் விரணமறுங்
கண்டவர்க்குத் தோற்றமிது காண்
        
    அவரை இலைக்குச் சிரஸ்தாபநோய்,கிராணிஊழி,சிரங்கு ஆகியவை நீங்கும்.பசித் தீபனமும் உண்டாகும்.
இலை குடல் வாயு அகற்றும் தன்மையுடையது. பிஞ்சு தாது வெப்பு அகற்றும்.

1. அவரை இலைச்சாறு 10 மி.லி. தயிருடன் கலந்து காலையில் கொடுத்துவர கிராணி, மூலக்கடுப்பு எரிச்சல் ஆகியவை தீரும்.
2. இலைச்சாற்றுடன் மஞ்சள் பொடிகலந்தோ, சுண்ணாம்பு விளக்கெண்ணெய் கலந்தோ புண்களில் பூசிவர ஆறும்.
3. இலைச் சாற்றை சிறு துண்டுத்துணியில் நனைத்து நெற்றியில் போட்டுவர தலைவலி, தலைப்பாரம் நீங்கும்.

4. விதை முற்றாத அவரைப்பிஞ்சைச் சமைத்துண்பது திரிதோடம், புண், காய்ச்சல், கண்ணோய் உள்ள நோயாளர்க்கும் மருந்துண்போர்க்கும் பத்திய உணவாகும்

அலிசி Linum usitatissimum

அலிசி                               
                                                       Linum  usitatissimum                                 மாற்றுப்பெயர் ஆளிவித்துசிறு  ;                                      வளரியல்பு                                                                                                             இலைஅமைப்பு ;                                                                                                                             பூ,காய் ;                                                                                                                              மருத்துவ பாகம் ;      விதை                                                                                                        குணம்          ; அந்தர்ஸ்நிக்தகாரி,கபஹரகாரி,மூத்திரவர்தனகாரி                                                                                                                                                                  தீர்க்கும் நோய்கள்                                     
விள்ளும் அலிசிவிதையாற் கடும்வெள்ளை
தள்ளுநீர் வெப்பந் தணிந்திடுமே – யுள்ளுறுப்பிற்
கொண்டுவருஞ் சுரமுங் கூறுமழற் கட்டிகள்போம்
கண்டு நிகர்மொழியாய் காண்.
        அலிசி விதையால் வெள்ளை,நீர்ச்ச்சுருக்கு,க்ஷயரோகம்,மேககட்டி, மேகஅழலை  முதலியவை நீங்கும்
  1. விதை 10 கிராம்,அதிமாதுரம் 5கிராம் இடித்து 8ல் 1ன் றாய்க் காய்ச்சி வேளைக்கு 50 மிலி கொடுக்க இருமல்,கல்லடைப்பு,நீர் எரிச்சல்,தந்தி வெள்ளை.இரத்த வெள்ளை,கிராணி தீரும்.
  2. கொக்கு மந்தாரை மேல்பட்டை 10 கிராம்,அலிசிவிதை 10 கிராம், கீழாநெல்லி சமூலம் 20 கிராம் இடித்து 8ல் 1ன் றாய்க் காய்ச்சி 50மிலி தினம் 3 வேளை பருக மேற்கூறிய நோய்கள் தீரும்.
  3. இடித்து பொடித்து களிபோல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக்க கட்ட விரைவில் பழுத்து உடையும்.வயிற்றுவலி,மார்புவலி போன்ற வலி உள்ள இடங்களில் வைத்துக் கட்டக் குணப்படுத்தும்.